Agri Info

Adding Green to your Life

March 9, 2024

TNCCM தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க வேலைவாய்ப்பு – ரூ.25000/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

March 09, 2024 0

 தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தில் காலியாக உள்ளData Management Assistant, Personal Assistant, Driver, Office Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 21.03.2024 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNCCM காலிப்பணியிடங்கள்:

  • Data Management Assistant – 02 பணியிடங்கள்
  • Office Assistant – 02 பணியிடங்கள்
  • Personal Assistant – 01 பணியிடம்
  • Driver – 01 பணியிடம்

TNCCM கல்வி தகுதி:

  • Data Management Assistant – தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டையும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். கணினி அறிவுடன் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Personal Assistant – டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
  • ஓட்டுநர் – தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியிலிருந்து VIII வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட வாகனம் ஓட்டுவதற்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருடங்களுக்கும் குறைவானது. அதே பிரிவில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
  • Office Assistant –  தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியிலிருந்து VIII வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய/மாநில அரசு நிறுவனங்களில் 1 வருட சேவை/பணி அனுபவம்  பெற்றிருக்க வேண்டும்.

TNCCM தேர்வு செயல் முறை:

  • Short Listing
  • Interview

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க சம்பள விவரம்:

  • Data Management Assistant –  ரூ.25000/-
  • Personal Assistant –  ரூ.25000/-
  • Driver –  ரூ.20,000/-
  • Office Assistant –  ரூ.15,000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

புதுச்சேரியில் மாதம் ரூ.44,900/- சம்பளத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

March 09, 2024 0

 புதுச்சேரி மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஆனது Junior Scientific Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.44,900/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து 27.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Puducherry Drugs Control Dept காலிப்பணியிடங்கள்:

புதுச்சேரி மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையில்  Junior Scientific Officer பதவிக்கு என ஓரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Master’s degree in Chemistry or Biochemistry or Pharmacy or Pharmacology or Microbiology or Biotechnology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Scientific Officer வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.44,900/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் தேதி மற்றும் இடம் பின்னர் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர், அசல் சான்றிதழ்களான பிறப்பு, கல்வி, இருப்பிடம், குடியுரிமை/நேட்டிவிட்டி, சமூகச் சான்றிதழ் மற்றும் அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தேவையான சரிபார்ப்புக்காக ஆட்சேர்ப்புக் குழுவின் முன் ஆஜராக வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

DRDO TBRL வேலைவாய்ப்பு 2024 – ரூ.8050/- உதவித்தொகை || தேர்வு கிடையாது!

March 09, 2024 0

 DRDO TBRL ஆனது Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 70 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

DRDO காலிப்பணியிடங்கள் :

Apprentice பதவிக்கு என 70 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில்  ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Apprentice சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.7700 முதல் ரூ.8050/- உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.03.2024 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

12 ஆம் வகுப்பு முடித்தவரா? உங்களுக்காக காத்திருக்கும் 1074 காலிப்பணியிடங்கள்!

March 09, 2024 0

 IGI ஏவியேஷன் சர்வீசஸ் – டெல்லி விமான நிலையத்தில் முன்னணி விமான சேவை வழங்கும் நிறுவனம் ஆகும். இங்கு காலியாக உள்ள Customer Service Agent  பதவிக்கு என மொத்தம் 1074 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் 22.05.2024 வரை வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IGI காலிப்பணியிடங்கள்:

Customer Service Agent  பதவிக்கு என மொத்தம் 1074 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விமானப் போக்குவரத்து/விமானச் சான்றிதழ் அல்லது டிப்ளமோ தேவையில்லை. 12ம் வகுப்பு தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Agent தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

www.igiaviationdelhi.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து ஆன்லைன் பதிவு மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். வேறு எந்த முறையிலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசில் Project Technical Support காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.28,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

