Agri Info

Adding Green to your Life

May 18, 2024

காஃபி குடிச்சாலும் எடையை ஈசியா குறைக்கலாம்.. இது இத்தனை நாள் தெரியாதா..?

May 18, 2024 0

 இன்றைய வாழ்க்கை முறை காரணமாக மனிதர்களுக்கு பெரும்பாலும் எதாவது ஒரு வியாதி வந்துவிடுகிறது. அனைவருக்கும் பொதுவாக வரும் ஒன்று அதீத எடை. அமர்ந்தே வேலை செய்வது, படிப்பது என்று உடல் உழைப்புகள் இல்லாததால் கொழுப்பு அங்கங்கே சேர்ந்துவிடுகிறது. உடல் எடையைக் குறைப்பதற்கு பலரும் பல வேலைகளை செய்கின்றனர்.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் பொழுது டீ அல்லது காபி குடிக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இந்தக் கேள்விக்கான விடையை இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். காபி அல்லது டீயை சரியான அளவுகளில், சரியான முறையில் தயாரித்து, சரியான நேரத்தில் எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.

ஒரு நாளைக்கு 3-4 கப் பால் சேர்த்த டீ அல்லது காபியுடன், பஜ்ஜி போண்டா, பிஸ்கட் என்று  ஸ்நாக்ஸ்களை எடுத்துக் கொண்டால் நிச்சயமாக உடல் எடை அதிகரிக்கும். ஆனால் நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த முறையை பின்பற்றினால், காபி குடித்தாலும் உடல் எடை அதிகரிக்காது என்று சொல்கின்றனர். உடல் எடையை குறைக்க உதவும் காபியை தான் இப்போது சொல்ல இருக்கிறோம்.

நிபுணர்களின் கருத்துப்படி, சூடான நீருடன் காபி பொடி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் எடை வேகமாக குறையுமாம். இதை காலை, மாலை அல்லது இடைப்பட்ட காலை நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம். காலை உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அல்லது சாப்பிட்ட 30 நிமிடங்கள் கழித்து இந்த காபியை எடுத்துக் கொள்ளலாம்.

இதை தூங்குவதற்கு முன் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது உங்களுடைய தூக்கத்தை பாதிக்கலாம். இந்த முறையில் காபி போட்டு கொடுத்தால் உடல் எடையை ஈசியாக குறைக்கலாம் என்று கூறுகின்றனர். எடையை குறைப்பது மட்டும் இல்லாமல், எலுமிச்சையில் வைட்டமின் A, C மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

காபி பொடி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். இது பசி உணர்வைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளலை தடுக்கிறது. காபியில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது உடலின் ஆற்றல் மட்டத்தையும், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவுகிறது. பால் இல்லாத காபி என்பதை மனதில் கொள்ளுங்கள்.பாலில் எலுமிச்சை சேர்த்தால் திறந்துவிடும். அதோடு எடையைக்குறைக்க என்னும் பொது பாலின் பயன்பாட்டைக் குறைப்பதும் நல்லது. மேலும் இந்த எலுமிச்சை காபி கலோரிகளை எரித்து உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

எலுமிச்சை காபி வைப்பது மிக எளிது. முதலில் ஒரு கப்பில் பாதி  எலுமிச்சையை பிழிந்து  சாறை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 1 ஸ்பூன்  காபி பொடி மற்றும் சுடுதண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். இனிப்பு இல்லாமல் குடிக்க முடியாதவர்கள் கொஞ்சமாக சக்கரை சேர்க்கலாம். ஆனால் சக்கரை சேர்க்காமல் இருப்பது தான் நல்லது.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

தினமும் காலையில் இந்த 7 பழக்கங்களை செய்ய உங்கள் குழந்தைகளை பழக்குங்கள்..

May 18, 2024 0

 உண்மையில் குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு குழந்தையை சிறப்பாக வளர்க்கதாய் மற்றும் தந்தை இருவருக்குமே குறிப்பிடத்தக்க அளவு நேரம், ஆற்றல் மற்றும் உணர்ச்சி வலிமை தேவைப்படுகிறது.

வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் எந்த மாதிரியான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் மட்டும் என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்தே குழந்தைகள் வளர்வார்கள் என்பதால் நாம் அவர்கள் முன் என்ன செய்கிறோம் மற்றும் என்ன பேசுகிறோம் என்பதில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் குழந்தைகள் தினமும் காலையில் கேட்க வேண்டிய 7 விஷயங்களை இங்கே பட்டியலிட்டு உள்ளோம்.

