Agri Info

Adding Green to your Life

April 14, 2024

விழிப்போடு செயல்படுவதற்கு நீங்கள் கடைபிடிக்க வேண்டிய மூன்று பழக்க வழக்கங்கள்!

April 14, 2024 0

 ஒருவருடைய பழக்கவழக்கம் என்பது வெற்றிகரமான வாழ்க்கையின் வலிமையான அடையாள அறிகுறியாக செயல்படுகிறது. தொடர்ச்சியாக நாம் எந்த விஷயத்தை செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கிறோமோ அதுவே எதிர்காலத்தில் நம்முடைய வெற்றி மற்றும் சாதனைகளுக்கு பங்களிக்கிறது.

பழக்கவழக்கங்கள் ஒருவரது கவனம், மன தெளிவு போன்றவற்றை ஊக்குவித்து முன்னோக்கி நகர்ந்து, இலக்குகளை அடைவதற்கு உதவி புரிகிறது. ஆனால் நீங்கள் தவறான பழக்க வழக்கங்களை தேர்ந்தெடுத்து விட்டால் அதுவே உங்களுக்கு பாதகமாக அமைந்து விடுகிறது. எனவே உங்கள் அன்றாட வழக்கத்தில் கவனத்தை ஊக்குவித்து விழிப்போடு செயல்படுவதற்கு உதவக்கூடிய மூன்று முக்கியமான பழக்கங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தியானம் : 

தியானம் செய்வதற்கான மேட்-ல் நீங்கள் அமரும் பொழுது உங்கள் உள்எண்ணங்கள் மற்றும் யோசனைகளுக்கான ஒரு இடம் மற்றும் நேரத்தை நீங்கள் அமைத்துக் கொள்கிறீர்கள். தியானம் செய்யும் பொழுது பல யோசனைகள் மேகங்கள் போல் வந்து கலைவதை நீங்கள் கவனிப்பீர்கள். உங்களுடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை ஏற்றுக் கொண்டு அவற்றை எளிமையாக கடந்து செல்வீர்கள். இனியும் அவற்றை ஒரு சுமையைப் போல சுமந்து செல்ல தேவையில்லை என்று எண்ணம் உங்களுக்கு தோன்றும். இன்னும் சொல்லப்போனால் உங்கள் யோசனைகளுக்கு நீங்கள் ஒரு பார்வையாளர் போல செயல்படுவீர்கள்.

தினமும் தியானம் செய்வதால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்று பார்த்தால் மன அழுத்தம் குறையும், கவனம் மேம்படும் மற்றும் கவனிப்பு, நினைவாற்றல் போன்ற உணர்ச்சி செயலாக்கத்துடன் தொடர்புடைய மூளையின் கட்டமைப்பில் நேர்மறை மாற்றங்கள் ஏற்படுகிறது.

திராதகா (Trataka) : 

விழிப்போடு செயல்படுவதற்கு நீங்கள் பயிற்சி செய்ய வேண்டிய முக்கியமான ஒரு பழக்கவழக்கம் என்றால் அது திராதகா. திராதகா என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு “சீரான பார்வை” என்று அர்த்தம்.

திராதகாவை பயிற்சி செய்வது எப்படி?

  • முதலில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி அதனை உங்களிடமிருந்து 16 முதல் 20 இன்ச் தூரத்தில் வைக்கவும்.

  • மெழுகுவர்த்தி ஒளியின் நுனியானது உங்கள் கண்களின் நேர்கோட்டிற்கு சற்று கீழே இருக்க வேண்டும்.

  • மெழுகுவர்த்தி ஒளியின் நுனியை தொடர்ந்து சீராக பார்த்துக் கொண்டே இருங்கள்.

  • கண்களை சிமிட்டுவதால் தவறொன்றும் இல்லை.

  • இப்பொழுது கண்களை மூடி பொருளை கற்பனை செய்து பாருங்கள்.

  • இந்த பிம்பம் பொறுமையாக மறைய தொடங்கும் பொழுது கண்களை திறக்கவும்.

  • பலன்கள் : 

    • ஆழ்சிந்தனை திறனுக்கு அவசியமான கவனத்தை மேம்படுத்துகிறது.

    • தலைவலி, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது.

    • விழிப்புடன் செயல்படுவதற்கு உதவுகிறது.

    • தன்னம்பிக்கை, பொறுமை மற்றும் மன தைரியத்தை அதிகப்படுத்துகிறது.