March 09, 2024 0

ICMR -National Institute for Research in Tuberculosis ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Technical Support, Project Data Entry Operator Grade B, Senior Project Assistant, Project Driver Cum Mechanic, Project Multi-Tasking Staff பணிக்கென காலியாக உள்ள 16 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ICMR காலிப்பணியிடங்கள்:

Project Technical Support, Project Data Entry Operator Grade B, Senior Project Assistant, Project Driver Cum Mechanic, Project Multi-Tasking Staff பணிக்கென காலியாக உள்ள 16 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIRT கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Diploma (MLT/DMLT)  / Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ICMR வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25,28,30 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NIRT ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,800/- முதல் ரூ.28,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்(20.03.2024, 21.03.2024) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

JIPMER ஆணையத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.41,300/- || முழு விவரங்களுடன்!

March 09, 2024 0

 Project Research Scientist, Data Entry Operator, Project Technical Support பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.41,300/- மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

JIPMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Research Scientist, Data Entry Operator, Project Technical Support பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Data Entry Operator கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Diploma / M.Sc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


JIPMER வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Data Entry Operator ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.41,300/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து icmryopjipmer@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.03.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


March 8, 2024

கவனம் மக்களே.. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதால் இத்தனை பெரிய ஆபத்தா?

March 08, 2024 0

 

நீண்ட நேரம் அசையாமல் அமர்ந்திருப்பதால் ஆற்றல் செலவாகாது. தசைகள் சுருங்கும். மோசமான இரத்த ஓட்டம் ஏற்படும். குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் சரியாக இயங்க அனுமதிக்காது. இது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


ஆரோக்கியமான உணவு உண்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் நீண்ட காலம் வாழ உடற்பயிற்சியும் முக்கியம். ஆனால் பலருக்கு பணிச்சூழல் காரணமாக மணிக்கணக்கில் அசையாமல் உட்கார்ந்திருக்கும் சூழல் உள்ளது. மேலும் பலர் நீண்ட நேரம் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பது அகால மரணத்தின் அபாயத்தை 30 சதவீதம் அதிகரிக்கிறது. உட்கார்ந்த வாழ்க்கை முறைக்கும் மரணத்திற்கும் தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சி முடிவு செய்துள்ளது. உடல் சுறுசுறுப்புடன் அதிக நேரம் செலவிடுபவர்களை விட, அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்கள் பலவிதமான உடல்நலப் பிரச்சினைகளால் இறக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நீண்ட நேரம் அசையாமல் அமர்ந்திருப்பதால் ஆற்றல் செலவாகாது. தசைகள் சுருங்கும். மோசமான இரத்த ஓட்டம் ஏற்படும். குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் சரியாக இயங்க அனுமதிக்காது. இது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறுகிய காலத்தில் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். குறிப்பாக தசை தேய்மானம், எலும்புகள் பலவீனம், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

நீரிழிவு நோய்

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்களில், கொழுப்பை உடைக்கும் என்சைம்களின் செயல்பாடு குறைகிறது. இந்த நொதி செயல்படவில்லை என்றால், ட்ரைகிளிசரைடுகள் அதிகரிக்கும். இரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும். இதனால் எடை கூடுகிறது. இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுகிறது. இந்த நிலை உயர் இரத்த சர்க்கரை அளவு உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது.

அதிகமாக உட்காருபவர்களுக்கு தசை வேலை குறைவாக இருக்கும். இது அவர்களை சுருங்கச் செய்கிறது. தசைகளில் சேமிக்கப்படும் புரதம் உடைக்கப்படுகிறது. இது தசைச் சிதைவுக்கு வழிவகுக்கிறது. தசை நிறை குறைகிறது மற்றும் வலிமை இழக்கப்படுகிறது. இது தசைச் சிதைவுக்கு வழிவகுக்கிறது.

