Agri Info

Adding Green to your Life

April 18, 2024

10ம் வகுப்புத் தேர்ச்சியா? மீன்வள கடல்சார் மற்றும் பொறியியல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

April 18, 2024 0

 2024-25-ம் ஆண்டுக்கு வெசல் நேவிகேட்டர் (VESSEL NAVIGATOR COURSE - படகு இயக்குபவர்), மெரைன் ஃபிட்டர் ( MARINE FITTER COURSE) ஆகிய பணியிடங்களுக்கான பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மீன்வள கடல்சார் மற்றும் பொறியியல் பயிற்சிக்கான மத்திய நிறுவனம் மூலம் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புகள் கொச்சி / சென்னை / விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் 2 ஆண்டுகால உறைவிடப் பயிற்சியாக நடத்தப்படும்.

இதற்கு கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு பயிற்சி பெற்றிருப்பதும், கணிதம், அறிவியலில் தனித்தனியே 40% மதிப்பெண் பெற்றிருப்பதுமாகும்.

வயது வரம்பு 2024, ஆகஸ்ட் 1 நிலவரப்படி 15 முதல் 20 வயது வரை எஸ்சிஎஸ்டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகள் தளர்வு இருக்கும்.

விஎன்சி, பணிக்கான பயிற்சிக்கு 20 பேர், எம்எஃப்சி பணிக்கான பயிற்சிக்கு 20 பேர் என 3 மையங்களிலும் மொத்தம் 120 பேர் பயிற்சி பெற முடியும்.

பயிற்சி பெறுபவர்கள் அகில இந்திய அடிப்படையில் பொது நுழைவுத் தேர்வு மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம் மற்றும் விவரக்குறிப்பை www.cifnet.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பொதுப்பிரிவினர் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ.350-ம் எஸ்சி / எஸ்டி பிரிவினர் 175-ம் விண்ணப்பக் கட்டணமாக கேட்பு வரைவோலையை (டிடி) அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களைத் தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து அனுப்புவதற்கான கடைசி நாள் 14.06.2024.

கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, ஆகிய இடங்களில் 29.06.2024 (சனிக்கிழமை) பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். தேர்வு முடிவுகள் 07.07.2024 ஞாயிறன்று வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் www.cifnet.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து மத்தியப்படுத்தப்பட்ட கலந்தாய்வு கொச்சியில் 18.07.2024 அன்று நடைபெறும். இது பற்றி மேலும் விவரங்களை தமிழில் அறிந்து கொள்ள 94452 13673, 86680 49365, 99520 62628, 74014 73752 என்ற செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

April 17, 2024

CUB சிட்டி யூனியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும்!

April 17, 2024 0

 சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள HEAD OF INTERNAL AUDIT பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.


CUB சிட்டி யூனியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

HEAD OF INTERNAL AUDIT பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ACA / Professional / Postgraduate / CAIIB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Audit வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

அனுபவ விவரம்:

வங்கித் துறையில் குறைந்தபட்சம் 20 வருட அனுபவத்துடன், அகத் தணிக்கையில் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

குறுகிய பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு அழைக்கப்படுவார்கள் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் தங்களின் ஆன்லைன் பதிவுகளை மேற்கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2024

Apply Online

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசில் Assistant Section Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்கள்

April 17, 2024 0

 Ministry of Home Affairs ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Section Officer, Inspector EP office பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

MHA காலிப்பணியிடங்கள்:

Assistant Section Officer பணிக்கென காலியாக உள்ள 3 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Section Officer தகுதி:

மத்திய அல்லது மாநில அரசில் Analogous பதவிகளில் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

MHA வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant Section Officer ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.5,200/- முதல் ரூ.1,42,400/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

MHA தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.05.2024, 06.05.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

April 17, 2024 0

 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Field Investigator பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Field Investigator பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 55 மதிப்பெண்களுடன் Post Graduate Social Science discipline/Film & Electronic Media Studies/Mass Communication தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காமராஜர் பல்கலைக்கழக தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

April 17, 2024 0

 சென்னையில் உள்ள கத்தோலிக்க சிரியன் வங்கி (CSB Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் Migration Analyst பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் வழிமுறை போன்றவை எளிமையாக அனைவருக்கும் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

CSB வங்கி காலிப்பணியிடங்கள்:

Migration Analyst பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Bachelor’s degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

முன்னனுபவம்:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அதிகபட்சம் 5 முதல் 8 வருடம் வரை அனுபவம் உள்ளவராகவும் அல்லது அனுபவம் இல்லாதவராகவும் இருக்கலாம்.

