Agri Info

Adding Green to your Life

May 14, 2024

பேங்க் ஆப் பரோடா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்:ரூ.23,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

May 14, 2024 0

 பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது FLC Coordinator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பேங்க் ஆப் பரோடா காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி FLC Coordinator பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FLC Coordinator கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பேங்க் ஆப் பரோடா வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

FLC Coordinator முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் பரோடா ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- முதல் ரூ.23,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FLC Coordinator தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வேலை 2024 – தேர்வு கிடையாது!!

May 14, 2024 0

 தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB) ஆனது அங்கு காலியாக உள்ள Managing Director and Chief Executive Officer ஆகிய பணிகளுக்காக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. திறமையான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான தகுதிகளை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வங்கி காலிப்பணியிடங்கள் :

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) Managing Director and Chief Executive Officer ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CEO வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 31.03.2024 தேதியின் அடிப்படையில் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TMB Bank கல்வித்தகுதி :

  • Any Graduate / Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்கூறப்பட்ட பணியில் அல்லது பணி சார்ந்த செயல்களில் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TMB Bank தேர்வு செயல்முறை :

  • Short Listing
  • Interview

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 24.05.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்

Download TMB Notification PDF 2024 

Apply Online 


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

IOB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.30,000/- || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

May 14, 2024 0

 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Faculty, Attender பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Indian Overseas Bank காலிப்பணியிடங்கள்:

Faculty, Attender பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Faculty கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Indian Overseas Bank வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 22 என்றும் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Faculty ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.30,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

Indian Overseas Bank தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாளுக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

மாணவர்களுக்கு "என் கல்லூரி கனவு" எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

May 14, 2024 0

 IMG_20240513_213526

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு "என் கல்லூரி கனவு" எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

 Press Release 669 - Download here


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

IFHRMS - IT Self Declaration Instruction

May 14, 2024 0

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை 2ல் துணைத் தேர்வு: மே 16-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

May 14, 2024 0

 
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை 2-ம் தேதி துணைத் தேர்வுநடத்தப்படுகிறது. இதற்காக மே 16-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடந்தது. 8,94,264 மாணவ மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். இந்நிலையில், பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 10-ம் தேதி வெளியானது. பொதுத் தேர்வு எழுதியவர்களில், 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதற்கிடையே, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் பங்கேற்காத மாணவர்களுக்கான துணைத்தேர்வு வருகிற ஜூலை மாதம்2-ம் தேதி முதல் 8-ம் தேதிவரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்காக, வருகிற 16-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.


பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் பங்கேற்காத மாணவர்கள், துணைத் தேர்வில் பங்கேற்கச் செய்யும் வகையில் அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் மற்றும் வாராந்திர தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கின. ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று, பயிற்சி பெறுகிறார்கள். இவர்களுக்கு, உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு சிறப்பு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சி வகுப்புகளானது துணைத்தேர்வு நடைபெறும் நாள் வரை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

+2 துணைத் தேர்விற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

May 14, 2024 0

 
+2 துணைத் தேர்விற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!


Supplementary Exam Proceedings - Download here


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

May 13, 2024

மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு 2024 – 104 காலியிடங்கள்!

May 13, 2024 0

 

மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு 2024 – 104 காலியிடங்கள்!

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. அங்கு Reader, Cleaner, Night Watchman, Office Assistant , Gardener, Watchman, Operator, Copyist, Masalchi, Junior Bailiff ஆகிய பணிகளுக்கு பணியிடங்கள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தமிழகத்தில் வசிப்பவராக இருந்தால் விண்ணப்பிக்க தகுதி பெறுவர். விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே உள்ள தொகுப்பில் அறிந்துக் கொள்ளலாம்.

அரசு பணியிடங்கள்:

Reader, Cleaner, Night Watchman, Office Assistant , Gardener, Watchman, Operator, Copyist, Masalchi, Junior Bailiff ஆகிய பணிகளுக்கு என 104 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

பதிவாளர்கள் அதிகபட்சம் 32-37 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்

மாவட்ட நீதிமன்ற பணிகள் – கல்வி தகுதி:
  • Copyist Attender, Office Assistant, Reader, Junior Bailif, Xerox Operator, Cleanliness worker – 8ம் & 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Gardener, Watchman / Nightwatchman, Masalchi – தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்
    மாவட்ட நீதிமன்ற ஊதிய விவரம்:

    தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.71,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.