குழந்தைகளின் நாளை சரியாக தொடங்குங்கள்… ஒரு குழந்தையின் எதிர்காலத்தை மற்றும் சமூக கண்ணோட்டத்தை வடிவமைப்பதில் பெற்றோரின் வார்த்தைகள் மகத்தான சக்தியை கொண்டுள்ளன. தினசரி காலை நேரத்தில் நாம் அவர்களிடம் பேசும் வார்த்தைகள் மற்றும் கூறும் விஷயங்கள் குழந்தையின் மனநிலை மற்றும் உணர்ச்சி நல்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த கூடும். எனவே அவர்கள் தினமும் காலை நேரத்தில் கேட்க வேண்டிய விஷயங்களை இப்போது பார்க்கலாம்…

நீங்கள் உங்களின் அன்றைய தின பணிகளில் மூழ்குவதற்கு முன், உங்கள் குழந்தையை உண்மையான அரவணைப்புடனும் பாசத்துடனும் வாழ்த்த மற்றும் அவர்களை உற்சாகப்படுத்த ஒரு குட் மார்னிங் போதும். அவர்களை அணைத்து கொண்டோ அல்லது ஒரு சிரிப்புடனோ அவர்களுக்கு காலை வணக்கம் சொல்வது நீங்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும், இது அன்றைய நாளை நேர்மறையாக அவர்களுக்கு துவக்கி வைக்கும்.

காலை எழுந்ததும் உங்களுக்கு பல வேலைகள் இருக்கலாம். அதை விரைந்து முடிப்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக உங்கள் குழந்தையுடன் அமர்ந்து சிரித்து நேரம் பேசி கொண்டிருக்கலாம். தினசரி காலை இதற்கென்றே சில நிமிடங்கள் ஒதுக்குங்கள். இந்த எளிய விஷயம் உங்கள் குழந்தைக்கு, அவர்களை நீங்கள் மதிப்புமிக்கவர்களாக, நேசத்துக்குரியவர்களாக பார்க்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறது.

ஒரு குழந்தையின் ஆழ் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் வடிகால்களாக அவர்களின் லட்சியங்கள் அல்லது கனவுகள் இருக்கலாம். அவர்களின் கனவுகளை பகிர்ந்து கொள்ளும் போது ஆர்வம் காட்டுவது அல்லது நீங்களாகவே அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது உங்கள் குழந்தை உங்களிடம் பேசுவதையும், தகவல் தொடர்பையும் அவர்களுக்கு எளிதாக்குகிறது. தவிர இந்த பழக்கம் அவர்கள் அனுபவிக்கும் சிக்கல்கள் அல்லது கவலைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

உங்கள் குழந்தைக்கு அவர்கள் உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும் மகிழ்ச்சியை, உங்கள் அன்பையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதன் மூலம் அவர்களிடம் வெளிப்படுத்துங்கள். உதாரணமாக “காலையில் எழுந்ததும் உன் இனிய முகத்தை முதலில் பார்க்க விரும்புகிறேன்” என்பது போன்ற எளிய வார்த்தை அவர்களின் சுயமரியாதையை அதிகரிக்கும் மற்றும் அவர்கள் நிபந்தனையின்றி நேசிக்கப்படுவதை உறுதி செய்து அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை உருவாக்கும்.

காலை எழுந்ததும் அவர்கள் நண்பர்களுடன் வெளியே செல்வது அல்லது விளையாடுவதாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு விருப்பமான செயலாக இருந்தாலும் சரி, அல்லது புதிதாக ஏதாவது கற்று கொள்ள விரும்புவதாக இருந்தாலும் சரி அன்றைய நாளுக்கான அவர்களின் பிளான்கள் என்ன அல்லது அவர்களது ஆசைகள் பற்றிக் கேட்டு அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகத்துடன் அந்த நாளைத் தொடங்க அவர்களுக்கு உதவுங்கள்.

எவ்வளவு வேலை அல்லது பிசியாக இருந்தாலும் உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிட உங்கள் ஆர்வத்தை அவர்களிடம் வெளிப்படுத்துவது அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் இது உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துகிறது. காலை எழுந்ததும் அவர்களுடன் சிறிது நேரம் ஒன்றாக விளையாடுவது, நடைபயிற்சி செய்வது அல்லது கதை சொல்வது என எதுவாக இருந்தாலும், நீங்கள் அவர்களுடன் ஒன்றாக நேரம் செலவழிப்பதன் மூலம் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தெரியப்படுத்துங்கள்.

