மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIFT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Young Professional – I பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இப்பணிக்கான நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மத்திய அரசு பணியிடங்கள்:
Young Professional – I பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே CIFT நிறுவனத்தில் காலியாக உள்ளது.
Young Professional – I கல்வி விவரம்:
இந்த CIFT நிறுவன பணிக்கான நேர்காணலில் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.
Young Professional – I வயது விவரம்:
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 21 வயது எனவும், அதிகபட்சம் 45 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Young Professional – I ஊதிய விவரம்:
இப்பணிக்கான நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
CIFT தேர்வு செய்யும் முறை:
Young Professional – I பணிக்கு பொருத்தமான நபர்கள் 05.04.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
CIFT விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த CIFT நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Biodata), புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலின் போது காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
🔻🔻🔻