    தேர்வு முறை:
    • Common Written examination (Objective Type)
    • Skill Test & Viva-voce
    விண்ணப்பக்கட்டணம்:

    பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – ரூ.500/-
    SC/ ST வகுப்பினர் – பணம் கிடையாது

    விண்ணப்பிக்கும் முறை:

    27/05/2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் போர்டலில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    Coimbatore District Court Recruitment 2024 PDF 1
    Coimbatore District Court Recruitment 2024 PDF 2
    Apply Online


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

இந்தியா தபால் துறை வங்கி வேலைவாய்ப்பு – 50+ பணியிடங்கள்!!

May 13, 2024 0

 

இந்தியா தபால் துறை வங்கி வேலைவாய்ப்பு – 50+ பணியிடங்கள்!!

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) நிறுவனத்தில் காலியாக உள்ள Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம் 54 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தகுதியும் விரும்பும் உள்ளவர்கள் அனைத்து தகவல்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி காலிப்பணியிடங்கள்:

Executive (Associate Consultant), Executive (Consultant), Executive (Senior Consultant) பணிகளுக்கு 54 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

IPPB வயது வரம்பு:

  • Executive (Associate Consultant – 22 முதல் 30 வயது வரை
  • Executive (Consultant) – 22 முதல் 40 வயது வரை
  • Executive (Senior Consultant) – 22 முதல் 45 வயது வரை

அஞ்சல் வங்கி கல்வித்தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Graduate/ Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பத்தார்களுக்கு 2 முதல் 06 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

IPPB சம்பளம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,00,000/- முதல் ரூ.25,00,000/- வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செயல் முறை:

நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம்:

  • SC/ST/PWD (Only Intimation charges) – ரூ.150/-
  • For all others – ரூ.750/-

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.ippbonline.com/ என்ற இணைய முகவரி மூலம் 24.05.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification Pdf

Apply Online



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

College Guidance : பயாலஜி படிக்காமலே மருத்துவதுறைக்கு வரலாம்... எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க...

May 13, 2024 0

 மனித உயிர் உள்ள வரை மருந்து மற்றும் மருத்துவத்திற்கான தேவை இருக்க தான் செய்யும். அதனால் தான் பலர் மகத்தான மருத்துவத்துறையில் பணியாற்ற விரும்புகின்றனர். மருத்துவ துறையில் படிக்க ப்ளஸ் டூ வில் அறிவியல் படித்திருக்க வேண்டும் என்பது பலரது கருத்து. உண்மையில் அறிவியல் படிக்காத மாணவர்களுக்கும் மருத்துவ துறையில் வாய்ப்புகள் உள்ளது. எனக்கு அறிவியல் வராது என்று வேறு பாடத்தை எடுத்த மாணவர்களும் சில படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம் மருத்துவ துறைக்கு வரலாம் என்கிறார் திருவனந்தபுரம் மருத்துவ மேலாண்மை மருத்துவ கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயராஜ சேகர்.

சுகாதார பொருளாதாரம் :


ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுகாதார திட்டங்களை எப்படி மேம்படுத்துவது, அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதை பகுப்பாய்வு செய்து முடிவு செய்வதே சுகாதார பொருளாதார வல்லுநரின் பணி. ஐ.ஐ.டி, IIHMR jaipur , IIHMR Bangalore போன்ற கல்வி நிறுவனங்கள் இதற்கான பிரத்யோக படிப்பை வழங்குகிறது. சர்வதேச அமைப்புகளான WHO, unicef மற்றும் மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து சுகாதார திட்டங்கள் அனைத்திலும் சுகாதார பொருளாதார வல்லுநரின் தேவை உள்ளது.


சோசியாலஜி மற்றும் சைக்காலஜி:


பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் Bachelor of social work மற்றும் B.Sc psychology என்ற இரண்டு படிப்புகளை வழங்குகிறது. இதில் social work என்பது சமூக நலம் சார்ந்து படிப்பது, அரசின் public health பிரிவில் இதற்கான வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. இது தவிர சைக்காலஜி படிப்பதன் மூலம் மருத்துவ மனைகளில் நோயாளிகளின் மன நலனை மேம்படுத்தல், மன நல ஆலோசனை வழங்குதல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தி கொள்ள முடியும்.

