Agri Info

Adding Green to your Life

April 8, 2024

முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை - நிறைய நன்மைகள் இருக்கு

April 08, 2024 0

 பெரும்பாலானோர்க்கு முடி பிரச்சனைகள் எரிச்சலூட்டும் விஷயம். சில பொதுவான முடி பிரச்சனைகளில் பொடுகுமுடி உதிர்தல், வறண்ட முடி மற்றும் மந்தமான முடி ஆகியவை அடங்கும்.கூந்தலுக்கு எண்ணெய் தடவுவதுமுடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிதான மற்றும் பயனுள்ள தீர்வாகும். முடி பிரச்சனை உள்ள எவரும் இதனை வீட்டிலேயே முயற்சி செய்து முடி சேதத்தை குறைக்கலாம்.

எப்படி செய்வது?

கடாயில் கடுகு எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்பிறகு எண்ணெயில் கறிவேப்பிலை மற்றும் வெந்தயத்தை சேர்க்கவும். இதனை 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து காய்ச்சவும். இரண்டும் கருப்பு பழுப்பு நிறமாக மாறும் வரை காத்திருக்கவும்.

பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி எண்ணெய்யை நன்றாக ஆற வைக்கவும். எண்ணெய்யை வடிகட்டி பயன்படுத்தவும்.

சிறந்த நன்மைகளைப் பெற இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறையாவது தடவ வேண்டும்.

பலன்கள்

வெந்தயத்தில் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளனஇது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளதுஉச்சந்தலையை குணப்படுத்துகிறது மற்றும் முடியின் வேர்கள் சேதமடையாமல் தடுக்கிறது.

கறிவேப்பிலை அமினோ அமிலங்களின் நல்ல மூலமாகும்இது முடி வளர்ச்சிக்கும் அவற்றின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாகும். அவற்றில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளனஅவை உச்சந்தலையில் இறந்த செல்கள் குவிப்பதைத் தடுக்கின்றன.

 


🔻 🔻 🔻 

மாம்பழம் சாப்பிடுவதற்கு முன்பு இதை பண்ணுங்க : ரொம்ப முக்கியம் பாஸ்

April 08, 2024 0

 வெயில் காலத்தில்தான் நமக்கு பிடித்த மாம்பழங்களை நாம் சாப்பிட முடியும். இந்நிலையில் நாம் மாம்பழத்தை வழக்கமாக தண்ணீரில் கழுவிய பிறகு சாப்பிடுவோம். இந்நிலையில் இதற்கு பதிலாக நாம் மாம்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து, பிறகு எடுத்துகொண்டால் நல்லது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நாம் ஒரு மணி நேரம் மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைக்கும்போது, அதில் உள்ள பைட்டிக் ஆசிட் குறையும், இந்த பைடிக் ஆசிட், நமது உடலுக்கு தேவையான சத்துகளை எடுத்துகொள்ளாதபடி செய்யும் தன்மை கொண்டது, தண்ணீரில் ஊற வைப்பதால், இந்த அளவு குறையும்.

இநிந்லையில் 1 மணி நேரம் என்பது அதிகமாக தெரிந்தால் 25 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதால், மலச்சிக்கல், தலைவலி , முகப்பருக்கள், குடல் தொடர்பான பிரச்சனை ஏற்படாது.

மேலும் ஆயுர்வேத முறைப்படி இப்படி செய்வதால், உடலில் உள்ள சூட்டை தனிக்கும். மேலும் இது ஜீரணத்திற்கு உதவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுக்க வேண்டும். தொடர்ந்து மாம்பழத்தை இதில் சேர்க்கவும். மாம்பழம் முங்கும் வரை தண்ணீர் இருக்க வேண்டும். 1 மணி நேரம் கழித்து, மாம்பழத்தை எடுத்து, துணிவைத்து துடைக்க வேண்டும்.   

🔻 🔻 🔻 

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த 4 உணவுகள்: மிஸ் பண்ணாம சாப்பிடுங்க

April 08, 2024 0

 இந்த உணவுகளை எடுத்துகொண்டால், நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், முக்கிய நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும்.

