Agri Info

Adding Green to your Life

April 21, 2024

இளநீரை விட வழுக்கைதான் நல்லதா..? கோடைக்கால சூட்டை தனிக்க சிறந்த வழி..!

April 21, 2024 0

 கோடைக்காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைப்பதில் இளநீரை தவிற சிறந்த பானம் இருக்க முடியாது. அதனால்தான் இதன் விலை அதிகமாக இருந்தாலும் கூட நன்மைகள் கருதி வாங்கி குடிக்கின்றனர். இளநீரின் நன்மைகளை அறிந்த பலருக்கும் அதன் வழுக்கையில் உள்ள நன்மைகள் தெரிவதில்லை. எனவேதான் பலரும் இளநீரை மட்டும் குடித்துவிட்டு தேங்காயை தவிர்த்துவிடுகின்றனர்.

ரேபரேலியின் ஆயுஷ் மருத்துவ அதிகாரி டாக்டர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா (BAMS ஆயுர்வேதா) கூறுகையில், இளநீர் மருத்துவ குணங்களின் களஞ்சியமாக கூறப்படுகிறது. இது புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் கருதப்படுகிறது. ஆனால், அதில் உள்ள வழுக்கை தேங்காய் இளநீரை விட நமக்கு நன்மை பயக்கும். வழுக்கையில் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், நார்ச்சத்து, (வைட்டமின் ஈ, சி) போன்ற பல்வேறு வகையான சத்துக்கள் காணப்படுகின்றன.

கோடைக்காலத்தில் வரும் பல உடல்நல தொந்தரவுகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று டாக்டர் கூறுகிறார் . கோடைக்காலத்தில் உங்கள் செரிமானம் சீராக இல்லை, நெஞ்சு எரிச்சல், வயிற்று மந்தமாக உணர்கிறீர்கள் எனில் தேங்காய் வழுக்கை இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் பலன் தருகிறது. வழுக்கை குறைந்த கலோரி என்பதால் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

ஆயுஷ் மருத்துவ அதிகாரி டாக்டர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா, இளநீரை குடித்த பிறகு, அதை இரண்டாக பிளந்து வெட்டி, கரண்டியால் அதன் வழுக்கையை வழித்து சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்.


இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் ஏராளமாக காணப்படுவதால், பல தீவிர நோய்களில் இருந்து நம்மை காக்கும் திறன் வாய்ந்தது. தினமும் தேங்காய் வழுக்கையை உட்கொள்வதால், நம் உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்கிறது. இது உங்களை பலவீனமான உடலுக்கு உற்சாகமூட்டுகிறது. குறிப்பாக கர்ப்பிணிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.


🔻 🔻 🔻 

மலச்சிக்கலால் அவதியா..? இந்த 6 உணவுகளை சாப்பிட்டால் ஒரே வாரத்தில் பலன் கிடைச்சிடும்..!

April 21, 2024 0

 சாப்பிட்ட உணவு அவ்வப்போது ஜீரணமாகவில்லை என்றால் செரிமான பிரச்சனை இருக்கலாம் அல்லது சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். மலச்சிக்கல் பிரச்சனை எனில் வயிறு எப்போதும் உப்பிய நிலையில் இருக்கும். காரணம் மலச்சிக்கல் அவதியால் பெருங்குடலில் பல நாட்கள் கழிவுப் பொருட்கள் குவிந்திருக்கும். இது மற்ற உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதனால்தான் பெருங்குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும். அதற்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வாரத்தில் மலச்சிக்கலை எவ்வாறு சரிசெய்வது மற்றும் என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ப்ரோக்கோலி: ப்ரோக்கோலியில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இது காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் குடும்பத்தை சேர்ந்தது. இதில் நார்ச்சத்து, நீர்ச்சத்து, சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பி6 போன்றவை உள்ளன. சாலட், காய்கறிகள், சூப் போன்றவற்றில் இதைப் பயன்படுத்தலாம். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகலாம்.

பச்சை இலைக் கீரைகள்: பச்சைக் கீரைகள், கோஸ், போன்றவற்றை உட்கொள்வதால், பெருங்குடலை நன்கு சுத்தம் செய்யலாம். எனவே மதிய உணவு மற்றும் இரவு உணவில் முடிந்தவரை கீரைகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது தவிர, இவற்றை உட்கொள்வதால் உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை நீக்குவது போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

அதிக நார்ச்சத்து உணவு: உணவில் நார்ச்சத்து சேர்த்துக் கொள்வது, பெருங்குடலை சுத்தம் செய்ய உதவுகிறது. நார்ச்சத்து என்பது உணவில் இருக்க வேண்டிய முக்கியமான மக்ரோநியூட்ரியண்ட் ஆகும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், பருப்பு வகைகள் போன்ற தாவர உணவுகளில் இது ஏராளமாக உள்ளது. இவற்றை உட்கொள்வதால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகலாம். பெருங்குடல்களும் சுத்தப்படுத்தப்படுகின்றன. செரிமான ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.


