Agri Info

Adding Green to your Life

April 3, 2024

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || தேர்வு எழுத தேவையில்லை!

April 03, 2024 0

 தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ( CUTN ) ஆனது Project Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CUTN காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Assistant பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Assistant கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CUTN வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.17,600/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CUTN தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து kanagarathinam@cutn.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 14.04.2024 அன்றுக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட செட் தேர்வு அறிவிப்பு வெளியானது: விண்ணப்பிப்பது எப்படி?

April 03, 2024 0

 பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்காக நெட் என்ற பெயரில் தேசியத் தகுதித் தேர்வும், செட் என்ற பெயரில் மாநிலத் தகுதித் தேர்வும் நடத்தப்படுகின்றன. நெட் தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பு நடத்தி வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான செட் தேர்வை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்துகிறது.

தமிழ், கணிதம் உள்ளிட்ட 43 பாடங்களுக்கான செட் தேர்வு ஜுன் 3-ம் தேதி கணினி வழியில் நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைகிறது.

விண்ணப்பக் கட்டணம்:  பொதுப் பிரிவினருக்கான கட்டணம் ரூ.1500-ல் இருந்து ரூ.2500 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கட்டணம் ரூ.1250-ல் இருந்து ரூ.2,000 ஆகவும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான கட்டணம் ரூ.500-ல் ருந்து ரூ.800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் மூன்றாம் பாலினத்தவருக்கு எந்த கட்டணமும் இல்லை..

தேர்வு தேதி:  ஜூன் 3 முதல் 25ஆம் தேதிக்குள் மாநில தகுதித் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரத்துக்குத் தேர்வு நடைபெறும்.

News18

அடிப்படைத் தகுதிகள் என்ன : முதுகலை படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் / மூன்றாம் பாலினத்தவர்கள் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு எதுவும் இல்லை. 58 வயது வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு    https://msutnset.com/TNSET2024_Notifications.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

விண்ணப்பம் செய்வது எப்படி: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் https://app.msutnset.com/#/ என்ற  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

KVB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

April 03, 2024 0

 கரூர் வைசியா வங்கியில் (KVB Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Relationship Manager (Current Account & TFX) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

KVB வங்கி காலிப்பணியிடங்கள்:

Relationship Manager (Current Account & TFX) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே KVB வங்கியில் காலியாக உள்ளது.

Relationship Manager கல்வி தகுதி:

இந்த KVB வங்கி சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் Business Administration, Finance பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Relationship Manager வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Relationship Manager ஊதியம்:

Relationship Manager (Current Account & TFX) பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

KVB வங்கி தேர்வு முறை:

இந்த KVB வங்கி சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

KVB வங்கி விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 30.04.2024 அன்றுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.



🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு முடிவுகள் வெளியீடு : முழு விவரம் இதோ

April 03, 2024 0

 2023, செப்டம்பர் 3 அன்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி தேர்வு (II)-2023 ஆகியவற்றின் இறுதி முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2023, செப்டம்பர் 3 அன்று நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப்படை பிரிவுகளில் ஆள் சேர்க்க தேசிய பாதுகாப்பு அகாடமியின் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய நேர்காணல் மற்றும் கடற்படை அகாடமி நடத்திய நேர்காணல் ஆகியவற்றின் முடிவுகள் அடிப்படையில் தகுதி பெற்ற 699 விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விரிவான தகவல்களுக்கு, பாதுகாப்பு அமைச்சகத்தின் www.joinindianarmy.nic.in , www.joinindiannavy.gov.in www.careerindianairforce.cdac.in ஆகிய வலைத்தளங்களைக் காணவும்.

இந்தப் பட்டியல்கள் தயாரிப்பதில் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்திலும் https://www.upsc.gov.in தேர்வு முடிவுகளைக் காணலாம். இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குப் பிறகு வேட்பாளர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் கிடைக்கும்.

🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

நீதிமன்றத்தில் வேலை...10 ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்..

April 03, 2024 0

 புதுச்சேரியில் நீதித்துறையில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு வெளியிட்டுள்ளது.

