Agri Info

Adding Green to your Life

May 11, 2024

AI படிப்புக்கு அதிகரிக்கும் மவுசு.. ஏன் தெரியுமா? ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம்

May 11, 2024 0

 உலக அளவில் மாணவர்கள் விரும்பி படிக்கும் முதன்மை படிப்பாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு படிப்பு (Artificial Intelligence) இருப்பதாக மெட்ராஸ் ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். 

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஐசிஎஸ்ஆர் கட்டடத்தில் ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகளவாக 2023 -24 ஆம் நிதி ஆண்டில் ரூ. 513 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.    

இது குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஐஐடி இயக்குநர் காமகோடி, நன்கொடையாளர்கள் மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.513 கோடி நிதி கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.

’AI’ டா ’நெருப்புடா’ என்பது போல உலக அளவில் மாணவர்கள் விரும்பி படிக்கும் நம்பர் ஒன் படிப்பாக தற்போது செயற்கை நுண்ணறிவு சார்ந்த படிப்பு மாறியுள்ளதாக கூறினார். ஏஐ பற்றி தெரிந்து கொள்வதற்கும் படிப்பதற்கும் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் ஏஐ மற்றும் கணிப்பொறி அறிவியல் துறையில் எதிர்கால தேவைகள் அதிகம் இருப்பதால்  அந்த துறை தற்போது வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது எனவும் தெரிவித்தார்.  

சென்னை ஐஐடியில் ஏஐ மற்றும் டேட்டா அனலிட்டிக்கல் பிடெக் (B.Tech)பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஜேஇஇ தேர்வு மூலம் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாணவர்கள் ஐஐடியில் தான் படிக்க வேண்டும்.ஏஐ தான் படிக்க வேண்டும் என்று இல்லை. தங்களுக்கு பிடித்த படிப்பை எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் நன்றாக படித்தால் தான் அவர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆசைப்பட்டதை எல்லாம் மாணவர்கள் படிக்க வேண்டும்.

ஐஐடியில் படித்தவர்களுக்கே வேலை கிடைக்கவில்லை என்ற தகவலான தகவல் பரவி வருகிறது. தவறான தகவலை மக்கள் நம்ப வேண்டாம். படித்த எல்லோருக்கும் வேலை வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கிறது. அனைத்து துறை சார்ந்த பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஏஐ (செயற்கை நுண்ணறிவு) கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக இன்ஜினியரிங் பாடப் பிரிவில் ஏதேனும் ஒன்று தேர்வு செய்து அதனை பிரதானமாக வைத்துக்கொண்டு ஏஐ படிப்பை படிக்கலாம் என தெரிவித்தார்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

medical technical courses: மருத்துவத்துறையில் தொழில்நுட்ப படிப்பு தெரியுமா..? அரசு வேலையும் இருக்கு...

May 11, 2024 0

 மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருக்கும். அதற்காக 12ஆம் வகுப்பில் தீவிரமாகப் படித்து நுழைவுத் தேர்வுகளை எழுதி மருத்துவம் படிக்க சீட் பெற்றுப் படிக்கின்றனர். ஆனால் படித்து முடித்த அனைவருக்கும் அதற்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறி தான்.

மருத்துவத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கால்நடை மருத்துவம் பெரும்பாலோனோருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் மருத்துவத்துறையில் சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி நோய் கண்டறிவது, ஆலோசனை அளிப்பது என எவ்வளவோ படிப்புகள் உள்ளன. அந்தப் படிப்புகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளும் உள்ளது. அவை குறித்து இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்,

பிசியோதெரபி: துணை மருத்துவப் படிப்புகளில் மிக முக்கியமானது பிசியோதெரபி. கை, கால் எலும்பு முறிவு, சுளுக்கு போன்றவற்றிற்கும், நீண்ட நாட்களாக இருக்கும் உடல் உபாதைகளுக்கும், உடற்பயிற்சி மற்றும் தொடர் சிகிச்சை மூலம் உடம்பின் பாகங்களைச் சரி செய்வதில் பிசியோதெரபி சிகிச்சை சிறந்த மருத்துவ முறையாக இருக்கிறது. பிபிடி எனப்படும் இந்தப் பட்டப்படிப்பு மொத்தம் நான்கரை ஆண்டுக்காலப் படிப்பு ஆகும். பிசியோதெரபியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் பணிபுரிய முடியும்.