CSB Bank ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யும் விதம்:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Pdf

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

April 16, 2024

தேர்தல் பற்றிய முக்கிய கேள்வி பதில்கள் - TNPSC EXAM NOTES

April 16, 2024 0

 

தேர்தல் பற்றிய முக்கிய கேள்வி பதில்கள் – டிஎன்பிஎஸ்சி நோட்ஸ்

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

கமிட்டி / கமிஷன் பெயர் மற்றும் தகவல்கள் – TNPSC Studymaterials

April 16, 2024 0

 கமிட்டி / கமிஷன் பெயர் மற்றும் தகவல்கள் – TNPSC Studymaterials


அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇
Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சணல் பை தயாரிப்பு இலவச பயிற்சி - எங்கு எப்போது தெரியுமா?

April 16, 2024 0

 கிராமப்புற நபர்களை தொழில் முனைவோர் ஆக்கும் நோக்கத்தோடு பல்வேறு வகையான பயிற்சிகள் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது . முற்றிலும் இலவசமாகவே அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வரும் நிலையில் , தற்போது கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சிய மையத்தில் கிராமப்புற நபர்களுக்கான இலவச சணல் பை தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

13 நாட்கள் நடைபெறும்‌ இலவச பயிற்சியானது தினசரி காலை 9.30மணியிலிருந்து மாலை 5.30 வரை நடைபெறும். ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் பயிற்சி துவங்க உள்ளது. பயிற்சி கட்டணம் இல்லை, பயிற்சிக்கான உபகரணங்கள் மற்றும் காலை,மதிய உணவு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள நபர்கள் 04546-251578 & 8072334369& 9500314193& 9442758363 & 8870376796 என்ற எண்களில் தொடர்பு கொள்ளம் எனவும் கனரா வங்கி RSETI உழவர் சந்தை எதிர் புறம்,
கான்வென்ட் அருகில் தேனி இந்த முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻 🔻 🔻 

சென்னை பல்கலை. வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

April 16, 2024 0

 சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர் பயிற்சியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.04.2024.

Student Intern

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : M.Sc. /M.Tech படித்திருக்க வேண்டும். 

ஊக்கத்தொகை : ரூ. 5000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத்

 தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.unom.ac.in/  என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப 

வேண்டும்

முகவரி: Dr. N. Radhakrishnan, Principal Investigator, DST-SERB (CRG) Assistant Professor, Centre for Advanced Studies in Botany University of Madras, 

Chennai - 600 025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.04.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.unom.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

April 15, 2024

10ம் வகுப்புத் தேர்ச்சியா... இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் 4660 காலியிடங்கள்

April 15, 2024 0

 இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை (Railway protection Force) மற்றும் சிறப்பு பாதுகாப்புப் படையில் (Railway Protection Special Force) காலியாக உள்ள கான்ஸ்டபிள் மற்றும் காவல் துணை ஆய்வாளர் (Sub- Inspector) பணியிடங்களுக்கான  ஆட்சேர்க்கை அறிவிக்கை வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 14ம் தேதிக்குள் www.rrbapply.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த ஆட்சேர்ப்பின் மூலம், இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் சிறப்பு பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 4, 208
கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களும், 452 துணை ஆய்வாளர் (Sub - Inspector) பணியிடங்களுக்கும் நிரப்பப்பட உள்ளது  . இதில்  10 சதவிகித இடங்கள் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 15 சதவிகித இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வயது வரம்பு : கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.07.2024  அன்று 18 -25 க்கு கீழ் இருக்க வேண்டும். துணை ஆய்வாளர் பதவிக்கு 20 - 25க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

கல்வித் தகுதி: கான்ஸ்டபிள் பதவிக்கு 10ம் வகுப்பு அல்லது அதற்கு இனமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்…துணை ஆய்வாளர் பதவிக்கு, ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: கணினி வழியிலான எழுத்துத் தேர்வு , உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சேர்க்கை முறை நடைபெறும். எழுத்துத் தேர்வு, பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning) ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டதாக உள்ளது. பொது விழிப்புணர்வு பகுதியில் 50 கேள்விகளும், பிரச்னை தீர்க்கும் ஆற்றல் பகுதியின் கீழ் 35 கேள்விகளும், காரணங்கானல் பகுதியின் கீழ் 35 கேள்விகளும் கேட்கப்படும். சிறியளவு பயிற்சி இருந்தால் கூட வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