வயது வரம்பு :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதிகபட்சமாக SC/ST பிரிவினருக்கு 37 வயது, MBC/ OBC / EBC / BT/ BCM பிரிவினருக்கு 35 வயது, பிறருக்கு 32 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

- சீனியர் கிரேடு ஸ்டெனோகிராபர் பதவிக்கு டிகிரி, ஸ்டெனோகிராபர் லோவர்/ஜூனியர் கிரேடு (ஆங்கிலம்), டைப் ரைட்டிங் ஹையர்/ சீனியர் கிரேடு (ஆங்கிலம்) மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏதாவது ஒரு மொழியில்  டைப் ரைட்டிங் முடித்திருக்க வேண்டும்.

- ஜூனியர் கிரேடு ஸ்டெனோகிராபர் பதவிக்கு 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஸ்டெனோகிராபர் லோவர்/ஜூனியர் கிரேடு (ஆங்கிலம்), டைப் ரைட்டிங் ஹையர்/ சீனியர் கிரேடு (ஆங்கிலம்) மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏதாவது ஒரு மொழியில் டைப் ரைட்டிங் முடித்திருக்க வேண்டும்.

- மொழிபெயர்ப்பாளர்/பெயர்ப்பாளர் பதவிக்கு தெலுங்கு / மலையாளம் மொழியில் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

- ஜூனியர் கிளார்க் பதவிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆங்கிலம்/ தமிழ்/ மலையாளம்/ தெலுங்கு ஆகிய மொழிகளில் டைப் ரைட்டிங் லோவர்/ ஜூனியர் கிரேடு முடித்திருக்க வேண்டும்.

- தட்டச்சர் பதவிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் டைப் ரைட்டிங் லோவர்/ ஜூனியர் கிரேடு பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழ்/தெலுங்கு/ மலையாளம் ஆகிய மொழியில் பெற்றிருக்க வேண்டும்.

- டிரைவர் பதவிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Light Motor Vehicle ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் competency test, மெடிக்கல் டெஸ்ட் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

- மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பதவிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணியிடங்களுக்கு புதுச்சேரியை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுள்ளவர்கள் https://www.mhc.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை நிரப்பு கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 23.04.2024 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். டிரைவர் மற்றும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணியிடத்திற்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதர பணியிடத்திற்கு ரூ.750 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்கள், ST மற்றும் SC பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

The Registrar General,
High Court of Madras,
Chennai - 600104.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

1377 காலி பணியிடங்கள்... 10 ஆம் வகுப்பு போதும்... நவோதயா வித்யாலயா சூப்பர் வேலை வாய்ப்பு

April 03, 2024 0

 பள்ளி படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஏதாவது ஒரு பணி கிடைக்குமா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பல நபர்களுக்காக பணிகள் கொட்டி கிடைக்கின்றது.

நவோதயா வித்யாலயா சமிதா பணி நிறுவனம் சார்பாக சுமார் 1377 காலி பணியிடங்கள் உள்ளது. அதாவது செவிலியர் உதவிப் பிரிவு அலுவலர், தணிக்கை உதவியாளர், மொழிபெயர்ப்பு அலுவலர், சட்ட உதவியாளர், ஸ்டேனோகிராஃபர், கணினி ஆப்ரேட்டர், கேட்டரிங் மேற்பார்வையாளர், ஜூனியர் செயலக உதவியாளர், இளநிலை செயலக உதவியாளர், எலக்ட்ரிஷன் கம் பிளம்பர், லேப் அட்டன்டன்ட், மெஸ் ஹெல்பர், மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் என இந்த பதவிகளுக்கான பணிகள் காலியாக உள்ளது.

இதற்கான கல்வி தகுதிகள் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, பிஎஸ்சி நர்சிங், பிகாம், பி இ பி டெக் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவராக இருக்கலாம்.