மருத்துவ மேலாண்மை:

ஒரு மருத்துவ மனைக்கு தேவையான அனைத்து விசயங்களையும் செய்து கொடுத்து, மொத்த மருத்துவமனையையும் நிர்வாகம் செய்வது தான் ஒரு மருத்துவ மேலாளரின் பணி. இதற்கென தனியாக இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் உள்ளது. இதனை படிப்பதன் மூலம் மருத்துவமனை மேலாளராக மருத்துவருக்கு இனையான அதிகாரத்தையும், ஊதியத்தையும் பெற முடியும்.
மேற்சொன்ன சில பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம் மருத்துவ துறையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தன்னை ஈடுபடுத்தி கொள்ள முடியும்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

Nursing Course: நர்சிங் படிக்க போறிங்களா...? அப்போ இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..

May 13, 2024 0

 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டது. அனைவரும் உயர்கல்வியில் என்ன படிக்கலாம்? என்ன படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும்? என்ன படித்தால் அரசு வேலை பெற முடியும் போன்ற பல கேள்விகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.

அப்படிப் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு தரக்கூடியது தான் நர்சிங் படிப்பு. இதை 12ஆம் வகுப்பு படித்தவர்கள் பட்டப்படிப்பாகவும், 10ஆம் வகுப்பு படித்தவர்கள் டிப்ளமோ படிப்பாகவும் படிக்க முடியும். நர்சிங் படித்தவர்கள் மருத்துவமனைகள், கிளினிக்குளில் செவிலியராகப் பணியாற்ற முடியும். மேலும் நர்சிங் படித்தவர்களுக்கு வெளிநாட்டிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

பிஎஸ்சி நர்சிங் பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல்) பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும். இப்படிப்பை அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் படிக்கலாம்.

அரசு செவிலியர் பள்ளிகளில் நர்சிங் டிப்ளமோ படிப்பில் 12ஆம் வகுப்பு படித்த மாணவிகள் மட்டும் சேர்க்கப்படுகிறார்கள். மாணவிகள் தமிழ் மொழியை முதல் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டியதும் அவசியம்.

நர்சிங் டிப்ளமோ படித்தாலும் சரி, நர்சிங் பட்டப்படிப்பு படித்தாலும் சரி நர்சாகப் பணிபுரிவதற்குத் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டியது அவசியம். பிஎஸ்சி நர்சிங் படிப்புக் காலம் 4 ஆண்டுகள். நர்சிங் டிப்ளமோ படிப்பு மூன்றரை ஆண்டுகளாக இருந்தது. 2016 கல்வியாண்டிலிருந்து இருந்து நர்சிங் டிப்ளமோ படிப்புக்காலம் 6 மாதங்கள் குறைக்கப்பட்டு, 3 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.

நர்சிங் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புக்கான பாடங்களில் அதிக வித்தியாசம் இல்லை. ஊதிய விகிதத்தில் நர்சிங் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்குச் சற்றுக் கூடுதலான ஊதியம் கிடைக்கும். நர்சிங் படித்தவர்களுக்கு நமது நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் நல்ல வேலைவாய்ப்பு கிடைத்து விடுகிறது.

சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் நர்சிங் அசிஸ்டென்ட் படிப்பில் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். இந்த ஓராண்டு படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் மருத்துவமனைகளில் வேலை கிடைக்கும்.



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

College Guidance : பைலட் ஆக பறக்க ஆசையா...? 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த தகவல் தெரிஞ்சுக்கோங்க...

May 13, 2024 0

 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், மாணவர்கள் தாங்கள் என்னவாக ஆக வேண்டும் என்ற கனவுக்கான விதையை விதைக்கும் நேரம் இது. ஏனென்றால், இது உங்களுக்கான முக்கிய காலகட்டம். உங்கள் கேரியர் சிறப்பாக அமைய உங்களுக்கான பாதையை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒரு வேலை உங்களுக்கு விமானி (Pilot) ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தால், உங்களுக்கான சில குறிப்பை இங்கே நாங்கள் கூறுகிறோம். இந்த குறிப்பு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். 12 ஆம் வகுப்புக்கு பின்னர் நீங்க பைலட் பயிற்சிப் படிப்பைத் தொடரலாம் . பைலட் ஆவதற்கு தேவையான தகுதிகள், பயிற்சி விவரங்கள் மற்றும் பயிற்சி கட்டணம் , குறித்த பல்வேறு தகவல்கள் பற்றிய செய்தி தொகுப்பு.

