Agri Info

Adding Green to your Life

May 7, 2024

Educational News Tamil||உங்கள் பிள்ளைகளை pre kG, LKG, UKG சேர்க்கப் போறீங்களா? இந்த செய்தி உங்களுக்குத் தான்

May 07, 2024 0

 மத்தியக் கல்வி அமைச்சகம் நிர்வகிக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான ப்ரீகேஜி, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது.  

அடிக்கடி பணிமாறுதல்களுக்கு உள்ளாகும் மத்திய அரசு பணியாளர்களின் குழந்தைகளுக்கு நாடு முழுவதும் பொதுவான  கல்வியை உறுதி செய்யும் வகையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ  ) பாடமுறையும் பயிற்றுவித்தல் திட்டமும் பின்பற்றப்படுகிறது.

கேந்திரிய வித்யாலயா கல்வி நிலையங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டும் பயிற்று மொழியாக உள்ளன. இருப்பினும், கூடுதல் முயற்சியாக, 20 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் விரும்பி கேட்டுக் கொண்டால், உள்ளூர் தாய் மொழி பயிற்றுவிக்கப்படும்.

நிதி ஒதுக்கீடு, தரமான ஆசிரியர்கள் நியமனம், நிர்வாகக் கட்டமைப்புகள் ஆகியவற்றின் காரணமாக இந்தப் பள்ளிகளில் தரமான பயிற்றுவித்தல் இருப்பதாக நம்பப்படுகிறது. உதாரணமாக,  சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில்  கேந்திர வித்யாலயா பள்ளிகள் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகின்றன. எனவே, நீங்கள் உங்கள் குழந்தையை இந்த பள்ளிகளில் சேர்க்க விரும்பினால் உடனடியாக இதற்கு விண்ணப்பியுங்கள்.


ப்ரீ கேஜி, எல் கேஜி, யூ கேஜி சேர்க்கைக்கான வயது வரம்பு: 


இந்நிலையில், 2024-25ம் கல்வியாண்டிற்கான  ப்ரீ கேஜி (balvatika - 1), எல் கேஜி (balvatika - 2), யூ கேஜி (balvatika - 3) வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

ப்ரீ கேஜி வகுப்புக்கு  31/03/2024 அன்று விண்ணப்பதாரர் 3 வயதைக் கடந்தும், 4 வயதை பூர்த்தி செய்யாமலும் இருத்தல் வேண்டும். எல்கேஜி (balvatika - 2) வகுப்புக்கு மாணவர் 31/03/2024 அன்று விண்ணப்பதாரர் 4 வயதைக் கடந்தும்,  5 வயதை பூர்த்தி அடையாதகவராகவும் இருத்தல் வேண்டும். யூ கேஜி (balvatika - 3) வகுப்புக்கு  31/03/2024 அன்று விண்ணப்பதாரர் 5 வயதைக் கடந்தும், 6 வயதை பூர்த்தி செய்யாமலும் இருத்தல் வேண்டும்

சேர்க்கையில் யாருக்கு முன்னுரிமை:  அரசுப் பணிகளில் இல்லதாவர்களும் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தாலும், தனியார் நிறுவனத்தில் பணி செய்பவராக இருந்தாலும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

இருப்பினும், பணிமாறுதல்களுக்கு உள்ளாகும் மத்திய அரசு பணியாளர்களின் குழந்தைகளுக்கான இந்த பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளதால், இவ்வகை விண்ணப்பதாரர்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்கப்படும்.

அதன்படி, பணிமாறுதல்களுக்கு உள்ளாகும்/  பணிமாறுதல்களுக்கு உள்ளாகாத மத்திய அரசுப் பணியாளர்கள்,  பணிமாறுதல்களுக்கு உள்ளாகும்/  பணிமாறுதல்களுக்கு உள்ளாகாத மத்திய பொதுத் துறை நிறுவன பணியாளர்கள், பணிமாறுதல்களுக்கு உள்ளாகும்/  பணிமாறுதல்களுக்கு உள்ளாகாத மாநில அரசு பணியாளர்கள், பணிமாறுதல்களுக்கு உள்ளாகும்/  பணிமாறுதல்களுக்கு உள்ளாகாத மாநில பொதுத் துறை ஊழியர்கள், மற்ற பிரிவைச் சார்ந்த குழந்தைகள் என்ற முன்னுரிமை அடிப்படையில் இடங்கள் நிரப்பப்படுகிறது.

பால்வதிகா மாணவர் சேர்க்கை அந்தந்த பள்ளிகளில் நடைபெறும். இதற்கு ஆன்லைன் முறை விண்ணப்பங்கள் கிடையாது. https://kvsangathan.nic.in/admission/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை    உங்கள் அருகில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பால்விதியா சேர்க்கை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

அரசு கலை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் | Educational News Tamil

May 07, 2024 0

 

TNGASA 2024 Online Application: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கல்லூரி கல்வி இயக்குநரகம்  தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 06/05/2024 முதல் பதிவு செய்யலாம். அதேபோன்று, தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre மூலம் விண்ணப்பிக்க AFC) வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ. 48 ஆகும். பதிவு கட்டணம் ரூ. 2 ஆகும். பட்டியல்/ பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பதிவுக் கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தும் முறை: விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம். இணையதளம் வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில், “The Director, Directorate of Collegiate Education, Chennai 15” என்ற பெயரில் 06/05/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாக அல்லது நேரடியாகச் செலுத்தலாம். மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை http://www.tngasa.in/ என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