பழச்சாறுகள், ஸ்மூத்திகள் குடிக்கவும்:
பழச்சாறுகள் பெருங்குடல் சுத்திகரிப்புக்கு ஒரு சிறந்த ஆதாரமாகும். பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து சாறுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், குறைந்த அளவுகளில் மட்டுமே அவற்றை உட்கொள்வது நன்மை பயக்கும். இதில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை செரிமானத்திற்கு நல்லது. மேலும், இது உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. பழங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவும். மலச்சிக்கல் பிரச்சனை குறையும்.


புரோபயாடிக்குகள்: நீங்கள் மலச்சிக்கலால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், உங்கள் உணவில் புரோபயாடிக்குகளை சேர்க்கவும். கொலோனை சுத்தம் செய்ய இது ஒரு சிறந்த, எளிதான வழி. இது பல வழிகளில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. புரோபயாடிக் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதன் மூலம் அதிக புரோபயாடிக்குகளைப் பெறலாம். அல்லது தயிர், கிம்ச்சி, ஊறுகாய் மற்றும் பிற புளித்த உணவுகள் என புரோபயாடிக் நிறைந்த உணவுகளை நிறைய சாப்பிடுங்கள். புரோபயாடிக்குகள் நார்ச்சத்து உதவியுடன் நல்ல பாக்டீரியாவை குடலுக்கு வழங்குகின்றன.

ஓட்ஸ்: ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உங்கள் வயிறு சுத்தமாக இருக்கும். இந்த அனைத்து உணவுகளையும் உட்கொள்வதன் மூலம், நார்ச்சத்து மட்டுமின்றி, செரிமான அமைப்பை மேம்படுத்தும் கால்சியம், வைட்டமின் டி போன்றவையும் கிடைக்கும். இது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உங்களை காக்கும். உங்கள் பெருங்குடலை சுத்தம் செய்ய, முதலில் இந்த உணவுகளை சிறிய அளவில் சாப்பிடுங்கள். பின்னர் அளவை அதிகரிக்கவும்.

🔻 🔻 🔻 




கோடை வெயிலால் வரும் பாதிப்புகள்.. இந்த அறிகுறிகளை கவனிக்க மறக்காதீங்க..!

April 21, 2024 0

 அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக உடலின் வெப்பநிலை சீரமைப்பு அமைப்பில் குழப்பம் ஏற்படும் பொழுது அது வெப்பம் சம்பந்தப்பட்ட உடல்நல கோளாறுகளை உருவாக்குகின்றது. அது லேசான வலி முதல் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஹீட் ஸ்ட்ரோக் போன்றவற்றை ஏற்படுத்தலாம். போதுமான அளவு நீர்ச்சத்து அல்லது ஓய்வு இல்லாமல் அளவுக்கு அதிகமான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்திற்கு ஒருவர் நீண்ட நேரத்திற்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பொழுது இதுபோன்ற உடல் நல கோளாறுகள் ஏற்படுகின்றன.

வெப்பம் சம்பந்தப்பட்ட உடல்நலக் கோளாறுகளின் வகைகள் :

வெப்ப சுருக்குகள் (Heat cramp) : 

அதிகப்படியான வியர்வை காரணமாக நீர்ச்சத்து இழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை உருவாகி வெப்ப சுருக்குகள் ஏற்படுகிறது. தாங்க முடியாத தசை வலி குறிப்பாக அடி வயிறு, தோள்பட்டை, கால்கள் போன்ற பகுதிகளில் வலி மற்றும் இதனுடன் சேர்ந்து வியர்வை ஆகியவை வெப்ப சருக்குகளுக்கான ஒரு சில அறிகுறிகள்.

News18

வெப்ப களைப்பு (Heat Exhaustion) :

போதுமான அளவு திரவங்களை உட்கொள்ளாமல் அதிகப்படியான வெப்ப நிலைக்கு நீண்ட நேரத்திற்கு ஒருவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டால் டீ-ஹைட்ரேஷன் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை உண்டாகிறது. அதிக வியர்வை, வலுவிழந்து காணப்படுதல், மயக்கம், தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி, வேகமான இதயத்துடிப்பு போன்றவை இதற்கான அறிகுறிகள்.


வெப்ப மயக்கம் (Heat Syncope) : 

நீர்ச்சத்து இழப்பின் விளைவாக மூளைக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் தற்காலிகமாக ஒருவர் நினைவிழந்து மயக்கம் அடைகிறார். நீண்ட நேரத்திற்கு நின்றாலோ அல்லது உடலின் நிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டாலோ இது ஏற்படுகிறது.