சிறுவயதிலிருந்தே உங்கள் குழந்தைக்கு பொறுமை, அமைதி மற்றும் சுய பாதுகாப்பு உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை சொல்லி கொடுங்கள். மேலும் இதற்கு உதாரணமாக தினசரி காலை அவர்களை அவசர அவசரமாக எதிலும் ஈடுபட வைக்காமல் அவர்கள் தங்களின் எண்ணங்களை சேகரிக்க அல்லது அமைதியான செயலில் ஈடுபட அவர்களை ஊக்குவிக்கவும்.



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

கோடைகாலத்தில் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்..!

May 18, 2024 0

 

பலருக்கும் உயர் ரத்த அழுத்த அறிகுறிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக ஹைப்பர்டென்ஷன் தினம் என்ற ஒரு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள், எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை பற்றி விவரங்கள் உலகம் முழுவதிலும் பகிரப்பட்டு வருகிறது.


ஹைபர் டென்ஷன் என்பது உயர் ரத்த அழுத்த நிலையைக் குறிக்கும், அதாவது எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆவது தான் ஹைப்பர் டென்ஷன். நம்முடைய மனநிலையை அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்த முடியாது. உயர் ரத்த அழுத்தத்திற்கு பிரத்யேகமான அறிகுறிகள் கிடையாது. தலைவலி காலையில் எழுந்து கொள்ளும் போது நிதானமின்மை, படப்படப்பாக உணர்வது ஆகியவை பல உடல் நலக் குறைபாடுகளுடன் தொடர்புடையது.

உயர் ரத்த அழுத்தத்தால் கோடிக்கணக்கானவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கோடைக்காலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தை சில உணவுகளின் மூலம் ஓரளவுக்கு நிர்வகிக்க முடியும். உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் நீங்கள் எந்த உணவுகளை சாப்பிட்டு ரத்த அழுத்தத்தை குறைக்க முயற்சிக்கலாம் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி: இனிமையான நறுமணம் கொண்ட இனிப்பும் புளிப்புச் சுவையும் ஸ்ட்ராபெர்ரியில் அந்தோசயினின் என்ற பவர்ஃபுல் ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை உள்ளன. இந்த நுண்ஊட்டச்சத்துக்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரியை அடிக்கடி சாப்பிட்டு வருவது நன்மை அளிக்கும். சாஸ், கேக்குகள், மில்க் ஷேக், மற்றும் சாலட்களில் இதைச் சேர்த்து சாப்பிடலாம்.

வாழைப்பழம்: உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான நிலையில் வைக்க உதவும் மினரல்கலான பொட்டாசியம், மற்றும் மெக்னீசியம் ஆகிய இரண்டுமே வாழைப்பழத்தில் உள்ளது. இது உடனடியாக ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும், நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானம் மேம்பட்டு, உடல் ஆரோக்கியம் பலப்படுகிறது.

மாதுளை: மாதுளை ரத்த விருத்தியை அதிகப்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. இரத்த நாளங்களின் அளவைக் கட்டுப்படுத்தும் ACE என்ற என்சைம் இதில் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து, BP அளவை சீராக வைத்திருக்கும்./

மாம்பழம்: கோடைகாலம் என்றாலே, மாம்பழத்தை தவிர்க்கவே முடியாது. சுவையான மாம்பழத்தில் நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் மற்றும் பொட்டாசியம் ஆகியவை அதிக அளவில் உள்ளது. சத்து நிறைந்த மாம்பழம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். கோடைக்காலம் முழுவதும் மாம்பழங்களை பழமாகவோ, பழச் சாறாகவோ, மில்க் ஷேக், ஸ்மூத்திகள், இனிப்பு பண்டமாகவோ சேர்த்து, சாப்பிட்டு வரலாம்.

கீரை, பீட்ரூட் போன்ற காய்கறிகள்: பெரும்பாலான கீரைகள் வகைகளில் மற்றும் பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து நிறைந்துள்ளன. இவை செரிமானம் ஆன பின்பு, நைட்ரிக் ஆக்சைடாக மாறும். நைட்ரிக் ஆக்சைடு இரத்த நாளங்களை விரிவுபடுத்துவதி தளர்த்துகிறது. இதனால், உங்கள் இரத்த அழுத்தம் குறைகிறது.

