Agri Info

Adding Green to your Life

March 23, 2024

மருதமலை கோவில் வேலை வாய்ப்பு; 21 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

March 23, 2024 0

 தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையில் கோவை மாவட்டம் பேரூர் வட்டம் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் உப கோயில்களில் எழுத்தர், ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 21 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன


இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

டிக்கெட் விற்பனை எழுத்தர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 18,500 – 58,600

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400

காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400

திருவலகு

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400

விடுதிக் காப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400

பலவேலை

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400

ஓட்டுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,500 – 58,600

பிளம்பர் கம் பம்ப் ஆபரேட்டர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : குழாய் தொழில் அல்லது குழாய் பணியர் பாடப்பிரிவில் .டி. படித்திருக்க வேண்டும். 2 வருட தொழில் பழகுநர் பயிற்சி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,000 – 56,900

மின் உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : மின் பணியாளர் பாடப்பிரிவில் .டி. படித்திருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 16,600 – 52,400

மினி பஸ் கிளீனர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 15,700 – 50,000

உபகோயில் அருள்மிகு கரிவரதராஜபெருமாள் கோயில் பணியிடங்கள்

காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800

திருவலகு

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000 – 31,500

வயதுத் தகுதிவிண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறைஇந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறைஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://marudhamalaimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி: துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மருதமலை, பேரூர் வட்டம், கோவை மாவட்டம் - 641016

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.04.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://marudhamalaimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

HVF ஆவடி வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.60,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

March 23, 2024 0

 கனரக வாகன தொழிற்சாலை (HVF) ஆவடி ஆனது Junior Assistant, Manager, Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 34 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு 13.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

HVF ஆவடி காலிப்பணியிடங்கள்:

Manager (Production) – 1 பணியிடம்
Manager (Quality) – 1 பணியிடம்
Production Engineer (Mechanical) – 4 பணியிடங்கள்
Production Engineer (Electrical) – 2 பணியிடங்கள்
Planning Engineering – 4 பணியிடங்கள்
Quality Engineer (Mech) – 7 பணியிடங்கள்
Quality Engineer (Electrical) – 3 பணியிடங்கள்
Drawing Engineer (Mechanical) – 5 பணியிடங்கள்
Drawing Engineer (Electrical) – 1 பணியிடம்
Purchase Engineer – 2 பணியிடங்கள்
Russian Translator – 1 பணியிடம்
Junior Assistant – 3 பணியிடங்கள்

என மொத்தம் 34பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 50 % மதிப்பெண்களுடன் Diploma or BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 63க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

HVF ஆவடி சம்பள விவரம்:

  • Manager – ரூ.60,000/-
  • Production Engineer & Quality Engineer – ரூ.30,000/-
  • Junior Assistant – ரூ.22,000/-

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து THE CHIEF GENERAL MANAGER, HEAVY VEHICLES FACTORY, AVADI, CHENNAI – 600054. TAMILNADU என்ற முகவரிக்கு 13.04.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மாதம் ₹1 லட்சம் வரை சம்பளம் ... நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு காலியிடங்கள்தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள எண்ணற்ற பணியிடங்களுக்குத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், நான் முதல்வன் திட்டத்தில் IT head, senior manager, program manager உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பைதமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu skill development corporation) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

March 23, 2024 0

 தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள எண்ணற்ற பணியிடங்களுக்குத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில், நான் முதல்வன் திட்டத்தில் IT head, senior manager, program manager உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பைதமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu skill development corporation) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


News18


ஒவ்வொரு பதவிக்குமான காலியிடங்கள் எண்ணிக்கை, வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை அறிவிப்பில் (Recruitment Notice) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பங்களை https://naanmudhalvan.tn.gov.in/JobRecruitment/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 20-4-2024 ஆகும்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

March 22, 2024

ஜப்பானியர்கள் 100 வயது வரை வாழ என்ன காரணம் தெரியுமா..? இதுதான் அந்த இரகசியம்.!

March 22, 2024 0

 நீண்ட ஆயுளை பெறுவது எப்படி என்று எப்பொழுதாவது நீங்கள் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? இதற்கு நீங்கள் ஜப்பானியர்கள் பின்பற்றும் சில விஷயங்களை தெரிந்து கொண்டாலே போதும். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை பெறுவதற்கு ஜப்பானியர்கள் பின்பற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் சிலவற்றை பற்றி பார்க்கலாம்.