ஆக்குபேஷனல் தெரபி: மனநிலை மற்றும் மனநிலை சார்ந்து உடலில் ஏற்படும் கோளாறுகளைச் சரி செய்வது தான் ஆக்குபேஷனல் தெரபி. ஒருவர் தினமும் செய்யும் செயல்பாட்டிலிருந்து திடீரென்று வேறு மாதிரியான செயல்பாடுகளைச் செய்யும்போது, எதனால் இந்தப் பிரச்சினை வருகிறது? என்பதை ஆராய்ந்து அதற்குத் தகுந்த சிகிச்சை அளிப்பது தான் ஆக்குபேஷனல் தெரபியின் பணி. ஆக்குபேஷனல் தெரபி பட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்கள் மருத்துவமனைகள், மாற்றுத் திறனாளி பள்ளிகள், மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களுக்கான மையங்கள், மருத்துவ ஆலோசனை மையங்கள் எனப் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் பெற முடியும்.

ஆடியாலஜி: பேச்சு மற்றும் காது சம்பந்தமான குறைபாடுகளைக் களைவது குறித்த மருத்துவம் தொடர்பான ஆடியாலஜி 3 ஆண்டு பட்டப் படிப்பாகும். இதைப் படிக்கும் மாணவர்களுக்கு, சமூகத் தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், காது கேட்கும் கருவி தயாரிக்கும் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.

ஆப்ட்டோமெட்ரி: ஆப்ட்டோமெட்ரி படிப்பு படித்தவர்கள் கண்ணில் ஏற்படும் குறைபாடுகளை முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதற்குத் தகுந்தாற்போல் சிகிச்சை அளிக்கும் கண்விழிப் பரிசோதகருக்கான படிப்பாகும். பார்வையில் குறைபாடு கொண்டவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, பார்வைக் குறைபாடு கொண்டவர்கள் என்ன மாதிரியான கண் கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைப்பது போன்றவை அவர்களது பணிகள் ஆகும்.

ஆப்ட்டோமெட்ரி அஸிஸ்டெண்ட் படிப்பில் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு உள்ளது. ஆப்ட்டோமெட்ரியில் 4 ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பும் இருக்கிறது. 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஆப்ட்டோமெட்ரியில் டிப்ளமோ படிப்பை முடிக்கும் மாணவர்கள், நேரடியாக மூன்றாம் ஆண்டு ஆப்டோமெட்ரி பட்டப்படிப்பில் சேர முடியும். ஆப்ட்டோமெட்ரியில் பட்டப்படிப்பு முடிக்கும் பல மாணவர்கள், சொந்தமாக மருத்துவமனை ஆரம்பிக்கிறார்கள். இதுதவிர மிகப்பெரிய கண் கண்ணாடி நிறுவனங்கள், லென்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள், கான்டாக்ட் லென்ஸ் நிறுவனங்களில் சேரலாம். ஆராய்ச்சிப் பணிகளிலும் சேர முடியும். இதுதவிர, கண் அழகுபொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் ஆப்ட்டோமெட்ரி படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

ரேடியோகிராபி: மருத்துவத்தின் துணைப் பிரிவாக ரேடியோகிராபி படிப்பு விளங்குகிறது. உடலின் உட்புறம் உள்ள உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பு, மற்றும் உடலில் உட்புறங்களைப் பற்றி அறிவதற்கான எக்ஸ்ரே, புளூரோஸ்கோபி, அல்ட்ராசவுண்ட்ஸ், சிடி ஸ்கேன், ஆஞ்ஜியோகிராம், பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி உள்ளிட்டவற்றை அறியும் படிப்பு தான் ரேடியோகிராபி.

