Agri Info

Adding Green to your Life

March 5, 2024

BOB வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு 2024 – கல்வி, வயது, ஊதிய.. விவரங்கள் இதோ!

March 05, 2024 0

 

Bank of Baroda வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் BC Supervisor, Office Assistant , Watchman / Gardner, FLCC Counsellor ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BOB Bank காலியிடங்கள்:

Bank of Baroda வங்கியில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

BC Supervisor – 06 பணியிடங்கள்

Office Assistant – 01 பணியிடம்

Watchman / Gardner – 01 பணியிடம்

FLCC Counsellor – 01 பணியிடம்

BOB Bank கல்வி தகுதி:

இந்த வங்கி துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

BC Supervisor – Graduate Degree, M.Sc, MCA, MBA, BE

Office Assistant – Graduate Degree (BSW / BA / B.Com / B.SC / BBA)

Watchman / Gardner – 07ம் வகுப்பு

FLCC Counsellor – Graduate Degree


BOB Bank வயது வரம்பு:

BC Supervisor பணிக்கு 21 வயது முதல் 45 வயது வரை என்றும்,

Watchman / Gardner பணிக்கு 20 வயது முதல் 40 வயது வரை என்றும்,

FLCC Counsellor பணிக்கு 20 வயது முதல் 40 வயது வரை என்றும் வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

BOB Bank மாத ஊதியம்:

BC Supervisor பணிக்கு ரூ.25,000/- எனவும்,

Office Assistant பணிக்கு ரூ.14,000/- எனவும்,

Watchman / Gardner பணிக்கு ரூ.8,500/- எனவும்,

FLCC Counsellor பணிக்கு ரூ.23,000/- எனவும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

BOB Bank தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test, Interview, Documentation / Presentation ஆகிய தேர்வு முறைகளின் படி தேர்வு செய்யப்படுவார்கள்.

BOB Bank விண்ணப்பிக்கும் விதம்:

இந்த BOB வங்கி சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

BC Supervisor – 15.03.2024

மற்ற நபர்கள் – 14.03.2024

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

March 05, 2024 0


Cost Trainee பணிக்கென பிரசார் பாரதி (Prasar Bharati) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 15.03.2024 அன்று வரை இணையவழி மூலம் பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Prasar Bharati காலிப்பணியிடங்கள்:

Cost Trainee பணிக்கென 14 பணியிடங்கள் பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Cost Trainee கல்வி விவரம்:

இந்த பிரசார் பாரதி நிறுவன பணிக்கு ICAI நிறுவனங்களில் CMA தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Cost Trainee வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.


Cost Trainee சம்பளம்:

Cost Trainee பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் ரூ.10,000/- முதல் ரூ.15,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

Prasar Bharati தேர்வு முறை:

இந்த பிரசார் பாரதி நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prasar Bharati விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் https://applications.prasarbharati.org/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 15.03.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – சம்பளம் ரூ.28,000/- || நேர்காணல் மட்டுமே!

March 05, 2024 0

 மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – சம்பளம் ரூ.28,000/- || நேர்காணல் மட்டுமே!

ICMR NIRRCH ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Technical Support-III பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.28,000/- மாத ஊதியம் வழங்கப்படும். தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ICMR காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Technical Support-III பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

Project Technical Support-III கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ICMR வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Technical Support-III ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.28,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

ICMR தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 11.03.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொன்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

JIPMER ஆணையத்தில் Multi Tasking Staff வேலை – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

March 05, 2024 0

 JIPMER ஆணையத்தில் Multi Tasking Staff வேலை – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Junior Trial Coordinator, Multi Tasking Staff பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.22,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

JIPMER காலிப்பணியிடங்கள்:

Junior Trial Coordinator, Multi Tasking Staff பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Multi Tasking Staff கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

JIPMER வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Data Entry Operator ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.22,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Online Screening Test நேர்காணல்(15.03.2024) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 1