இரத்த நாளங்கள் சுருங்கும்

மணிக்கணக்கில் உட்கார்ந்தால் அவர்களின் கால்களில் உள்ள இரத்த நாளங்கள் சுருங்கிவிடும். இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. கால்களுக்கு இரத்த ஓட்டம் குறையும் போது, ​​இதயமும் பாதிக்கப்படுகிறது. இரத்தமும் உறையலாம். இதனால் எந்த நேரத்திலும் மாரடைப்பு வரலாம். இதயத்திற்கு ஆரோக்கியமான இரத்தத்தை பம்ப் செய்ய கால்கள் கடினமாக உழைக்க வேண்டும். அதனால்தான் மருத்துவர்கள் நடக்கச் சொல்கிறார்கள்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கு முதுகுத்தண்டு, மூட்டுகள், தசைநார்கள், டிஸ்க்குகள், தசைகள். மன அழுத்தத்தில் இருக்கும். முதுகு வலி. பெண்களுக்கு கழுத்து வலி, தசைப்பிடிப்பு, கருப்பை பிரச்சனைகள் ஏற்படலாம்.

இதய நோய்கள்

மணிக்கணக்கில் அசையாமல் அமர்ந்திருப்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 147% அதிகம். உடல் பருமன் மற்றும் எடை குறைவாக உள்ளவர்கள் இதய நோய் அபாயத்தில் உள்ளனர். உடலின் முக்கிய உறுப்புகளைச் சுற்றி கொழுப்பு குவிந்து, இதே போன்ற நிலைமைகளை ஏற்படுத்துகிறது. எனவே இதய ஆரோக்கியத்திற்கு தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து ஐந்து நிமிடம் விறுவிறுப்பாக நடக்க வேண்டும்.

அதிகமாக உட்காருவதால் கால் எலும்புகளில் எடை அதிகரிக்கும். இது படிப்படியாக எலும்பு இழப்புக்கு வழிவகுக்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களும் ஏற்படலாம்.

சக்தியற்ற தன்மை

நீண்ட நேரம் உட்கார்ந்த வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டவர்களுக்கு, சர்க்கரை மற்றும் கொழுப்பு முறிவு குறைகிறது. இது தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. குறைந்த ஆக்ஸிஜன் பெறப்படுகிறது. இதனால் நீங்கள் மிகவும் சோர்வாக உணர்கிறீர்கள். பலவீனமாக உணர்கிறேன். ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் முன்னும் பின்னுமாக நகரும் ஆற்றல் உற்பத்தி அதிகரிக்கிறது.

நரம்பு ஆரோக்கியம்

நமது உடலில் நரம்புகள் மிகவும் முக்கியமானவை. இரத்தம் சீராகச் செல்ல நரம்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மணிக்கணக்கில் அசையாமல் உட்கார்ந்திருப்பதால் கால் நரம்புகளில் ரத்தம் தேங்கி வீக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரே இடத்தில் இரத்தம் தேங்குவதால் நரம்புகள் விரிவடைகின்றன. இதனால் வீக்கம் மற்றும் வலி ஏற்படும். அவை இதயத்திற்கு இரத்தத்தை வழங்கவும் தவறிவிடுகின்றன. எனவே நீண்ட நேரம் உட்காருவதை தவிர்த்து, அங்கும் இங்கும் நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

🔻 🔻 🔻 

உங்கள் குழந்தைகளின் ஐ.க்யூ அளவை அதிகரிக்க வேண்டுமா? ஜப்பானியர்களின் வழி இதுதான்!

March 08, 2024 0

 உங்கள் குழந்தைகளின் ஐ.க்யூவை அதிகரிக்க வேண்டுமா அல்லது அதுதான் உங்களின் முக்கியமான திட்டமா? அதற்கு இந்த ஜப்பானிய கலாச்சாரம் உதவுகிறது. இது உங்கள் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்க உதவுகிறது. ஐ.க்யூவுக்கும், மரபணுக்களுக்கும் தொடர்பு உள்ளது. 

சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் தனிநபர் வித்யாசங்கள் என அது மற்றவற்றுடனும் தொடர்புடையது. ஒரு குழந்தையின் அறிவாற்றலை வளர்த்தெடுப்பது அவர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்குவது, என ஜப்பானியர்கள் பின்பற்றும் குறிப்புகள் இவைதான்.

ஆர்வத்தை தூண்டி ஆராய வைப்பது

குழந்தை வயதிலேயே ஜப்பானிய கலாச்சாரம் குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டி, அவர்களின் ஆராய்ச்சி திறனை அதிகரிக்கச் செய்கிறது. உங்கள் குழந்தைகளை கேள்வி கேட்க ஊக்குவியுங்கள். 

அவர்களின் சுற்றத்தை அவர்கள் ஆராயட்டும். அவர்கள் பல அனுபவங்களைப் பெறுவதற்கு உறுதுணையாக இருங்கள். அவர்களின் நடவடிக்கைகளை மூலம் அவர்கள் எதையாவது கண்டுபிடிக்க அனுமதியுங்கள். இயற்கை நடை, மியூசியம்களுக்குச் செல்வது மற்றும் அவர்களுடன் பேசிக்கொண்டோ கற்பது, விளையாடுவது என ஊக்கப்படுத்துங்கள்.

வாசிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள்

ஜப்பானிய கலாச்சாரத்தில் படிப்பது என்பது மதிப்புமிக்க ஒன்று, அறிவு வளர்ச்சிக்கு அது மிகவும் அவசியம். உங்கள் குழந்தைகளைச் சுற்றி புத்தகங்களை அடுக்குங்கள். குழந்தை முதலே வாசிக்கப் பழகட்டும். படிப்பதை வழக்கமாக்கி பல்வேறு தலைப்புகளையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். அது அவர்களின் அறிவை விரிவாக்கும். அவர்களின் கற்பனை திறனை தூண்டும்.

கடின உழைப்பை ஊக்குவியுங்கள்

விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு என்ற இரண்டும்தான் வெற்றிக்கான திறவுகோல்களாக ஜப்பானியர்கள் கடுமையாக நம்புகிறார்கள். எனவே, உங்கள் குழந்தையை வளர்ச்சி மனப்பான்மைக்கு பழக்கப்படுத்துங்கள். 

அறிவும், திறமையும், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் வருவது என்று அவர்கள் தெரிந்துகொள்ளட்டும். அவர்களின் முயற்சிகளை பாராட்டுங்கள். அவர்கள் மீண்டு எழுவதற்கு அவர்களை உற்சாகப்படுத்துங்கள். அவர்களின் சாதனைகளை மட்டும் பாராட்டாதீர்கள். அவர்களின் தோல்விகளில் துணை நில்லுங்கள்.

படிக்க ஏதுவான சூழலை உருவாக்குங்கள்

ஜப்பானில் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதனால் கல்வியில் சாதிப்பது ஊக்குவிக்கப்படுகிறது. வீட்டில் கல்வி கற்பதற்கு ஏதுவான சூழல் உருவாக்கப்படுகிறது. படிப்பதற்கு தனி அறை, வீட்டுப்பாடங்களை எழுதுவதற்கான நேரம், கல்வியை வளப்படுத்தும் செயல்பாடுகள் உங்களின் சொந்த நடவடிக்கைகளின் வழியாக கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவது.

ஒழுக்கத்துக்கு மாதிரியாகுங்கள்

அறிவு வளர்ச்சி மற்றும் படிப்பில் சிறந்து விளங்க ஒழுக்கமும், கவனமும் மிகவும் அவசியம். உங்கள் குழந்தைக்கு சுய ஒழுக்கத்தின் மதிப்பை கற்றுக்கொடுங்கள். நேர மேலாண்மை, தெளிவான எதிர்பார்ப்புகளை உருவாக்கும். வழக்கங்களை அவர்களுக்கு பழக்கப்படுத்துங்கள். 