ரேடியோகிராபி படிப்பைப் பொறுத்தவரை, மெடிக்கல் டெக்னாலஜி இன் ரேடியோகிராபி, ரேடியோ தெரபி, ரேடியோ கிராபி உள்ளிட்ட பிரிவின் கீழ் பி.எஸ்சி. பட்டப் படிப்பைப் படிக்கலாம். இந்தப் படிப்பு 3 ஆண்டுக்காலப் படிப்பு. மெடிக்கல் ரேடியாலஜி, ரேடியோ கிராபி அண்ட் தெரபி டெக்னாலஜி, ரேடியோ ரேப்பிக் டெக்னீசியன் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டிப்ளமோ படிப்பைப் படிக்கலாம். ரேடியோ கிராபி உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், ஆராய்ச்சிக் கூடங்கள் போன்றவற்றில் ரேடியோ கிராபியில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஸ்பீச்தெரபி: தனிப்பட்ட ஒரு மனிதனுக்குப் பேசுவதில் ஏற்படும் பிரச்சினைகளைச் சரிசெய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் படிப்பு ஸ்பீச்தெரபி. 1 வயது முதல் ஒன்றரை வயதுக்குள் குழந்தைகள் மழலைக் குரலில் பேச வேண்டும். அப்படிப் பேச முடியாத குழந்தைகளை உடனடியாக மருத்துவரிடம் காட்டவேண்டும். அதுபோல், குரலில் ஏற்படும் குறைபாடுகள், பேச்சு திடீரென்று நின்று போதல்,  திக்கு வாய் போன்றவற்றைச் சரி செய்வதில் ஸ்பீச் தெரப்பிஸ்ட்டின் பணி மிகவும் உன்னதமானது. ஸ்பீச் தெரபியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரசு மருத்துவமனைகள், ஆராய்ச்சிக் கூடங்களில் வேலை கிடைக்கும். பள்ளிகளில் குழந்தைகளுக்குப் பேச்சுப் பயிற்சியாளராகலாம். பேச்சு மற்றும் செவி குறை நீக்கும் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களில் பணிக்குச் சேரமுடியும்.

மெடிக்கல் லேப் டெக்னாலஜி: மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி என்கிற கிளினிக்கல் லேபரட்டரி சயின்ஸ் மருத்துவத் துறை படிப்புகளில் ஒன்று. ஒரு நோயைக் கண்டறிதல், அதைப் பகுத்து ஆராய்தல், ஒரு நோயைத் தடுக்க மருத்துவத்தில் என்னென்ன சோதனையெல்லாம் மேற்கொள்ள மருத்துவர் சொல்கிறாரோ அந்த அத்தனை பணிகளையும் ஒருங்கே செய்து கொடுப்பது தான் ஒரு மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜிஸ்ட்டின் பணியாகும்.

உடலில் உள்ள நீர், ரத்தத்தின் அளவு, கெமிக்கல் அனாலிஸ், உடலில் செல் எண்ணிக்கையை ஆராய்தல் போன்றவை குறித்து இந்தப் படிப்பில் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்தப் படிப்பை முடித்தவர்கள் லேப் டெக்னாலஜிஸ்ட் மற்றும் டெக்னீஷியன் பணிகளில் சேரலாம். மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி பட்டப்படிப்பு, மெடிக்கல் லேபரட்டரி டெக்னீஷியன் டிப்ளமோ படிப்புகளைப் படிக்கலாம். இந்தப் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகள், ரத்த வங்கிகள், மருத்துவச்சோதனைக் கூடங்கள் ஆய்வு மையங்கள், மெடிக்கல் லேப் டெக்னாலஜிக்குப் பயன்படும் உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை கிடைக்கும்.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

கல்லூரி கைடன்ஸ்: வெளிநாட்டில் படிப்பது இவ்வளவு ஈஸியா... முழு விவரம் இதோ

May 11, 2024 0

 

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் வெளியாகிவிட்டது தற்போது அனைத்து மாணவர்களும் கல்லூரி தேடுவதில் மும்மரமாக ஈடுபட்டு இருப்பீங்க..தமிழ்நாடு இந்தியா மட்டும் இல்லாம நீங்க வெளிநாடுகளில் போய் படிப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்குது.. வெளிநாடுகளில் போய் படிக்கிறது மூலமாக நமக்கு நிறைய நன்மைகளும் வேலைவாய்ப்புமே அதிகமா கிடைக்கிறது.