    கவனத்துடன் பேசுதல் : 

    உங்களுடைய சிந்தனை திறனை அதிகப்படுத்தி எப்பொழுதும் விழிப்போடு இருப்பதற்கு நீங்கள் பயிற்சி செய்ய வேண்டிய மூன்றாவது பழக்கம் எப்பொழுதும் கவனத்தோடு பேச வேண்டும். கோபம், பயம் அல்லது எரிச்சலின் காரணமாக நீங்கள் எந்த ஒரு வார்த்தைகளையும் விட்டு விடாமல் மிகவும் எச்சரிக்கையோடு பேச வேண்டும். ஆனால் பொதுவாக இதுபோன்ற சூழ்நிலைகளில் நம்முடைய வார்த்தைகள் பிறரை எவ்வாறு காயப்படுத்தும் என்பதை யோசிக்காமல் தவறான வார்த்தைகளை விட்டுவிட்டு பின்னர் வருத்தப்படுவோம். எனினும் கவனத்துடன் பேசுதல் பழக்கத்தை நீங்கள் கடைபிடிக்கும் பொழுது பேசுவதற்கு முன்பு நிறுத்தி நிதானமாக பேசுவீர்கள். உடனடியாக ரியாக்ட் செய்வதற்கு பதிலாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து எச்சரிக்கையுடன் நீங்கள் கூற நினைப்பதை பிறருக்கு வெளிப்படுத்துவீர்கள்.

கவனத்துடன் பேசுவதற்கு உதவும் டிப்ஸ் : 

  • பேசுவதற்கு முன்பு சிறிய இடைவெளி எடுத்துக் கொள்ளவும்.

  • உங்களுடைய வார்த்தைகள் நிலைமையை மோசமாக்குமா அல்லது மேம்படுத்துமா என்பதை ஒரு முறை யோசித்து பார்க்கவும்.

  • தெளிவாக பேசவும், அதே நேரத்தில் கனிவான வார்த்தைகளை பயன்படுத்தவும்.

  • கோபம், பிறரை குற்றம் சாட்டுதல் அல்லது பிற வகையான எதிர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.

  • அதிகமாக கவனிக்கவும்.


🔻 🔻 🔻 

கோடைக்காலத்தில் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன ஆகும்..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

April 14, 2024 0

 வாழைப்பழம் ஒரு அதிசய பழம், இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். செவ்வாழை, ரஸ்தாளி, பூவன் பழம், நாட்டு பழம், பச்சை பழம் என பலவகையான வாழைப்பழங்கள் உள்ளன. இவை அனைத்துமே ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.

இதனால் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் நல்லது. குறிப்பாக கோடைகாலத்தில் வாழைப்பழங்களை நம் அன்றாட உணவில் எடுத்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். வாழைப்பழத்தை உங்கள் அன்றாட உணவில் எப்போது சேர்த்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

காலை உணவாக…

காலை உணவுடன் ஒரு வாழைப்பழத்தை சேர்த்து கொள்ளுங்கள். இதில் கலோரிகள் குறைவு. ஆகவே காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட்டால், பல மணிநேரம் பசி எடுக்காமல் இருக்கும். மேலும் அசிடிட்டி , கால்களில் ஏற்படும் பிடிப்பைத் தடுக்கவும் வாழைப்பழம் உதவுகிறது.

மத்திய உணவில்…

ஹைப்போ தைராய்டிசம் என்பது உடல் போதுமான தைராய்டு ஹார்மோன்களை உருவாக்காத ஒரு நிலை ஆகும். வாழைப்பழம் ஹைப்போ தைராய்டிசம் நிலையை சீராக்குகிறது. இதனால் உங்கள் மனநிலை மேம்படும். மேலும் மதிய நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். குறிப்பாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கும் காலைச் சோர்வின் போது, வாழைப்பழத்தை சாப்பிட்டால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கி சோர்வில் இருந்து விடுவிக்கும்.

காலை உணவாக…

காலை உணவுடன் ஒரு வாழைப்பழத்தை சேர்த்து கொள்ளுங்கள். இதில் கலோரிகள் குறைவு. ஆகவே காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட்டால், பல மணிநேரம் பசி எடுக்காமல் இருக்கும். மேலும் அசிடிட்டி , கால்களில் ஏற்படும் பிடிப்பைத் தடுக்கவும் வாழைப்பழம் உதவுகிறது.

மத்திய உணவில்…

ஹைப்போ தைராய்டிசம் என்பது உடல் போதுமான தைராய்டு ஹார்மோன்களை உருவாக்காத ஒரு நிலை ஆகும். வாழைப்பழம் ஹைப்போ தைராய்டிசம் நிலையை சீராக்குகிறது. இதனால் உங்கள் மனநிலை மேம்படும். மேலும் மதிய நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். குறிப்பாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கும் காலைச் சோர்வின் போது, வாழைப்பழத்தை சாப்பிட்டால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கி சோர்வில் இருந்து விடுவிக்கும்.

