Agri Info

Adding Green to your Life

March 22, 2024

TNPSC Notes PDF Download- Geography Model Test Question & Answers – தமிழில்

March 22, 2024 0

 

Geography Model Test Question & Answers – தமிழில் [TNPSC Notes PDF Download]

Geography Model Test

Download Link

Test 1

Download PDF

Test 2

Download PDF

Test 3

Download PDF

Test 4

Download PDF

Test 5

Download PDF

Test 6

Download PDF

Test 7

Download PDF

Test 8

Download PDF

Test 9

Download PDF

Test 10

Download PDF

Test 11

Download PDF

Test 12

Download PDF

Test 13

Download PDF

Test 14

Download PDF

Test 15

Download PDF

Test 16

Download PDF

Test 17

Download PDF

Test 18

Download PDF

Test 19

Download PDF

Test 20

Download PDF

Test 21

Download PDF

Test 22

Download PDF

Test 23

Download PDF

Geography Model Test Question & Answers – தமிழில் [TNPSC Notes PDF



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC Notes PDF Download- History Model Test Question & Answers – தமிழில்

March 22, 2024 0

 

History Model Test Question & Answers – தமிழில் [TNPSC Notes PDF Download]

History Model Test

Download Link

Test 1

Download PDF

Test 2

Download PDF

Test 3

Download PDF

Test 4

Download PDF

Test 5

Download PDF

Test 6

Download PDF

Test 7

Download PDF

Test 8

Download PDF

Test 9

Download PDF

Test 10

Download PDF

Test 11

Download PDF

Test 12

Download PDF

Test 13

Download PDF

Test 14

Download PDF

Test 15

Download PDF

Test 16

Download PDF

Test 17

Download PDF

Test 18

Download PDF

Test 19

Download PDF

Test 20

Download PDF

Test 21

Download PDF

Test 22

Download PDF

Test 23

Download PDF

Test 24

Download PDF

Test 25

Download PDF

Test 26

Download PDF

Test 27

Download PDF

Test 28

Download PDF

History Model Test Question & Answers – தமிழில் [TNPSC Notes PDF Download]


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Buddha | புத்தரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய 6 வாழ்க்கை பாடங்கள்..!

March 22, 2024 0

 பாரத கண்டத்தில் வாழ்ந்து மறைந்த ஞானியர்களுள் குறிப்பிடத்தக்கவராக புத்தர் விளங்குகிறார். இவரின் போதனைகள் இன்றளவும் உலகம் முழுவதும் உள்ள ஆன்மீக சாதகர்களுக்கும் பாமர மக்களுக்கும் வழிகாட்டியாக இருந்து வருகின்றன. புத்த மதத்தை சார்ந்தவர் மட்டுமின்றி உலகம் முழுவதும் வசிக்கும் வேற்று மதத்தை சார்ந்தவர்களும் புத்தரின் போதனைகளை பின்பற்றுகின்றனர். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த புத்தரின் முக்கியமான 6 போதனைகளை பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்.

முழு மனதோடு ஈடுபட வேண்டும்: எந்த செயலை செய்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி அதில் முழு மனதோடு ஈடுபட வேண்டுமென புத்தர் வலியுறுத்துகிறார். நிகழ்காலத்தில் மட்டுமே மனதை நிலை நிறுத்தி, வருவதை ஏற்றுக்கொண்டு வாழ்வது அவசியம் என குறிப்பிடுகிறார். இவ்வாறு வாழ்வதன் மூலம் நம்முடைய எண்ணங்களை நாமே கண்காணிக்கவும், எதிர்காலம் மற்றும் கடந்த காலத்தை எண்ணி கவலைப்படாமல் நிகழ்காலத்தில் முழுமையாக வாழ முடியும் .


எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை ஏற்று கொள்ளுங்கள்: புத்தரின் போதனைகளுள் இது மிகவும் முக்கியமானதாகும். வாழ்வில் அனைத்துமே. மாறக் கூடியது. நிரந்தரமானது என எதுமே கிடையாது. அனைவரும் எப்போதும் மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டுமென அவர் குறிப்பிடுகிறார். இதனை பழகி கொள்வதன் மூலம் எதனிடமும் எவரிடமும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பழக முடியும். மேலும் எவரையும் கட்டுபடுத்தாமல் அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஒரு பக்குவத்தை இது நமக்கு அளிக்கிறது.


இரக்க குணம்: எப்போதும் ஒருவர் இரக்க குணத்துடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும். அனைவரிடமும் அன்புடனும் இரக்கத்துடன் பழக வேண்டும். இந்த குணத்தை ஒருவர் கொண்டிருந்தால் மற்றவர்களின் துயரத்தை போக்குவதோடு தாமும் வாழ்வில் எந்த வித கஷ்டம் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வர முடியும். மேலும் இரக்ககுணம் என்பது ஒரு பாடமாக மட்டுமே இல்லாமல் அது ஒருவரின் வாழ்க்கை முறையாகவே ஒரு கட்டத்தில் மாறிவிடும்.


அகந்தையை துறக்க வேண்டும்: நான் என்ற அகந்தையை துறப்பது பற்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் தெளிவாக உணர்ந்து வலியுறுத்தியிருக்கிறார். நான் என்ற அகந்தை குடிகொள்ளும் போது ஒருவர் மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தி நினைக்க துவங்கி விடுகிறார்.. இந்த அகந்தையை ஒருவர் துறக்கும் போது, நான் என்ற வேறுபாடு நீங்கி அனைவரும் ஒன்றே என்பதை உணர துவங்குகிறார். அனைவரும் ஒன்று என்பதை ஒருவர் விளங்கி கொண்டால் அதன் பிறகு யாரிடமும் பாரபட்சம் பார்ப்பது என்பது இருக்காது. ஒருவர் அகந்தையை துறப்பதற்கு முதலில் மற்றவர்களின் அங்கீகாரத்திற்கு ஏங்குவதை நிறுத்த வேண்டும். இதை ஒருவர் பழக்கி கொண்டாலே அவரிடம் உள்ள அகந்தை கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.


பற்றற்று இருக்க வேண்டும்: ஒரு மனிதர் எதன் மீதும் பற்றற்று இருத்தாலே நிரந்தர ஞானத்திற்கான திறவுகோல் என்பதை புத்தர் மட்டுமின்றி பல்வேறு மகான்களும் வலியுறுத்தியுள்ளனர். இந்த பற்றற்ற தன்மையை ஒருவர் கை கொண்டுவிட்டால் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக இந்த உலக பந்தங்களிலிருந்து அவர் விடுபடுவார். மேலும் எதன் மீதும் பிடிப்பிலாத காரணத்தினால் உலகின் எந்த விஷயமும் அவரை பாதிக்காது


உங்கள் இருப்பிற்கான காரணத்தை அறியவேண்டும்: ஒருவர் தன்னுடைய பிறப்பிற்கான காரணத்தை அறிய முற்படவேண்டும் என புத்தர் தெளிவாக வலியுறுத்துகிறார். ஒரு குறிக்கோளை மனதில் வைத்து வாழும் போது அம்மனிதர் தான் செம்மையடைவதொடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் உதவியாகவும் நல்ல வழிகாட்டியாகவும் விளங்குவார். தன்னுடைய இருப்பு தனக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்படியான குறிக்கோள்களை ஒருவர் கொண்டிருக்க வேண்டும்.



🔻 🔻 🔻 

நோன்பு திறக்க முதலில் பேரீட்சை பழங்களை எடுத்துக்கொள்ள என்ன காரணம்..?

March 22, 2024 0

 ரமலான் என்பது உலகெங்கிலும் வாழுகின்ற முஸ்லிம் மக்களால் கடைப்பிடிக்கப்படும் புனித மாதம் ஆகும். சூரிய உதயத்திற்கு முன்னால் நோன்பு வைத்து, அதனை சூரிய அஸ்தமன நேரத்தில் முடித்துக் கொள்கின்றனர். ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் இறைவனை நினைத்து தினசரி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகைகளை மேற்கொள்வர்.

