Agri Info

Adding Green to your Life

April 6, 2024

HDFC வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

April 06, 2024 0

HDFC வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் Credit Card – Credit Card Sales – Sales Officer – Branch பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

HDFC Bank காலியிடங்கள்:

HDFC வங்கியில் Credit Card – Credit Card Sales – Sales Officer – Branch பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

HDFC Bank கல்வி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree அல்லது Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

HDFC Bank அனுபவ காலம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 0 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

HDFC Bank தேர்வு செய்யும் விதம்:

இந்த HDFC வங்கி சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HDFC Bank விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Download Notification & Application Form Link


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news 

சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் 118 காலியிடங்கள்... விண்ணப்பம் செய்வது எப்படி?

April 06, 2024 0

 நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) என்பது பொது மற்றும் தனியார் பள்ளிகளுக்கான தேசிய அளவிலான கல்வி வாரியம் ஆகும். இந்த வாரியம் மத்திய அரசின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பின் கீழ் செயல்படுகிறது. இந்நிலையில், இந்த கல்வி வாரியம் ஆசிரியர் அல்லாத காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Assistant Secretary, Junior Engineer, Junior Translation officer, Accountant , Junior Accountant ஆகிய பதவிகள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்படப்பட உள்ளன.

காலிப்பணியிடங்கள் விவரம்: 

Assistant Secretary (Administration) : மொத்தம் 18 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயது வரம்பு: 18 லிருந்து 35க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant Secretary (Academics): மொத்தம் 16 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரம்பு: 18 லிருந்து 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் பி.எட்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நெட்/ஸ்லெட் தேர்ச்சி அல்லது பி.ஹெச்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Skill Education: மொத்தம்  8 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Training: மொத்தம் 22 இடங்கள் நிரப்பப்பட உள்ளன . வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் பி.எட் தேர்ச்சி மற்றும் பி.எச்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது நெட்/ ஸ்லெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Accounts Officer: 3 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயது: 18 லிருந்து 35க்குள் இருக்க வேண்டும். தகுதி: பொருளியல்/வணிகவியல்/ அக்கவுண்ட்ஸ்/நிதி/வணிக படிப்புகள்/ காஸ்ட் அக்க வுன்டன்சியில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் எஸ்ஏஎஸ்/ஜேஏடி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Engineer: 17 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயது: 18 லிருந்து 32க்குள். தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் பி.இ.,/ பிடெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Junior Translation Officer:  காலியிடங்கள் எண்ணிக்கை 7 ஆகும். 18 லிருந்து 30க்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி: இந்தியுடன் ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Accountant: 7 இடங்கள். வயது: 18 லிருந்து 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: பொருளியல் / வணிகவியல்/ அக்கவுன்ட்ஸ்/ நிதி/ வணிக படிப்புகள்/காஸ்ட் அக்க வுண்டிங் ஆகிய பாடங்களில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலம் 35 வார்த்தைகள், இந்தி 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

Junior Accountant: 20 காலியிடங்கள்.  வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: அக்கவுன்டன்சி பிரிவில் பிளஸ் 2 தேர்ச் சியுடன் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் ஆங்கிலம், 30 வார்த்தைகள் இந்தி என கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்

விண்ணப்பக் கட்டணம்: பணி எண் 1 மற்றும் 2க்கு ₹1,500. பணி எண்: 3 லிருந்து 6 வரைக் கும் ₹800/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது. https://www.cbse.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.04.2024 ஆகும். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை AIESL விமான நிறுவனத்தில் வேலை – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

April 06, 2024 0

 ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னையில் காலியாக உள்ள AI இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Aircraft Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 40 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் ஏப்ரல் 25 முதல் மே  2 ஆம் தேதி வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.AIESL காலிப்பணியிடங்கள்:

  • Aircraft Technician (B1) – 25 பணியிடங்கள்
  • Aircraft Technician (B2) – 15 பணியிடங்கள்

என மொத்தம் 40 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

 ஏர் இந்தியா அறிவிப்பின் படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து AME Diploma / Certificate in Aircraft Maintenance Engineering (02 or 03 years) in Avionics stream from Training Institutions approved by DGCA with 60% marks/equivalent grade (55% or equivalent grade for SC/ST/OBC candidates). Or Diploma in Engineering (3years) in Electrical/Electronics/ Telecommunication/ Radio/ Instrumentation Engineering or equivalent தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 Technician வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 01.04.2024 தேதியின் படி, General/EWS-35, OBC-38 மற்றும் SC / ST 40  ஆண்டுகள் என  வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை:

 இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். சென்னையில் 25 ஏப்., 2024, பெங்களூருரில் 29 ஏப்., 2024 மற்றும் ஹைதராபாத்தில் மே  2 ல் நேர்காணல் நடைபெற உள்ளது.

 விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அறிவிப்பில் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை – Degree தேர்ச்சி பெற்றவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

April 06, 2024 0

 மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் (MKU) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 22.04.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் காலிப்பணியிடங்கள்:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

  • Biotechnology, Microbiology, Life Sciences, Genomic Sciences, Biochemistry பாடப்பிரிவில் M.Sc, M.Tech டிகிரியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் CSIR / UGC / DBT / GATE ஆகிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Junior Research Fellow வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Junior Research Fellow சம்பளம்:

Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் SERB விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

MKU தேர்வு முறை:

இந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

MKU விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை (CV) தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 22.04.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

நகை மதிப்பீட்டாளராக பணிபுரிய ஆசையா? இதை செய்தால் போதும்..

April 06, 2024 0

 தேசிய மேம்பாட்டு நிறுவனம் மூலம் பாளையங்கோட்டையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 7ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, உரைக்கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறைகுறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.மேலும் ஹால்மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இப்பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை, கல்வி தகுதி தேவையில்லை. பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும்.பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம்.

மிகப்பெரிய நகை நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும் பணி புரியலாம். இந்த சான்றிதழை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சியில் சேர விரும்புவோர் 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், ஆதார் அட்டை, பயிற்சி கட்டணம் ரூபாய் 7700 ஆகியவற்றுடன் வரும் 7ம் தேதி ஞாயிறு பாளையங்கோட்டை தலைமை தபால் ஆபீஸ் தெருவில் உள்ள ரேடியன்ட் ஐஏஎஸ் அகாடமிக்கு நேரில் வரவேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பெண்களே வாழ்வில் முன்னேற இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க.

April 06, 2024 0

 விழுப்புரம் டூ மாம்பழப்பட்டு சாலை அலமேலுபுரத்தில் இந்தியன் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது. இப்பயிற்சி நிறுவனத்தின் மூலம் இலவசமாக பெண்களுக்கான அழகு கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETI) நாடு முழுவதும் உள்ள முன்னணி வங்கிகளால்அந்தந்த மாவட்ட அளவில் நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் நோக்கம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதே ஆகும். இளைஞர்களை சுயதொழில் தொடங்க ஊக்குவித்து, அவர்களுக்கு தேவையான நிதி உதவி மற்றும் சிறுதொழில் பயிற்சி ஆகியவற்றை வழங்குவதே ஆகும். இந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெண்களுக்கான அழகு கலைபயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பு 30 நாட்கள் நடைபெறுகிறது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆர்வம் உள்ள நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த பயிற்சி வகுப்பில் மொத்தம் 29 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதற்காக வெளியில் இருந்து பயிற்றுநர்கள் வருகை புரிந்து, மாணவர்களுக்கு பல அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள்.

மேலும், மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் செயல்முறை விளக்கமாக, பயிற்சிக்கு வந்த மாணவர்களில் ஒருவரை அழைத்துசெயல்முறையாக ஒரு பியூட்டிஷன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என செய்து காண்பிக்கிறார்கள்.

இது போன்ற செயல் விளக்கங்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால்,மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது எனவும், நிச்சயமாக ஒரு சுய தொழில் தொடங்குவதற்கான தன்னம்பிக்கையும் இந்த வகுப்பு எங்களுக்கு அளிக்கிறது என பயிற்சிக்கு வந்த மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த பயிற்சி வகுப்பு மூலம் தொழில் தொடங்குவதற்கான லோன் வசதி போன்றவையும் செய்து தரப்படுவதால், மாணவர்கள் ஆர்வமாக வந்து கலந்து கொள்கின்றனர். அது மட்டுமல்லாமல் பயிற்சி வகுப்புகள் முடிந்த பிறகு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

April 3, 2024

கோடைக்காலத்தில் இந்த 5 மசாலாக்களை உணவில் அதிகம் சேர்த்துக்காதீங்க..!