பூண்டு

இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. இதில் சல்பர் உள்ளது. அலிசின் உள்ளது. இவை பேக்டீரியாவிற்கு எதிராக செயல்படும். மேலும் நுண்ணியிரிகளை எதிர்க்கும் திறன் கொண்டது. இதை பச்சையாகவோ அல்லது சமைத்தோ நாம் எடுத்து கொண்டால், இது இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

 வெங்காயம்

பூண்டு போலவே இதில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுள்ளது. இதில் க்யூயர்சிடின் உள்ளது, இது சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்ஸிடண்ட் தன்மை கொண்டது, வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. வீக்கத்திற்கு எதிராக, வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

தேங்காய்

இதில் லயுரிக் ஆசிட் உள்ளது, இவை நுண்ணியிரிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. மேலும் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இதில் உள்ள பேட்டி ஆசிட், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முள்ளங்கி

இதில் வைட்டமின் சி, ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இவை வெள்ளை அணுக்கள் உற்பத்தி செய்யும். நோய் கிருமிகளில் இருந்து நம்மை காப்பாற்றும். குளுக்கோசினோலேட்ஸ் உள்ளது, இவை வீக்கத்தை குறைத்து, நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கும்.

 



🔻 🔻 🔻 

தர்பூசணியில் இருக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..? கோடையில் கிடைக்கும் இயற்கை மருந்து..

April 08, 2024 0

 

மக்கள் அனைவரும் சுட்டெரிக்கப் போகும் வெயில் காலத்திற்கு தயாராகி வருகிறார்கள். வழக்கம் போலவே வெயில் காலத்தில் கிடைக்கும் பழ வகைகளுக்கான எதிர்பார்ப்பும் இப்போதே அதிகரிக்க துவங்கி விட்டது.

அந்த வகையில் வெயில் காலத்தில் மட்டுமே கிடைக்கும் தர்பூசணி பழத்தை பற்றி நாம் இப்பொழுது பார்க்கப் போகின்றோம். அதிக அளவு நீர்ச்சத்துடனும், மிகுந்த சுவையுடனும் இருக்கும் தர்பூசணி நம் உடலை போதுமான அளவு நீர் சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் உடலுக்கு குளிர்ச்சியும் அளிப்பதால் எங்கேனும் வெளியிடங்களுக்கு செல்லும்போது முடிந்த அளவு தர்ப்பூசணி பழத்தை சாப்பிடுவது நல்லது.

அதே சமயத்தில் தர்பூசணியை நாம் அளவுக்கதிகமாக சாப்பிட கூடாது. தர்பூசணியை காலை உணவின் போது அல்லது காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட வேளையிலும் சாப்பிடலாம். இதைத் தவிர மாலை நேரங்களிலும் தர்பூசணி பழத்தை நாம் சாப்பிடலாம். ஆனால் இரவு நேரங்களில் தர்பூசணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் சில நேரங்களில் வயிற்று சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகலாம். தர்பூசணி பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவு நிறைந்துள்ளது. நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் முக்கியமான இந்த ஊட்டச்சத்தை அதிகம் கொண்டுள்ளதால் தர்பூசணி உட்கொள்வதன் மூலம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும். இதைத் தவிர நம் முடி மற்றும் சருமத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய வைட்டமின் பி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவையும் இதில் அதிகம் நிறைந்துள்ளது.

நீரிழிவு நோய் உள்ளவர்களும் உட்கொள்ளலாம்: தர்பூசணியில் விளக்கும் பல்வேறு நபர்களும் அதில் அதிக சர்க்கரை நிறைந்துள்ளதாக நம்புகின்றனர். ஏனெனில் அதிக இனிப்பு சுவையுடன் இருப்பதால் அதில் அதிக சர்க்கரை நிறைந்துள்ளது என்பது அவர்களின் நம்பிக்கை ஆனால் உண்மையிலேயே ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கையில் ஒரு முழு தர்பூசணியில் 6.2 கிராமிலிருந்து அதிகபட்சம் 100 கிராம் வரையிலான சர்க்கரையே நிறைந்துள்ளதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது: தர்பூசணியில் அதிக அளவு நீர் சத்தும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இதன் காரணமாக உணவு உண்டபின் மிக விரைவில் மீண்டும் பசி எடுப்பதை இது தடுக்கிறது. நீங்கள் சிறிதளவு தர்ப்பூசணியை நொறுக்கு தீனியாக எடுத்துக் கொண்டாலும், அது நீண்ட நேரத்திற்கு உங்களை பசி இல்லாமல் வைத்திருக்க உதவும்.