Download Notification PDF 2



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

March 4, 2024

ரூ.2,50,000/- சம்பளத்தில் இந்திய ஸ்டீல் ஆணைய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

March 04, 2024 0

 இந்தியாவின் முன்னணி எஃகு தயாரிப்பு நிறுவனமான இந்திய ஸ்டீல் ஆலையின் மருத்துவமனைகளில் (The Steel Authority of India Limited (SAIL))  காலியாக உள்ள Super Specialist, Specialist மற்றும் GDMOs ஆகிய   பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 23 பணியிடங்கள் காலியாக உள்ளன. . எனவே ஆர்வமுள்ளவர்கள்  உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய ஸ்டீல் ஆணைய காலிப்பணியிடங்கள்:

Super Specialist – 2 பணியிடங்கள்

Specialist – 11 பணியிடங்கள்

GDMOs – 10 பணியிடங்கள்

என மொத்தம் 23 பணியிடங்கள் காலியாக உள்ளன.

SAIL வயது வரம்பு:

03.03.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 69 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

Super Specialist – Mch/DNB/DrNB/ DM/DNB/DrNB

Specialist – MBBS with PG Diploma/ PG Degree

GDMOs – MBBS

சம்பள விவரம்:

Super Specialist – ரூ.2,50,000/-

Specialist – ரூ.1,20,000/- முதல் ரூ.1,60,000/-

GDMOs – ரூ.90,000/- முதல் ரூ,1,00,000/-

SAIL  தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 14.03.2024 அன்று நடைபெற உள்ளது.

SAIL விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்  அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலில் பங்குபெற்று வேலைவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

AIASL விமான நிறுவன வேலைவாய்ப்பு 2024 – ரூ.10,000/- உதவித்தொகை

March 04, 2024 0

 AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் ஆனது Passenger Service Agents  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.  இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும்  உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

AIASL காலிப்பணியிடங்கள்:

Passenger Service Agents பதவிக்கு என மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.

 கல்வி தகுதி:

ஏர் இந்தியா அறிவிப்பின் படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து  degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். AIATSL சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.10,000/- உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அறிவிப்பின்  கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 10.03.2024க்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழகத்தில் அரசுத் துறை காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 2455 ஆக உயர்வு – வெளியான அறிவிப்பு!

March 04, 2024 0

 தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 2455ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

காலிப்பணியிடங்கள்

தமிழகத்தில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், நகர திட்டமிடல் அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 1933 காலிப்பணியிடங்களை நேரடியாக நிரப்ப பிப்.2 ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த காலிப்பணியிடங்கள் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர்மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் போன்ற துறைகளில் இருக்கின்றன.இந்நிலையில் மொத்த காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 1933ல் இருந்து 2104 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 2455 ஆக உயர்த்தப்பட்டு இருப்பதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட இருக்கிறது. எழுத்து  தேர்வானது ஜூன்  29, 30 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. விண்ணப்பங்களை அனுப்ப மார்ச் 12 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

March 04, 2024 0

 இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஓதுவார், பரிசாரகர் பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.TNHRCE காலிப்பணியிடங்கள்:

ஓதுவார், பரிசாரகர் பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓதுவார் கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TNHRCE வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓதுவார் ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,700/- முதல் ரூ.10,700/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNHRCE தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.03.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


‘இந்து தமிழ் திசை’ சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வு குரூப் 4 நூல் வெளியீடு

March 04, 2024 0

 

சென்னை: குரூப் 4 போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளின் தொகுப்பான ‘டிஎன்பிஎஸ்சி தேர்வு - குரூப் 4' எனும் வழிகாட்டி நூல் வெளியிடப்பட்டது.