April 03, 2024 0

 கோடை காலத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பத்திலிருந்து நம் உடலை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அதுவும் இந்த சமயத்தில் என்ன சாப்பிட வேண்டும், எந்த உணவையெல்லாம் சாப்பிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் தேவை. கோடை காலத்தில் நம் உடலில் நீரிழப்பு ஏற்படுவதை தடுக்கவும் வேறு உடல்நலப் பிரச்சனைகள் வருவதை தடுக்கவும் ஆரோக்கியமான உணவுகளை டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் வெயில் காலங்களில் மசாலா சேர்த்த உணவுகளை தவிர்க்கும் படி கூறுவார்கள். ஆனால் மசாலா சேர்க்கவில்லை என்றால் நம் உணவுகள் முழுமையடையாது. புதினா, மஞ்சள், ஏலக்காய் போன்ற மசாலாக்களில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பண்புகள் உள்ளது


எனினும் இந்த கோடைக் காலத்தில் சில மசாலா பொருட்களை அளவாக பயன்படுத்துவதே நம் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். அது எந்த மசாலா பொருட்கள் என்பதை இப்போது தெரிந்துகொள்வோம்.


இஞ்சி: இஞ்சியில் நம் உடலுக்கு நன்மை தரும் பல மருத்துவ பண்புகள் இருப்பதோடு வைட்டமின், காப்பர், மாக்னீசியம் போன்ற சத்துகள் அதிகளவு உள்ளது. ஆனால் இஞ்சியை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால். அது நம் உடலில் சூட்டை அதிகரிக்கும். இதனால் கோடை காலத்தில் தேவையில்லாத உடல்நலப் பிரச்சனைகள் வரக்கூடும்.


மிளகாய்: இந்திய சமையல் மிளகாய் இல்லாமல் ஒருபோதும் பூர்த்தியடையாது. பச்சை நிறத்தில் இருக்கும் மிளகாய் மட்டுமல்ல; சிவப்பு, குட்டை, நீளம், கரு மிளகு என எல்லா வகை மிளகாய்களும் நம் உணவு முறையில் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஆனால் கோடை காலத்தில் மிளகாவை அதிகமாக சேர்க்காமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் கோடை காலத்தில் இவை நம் உடலில் எரிச்சல் தன்மையை ஏற்படுத்தும்.

பூண்டு: சமையலில் சிறிதளவு பூண்டு சேர்த்தால் அந்த உணவின் சுவை இன்னும் அதிகரிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். குளிர்காலத்தில் பூண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால் அதிகமாக பூண்டு சாப்பிடுவதால் நம் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் இதை கோடை காலத்தில் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் வாய் துர்நாற்றம், அஜீரணக் கோளாறு போன்றவை வரக்கூடும்.

கிராம்பு: எல்லாருடைய வீட்டு சமையலறையிலும் இடம் பெற்றிருக்கும் கிராம்பை, கோடை காலத்தில் மிகவும் கவனமாகவே பயன்படுத்த வேண்டும். அடிக்கடி ரத்தக்கசிவு பிரச்சனை உள்ளவர்கள் கோடை காலத்தில் கிராம்பை தவிர்ப்பது நல்லது.

பெருங்காயம்: இதுவும் நம் இந்திய சமையலில் தவிர்க்க முடியாத மசாலா பொருள் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. சமையலின் போது உணவில் கொஞ்சமாக பெருங்காயம் சேர்த்தால், அதன் சுவை அதிகரிப்பதோடு நமது மெடபாலிஸத்திற்கும் நல்லது. உடல் வீக்கம் சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்கள் கோடை காலத்தில் கிராம்பை தவிர்ப்பது நல்லது; அல்லது அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.



🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

வெயிலுக்கு ஐஸ் கிரீம் ரொம்ப சாப்பிடுறீங்களா..? இந்த ஆபத்தையும் தெரிஞ்சுக்கோங்க.!