இங்க இருக்குற கல்வி முறைக்கும் அங்க இருக்குற கல்வி முறைக்கும் சற்று மாறுபட்டு தான் இருக்கும். உதாரணமாக, பிரிட்டனில் ஓராண்டு காலத்திற்குள் முதுநிலைக் கல்வி பயிலவும் வாய்ப்புண்டு. வெளிநாடுகளுக்குச் சென்று பயிலும் மாணவர்கள் வரிசையில் தமிழ்நாடு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது ஏறத்தாழ 7% மாணவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பயில ஆர்வம் காட்டுகின்றனர்.

வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரம் என்ன? எங்கு, என்ன படிப்புகளை எடுத்துப் பயிலலாம்? என்ன மாதிரியான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்? நுழைவுத் தேர்வு அல்லது தகுதித் தேர்வுகள் எழுத வேண்டுமா? உயர்கல்வி ஆராய்ச்சி வாய்ப்புகளை எப்படி அறிந்துகொள்வது? அதற்கான உத்திகள் என்னென்ன? போன்ற தகவல்களை முதலில் தெரிந்து கொள்வோம்.

வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களின் தரம் :

ஒவ்வொரு நாடும் அவர்களது கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலை வெளியிடுகிறது. அவை அரசு அல்லது அரசு அல்லாத தனியார் அமைப்புகள் (பத்திரிகைகள், இதழ்கள், புள்ளிவிவர நிறுவனங்கள் போன்றவை) மூலம் வெளியிடப்படுகின்றன.உலக அளவிலான கல்விநிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் QS World University Ranking எனப்படும்உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் இதில் அதிகக் கவனம் பெற்றது.

வெளிநாடுகளில் பயில வேண்டும் எனத் திட்டமிடும் மாணவர்களுக்கு இந்தத் தரவரிசைப் பட்டியல் மிகவும் உதவியாக இருக்கும்.அதேபோல பிரிட்டனிலிருந்து வெளிவரும் ‘கார்டியன்’ (Guardian) thecompleteuniversityguide.co.uk இணையதளங்களின் தரவரிசைப் பட்டியல் ஓரளவு நம்பகத்தன்மை வாய்ந்தது. கனடா நாட்டின் ‘டைம்ஸ்’ இதழ் வெளியிடும் அந்நாட்டிற்கான தரவரிசைப் பட்டியலையும் நல்ல உதாரணமாகக் கொள்ளலாம்.


வெளிநாடுகளில் உயர்கல்வி பெறத் தகுதித்தேர்வு : இளநிலை, முதுநிலைப் படிப்புகள் இரண்டிற்குமே மதிப்பெண் விகிதம் ஒரு அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால். ஒரு சில நாடுகளுக்கு மொழியறிவுச் சான்றிதழ் மிக முக்கியமானது.

ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பயில ஆங்கில மொழிப் புலமையில் அவர்கள் பரிந்துரைக்கும் தகுதித் தேர்வில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உதாரணத்திற்கு பிரிட்டன். ஆஸ்திரேலியா நாடுகளில் பயில IELTS(International English Language Testing System) எனப்படும் ஆங்கில மொழிப்புலமைத் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.


இளநிலைப் படிப்புகளுக்குக் குறைந்தபட்சம் 6.0 மற்றும் முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளுக்குக் குறைந்தபட்சம் 6.5 புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். இந்தத் தேர்வானது கேட்டல் படித்தல். எழுதுதல், பேசுதல் என்ற பிரிவுகளில் மதிப்பிடப்படுவது.இந்தத் தேர்விற்குக் கட்டணம் உண்டு. மேலும் இந்தத் தேர்விற்கான சான்றிதழ் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். என்பதால் அதற்கேற்பத் திட்டமிடுவது நல்லது.


ஆங்கிலப் புலமைத் தேர்வான TOEFL (Test of English as a Foreign Language) சான்றிதழை 119 நாடுகளில் உள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மொழித் தகுதியாக ஏற்றுக்கொள்கின்றன. TOEFL தேர்வு உங்களோட அட்மிஷனுக்கு ரெண்டுல இருந்து மூணு முன்னாடி எழுதி clear பண்ணா போதும். ஆகவே, எந்த நாட்டிற்கு எந்த மொழிப் புலமைத் தேர்வு எழுத வேண்டும் என்று சரிபார்த்துக்கொள்வது மிக அவசியம். பொதுவாக, வெளிநாடுகளில் முதுநிலைப் படிப்புகளை இரண்டு வழிகளில் உதவித்தொகையுடன் விண்ணப்பிக்கலாம்.


