Agri Info

Adding Green to your Life

May 2, 2024

சென்னையில் மத்திய அரசு நிறுவன வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

May 02, 2024 0

சென்னையில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இர்கான் (IRCON) நிறுவனத்தில் சிவில் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 07.05.2024Works Engineer/Civil 

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Civil Engineering படித்திருக்க வேண்டும்

வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ 36,000 

தேர்வு செய்யப்படும் முறைஇந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறைஇந்த பணியிடங்களுக்கு https://www.ircon.org/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 07.05.2024

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Ircon International Limited 2 nd Floor, Plot No 7(Adjacent to Qmax Systems), Rukmini Nagar, 4th Street, Poonamallie, Chennai - 600056

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.ircon.org/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

இஸ்ரோ வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024!!

May 02, 2024 0

 இஸ்ரோ சதிஷ் தவான் விண்வெளி ஏவுதள மையத்தில் இருந்து பணி அழைப்பு வெளியாகியுள்ளது. Authorized Medical Officer பதவிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க அனைத்து விவரங்களையும் கீழே உள்ள தொகுப்பில் அறிந்துக் கொள்ளலாம்.

ISRO பணியிடங்கள்:

Authorized Medical Officer பணிக்கு பல பணியிடங்கள்.

ISRO வயது வரம்பு: (15.05.2024 (தேதியின் படி)

அதிகபட்சம் 65 வயது மிகாதவராக இருத்தல்

ISRO பணிகள் – கல்வி தகுதி:

General Medicine பிரிவில் MD தேர்ச்சி

ISRO சம்பளம்:

குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.36,000/-  வரை

விண்ணப்பிக்கும் முறை:

15.05.2024 அன்றுக்குள் tvbhasker@shar.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

May 1, 2024

இந்தியாவில் உள்ள ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகள்

May 01, 2024 0

 கங்கா: கோமதி, காக்ரா, கந்தக், கோசி, யமுனா, மகன், ராமகங்கா 

யமுனா: சம்பல், சிந்து, பெட்வா, கென், டன், ஹிண்டன் 

கோதாவரி: இந்திராவதி, மஞ்சிரா, பிந்துசார, சர்பரி, பெங்கங்கா, பிராணஹிதா 

கிருஷ்ணாதுங்கபத்ரா, கட்டபிரபா, மலபிரபா, பீமா, வேதவதி, கொய்னா 

காவேரி: கபினி, ஹேமாவதி, சிம்ஷா, அர்காவதி, பவானி 

நர்மதா: அமராவதி, புக்கி, தவா, பாங்கர் 

சிந்து: சட்லஜ், டிராஸ், ஜான்ஸ்கர், ஷியோக், கில்கிட், சுரு 

பிரம்மபுத்ரா: திபாங், லோஹித், ஜியா போரோலி (காமெங்), டிச்சாவ், சுபுன்சிரி மனாஸ் 

தாமோதர்: பரக்கர், கோனார் 

ரவி: புதில், புதிய அல்லது வாஷ், சியுல், உஜ் 

மகாநந்தி: சிவ்நாத், ஹஸ்தேவ், லீச், மாண்ட், இப், ஓங்

சம்பல்: மூங்கில், காளி சிந்து, ஷிப்ரா, பர்பதி 


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

இந்திய வரலாற்றின் சில முக்கிய தேதிகள் மற்றும் தகவல்கள்

May 01, 2024 0

 

if you like these PDF kindly share these PDF to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

6 முதல் 10ம் வகுப்பு தமிழ் இலக்கணம் எளிய விளக்கத்துடன்

May 01, 2024 0

 if you like these PDF kindly share these PDF to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை மாவட்ட நீதித்துறையில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்

May 01, 2024 0

 தமிழ்நாட்டில் உள்ள சென்னை மாவட்ட நீதித்துறையில் காலியாக , உள்ள நகல்பிரிவு உதவியாளர் (Xerox Operator), அலுவலக உதவியாளர் (Office Assistant), நகல் பரிசோதகர்(Examiner) உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 27ம் தேதிக்குள் (27/05/2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள்:

பதவியின் பெயர்

காலிப்பணியிடங்கள்

தேர்வு அறிவிப்பு

ஓட்டுநர்

10

ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்

நகல்பிரிவு உதவியாளர், அலுவலக உதவியாளர்

115

ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்

(1) தூய்மை பணியாளர் (Cleanliness Worker)(2) தோட்டப் பணியாளர் (Gardener)(3) காவலர் (Watchman)(4) காவலர் மற்றும் மசால்ஜி (Watchman-cum-Masalchi)

(5) துப்புரவு பணியாளர் மற்றும் மசால்ஜி  (Sweeper-cum-Masalchi)(6)வாட்டர்மென்   (Waterman)(7)வாட்டரவுமன்  (Water Woman)(8) மசால்ஜி (Masalchi) | 52 | ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ் | | (i)நகல் பரிசோதகர் (Examiner),(ii) இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff)(iii) கட்டளை எழுத்தர் (Process Writer) மற்றும்(iv) ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator) | 14 | ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ் |

ஒவ்வொரு பதவிக்குமான காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில்  தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆகவே, பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்

விண்ணப்பம் செய்வது எப்படி?