April 03, 2024 0

 உணவு எடுத்துக் கொண்ட பின் ஐஸ்கிரீம் போன்ற உறைந்த இனிப்பு வகை உணவுகளை சாப்பிட வேண்டும் என்று எண்ணம் உங்களுக்கு தோன்றினால், நீங்கள் பின்வரும் கருத்துக்களை நினைவில் வைத்துக் கொண்டு அவற்றை அறவே தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

பொதுவாக உணவு சாப்பிட்ட பின்பு நம்மில் பலர் ஐஸ் கிரீம், குளோப் ஜாமுன் போன்ற இனிப்புக்களை எடுத்துக் கொள்வது வழக்கம். அதுவும் கோடை காலத்தில், பெரும்பாலும் நாம் குல்பி, ஐஸ்கிரீம் போன்ற உறைந்த உணவு வகைகளை அவ்வாறு விரும்பி சாப்பிடுவோம். ஆனால் இவை உண்மையில் நம் உடலுக்கு தீங்கானது என்பதை நாம் உணர்வதில்லை. இது போன்ற உறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்தானது என்று பல ஊட்டச்சத்து நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

பொதுவாக இது போன்ற உறைந்த இனிப்பு உணவு வகைகளில் பாம் ஆயில் (palm oil) சேர்க்கப்படுகிறது. பாம் ஆயிலில் அதிகப்படியான சேச்சுரேடெட் கொழுப்பு (saturated fat) உள்ளது. இது நம் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டுள்ளது. அது மட்டும் அல்ல, இது போன்ற உறைந்த உணவுகள் கொலஸ்ட்ரால் அளவுகளையும் அதிகப்படுத்தி விடுகின்றன.

கெட்ட கொழுப்பு உங்கள் தமனிகளை அடைத்து விட கூடும். அதே போல், இது போன்ற உறைந்த இனிப்பு உணவு வகைகளில் (குல்பி போன்றவை) பால் சேர்க்கப்படுவது இல்லை. அவை பெரும்பாலும் பால் திடப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. பால் திடப்பொருட்களில் அல்லது பால் பவுடரில், நம் ரத்த நாளங்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக் கூடிய ஆக்ஸிஜனேற்றப்பட்ட கொலஸ்ட்ரால் இருக்கலாம்.


இவை நமக்கு ஆரோக்கியமற்றவை மற்றும் வழக்கமான நுகர்வுக்கு தகுதியற்றவை என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். மேலும், உறைந்த உணவு வகைகள் பேக்கிங் கவரிலியே இதில் 10.2% தாவர எண்ணெய் மற்றும் காய்கறி புரத பொருட்கள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.


அது மட்டுமல்ல, உறைந்த இனிப்பு வகைகளில் திரவ குளுக்கோஸ் நிறைந்துள்ளது. இது சர்க்கரையின் செயற்கை மூலமாகும். அதோடு, இது போன்ற உறைந்த இனிப்பு வகைகளில் உற்பத்தியாளர்கள் செயற்கை சுவைகள் மற்றும் வண்ணங்களையும் சேர்ப்பார்கள். அதனால், இது போன்ற உறைந்த இனிப்பு வகைகள் முழுக்க முழுக்க நம் உடலுக்கு தீங்கானது.

எனவே, உங்களுக்கு உணவு எடுத்துக் கொண்ட பின்னர், ஐஸ் கிரீம் போன்ற உறைந்த இனிப்பு வகை உணவுகளை சாப்பிட வேண்டும் என்று எண்ணம் தோன்றினால், நீங்கள் மேற்கூறிய விஷயங்களை நினைவில் வைத்துக் கொண்டு உறைந்த இனிப்பு வகை உணவுகளை அறவே தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.


🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஐஸ் வாட்டர் வெயில் காலத்தில் குடிக்கலாமா..? இதனால் உடலில் என்ன நடக்கும்..?