தயிர்:
 தயிரில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. வாழைப்பழம் போலவே, தயிரில் இருக்கும் சத்துக்கள் உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், தயிரில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களும் உள்ளன. வெயில் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான இயற்கை பானம் மோர். மேலும், தயிராய் அப்படியே சாப்பிடலாம், அல்லது தயிர் பச்சடி மற்றும் லஸ்ஸியாக குடிக்கலாம்.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

நீங்கள் தினமும் அலுவலகத்திற்கு மதிய உணவு எடுத்துச் செல்பவரா? நீங்கள் இதை கண்டிப்பாக படிக்க வேண்டும்!

May 18, 2024 0

 அதிகமாக சாப்பிடுவது அல்லது குறைவாக சாப்பிடுவது என இரண்டுமே உடலின் ஆரோக்கியம் மற்றும் ஆற்றலை வெகுவாக பாதிக்கும். அளவாக சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அதிக கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுக்கும். எப்போதும் சிறிய டிஃபன் பாக்ஸையே எடுத்துச் செல்லுங்கள்.

​வீட்டிலிருந்து மதிய உணவு எடுத்துச் செல்வது ஆரோக்கியமான விஷயமாகும் : நம்மில் பலர் வீட்டில் சமைத்த உணவை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்வதையே விரும்புகிறோம். ஏனெனில் அது உடலுக்கு ஆரோக்கியமானது மட்டுமின்றி வீட்டில் சமைத்த உணவின் சுவை போல் ஹோட்டல் உணவுகள் இருக்காது. இதில் கொஞ்சம் கஞ்சத்தனமும் இருக்கிறது. வேலைக்கு மதிய உணவை எடுத்துச் செல்வது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க ஒரு பயனுள்ள பழக்கமாக இருக்கலாம், ஆனால் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து சமநிலையை உறுதிப்படுத்த சில விஷயங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். சத்தான மற்றும் பாதுகாப்பான மதிய உணவை பேக் செய்வதற்கான சில டிப்ஸ்கள் இதோ..

​உங்கள் உணவு சரியான வெப்பநிலையில் உள்ளதா? நாம் அலுவலகத்திற்கு மதிய உணவைக் கொண்டு செல்லும்போது வரக்கூடிய முதன்மையான பிரச்சனைகளில் ஒன்று, உணவுகளில் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க பாதுகாப்பான வெப்பநிலையில் இருப்பதை உறுதி செய்வதாகும். இறைச்சிகள், பால் பொருட்கள் மற்றும் சமைத்த காய்கறிகள் போன்ற உணவுகள் “ஆபத்து மண்டலம்” 40°F மற்றும் 140°F (4°C மற்றும் 60°C) வெப்பநிலையில் வெளிப்படும் போது விரைவாக கெட்டுவிடும் ஆபத்துள்ளது. இந்த வெப்பநிலை வரம்பில் பாக்டீரியாக்கள் வேகமாகப் பெருகி, நோய் பரவும் அபாயத்தை அதிகரிக்கிறது.



உணவில் மாசு இல்லை என்பதை உறுதி செய்துள்ளீர்களா? இதிலிருக்கும் மற்றொரு பிரச்சனை மாசுபாடு. மூலப் பொருட்களில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உண்ணத் தயாராக இருக்கும் உணவுகளுக்கு மாறலாம். இது உணவு மூலம் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும். ஆகையால் மற்ற உணவுகளில் இருந்து பச்சை இறைச்சியை தனியாக பேக் செய்வதோடு உணவு தயாரிப்பின் போது தனித்தனி பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்.



சரியாக பேக் செய்தீர்களா? உணவுப் பாதுகாப்பாக இருப்பதற்கு முறையான ஸ்டோரேஜ் மற்றும் பேக்கேஜிங் முக்கியமானது. மதிய உணவு நேரம் வரை உணவு கெட்டுப்போகாமல் இருக்க ஹாட் பாக்ஸ் பயன்படுத்தவும். கூடுமானவரை போக்குவரத்தின் போது உடையக்கூடிய கண்ணாடிப் பாத்திரங்களைத் தவிர்க்கவும்.