பைலட் பயிற்சியில் சேருவதற்கு ஏதாவது பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 12ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப் பிரிவுகளை எடுத்துப்படித்திருக்க வேண்டும். மாணவர்கள் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார்களா என்பதும் தெளிவான கண்பார்வை இருக்கிறதா என்பதும் முக்கியம்.


இந்தப் பயிற்சியில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன, முதல் கட்டமாக 20 மணி நேரம் பயிற்சிஅளிக்கப்படும், அப்புறம், தனியே விமானம் ஓட்டும் திறன் இருக்கிறதா என்று ஆராயப்படும் இதையடுத்து ஏர் ரெகுலேஷன், ஏர் நேவிக்கேஷன்,மெட்ரியாலஜி போன்ற சில பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெறவேண்டும். இந்தப் பயிற்சி முடிந்ததும் ஸ்டூடண்ட் பைலட் லைசென்ஸ் வழங்கப்படும்.

அதையடுத்து பயிற்சியாளர்களுடன் சேர்ந்தும், தனியாகவும் 60 மணி நேரம் விமானம் ஓட்டும் பயிற்சியை முடித்தவர்கள் பிபிஎல் எனப்படும் பிரைவேட் பைலட் லைசென்ஸ் பெறலாம்.

விமானங்களில் பைலட் ஆகப் பணிபுரியவேண்டும் என்றால் சிபிஎல் எனப்படும் கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் பெறவேண்டும். இதற்காக 250 மணி நேரம் விமானம் ஓட்டும் பயிற்சியைப் பெற வேண்டும். ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்துக்கு விமானம் ஓட்டுதல், இரவு நேரத்தில் விமானம் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளுடன் எழுத்துத்தேர்வும் உண்டு. இவை அனைத்திலும் தேர்ச்சி பெற்றால் கமர்ஷியல் பைலட் லைசென்ஸ்பெறலாம்.

இதற்கு சுமார் இரண்டு மூன்று ஆண்டு ஆகலாம். டெல்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஏவியேஷன் அமைப்புதான் இந்த கமர்ஷியல் பைலட் லைசென்சை வழங்குகிறது. ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே சேர்க்கப்பட்ட பைலட் பயிற்சியில் தற்போது பெண்களும் சேர்க்கப்படுகிறார்கள்.


நன்னடத்தை, பொறுப்புணர்ச்சி, காலம் தவறாமை, கடும் உழைப்பு, மனஉறுதி, விழிப்புணர்வு, சிக்கலான சூழ்நிலைகளிலும் உரிய முடிவு எடுத்து சமாளிக்கும் திறன், பல மணிநேரம் வானில் பயணம் செய்தாலும் பணியில் சலிப்பில்லாமல் இருக்கும் ஆர்வம் போன்ற திறன்களுடன் உடற்தகுதியும் கொண்டவர்கள் பைலட் பயிற்சியில் சேரலாம். பைலட் பயிற்சி பெறப் பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இந்தப் பயிற்சிக்கு ரூ.45 லட்சம் வரை செலவு ஆகலாம்.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

Tamilnadu Teachers Transfer 2024 - GO & Forms - School Education & Elementary Education Department!

May 13, 2024 0

 Tamilnadu Teachers Transfer 2024 - GO & Forms - School Education & Elementary Education Department!

  • Teachers Transfer Counselling and Deplayment 2024 - 2025 - Date wise Schedule - Download Here 
  • ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பத்தினை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள். - Download Here
  • Teachers Transfer - Spouse Certificate - Download Here
  • Teachers Transfer Counselling and Deplayment 2024 - 2025 - Proceedings - Download Here
  • EMIS - How to Apply for General Teachers Transfer - Download Here
  • General Transfer 2024 - One Year Exemption Details - Download Here
  • General Transfer 2024 - Priority Norms Details - Download Here
  • General Transfer 2024 - Norms GO - Download Here 

 

Important Details:

👉 அரசாணை எண்.176, ப.க.து. நாள்: 17.12.2021ன் படி. (General Transfer Counselling Policy for Teachers)...


👉 மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை (Priority) அடிப்படையில் கலந்து கொள்ளும் 9 வகையான ஆசிரியர்கள்.


👉 ஓராண்டு பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்து விலக்கு பெறும் (Exemption) 5 வகையான ஆசிரியர்கள்.

 

 


ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - 2024

 (தொடக்கக் கல்வி) - அட்டவணை


1. பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களைத் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) வாயிலாகப் பதிவேற்றம் செய்தல் - 13.05.2024 06.00AM முதல் 17.05.2024 06.00PM வரை.

2. பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் (Seniority List)மற்றும் காலிப்பணியிட விவரங்கள் (Vacancy List) வெளியிடுதல் - 20.05.2024 10.00 AM திங்கள்

3. முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் (Claims and objections)‌-2105.2024 05.00PM செவ்வாய்

4. மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் (Release off seniority list) Release of Vacancy List Final) - 23.05.2024 (வியாழன்)

5. மலைச் சுழற்சி மாறுதல் கலந்தாய்வு-24.05.2024 (வெள்ளி)

6. இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு - 28.05.2024 (செவ்வாய்)

7. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) - 31.05.2024 (வெள்ளி)

8. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)-01.06.2024(சனி) (முற்பகல்)

9. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 01.06.2024 (சனி)(பிற்பகல்)

10. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 03.06.2024 (திங்கள்)

11. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)- 06.06.2024 (வியாழன்)

12. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)-07.06.2024 வெள்ளி (முற்பகல்)

13. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)-07.06.2024 வெள்ளி (பிற்பகல்)

14. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)-08.06.2024 (சனி)

15. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)-10.06.2024 (திங்கள்)

16. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)-11.06.2024 (செவ்வாய்)(முற்பகல்)

17. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 11.06.2024 செவ்வாய் (பிற்பகல்)

18. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)-12.06.2024

19. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற் - 13.06.2024 (வியாழன்)

20. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)- 14.06.2024 (வெள்ளி)(முற்பகல்)

21. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்). - 15.06.2024.


ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - 2024

( பள்ளிக் கல்வி DSE ) உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி அட்டவணை


1. பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களைத் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) வாயிலாகப் பதிவேற்றம் செய்தல் - 13.05.2024 06.00AM முதல் 17.05.2024 06.00PM வரை.

2. பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் (Seniority List)மற்றும் காலிப்பணியிட விவரங்கள் (Vacancy List) வெளியிடுதல் - 20.05.2024 10.00 AM திங்கள்

3. முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் (Claims and objections)‌-2105.2024 05.00PM செவ்வாய்

4. மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் (Release off seniority list) Release of Vacancy List Final) - 23.05.2024 (வியாழன்)

5. அரசு / நகராட்சி    மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் ) 25.05.2024 சனி

6. அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 27.05.2024 திங்கள்

7. அரசு / நகராட்சி உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் ) 29.05.2024 புதன்

8. அரசு / நகராட்சி உயர் நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் மாறுதல் ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 30.05.2024 வியாழன்

9. அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் 01.08.2023 நிலவரப்படி ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்டவர்களை பணி நிரவல் ( PG Deployment All Subjects ) 18.06.2024 செவ்வாய்

10. அரசு / நகராட்சி முதுகலை ஆசிரியர்கள் கணினி ஆசிரியர்கள் நிலை I உடற்கல்வி இயக்குநர் நிலை I தொழிற்கல்வி ஆசிரியர்கள் ( agriculture ) மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் ) 19.06.2024 புதன்

11. அரசு / நகராட்சி முதுகலை ஆசிரியர்கள் கணினி ஆசிரியர்கள் நிலை I உடற்கல்வி இயக்குநர் நிலை I தொழிற்கல்வி ஆசிரியர்கள் ( agriculture ) மாறுதல் ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 20.06.2024 முதல் 22.06.2024 வரை வியாழன் , வெள்ளி மற்றும் சனி

12. அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 01.08.2023 நிலவரப்படி ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்டவர்களை பணி நிரவல் ( BT Deployment Tamil , English , Maths , Science , Social Science ) ( வருவாய் மாவட்டத்திற்குள் ) 26.06.2024 திங்கள்

13. அரசு / நகராட்சி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கலையாசிரியர்கள் , இசை ஆசிரியர்கள் , இடைநிலை ஆசிரியர்கள் , தையல் ஆசிரியர்கள் மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் ) 25.06.2024 செவ்வாய்

14. அரசு / நகராட்சி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கலையாசிரியர்கள் , இசை ஆசிரியர்கள் , இடைநிலை ஆசிரியர்கள் , தையல் ஆசிரியர்கள் மாறுதல் ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 26.06.2024 புதன்

15. அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் ) 27.06.2024 வியாழன்

16. அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 28.06.2024 முதல்  30.06.2024 வரை


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News