வெப்பத்தாக்கு (Heat Stroke) : 

உடலின் வெப்பநிலை சீரமைப்பு பொறிமுறை செயலிழந்து காணப்படும் பொழுது வெப்பத்தாக்கு உருவாகிறது. ஆபத்தளிக்க கூடிய வகையில் உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது இது ஏற்படுகிறது. இதன்போது அதிக உடல் வெப்பநிலை, சூடான மற்றும் வறண்ட தோல், விரைவான சுவாசம், விரைவான இதயத்துடிப்பு, குழப்பம், வலிப்பு, நினைவிழந்து போதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

வெப்பம் சம்பந்தப்பட்ட உடல்நல கோளாறுகளை அடையாளம் காண்பது எப்படி?

  • வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியாக வியர்த்தல், வெளிறிய சருமம், விரைவான இதயத்துடிப்பு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற உடலின் ஒரு சில அறிகுறிகளில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

  • குழப்பம், எரிச்சல் அல்லது வழக்கத்திற்கு மாறான சோர்வு போன்ற மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதை கவனியுங்கள்.

  • ஒருவரின் உடல் வெப்பநிலையை அளவிட தெர்மாமீட்டர் பயன்படுத்தவும். 40℃ வெப்பத்தாக்கு அல்லது வெப்ப களைப்பை உணர்த்துகிறது. வெப்பத்தாக்கு ஏற்படும் பொழுது தசை வலி, வலுவிழந்து காணப்படுதல், மயக்கம், குமட்டல், வாந்தி அல்லது மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

  • அடர்ந்த நிற சிறுநீர், சிறுநீர் கழிக்கும் அளவு குறைதல், வறண்ட வாய் மற்றும் தாகம் போன்றவை நீர்ச்சத்து இழப்பிற்கான ஒரு சில அறிகுறிகள்.

  • தசை சோர்வு அல்லது சீரற்ற இதயத்துடிப்பு போன்றவை எலக்ட்ரோலைட் சமநிலையின்மையின் அறிகுறிகள்.

வெப்பம் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கான ஒரு சில தீர்வுகள் : 

வெப்பநிலையை கட்டுப்படுத்துவதற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்றாலும் கூட நமது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நாம் ஒரு சில விஷயங்களை பின்பற்றலாம்.

  • நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் மற்றும் திரவங்களை பருகுதல். தாகம் ஏற்படவில்லை என்றாலும் கூட குறிப்பிட்ட இடைவெளிக்கு சரியாக தண்ணீர் பருகுங்கள்.

  • மதுபானங்கள், காபி, டீ போன்றவை நீர்ச்சத்து இழப்பை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை தவிர்க்கவும்.

  • முடிந்த வரை நிழலில் இருக்கவும்.

  • வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது சன் ஸ்கிரீன் பயன்படுத்தவும், தொப்பி அணிந்து கொள்ளவும்.

  • சூரியனின் வெப்பம் உச்சத்தில் இருக்கும் பொழுது வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

  • தளர்வான, குறைவான எடை கொண்ட வெளிர் நிற ஆடைகளை அணியவும்.

  • அதிகப்படியான வெப்பத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருவர் மேற்கொள்வது அவசியம்.

  • 🔻 🔻 🔻 


🔻 🔻 🔻 

தினமும் இரவில் குளித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

April 21, 2024 0

 நமது உடலின் அனைத்து பாகங்களையும் தூய்மையை வைத்திருக்க தினமும் குளிப்பது மிகவும் அவசியம். அதேபோல் சரியான நேரத்தில் குளிப்பது உடல் பாகங்களை மட்டுமில்லாது உடல் சூட்டையும் சரி செய்ய உதவும்

அவசரமான இந்த கால கட்டத்தில் தினமும் தலைக்கு குளிப்பதால் சரியாக துவட்டமுடியாமல் தலைக்கு சரியாக எண்ணெய் வைக்க முடியாமல் தலைவலி, சைனஸ் போன்ற பிரச்னைகள் நமக்கும் ஏற்படும்.

இந்நிலையில், இரவில் குளித்தால் பல நன்மைகள் ஏற்படும். அப்படி இரவில் குளிப்பது சுகாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல உளவியல் ரீதியான மாற்றங்களையும் ஏற்படுத்தும்.


சரும ஆரோக்கியம் :  தினமும் இரவில் குளிப்பதன் மூலம் சருமத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும். கோடைக்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்கி சருமம் பொலிவடையும்.

நல்ல தூக்கம் : தூக்கமின்மை மற்றும் உடல் சோர்வால் அவதிப்படுபவர்கள் தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ரத்த ஓட்டம் சீராகும் : தூங்க செல்வதற்கு முன் குளித்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். மேலும் மனதை புத்துணர்ச்சியடைய செய்யும்.