அதேபோல் பதவியின் தன்மைகேற்ப 27 வயது முதல் 40 வயது உடையவராக இருக்க வேண்டும். தேர்வு முறையாக எழுத்து தேர்வு தட்டச்சு தேர்வு திறன் தேர்வு நேர்காணல் போன்றவை நடைபெறும்.
தேர்வு மையம் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் நடைபெறும் இதற்கான விண்ணப்பம் ஆன்லைனில் https://navodaya.gov.in என்ற இணையத்தளம் முகவரியில் பதிவு செய்யலாம். விண்ணப்பத்திற்கான கடைசி நாள் 30.4.2024 என்பதும் குறிப்பிடத்தக்கது.

🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

April 2, 2024

கோடை வெய்யில்...தோல் தொற்று நோயை தடுக்க இதை செய்யுங்கள்

April 02, 2024 0

 தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இந்தக் கோடை வெயிலால் பொதுமக்களுக்கு வியர்வை வியர்வை துர்நாற்றம் தோல் வியாதிகள் சரும பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இதிலிருந்து பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தங்களின் உடலை எப்படி தற்காத்துக் கொள்ளலாம் என டாக்டர் சண்முகம் பல வழிமுறைகளை பகிர்ந்துள்ளார். முதலில் கோடை காலத்தில் முக்கியமாக பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். பருத்தி ஆடை உடலில் உருவாகும் வியர்வையை உறிஞ்சும் தன்மையும், வியர்வை வராமலும் தடுக்கும்.

சிறுநீர் கடுப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு இளநீர் மோர் பதநீர் நுங்கு பழச்சாறு தர்பூசணி போன்ற பழங்களை உட்கொள்ள வேண்டும். வியர்வை வராமல் தடுப்பதற்கு ஆன்ட்டி பங்கள் டால்க்கம் பவுடரைபயன்படுத்தலாம். இந்தப் பவுடரை இரவு நேரத்தில்பயன்படுத்த வேண்டும். மேலும் சருமத்தை வறட்சி அடைய செய்யும் எந்த சோப் வகைகளையும் பயன்படுத்த வேண்டாம்.

போதுமான அளவிற்கு பொதுமக்கள் சருமத்தை தற்காத்துக் கொள்வதற்கு கடலை மாவு பாசிப்பருப்பு மாவு அதனுடன் தேவைக்கேற்ப கஸ்தூரி மஞ்சள் சேர்த்து தடவி வந்தால் சரும பிரச்சனைகளில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள முடியும். குறிப்பாக கோடை காலத்தில்வெள்ளை நிற ஆடைகளை அணிவதை பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். மேலும் கோடை காலத்தில்பொதுமக்களுக்கு அம்மை நோய் வருவது வழக்கம். இதனை தடுப்பதற்கு புளித்த கேழ்வரகு கூழை குடித்தால் நல்லது.

அதுமட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு வெயில் காலத்தில், வியர்வையினால் துர்நாற்றம் ஏற்படும், இதனை தடுப்பதற்கு சந்தனத்தை தடவி குளித்தால் துர்நாற்றம் வராமல் தடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல் தோல் அலர்ஜி ஏற்பட்டால் அதற்கு படிகார கல் பவுடர் மற்றும் பன்னீர் கலந்து தடவினால் சரியாகிவிடும் என சித்த மருத்துவர் சண்முகம் கூறியுள்ளார்.

🔻 🔻 🔻 

கோடைக்காலத்தின் 20 சிறந்த பழங்கள் என்னென்ன தெரியுமா..? தினம் ஒன்று சாப்பிட்டால் நோயே நெருங்காது..!

April 02, 2024 0

 இந்தியாவில் கோடை காலம் தொடங்கிவிட்டது. இனி சில மாதங்களுக்கு கோடை வெயில் நம்மை வாட்டி வதைக்க போகிறது. இதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அருமையான கோடை கால பழங்களை நாம் அடிக்கடி சாப்பிட வேண்டும். இந்தியாவில் சிறந்த 20 கோடை கால பழங்களையும் அதன் சிறப்புகளையும் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

தர்பூசணி :சிறந்த கோடைகால பழமான தர்பூசணியில் 92 சதவிகிதம் நீர்தான் உள்ளது. மேலும் இதில் உடல் வீக்கத்தையும் வலியையும் குறைக்கும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. அதுமட்டுமின்றி தர்பூசணி பழத்தில் வைட்டமின் பி, சி வைட்டமின் இ மற்றும் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன.


