Agri Info

Adding Green to your Life

March 1, 2024

அரசியலமைப்பு – Hand Written Notes PDF

March 01, 2024 0

 Today We are going to share notes அரசியலமைப்பு – Hand Written Notes PDF free download PDF. We also share a lot of notes for free. These notes were useful for TNPSC Exams – Group 1, Group2, Group 4, TNUSRB Constable and SI, TN Forest, Railway, Bank, All Government Exams. In these subjects, we get a full mark without any difficulty.

Good practice makes surely helps with upcoming tnpsc exams. Hard work and keep trying will make our success possible only if we have good training. Never give up your targeted goal until you achieve it.

For achieving your government job our website surely guides you a good pathway for the future life of upcoming exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

For every student, those who are trying government jobs never ever give up for any reason until achieving your goal. Always keep on trying whatever obstacles come in between you never give up your government job achievement. 

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

முக்கியமான இந்திய அரசியலமைப்பு விதிகள் – PDF Download

March 01, 2024 0

 Today We are going to share notes முக்கியமான இந்திய அரசியலமைப்பு விதிகள் – PDF Download PDF free download PDF. 

Good practice makes surely helps with upcoming tnpsc exams. Hard work and keep trying will make our success possible only if we have good training. Never give up your targeted goal until you achieve it.

For every student, those who are trying government jobs never ever give up for any reason until achieving your goal. Always keep on trying whatever obstacles come in between you never give up your government job achievement. if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

இந்திய அரசியலமைப்பு உருவாக்கம் – SHORTCUT PDF

March 01, 2024 0

 அரசியலமைப்பு உருவாக்கம் – SHORTCUT PDF

Today We are going to share notes இந்திய அரசியலமைப்பு உருவாக்கம் – SHORTCUT PDF free download PDF. 

Good practice makes surely helps with upcoming tnpsc exams. Hard work and keep trying will make our success possible only if we have good training. Never give up your targeted goal until you achieve it.

For every student, those who are trying government jobs never ever give up for any reason until achieving your goal. Always keep on trying whatever obstacles come in between you never give up your government job achievement. 

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

Click here to download file


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ தகுதிக்கு 25 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

March 01, 2024 0

 திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Staff Nurses/ MLHP

காலியிடங்களின் எண்ணிக்கை : 25

கல்வித் தகுதி : Diploma in GNM/BSc (Nursing) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 18,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2024/02/2024022135.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: கௌரவச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், துணை சுகாதாரப் பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.03.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2024/02/2024022176.pdf இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.


Spices Board-ல் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.25,000/- || விரைந்து விண்ணப்பியுங்கள்!

March 01, 2024 0

 

 Spices Board-ல் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Sample Receipt Desk Trainee பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தவறாது இப்பணிக்கான Walk-in Test-ல் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Spices Board காலியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Sample Receipt Desk Trainee பணிக்கென 02 பணியிடங்கள் Spices Board-ல் காலியாக உள்ளது.

Sample Receipt Desk Trainee கல்வி தகுதி:

Sample Receipt Desk Trainee பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Sample Receipt Desk Trainee வயது வரம்பு:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு 07.03.2024 அன்றைய தேதியின் படி, 30 வயதுக்கு மேற்படாத நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Sample Receipt Desk Trainee சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.20,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Spices Board தேர்வு முறை:

Sample Receipt Desk Trainee பணிக்கு தகுதியான நபர்கள் 07.03.2024 அன்று காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Spices Board விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து Walk-in Test-க்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

 🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

கடலோர காவல் படை வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் தகுதிக்கு 70 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

March 01, 2024 0

இந்திய கடலோர காவல் படையில் உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் மொத்தம் 70 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் 06.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.



Assistant Commandant

காலியிடங்களின் எண்ணிக்கை: 70

General Duty (GD) – 50

Tech (Engg/ Elect) - 20

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு அல்லது இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 21 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு.

சம்பளம் : ரூ 56,100

தேர்வு செய்யப்படும் முறைஇந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://joinindiancoastguard.cdac.in/cgcatreg/candidate/login என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.250 ஆக உள்ளது. SC/ST பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.03.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://joinindiancoastguard.cdac.in/cgcat/assets/img/news/Advertisement_for_Asst_Comdt_2025_Batch.pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.


 🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Wipro நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

March 01, 2024 0

 Wipro நிறுவனமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் AppDynamic Admin பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காலியிடங்கள்:

Wipro நிறுவனத்தில் AppDynamic Admin பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

AppDynamic Admin பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என கருதப்படுகிறது.

பணியமர்த்தப்படும் இடம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் கோயம்புத்தூரில் உள்ள Wipro நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

ஊதியம்:

இந்த Wipro நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

தேர்வு முறை:

AppDynamic Admin பணிக்கு தகுதியான நபர்கள் Interview, Written Test, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.




 🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

February 29, 2024

30+ பெண்களே உஷார்: ஆட்டிவைக்கும் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் இவைதான்

February 29, 2024 0

 Vitamin B12 Deficiency: நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வைட்டமின் பி12 உடலுக்கு மிக அவசியமான ஒரு வைட்டமின் ஆக உள்ளது. அனைவருக்கும் இந்த வைட்டமினுக்கான தேவை உள்ளது. எனினும், 30 வயதை கடந்த பெண்களுக்கு இது மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது. மேலும் இந்த வயதை கடந்த பெண்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருப்பது சகஜமாகி வருகிறது. உங்களுக்கும் வைட்டமின் பி12 குறைபாடு உள்ளதா? இதை எப்படி கண்டறிவது? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

வைட்டமின் பி12

வைட்டமின் பி12 அதிகம் பேசப்படாத ஆனால் உடலுக்கு மிக தேவையான ஒரு வைட்டமின் ஆகும். இது உடலின் சீரான இயக்கத்திற்கு மிகவும் உதவுகிறது. இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவது முதல் டிஎன்ஏ தொகுப்பு, நரம்பு செல்களின் ஆரோக்கியம் என இதன் பயன்கள் ஏராளம். வைட்டமின் பி12 குறைபாட்டால் இரத்த சோகை (Anemia), உடல் சோர்வு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

வைட்டமின் பி12 உடலில் போதுமான அளவு இருக்கின்றதா என்பதை அவ்வப்போது நிச்சயமாக பரிசோதிக்க வேண்டும். உடலில் வைட்டமின் பி12 (Vitamin B12) குறைபாடு ஏற்பட்டால் நம் உடல் அதற்கான சில அறிகுறிகளை காண்பிக்கும். அந்த முக்கிய அறிகுறிகளை பற்றி இங்கு காணலாம்.

வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் (Symptoms of Vitamin B12 Deficiency)

நடப்பதில் சிரமம் 

வைட்டமின் பி12 குறைபாடு (Vitamin B12 Deficiency) ஏற்பட்டால் 30 வயதை தாண்டிய பெண்களுக்கு பொதுவாக அதிக தூரம் நடப்பதில் சிரமம் (Difficulty in walking) ஏற்படலாம். நடக்கும் போது அவர்களுக்கு உடலில் சமநிலை இல்லாமல் போகலாம்.

தசைகளில் பலவீனம் 

வைட்டமின் பி12 குறைபாட்டால் தசைகள் பலவீனம் (Weak Muscles) அடைய தொடங்குகின்றன. இதனால் நடப்பது, படிக்கட்டுகளில் ஏறுவது, சிரமமான காரியங்களை செய்வது ஆகியவை கடினமான பணிகளாக தோன்ற ஆரம்பிக்கும்

நடக்கும் விதத்தில் மாற்றம் 

வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால் நாம் நடக்கும் விதத்தில் நுட்பமான மாற்றங்கள் ஏற்படும். கால்களை தேய்த்துக்கொண்டு நடப்பது, நிலையற்ற பாத அசைவுகள் ஆகியவை இதன் அறிகுறிகளாக உள்ளன.

பாதங்களில் அசோகரியம் 

வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக பாதங்களில் சிறு சிறு தோல் விரிசல்கள் காணப்படும். இந்த வெடிப்புகள் வலியையும் உண்டாக்கலாம். இதனால் தொற்றுகளும் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது.

கால்களில் குளிர்ச்சி

அதிகப்படியான குளிர் இல்லாத வெயில் காலத்திலும் கால்கள் மட்டும் தொடர்ந்து குளிர்ச்சியாகவே (Cold Feet) இருந்தால் வைட்டமின் பி12 குறைபாடு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வைட்டமின் பி12 குறைபாட்டால் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இவ்வாறு நடக்கின்றது.

நிறம் மாறுதல் 

நம் கீழ் உடலில் அதாவது கால்கள், பாதங்கள் ஆகிய இடங்களில் தோலின் நிறம் மாறினால் அதற்கு வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக இருக்கலாம். இது கால்களுக்கான இரத்த சோகை என்றும் அழைக்கப்படுகின்றது.

வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகளைக் கண்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் மருத்துவர்கள் அதற்கான உணவுகள், ஊசிகள் மற்றும் சப்ளிமெண்டுகளையும் பரிந்துரைக்கிறார்கள். இந்த அறிகுறிகளை புறக்கணிக்காமல் இவற்றைக் கண்டவுடன் மருத்துவர்களை கண்டு பரிசோதித்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.குறிப்பாக 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் இது அதிகமாக காணப்படுகின்றது. என்னும் போதுமான சிகிச்சை அளிக்கப்பட்டால் இதை பூரணமாக சரி செய்யலாம்.