தூங்கும் முன் தலையை சுத்தம் செய்யாமல் தூங்கினால் தலையில் உள்ள சில பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் தலையணையில் பரவி அங்கேயே தங்கிவிடும். இதை தவிர்க்க படுக்கைக்கு செல்வதற்கு முன் தலையை சுத்தம் செய்வது அல்லது குளிப்பது நல்லது.

நம் உடலும், தசைகளும் சோர்வாக இருக்கும் இரவில் அவற்றை ரிலாக்ஸ் செய்யும் விதமாக வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது நல்ல பலனை தரும்.

அதே சமயம் கோடை காலம் என்றால் சுடு தண்ணீரில் குளிக்க முடியாது. இந்த மாதிரி சமயங்களில் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது நல்ல அனுபவத்தை தரும்.

பொதுவாக உறங்க செல்வதற்கு 1 அல்லது 2 மணி நேரத்திற்கு முன் குளிப்பது நமது உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவும்.


🔻 🔻 🔻 

பாத வெடிப்பினால் தர்மசங்கடமாக இருக்கிறதா..? ஒரே வாரத்தில் மென்மையான கால்களை பெற உதவும் கற்பூரம்!

April 21, 2024 0

 இன்று பல பெண்கள் தங்களுடைய முகத்திற்கு கொடுக்கக்கூடிய அதே முக்கியத்துவத்தை தங்களுடைய கால்களுக்கும் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். பெடிக்யூர், மெனிக்யூர் போன்ற கால்களின் அழகை மேம்படுத்தக்கூடிய விஷயங்களில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பலர் சந்திக்க கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாக குதிகால் வெடிப்பு அமைகிறது.

கால்களை சுற்றி இருக்கும் தோலில் விரிசல்கள் ஏற்பட்டு வறண்டு காணப்படுவது பாத வெடிப்பு எனப்படுகிறது. இது நமக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அசௌகரியம், வலி அல்லது மோசமான சூழ்நிலைகளில் இரத்த கசிவை கூட ஏற்படுத்தலாம். ஆகவே பாத வலிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதிலிருந்து விடுபடுவதற்கு உதவும் குறிப்புகளையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

பாத வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? 

பாத வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் உலர்ந்த தோல் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கால்களில் உள்ள தோல் வறண்டதாக மாறி அதன் நெகிழ்வு தன்மையை இழக்கும் பொழுது பாத வெடிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக குளித்த பிறகு உங்களுடைய கால்களுக்கு நீங்கள் போதுமான மாய்சரைசேஷன் வழங்காததால் பாத வெடிப்பு உண்டாகிறது.

News18

வயது : நமக்கு வயதாக வயதாக நமது சருமத்தில் உள்ள ஈரப்பதம் மற்றும் அதன் நெகிழ்வுத் தன்மை இழக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய கால்களை ஃபுட் கிரீம் பயன்படுத்தி மாய்சரைஸ் செய்வது அவசியம். இல்லை எனில் உங்களுக்கு பாத வெடிப்புகள் ஏற்படலாம்.


நீண்ட நேரம் நிற்பது : ஆசிரியப் பணி அல்லது துணி கடைகளில் வேலை பார்ப்பவர்கள் நீண்ட நேரத்திற்கு நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இது கால்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி அதனால் பாத வெடிப்பை ஏற்படுத்துகிறது. நீண்ட தூரம் நடப்பதனாலும் கால்களில் அழுத்தம் உண்டாகி பாத வெடிப்பு ஏற்படலாம்.

சரியான காலணிகள் அணியாமல் இருப்பது குதிகால் மட்டுமல்லாமல் உங்கள் கால்களுக்கு பொருத்தமில்லாத ஷூக்கள் அல்லது செருப்புகளை அணியும் பொழுது அது உங்களின் கால்களில் அதிக அளவு அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் குதிகால்கள் அழுந்தி அவற்றில் விரிசல்கள் ஏற்படுகிறது. டயாபடீஸ், தைராய்டு பிரச்சனைகள் மற்றும் சொரியாசிஸ், எக்ஸிமா போன்ற சரும நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களும் பாத வெடிப்புகளால் அவதிப்படுகின்றனர்.

கற்பூரம் பாத வெடிப்புக்கு எப்படி தீர்வாக அமைகிறது?

பாத வெடிப்புகளுக்கு பல்வேறு விதமான பெடிக்யூர் ஆப்ஷன்கள் உள்ளன. அந்த வகையில் இயற்கை பொருளான கற்பூரம் பயன்படுத்தி உங்களுடைய பாத வெடிப்புகளில் இருந்து நீங்கள் நிவாரணம் பெறலாம். கற்பூரம் பல்வேறு விதமான மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது. இதன் காரணமாக அது நமது தோலை ஆற்றி பல்வேறு விதமான சரும நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

பாத வெடிப்பிற்கு கற்பூரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

கற்பூரம் அத்தியாவசிய எண்ணெயை நீங்கள் வேறொரு கேரியர் எண்ணெயோடு சேர்த்து பயன்படுத்தாவிட்டால் அது தோலில் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே ஒரு சில துளிகள் கற்பூரம் அத்தியாவசிய எண்ணெயோடு தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெயை கலக்கவும். சரியாக சொன்னால் ஒரு அவுன்ஸ் கேரியர் எண்ணெய்க்கு 5 முதல் 10 துளிகள் கற்பூரம் அத்தியாவசிய எண்ணெய் போதுமானதாக இருக்கும்.