எனவே, இந்த ஆட்சேர்ப்பு அறிவிவிக்கை தொடர்பான தகவல்களுக்கு https://rpf.indianrailways.gov.in/RPF//index.jsp என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். www.rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Union Bank of India-வில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

April 15, 2024 0

 Union Bank of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Jewel Appraiser பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Union Bank of India காலிப்பணியிடங்கள்:

Jewel Appraiser பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Jewel Appraiser கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Union Bank of India வயது வரம்பு:

30 வயது பூர்த்தியான 55 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Jewel Appraiser ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Union Bank of India-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Union Bank of India தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 26.04.2024 ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TVS நிறுவனத்தில் காத்திருக்கும் Lead Digital Engineer பணியிடம் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

April 15, 2024 0

 TVS மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Lead Digital Engineer (Full Stack) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TVS காலியிடங்கள்:

Lead Digital Engineer (Full Stack) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் TVS மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Lead Digital Engineer கல்வி:

இந்த TVS மோட்டார் நிறுவனம் சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Software Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree, B.Tech, MBA, M.Tech டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

Lead Digital Engineer அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 07 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Lead Digital Engineer மாத ஊதியம்:

Lead Digital Engineer (Full Stack) பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் TVS நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

TVS தேர்வு செய்யும் விதம்:

இந்த TVS மோட்டார் நிறுவனம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVS விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Download Notification & Application Form Link


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தேர்வு இல்லாமல் வங்கி வேலை.. மாதம் ரூ.20,000 வரை சம்பளம்.. முழு விவரம்!!

April 15, 2024 0

உலகில் பல வகையான வேலை வாய்ப்புகள் இருந்தாலும் சிலருக்கு வங்கியில் வேலை செய்ய வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது. அதற்காக பலர் பயிற்சிகளை மேற்கொண்டு போட்டித் தேர்வுகளை எழுதுகின்றனர். அப்படி வங்கியில் வேலை பெற விரும்புவோருக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. 

செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, அலுவலக உதவியாளர், ஆசிரியர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் entralbankofindia.co.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : அலுவலக உதவியாளர் : இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 35 வயதுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

உதவியாளர் : உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

ஆசிரியர் : ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 65 வயதுக்கும் குறைவாக இருக்க கூடாது.

சம்பளம் : 

அலுவலக உதவியாளர் : அலுவலக உதவியாளர் பதிவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.12,000 ஊதியம் வழங்கப்படும்.

உதவியாளர் : உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.8,000 ஊதியம் வழங்கப்படும்.


ஆசிரியர் : இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : 

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்காணலுக்கு பிறகு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி? : 

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தேவையான ஆவணங்கள் அடங்கிய விண்ணப்பத்தை செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை அலுவலகத்திறு அனுப்பி வைக்க வேண்டும்.



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

April 14, 2024

சுட்டெரிக்கும் வெயில்... வயிற்றை குளுர்ச்சியாக வைத்துக்கொள்ள இந்த 8 உணவுகளை சாப்பிடுங்க..!

April 14, 2024 0

 கோடைக்காலம் வந்தாலே வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும். அதிலும் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக கடுமையான உஷ்ண அலையுடன் கூட வெப்பம் அதிகமாகவுள்ளது. இந்த நாட்களில் உங்களது உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்துக்கொள்வது அவசியம். இதனால் அதிகளவு தண்ணீர் குடிப்பது, நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகம் உட்கொள்வது போன்ற விஷயங்களை நீங்கள் மேற்கொள்வீர்கள்.

இவ்வாறு உங்களது உடலை நீரேற்றமாக நீங்கள் வைத்துக்கொள்வது ஒருபுறம் இருந்தாலும், உங்கள் வயிற்றையும் நீங்கள் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் அதிக வெப்பம் உங்களது செரிமான அமைப்பில் பல பிரச்சனைகளை ஏற்படும். உடலில் அதிக நீரிழப்பு, மலச்சிக்கல், வயிறு வீக்கம் மற்றும் இரைப்பை போன்ற குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே இதுப் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க வேண்டும் என்றால் கோடைக்காலத்தில் சில உணவுகளை கட்டாயம் நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதோ என்னென்ன? என்று இங்கே அறிந்துக்கொள்வோம். உங்கள் வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகள்:

தர்பூசணி : அதிக நீர்ச்சத்து பழமான தர்பூசணியை நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, வெப்பத்தை எதிர்த்துப்போராடி உடலை குளிர்ச்சியாக மற்றும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. எனவே கோடையில் நீங்கள் அதிகமாக நீங்கள் சாப்பிடும் போது, உடலில் அதிக நீர் இருக்கும். இதனால் உங்களை நீரேற்றமாக வைத்திருப்பதோடு மலச்சிக்கலுக்குத் தீர்வாக அமைகிறது. தர்பூசணியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும், ஆரோக்கியமான வயிற்றைப் பாதுகாக்க முக்கியமான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை இந்தப் பழத்தில் ஏராளமாக உள்ளன.