இதைத் தவிர தர்பூசணியில் கலோரிகள் மிக குறைவாக இருப்பதால், உடல் எடை கூடுவதைப் பற்றி நாம் கவலை கொள்ள தேவையில்லை. அதற்கு பதிலாக தர்பூசணி உட்கொள்வதால் கிடைக்கும் கலோரிகளை விட நமது உடல் அந்த தர்பூசணியை செரிமானம் செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் கல்லூரிகள் அதிகமாக இருப்பதால் இவை உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது: தர்பூசணியில் உள்ள லைகோபின் என்பது நமது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்து நமது உடலில் உள்ள கொலச்ற்றாளின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் தர்பூசணியில் உள்ள அமினோ அமிலம் நைட்ரிக் ஆக்சைடை உற்பத்தி செய்து ரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்கிறது.

கண்பார்வையை மேம்படுத்த உதவுகிறது: தர்பூசணியில் உள்ள லைகோபினில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மை அதிகம் நிறைந்துள்ளது மேலும் அழற்சி தன்மைக்கு எதிராகவும் செயல்படுகிறது. இதன் காரணமாக தர்பூசணியை போதுமான அளவு உட்கொள்ளும் போது, வயதானவர்களுக்கு உண்டாகும் பார்வை குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

ஈறுகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது: தர்பூசணியில் அதிகம் நிறைந்துள்ள வைட்டமின் சி நமது ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் ஈறுகளில் உண்டாகும் பாக்டீரியா தொற்றுக்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. தர்பூசணி உட்கொள்வதால் பற்கள் பளிச்சென்று இருக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் உதடுகள் வறண்டு போவதையும் தடுக்க உதவுகிறது.

🔻 🔻 🔻 

மளிகை பொருட்கள் வாங்கும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. பணம்தான் வீணாகும்..!

April 08, 2024 0

 பொதுவாக ஒவ்வொரு மாதமும் அந்த மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி சேமித்து வைத்துக்கொள்வது வழக்கம். குறிப்பாக சூப்பர் மார்கெட்டுகளில் மளிகை பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களே அதிகம். இந்த சூப்பர் மார்கெட்டுகளும் ஆஃபர் , தள்ளுபடி, இலவசம் போன்ற வார்த்தைகளை காண்பித்து தன் பக்கம் கவனம் ஈர்கின்றன. மக்களுக்கும் ஆஃபரில் குறைந்த விலையில் வாங்கிவிட்டோம் என்கிற மகிழ்ச்சி இருக்கும். சூப்பர் மார்கெட்டின் இன்னொரு பலன் ஒரே இடத்தில் அனைத்து பொருட்களையும் வாங்கிவிடலாம் என்பதுதான்.

ஆனால் மக்கள் அவர்களுக்கே தெரியாமல் சலுகை என்ற பெயரில், மளிகைப் பொருட்கள் குறைந்த விலையில் வருவதால், பலர் தங்களுக்குத் தேவையானதை விட அதிகமாக வாங்குகிறார்கள். ஆனால் மொத்தமாக வாங்குவதால் சில நேரங்களில் தேவையில்லாத நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். மளிகைப் பொருட்களை மொத்தமாக குறைந்த விலையில் வாங்கினால், அவை கெட்டுவிடும். அதனால் மொத்தமாக கொள்முதல் செய்வதை தவிர்க்க வேண்டும். இது நடைமுறையில் உலகளாவியது, குறிப்பாக சில வகை பொருட்கள் எவ்வளவு விலை குறைவாக இருந்தாலும் அளவாக வாங்குவது நல்லது. அப்படி எந்தெந்த பொருட்கள் ஆஃபரில் இருந்தாலும் தேவைக்கு மட்டும் வாங்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

சமையல் எண்ணெய் : சமையல் எண்ணெய் இல்லாமல் கிட்டத்தட்ட எந்த உணவும் தயாரிக்கப்படுவதில்லை. இது ஒவ்வொரு நாளும் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பொருள். ஆனால் சமையல் எண்ணெயை மொத்தமாக வாங்கக்கூடாது. அவை சரியாக சேமிக்கப்படாவிட்டாலோ அல்லது நீண்ட நாட்கள் சேமித்து வைத்தாலோ அவை கெட்டு நாற்றமெடுக்கும். எனவேதான் எண்ணெய்களை தேவைக்கேற்ப சிறிய அளவில் வாங்க வேண்டும். குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் காற்று புகாத கொள்கலனில் அவற்றை சேமிக்கவும்.