  • இந்த எண்ணெய் கலவையை உங்களுடைய கால்களில் பயன்படுத்துவதற்கு முன்பு கால்களை வெதுவெதுப்பான சோப்பு நிறைந்த தண்ணீரில் 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைத்து தோலை மென்மையாக்கவும். இவ்வாறு நீங்கள் செய்யும் பொழுது எண்ணெய் தோலில் எளிதாக உறிஞ்சப்படும்.

  • கால்களை ஊற வைத்த பிறகு ஒரு சுத்தமான துண்டு பயன்படுத்தி ஒத்தி எடுத்து உலர வைக்கவும்.

  • எண்ணெய் பயன்படுத்துவதற்கு முன்பு கால்களில் ஈரப்பதம் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லை எனில் அதனால் பூஞ்சை தொற்றுகள் ஏற்படலாம்.

  • இப்பொழுது கேரியர் எண்ணெயோடு கலந்த கற்பூர அத்தியாவசிய எண்ணெய் கலவையை கால்களில் தடவி பொறுமையாக மசாஜ் செய்யுங்கள்.

  • எண்ணெய் தடவிய பிறகு சுத்தமான காட்டன் சாக்ஸ் அணிந்து கொள்வது அங்குள்ள ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கும், எண்ணெய் சருமத்தில் ஊடுருவுவதற்கும் உதவும்.

  • இதனை நீங்கள் தூங்குவதற்கு முன்பு செய்யலாம். சிறந்த முடிவுகளுக்கு தினமும் தூங்குவதற்கு முன்பு இவ்வாறு செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். கற்பூரம் அத்தியாவசிய எண்ணெய் பொதுவாக பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது. ஆனால் ஒருவேளை அதனை பயன்படுத்திய பிறகு உங்களுக்கு ஏதேனும் எரிச்சல், அலர்ஜி போன்றவை ஏற்படுமாயின் அதனை பயன்படுத்துவதை தவிர்க்கவும். மேலும் இதனை நீங்கள் அதிகப்படியாக பயன்படுத்தினால் சரும எரிச்சல், குமட்டல், வாந்தி மற்றும் தலைவலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.


🔻 🔻 🔻 

தர்பூசணி கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த சிறந்த பழம் என்பது உங்களுக்கு தெரியுமா..?

April 21, 2024 0

 ரத்தத்தில் அதிகளவு கொழுப்பு சேர்வது பெரும் பிரச்னையாக மாறி இருக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. சரியான உணவு பழக்கவழக்கங்கள் இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. கோடை காலத்தில் இந்த குறைபாட்டை போக்கும் திறன் கொண்டதாக தர்பூசணி பழங்கள் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறிய அளவு தர்பூசணி பழத்தில் பல நன்மைகள் மறைந்திருப்பதாக மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர். உடலில் நீர்ச்சத்து அதிகமாகத் தேவைப்படும் இந்த வெயில் காலத்தில், மக்கள் பலரும் தர்பூசணி பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

ஆனால், பலரும் இதை நீர்ச்சத்துக்காக மட்டுமே எடுத்துக் கொள்வதாக நினைக்கின்றனர். உண்மையில் இதன் மகத்துவத்தை இப்படி ஒரு வரியில் சுருக்கிவிட முடியாது. இது உடம்பின் ரத்தத்தில் உள்ள அதிகக் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? எனவே, ரத்தத்தில் உள்ள அதிகபடியான கொழுப்பின் அளவை தர்பூசணி பழத்தால் கட்டுப்படுத்த முடியுமா என்பதை விரிவாகக் காணலாம்.


தர்பூசணிப் பழங்கள் உடலில் எல்டிஎல் எனப்படும் அடர்த்தி குறைந்த கொழுப்பின் அளவை இயற்கையாகவே நிர்வகிக்கிறது எனப் பல ஆய்வுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆய்வுகளின்படி, தர்பூசணிகளில் லைகோபீன் என்ற கலவை உள்ளது. இது கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தாக விளங்குகிறது. இதில் சிட்ரூலின் அமினோ அமிலமும் உள்ளது. இது இரத்த நாளங்களை விரிவுபடுத்தி இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது. இப்போது தர்பூசணியின் 5 நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்


நீர்சத்து: அதிகளவு நீர்சத்துக் கொண்ட பழமாக தர்பூசணி இருக்கிறது. இதில் தோராயமாக 92% விழுக்காடு அளவு நீர் உள்ளது. நம் உடலில் உள்ள நீர்சத்தின் அளவை குன்றாமல் தர்பூசணிப் பார்த்துக்கொள்ளும். குறிப்பாக வெப்பமான கோடை காலத்தில் உடலில் உள்ள நீர்சத்து என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாக அமைகிறது. ஏனெனில் இது பல்வேறு உடல் செயல்பாடுகளை ஆதரிக்கிறது. மேலும், சீரான உடல் வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது.