வெள்ளரிக்காய் : கோடையில் அதிகளவில் நிலவும் வெப்ப அலையால், உங்கள் வயிற்றை எளிதாக வைத்திருக்க உதவுகிறது. இதில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலை பாதுகாப்பாக வைத்திருக்க உதவியாக உள்ளது.

இளநீர் : கோடை வெயிலை சமாளிக்க இளநீர் ஒரு சிறந்த பானம். வெப்ப அலையின் போது உடலை நீரேற்றமாக இருக்க உதவும் எலக்ட்ரோலைட்டுகள் இதில் அதிகளவில் உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம் வழக்கமான குடல் இயக்கத்தை பராமரிக்கவும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் உதவுகிறது. லாரிக் அமிலம், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உங்கள் வயிற்றின் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது.

தயிர் : தயிர் போன்ற புரோபயாடிக் நிறைந்த உணவுப் பொருள்கள் அதிக வெப்ப அலையின் போது குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும். புரோபயாடிக்குகள் எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் உங்கள் வயிற்றில் இருப்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது. கூடுதலாக, தயிரில் நிறைய கால்சியம் உள்ளதால் குடல் இயக்கங்களை அதிகரிக்கிறது.

மோர் : கோடை காலத்தில் உங்கள் குடலை எரிச்சலின்றி வைத்திருக்க விரும்பினால், உங்கள் தினசரி வழக்கத்தில் மோர் சேர்க்க வேண்டும். இது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் செரிமான பிரச்சனைகளைத் தீர்வாக அமைகிறது. மேலும் இதில் புரோபயாடிக்குகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளதால், உடலின் வெப்பநிலையை இயல்பு நிலைக்குத் திரும்ப உதவியாக உள்ளது.

இஞ்சி : நமக்கு ஏற்படும் பெரும்பாலான வயிற்றுப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைவது இஞ்சி தான். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வெப்ப அலையின் போது உங்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை சரிசெய்ய உதவியாக உள்ளது. மேலும் செரிமான பிரச்சனைக்குத் தீர்வாகவும் உள்ளது. எனவே இஞ்சியை நீங்கள் உங்களது உணவில் பல வழிகளில் சேர்த்துக்கொள்ளலாம்.

பப்பாளி : உங்களது செரிமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உதவும் பழங்களில் ஒன்றாக உள்ளது பப்பாளி. பாப்பைன் மற்றும் சைமோபாபைன் போன்ற புரதங்கள் உள்ளது. இதில் நார்ச்சத்து உள்ளது, இது வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.


இதுப்போன்று முலாம்பழம், வெந்தயம் களி போன்றவற்றையும் உங்களது உணவில் சேர்த்துக்கொள்ளவும். நிச்சயம் கோடையில் உங்களது உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க முடியும்



🔻 🔻 🔻 

பணிபுரியும் அலுவலகத்தில் நம்முடைய கம்யூனிகேஷன் திறனை எப்படி வளர்த்துக்கொள்வது..? உங்களுக்கான டிப்ஸ்..!

April 14, 2024 0

 நேரத்திற்கு நேரம் மாற்றமடைந்து வரும் பிசினஸ் சூழலில், நம்முடைய உற்பத்தி திறனுக்கும் வெற்றிக்கும் தகவல்களை திறமையாக பரிமாற்றம் செய்வதற்கான திறன் மிகவும் அவசியமாகும். சக பணியாளர்களோடு இணைந்து பணியாற்றுவதற்கோ, உயரதிகாரிகளிடம் திட்டங்களை கூறுவதற்கோ அல்லது வாடிக்கையாளர்களிடம் கலந்துரையாடுவதற்கோ சிறந்த தகவல் பரிமாற்ற திறன் தேவைப்படும். இந்த திறமை இருந்தால் மட்டுமே பணிபுரியும் இடங்களில் நம் பெர்ஃபார்மன்ஸை உயர்த்த முடியும். உங்கள் தகவல் பரிமாற்ற திறனை எப்படி செம்மைப்படுத்தலாம் என்பதற்கு சில டிப்ஸ்களை இந்தக் கட்டுரையில் நாங்கள் தருகிறோம் ​