​உங்கள் மதிய உணவு சமச்சீரானதா? உங்கள் மதிய உணவில் லீன் புரொட்டீன், முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்ப்பதன் மூலம் நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றலும் ஆரோக்கியமும் கிடைக்கிறது. க்ரில் சிக்கன், டோஃபு அல்லது பருப்பு வகைகள் போன்ற புரத உணவுகளை சேர்ப்பது மூலம் அடுத்த உணவு நேரம் வரை வயிறு நிறைந்த திருப்தி கிடைக்கிறது.

​நீங்கள் சரியான அளவு பேக் செய்கிறீர்களா? அதிகமாக சாப்பிடுவது அல்லது குறைவாக சாப்பிடுவது என இரண்டுமே உடலின் ஆரோக்கியம் மற்றும் ஆற்றலை வெகுவாக பாதிக்கும். அளவாக சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அதிக கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுக்கும். எப்போதும் சிறிய டிஃபன் பாக்ஸையே எடுத்துச் செல்லுங்கள்.

​நீங்கள் பாதுகாப்பான பேக்கேஜிங் பொருட்களைப் பயன்படுத்துகிறீர்களா? உங்கள் மதிய உணவை பேக் செய்வதற்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்களை உபயோகப்படுத்துவதன் மூலம் கழிவுகளைக் குறைக்கலாம். துருப்பிடிக்காத எஃகு, கண்ணாடி அல்லது சிலிகான் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைத் தேர்வு செய்யவும். முடிந்தவரை ஒருமுறை பயன்படுத்தபடும் பிளாஸ்டிக் தாள்களை தவிர்ப்பத நல்லது.




​நீர்ச்சத்து? உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லையென்றால், உணவின் ஊட்டச்சத்து கலவை சரியான பலனளிக்காது. நீர்ச்சத்து குறையாமல் இருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் அவசியமாகும். பேக் செய்யப்பட்ட மதிய உணவின் ஒரு பகுதியாக தண்ணீர் பாட்டில் கொண்டு செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சோடா அல்லது பழச்சாறு போன்ற சர்க்கரை பானங்களைத் தவிர்க்கவும், இது அதிகப்படியான கலோரி உட்கொள்ளலுக்கு பங்களிப்பதோடு நீரிழப்புக்கு வழிவகுக்கும்.



மதிய உணவில் இருக்க வேண்டிய உணவுகள் : சமச்சீரான மதிய உணவிற்கு, நீடித்த ஆற்றலையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும். க்ரில் சிக்கன், டோஃபு அல்லது பீன்ஸ் போன்ற புரத உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும். நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த பச்சை இலை கீரைகள், குடை மிளகாய் மற்றும் தக்காளி போன்ற வண்ணமயமான காய்கறிகளை நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள். நீடித்த ஆற்றல் மற்றும் நார்ச்சத்துக்காக முழு தானியங்கள், குயினோவா அல்லது சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளைச் சேர்க்கவும். வெண்ணெய், நட்ஸ் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளையும் மறந்துவிடாதீர்கள்.



​மதிய உணவில் தவிர்க்க வேண்டியவை : பதப்படுத்தப்பட்ட உணவுகள், பர்கர்கள், சிப்ஸ், வறுத்த உணவுகள் போன்ற துரித உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும். இவற்றில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளது. நாளின் பிற்பகுதியில் உடலில் செயலிழப்பை ஏற்படுத்தக்கூடிய சர்க்கரை தின்பண்டங்கள் மற்றும் இனிப்புகளைத் தவிர்க்கவும். மேலும் பிரெட் அல்லது பாஸ்தா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும்.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தினசரி கேட்க வேண்டிய 5 கேள்விகள்..!

May 18, 2024 0

 ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுடனான பிணைப்பு மற்றும் உறவை வலுவாக்க தினசரி முறையான தகவல் தொடர்பு முக்கியம். உங்களது குழந்தை பள்ளி செல்லும் பிள்ளை என்றால் அவர்களின் வயது மற்றும் தனிப்பட்ட விருப்பங்களைப் பொறுத்து நீங்கள் சில கேள்விகளை அவ்வப்போது கேட்பது உங்கள் இருவருக்குமிடையேயான உறவை மேலும் வலுவாக்கும்.