April 03, 2024 0

 சில்லென்று இருக்கும் பானங்கள் அல்லது தண்ணீரை குடிப்பது நமது தாகத்தை தணிக்கவும், புத்துணர்ச்சியுடன் உணர வைக்கவும் உதவுகிறது. ஆனாலும் எப்போதாவது ஐஸ்-கோல்டு வாட்டரை குடிப்பது வேறு வெயிலுக்காக தினமும் குடிப்பது சிறந்த விஷயம் அல்ல என பலர் நம்புகிறார்கள். கோடைகாலம் வந்துள்ள நிலையில் வெயில் கொடுமையிலிருந்து சிறிது இளைப்பாற குளிர்ந்த பானங்கள் மற்றும் ஐஸ் வாட்டர் குடிக்கும் ஓழக்கம் பலரிடமும் உள்ளது. இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளை ஆதரிக்க மற்றும் இயல்பான உடல் வெப்பநிலையை பராமரிக்க, உறுப்புகள் மற்றும் திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தினசரி போதுமான அளவு தண்ணீரை குடிப்பது மிகவும் அவசியம். இது மற்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய நீரிழப்பு தவிர்க்க உதவுகிறது. மேலும் இது பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு காரணமான நீரிழப்பை தவிர்க்க உதவுகிறது.


பொதுவாக நம் உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். நாம் குளிர்ந்த நீரை அருந்தும் நேரத்தில், இந்த வெப்பநிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் உடல் ஆற்றலை வெளியேற்றும் நோக்கில் இயங்குகிறது. சுருக்கமாக சொன்னால் குளிர்ந்த நீர் உடலில் சமநிலையின்மையை ஏற்படுத்தும் மற்றும் செரிமான செயல்முறையை மெதுவாக்கும். ஐஸ் வாட்டர் குடிப்பதை தவிர்க்க மற்றொரு காரணம் குறிப்பாக சாப்பிடும் போது அல்லது சாப்பிட்ட பிறகு, எரிச்சல், தொண்டை புண் மற்றும் மூக்கடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்கிறார் நுரையீரல் நிபுணர் டாக்டர் சோனம் சோலங்கி.


அதே சமயம் கடும் கோடை காலத்தில் ஒருவர் ஐஸ் வாட்டரை குடிப்பதால் குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா மகாதிக். சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஆய்வு முடிவு ஒன்றில், வொர்கவுட்களின் போது ஜில் தண்ணீரை குடிப்பது உடலை அதிக வெப்பமடையாமல் தடுக்க உதவுகிறது என்று கூறப்பட்டிருப்பதை சுட்டிகாட்டி உள்ளார்.


ஒருவருக்கு காய்ச்சல் , ஜலதோஷம் இருக்கும் போது அல்லது அவருக்கு ஏதேனும் நாள்பட்ட நிலை இருந்தால் ஐஸ் வாட்டர் குடிப்பது சரியான யோசனை அல்ல என்கிறார் ஸ்வேதா. வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் ஏற்படும் பலன்களை பற்றியும் கூறி இருக்கிறார் ஸ்வேதா. வெந்நீர் அல்லது வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் கணிசமான நன்மைகள் உண்டு மற்றும் ஐஸ் வாட்டரை குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் எதுவும் இல்லை. மேலும் வழக்கமான அறை வெப்பநிலை தண்ணீரைக் குடிப்பது போன்ற அதே நன்மைகளையே வெதுவெதுப்பான தண்ணீரும் கொண்டிருக்கும் என்கிறார்.


ஐஸ் வாட்டரை குடிப்பதை விட வெந்நீரை குடிப்பது நன்மை பயக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ஆயுர்வேத நிபுணரான டாக்டர் டிக்ஸா பவ்ஸர். வெந்நீர் (வெதுவெதுப்பான தண்ணீர்) குடிப்பது பற்றி கூறி இருக்கும் டிக்ஸா பவ்ஸர், அதிக குளிர்ச்சியுடன் இருக்கும் ஐஸ் வாட்டரை தவிர்த்து விட்டு அதற்கு பதில் அறை வெப்பநிலை அல்லது வெதுவெதுப்பாக இருக்கும் நீரை குடிப்பது நல்லது என்கிறார்.