ஃபிரெஷான பொருட்கள் : பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற புதிய பொருட்களை மொத்தமாக வாங்கக்கூடாது. ஏனெனில் அவை விரைவில் கெட்டுவிடும். தேவைப்படும் போது மட்டுமே இவற்றை வாங்க வேண்டும். மொத்தமாக வாங்கினால் கூடுதல் செலவாகும். சரியான நேரத்தில் பயன்படுத்தாவிட்டால் கெட்டுவிடும். இதனால் தேவையற்ற நஷ்டமே..

மசாலாப் பொருட்கள் : மசாலா பொருட்கள் முக்கியமானவைதான். அவை சமையலின் சுவையை அதிகரிப்பதோடு, ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றன. ஆனால் அவற்றின் எக்ஸ்பைரி தேதி மிகவும் குறைவு. அவற்றை ஆறு மாதங்கள் அல்லது 3 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. மசாலாப் பொருட்கள் சரியாகச் சேமிக்கப்படாவிட்டால் சுவை, வாசனை மற்றும் தரம் போய்விடும். அதனால்தான் மசாலாப் பொருட்களை புதியதாக வைத்திருக்க சிறிய அளவில் வாங்க வேண்டும்.

மாவு பொருட்கள் : கோதுமை மாவு, சோள மாவு, உளுந்து மாவு, மைதா மாவு ஆகியவற்றைக் கொண்டு விதவிதமான உணவுகள் செய்வது வழக்கம். அதற்காக, மளிகைக் கடைக்குச் செல்லும்போது, ​​பல்வேறு வகையான மாவுகளை அதிக அளவில் வாங்கக் கூடாது. ஏனெனில் அவர்களின் ஆயுட்காலம் மிகக் குறைவு. அவை காற்றில் இருந்து ஈரப்பதத்தை ஈர்க்கின்றன. இதன் விளைவாக, சீக்கிரமே புழு வைத்துவிடும் . மேலும், அவற்றின் விலையும் அதிகம். வீணாகி விட்டால் தேவையில்லாமல் கஷ்டப்பட வேண்டியதுதான்.


முட்டை : முட்டை ஆரோக்கியத்திற்கு நல்லது. பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டையாவது சாப்பிடுவார்கள். மளிகைக் கடைகளில் இவற்றில் சலுகைகள் இருப்பது இயல்பு. ஆனால் குறைந்த விலையில் கிடைக்கிறது என மொத்தமாக வாங்குவது நல்லதல்ல. ஏனெனில் அவற்றின் காலாவதி நாள் மிகக்குறைவு. விரைவில் முட்டை கெட்டுப்போகும். மொத்தமாக வாங்கி, சரியான நேரத்தில் உட்கொள்ளாமல் இருந்தால், அவை கெட்டுவிடும். அதனால்தான் முட்டைகளை குறைந்த அளவிலேயே வாங்க வேண்டும்.

கூல்ட்ரிங்க்ஸ் : கோடையில் கூல்டிரிங்ஸின் தேவை அதிகம். அவை வெப்பத்தைத் தணிக்க குளிர்ச்சியாக குடிப்பது இயல்பு. ஆனால் இந்த சூப்பர் மார்கெட்டுகள் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் கூல்ட்ரிங்க்ஸ் மீது சலுகைகள் வைத்து விற்பனை செய்கின்றன. அதற்காக குளிர்பானங்களை மொத்தமாக வாங்குவதில் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில் இந்த பானங்கள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். அதேசமயம் நீங்கள் ஃபிரிட்ஜை திறக்கும் போதெல்லாம் அதை குடிக்க தோன்றும். அவ்வாறு குளிர் பானங்களை அடிக்கடி குடிப்பதால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். அதனால் விலை எவ்வளவு குறைவாக இருந்தாலுமே பானங்களை மொத்தமாக வாங்கவே கூடாது.


🔻 🔻 🔻 

கடும் வெப்பத்திலிருந்து தற்காத்து கொள்வது எப்படி.? முக்கிய டிப்ஸ்.!

April 08, 2024 0

 நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் இப்போதே உக்கிரமாக துவங்கி இருக்கும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சரான டாக்டர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் வெப்பம் தொடர்பான நோய்களை நிர்வகிப்பதற்கான பொது சுகாதார தயார்நிலை குறித்து சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார்.