நோன்பு இருக்கும் சமயத்தில் எந்தவித உணவும் சாப்பிடாமலும், தண்ணீர் அருந்தாமலும், உமிழ் நீரை விழுங்காமலும் விரதம் இருக்கின்றனர். இதனை மாலைப் பொழுதில் முடித்துக் கொள்ளும்போது இஸ்லாமியர்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் பேரீட்சை மிக முக்கிய இடத்தைப் பிடிக்கிறது


பாரம்பரிய முறைப்படி பேரீட்சை எடுத்துக் கொள்வது ஒரு வழக்கமாக இருக்கிறது. அதையும் தாண்டி இது ஆழமான ஆன்மீக தொடர்புகளைக் கொண்டிருக்கிறது. மேலும், எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை பேரீட்சை கொண்டிருப்பதால் அன்றைய நாளின் விரதத்தை முடிக்கும்போது இது நல்லதொரு உணவாக அமைகிறது.


வரலாறு மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் : பேரீட்சையுடன் நோன்பை முடித்துக் கொள்ளும் வழக்கம், இறை தூதரான முகமது நபிகள் காலத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்படுகிறது. அராபிய பாரம்பிய முறைப்படி, பேரீட்சை மற்றும் தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம் நோன்பை முடித்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தாராம். நோன்பு வைக்கும் முன்பாகவும், நோன்பு திறந்த பிறகும் இதுபோன்ற பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு இஸ்லாமிய மதத்தின் போதனை நூல்கள் பலவற்றில் எடுத்துக்காட்டு உள்ளது.


ஊட்டச்சத்துக்கள் : ஆன்மீக நம்பிக்கை ஒருபக்கம் இருக்க, பேரீட்சையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பதும் இதனை மக்கள் விரும்பி சாப்பிட ஒரு காரணம் ஆகும்.


இயற்கையான இனிப்பு : விரதம் முடித்த கையோடு பேரீட்சை சாப்பிடுவதால் உடலுக்கு துரிதமான ஆற்றல் கிடைக்கிறது. பேரீட்சையில் குளுகோஸ், ஃப்ரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற இயற்கையான இனிப்புகள் இருக்கின்றன. இது ரத்த சர்க்கரையை துரிதமாக அதிகரித்து உடலுக்கு ஆற்றல் வழங்கும்.

நிறைவான ஊட்டச்சத்துக்கள் : நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் விட்டமின் சத்துக்கள் பேரீட்சையில் உள்ளன. நீண்ட நேரம் நோன்பு இருந்து சோர்வு அடையும் மக்களுக்கு இது உடனடி ஆற்றல் கொடுக்கும்.


நீர்ச்சத்து : பேரீட்சை பழங்களில் நீர்ச்சத்து மிகுதியாக உள்ளது. அது நம் உடல் இயக்கத்திற்கு தேவையான நீர்ச்சத்து தேவையை பூர்த்தி செய்யும்.


வயிற்றுக்கு நல்லது : பேரீட்சை மிக எளிமையாக ஜீரணம் ஆகக் கூடியது. நோன்பை முடித்துக் கொண்ட பிறகு எளிமையாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற சுழலில், இது நல்லதொரு தேர்வாக அமையும்.

செரிமான ஆரோக்கியம்: பேரீட்சையில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் செரிமான ஆரோக்கியம் மேம்படும் மற்றும் மலச்சிக்கல் ஏற்படாது.