https://www.mhc.tn.gov.in   என்ற இணைய முகவரியில் சமர்ப்பிக்கப்படும்  விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். வேறெந்த முறையிலாவது, அதாவது தபால், கூரியர், பதிவுத் தபால் மற்றும் மின்னஞ்சல் போன்றவை மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எந்த சூழ்நிலையிலும், எந்த காரணத்திற்காகவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பதாரர்கள் கணினி அல்லது மடிக்கணினியின் வாயிலாக மட்டுமே இணையதளம் மூலமாக அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க வேண்டும் கைபேசி (Cellular Phone)  வரைபட்டிகையின் (Tab) மூலம் விண்ணப்பிக்க இயலாது, ஏனெனில் விண்ணப்பப் படிவம் கணினி மற்றும் மடிக்கணினியின் வாயிலாக மட்டுமே பதிவு செய்ய ஏதுவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா... மாவட்ட நீதிமன்றங்களில் வேலை... மாதம் 71,000 வரை சம்பளம்!

May 01, 2024 0

 சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2329 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைக்கு யாரெல்லாம் தகுதியானவர்கள், விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், இளநிலை கட்டளை பணியாளர், முதுநிலை கட்டளை பணியாளர், கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், ஒளிப்பட நகல் எடுப்பவர், மின் தூக்கி இயக்குபவர், ஓட்டுனர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.08.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

நிரப்பப்படும் பதவிகள்

  1. நகல் பரிசோதகர் (Examiner)

  2. நகல் வாசிப்பாளர் (Reader)

  3. முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர்

  4. இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff)/ கட்டளை பணியாளர் (Process Server)

  5. கட்டளை எழுத்தர் (Process Writer)

  6. ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator)

  7. ஓட்டுநர் (Driver)

  8. நகல் பிரிவு உதவியாளர் (Copyist Attender)

  9. அலுவலக உதவியாளர் (Office Assistant)

  10. தூய்மைப் பணியாளர் (Cleanliness Worker)

  11. தோட்டப் பணியாளர் (Gardener)

  12. காவலர்/இரவு காவலர் (Watchman)

  13. இரவு காவலர் மற்றும் மசால்ஜி (Nightwatchman-cum-Masaichi)

    1. காவலர்/மசால்ஜி (Watchman-cum-Masaichi)

    2. தூய்மைப் பணியாளர் மற்றும் மசால்ஜி (Cleanliness Worker-cum-Masaichi)

    3. வாட்டர்மென்/வாட்டர்வுமன் (Waterman/Waterwoman)

    4. மசால்ஜி (Masaichi)

    மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை : 2329

    ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித் தனியாக காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் நீதிமன்ற இணையத்தளப் பக்கம் மூலமாக காலியிட விவரங்களைத் தெரிந்துக் கொள்ளலாம்.

    கல்வித் தகுதி:

    அனைத்து பணியிடங்களுக்கும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒளிப்பட நகல் எடுப்பவர் மற்றும் ஓட்டுwaர் பணியிடங்களுக்கு முன் அனுபவம் அவசியம்.

    வயதுத் தகுதி:

    01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST 5 ஆண்டுகளும், MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

  14. ஊதியம்:

    நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், ஓட்டுனர் பணியிடங்களுக்கு ரூ. 19,500 – 71,900

    இளநிலை கட்டளை நிறைவேற்றுநர், கட்டளை எழுத்தர், கட்டளை பணியாளர் ரூ. 19,000 – 69,900

    ஒளிப்பட நகல் எடுப்பவர் ரூ. 16,600 – 60,800

    நகல் பிரிவு உதவியாளர் அலுவலக உதவியாளர், தூய்மைப் பணியாளர் , தோட்டப் பணியாளர், காவலர்/இரவு காவலர், இரவு காவலர் மற்றும் மசால்ஜி, காவலர்/மசால்ஜி ,தூய்மைப் பணியாளர் மற்றும் மசால்ஜி, வாட்டர்மென்/வாட்டர்வுமன், மசால்ஜி ரூ.15,700 - 58,100

  15. தேர்வு முறை:

    இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    எழுத்துத் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 50 வினாக்கள் 50 மதிப்பெண்களுக்கு கேட்கப்ப்படும். இந்த தேர்வில் 20 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே. இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது.

    இரண்டாம் பிரிவில், பொது அறிவில் 100 வினாக்களும் கேட்கப்படும். இதில் பொது அறிவு மற்றும் கணிதப்பகுதியில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதற்கான கால அளவு 2 ½ மணி நேரம்.

  16. தேர்வுக் கட்டணம் :

    ரூ. 550, இருப்பினும் SC, SC(A), ST, மாற்று திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

    விண்ணப்பிக்கும் முறை:

    விண்ணப்பிக்க விரும்புபவர்கள்  https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist  என்ற இணையதள பக்கத்திற்கு சென்று தகுந்த மாவட்டத்தை தேர்ந்தெடுத்து  விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.05.2024

    இது குறித்து மேலும் விவரங்கள் அறிய www.mhc.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் Research Associate காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.47,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

May 01, 2024 0

 அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆனது Research Associate, Field Investigator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Annamalai University காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Research Associate, Field Investigator பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Research Associate கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree / PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Annamalai University வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Research Associate ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.47,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Annamalai University தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து drbalamuruganarasi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.05.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news