‘இந்து தமிழ் திசை' நாளிதழ் சார்பில் இளைஞர்களுக்கு நல்லகருத்துகளை வழங்கும் விதமாகவும், சமூகத்தின் முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்யும் வகையிலும் பல்வேறு நூல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி குரூப் 4 தேர்வில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து தரும் ‘டிஎன்பிஎஸ்சி தேர்வு-குரூப் 4' எனும் நூல் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இந்த நூலை முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.இந்நூலை பொருத்தவரை தேர்வுக்கு எப்படி உழைக்க வேண்டும்,பொருள் தருக, இலக்கணக் குறிப்பு, விடைக்கேற்ற வினாபோன்ற பல்வேறு பகுதிகளைஎப்படி கையாள வேண்டும் என்பனஉட்பட குரூப் 4 தேர்வுக்கானஅனைத்து வழிகாட்டுதலும் இடம்பெற்றுள்ளன.

இதனை கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை உறுப்பினரும், எழுத்தாளருமான ஆதலையூர் சூரியகுமார் தொகுத்துள்ளார். மொத்தம் 700 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூ.500.

விற்பனையின் தொடக்கமாக 10 சதவீத சிறப்பு தள்ளுபடி மற்றும்தபால் செலவு இலவசம் எனும்சலுகை மார்ச் 10-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் புத்தகங்களை அஞ்சல்/கூரியர் மூலம் பெற KSL MEDIA LIMITED என்ற பெயரில் D.D, Money order அல்லது Cheque மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி: ‘இந்து தமிழ் திசை நாளிதழ்’, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002. போன்: 044-35048001. நூலை ஆன்லைனில் பெற store.hindutamil.in/publications எனும் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: 7401296562 / 7401329402 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னையில் 6-ம் தேதி வேலைவாய்ப்பு கண்காட்சி

March 04, 2024 0

 மத்திய அரசின் எம்எஸ்எம்இ துறையின்கீழ் செயல்படும் தேசிய சிறுதொழில் கழகத்தின் (என்எஸ்ஐசி) தொழில்நுட்ப சேவை மையம் சென்னை கிளையின் சார்பில், சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் (எம்எஸ்எம்இ) துறைக்குத் தேவையான பணியாளர்களுக்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், தொழில்முனைவோர் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.

இந்நிலையில், தேசிய சிறுதொழில் கழகத்தின் சார்பில், வரும் 6-ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு கண்காட்சி நடைபெறுகிறது. கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தேசிய சிறுதொழில் கழக அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு கண்காட்சி தொடங்குகிறது.இதில், வேலை தேவைப்படுபவர்கள் மற்றும் புதிதாக டிகிரி முடித்தவர்கள் பங்கேற்கலாம். கண்காட்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்து, கூடுதல் விவரங்களுக்கு 044-2225 2335, 73053 75041 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

March 3, 2024

டிப்ளமோ படித்தவர்களுக்கு விஐடியில் வேலைவாய்ப்பு முகாம்

March 03, 2024 0

 வேலூர்: டிப்ளமோ படித்தவர்களுக்கு விஐடியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘விஐடி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு துறையும், இயந்திரவியல் துறையும் இணைந்து மார்ச் 7-ம் தேதி ( வியாழக் கிழமை ) காலை 10 மணிக்கு விஐடியில் உள்ள சில்வர் ஜூப்ளி டவர் 7-வது மாடியில் அறை எண் 717-ல் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வளாக நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ள கல்லூரியில் டிப்ளமோ இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் டிப்ளமோ, பட்டயப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.வளாக நேர்முகத் தேர்வுக்கு இந்தியாவின் சிறந்த நிறுவனங்களான ஸ்டீல் 1 இந்தியா, டிவிஎஸ் ட்ரைனிங் அண்ட் சர்வீஸ், பியோ நீர் எக்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் டிஜிட்டல், அல்ட்ராடெக் சிமென்ட், ராஜஸ்ரீ குரூப்ஸ், எமரால்ட் ஜூவல்லரி, முபீஸ் இந்தியா, எஸ். ராஜகோபால் கோ, எஃஸ்சிஎம்ஜி, சால்காம்ப் இந்தியா, டிவிஎஸ் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், விஸ்டியான், கார்போரண்டம், பிரேக்ஸ் இந்தியா, ஸ்விங் ஸ்டெட்டர், கோஸ்டல், பி அண்ட் பி உட்பட 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