சத்துக்கள் நிறைந்தது: தர்பூசணி சத்து நிறைந்த பழம் என்பதில் மாற்றுகருத்துகள் இருக்க முடியாது. இது வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாக விளங்குகிறது. இவை உடலின் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், சரியான எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கவும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் செய்கிறது .


ஆண்டி-ஆக்ஸிடண்டு பண்புகள்: தர்பூசணியில் லைகோபீன் மற்றும் வைட்டமின் சி போன்ற பல ஆக்ஸிடண்டுகள் உள்ளன. லைகோபீன் ஒரு சக்திவாய்ந்த ஆண்டி ஆக்ஸிடண்டு காரணி ஆகும். லைகோபீன் இதய ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதுமட்டும் இல்லாமல் சில வகை புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல்கள் சேதத்திலிருந்தும் இது நம்மைப் பாதுகாக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


புத்துணர்ச்சியூட்டுகிறது: தர்பூசணியில் அதிக நீர் உள்ளடக்கம் இருப்பதால் தாகத்தைத் தணித்து நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது. கோடை கால பானங்களின் தேவையை தர்பூசணி வெகுவாக நிவர்த்தி செய்கிறது.


ஒவ்வாமை எதிர்ப்புப் பண்புகள்: சில ஆய்வுகள் தர்பூசணியில் லைகோபீன் மற்றும் குக்குர்பிடசின் E போன்ற கலவைகள் இருப்பதால் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றன. இதை அவ்வப்போது உண்டு வந்தால், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது.



🔻 🔻 🔻 

இஞ்சியையும் மஞ்சளையும் ஒன்றாக சாப்பிடக் கூடாதா?

April 21, 2024 0

 இஞ்சி மற்றும் மஞ்சளில் பல மருத்துவ நன்மைகள் இருந்தாலும் இவற்றில் பக்கவிளைவுகள் இல்லை என்று சொல்ல முடியாது. இந்த மசாலா பொருட்களை அளவுக்கதிகமாக சாப்பிடும் போது வயிற்றுக் கோளாறுகள், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.

மஞ்சள் மற்றும் இஞ்சி: இவற்றை ஒன்றாக சாப்பிடக் கூடாதா? பல ஆண்டு காலமாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் இஞ்சியும் மஞ்சளும் வீட்டு வைத்தியத்தில் மிகவும் பிரபலமான மருந்து மட்டுமின்றி ஒவ்வொரு இந்திய சமையலறையும் நீக்கமற இடம் பிடித்திருக்கும் பொருளாகும். ஆனால் இவை இரண்டையும் ஒன்றாக இணைத்து சாப்பிட்டால் என்ன ஆகும்? இதனால் ஏற்படும் விளைவுகள் அதிகரிக்குமா அல்லது குறையுமா? வாருங்கள் இதற்குப் பின்னால் உள்ள அறிவியலை தெரிந்துகொள்வோம்.

மஞ்சளின் நன்மைகள் : பளிச்சென்ற நிறத்தைக் கொண்ட மஞ்சள் தனித்துவமான சுவையை கொண்டது. அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த சர்குமின் மஞ்சளில் அதிகமாக உள்ளது. கீல்வாதத்திற்கு நிவாரணம் தருவது முதல் வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் அறிகுறிகளை போக்குவது வரை நம்முடைய பல சுகாதார பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது மஞ்சள். சளி, இருமல், குடல் அழற்சி நோய் போன்றவற்றை குணப்படுத்தவும் மஞ்சள் முக்கிய பங்காற்றுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இஞ்சியின் பயன்கள் : சுவைக்கும் நறுமணத்திற்கும் பெயர் பெற்ற இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பேருகால சமயத்தில் வரும் குமட்டலை குறைப்பது முதல் மாதவிடாய் கால வலியை போக்குவது வரை என இந்த மசாலா பொருளில் ஜிஞ்செரோல் மற்றும் பாராடோல் போன்ற பல ஆக்டிவ் கலவைகள் உள்ளது.