மாம்பழம் : ஆரோக்கிய கலோரிகள் அதிகம் நிறைந்த மாம்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுக்கள் அதிகளவு உள்ளது. அதனால்தான் மாம்பழத்தை பழங்களின் ராஜா என அழைக்கிறார்கள். மாம்பழம் சாப்பிடுவதால் நாள்பட்ட நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது; செல் பாதிப்பை தடுத்து இளமை தோற்றத்தை தருகிறது.


கிர்ணி பழம் : பார்ப்பதற்கு தர்பூசணி போலவே இருந்தாலும், கிர்ணி பழமும் சிறந்த கோடைகால பழமாகும். இந்தப் பழத்திலும் அதிகளவு நீர்ச்சத்து உள்ளதோடு வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், மாக்னீசியம் ஆகியவைவும் உள்ளது. பல ஊட்டச்சத்துகளும் மருத்துவ குணங்களும் நிறைந்த கிர்ணி பழத்தை ஜூஸாகவோ அல்லது துண்டு துண்டாக வெட்டியோ சாப்பிடலாம்.


கிவி பழம் : செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மன அழுத்தத்தை குறைத்து நல்ல தூக்கத்தை வரவழைப்பதற்கும் கிவி  பழம் உதவியாக இருக்கிறது. கோடை கலத்தில் அதிகமாக வியர்ப்பதால் நம் உடலில் உள்ள தாதுக்கள் வியர்வை வழியாக வெளியேறிவிடும். இதை ஈடுகட்ட கிவி பழம் உதவியாக இருக்கும்


ஆரஞ்சு பழம் : 80 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்துள்ள ஆரஞ்சு பழம், கோடை வெப்பத்திலிருந்து உங்களை பாதுகாக்கிறது. மேலும் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையவிடாமல் பார்த்துக் கொள்கிறது.

பப்பாளி : பப்பாளி பழத்தில் உள்ள பப்பாய்ன் மற்றும் சைமோபப்பாய்ன் என்ற நொதிகள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது.

அன்னாசி பழம் : வைட்டமின் ஏ, வைட்டமின் ஏ பி1, வைட்டமின் ஏ பி2, வைட்டமின் ஏ பி3, வைட்டமின் ஏ பி6, துத்தநாகம், மாக்னீசியம்,  பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துகள் அன்னாசி பழத்தில் நிறையவே உள்ளது.

கொய்யா பழம் : நீர்ச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் கரோடின் போன்ற சத்துகள் கொய்யா பழத்தில் உள்ளது. மேலும் இது இருமலை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது

ப்ளம்ஸ் : ப்ளம்ஸில் கரோடினாய்டு மற்றும் பீனோலிக் ஆசிட் போன்ற பயோ ஆக்டிவ் கலவைகள் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை குறைத்து, எலும்பு ஆரோக்கியத்தை பலப்படுத்தி நியாபக சக்தியை மேம்படுத்துகிறது.

லிச்சி பழம் : லிச்சி பழத்தை அப்படியே செடியில் இருந்து பறித்து சாப்பிடலாம். இதில் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பாலிபீனால் உள்ளது.

ஸ்ட்ராபெர்ரி : கோடை காலத்தில் வரும் சருமப் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கவும், கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும், உடலில் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் தடுக்கவும் ஸ்ட்ராபெர்ரி உதவுகிறது.

திராட்சை : மிக எளிதாக கிடைக்கும் திராட்சையில் ஆண்டி ஆக்ஸிடெண்ட்டும் பாலிபீனாலும் நிறைந்துள்ளது. இது நம் மூளை ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு மிகவும் நல்லது.

அத்திப்பழம் : இயற்கையாக சர்க்கரை நிறம்பியுள்ள அத்திப்பழம் நமக்கு உடனடியான ஆற்றலை தருகிறது. கோடை வெப்பத்தில் நம் உடலில் அடிக்கடி நீர்சத்து குறைந்து போவதை தடுத்து, உடலுக்கு பொட்டாசியம், கால்சியம் மற்றும் மாக்னீசியம் சத்தை தருகிறது.