கவனமாக கேட்பது… பலரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இது மிகவும் அடிப்படையான விஷயம் என்பதை மறந்துவிடாதீர்கள். சிறந்த தகவல் பரிமாற்ற திறனுக்கு முதலில் அடுத்தவர்கள் பேசுவதை கவனமாக கேட்க வேண்டும். நாம் எப்போது பேசலாம் எனக் காத்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக நமக்கு முன் பேசுபவரின் சிந்தனைகள், கருத்துகள், கவலைகளை புரிந்துகொள்வதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கண்களை நேராக நோக்குங்கள், புரிந்துகொண்டதற்கு அத்தாட்சியாக சைகையை வெளிப்படுத்துங்கள். அடுத்தவர்கள் பேசுவதை கவனமாக கேட்பது இருவருக்கு இடையே நல்ல உறவுமுறையை வளர்ப்பதோடு உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை புரிந்துகொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

தெளிவும் சுருக்கமும்: நாம் கூறுவது தெளிவாகவும், அதே சமயத்தில் சுருக்கமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் தவறான புரிதல் ஏற்படுவதை தடுக்க முடியும். நமது எண்ணங்களை தெரிவிக்கும் போது சுற்றி வளைக்காமல் நேரடியாக கூற வேண்டும். அப்போதுதான் எல்லாருக்கும் எளிமையாக புரியும். தேவையற்ற விளக்கங்கள் அல்லது புரியாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். இல்லையென்றால் குழப்பமே மிஞ்சும். உங்கள் எண்ணங்களை சிறந்த முறையில் பகிர எப்போதும் எளிமையான மொழியை பயன்படுத்துங்கள். ​

வெளிப்படையான தகவல் பரிமாற்றம்: அலுவலகத்தில் குழு உறுப்பினர்கள் தங்கள் எண்ணங்கள், கவலைகள், திட்டங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக தெரிவிக்கும் சூழலை உருவாக்குங்கள். அவர்களது கருத்துகளை கூற ஊக்கப்படுத்துங்கள். பரந்துபட்ட பார்வைகள் கொண்ட கருத்துகளையும் எண்ணங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருங்கள். குழு உறுப்பினர்களிடம் வெளிப்படைத்தன்மை நிறைந்த கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதால் இணைந்து பணியாற்றுவது எளிமையாவதோடு உறுப்பினர்களுக்கு இடையேயான நம்பிக்கையும் அதிகரிக்கும்.


பச்சாதாபம் : சிறந்த தகவல் பரிமாற்றத்திற்கு பச்சாதாபமும் ஒரு கருவியாக செயல்படுகிறது. இதனால் அடுத்தவர்களின் உணர்வுகள், அனுபவங்களை புரிந்துகொள்ள முடிகிறது. சக பணியாளர்களின் எண்ணவோட்டங்கள், சவால்கள், உணர்வுகளை புரிந்துகொள்வதற்கு அவர்களோடு நேரம் செலவழியுங்கள். அவர்களின் உணர்வுகள் மற்றும் கவலைகளுக்கு அங்கீகாரம் கொடுங்கள். மற்றவர்களிடம் பச்சாதாபம் கொள்வதால் அவர்களுடனான தொடர்பு வலுப்படும். ஆதரவான பணிச்சூழல் ஏற்படும். இது பணியாளர்களின் மன நலனை ஆரோக்கியப்படுத்தி உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்யும்.​

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது : தகவல் பரிமாற்ற திறனை வளர்த்தெடுப்பதற்கு தொடர்ச்சியான மேம்படுத்தல் மிகவும் அவசியமாகும். உங்கள் சக பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் அல்லது ஆலோசகர்களிடம் இருந்து வரும் பின்னூட்டங்களை காதுகொடுத்து கேளுங்கள். இது உங்கள் தகவல் பரிமாற்ற ஸ்டைலை மாற்றிக்கொள்ள உதவியாக இருக்கும். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு நேர்மறையான மாற்றங்களை நடைமுறைப்படுத்துங்கள். உங்களுக்கு வரும் பின்னூட்டங்களை ஏற்றுக்கொள்வது உங்களின் தொழில்முறை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.


🔻 🔻 🔻