இஞ்சியையும் மஞ்சளையும் ஒன்றாக சாப்பிட்டால் ஆபத்தா? அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் நிறைந்த இஞ்சியும் மஞ்சளும் சர்வலோக நிவாரணி என்றே நாம் நினைப்போம். இவற்றை தனித்தனியாக சாப்பிடுவதை விட ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது வீக்கத்தை சிறப்பாக கட்டுப்படுத்துவதாக ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும் நாம் இதை சற்று எச்சரிக்கையோடே அணுக வேண்டும். ஏனென்றால் இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து நம்மிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை. பெரியவர்களுக்கு இஞ்சியும் மஞ்சளும் சாப்பிடுவதால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றபோதும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். சில மருந்துகளோடு இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இரைப்பை குடல் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.


பக்க விளைவுகள் : இஞ்சி மற்றும் மஞ்சளில் பல மருத்துவ நன்மைகள் இருந்தாலும் இவற்றில் பக்கவிளைவுகள் இல்லை என்று சொல்ல முடியாது. இந்த மசாலா பொருட்களை அளவுக்கதிகமாக சாப்பிடும் போது வயிற்றுக் கோளாறுகள், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் வரக்கூடும். ரத்தம் உறைதல், டயாபடீஸ், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருந்து மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் இஞ்சி, மஞ்சள் கலந்த மருந்துகளை சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும்.


🔻 🔻 🔻 

குழந்தைகள் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் இத்தனை ஆபத்துகளா..? பெற்றோர்களே உஷார்..!

April 21, 2024 0


 இன்றுள்ள குழந்தைகள் பலரும் ஜங்க் ஃபுட்களை மிகவும் விரும்பி உண்கிறார்கள். ஜங்க் ஃபுட்களை சாப்பிடுவது குழந்தைகளின் உடல்நலத்தில் மிகப்பெரிய தீங்கை விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். கொழுப்பு கல்லீரல் நோய் முதல் வளர்சிதை கோளாறுகள் வரை என இதன் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான டயட்டை ஏன் கொடுக்க வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள் இதோ…

1. கொழுப்பு கல்லீரல் நோய் : ஜங்க் ஃபுட்களில் அளவுக்கதிகமாக சர்க்கரையும் கொழுப்பும் உள்ளது. குடிப்பழக்கம் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) அதிகரிப்பதற்கு இது முக்கிய காரணமாக திகழ்கிறது. ஜங்க் ஃபுட்களில் இருப்பது வெறும் சக்கையான கலோரிகளே. இது கல்லீரலின் மெடபாலிக் நடைமுறையை பாதித்து கொழுப்பு சேர்வதற்கும் வீக்கம் அடைவதற்கும் காரணமாக அமைகிறது. அளவுக்கதிகமாக ஜங்க் ஃபுட்களை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகளை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

2. மெடபாலிக் கோளாறு : அதிக பதப்படுத்தப்பட்ட ஜங்க் ஃபுட்கள் குழந்தைகளின் மெடபாலிக் ஆரோக்கியத்தில் பெரும் அழிவை உண்டாக்குகிறது. இதன் காரணமாக இன்சுலின் எதிர்ப்புதன்மை, உடல் பருமன், டைப்-2 டயாபடீஸ் போன்ற பிரச்சனைகள் இளம் வயதிலேயே வரத் தொடங்குகின்றன. முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், லீன் புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைடரேட்ஸ் போன்ற உணவுகளை குழந்தைகளின் டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆபத்தைக் குறைக்கலாம்.

3. ஊட்டச்சத்து குறைபாடு : நாம் விரும்பி உண்ணும் ஜங்க் ஃபுட்களில் எந்தவித ஊட்டச்சத்தும் இல்லை. இதனால் வளர்ச்சியடையும் பருவத்தில் உள்ள குழந்தைகளின் உடலுக்கு தேவைப்படும் வைட்டமின், தாதுக்கள் மற்றும் மைக்ரோ ஊட்டச்சத்துகளில் குறைபாடு ஏற்படுகிறது. தங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க விரும்பும் பெற்றோர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

4. நடத்தைகள் மற்றும் அறிவாற்றலில் ஏற்படும் தாக்கம் : ஜங்க் ஃபுட் சாப்பிடுவதற்கும் குழந்தைகளின் மோசமான நடத்தைகள் மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளான கவனமின்மை, மனநிலை மாற்றம், படிப்பில் ஆர்வம் குறைவது ஆகியவற்றுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. உங்கள் குழந்தைகளின் கவனத்தையும் அறிவாற்றல் செயல்பாடுகளையும் ஊக்கப்படுத்த பதப்படுத்தப்படாத முழுமையான உணவுகளை கொடுங்கள்.