🤳🏻இந்த பயனுள்ள தகவலை  அனைவருக்கும்  பகிருங்கள்⏩

🔥Join our Kalvinews Whatsapp group

👉🏻https://www.tnkalvinews.com/p/whatsapp-groups.html


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news


சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலவசக் கல்வித் திட்டம்... மாணவர்கள் பயன்பெறுவது எப்படி தெரியுமா..? |Educational News Tamil

May 07, 2024 0

 பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், மூன்றாம் பாலினத்தவர்கள், ஆதரவற்றவர்கள் இலவசக் கல்வித் திட்டத்தில் இணைந்து இளநிலை பட்டப்படிப்பு படிப்பதற்கான அறிவிப்பை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.

1.இலவசக் கல்வித்திட்டத்தின் கீழ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் மாணவர்கள் 2023 - 2024 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

2.மாணவர்கள் முதல் முயற்சியிலேயே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

3.வருவாய்த் துறை வட்டாட்சியர் (Tahsildar) வழங்கிய வருமானச் சான்றிதழின்படி, மாணவரின் குடும்பத்தின ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

4.ஒவ்வொரு கல்லூரிக்கும் குறைந்தபட்சம் 3 இலவச இருக்கைகள் ஒதுக்கப்படும் (அதாவது ஒவ்வொரு பிரிவின் கீழும் 1 இலவச இருக்கை). இவை பல்கலைக்கழகத்தால் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கைக்கு மேலே கூடுதல் இடங்களாக அனுமதிக்கப்படும்.

பிரிவு 1: மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் (1/3rd of seats) பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற மாணவர்கள் முக்கிய பாடங்களில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும்.

பிரிவு 2: மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் (1/3rd of seats) முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் திருநங்கைகள் முக்கிய பாடங்களில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும்.

பிரிவு 3: மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் (1/3rd of seats) முக்கிய பாடங்களில் 80% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குத் தகுதி (MERIT) அடிப்படையில் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 1:2 என்ற விகிதத்தில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

5. விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களும் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சமீபத்திய வருமானச் சான்றிதழ் (ஒரு வருடத்திற்குள் வட்டாட்சியரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும்) ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பிரிவு-1 மற்றும் பிரிவு-2 சேர்ந்த மாணவர்கள் முதல் பட்டதாரி சான்றிதழ் வட்டாட்சியரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும் (பொருத்தினால்). மாற்றுத்திறனாளி சான்றிதழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடமிருந்து பெற்றிருக்க வேண்டும் (பொருத்தினால்), இறப்பு சான்றிதழ் (பொருந்தினால்). மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் பதிவேற்றம் செய்யத் தவறினால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

[வருமானச் சான்றிதழ் அல்லது முதல் பட்டதாரி சான்றிதழ் கிடைக்கத் தாமதமானால் வட்டாட்சியரிடமிருந்து பெற்ற ஒப்புதல் சீட்டைப் பதிவேற்றம் செய்யலாம், சான்றிதழைக் கலந்தாய்வுக்கு வரும்பொழுது சமர்ப்பிக்கவும்.]
6. இலவசக் கல்வித் திட்ட விண்ணப்பத்தையும் அதில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் https://www.unom.ac.in என்ற சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும்.



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

திருச்சி என்.ஐ.டி வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

May 07, 2024 0

 மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 8 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.05.2024

Project Assistant 

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி: Bachelors Degree in Civil Engineering/ Geoinformatics/ Agriculture படித்திருக்க வேண்டும்

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 20,000 + 16% HRA

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nitt.edu/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.05.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.nitt.edu/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

 



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

ஜோஹோ நிறுவன வேலை வாய்ப்பு; இந்த தகுதிகள் போதும்; உடனே விண்ணப்பிங்க!

May 07, 2024 0

 பிரபல .டி நிறுவனமான ஜோஹோ (ZOHO) நிறுவனத்தில் கஸ்டமர் சக்சஸ் எக்ஸிகியூட்டிவ்ஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டில் உள்ள முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. ஜோஹோ நிறுவனம் தமிழகத்தை மையமாகக் கொண்டு சென்னை, மதுரை, நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. நல்ல வேலை வாய்ப்பு சூழல் உள்ள இந்த நிறுவனத்தில் பணிபுரிய மென்பொறியாளர்கள் பலரும் விரும்புவர்.

இந்தநிலையில், ஜோஹோ நிறுவனத்தில் கஸ்டமர் சக்சஸ் எக்ஸிகியூட்டிவ்ஸ் (Customer Success Executives) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவர்.

இந்தப் பணியிடங்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், நன்றாக எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். அதோடு வெளி நாடுகளை சேர்ந்தவர்களுடன் சரளமாக உரையாடும் திறன் இருக்க வேண்டும். கஸ்டமர் சக்சஸ் எக்ஸிகியூட்டிவ் பணியில் 2 முதல் 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

இந்தப் பணியிடங்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும் வரை தேர்வு செயல்முறை இருக்கும். எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பணியிடங்களுக்கான சம்பள விபரங்கள் கொடுக்கப்படவில்லை. ஆனால், கல்வித் தகுதி, முந்தைய பணி அனுபவம் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://careers.zohocorp.com/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news