தண்ணீர் குடிப்பதற்கான சிறந்த வழி பற்றி கூறி இருக்கும் டிக்ஸா பவ்ஸர், குடிக்கும் தண்ணீரின் அளவு போதுமானதாக இருக்க வேண்டுமே தவிர அதிகமாக இருக்க கூடாது என்றும் பரிந்துரைத்து உள்ளார். அதே போல உட்கார்ந்து கொண்டு தான் தண்ணீர் குடிக்க வேண்டும், நின்று கொண்டு அல்லது நடந்து கொண்டோ தண்ணீர் குடிக்க கூடாது, என்றும் கூறி இருக்கிறார்



🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

உடலில் நீர்ச்சத்து குறையாம இருக்க சாப்பிட வேண்டிய 5 உணவுகள்..!

April 03, 2024 0

 இந்தியாவில் கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், இனி ஒவ்வொரு நாளும் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸிற்கும் மேல் அதிகரித்து உடலெங்கும் அனல் பறக்கும். கோடை காலத்தில் நமக்கு பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டாலும், பெரும்பாலானோர் நீரிழப்பினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கோடை காலம் வந்துவிட்டாலே இந்தப் பிரச்சனை தலை தூக்கிவிடும். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் மயக்கம், தலைசுற்றல், சோர்வு, நாள் முழுதும் களைப்பு போன்றவை வரக்கூடும்

ஆகையால் கோடை காலத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நம் டயட்டில் நீரிழப்பை தடுக்க உதவும் சில உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் தேவையற்ற உடல்நலக் கோளாறுகளிலிருந்து தப்பிக்கலாம். அந்த 5 சூப்பர் உணவுகள் இதோ..


தர்பூசணி: நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பழத்தில் அதிகமான ஊட்டச்சத்துகள் உள்ளது. இந்தப் பழத்தில் அதிகமான நீர் இருப்பதால், குறைவான கலோரிகளே இதில் இருக்கின்றன. அப்படியென்றால் தர்பூசணி பழத்தை நிறைய சாப்பிட்டாலும் குறைவான கலோரிகளே உங்கள் உடலில் சேரும். அதேசமயத்தில் உங்கள் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். இதை ஜுஸாகவோ, சாலடாகவோ உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.


வெள்ளரிக்காய்: இதுவும் நீர்ச்சத்து நிறைந்த பழம்தான். கோடை காலத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் வெள்ளரிக்காய், உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையவிடாமல் பார்த்துக்கொள்வதோடு உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றும். அற்புதம் நிறைந்த இந்த வெள்ளரிக்காயை சாலடாகவோ, சாண்ட்விச்சில் சேர்த்தோ அல்லது சூப்பாகவோ வறுத்தோ சாப்பிடலாம்.


பால் : ஒரு க்ளாஸ் பாலில் புரதம், கார்போஹைடரேட், கொழுப்பு மற்றும் நீர்ச்சத்து உள்ளது. கோடை காலத்தில் ஒருவர் ஆரோக்கியமாக இருக்க பால் பயனுள்ளதாக இருக்கும். மேலும் நம் உடலில் இழந்த நீர்சத்தை பெற பால் சிறந்த உணவாகும். உங்களுக்கு உடல்நலப் பிரச்சனை இருந்தால், உங்கள் டயட்டில் பாலை சேர்த்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். உடற்பயிற்சி முடித்து தண்ணீர் குடிப்பதற்குப் பதிகாக ஒரு க்ளாஸ் பால் குடிப்பது உங்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.


யோகர்ட்: யோகர்டில் அதிகளவு நீர்ச்சத்தும் நம் உடலுக்கு தேவையான சத்துகளும் உள்ளது. இது பல வழிகளில் நம் ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது. சுவை நிறம்பிய யோகர்டிற்குப் பதிலாக எதுவும் சேர்க்காத ப்ளெய்ன் யோகர்டை எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் சுவைமிகுந்த யோகர்டில் சர்க்கரை சேர்க்கப்படிருக்கும். இவை நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். காலை அல்லது மதிய உணவிற்குப் பின் ஒரு கப் யோகர்ட் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.

தக்காளி: நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளியில் பல ஊட்டச்சத்துகளும் வைட்டமின் மற்றும் தாதுக்களும் அடங்கியுள்ளது. இதை அப்படியே பச்சையாக கடித்து சாப்பிடலாம். அல்லது ஜூஸாகவோ, கொஞ்சம் மிளகு தூள், உப்பு சேர்த்து சாலடாகவோ சாப்பிடலாம்.



🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

டிகிரி முடித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்காகவே காத்திருக்கும் Cognizant வேலைவாய்ப்பு!

April 03, 2024 0

 

Cognizant நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Sitecore Developer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Cognizant காலியிடங்கள்:

Sitecore Developer பணிக்கென பல்வேறு பணியிடங்கள் Cognizant நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Sitecore Developer கல்வி:

இந்த Cognizant நிறுவன பணிக்கு அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் Computer Science பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Sitecore Developer அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Sitecore Developer ஊதியம்:

Sitecore Developer பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Cognizant நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Cognizant தேர்வு செய்யும் விதம்:

இந்த Cognizant நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cognizant விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Form Link

🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2024 – 4108 காலிப்பணியிடங்கள்!

April 03, 2024 0

 இந்திய வணிகக் கடற்படை சமீபத்தில் பல்வேறு துறைகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை பணியமர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Deck Rating, Engine Rating, Sea Man மற்றும் Cook ஆகிய பதவிகளுக்கு தகுதியான பணியாளர்களை பணியமர்த்த உள்ளது. இங்கு மொத்தம் 4108 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு https://sealanemaritime.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஏப்ரல் 30, 2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்ச்சி சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.

Merchant Navy வயது வரம்பு:

ஏப்ரல் 30, 2024 இன் தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப செயல்முறையை முடிக்க விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.

சம்பள விவரம்:

தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், விண்ணப்பதாரர்கள் பதவியைப் பொறுத்து ரூ 35000 முதல் ரூ 55000 வரை மாதச் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf


🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

விமானப்படை பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஏப்ரல் 16 கடைசி நாள்!

April 03, 2024 0

 கோயம்புத்தூரில் உள்ள விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள PGT மற்றும் TGT ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Air Force School காலிப்பணியிடங்கள்:

PGT (Psychology) – 1 பணியிடம்
TGT (Health & Wellness) – 1 பணியிடம்
TGT (English) – 1 பணியிடம்

Teachers கல்வி தகுதி

  • PGT (Psychology) : Master’s degree in Psychology with B.Ed.
  • TGT (Health & Wellness) :Bachelor’s degree in the relevant fields with B.Ed.
  • TGT (English) : BA in English with B.Ed.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் நிர்வாக இயக்குனர் விமானப்படை பள்ளி கோயம்புத்தூர் – 641018 என்ற முகவரிக்கு அனுப்பி 16.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை விப்ரோ கம்பெனியில் காத்திருக்கும் சூப்பர் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

April 03, 2024 0

 இந்திய பன்னாட்டு நிறுவனமான Wipro நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Manager பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Wipro காலிப்பணியிடங்கள்:

Wipro நிறுவனத்தில் Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

இந்த Wipro நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும்.

Manager பணிக்கு தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் Written Exam, Group Discussion, Skill Test, Interview ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wipro விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Pdf


🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

SSC CHSL வேலைவாய்ப்பு 2024 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || முழு விவரம் இதோ!

April 03, 2024 0

 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமானது SSC CHSL வேலைவாய்ப்பு குறித்த செய்தித்தாள் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் LDC/ DEO பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

SSC CHSL காலிப்பணியிடங்கள்:

Lower Divisional Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) & Data Entry Operator ஆகிய பதவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின் தெரிவிக்கப்படும்.

கல்வி தகுதி:

  • LDC/ JSA, PA/ SA, DEO (except DEOs in C&AG): விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Data Entry Operator (DEO Grade ‘A’) in the Office of Comptroller and Auditor General of India (C&AG): விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதம் தேர்வு செய்து படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • SSC CHSL வயது வரம்பு:

    விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 27 என்றும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    SSC CHSL ஊதிய விவரம்:

    தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA): ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை
    • Data Entry Operator (DEO): ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை மற்றும் ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை
    • Data Entry Operator, Grade ‘A’: ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை

    தேர்வு செய்யப்படும் முறை:

    விண்ணப்பதாரர்கள் Tier I (Online Exam), Tier II (Offline Exam – Descriptive), And Tier III (Typing Test or Skill Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    SSC CHSL விண்ணப்பக்கட்டணம்:

    விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் https://ssc.nic.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    Download notification

🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news