Agri Info

Adding Green to your Life

April 20, 2024

சென்னைப் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் Project Fellow பணியிடம் – ரூ.18,000/- மாத ஊதியம்!

April 20, 2024 0

 சென்னைப் பல்கலைக்கழகத்தில் (Madras University) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Project Fellow பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னைப் பல்கலைக்கழக பணியிடங்கள்:

சென்னைப் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிக்கென 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Project Fellow கல்வி விவரம்:

Project Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Biochemistry, Biological Science, Life Science பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Project Fellow வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Project Fellow ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.18,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Madras University தேர்வு செய்யும் விதம்:

இந்த சென்னைப் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Madras University விண்ணப்பிக்கும் விதம்:

Project Fellow பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை (CV) தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு 22.04.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

NIT திருச்சி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

April 20, 2024 0

 Data Entry Operator Trainee பணிக்கென NIT Trichy நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

NIT Trichy காலியிடங்கள்:

Data Entry Operator Trainee பணிக்கென 10 பணியிடங்கள் NIT Trichy நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Data Entry Operator Trainee கல்வி:

இந்த NIT Trichy நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் Bachelor’s Degree, BE, B.Tech தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

Data Entry Operator Trainee வயது:

Data Entry Operator Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Data Entry Operator Trainee மாத ஊதியம்:

இந்த NIT Trichy நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

NIT Trichy தேர்வு முறை:

Data Entry Operator Trainee பணிக்கு தகுதியான நபர்கள் Written Test, Certificate Verification, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NIT Trichy விண்ணப்பிக்கும் முறை:

இந்த NIT Trichy நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் https://nittnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 25.04.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

SSC JE 2024: 968 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பித்து விட்டீர்களா? – முக்கிய தகவல் இதோ!

April 20, 2024 0

 பணியாளர் தேர்வாணையம் ஆனது உதவி பொறியாளர் பணிகளுக்கான 968 காலிப்பணியிடங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டு விண்ணப்பங்களை பெற்றது. இந்நிலையில் விண்ணப்பித்த நபர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

SSC JE 2024:

பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக இந்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகளுக்குமான ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மார்ச் 28ஆம் தேதி அன்று வெளியான சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளுக்கான 968 ஜூனியர் இன்ஜினியர் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு விட்டது. ஆன்லைன் விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கு ஏப்ரல் 18ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை விண்ணப்ப படிவங்களில் உள்ள மாற்றங்களை திருத்தம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூன்று நிலைகளைக் கொண்ட இத்தேர்வின் முதல் கட்ட தேர்வு ஜூன் மாதம் நடத்தப்பட உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பி.இ அல்லது பி.டெக் போன்ற கல்வி தகுதிகளை கொண்ட நபர்கள் இப்பணிக்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்வுக்கான அனுமதி அட்டை வரும் மே மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 முதல் 32 வயது வரை குறிப்பிட்ட பணிக்கான வயது வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SSC JE NOTIFICATION


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

IIT Madras- ல் Project Associate காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

April 20, 2024 0

 IIT Madras ஆனது Senior Manager / Assistant Vice President, Manager, Project Associate பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் BE / B.Tech / Master’s degree / MBA / B.Ed தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IIT Madras காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Manager / Assistant Vice President, Manager, Project Associate பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Project Associate கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate Degree / Diploma / BE / B.Tech / Master’s degree / MBA / B.Ed தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIT Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Associate ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக வழங்கப்படும்.

IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisted செய்யப்பட்டு Written Test / Skill Test / Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.05.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


ஏர் இந்தியா வேலை வாய்ப்பு; டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

April 20, 2024 0

 

சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் உள்ள ஏர் இந்தியா பொறியியல் சேவை நிறுவனத்தில் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கொள்ளலாம்.

Aircraft Technician (B1)

காலியிடங்களின் எண்ணிக்கை : 25

கல்வித் தகுதி: AME Diploma/Certificate in Aircraft Maintenance Engineering/ Diploma in Mechanical/ Aeronautical Engineering படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 27,940

Aircraft Technician (B2)

காலியிடங்களின் எண்ணிக்கை : 15

கல்வித் தகுதி: AME Diploma/Certificate in Aircraft Maintenance Engineering/ Diploma in Electrical/Electronics/ Telecommunication/ Radio/ Instrumentation Engineering படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 27,940

வயதுத் தகுதி:  01.04.2024 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு.

தேர்வு முறைஇந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 25.04.2024

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: DGM (Engg) Office, AIESL, New Integrated Service Complex, Meenambakkam, Chennai.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.aiesl.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

 


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவன வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

April 20, 2024 0

 தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NRCB) டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை திட்ட உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Junior Project Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளங்கலை வணிகவியல்/ கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம் படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

வயது தகுதி21 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகள் படி வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nrcb.icar.gov.in/  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் ஸ்கேன் செய்து கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரிnrcbrecruitment@gmail.com 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.05.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://nrcb.icar.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.

 🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news