1. வெளிநாடுகளில் உள்ள உதவித்தொகைத் திட்டத்திற்கு (Scholarship) விண்ணப்பித்து அதன் வாயிலாகச் செல்வது.
2. சுயநிதி (Self financing) மூலம் வெளிநாடுகளுக்குச் சென்று பயில்வது. 2.000 முதல் 5,000 டாலர் வரை சிறிய உதவித்தொகைகளைப் பல்கலைக்கழகம் அல்லது தன்னார்வலர் அமைப்புகள் வழங்குகின்றன. இவை ஓரளவிற்குச் சுயநிதி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

தற்போது முனைவர் ஆராய்ச்சிப் படிப்பிற்கான தெரிந்துகொள்வதில் வாய்ப்புகளைத் சமூக ஊடகங்கள் (Social Media) முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, Linkedin, Twitter, ResearchGate ஆகியவை மூலம் பேராசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் போன்றவை முனைவர் ஆய்வுப் படிப்பிற்கான வாய்ப்புகளை நேரடியாகப் பகிர்கின்றன. ஃபேஸ்புக்கில் இதற்கென உள்ள குழுக்களில் நீங்கள் உறுப்பினராகப் பங்கேற்பதன் மூலம் எளிதாக தகவல்களைப் பெற இயலும்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

Film and Television Institute: புதுசா எதாவது படிக்கனுமா..? திரைப்படத் தொழில்நுட்ப படிப்பு தெரியுமா..?

May 11, 2024 0

 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என சிந்திக்கும் போது உறவுகள் வட்டத்திலிருந்தும் அக்கம் பக்கத்திலிருந்தும் ஆயிரம் பேர் பொறியியல், மருத்துவம் என சில பரிந்துரைகளை அளித்திருப்பார்கள். அந்த பரிந்துரைகளால் மனம் சோர்ந்த மாணவர்கள் தினசரி ஒரே மாதிரியான வேலை செய்யும் துறையைத் தவிர்த்து புதிதாக வேலை செய்யக் கூடிய துறையைத் தேடுவார்கள்.

அப்படி அவர்களது தேடலுக்குத் தீர்வாகக் கிடைக்கக் கூடியது தான் திரைத்துறை. திரைப்படத் தொழில்நுட்பம் பயின்றவர்களுக்குத் திரைத்துறையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றது. தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக்கல்லூரி மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் திரைப்படத் தொழில்நுட்பம் பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்த கல்லூரியில் திரைப்படத் தொழில்நுட்பம் சம்பந்தமாக 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகளை (visual arts) படிக்கலாம். இந்த 4 ஆண்டு பட்டப்படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கும். ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் (அனிமேஷன் அண்ட் விஷுவல் எபெக்ட்ஸ்), எண்மிய இடைநிலை (டிஜிட்டல் இன்டர்மீடியட்) ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டப்படிப்புகள் உள்ளன.

ஒளிப்பதிவு (சினிமாட்டோகிராபி), எண்மிய இடைநிலை (டிஜிட்டல் இன்டர்மீடியட்) ஆகிய படிப்புகளில் சேர விரும்புவோர் 12ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடங்களை முக்கிய பாடங்களாக எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிறப்புப் பாடமாகப் புகைப்படம் சார்ந்த தொழிற்படிப்புகள் அல்லது அதற்கு இணையான படிப்புகள் அல்லது எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினியரிங் டிப்ளமோ படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களும் இப்படிப்புகளில் சேரலாம்.