வாழைப்பழத்தின் பிற நன்மைகள் :

* வாழைப்பழங்கள் எண்ணற்ற நன்மைகள் நிறைந்தவை, மேலும் அவை ஜீரணிக்க எளிதானவை,

* வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்புக்கள் போன்ற உடலின் ஆற்றலை அதிகரிக்கும் சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

* வாழைப்பழத்தில் உள்ள நொதிகள், குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். ஒருவரது செரிமான மண்டலம் சுத்தமாக இருந்தால், உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்கள் முறையாக உறிஞ்சப்படும். வாழைப்பழத்தில் அதிகளவிலான டயட்டரி நார்ச்சத்து, ஃபுருக்டோஸ் உள்ளது. எனவே தினமும் ஒரு வாழைப்பழத்தை மறக்காமல் சாப்பிடுங்கள்.

* ஏனெனில் வாழைப்பழம் இரத்த சோகையை சரிசெய்யும் இரும்புச்சத்தை வழங்குகிறது. அதோடு, வாழைப்பழத்தில் உள்ள பி வைட்டமின்கள், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், வாழைப்பழங்களை வாங்கும் போது, உள்ளூர் வகையை சேர்ந்த நாட்டு பழங்களை வாங்கி உண்ணுங்கள்.

🔻 🔻 🔻 

நீங்க ஒரு டீம் லீடரா… உங்க டீம் சிறப்பாக செயல்பட இந்த யுக்திகளை ஃபாலோ பண்ணுங்க.!

April 14, 2024 0

 

தலைமைத்துவ பண்புகள் அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை. அதனை வளர்த்துக் கொள்வதற்கு நாம் பல்வேறு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு குழுவை பொருத்த வகையில் அதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபருமே முக்கியமானவர்கள் மற்றும் அவர்களின் செயல்திறன் வெற்றி மற்றும் தோல்விக்கு இடையேயான வித்தியாசமாக அமைகிறது.

ஒருவேளை நீங்கள் ஒரு டீம் லீடராக இருந்து உங்கள் குழுவின் செயல் திறனை ஊக்கப்படுத்துவதற்கான யுக்திகளை தேடி கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

தெளிவான இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அமைக்கவும் : எப்பொழுதும் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் மற்றும் உங்களின் இலக்குகள் என்ன என்பதை உங்கள் குழுவிடம் தெளிவாக எடுத்துரைக்கவும். குறிப்பிட்ட மற்றும் அளவிடக்கூடிய இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு குழுவில் இருக்கக்கூடிய அனைவராலும் அடையக்கூடிய வகையில் இலக்குகளை அமையுங்கள்.


உதாரணமாக திகழவும் : எப்பொழுதும் உங்களுடைய செயல்பாடுகள் ஒட்டுமொத்த குழுவிற்கு ஒரு உதாரணமாக அமைய வேண்டும். பிறரிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ அதை நீங்கள் முன் உதாரணமாக இருந்து செய்ய வேண்டும். ஒரு பிரச்சினையை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்றாக இருக்கட்டும் அல்லது உங்களுடைய அர்ப்பணிப்பு திறனாக இருக்கட்டும், அனைத்துமே உங்கள் குழுவில் இருக்கக்கூடிய நபர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டும்.

தெளிவான தகவல் தொடர்பு : ஒரு குழுவின் செயல் திறனை மேம்படுத்துவதற்கு நீங்கள் திறம்பட மற்றும் போதுமான அளவு தகவல்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். எனவே தகவல் தொடர்புக்கான தெளிவான விஷயங்கள் உங்கள் குழுவிற்குள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். பல்வேறு வகையான கேள்விகள் அல்லது அப்டேட்டுகளுக்கு யாரை அணுக வேண்டும் என்பதை ஒரு குழுவில் உள்ள அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கூட்டு முயற்சி கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும் : வெளிப்படையான வேலை சூழலை உருவாக்குவதன் மூலமாக டீம் மெம்பர்கள் இடையே கூட்டு முயற்சியை ஊக்குவியுங்கள். அனைவரும் தங்களுடைய யோசனைகள், ஃபீட்பேக்குகள் போன்றவற்றை தயக்கமின்றி வழங்குவதில் சௌகரியமாக உணரும் வகையிலான சூழலை உருவாக்கி தாருங்கள்.


வேலைகளை திறம்பட முடிப்பதற்கு முன்னுரிமை வழங்கவும் : எந்த வேலை மிகவும் முக்கியமானது மற்றும் அவசரமானது என்பதை கண்டறிந்து அதனை முதலில் செய்து முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். அதிக பிரையாரிட்டி கொண்ட டாஸ்க்களில் கவனம் செலுத்துமாறு உங்கள் குழு உறுப்பினர்களை ஊக்குவிக்கவும். இது போன்ற விஷயங்களில் அடிக்கடி விவாதங்களில் ஈடுபடுவதன் மூலமாக நீங்கள் அதிக கவனத்தை உறுதிப்படுத்தலாம்

போதுமான அளவு ஆட்கள் மற்றும் ஆதரவை தரவும் : ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பொதுவாக ஆட்கள் குறைவாக இருப்பது வழக்கம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வேலையை திறம்பட செய்து முடிப்பதற்கு குறைந்தபட்சம் எவ்வளவு ஆட்கள் தேவைப்படுமோ அதனை நீங்கள் கட்டாயமாக வழங்க வேண்டும். மேலும் அதற்கான பயிற்சி, கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்தல், வழிகாட்டுதல் போன்றவற்றையும் வழங்க வேண்டும்.


வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை ஊக்குவிக்கவும் : செயல்திறனை பராமரித்து ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதில் வேலை-வாழ்க்கை சமநிலை எவ்வளவு முக்கியம் என்பதை தெளிவுபடுத்துங்கள். சுய பராமரிப்புக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை உங்கள் குழுவினர் இடையே ஊக்குவிக்கவும். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகிய இரண்டிற்கும் எல்லை கோடுகளை அமைக்கச் சொல்லவும். நிறுவனங்களின் வெற்றிக்கு ஊழியர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை புரிய வைக்கவும்.


வழக்கமான ஃபீட்பேக் மற்றும் அங்கீகாரம் வழங்கவும் : ஒரு குழுவின் செயல்திறனில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமையான கருவிகள் ஃபீட்பேக் மற்றும் அங்கீகாரம். வழக்கமான முறையில் நீங்கள் அவர்களுக்கு பாசிட்டிவான ஃபீட்பேக் வழங்கி, அவர்களுடைய சாதனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்க தவறாதீர்கள்.

வழக்கமான ஃபீட்பேக் மற்றும் அங்கீகாரம் வழங்கவும் : ஒரு குழுவின் செயல்திறனில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமையான கருவிகள் ஃபீட்பேக் மற்றும் அங்கீகாரம். வழக்கமான முறையில் நீங்கள் அவர்களுக்கு பாசிட்டிவான ஃபீட்பேக் வழங்கி, அவர்களுடைய சாதனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்க தவறாதீர்கள்.

நெகிழ்வுத்தன்மை மற்றும் இணக்கத்திறனை ஊக்குவிக்கவும் : ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் நெகிழ்வுத்தன்மை மற்றும் இணக்கத்திறன் ஆகிய இரண்டும் அத்யாவசியமானவை. புதிய யோசனைகள், தொழில்நுட்பங்களை உங்கள் குழுவிடையே ஊக்குவிக்க யோசிக்காதீர்கள். மாற்றங்களை திறந்த மனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள் புத்தாக்க யோசனைகளை பயன்படுத்துங்கள். வளர்ச்சிக்கான வாய்ப்புகளை தேடுங்கள்.

கடுமையான உழைப்பு வெற்றி பெறுவதற்கு அவசியம் என்றாலும் கூட இன்றைய காலகட்டத்தில் “ஸ்மார்ட் வொர்க்” அதைவிட மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த யுக்திகளை பின்பற்றுவதன் மூலமாக உங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை வெற்றி பாதையில் அழைத்து செல்லுங்கள்.

🔻 🔻 🔻 

இரவு முழுவதும் ஏசி பயன்படுத்தினால் என்னென்ன பக்கவிளைவுகள் உண்டாகும்..? மருத்துவர் விளக்கம்.!

April 14, 2024 0

 அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு நாடு முழுவதும் கடுமையான வெப்பம் தாக்க இருக்கிறது. ஏசி வசதி உள்ளவர்களுக்கு இந்த கோடையில் ஏர் கண்டிஷனர்தான் நம்பிக்கை. காலை, மதியம், இரவு என ஏசியை ஆன் செய்து பலர் வெப்பத்தின் வெக்கையை தனித்துக்கொள்கின்றனர்.

ஏசி யூனிட் உங்கள் அறையில் உள்ள வெப்பத்தை உறிஞ்சி அதே நேரத்தில் குளிர்ந்த காற்றை நிரப்பும். வீட்டை விரைவாக குளிர்விக்க ஏர் கண்டிஷனர் சிறந்த வழியாகும்.

ஆனால் கடுமையான வெப்பம் தூக்கத்தில் குறுக்கிடுவது போல், தூங்கும் போது ஏசியை ஆன் செய்து வீட்டை குளிர்விப்பது குறித்தும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது ”இரவு முழுவதும் ஏசியை இயக்காமல் இருந்தால் மின்சாரக் கட்டணம் குறையும், மேலும் உடல் உபாதைகள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்” என்கிறார் நுரையீரல் சுகாதார மற்றும் ஆரோக்கிய இயக்குனர் கிறிஸ்டின் கிங்ஸ்லி விளக்குகிறார்.

நீங்கள் இரவில் தூங்கும்போது, ​​உங்கள் உடல் வெப்பநிலை குறையும். இது நல்ல தூக்கத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.ஏசியை ஆன் செய்து கொண்டு தூங்குவது உடலுக்கு நல்லதல்ல. இது முழு தூக்கத்துக்கு கொண்டு செல்லாது. நிபுணர்களின் கூற்றுப்படி, தூங்கும் போது ஏசியை இயக்குவது ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது தூசிப் பூச்சிகள் மற்றும் பிற ஒவ்வாமைகளை அறைக்குள் கொண்டு கொண்டு வரும். இது காற்றை உலர்த்தி, அடைப்பை உண்டாக்கும்.