அப்போது IMD எச்சரிக்கைகள் பெறப்பட்டவுடன் மாநிலங்கள் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் வெப்பம் சார்ந்த நோய்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே முன்கூட்டியே ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு வெப்ப அலைகளினால் ஏற்படும் கடும் தாக்கத்தை குறைக்க பெரிதும் துணைபுரியும் என்று அவர் கூட்டத்தில் கூறினார்.

இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நாடு முழுவதும் பல மாநிலங்களில் வெப்ப அலை ஏற்பட கூடும் என ஏற்கனவே எச்சரித்துள்ளது. அதே போல நடப்பாண்டு 4 - 8 நாட்களுக்கு மாறாக 10-20 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை தொடர்பான நோய்கள் என்பவை கடுமையான வெயிலில் நீண்ட நேரம் இருக்க நேரிடுவதால் ஏற்படும் பல நிலைகளை உள்ளடக்கியது. கடுமையாக வியர்ப்பது, பலவீனம், குமட்டல் மற்றும் தலைசுற்றல் உள்ளிட்ட அறிகுறிகளால் heat exhaustion-ஆனது வகைப்படுத்தப்படுகிறது.

News18

அதே நேரம் ஹீட் ஸ்ட்ரோக் (Heatstroke) என்பது மிகவும் கடுமையான நிலையாக குறிப்பிடப்படுகிறது. இது உடல் தானாகவே குளிர்ச்சியடைய முடியாமல் அதிக வெப்பமாகும் போது ஏற்படும் ஒரு மெடிக்கல் எமெர்ஜென்சி கண்டிஷன் ஆகும். ஆபத்தான அளவிற்கு உயரும் உடல் வெப்பநிலை, மன செயல்பாட்டில் மாற்றம் மற்றும் உறுப்பு சேதமாக சாத்தியம் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு இது காரணமாக இருக்கும். டிஹைட்ரேஷன், ஹீட் க்ராம்ப்ஸ் மற்றும் ஹீட் ரேஷஸ் உள்ளிட்டவை வெப்ப அலை தொடர்பான சில பொதுவான நோய்களாகும். முதியவர்கள், சிறு குழந்தைகள் மற்றும் சில தீவிர மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் உட்பட பலர் வெப்ப அலைகளால் எளிதில் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர். போதுமான நீர்சத்துடுன் இருப்ப, வெயில் அதிகமாக இருக்கும் போது வெளியே சென்று கடுமையான செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது, முடிந்த வரை நிழலில் இருப்பது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் வெப்பம் சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்க உதவும்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமானது (NDMA) வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளது.

வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க உதவும் பிற முக்கிய வழிகாட்டுதல்கள் கீழே…

  • உங்களுக்கு தாக்கம் இருக்கிறது, இல்லை என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் தினசரி பரிந்துரைக்கப்பட்டிருக்கும் போதுமான அளவு தண்ணீர் மற்றும் ஆரோக்கிய பானங்களை குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

  • அதிக எடை இல்லாத, வெளிர் நிற, தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள்.

  • வெயிலில் வெளியே செல்ல நேரிட்டால் கண்கள் பாதிக்கப்படாத வகையில் உரிய மற்றும் தரமான பாதுகாப்பு கண்ணாடிகள், குடை அல்லது தொப்பி, ஷூக்கள் அல்லது செப்பல்கள் உள்ளிட்டவற்றை மறக்காமல் பயன்படுத்துங்கள்.

  • வெயில் மிக கடுமையாக இருக்கும் போது வெளியே சென்று கடினமா பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்

  • சிறிய தூரம் பயணம் செய்தால் கூட உங்களுடன் தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்லுங்கள்.

  • உடலை டிஹைட்ரேட் செய்யும் ஆல்கஹால், தேநீர், காபி மற்றும் கார்பனேட்டட் சாஃப்ட் டிரிங்க்ஸ்களை கடும் வெயில் நேரத்தில் தவிர்த்து விடுங்கள்.

  • புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும், அதே போல் மீந்த பழைய உணவுகளை சாப்பிட வேண்டாம்.