ஒலிப்பதிவு (ஆடியோகிராபி) பட்டப்படிப்பில் சேர விரும்புவோர், 12ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும். சிறப்புப் பாடமாக வானொலி அல்லது தொலைக்காட்சி அல்லது உள்நாட்டு மின்னணு உபகரணங்கள் சார்ந்த தொழில் படிப்புகள் அல்லது அதற்கு இணையான படிப்புகள் அல்லது எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் டிப்ளமோ படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் இப்படிப்பில் சேரலாம்.
12ஆம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படித்திருந்தாலும் படத்தொகுப்பு (எடிட்டிங்), உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் (அனிமேஷன் அண்ட் விஷுவல் எபெக்ட்ஸ்) ஆகிய படிப்புகளில் சேரலாம்.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

மேல்நிலை முதலாமாண்டு தேர்வு முடிவுகள் 14.05.2024 அன்று காலை 09.30 மணிக்கு வெளியீடு - DGE செயல்முறைகள்!

May 11, 2024 0

 



 


மேல்நிலை முதலாமாண்டு தேர்வு முடிவுகள் 14.05.2024 அன்று காலை 09.30 மணிக்கு வெளியீடு - DGE செயல்முறைகள்! - Download Here



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

Tamilnadu Teachers Transfer 2024 - GO & Forms - School Education & Elementary Education Department!

May 11, 2024 0

 Tamilnadu Teachers Transfer 2024 - GO & Forms - School Education & Elementary Education Department!

  • Teachers Transfer Counselling and Deplayment 2024 - 2025 - Date wise Schedule - Download Here 
  • Teachers Transfer - Spouse Certificate - Download Here
  • Teachers Transfer Counselling and Deplayment 2024 - 2025 - Proceedings - Download Here
  • EMIS - How to Apply for General Teachers Transfer - Download Here
  • General Transfer 2024 - One Year Exemption Details - Download Here
  • General Transfer 2024 - Priority Norms Details - Download Here
  • General Transfer 2024 - Norms GO - Download Here 

 

Important Details:

👉 அரசாணை எண்.176, ப.க.து. நாள்: 17.12.2021ன் படி. (General Transfer Counselling Policy for Teachers)...


👉 மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை (Priority) அடிப்படையில் கலந்து கொள்ளும் 9 வகையான ஆசிரியர்கள்.


👉 ஓராண்டு பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்து விலக்கு பெறும் (Exemption) 5 வகையான ஆசிரியர்கள்.

 

 


ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - 2024

 (தொடக்கக் கல்வி) - அட்டவணை


1. பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களைத் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) வாயிலாகப் பதிவேற்றம் செய்தல் - 13.05.2024 06.00AM முதல் 17.05.2024 06.00PM வரை.

2. பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் (Seniority List)மற்றும் காலிப்பணியிட விவரங்கள் (Vacancy List) வெளியிடுதல் - 20.05.2024 10.00 AM திங்கள்

3. முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் (Claims and objections)‌-2105.2024 05.00PM செவ்வாய்

4. மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் (Release off seniority list) Release of Vacancy List Final) - 23.05.2024 (வியாழன்)

5. மலைச் சுழற்சி மாறுதல் கலந்தாய்வு-24.05.2024 (வெள்ளி)

6. இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு - 28.05.2024 (செவ்வாய்)

7. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) - 31.05.2024 (வெள்ளி)

8. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)-01.06.2024(சனி) (முற்பகல்)

9. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 01.06.2024 (சனி)(பிற்பகல்)

10. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 03.06.2024 (திங்கள்)

11. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)- 06.06.2024 (வியாழன்)

12. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)-07.06.2024 வெள்ளி (முற்பகல்)

13. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)-07.06.2024 வெள்ளி (பிற்பகல்)

14. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)-08.06.2024 (சனி)

15. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)-10.06.2024 (திங்கள்)

16. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)-11.06.2024 (செவ்வாய்)(முற்பகல்)

17. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 11.06.2024 செவ்வாய் (பிற்பகல்)

18. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)-12.06.2024

19. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற் - 13.06.2024 (வியாழன்)

20. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)- 14.06.2024 (வெள்ளி)(முற்பகல்)

21. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்). - 15.06.2024.


ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - 2024

( பள்ளிக் கல்வி DSE ) உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி அட்டவணை


1. பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களைத் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) வாயிலாகப் பதிவேற்றம் செய்தல் - 13.05.2024 06.00AM முதல் 17.05.2024 06.00PM வரை.

2. பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் (Seniority List)மற்றும் காலிப்பணியிட விவரங்கள் (Vacancy List) வெளியிடுதல் - 20.05.2024 10.00 AM திங்கள்

3. முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் (Claims and objections)‌-2105.2024 05.00PM செவ்வாய்

4. மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் (Release off seniority list) Release of Vacancy List Final) - 23.05.2024 (வியாழன்)

5. அரசு / நகராட்சி    மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் ) 25.05.2024 சனி

6. அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 27.05.2024 திங்கள்

7. அரசு / நகராட்சி உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் ) 29.05.2024 புதன்

8. அரசு / நகராட்சி உயர் நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் மாறுதல் ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 30.05.2024 வியாழன்

9. அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் 01.08.2023 நிலவரப்படி ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்டவர்களை பணி நிரவல் ( PG Deployment All Subjects ) 18.06.2024 செவ்வாய்

10. அரசு / நகராட்சி முதுகலை ஆசிரியர்கள் கணினி ஆசிரியர்கள் நிலை I உடற்கல்வி இயக்குநர் நிலை I தொழிற்கல்வி ஆசிரியர்கள் ( agriculture ) மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் ) 19.06.2024 புதன்

11. அரசு / நகராட்சி முதுகலை ஆசிரியர்கள் கணினி ஆசிரியர்கள் நிலை I உடற்கல்வி இயக்குநர் நிலை I தொழிற்கல்வி ஆசிரியர்கள் ( agriculture ) மாறுதல் ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 20.06.2024 முதல் 22.06.2024 வரை வியாழன் , வெள்ளி மற்றும் சனி

12. அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 01.08.2023 நிலவரப்படி ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்டவர்களை பணி நிரவல் ( BT Deployment Tamil , English , Maths , Science , Social Science ) ( வருவாய் மாவட்டத்திற்குள் ) 26.06.2024 திங்கள்

13. அரசு / நகராட்சி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கலையாசிரியர்கள் , இசை ஆசிரியர்கள் , இடைநிலை ஆசிரியர்கள் , தையல் ஆசிரியர்கள் மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் ) 25.06.2024 செவ்வாய்

14. அரசு / நகராட்சி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கலையாசிரியர்கள் , இசை ஆசிரியர்கள் , இடைநிலை ஆசிரியர்கள் , தையல் ஆசிரியர்கள் மாறுதல் ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 26.06.2024 புதன்

15. அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் ) 27.06.2024 வியாழன்

16. அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 28.06.2024 முதல்  30.06.2024 வரை



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பத்தினை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்.DEE - Counselling Instructions Download here

May 11, 2024 0

 பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பத்தினை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்.

DEE - Counselling Instructions

Download here



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

May 10, 2024

Transfer 2024 - EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - Director Proceedings

May 10, 2024 0

 Transfer  2024 - EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - பள்ளிக்கல்வித்துறை (உயர் மேல்நிலை பள்ளிகள்)Mutual,Unit transfer உள்ளிட்ட மாறுதல்கள் சார்ந்து செயல்முறையில் உள்ளன


Click Here to Download - Transfer  2024 - EMIS Upload - Instructions - Director Proceedings - Pdf


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

IFHRMS-ல் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் & அரசு ஊழியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய முக்கிய தகவல்கள்

May 10, 2024 0

 




IFHRMS வலைதளத்தில்    தாங்கள் மாற்றுத்திறனாளிகள்* எனில் அதை பதிவு செய்ய வேண்டும் பதிவு செய்ததை BEO  அவர்கள் டிக்ளர் செய்ய வேண்டும் 


அவ்வாறு டிக்ளர் செய்த பின்பு ஆசிரியர்களின் ESR ப்ரொபைலில் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்றும் ஏத்தனை சதவீதம் மாற்றுத்திறனாளிகள் என்பதும் பதிவாகும் அவ்வாறு பதிவாகும் பட்சத்தில் இனிவரும் காலங்களில்  old regime தேர்வு செய்த ஆசிரியர்களுக்கு அவர்களுடைய போக்குவரத்து படி 