வாழைப்பழம் : இது கோடைகால பழம் இல்லையென்றாலும், உடலில் இழந்த ஆற்றலை திருப்பிக்கொடுக்கும் சக்தி வாழைப்பழத்திற்கு உள்ளது. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை போக்குவதில் வாழைப்பழம் மிகவும் உதவியாக இருக்கிறது.

ஆப்ரிகாட் பழம் : சுவைமிகுந்த ஆப்ரிகாட் பழத்தில் நம் கண் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவும் பீட்டா கரோடின் அதிகளவு உள்ளது.

பீச் பழம்: நம்முடைய உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது பீச் பழம். கோடை வெயிலில் நம் உடலில் வெளியேறும் தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை திரும்பவும் கிடைக்க இந்தப் பழம் உதவுகிறது

ஸ்டார் பழம் : பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த ஸ்டார் பழம், நம் கண்களை இதமாக்கி தலைவலியை போக்குகிறது.

வில்வ பழம் : மாம்பழம், லிச்சிக்குப் பிறகு கோடை காலத்தில் இந்தியாவில் பொதுவாக கிடைக்கும் இன்னொரு பழம் வில்வம். குளிர்ச்சி நிறைந்த இந்தப் பழத்தில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் அதிகளவில் உள்ளதோடு நம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

எலுமிச்சை : மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் எலுமிச்சையில் பொட்டாசியமும் வைட்டமினும் அதிகளவு உள்ளது. முக்கியமாக கோடை காலத்தில் சிறந்த பானமாக லெமன் ஜுஸ் உள்ளது.

வெள்ளரிக்காய் : கோடை காலத்தின் சிறந்த பழமான வெள்ளரிக்காயில் அதிகமான நீர்ச்சத்தும் பொட்டாசியமும் உள்ளது. கோடை கால்லத்தில் இந்திய முழுதும் உள்ள மக்களால் வெள்ளரிக்காய் விரும்பி உண்ணப்படுகிறது.



🔻 🔻 🔻 

கோடை வெயிலிலும் நீங்க ஃபிட்டா இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க..!

April 02, 2024 0

 நாட்டில் கோடை காலம் துவங்கி இருக்கும் நிலையில் பல பகுதிகளில் காலை முதல் மாலை வரை இப்போதே வெயில் வாட்டி வருகிறது. நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருவதால் அனைவரும் உடநலனை வெப்ப அலைகளில் இருந்து பாதுகாத்து கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது

வெயில் காரணமாக கொட்டும் வியர்வை, ஏற்படும் ரேஷஸ் மற்றும் அதிகரிக்கும் உடல் சூடு உள்ளிட்ட பல பிரச்சனைகள் வெயில் காலத்தில் நம்முடைய ஃபிட்னஸிற்கு பெரும் தடையாகவும், சவாலாகவும் இருக்கின்றன. நீங்கள் உங்களின் வழக்கமான ஒர்கவுட்ஸ் மற்றும் டயட்டை பின்பற்றுகிறீர்கள் என்றால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். அது என்னவென்றால் ஒவ்வொரு சீசனிலும் நமது உடலின் தேவைகள் மாறுகின்றன. எனவே உங்களின் வழக்கமான டயட் மற்றும் ஒர்கவுட்ஸ் கோடை காலத்திற்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். எனவே இந்த கடும் கோடையில் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் டிப்ஸ்கள் குறித்து பார்க்கலாம்.

News18

கோடை கால டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள் : 

மற்ற சீசன்களை விட வெயில் காலத்தில் நம் உடலில் உள்ள நீர்ச்சத்தை மிக வேகமாக இழப்போம். எனவே உடலின் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் வைத்திருக்கவும், ஹைட்ரேட்டாக இருக்கவும் நம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டியது அவசியம். இதன் காரணமாக நீர்ச்சத்து மிக்க, உடலுக்கு குளிர்ச்சி தர கூடிய மற்றும் தேவையான வைட்டமின்ஸ் & மினரல்ஸ் நிறைந்த உணவுகளை உங்களின் கோடை காலா டயட்டில் சேர்க்க வேண்டும்.