🔻 🔻 🔻 

பழுத்த.. இனிப்பான தர்பூசணி பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

March 22, 2024 0

 கோடைக்காலம் வந்துவிட்டது என்பதை வெயில் கொளுத்துவதற்கு முன் இந்த தர்பூசணிகளின் வருகை உணர்த்திவிடும். எங்கு பார்த்தாலும் தர்பூசணி விற்பனை அமோகமாக இருக்கும். அதேசமயம் கோடை வெப்பத்தை தனிக்க தர்பூசணியை தவிர சிறந்த பழம் இருக்க முடியாது. காரணம் இதில் 95% தண்ணீர் மட்டுமே நிறைந்துள்ளது. இதனால் நம் உடலை எப்போதும் நீர்ச்சத்து நிறைவாக வைத்திருக்கும். எல்லம் சரிதான்.. ஆனால் இந்த பழத்தை வாங்குவதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

ஆம்.. அதாவது வீட்டிற்கு ஆசையாக முழு தர்பூசணி பழத்தை விலை பேசி வாங்கி வந்தவுடன் அதை வெட்டி சாப்பிடும்போது சுவை இல்லாமல் இருக்கும் அல்லது பழுக்காமல் காயாக இருக்கும். பிறகுதான் தெரியும் விலை கொடுத்து பழுக்காத பழத்தை வாங்கி வந்திருக்கிறோம் என.. இப்படி நீங்களும் பல முறை எதிர்கொண்டிருக்கிறீர்கள் எனில் உங்களுக்கானதுதான் இந்த கட்டுரை.. இதில் பழுத்த நல்ல தர்பூசணியை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

பழத்தின் கோடுகள் : தர்பூசணி பழத்தை பார்க்கும் போது முதலில் அதன் மேல் உள்ள கோடுகளை கவனிக்க வேண்டும். அதாவது அதன் பச்சை மற்றும் மங்கிய பழுப்பு நிற கோடுகளை கவனித்தால் அதில் பச்சை நிற கோடுகள் அடர் நிறத்தில் இருக்கும். பழுப்பு நிற கோடுகள் மங்கிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். அவ்வாறு இருந்தால் அது பழுத்த பழம். அதுவே பச்சை நிறக்கோடுகள் மங்கிய நிறத்தில் பளபளப்பாக தெரிந்தால் அது பழுக்கும் நிலையில் இருக்கிறது என அர்த்தம்.


மங்கிய நிறம் : நீங்கள் பழத்தை நன்றாக கவனித்தால் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கோடுகள் அழிந்து ஸ்பாட் போல் மங்கிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். அவ்வாறு இருக்கும் பழங்கள் மண்ணிலிருந்து பிடுங்கும்போது பழுத்திருப்பதாக அர்த்தம். அதுவே கொஞ்சம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம் கலந்தது போல் இருந்தால் நன்கு இனிப்பு சுவை கொண்ட பழுத்த பழம் என்று அர்த்தம். ஒருவேளை அந்த ஸ்பாட் வெள்ளை நிறம் அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் பழம் சுவை இருக்காது என்று அர்த்தம்.


காம்பு தண்டை கவனிக்கவும் : தர்பூசணி பழத்தின் மீது இருக்கும் காம்பு நன்கு காய்ந்து பிரவுன் நிறத்தில் இருந்தால் பழுத்திருப்பதாக அர்த்தம். பச்சை நிறத்தில் இருப்பின் காயாக உள்ளது என அர்த்தம்.


தர்பூசணி பழத்தின் மீது தட்டவும் : நீங்கள் பழத்தை வாங்கி தட்டிப்பருங்கள் தட்டும்போது ஆழமான சத்தம் கேட்கும். அதாவது உள்ளே காலியாக இருக்கும்போது வரும் சத்தம் போல் கேட்கும். அவ்வாறு இருந்தால் பழம் பழுத்திருப்பதாக அர்த்தம். அதேசமயம் பழத்தை தட்டும்போது கடினமாக இருக்கும். சத்தத்தின் ஒலி அடர்த்தியாக கேட்கும் அவ்வாறு இருப்பின் அது காயாக உள்ளதென அர்த்தம்.


பழத்தின் மீது காயங்கள் : பழத்தின் மீது கீரல் அல்லது ஏதவாது வெட்டு காயங்கள் போல் இருந்தால் அது நன்கு பழுத்த சுவை கொண்ட பழம் என் அர்த்தம். பழத்தின் இனிப்பு வெளியேறுகிறது என அர்த்தம்.