வானவில் நிற தட்டு : நீங்கள் சாப்பிடக்கூடிய உணவு பல நிறங்களிலும், சுவைகளிலும் இருக்க வேண்டும். பச்சை நிற கீரைகள், ஆரஞ்சு நிற கேரட்டுகள், பெர்ரி பழங்கள் போன்ற பல்வேறு நிறங்கள் அடங்கிய காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் சாப்பிடுங்கள். இது உங்கள் உடலுக்கு போஷாக்கு வழங்கும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்களை வழங்குவது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் பெற்று தரும்.


கிரீன் டீ பருகவும் : ஜப்பானில் கிரீன் டீ வெறுமனே ஒரு பானமாக மட்டும் கருதப்படவில்லை. ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் மற்றும் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கிரீன் டீ ஜப்பானிய கலாச்சாரத்தில் முதன்மையான பானமாக பயன்படுத்தப்படுகிறது. சூடாகவோ அல்லது குளிர்ந்த நிலையிலோ வழக்கமான முறையில் கிரீன் டீயை சேர்ப்பது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயங்களை குறைக்கிறது. இதனால் நீங்கள் நீண்ட ஆயுளை பெறலாம்.


எளிமையான உடற்பயிற்சிகளை தினமும் செய்யவும் : ஜப்பானில் உடற்பயிற்சி என்பது ஜிம்மிற்கு சென்று பயிற்சி செய்வதையும் தாண்டி, அன்றாட வாழ்க்கையில் பிணைந்த ஒன்றாக அமைகிறது. காலையில் செய்யக்கூடிய நீட்சி பயிற்சிகள் முதல் மாலை நேர நடை பயிற்சிகள் வரை ஜப்பானியர்கள் தங்களை எப்பொழுதும் ஆக்டிவாக வைத்துக் கொள்வதற்கு சில பயனுள்ள வழிகளை பின்பற்றுகின்றனர். தினமும் நடைபயிற்சிக்கு செல்வது, யோகா பயிற்சி செய்வது போன்றவற்றை உங்களது அன்றாட வழக்கத்தில் பின்பற்றுவதன் வாயிலாக உங்களுடைய இதய ஆரோக்கியம் மேம்படும், நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கும் மற்றும் நீண்ட ஆயுளை பெறுவீர்கள்.


உணவு அளவு கட்டுப்பாடு :  ஜப்பானியர்கள் உணவு சாப்பிடும் பொழுது என்ன சாப்பிடுகிறோம் என்பதிலும், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதிலும் எச்சரிக்கையாக இருப்பார்கள். இது சமநிலையை ஊக்குவிக்கிறது. நீங்கள் சாப்பிடக்கூடிய ஒவ்வொரு வாய் உணவையும் கவனமாக நன்கு மென்று கூழாக்கி விழுங்க வேண்டும். இவ்வாறு செய்வது நீங்கள் அதிகப்படியாக சாப்பிடுவதை தவிர்த்து, உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது. மேலும் உடற்பருமன் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படும் அபாயமும் குறைகிறது.

கடல் சார்ந்த உணவுகளை தினமும் சாப்பிடுவது : கடல் சார்ந்த உணவுகள் புரோட்டீனின் மூலமாக மட்டுமல்லாமல் நமது இதய ஆரோக்கியம் மற்றும் அறிவு திறன் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. எனவே ஆரோக்கியமான நீண்ட ஆயுளை பெறுவதற்கு உங்களது உணவில் கடல் சார்ந்த உணவுகள் வழக்கமாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.

புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் : புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் ஜப்பானிய டயட்டின் பிரதான ஒன்றாக அமைகிறது. இவற்றில் ப்ரோ பயாடிக் பண்புகளும் செரிமான பலன்களும் நிறைந்துள்ளது. புளிக்க வைக்கப்பட்ட உணவுகளில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்கள் காணப்படுகிறது. எனவே இட்லி, தயிர், ஊறுகாய் போன்ற புளிக்க வைக்கப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடவும்.

மேலே கூறப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுவதன் மூலமாக நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நீண்ட ஆயுளை பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்.

🔻 🔻 🔻 

கிட்சனில் இருக்கும் இந்த 6 விஷயங்கள் கேன்சரை உண்டாக்கும்.. தெரியுமா..?