ஏற்கனவே குறிப்பிட்டதை போல குழந்தைகளின் வயதை பொறுத்து பெற்றோர்கள் கேட்கும் கேள்விகள் மாறுபடலாம். எனினும் தங்கள் குழந்தைகளிடம் பெற்றோர்கள் தினசரி கேட்க கூடிய வகையில் இருக்கும் ஐந்து பொதுவான கேள்விகளை பற்றி இங்கே பார்க்கலாம். இது அவர்களின் அன்றைய தினம் எப்படி சென்றது, அவர்களின் அனுபவங்கள் என்ன போன்ற முக்கிய விஷயங்களை அறிந்து கொள்ள பெற்றோர்களுக்கு உதவுவதோடு, நம் மீது பெற்றோர் மிகுந்த அக்கறை வைத்திருக்கிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ளவும் உதவுகிறது.

தவிர நீங்கள் தினசரி அவர்களிடம் கேட்கும் சில கேள்விகள் உங்கள் குழந்தைகள் அவர்கள் சந்திக்கும் அன்றாட அனுபவங்கள் மற்றும் நடவடிக்கைகள், உணர்ச்சிகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.

இன்று உனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய விஷயம் எது.? அன்றைய தினம் அவர்களுக்கு பிடித்த மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தருணம் பற்றி கேட்பது அவர்களுக்குள் உற்சாகம், புன்னகை மற்றும் ஒரு சிறிய குறும்புத்தனம் போன்ற எதிர்வினையோடு உங்களிடம் அவர்களின் அற்புத தருணங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த கூடும்.

உன்னை இன்று மகிழ்ச்சியாக சிரிக்க வைத்த விஷயம் எது? குழந்தைகளின் ஒரு புன்னகை ஆயிரம் உற்சாக வார்த்தைகளுக்கு சமமான மதிப்புள்ளது. எனவே அவர்களின் அந்த முத்து சிரிப்பிற்கு காரமாக இருந்த விஷ்யங்களை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளலாமே..! அன்றைய நாளில் உங்கள் குழந்தையை சிரிக்க வைத்த விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்வதன் மூலம், அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திய விஷயத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அது நண்பர்களுடன் இருக்கும் நேரத்தில் நிகழ்ந்த நகைச்சுவையாக இருந்தாலும் அல்லது பஞ்சுபோன்ற நாய்க்குட்டியை பார்த்து உற்சாகத்தில் மகிழ்ந்து சிரித்ததாக இருந்தாலும் சரி, அன்றைய நாளில் அவர்கள் எதிர்கொண்ட நல்ல அனுபவங்களை கேட்பதன் மூலம் அவர்களின் மனதை கவரலாம்.

இன்று ஏதாவது புதிய விஷயங்களை கற்று கொண்டாயா.? நாம் தூங்கி எழுந்த பின் கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே நமக்கு புதிதாக பல விஷயங்களை கற்று கொள்ளும் வாய்ப்புகளை தருகிறது, இதற்கு உங்கள் குழந்தையும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் அவர்கள் இன்று புதிதாக கற்று கொண்ட விஷயங்கள் அல்லது அனுபவங்கள், வார்த்தைகள் பற்றி நீங்கள் கேட்டு தெரிந்து கொள்வதன் மூலம், நீங்கள் அவர்களின் கற்றல் ஆர்வத்தை தூண்டுகிறீர்கள்.

இன்று நீ எப்படி மற்றவர்களுக்கு உதவியாக இருந்தாய் அல்லது உதவி செய்தாய்.? கருணை, இரக்கம் என்பது நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய குணம். வளரும் குழந்தைகளுக்கு இந்த நற்குணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். பிறருக்கு உதவுவது பற்றிய கற்பித்தலை உங்கள் குழந்தைக்கு பயிற்சி அளிப்பது சிறந்தது. அன்றைய தினம் அவர்கள் ஒருவருக்கு எப்படி உதவினார்கள் என்று கேட்பதன் மூலம், அவர்களின் இரக்க குணம் மற்றும் பச்சாதாப செயல்களில் நீங்கள் கவனம் செலுத்தலாம்.தேவைப்படும் நண்பருக்கு சிறிதாக இருந்தாலும் கூட உதவியது, அழுத அல்லது சோகமாக இருந்த உடன்பிறந்தவரை ஆறுதல்படுத்தியது அல்லது அவர்களுக்கு பிடித்தமான சிற்றுண்டியை பிறரோடு பகிர்ந்து சாப்பிட்டது போன்ற சிறிய விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டால் கூட அவர்களின் உதவும் குணத்தை ஊக்கப்படுத்த மறக்காதீர்கள்.