ஏசியை ஆன் செய்து தூங்கினால், நீரிழப்பு ஏற்பட்டு தூக்கத்திற்கு இடையில் அடிக்கடி எழுந்திருக்க் வேண்டியிருக்கும். ஏசி காற்றை உலர்த்துவதால் தொண்டை, வாய், நுரையீரல் மற்றும் கண்கள் வறட்சியும் ஏற்படலாம். இதன் விளைவாக, சுவாச பிரச்சனைகளை பிற்காலத்தில் அனுபவிக்கக் கூடும்.இரவில் ஏர் கண்டிஷனரை ஆஃப் செய்வதன் மூலம் மின்சாரத்தைச் சேமிக்கலாம், இதன் விளைவாக மின்சாரக் கட்டணம் குறையும்.

இரவில் தூங்குவதற்கு மிகவும் பொருத்தமான வெப்பநிலை எது? வெப்பநிலை சுமார் 72-75 டிகிரி பாரன்ஹீட் இருக்கும்படி உங்கள் தெர்மோஸ்டாட்டை அமைக்கவும், அது சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.



🔻 🔻 🔻 

April 13, 2024

கோடையில் கண்கள் வறண்டு போய் எரியுதா..? இதை செஞ்சா உங்க பிரச்சனை சரியாகலாம்..!

April 13, 2024 0

 கோடைகாலத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில் வறண்ட கண்கள், சோர்வான கண்கள், வலி மற்றும் அலர்ஜி ஆகியவை பொதுவாக ஏற்படும் சில கண் பிரச்சனைகள் ஆகும்.

மக்கள் வெயில் காலத்தில் பெரும்பாலும் சரும பராமரிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் அதிகப்படியான தாக்கம் மற்றும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் கார்னியல் தீக்காயங்களுக்கு (corneal burns) வழிவகுக்கும். இது மங்கலான பார்வை, வறட்சி உள்ளிட்ட மோசமான உணர்வுகளை கண்கள் பெற செய்கிறது. எனவே சருமத்தை போலவே கோடையில் கண்களையும் முறையாக பராமரிப்பது மிகவும் முக்கியம். வெயில் நேரத்தில் ஆரோக்கிய கண்களுக்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய டிப்ஸ் இங்கே:

வெளியே செல்லும் போது சன்கிளாஸ்.. வெயில் காலத்தில் சருமத்திற்கு சன்ஸ்கிரீன்கள் எவ்வளவு முக்கியமோ அதே போல கண்களுக்கு நல்ல தரமான கிளாஸ்கள் அவசியம். வெயில் உச்சத்தில் இருக்கும் போது நீங்கள் அவசியம் வெளியே செல்ல வேண்டும் என்றால் உங்கள் கண்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நல்ல தரமான சன்கிளாஸ் அணிந்து கொண்டு செல்லுங்கள். புற ஊதா கதிர்களின் அதிக தாக்கம் காரணமாக ஏற்படும் corneal burn போன்றவற்றிலிருந்து சன்கிளாஸ் பாதுகாப்பு அளிக்கிறது.

ஹைட்ரேட்டாக இருத்தல்.. சிறந்த கண் ஆரோக்கியத்திற்கும், உடலில் போதுமான அளவு நீர்சத்து இருப்பதற்கும் சம்பந்தம் இருக்கிறது. கண் ஆரோக்கியம் நன்றாக இருக்க போதுமான அளவு திரவங்களை எடுத்து கொள்வது அவசியம். கோடையில் அடிக்கும் வெயிலுக்கு நம் கண்களின் கண்ணீர்ப் படலம் அடிக்கடி ஆவியாகி விடும். அடிக்கடி தண்ணீர் குடிப்பது, உடல் ஆரோக்கியமான அளவு கண்ணீரை உற்பத்தி செய்ய உதவும்.

கண் சொட்டு மருந்து பயன்படுத்துங்கள்.. கோடைக்காலம் கண் வறட்சி மற்றும் கண் எரிச்சலுக்கு வழி வகுக்கிறது. சில நேரங்களில் போதுமான அளவு உங்களால் ஹைட்ரேட்டாக இருக்க முடியவில்லை என்றால், கண் மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகு உங்களுக்கு ஏற்ற கண் சொட்டு மருந்தை (eye drops) நீங்கள் பயன்படுத்தலாம். இது கண்களை லூப்ரிகேட் செய்ய, வலி மற்றும் வறட்சியை நீக்க பயன்படுகிறது.