🔻 🔻 🔻 

ஆரோக்கியத்துக்கு ஆப்பு வைக்கும் ஆயத்த உணவுகள்! இதெல்லாம் ரெடிமேட் உணவுகளா?

February 29, 2024 0

 

ready-to-eat meals : ரெடி-டு-ஈட் எனப்படும் உணவுகள் நமது அவசரத்த்துக்கு உதவியானதாக இருக்கலாம், ஆனால் ஆரோக்கியமானதாக இருக்காது. அவசரத்திற்கு ஏற்ற உணவுகள் நமக்கு வசதியானவை, ஆனால் வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளின் பக்கத்தில் கூட அவை நெருங்கமுடியாது. ஆரோக்கியமற்ற ஆயத்த உணவுகளை முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியுமா என்பது சந்தேகமாக இருந்தாலும், அவற்றை கைவிட வேண்டிய நேரம் இது. ஏனென்றால் ஆரோக்கியம் தான் நமது வாழ்க்கைக்கு ஆணிவேர்....

ரெடி டு ஈட் டால் - உடனடியாக உண்ணக்கூடிய பதப்படுத்தப்பட்ட உணவுகள்

உடனடியாக உண்ணக்கூடிய உணவுகள் என்றால், பழங்கள் காய்கனிகள் மட்டும் என்று இருந்த நிலை இன்று மாறிவிட்டது. ஒரு காலத்தில் வீட்டில் செய்யும் தின்பண்டங்கள் மற்றும், புளிசாதம், சப்பாத்தி போன்றவை தான் தயாரித்து வைத்து பிறகு பயன்படுத்தக்கூடிய உணவுகளாக இருந்தன. அதுவும் மாதக்கணக்கில் அல்ல, நாள் கணக்கில் தான் அவை பயன்படுத்தப்படும். கருவாடு, ஊறுகாய், வத்தல் வடாம், அப்பளம் என மிகவும் சில பொருட்கள் மட்டும் தான் நீண்ட நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்தப்பட்ட பொருட்களாக இருந்தன.

பதப்படுத்த பயன்படும் இரசாயனங்கள்

அதிலும், இவற்றிலும் பதப்படுத்துவதற்கு எந்தவித ரசாயனமும் உபயோகப்படுத்தப்படாது என்பதால் அவை உடலுக்கு கேடு விளைவிக்கவில்லை. ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. சிக்கன் பிரியாணி, இறால், மட்டன் என அனைத்துவிதமான பொருட்களுமே உடனடியாக உண்ணக்கூடிய பொருட்களாக தயார் நிலையில் கிடைக்கின்றன.

ஊட்டச்சத்துக்கள்

ஆனால் ரெடிமேட் உணவுகள் உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தருகிறதா? ஆயத்த உணவுகளைத் தவிர்ப்பது ஏன் ஆரோக்கியமான விஷயம் என்பதை தெரிந்துக் கொண்டால், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

ஆயத்த உணவுகள்
சாப்பிட தயாராக இருக்கக்கூடிய உணவுகள், பெரும்பாலும் நமது வசதிக்காக பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் ஆகும். இவை முழுமையாக சமைக்கப்பட்டு, விரைவாகவும் எளிதாகவும் நுகர்வதற்காக பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சூப்கள், மைக்ரோவேவ் உணவுகள் மற்றும் சாலடுகள் என பல்வேறு வடிவங்களில் ’ரெடி டு ஈட்’ உணவுகள் சந்தையில் கிடைக்கின்றன.

ஆயத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள் அவற்றின் ஊட்டச்சத்துகளின் அடிப்படையில் மாறுபடும். அவற்றில் சில ஒப்பீட்டளவில் ஆரோக்கியமாகவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்க முடியும், ஆனால் பெரும்பாலனவற்றில் சர்க்கரைகள், நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சோடியம் போன்ற ஆரோக்கியமற்ற பொருட்கள் அதிகமாக இருக்கலாம்.

இந்த தயாரிப்புகளின் ஊட்டச்சத்து தரத்தைக் கண்டறிய ஊட்டச்சத்து லேபிள்கள் மற்றும் மூலப்பொருள் பட்டியல்களைப் படிப்பது அவசியம். பதப்படுத்தப்பட்ட சிக்கன் உங்களுக்கு புரதத்தைக் கொடுக்கலாம் அல்லது சோளம் அல்லது பட்டாணி சிறிது ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால் உண்ணத் தயாராக இருக்கும் அனைத்து உணவுகளிலும் உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இல்லை என்பதையும் அவை ரசாயனங்கள் சேர்த்து பதப்படுத்தப்படவை என்பதையும் மனதி வைத்துக் கொள்ளுங்கள்.


🔻 🔻 🔻