March 22, 2024 0

 

சமையலறை நமது ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் சமையலறை என்பது நமது ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பாகவே அமைகிறது. சமையலறையில் நாம் வைத்திருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளுமே நமது ஆரோக்கியத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் நம்மை அறியாமலேயே சமையலறையில் நாம் பயன்படுத்தும் சில பொதுவான பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், உண்மைதான். அது என்னென்ன பொருட்கள் என்பதை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம். இதன் மூலமாக நீங்கள் விழிப்புடன் இருந்து உங்களை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கலாம்.

நான் ஸ்டிக் குக்வேர் : தற்போது சமைப்பதற்கு பயன்படும் நான் ஸ்டிக் பொருட்கள் பெரும்பாலான சமையலறைகளில் பிரதானமாக காணப்படுகிறது. ஆனால் நான்ஸ்டிக் கோட்டிங்கை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் பெர்ஃபுளோரோஆக்டநோயிக் அமிலமானது (PFOA) புற்று நோயுடன் தொடர்புடையது என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமைக்கும் பொழுது அதிகப்படியான வெப்பநிலைக்கு நான் ஸ்டிக் பொருட்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. அதில் இருந்து வெளிவரக்கூடிய புகையானது புற்றுநோய் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.


பிளாஸ்டிக் பொருட்கள் : பல சமையலறைகளில் எங்கு பார்த்தாலும் தற்போது பிளாஸ்டிக் பொருட்கள் தான் நிறைந்து இருக்கிறது. பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கண்டைனர்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் பிஸ்பினால்A (BPA) என்ற கெமிக்கல் ஹார்மோன் சீர்குலைவை ஏற்படுத்தி, நமது நோய் எதிர்ப்பு சக்தியை சமரசம் செய்கிறது. எனவே ஆரோக்கியம் கருதி முடிந்த அளவு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது நல்லது.


சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை : இனிப்புக்காக பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை புற்றுநோய் வளர்ச்சியை ஊக்குவிக்க கூடியதாக அமைகிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகப்படியாக சாப்பிடுவது நமது உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.


பதப்படுத்தப்பட்ட இறைச்சி : பதப்படுத்தப்பட்ட இறைச்சி புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம் குறிப்பாக கோலோரெக்டல் புற்றுநோய் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் ஏற்படுகிறது. இறைச்சிகளை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்கள் நமது உடலில் நைட்ரோசமைன்களாக மாற்றமடைகின்றன. இந்த காம்பவுண்டுகள் காரணமாக புற்றுநோய் உருவாகிறது.


பதப்படுத்தப்பட்ட உணவுகள் (கேன்டு ஃபுட்) : கேன்களில் அடைத்து வரக்கூடிய உணவுகள் நமக்கு சௌகரியத்தை வழங்கினாலும் அவற்றில் இருக்கக்கூடிய பிஸ்பினால்A (BPA) காரணமாக அது புற்றுநோய் உண்டாக்கும் ஒரு ஏஜெண்டாக செயல்படுகிறது. கேன்களின் ஓரங்களில் அமைந்திருக்கக் கூடிய BPA உணவுகளில் கலப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக கேன்களை நாம் சூடேற்றினாலோ அல்லது அவை அமிலம் நிறைந்த உணவுப் பொருட்களோடு தொடர்பு கொண்டாலோ BPA நிச்சயமாக உணவுடன் கலக்கலாம். இந்த கெமிக்கல் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது.


அலுமினியம் ஃபாயில் : தற்போது பல்வேறு விதமான சமையலுக்கு அலுமினியம் ஃபாயில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அலுமினியம் ஃபாயில் பயன்படுத்தி அமிலத்தன்மை நிறைந்த பொருட்களை சமைத்தாலோ அல்லது அவற்றை அலுமினியம் ஃபாயிலில் சேமித்து வைத்தாலோ குறிப்பிடத்தக்க அலுமினியம் உணவில் கலப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இதை நமது உடலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். நீண்ட நாட்களுக்கு இவ்வாறு நமது உடலில் அலுமினியம் சேமிக்கப்படும் பொழுது அது புற்றுநோயை உண்டாக்கும்.



🔻 🔻 🔻 

சர்வதேச ஐ நா ஆண்டுகள் – மிக முக்கியமான ஐநா ஆண்டுகள் கேள்வித்தாள்களில் இடம் பெறுவது வழக்கம்

March 22, 2024 0

 சர்வதேச ஐ நா ஆண்டுகள் – மிக முக்கியமான ஐநா ஆண்டுகள் கேள்வித்தாள்களில் இடம் பெறுவது வழக்கம்

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news