  • தயிர்: பிளெயின், அன்ஸ்வீட்டன்ட் தயிரானது ஒரு சக்திவாய்ந்த ப்ரோபயாடிக் ஆகும். இது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. இந்தியாவின் பல கடலோர மாநிலங்களில் தயிர் சாதம் முக்கிய உணவாக இருக்கிறது.

  • இளநீர்: இயற்கையின் கொடையாக இருக்கும் சுவையான இயற்கை பானமாகும்,குறிப்பாக இதை கோடை காலத்தில் குடிப்பது உடலுக்கு உடனடியாக ஆற்றலை அளிக்கிறது. உடலில் எலக்ட்ரோலைட் லெவலை பராமரிக்க தேவையான பல அத்தியாவசிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்களை கொண்டுள்ள சக்தி வாய்ந்த பானமாக இளநீர் உள்ளது.

  • ஸ்வீட் கார்ன்: ஸ்வீட் கார்ன்-ல் நார்ச்சத்து நிறைந்துள்ளது. வெப்பமான கோடை நாட்களில் இது ஆற்றலை வழங்குகிறது. சருமம், முடி மற்றும் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.

  • மோர்: வெயில் காலத்தில் தினசரி மோர் அருந்துவதால் உடல் குளிர்ச்சியாகவும், நீர்ச்சத்தோடும் இருக்கும். கோடையில் மோர் அருந்துவது ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படுவதற்கான அபாயத்தை குறைக்க கூடும்.

  • மாம்பழம்: இரும்பு மற்றும் மெக்னீசியத்தின் சிறந்த மூலமாக இருக்கும் மாம்பழங்கள் சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

  • தர்பூசணி: கோடைகாலம் வந்து விட்டாலே நம் நாட்டில் தர்பூசணி விற்பனை களைக்கட்டும். நீர்ச்சத்து நிறைந்த மற்றும் உடலுக்கு குளிர்ச்சியை தரும் இந்த பழங்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பி6, பொட்டாசியம் மற்றும் சூப்பர் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

  • வெள்ளரிக்காய்: வெயில் காலங்களில் எடுத்து கொள்ள கூடிய மிகவும் பிரபலமான குளிர்ச்சியான உணவுகளில் ஒன்று வெள்ளரிகள். எனவே கோடையில் தர்பூசணிக்கு அடுத்து விற்பனையில் சக்கை போடு போடுவது வெள்ளரிக்காய்கள் தான். நீர்ச்சத்து அதிகமுள்ள வெள்ளரிகள் உடலை ஹைட்ரேட்டாக வைக்க உதவுவதோடு, உடல் சூட்டையும் குறைக்கும்.

  • பெர்ரிக்கள்: ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் நெல்லிக்காய் உள்ளிட்டவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இவற்றை ஸ்மூத்திகளில் சேர்க்கலாம் அல்லது சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

  • லெமனேட்: நிம்பு பானி என்று பிரபலமாக அறியப்படும் எலுமிச்சை பானம் கோடை வெயிலுக்கு மத்தியில் நம்மை புத்துணர்ச்சியூட்டும்.

  • சத்து மாவு (Sattu): வட இந்தியாவில் இந்த ஆரோக்கிய மாவு கொண்டைக் கடலை) கொண்டு தயார் செய்யப்படுகிறது. இதில் புரதச் சத்து நிறைந்துள்ளது. சத்து மாவு பானத்தில் உங்கள் டயட்டிற்கு ஏற்ப கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள், உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து எளிதாக தயாரிக்கலாம். இந்த பானம் புத்துணர்ச்சி அளிப்பதோடு, நம் உடலுக்கு தேவையான புரதங்கள் மற்றும் நார்ச்சத்துகளை வழங்குகிறது.

  • கோடையில் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்ய வேண்டி உடற்பயிற்சிகள்:

    ஒருபக்கம் வெயில் வாட்டினாலும் மறுபக்கம் எப்போதும் போல சுறுசுறுப்பாக இருப்பது கோடையில் ஃபிட்னஸை பராமரிக்க முக்கிய வழியாகும்.