சன்ஸ்கிரீனை பயன்படுத்தும் போது கவனம் தேவை.. சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்க முகத்தில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தும் போது, கண்கள் மற்றும் கண் இமை பகுதிக்கு அருகில் கவனமாக பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் சில சன்ஸ்கிரீன்களில் SPF அதிகம் இருக்க கூடும். தவறுதலாக உள்ளே சென்றால் கண்களுக்கு அசௌகரியம் ஏற்படும். மேலும் கண்களின் மேற்பரப்பில் கெமிக்கல் பர்னை ஏற்படுத்தும். சில நாட்களுக்கு கொஞ்சம் அசௌகரியம் மற்றும் வலி இருக்க கூடும்.

உச்சி வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்கலாம்.. வெயில் வாட்டி எடுக்கும் நேரத்தில் புற ஊதா கதிர்களின் தாக்கமும் உச்சத்தில் இருக்கும். எனவே ஆபத்தான புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க, பார்வையை பராமரிக்க அவசியமின்றி உச்சி வெயிலில் வெளியே செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.

வெளிப்புற நடவடிக்கைகளின் போது.. நீச்சல், தோட்ட பணிகள் அல்லது மரவேலை செய்வது போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடும் போது கண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐ ப்ரொடக்ஷன் தயாரிப்புகளை அணிந்து கொள்ளுங்கள். நீர், காற்று, தூசி முதலியவற்றிலிருந்து உங்கள் கண்கள் மற்றும் முகத்தை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும் கிளாஸ்கள், ஹெல்மெட், ஷீல்டுகள், ஃபேஸ் ஷீல்டுகள் அணிவதை உறுதி செய்யவும். கோடைகால கண் பிரச்சனைகளைத் தடுக்க, வழக்கமான இடைவெளியில் கண் மருத்துவரிடம் செல்லலாம்.



🔻 🔻 🔻 

கோடை காலத்திலும் இருமல்.. தும்மலால் அவதியா..? அவசியம் இதை ஃபாலோ பண்ணுங்க..!

April 13, 2024 0

 கோடை காலம் ஆரம்பித்துவிட்டாலே, அந்தப் பருவத்திற்குரிய நோய்த் தொற்றுகளும் வரிசைகட்டி வந்துவிடும். இந்த சமயத்தில் உங்களுக்கு அடிக்கடி இருமல், தும்மல் வருகிறதா? அப்படியென்றால் பருவ காலத்தில் வரக்கூடிய வைரஸ் தொற்றுகளே இதற்கு காரணமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

கோடை காலத்தில் வரக்கூடிய இதுபோன்ற அலர்ஜிகள் மிகப்பெரும் பொது சுகாதார பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. கோடை காலத்தில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் உணவுகள் எளிதில் மாசடைகின்றன. மேலும் கொசுக்களாலும் அதிக நோய்கள் பரவுகின்றன. கோடை காலத்தில் வைரஸ் தொற்றுகள் வராமல் எப்படி தடுப்பது?

நல்ல சுகாதாரம்: நாம் சுத்தமும் சுகாதாரமுமாக இருந்தால் எந்த நோய் தொற்றுகளையும் பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை. வெளியிலிருந்து வந்த பிறகும், சாப்பிடுவதற்கு முன்பும் எப்போதும் உங்கள் கைகளை சுத்தமாக கழுவுங்கள். இருமும் போதும் தும்மும் போதும் உங்கள் வாய்களை மூடிக் கொள்ளுங்கள்.

வைட்டமின் சி நிறைந்த டயட்: நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த வைட்டமின் சி உதவும். கோடை காலத்தில் ஆரஞ்சு, அன்னாசி, தர்பூசணி, திராட்சை, பெர்ரி பழங்களை அதிகமாக உட்கொள்ளுங்கள். இவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதோடு உடலுக்கு தேவையான நீர்ச்சத்தையும் தரும்.

பழைய உணவுகளை சாப்பிடாதீர்கள்: கோடை காலத்தில் உணவுகள் எளிதாக கெட்டுப்போகும் வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் பாக்டீரியா அதிகமாக பெருகி உணவை கெட்டுப்போக வைக்கின்றன. ஆகவே எப்போதும் புதிதாக தயாரான உணவுகளையே உட்கொள்ளுங்கள்.

ஏசி அல்லது ஏசி அல்லாத அறை: வெளியிலிருந்து வீட்டிற்குள் வந்தவுடனேயே ஏசி ரூமிற்குள் நுழையாதீர்கள். இப்படி திடீரென அறையின் வெப்பநிலை மாறுவதால் உங்கள் உடலில் எளிதில் வைரஸ் தொற்று வரக்கூடும்


மூச்சுவிடுதல்: ஆழ்ந்த மூச்சுப்பயிற்சியை பழகிக்கொள்வது மிகவும் முக்கியம். நமது நுறையீரல் திறனை மேம்படுத்தவும் மன அழுத்தங்களை குறைக்கவும் இது உதவியாக இருக்கும்.