இன்று உனக்கு புதிதாக நண்பர்கள் யாரேனும் கிடைத்தார்களா.? நட்புக்கு எல்லையே இல்லை.! அன்றைய தினம் அவர்களுக்கு யாரேனும் புதிய நம்பர்கள் கிடைத்தார்களா என விசாரிப்பதன் மூலம் அவர்களுக்கு நட்பின் முக்கியத்துவத்தை உணர்த்த முடியும். விளையாட்டுக்காக அணி சேர்ந்ததாக இருக்கட்டும் அல்லது சக பள்ளி அல்லது வகுப்பு தோழனிடம் நன்கு பழகியதாக இருக்கட்டும் உங்கள் கண்களுக்கு முன்பாக அவர்கள் ஏற்படுத்தி கொள்ளும் புதிய மற்றும் நல்ல நட்பை ஊக்குவிக்கவும்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

டயட் இல்லாமல் உடற்பயிற்சி இல்லாமல் உங்கள் தொப்பையை குறைக்கலாம்.. எப்படி தெரியுமா..?

May 18, 2024 0

 பலர் உடல் எடையைக் குறைக்க குறைவான உணவை உண்கின்றனர் அல்லது பசியுடன் இருப்பதன் மூலம் விரைவாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கின்றனர். இந்த வழியில் நீங்கள் உங்கள் எடையை குறைக்கலாம், ஆனால் குறைவாக சாப்பிடுவது அல்லது பசியுடன் இருப்பது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும். சரியான உணவுமுறையை எடுத்துக் கொள்ளாததால், உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது, அதனால் உங்கள் உடல் பலவீனமடையும்.

அதுமட்டுமின்றி உங்கள் உடலின் எலும்புகளும் பலவீனமடையும். எனவே உங்கள் எடையை குறைக்க விரும்பினால், முக்கியமாக  தொப்பையை குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் சில பழங்களை சேர்த்துக்கொள்ளலாம். அது உங்கள் எடையைக் குறைக்கும். அதே நேரம் சத்துக்குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளும்.  தொப்பையை குறைக்க உதவும் பழங்களை சொல்கிறோம்.

கிவி: உடல் எடையை குறைக்கும் உணவுகளில் ஒன்று கிவி பழம்.  கிவியில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, கிவி விதைகள் செரிமானத்திற்கும் உதவுகிறது. அதே நேரத்தில், கிவியில் கரையக்கூடிய நார்ச்சத்து காணப்படுகிறது. இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவும். மறுபுறம், நீங்கள் இனிப்பு சாப்பிட விரும்பினால், சக்கரைக்கு பதிலாக கிவி பழத்தை சாப்பிடலாம்.

ஆப்பிள்: தொப்பையை குறைக்க ஆப்பிள் பழம் உதவும் என்று உங்களுக்கு தெரியுமா? ஏனென்றால், ஆப்பிளில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது உங்கள் செரிமான அமைப்பை நன்றாக வைத்திருக்க உதவுவதோடு எடையைக் குறைக்கவும் உதவும். அதுமட்டுமின்றி தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் நோய்களில் இருந்தும் விலகி இருக்கலாம், மேலும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

பப்பாளி: பப்பாளி சாப்பிடுவது எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகிறது. பப்பாளியில் அதிகப்படியான  நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது நம் உடலுக்கு மிகவும் நன்மையை விளைவிக்கும். அதுமட்டுமின்றி இது சரியான செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது.

வாழைப்பழம்: வாழைப்பழத்தில் கோலைன் இருக்கிறது. அதோடு இதிலிருக்கும் பி விட்டமின்கள் அடிவயிற்றில் சேர்ந்திருக்கக்கூடிய கொழுப்பைக் கரைத்திடும். மதுப்பழக்கம் உடையவர்களுக்கு கல்லீரலைச் சுற்றி கொழுப்பு படிந்திருக்கும் அதனை கரைக்கவும் வாழைப்பழம் பயன்படும்.


🔻 🔻 🔻 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Lab Technician வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

May 18, 2024 0

 Lab Technician பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc./ B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.காலிப்பணியிடங்கள்:

Lab Technician பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc./ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Entrance Examination / நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.28.05.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

SEBI நிறுவன வேலைவாய்ப்பு 2024 – 90+ காலிப்பணியிடங்கள்!