    • நீச்சல்: கொளுத்தும் வெயிலில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவதில் நீச்சலை விட சிறந்த உடற்பயிற்சி ஏது? நீச்சல் என்பது மிகவும் கடினமானதாக உணர வைக்காத ஒரு பயிற்சியாகும். வெப்பத்தை தணிக்க தண்ணீரில் உடலை குளிர்ச்சியடைய வைக்க உதவும் இயற்கை வழியாக நீச்சல் இருக்கும்.

    • விறுவிறுப்பான நடைப்பயிற்சி: கோடையில் சுறுசுறுப்பாக உணர மற்றும் இருப்பதற்கு காலை அல்லது மாலை நேரங்களில் தவறாமல் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்வது சிறந்த வழி.

    • ஹைகிங்:  பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து ஓய்வு எடுத்து மலைகளில் ஹைகிங் செல்வது கோடையை அனுபவிக்க கூடிய ஒரு நல்ல சாகச செயல் மற்றும் பயிற்சியாக இருக்கும்.

    • சைக்கிளிங்: அருகில் இருக்கும் கடைகள் அல்லது மார்கெட்டிற்கு சென்றால் கூட கார் அல்லது பைக் எடுப்பதை தவிர்த்து விட்டு சைக்கிளை பயன்படுத்துவது ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

    • வெயிலை சமாளிக்க உதவும் பொதுவான சில டிப்ஸ்:

      வெயிலில் வெளியே செல்லும் போது சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது, கண்களைப் பாதுகாக்க தரமாக கூலர் அணிவது மற்றும் தளர்வான ஆடைகளை அணிவது கோடையை சமாளிக்க உதவும் வழிகளாகும்.

      • தளர்வான மற்றும் காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்

      • கோடையில் உணவை ஜீரணிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அஜீரணம் மற்றும் உப்புசம் ஏற்படுவதை தவிர்க்க ஒரே நேரத்தில் சாப்பிடாமல் குறிப்பிட்ட இடைவெளியில் சிறிது சிறிதாக சாப்பிடுங்கள்.

      • சூரியனின் கடுமையான கதிர் வீச்சிலிருந்து இருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க குவாலிட்டியான சன்கிளாஸ் அணியுங்கள்.

      • தவறாமல் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவதன் மூலம் புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாத்து கொள்ளுங்கள்

      • காஃபின் அதிகம் எடுப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்.

      • மதியம் அல்லது வெயில் மிக கடுமையாக இருக்கும் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து விடுங்கள்.

      • துரித உணவு, நன்கு வறுத்த அல்லது தெருவில் விற்கும் உணவுகளை தவிர்க்கவும்

      • தினசரி போதுமான அளவு தண்ணீர் மற்றும் உடலுக்கு நீர்ச்சத்து அளிக்க கூடிய பிற ஆரோக்கிய பானங்கள் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

      • உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்.

      • அதிக அளவு சர்க்கரை இருக்கும் என்பதால் பேக்கேஜ்ட் ட்ரிங்க்ஸ்களை தவிர்த்து விடுங்கள்.

      • கோடையில் கிடைக்கும் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்து கொள்ளுங்கள்.

    • 🔻 🔻 🔻 

April 1, 2024

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; 41 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

April 01, 2024 0

 சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) மேற்பார்வை பொறியாளர் மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 41 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 02.04.2024

Superintending Engineer

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் B.E/B.Tech படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Junior Technician 

காலியிடங்களின் எண்ணிக்கை : 40

Civil - 3 

Chemistry - 3 

Computer Science - 1 

Mechanical - 11 

ECE - 2 

E&I - 12 

EE - 2 

Biology / Life Science - 1 

Biotechnology - 1 

Biomedical - 1 

Zoology - 1 

Physics – 2

கல்வித் தகுதி: Diploma in Engineering/Bachelor’s Degree in Science படித்திருக்க வேண்டும்

வயதுத் தகுதி: 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறைஇந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://recruit.iitm.ac.in. என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.04.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://recruit.iitm.ac.in/include/R224_Advt.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

 


🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news