  • நீங்கள் வெயிலில் நேரம் செலவழித்து வேலை செய்ய நேரிட்டால் தொப்பி அணிந்து கொள்ளுங்கள் அல்லது குடையை பயன்படுத்துங்கள், மேலும் உங்கள் தலை, கழுத்து, முகம் மற்றும் கைகால்களுக்கு ஈரமான துணியைப் பயன்படுத்துங்கள்.

  • நீங்கள் ஓரிடத்தில் பார்க் செய்து விட்டு செல்லும் வாகனங்களில் குழந்தைகளையோ அல்லது செல்லப்பிராணிகளையோ விட்டு விட்டு செல்லாதீர்கள்.

    • உங்களுக்கு மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டாலோ அல்லது உடல்நிலை சரியில்லை என்று தோன்றினாலோ தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனை செல்லுங்கள்.

    • ORS, லஸ்ஸி, அரிசி நீர், லெமன் வாட்டர், மோர் போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை பருகுங்கள். இது உடலை மீண்டும் ஹைட்ரேட் செய்ய உதவுகிறது.

    • விலங்குகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுங்கள்

    • உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க திரைச்சீலைகள், ஷட்டர்கள் அல்லது சன்ஷேட்களைப் பயன்படுத்துங்கள் மற்றும் இரவில் ஜன்னல்களை திறந்து வைத்து கொள்ளுங்கள்.

    • வெயில் கடுமையாக இருந்தால் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கவும்.

🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

அரசு கலை கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி?

April 08, 2024 0

 

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்வெளியிட்டுள்ளது . ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் எதிர்வரும் ஏப்ரல் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், பொருளியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்கு உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத அனைத்து பணிநாடுநர்களுக்கும் சார்ந்த பாடங்களில் 55% மதிப்பெண்கள் முதுகலைப்பட்டயப்படிப்பில் பெற்றிருக்கவேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாற்றுத் திறனாளிகளுக்கு சார்ந்த பாடங்களில் 50% மதிப்பெண்கள் முதுகலைப்பட்டயப்படிப்பில் பெற்றிருக்கவேண்டும்.


பல்கலைக்கழக மான்யத்திட்டத்தில் வரையறுக்கப்பட்ட கீழ்க்காணும் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். (UGC/CSIR/JRF/NET/SLET/SLST).

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இந்த நான்காயிரம் (4000) உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, உத்தேசமாக ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் எக்கச்சக்க காலியிடங்கள்: விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

April 08, 2024 0

 தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார சங்கம் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், ஆயுஷ் மருத்துவர், மருந்து வழங்குனர், Musculoskeletal Unit-க்கு ஒரு ஆயுஷ் மருத்துவர், சிகிச்சை உதவியாளர்,பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்,மாவட்ட திட்ட அலுவலர் (Ayurveda),  தகவல் உள்ளீட்டாளர் (Data Assistant) நகர்புற சுகாதார மேலாளர் (Urban Health Manager), இடை நிலை சுகாதார பணியாளர்(MLHP)/நகர நல வழ்வு மைய செவிலியர், ஆய்வக நுட்புநர் ஆகிய பதவிகள் நிரப்பப்பட உள்ளன.இந்த காலியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிமாக பணிபுரிவதற்கு நிரப்பப்பட உள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர் நாளைக்குள் (08.04.2024  மாலை 5 மணிக்குள்) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நிபந்தனைகள்:

1.இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2.எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3.பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) அளிக்கவேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
நிர்வாக செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வாளகம்,
விருதுநகர் மாவட்டம்-626001.

இந்த காலியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிமாக பணிபுரிவதற்கு நிரப்பப்பட உள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர் நாளைக்குள் (08.04.2024  மாலை 5 மணிக்குள்) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நிபந்தனைகள்:

1.இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2.எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3.பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) அளிக்கவேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

நிர்வாக செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வாளகம்,
விருதுநகர் மாவட்டம்-626001.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலைவாய்ப்பை வெளியிட்ட சென்னை ஐஐடி: உடனே விண்ணப்பியுங்கள்

April 08, 2024 0

 சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்லூரி காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான (Non teaching post) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 8 Technical Officer (தொழில்நுட்ப அதிகாரி), 12 Junior Technical Superintendent பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஆர்வமும், பணி அனுபவமும் உள்ளவர்கள்  எதிர்வரும் 24 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி:  Technical Officer

கல்விக்கான தகுதிகள்: பொறியியல் துறையில் இசிஇ, ஐடி, கணினி அறிவியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் ஏதாவதொன்றில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தொடர்புடைய துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி முன்னனுபவம் இருத்தல் வேண்டும். அதேபோன்று, இதே பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் 5 ஆண்டுகள்  முன்னனுபவம் கொண்டிருந்தால் போதுமானது.    