2500 X 12= ₹30,000 **U/S 10(14)** வருமான வரியில் தானாக கழித்துக் கொள்ளும் அதேபோன்று

 U/S 80Uல் ₹75,000 தானாகவே கழித்துக் கொள்ளும் எனவே மாற்றுத்திறன் கொண்ட ஆசிரியர்கள் தங்களின் User ID மற்றும் password பயன்படுத்தி IFHRMS வலைதளத்தில் மேற்கண்ட பதிவை பதிவு செய்து, பின்பு தங்களின் BEO அவர்களுக்கு தகவல் தெரிவித்து டிக்ளர் செய்யும்படி தெரிவிக்கவும் 


குறிப்பு:  

 களஞ்சியம் Appல் இப்பணியை மேற்கொள்ள இயலாது IFHRMS வலைதளத்தில் மட்டுமே மேற்கொள்ள இயலும்

Userid & password பயன்படுத்தி லாகின் செய்த பின்பு 


               ⬇️


eservice (HR&Fin)


               ⬇️


Employee self service


                ⬇️


 Others


                ⬇️


Disability entry


                ⬇️


Create தேர்ந்தெடுத்த பின்பு




Category என்ற பகுதியில் எவ்வகையான மாற்றுத்திறன் படைத்தவர் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும் அதன் பின்பு Degree % என்ற இடத்தில் எத்தனை சதவீதம் மாற்றுத்திறன் என்பதை குறிப்பிட்டு மேலே வலது புறத்தில் உள்ள review என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் 

தற்பொழுது மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டையை பதிவு செய்வதற்கான பகுதி தோன்றும் அதில் அடையாள அட்டையை pdf  அல்லது image ஆக அப்லோடு செய்ய வேண்டும் அப்லோடு செய்த பின்பு சமிட் கொடுக்க வேண்டும் 


Submit கொடுத்த பின்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு அப்ரூவல் கொடுக்க தகவல் தெரிவிக்க வேண்டும்


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

NHIS Card - Direct Download Link

May 10, 2024 0

 

நமது மாத சம்பளத்தில் ரூ 300 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் கீழ்க்கண்ட இணையதள முகவரியில் "e-card" பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth.

பழைய கார்டு எண் தெரியாத நண்பர்கள் இதே இணையத்தில் ஐடி கார்டு சர்ச் என்ற பகுதியில் சென்று பெயர், பிறந்த தேதி, பணி ஏற்ற தேதி, ஓய்வு நாள் போன்ற ஏதேனும் 3 தகவல்களை பதிவு செய்து புதிய கார்டு டவுன்லோட் செய்து கொள்ள முடியும். 


Click Here to Download - NHIS Card -  Download Link


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

01.06.2024 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்

May 10, 2024 0

 



தஞ்சாவூர் மாவட்டத்தில் 01.06.2024 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்


PG Vacancy As On 01.06.2024 - Thanjavur District - Download Here


பிற மாவட்ட விவரங்கள் கிடைத்தவுடன் பகிரப்படும்

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பத்தினை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்

May 10, 2024 0

 

IMG_20240511_075154

SUBMIT TRANSFER APPLICATION 2024-25 IN EMIS


பொது மாறுதல்  கலந்தாய்வு விண்ணப்பம் 2024-25


பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பத்தினை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்👇

Video Explanation - Click here


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment ne

General Teachers Counselling - Priority & One Year Exemption GO

May 10, 2024 0

 பொதுமாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமை & விலக்கு GO

👉 அரசாணை எண்.176, ப.க.து. நாள்: 17.12.2021ன் படி. (General Transfer Counselling Policy for Teachers)...

👉 மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை (Priority) அடிப்படையில் கலந்து கொள்ளும் 9 வகையான ஆசிரியர்கள்

👉 ஓராண்டு பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்து விலக்கு பெறும் (Exemption) 5 வகையான ஆசிரியர்கள்.

Priority & One Year Exemption GO 👇

Download here



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

SSLC Supplementary Exam 2024 - Application and Time Table Published

May 10, 2024 0

 IMG_20240511_114925

நடைபெறவுள்ள ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த / தேர்வர்களிடமிருந்தும் , விண்ணப்பிக்க தகுதியுள்ள இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

வருகை புரியாத தனித்தேர்வர்களிடமிருந்தும் பள்ளிமாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் :

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தல் / அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பித்தல்  & துணைத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு!

☝️☝️

 SSLC Supplementary Application and Time Table👇

Download here



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment ne