5. நீண்டகால விளைவுகள் : ஜங்க் ஃபுட் உணவுகளால் வரக்கூடிய பின்விளைவுகளை குழந்தைப் பருவத்தை தாண்டியும் அனுபவிப்பீர்கள். சிலர் தங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் இதய நோய்கள், புற்றுநோய், கல்லீரல் சிரோசிஸ் போன்ற எண்ணற்ற நாள்பட்ட நோய்களால் அவதிப்படுவார்கள். குழந்தைப் பருவத்திலேயே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வலியுறுத்துவதன் மூலம் பெற்றோர்களாகிய நீங்கள் நோய்களற்ற ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி உங்கள் குழந்தைகளை வழிநடத்திச் செல்ல முடியும்.

இன்றைய சமூகத்தில் ஊட்டச்சத்துகள் ஏதும் இல்லாத ஜங்க் ஃபுட்களே எங்கும் நிரம்பியுள்ள நிலையில், பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளின் டயட்டில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளுக்கு முன்னுரிமை கொடுத்தால் மட்டுமே எதிர்கால தலைமுறையினரின் ஆரோக்கியத்தை பாதுகாத்திட முடியும்.


🔻 🔻 🔻 

பேக்கரி பொருட்கள் தயாரிக்க எம்எஸ்எம்இ மையத்தில் பயிற்சி

April 21, 2024 0

 சென்னை: மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், பேக்கரி பொருட்கள் தயார் செய்யும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், பேக்கரி பொருட்கள் தயார் செய்யும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏப். 22 தொடங்கி 26-ம் தேதி வரை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை இப்பயிற்சிநடைபெறும்.

இப்பயிற்சியில் பழ பிரெட், கோதுமை பிரெட், பூண்டு பிரெட், எள்ளு பிஸ்கெட், மசாலா பிஸ்கெட், கோதுமை பன், பழ பன், பூண்டு ரஸ்க், கோதுமை ரஸ்க், சிக்கன் பஃப்ஸ், எக் பஃப்ஸ், கிரீம் கேக்குகள், வெஜ்மற்றும் சிக்கன் பீட்சா உள்ளிட்டவை தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சிக் கட்டணம் ரூ.4,720. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 86676 36706, 97863 17778 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஐஐஎஸ் நிறுவனங்களில் புதிய திறன் பயிற்சிகள் - பட்டதாரி மாணவர்களுக்கு ஏஐசிடிஇ அழைப்பு

April 21, 2024 0

 சென்னை: ஏஐசிடிஇ திட்ட ஆலோசகர் மம்தா ஆர்.அகர்வால், அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் ஒரு முயற்சியாக மும்பை மற்றும் ஹைதரா பாத் நகரங்களில் இந்திய திறன் நிறுவனங்களை ( ஐஐஎஸ் ) அமைத்துள்ளது. பொது, தனியார் கூட்டாண்மை முறையின் கீழ் டாடா கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளையுடன் இணைந்து அமைக்கப் பட்டுள்ள இந்நிறுவனங்களில் முதல் கட்டமாக வரும் மே மாதம் முதல் புதிய திறன் படிப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, மேம்பட்ட தொழில் துறை ஆட்டோமேஷன் மற்றும் ரோபாட்டிக்ஸ் ( 12 வாரம் ), தொழில் துறை ஆட்டோமேஷனுக்கான அடிப்படைகள் ( 12 வாரம் ), மேம்பட்ட ஆர்க் வெல்டிங் நுட்பங்கள் ( 10 வாரம் ), சேர்க்கை உற்பத்தி ( 10 வாரம் ), மின்சார வாகன பேட்டரி நிபுணர் ( 12 வாரம் ), இருசக்கர மின்சார வாகன தொழில் நுட்ப வல்லுநர் ( 12 வாரம் ) ஆகிய படிப்புகளுக்கு பட்டதாரி மாணவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

கூடுதல் விவரங்கள் மற்றும் கட்டணங்கள் குறித்து 9587097821, 7597953987 என்ற செல்போன் எண்களையும், www.iisahmedabad.org என்ற இணைய தளத்தையும் தொடர்பு கொள்ளலாம்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

April 20, 2024

திருக்குறள் மற்றும் அதற்கான அணிகள்: 6 முதல் 12 ம் வகுப்பு வரை

April 20, 2024 0

 திருக்குறள் மற்றும் அதற்கான அணிகள்: 6 முதல் 12 ம் வகுப்பு வரை

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 

Click here to download pdf file


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

LCM, HCF Important Question and Answers PDF

April 20, 2024 0


LCM, HCF Important Question and Answers PDF
 அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC Group 4 – முழு மாதிரி தேர்வு [500 வினாக்கள்] – TAF IAS ACADEMY

April 20, 2024 0

 TNPSC Group 4 – முழு மாதிரி தேர்வு [500 வினாக்கள்] – TAF IAS ACADEMY

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC Maths Formulas – Appolo Study Centre

April 20, 2024 0

 அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC Group II, IIA & IV GS Notes PDF – Race Academy Notes

April 20, 2024 0

 TNPSC Group II, IIA & IV GS Notes PDF – Race Academy Notes

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news