🔻🔻🔻
April 24, 2024
ஆயக்குடி மரத்தடி பயிற்சி மையத்தில் நடைபெற்ற போட்டித் தேர்வுகளின் PDF Collections
சென்னை ஐகோர்ட் வேலை வாய்ப்பு; 74 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!
சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் புதுச்சேரி நீதிமன்றத்தில் காலியாக உள்ள தட்டச்சர், ஓட்டுனர், இளநிலை எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 74 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Senior Grade Stenographer
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 35,400
Junior Grade Stenographer
காலியிடங்களின் எண்ணிக்கை : 9
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 25,500
Translator/Interpreter
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : தெலுங்கு அல்லது மலையாளம் பாடத்துடன்
இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 25,500
Junior Clerk
காலியிடங்களின் எண்ணிக்கை : 23
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
மற்றும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,900
Typist
காலியிடங்களின் எண்ணிக்கை : 13
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
மற்றும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,900
Driver
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,900
MTS
காலியிடங்களின் எண்ணிக்கை : 20
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
வயதுத் தகுதி : 01.01.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள்
இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில்
தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத்
தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப்
பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து,
பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட
முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: THE REGISTRAR GENERAL, HIGH COURT OF MADRAS,
CHENNAI – 600104.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.04.2024
விண்ணப்பக் கட்டணம்: டிரைவர், பன்முக உதவியாளர்
பணியிடங்களுக்கு ரூ 500, பிற பணியிடங்களுக்கு ரூ. 750;
எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்
கட்டணம் இல்லை.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
🔻🔻🔻
April 23, 2024
ஈரோட்டில் கனராவங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி
ஈரோடு கனராவங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக இலவசமாக A/c , Fridge , Washing Machine மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் பழுது நீக்குதல் பயிற்சி வழங்கபடவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் ஆண் / பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
வருகின்ற 29-04-2024 முதல் 03-06-2024 வரை 30 நாட்கள் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு பயிற்சி சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் அல்லது நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்புகளுக்கு முன்பதிவு அவசியம்.
முன்பதிவு செய்வதற்கான எண்கள் : 8778323213, 7200650604 0424-2400338
இலவச பயிற்சி முகாம் நடைபெறும் இடம் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு, ஈரோடு- 638002 .
🔻🔻🔻
NIT Trichy: தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்கும் முறை...
திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் என்ஐடி எனும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் டிரெய்னிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி மற்றும் என்ஜினீயரிங் முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்: திருச்சி என்ஐடியில் தற்போது டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் டிரெய்னிஸ் ( DEO - Ministerial) பணிக்கு 5 பேர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் டிரெய்னிஸ் ( DEO - Technical) பணிக்கு 5 பேர் என மொத்தம் 10 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு 18 வயது முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் டிரெய்னிஸ் ( DEO - Ministerial) பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்து பை்பிங் மற்றும் கம்ப்யூட்டர் அறிவை பெற்றிருக்க வேண்டும். எம்எஸ் ஆபிசில் பணியாற்றும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் டிரெய்னிஸ் ( DEO - Technical) பணிக்கு பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டொக்னாலஜி என்ஜினீயரிங் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், எச்டிஎம்எஸ், சிஎஸ்எஸ், ஜேஎஸ், LAMP உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
சம்பளம்: இந்த 2 பணிகளுக்கான மாதசம்பளம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. அந்த அறிவிப்பில் Minimum Wages Act - Skilled அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தற்காலிக பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் முதலில் 6 மாதம் பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு அவர்களின் திறமை மற்றும் தேவையை பொறுத்து பணி நீட்டிப்பு என்பது வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் www.nitt.edu என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, திறனறி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
🔻🔻🔻
April 21, 2024
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (Tamilnad Mercantile
Bank) மேலாண் இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 05.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Managing Director and Chief
Executive Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 25 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 31.03.2024 அன்று 45 வயது முதல் 62 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி விதிமுறைப்படி ஊதியம் பெறுவார்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tmbnet.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி :
05.05.2024
மேலும் விவரங்களுக்கு https://www.tmbnet.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
🔻🔻🔻
Sais Academy – TNPSC GS Golden Test Package PDF Collection
அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
Weekly Test | Question PDF | Answer PDF |
---|---|---|
Week 1 | Download PDF | Download PDF |
Week 2 | Download PDF | Download PDF |
Week 3 | Download PDF | Download PDF |
Week 4 | Download PDF | Download PDF |
Week 5 | Download PDF | Download PDF |
🔻🔻🔻