வட்டமாக இருக்க வேண்டும் : நீங்கள் வாங்கும் தர்பூசணி பழம் வட்டமாக இருப்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில் வட்டமான பழத்தில்தான் சுவை அதிகமாக இருக்கும். முட்டை போன்ற ஓவல் ஷேப்பில் இருந்தால் அதில் சுவை குறைவாக இருக்கும்.


🔻 🔻 🔻 

இந்த இரத்த பரிசோதனைகளை அடிக்கடி செய்துகொள்வது நல்லது.. ஏன் தெரியுமா..?

March 22, 2024 0

 உடற்பருமன், நீரழிவு நோய் அல்லது ஏற்கனவே ஹைப்பர் டென்ஷன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப வரலாற்றை சேர்ந்த தனி நபர்கள் வழக்கமான முறையில் ரத்த பரிசோதனைகளை செய்வது பல்வேறு காரணங்களுக்காக அவசியமாக கருதப்படுகிறது. அவ்வாறான ஒரு சில காரணங்கள் என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

ஆரம்பகால நோய் கண்டறிதல் : ரத்த அழுத்த அளவுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதை வழக்கமான ரத்த அழுத்த பரிசோதனைகள் மூலமாக ஆரம்ப கட்டத்திலேயே நாம் கண்டறிந்து விடலாம். அதிக ரத்த அழுத்தத்தை நீங்கள் ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் அது இதய நோய், பக்கவாதம் அல்லது சிறுநீரக சேதம் போன்ற மோசமான பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.


கண்காணிப்பு : அபாய காரணிகள் கொண்ட தனி நபர்கள் வழக்கமான முறையில் தங்களது ரத்த அழுத்தத்தை கண்காணிப்பதன் மூலமாக பெறப்படும் முக்கியமான தகவல்களைக் கொண்டு ரத்த அழுத்த அளவுகளை பராமரிப்பதற்கு தேவையான வாழ்க்கைமுறை மாற்றங்கள் அல்லது மருந்துகளை எடுப்பதற்கு உதவும்.


அபாய மதிப்பீடு : வழக்கமான ரத்த அழுத்த பரிசோதனைகள் ஒரு நபரின் ஒட்டுமொத்த இதயம் சம்பந்தப்பட்ட அபாயங்களை மதிப்பீடு செய்வதற்கு மருத்துவருக்கு உதவுகிறது. இதனால் அந்த நபருக்கு ஏற்ற மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை தருவதன் மூலமாக நிலைமை மோசமாவதை தவிர்க்கலாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : ஒருவரது ரத்த அழுத்த நிலையை தெரிந்து கொள்வதன் மூலமாக இதய ஆரோகியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருவர் எடுக்க முடியும். ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, மன அழுத்த கட்டுப்பாடு, புகையிலையை தவிர்ப்பது, அதிகப்படியாக மது அருந்துவதை நிறுத்துவது போன்றவை இதில் அடங்கும்.

சிகிச்சை : ஏற்கனவே ஹைப்பர் டென்ஷன் பிரச்சனை இருப்பதாக கண்டறியப்பட்ட நபர்கள் வழக்கமான முறையில் ரத்த பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் சரியாக வேலை செய்கிறதா? என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் மருந்துகளின் அளவுகள் அல்லது வகைகளில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படுகிறதா என்பதை இதன் மூலமாக நாம் அறியலாம்.


வாழ்க்கை முறை மாற்றங்கள் : வழக்கமான ரத்த அழுத்த பரிசோதனைகளை செய்வது ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும் என்பதற்கான ஒரு நினைவூட்டுதலாக நமக்கு அமைகிறது. தொடர்ச்சியாக அதிக ரத்த அழுத்த அளவுகள் இருப்பதன் மூலமாக உணவு உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தம் மேலாண்மை பயிற்சிகள் போன்றவற்றில் தேவையான மாற்றங்களை செய்யலாம்.