பணி: Junior Technical Superintendent

காலியிடங்கள்  எண்ணிக்கை : 12

கல்விக்கான தகுதிகள்: உயிரியல், வாழ்க்கை அறிவியல்(Life Science),வேதியியல், கணினி அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருப்பவர்கள், பொறியியல் துறையில் இசிஇ, ஐடி, கணினி அறிவியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் ஏதாவதொன்றில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தொடர்புடைய துறைகளில் குறைந்தது 8 ஆண்டுகள் பணி முன்னனுபவம் இருத்தல் வேண்டும்.

வயதுவரம்பு: Technical Officer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். Junior Technical Superintendent பதவிக்கு 32-க்குள் இருத்தல் வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:  இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.500ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.     

விண்ணப்பம் செய்வது எப்படி? சென்னை ஐஐடி-யின்   அதிகாரப்பூர்வமான    www.recruit.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.4.2024  ஆகும்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

April 7, 2024

இஸ்ரோவில் ரூ.56,100/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

April 07, 2024 0

 Research Scientist (RS), Project Scientist-I மற்றும் Junior Research Fellow ஆகிய பணியிடங்களை ISRO NRSC சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 71 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இஸ்ரோ வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Research Scientist (RS) – 20 பணியிடங்கள், Project Scientist-I – 6 பணியிடங்கள், Project Scientist-B – 4 பணியிடங்கள், Project Associate-I – 2 பணியிடங்கள், Project Associate-II -12 பணியிடங்கள் மற்றும் Junior Research Fellow – 27 பணியிடங்கள் என மொத்தம் 71 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ME/ MTec/ B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31,000/- முதல் ரூ.56,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் ஏப்ரல் 8 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

DRDO ஆணையத்தில் Apprentices வேலைவாய்ப்பு – – 150 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

April 07, 2024 0

 

DRDO ஆணையத்தில் Apprentices வேலைவாய்ப்பு – – 150 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Graduate, Technician மற்றும் Trade Apprentices பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 150 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Graduate, Technician மற்றும் Trade Apprentices பணிக்கென காலியாக உள்ள 150 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / B.Com. / B.Sc. / B.A/ BCA, BBA / Diploma / ITI என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு பார்வையிடவும்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.9000/- வரை உதவித்தொகை வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Academic Merit / Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.04.2024 ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Download Notification 2024 Pdf


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசில் ரூ.63,200/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

April 07, 2024 0

 மத்திய அரசில் ரூ.63,200/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

Ministry of Fahd ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Driver பணிக்கென காலியாக ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

Driver பணிக்கென காலியாக ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Level 2 அளவில் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Direct Recruitment அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Project Associate வேலைவாய்ப்பு – சம்பளம்:ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே!

April 07, 2024 0

 பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Project Associate வேலைவாய்ப்பு – சம்பளம்:ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Associate பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Pondicherry University காலிப்பணியிடங்கள்:

Project Associate பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Tech / M.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

GATE அல்லது NET தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Pondicherry University வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Associate ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

Pondicherry University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து eceslabpu@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.04.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF




🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

April 6, 2024

சென்னை TCS நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

April 06, 2024 0

 TCS நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் காலியாக உள்ள NGM APAC BFS பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TCS பணியிடங்கள்:

NGM APAC BFS பணிக்கென பல்வேறு பணியிடங்கள் TCS நிறுவனத்தில் காலியாக உள்ளது.

NGM APAC BFS கல்வி விவரம்:

இந்த TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.Sc, BE, B.Tech, MCA, M.Sc, MS தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

NGM APAC BFS அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 04 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

NGM APAC BFS சம்பள விவரம்:

இந்த TCS நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

TCS தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் 08.04.2024 அன்று Tata Consultancy Services, 415 / 21-24, Kumaran Nagar, Sholinganallur Old Mahabalipuram, Chennai – 600119 என்ற முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TCS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Apply பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு திரையில் தோன்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 08.04.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification & Application Form Link



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news