மூலிகை மற்றும் மசாலாக்கள்: இந்தியாவில் எல்லா வீட்டு சமையலறையிலும் பல்வேறு வகையான மருத்துவ மூலிகைகளும் மசாலாக்களும் தவறாமல் இருக்கும். இது பல நோய்த்தொற்றுகளுக்கும் உடல்நலப் பிரச்சனைகளுக்கும் நிவாரணமாக இருக்கும். இஞ்சி, பூண்டு அல்லது பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் இருமல் மற்றும் தும்மல் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.

இவை எல்லாவற்றையும் விட உங்களுக்கு வந்திருக்கும் நோயை முதலில் கண்டறிய மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். பலவித நோய்களுக்கும் ஒரேப்போன்ற அறிகுறிகள் இருக்கலாம். அதுவும் குறிப்பாக இருமல் மற்றும் தும்மல் போன்றவை எல்லா நோய்களுக்கும் பொதுவாக வரும் அறிகுறியாகும். கோடை காலத்தில் மிருதுவான, தளர்வான ஆடைகளை அணியுங்கள். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் அருந்துவதன் மூலம் உடலில் உள்ள நச்சுகளை எளிதாக அகற்றலாம்.


🔻 🔻 🔻 

April 12, 2024

வெயில் நேரத்தில் வெளியே போறீங்களா..? இதை செய்யாமல் போகாதீங்க..!

April 12, 2024 0

 நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பநிலை மக்களை வெளியே செல்லவே பயமுறுத்துகிறது. மழைக்கு கூட சென்றுவிடலாம் போல.. வெயில்தான் இப்படி வாட்டுகிறது என்கிற புலம்பல்களும் கேட்க முடிகிறது. குறிப்பாக 40 வயதைக் கடந்த பலருக்கும் இந்த வெப்பநிலையின் தாக்கம் கடுமையான பாதிப்புகளை உண்டாக்குகிறது.

ஆனாலும் இந்த வெயிலை பார்த்தால் வேலை ஆகுமா என்பதுபோல் என்னதான் வெயில் ஒரு பக்கம் அடித்தாலும் நம் வேலைக்காக வெளியே சென்றுதான் ஆக வேண்டும். அப்படி வேலை காரணமாக வெளியே செல்கிறீர்கள் எனில் வெயில் தாக்கத்திலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த விஷயங்களை தவறாமல் செய்யுங்கள். இதனால் கொஞ்சமேனும் தப்பிக்கலாம்.


நீரேற்றத்துடன் இருங்கள் : வெளியே செல்வதாக இருந்தால் மறக்காமல் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லுங்கள். பாட்டிலில் நேரடியாக சூரிய வெளிச்சம் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதை முடிந்தால் துணியால் சுற்றி பையில் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் கொஞ்சமேனும் குளுர்ச்சியாக இருக்கும். வெயிலிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ள தண்ணீரை விட சிறந்தது வேறெதுவும் இருக்க முடியாது.


வெளியே சென்றால் சூடான டீ, காஃபி மற்றும் கார்போஹைட்ரேட் பானங்களை தவிர்த்துவிடுவது நல்லது. பாட்டில் பானங்கள் அந்த நேரத்தில் குடிக்க குளுர்ச்சியாக , தொண்டைக்கு இதமாக இருக்கலாம். ஆனால் அவைதான் உங்களுக்கு தீவிர உடல் நீரிழப்பை உண்டாக்கவும் காரணமாக இருக்கும். வயிறு தொந்தரவுகளை உண்டாக்கும். எனவே இவற்றிற்கு பதிலாக ORS தண்ணீர், எலுமிச்சை தண்ணீர், மோர், பழச்சாறு போன்றவை குடியுங்கள்.

கடின செயல்பாடுகளை தவிர்க்கவும் : வெயிலில் சும்மா நின்றாலே நம்முடைய ஆற்றலை உறிஞ்சி விடும். நீங்கள் சுற்றித் திரிந்து அலைந்து கடுமையான வேலைகளை செய்கிறீர்கள் எனில் நிச்சயம் அதன் பக்கவிளைவுகளை அனுபவிக்கக் கூடும். அப்படி வேலை செய்தே ஆக வேண்டும் எனில் அடிக்கடி ஓய்வு எடுங்கள். நிறைய தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள். ஏனெனில் தண்ணீரில் இருக்கும் மினரல் சத்துக்கள்தான் உங்களுக்கு குறையும் ஆற்றலை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

பாதுகாப்பான உடைகள் : கோடைக்கு நன்கு காற்றோட்டமான ஆடைகளை உடுத்துவது அவசியம். குறிப்பாக காட்டன் ஃபேப்ரிக் உடைகளை அணிவது சிறந்தது. இறுக்கமாக அல்லாமல் லூஸாக அணிவது நல்லது. அதேபோல் அணியும் உடையின் நிறமும் அவசியம். நிறம் அடர்த்தியான உடைகள் வெயிலை உறிஞ்சி உடலில் எளிதில் கடத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. எனவே பளீர் நிற உடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது குடை, கேப், டவல் இவற்றையும் கொண்டு செல்லுங்கள்.