உளவியல் தாக்கம் : அபாய காரணிகள் கொண்ட நபர்கள் வழக்கமான முறையில் ரத்த அழுத்த பரிசோதனைகளை செய்யும் பொழுது அவர்களுக்கு ஏற்படக்கூடிய பதட்டம் குறைந்து அவர்கள் இதய ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது என்ற ஒரு திருப்தி கிடைக்கும். மாறாக ரத்த அழுத்த பரிசோதனைகளை தவிர்ப்பது பதட்டத்தை அதிகரிக்கும். மேலும் ஒருவரது ஆரோக்கியம் பற்றிய எந்த ஒரு தெளிவான புரிதலும் இல்லாமல் இருக்கும்.


ஒட்டுமொத்தமாக நோய் தடுப்பு, ஆரம்பகால நோய் கண்டறிதல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் மேலாண்மை போன்றவற்றில் வழக்கமான ரத்த பரிசோதனைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.


🔻 🔻 🔻 

TN SET 2024 தேர்வு அறிவிப்பு வெளியீடு – கல்வி, வயது, விண்ணப்பிக்கும் விவரங்கள் இதோ!

March 22, 2024 0

 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆனது 2024ம் ஆண்டுக்கென நடைபெறவுள்ள TN SET 2024 தேர்வு குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மூலம் Assistant Professor பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் 01.04.2024 அன்று முதல் https://www.msuniv.ac.in என்ற இணையதளம் வாயிலாக பெறப்படவுள்ளது. இத்தகைய TN SET 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வறுமாறு வழங்கப்பட்டுள்ளது.

TN SET 2024 தேர்வு விவரங்கள்:

தமிழக கல்லூரிகளில் காலியாக உள்ள Assistant Professor பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் TN SET தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த வகையில் நடப்பாண்டுக்கான TN SET 2024 தேர்வுக்கான அறிவிப்பானது 20.03.2024 அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வானது 03 ஜூன் 2024 அன்று முதல் 25 ஜூன் 2024 அன்று வரை நடைபெறவுள்ளது.

TN SET 2024 காலியிடங்கள்:

இந்த தேர்வுக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

TN SET 2024 கல்வி:

இந்த Assistant Professor பணிக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் UGC அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, PG Diploma, Diploma + Master Degree, Ph.D முடித்தவராக இருக்க வேண்டும்.

TN SET 2024 வயது:

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

TN SET 2024 தேர்வு நடைபெறும் விதம்:

  • இத்தேர்வானது Paper I, Paper II என இரண்டு பிரிவுகளாக 03 மணி நேரத்திற்கு நடத்தப்படவுள்ளது.
  • Paper I தேர்வானது 50 MCQ வினாக்களை கொண்டு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
  • Paper II தேர்வானது 100 MCQ வினாக்களை கொண்டு 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

TN SET 2024 விண்ணப்ப கட்டணம்:

  • General – ரூ.2,500/-
  • BC / MBC / DNC – ரூ.2,000/-
  • SC / ST / SC(A) / PwD (VI, HI, PH) – ரூ.800/-
  • Third Gender – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் விதம்:

இந்த TN SET 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் 01.04.2024 அன்று முதல் 30.04.2024 அன்று வரை https://www.msuniv.ac.in என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

கோயம்புத்தூர் Wipro நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

March 22, 2024 0

 இந்திய பன்னாட்டு நிறுவனமான Wipro நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Trainee பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Wipro காலிப்பணியிடங்கள்:

Wipro நிறுவனத்தில் Trainee பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன

கல்வி தகுதி:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பட்டம் (Degree) பெற்றவராக இருக்கலாம்.

Wipro ஊதியம்:

இந்த Wipro நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும்.

Wipro தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் Written Exam, Group Discussion, Skill Test, Interview ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wipro விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification 2024

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னையில் காத்திருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

March 22, 2024 0

 Society for Applied Microwave Electronics Engineering & Research (SAMEER) என்பது இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். இங்கு Consultant பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 64 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 31.03.2024 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SAMEER காலிப்பணியிடங்கள்:

Consultant பதவிக்கு என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

31.03.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 64 க்குள் இருக்க வேண்டும்.மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SAMEER தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news