அவர்களுக்கு வழிகாட்டுங்கள். எப்போதும் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள். அவர்கள் செய்யும் கடின செயல்களை, அவர்கள் செயல்களை அவர்கள் பகிர்ந்து, அவர்கள் மேலாண்மை செய்யுமளவுக்கு பகிர்ந்துகொடுங்கள். அவர்களின் இலக்குகளில் அவர்கள் கவனம் செலுத்த உறுதுணையாகுங்கள்.

பிரச்னைகளை தீர்க்கும் திறன்களை வளர்த்தெடுங்கள்

கிரியேட்டிவிட்டி மற்றும் பிரச்னைகளை தீர்க்கும் திறன், ஜப்பானில் அதிகம் மதிக்கப்படுகிறது. அது அறிவு வளர்ச்சிக்கும் உதவுகிறது. உங்கள் குழந்தைகளை ஊக்குவியுங்கள். அவர்களை வித்யாசமாக சிந்திக்க தூண்டுங்கள். 

நுட்பமான தீர்வுகளை பாருங்கள். சவால்களை வளர்ச்சிக்கான வாய்ப்புக்களாக பார்க்க கற்றுக்கொடுங்கள். வெளிப்படையான செயல்களை கொடுங்கள், அவர்கள் தங்களை வெளிக்காட்ட உதவுங்கள், அவர்களின் கிரியேட்டிவிட்டியையும் வளர்த்துவிடுங்கள்.

ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுங்கள்

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, குழந்தையுன் ஒட்டுமொத்த நலன் மற்றும் நினைவாற்றல் திறனுக்கு நல்லது. உங்கள் குழந்தைகளை சரிவிகித உணவு உட்கொள்ள அறிவுறுத்துங்கள். வழக்கமான உடற்பயிற்சிகள், போதிய உறக்கம் மற்றும் குறைவான திரைநேரத்தையும் ஊக்குவியுங்கள். 

உங்கள் குழந்தைக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும், ஸ்னாக்ஸ்களையும் வழங்குங்கள். ஆரோக்கியமான உறக்க பழக்கங்களை கொடுங்கள். குடும்பம் முழுவதும் சேர்ந்து உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள்.

DFCCIL ஆணையத்தில் Safety Councilor காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை || விண்ணப்பிக்கலாம் வாங்க!

March 08, 2024 0

DFCCIL ஆணையத்தில் Safety Councilor காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Dedicated Freight Corridor Corporation of India Limited நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Safety Councilor பணிக்கென காலியாக உள்ள 26 பணியிடங்கள் நிரப்ப உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

DFCCIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Safety Councilor பணிக்கென மொத்தம் 26 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Safety Councilor தகுதி:

மத்திய அல்லது மாநில அரசில் Level 7 அளவிலான ஊதியத்தில் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்.


DFCCIL வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Safety Councilor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Parent pay உடன் Deputation Allowance வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DFCCIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news 

ரூ.31,000/- ஊதியத்தில் NIT திருச்சி வேலைவாய்ப்பு 2024 – B.E தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

March 08, 2024 0

 ரூ.31,000/- ஊதியத்தில் NIT திருச்சி வேலைவாய்ப்பு 2024 – B.E தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி ஆனது Junior Research Fellow (JRF)/Project Associate I/ Project Associate II பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NIT காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Research Fellow (JRF)/Project Associate I/ Project Associate II பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.


JRF கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E. / B.Tech / M.E. / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIT வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

JRF ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIT தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து jrfsjn.nitt@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.03.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

March 08, 2024 0

 


தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ( CUTN ) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Project Fellow / Project Associate-I பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Phil, M.Sc, ME/M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Project Fellow/Project Associate-I பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Phil, M.Sc, ME/M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.14,000/- முதல் ரூ.31,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 10.03.2024 ம் தேதிக்குள் meherhere@gmail.com, preethimeher@cutn.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Download Notification PDF

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news