2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு ( Juvenile Justice - Care and Protection of Children Act ) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு (Juvenile Justice Board) சமூக நல உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு குழந்தைகள் நலன் துறை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சமூக நல உறுப்பினர்கள் பதவிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.
ஊதியம்: மதிப்பூதிய அடிப்படையில் (honorarium basis) நியமிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பம் செய்வது எப்படி? இதற்கான விண்ணப்ப படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் இந்த பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் (மார்ச் 26ம் தேதி வரை) கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை.எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,சென்னை 600 010. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join Group4 whatsapp group
Click here to join WhatsApp group for Daily employment news