பாதுகாப்பான உடைகள் : கோடைக்கு நன்கு காற்றோட்டமான ஆடைகளை உடுத்துவது அவசியம். குறிப்பாக காட்டன் ஃபேப்ரிக் உடைகளை அணிவது சிறந்தது. இறுக்கமாக அல்லாமல் லூஸாக அணிவது நல்லது. அதேபோல் அணியும் உடையின் நிறமும் அவசியம். நிறம் அடர்த்தியான உடைகள் வெயிலை உறிஞ்சி உடலில் எளிதில் கடத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. எனவே பளீர் நிற உடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது குடை, கேப், டவல் இவற்றையும் கொண்டு செல்லுங்கள்.

சன் ஸ்கிரீன் கட்டாயம் : சரும நிபுணர்களும் வெளியே சென்றால் கட்டாயம் சன் ஸ்கிரீன் அப்ளை செய்யுங்கள் என்பார்கள். எனவே முகத்திற்கு மட்டுமல்லாமல் கை , கால் என வெளியில் தெரியக்கூடிய அனைத்து இடங்களிலும் சன் ஸ்கிரீன் அப்ளை செய்யுங்கள். இதுதான் புறஊதா கதிர்கள் நேரடியாக சருமத்தில் படுவதை தவிர்க்க உதவுகிறது.

குறைந்த மிதமான உணவு : வெயில் காலத்தில் ஜீரண சக்தி வேகமாக இருக்காது. குறிப்பாக சாப்பிடவும் பிடிக்காது. சாப்பிட்ட உணவு எப்போதும் மந்தமாகவே இருக்கும். அடிக்கடி தண்ணீர்தான் குடிக்கக் தோன்றும். எனவே இதுபோன்ற நேரத்தில் அதிக மசாலா, நீண்ட நேரம் ஜீரணிக்கும் உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.

அதேபோல் அளவுக்கு அதிகமாக இல்லாமல் குறைவாக சாப்பிடுங்கள். ஏனெனில் உடல் செரிமானத்திற்காக அனைத்து ஆற்றலையும் எடுத்துக்கொண்டால் உடலில் எனர்ஜி சீக்கிரம் இறங்கிவிடும். வெளியே செல்லும்போது வெயில் ஒரு பக்கம் உங்கள் எனர்ஜியை உறிஞ்சிவிடும். இவை உங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும். எனவே வெளியே செல்வதாக இருந்தால் உணவை மிதமாக , அளவாக உட்கொள்வது அவசியம்.


🔻 🔻 🔻 

பிளஸ் 2 கல்வித் தகுதி கொண்ட குரூப்-சி பணிகளுக்கு ஜூன், ஜூலையில் தேர்வு

April 12, 2024 0

 1229998

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பிளஸ் 2 கல்வித் தகுதி கொண்ட குரூப்-சி பணிகளுக்கான போட்டித் தேர்வு ஜூன் மற்றும் ஜூலையில் நடத்தப்படும் என பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி (பிளஸ் 2) நிலையிலான பணியாளர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


மத்திய அரசின்பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் உள்ளிட்ட குரூப்-சி பிரிவு பணிகளுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது.


பணியின் பெயர், வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வுக் கட்டணம், தேர்வு மையம், ஆன்லைன் விண்ணப்ப முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் www.ssc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசிநாள் மே 7-ம் தேதி. தமிழ்நாடுஉள்ளிட்ட தென்மண்டலத்தில் கணினி வழி தேர்வு ஜூன், ஜூலை மாதத்தில் 21 மையங்களில் நடக்கிறது. இந்த தகவல்களை பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குநர் கே.நாகராஜா தெரிவித்துள்ளார்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை மெட்ரோ ரயில் வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

April 12, 2024 0

 சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


Additional General Manager (Rolling Stock)/ Joint General Manager (Rolling Stock)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : B.E / B. Tech (ECE/EEE/Mech) படித்திருக்க வேண்டும். மற்றும் 17 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி : 47 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 1,45,000 - 1,60,000

Joint General Manager (Power System & OverHead Equipment)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.E / B. Tech (EEE) படித்திருக்க வேண்டும். மேலும் 15 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி : 43 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 1,45,000

Manager (Operations) 

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : B. E / B.Tech (EEE/ ECE/ Mech/CSC) படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி : 38 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 85,000

Deputy Manager /Assistant Manager (Rolling Stock)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.E / B. Tech (ECE/EEE/Mech) படித்திருக்க வேண்டும். மேலும் 4 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 75,000

Assistant Manager (General Consultant) 

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி : 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 62,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறைஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://careers.chennaimetrorail.org/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.04.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaimetrorail.org/ என்ற இணையதளப்பக்கத்தினைப் பார்வையிடவும்.

 


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news