இதற்கான நுழைவு சீட்டினை தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வரிடம் பெற்றுக் கொள்ளலாம். டிப்ளமோ படித்து முடித்தவர்கள், விஐடியில் உள்ள சில்வர் ஜூப்ளி டவர் 7-வது மாடி, அறை எண் 717-ல் வரும் மார்ச் 5-ம் தேதிக்குள் அனைத்து வேலை நாட்களிலும் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த நேர்முகத் தேர்வுக்கு வருவோர் தங்களது சுயவிவரம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, புகைப்படம் ஆகிய வற்றை எடுத்து வர வேண்டும்.

இதில், வேலூர் மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில், கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை, டிப்ளமோ படித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்’’ என தெரிவித்துள்ளார்.



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் 517 காலியிடங்கள்... என்ஜீனியரிங் படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

March 03, 2024 0

 மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் (BHEL) இந்தியா நிறுவனத்தில், 517 தொழிற்பயிற்சி பொறியாளர் (Trainee Engineer) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்

.
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜினீயர் (Trainee Engineer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 517 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாடு அடங்கிய தெற்கு மண்டலத்தில் 131 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.03.2024க்குள் விண்ணப்பிக்கலாம்.

Trainee Engineer காலியிடங்களின் எண்ணிக்கை: 517

கல்வித் தகுதி: B.E/B.Tech/M.E/M.Tech in Engineering (Electronics, / Electronics & Communication / Electronics & Telecommunication/ Telecommunication / Communication / Mechanical/ Electrical /Electrical & Electronics / Computer Science /Computer Science & Engineering / Information Science/ Information Technology) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.02.2024 அன்று 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். M.E/M.Tech படித்தவர்கள் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.03.2024

விண்ணப்பக்  கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.150 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர்,  நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.   ஆகவே, பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.150 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பங்களை  bel-india.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 13.03.2024 ஆகும். மேலும், முழுமையான விபரங்களை அறிய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

டிப்ளமோ படித்தவரா நீங்கள்... மத்திய அரசு நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு...

March 03, 2024 0

 SAIL-யில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் SAIL இன் அதிகாரப்பூர்வ தளமான sailcareers.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் | SAIL நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் (SAIL) நிறுவனத்தில்,ஆபரேட்டர் டெக்னீஷியன் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான காலி பணி இடங்கள் 314 ஆகும். மேலும் விண்ணப்பிக்க கல்வி தகுதி , 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள் (உலோகவியல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், சிவில், கெமிக் கல், செராமிக், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர்/ஐ.டி, மெக்கானிக்கல் சார்ந்த பாடங்கள் படித்தவர்களாக இருக்க வேண்டும்.

இதற்கான வயது வரம்பு,18-3-2024 அன்றைய தேதிப்படி 18 முதல் 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் தேர்வு முறையானது கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல் ஆகியன ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தை https://sailcareers.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 18 மார்ச் 2024 ஆகும்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

March 03, 2024 0

 

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணி குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.03.2024ம் தேதிக்குள் tjayakumar@pondiuni.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Download Notification PDF



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Amazon நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – சூப்பர் வாய்ப்பு || உடனே விண்ணப்பியுங்கள்!

March 03, 2024 0

 

Amazon நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – சூப்பர் வாய்ப்பு || உடனே விண்ணப்பியுங்கள்!

தனியார் நிறுவனமான Amazon ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Technical Account Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Amazon காலிப்பணியிடங்கள்:

Technical Account Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Technical Account Manager கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Computer Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Technical Account Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Amazon-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியமாக வழங்கப்படும்.

Amazon தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Skill Test / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news