May 18, 2024 0

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் எனப்படும் SEBI நிறுவனத்தில் இருந்து தற்போது பணியிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அங்கு Officer Grade A (Assistant Manager) for the General Stream, Legal Stream, Information Technology Stream, Engineering Electrical Stream, Research Stream and Official Language Stream பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்களையும் கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Officer Grade A (Assistant Manager) for the General Stream, Legal Stream, Information Technology Stream, Engineering Electrical Stream, Research Stream and Official Language Stream பணிகளுக்கு என 97 காலிப்பணியிடங்கள் உள்ளதாக SEBI நிறுவன அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு 31.03.2024 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

SEBI கல்வித்தகுதி :

  • Bachelor’s Degree/ Master’s Degree/ Post Graduate Diploma தேர்ச்சி அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது பணி சம்பத்தப்பட்ட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

SEBI ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.44,500/- முதல் அதிகபட்சம் ரூ.89,150/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

1. Phase I Online Exam
2. Phase II Online Exam & Interview

விண்ணப்பக் கட்டணம்:

  • ST/SC/PWD விண்ணப்பத்தாரார்கள் – Rs.100/-
  • For Other விண்ணப்பத்தாரார்கள் – Rs.1000/

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் விரைவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பப் பதிவு போர்டல் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News 

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Project Fellow வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.18,000/- || முழு விவரங்களுடன்!

May 18, 2024 0

 மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Fellow பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியம் வழங்கப்படும். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

University of Madras காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

Project Fellow கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட துறையில் M.Sc / M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

University of Madras வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Fellow ஊதிய விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

University of Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து murthyboston@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.05.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

Accenture Quality Engineer காலிப்பணியிடங்கள் 2024!!

May 18, 2024 0

 சென்னையில் செயல்படும் Accenture என்னும் பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் அறிவிப்பில் Quality Engineer பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்ப தகவல்கள் ஆகியவற்றினை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்பதை அறிவுறுத்துகிறோம்.


Accenture வேலைவாய்ப்பு 2024 :

Accenture நிறுவனத்தில் Quality Engineer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Accenture கல்வித்தகுதி :

அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி (Any Graduate) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதனோடு மேற்கூறப்பட்ட பணிகளில் 2 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
தேவைப்படும் திறன்கள்:

Selenium, aspnet.
Automated Testing

Accenture தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரிவான விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ACCENTURE JOB APPLICATION 


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

May 17, 2024

IFHRMS - Kalanjiyam Mobile App New Version 1.20.2 Update (15.05.2024)

May 17, 2024 0

 




What is new?


1. Echallan employee and pensioner.

2. Pensioner Login using Kalanjiyam ID.

3. Know your kalanjiyam ID screen updated.

4. IT Declaration validation and update with redirection url updated.

5. Pension nomination, Nomination type enabled only  1. FSF and 2. LTA. Removed others details.

6. Nominee type - Only Son, daughter.

7. Add Nominee - Label Contact Name  changed to Nominee name.

8. Contact Relationship  label changed to Nominee Relationship.

9. Pensioner pay drawn Fixed the error.

10. Unread notification after reading, It is removed from the unread tab, and shown in the read tab.

11. In the retirement process - Percentage willing to commute Field validation related to that has been enabled. 

12. In Mobile App mustering, trigger SMS on successful completion.


* Echallan for employee and pensioner enabled.

* Pensioner Login using Kalanjiyam ID.

* Know your kalanjiyam ID screen enabled.

* Mustering SMS notification enabled.

* Performance Enhancement

* Major Bug fixes


Thanks & Regards.


Click Here to Update - IFHRMS - Kalanjiyam Mobile App New Version 1.20.2  (15.05.2024)

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

EMIS New Update - CLASS CHANGE REQUEST

May 17, 2024 0

 தங்கள் பள்ளி மாணவர் ஒருவரது தற்போது பயிலும் வகுப்பு தவறாக இருப்பின் அதனை சரி செய்வதற்கு CLASS CHANGE REQUEST கொடுக்க வேண்டும்.




🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

TRB பட்டதாரி ஆசிரியர்கள் இடம் அதிகரிப்பு.

May 17, 2024 0

 IMG_20240517_204442

2222 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு  செய்ய நியமன தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகப்படுத்தி உள்ளது.அதன்படி மொத்தமாக 3192  பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள்.


2222+360+610=3192


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

May 16, 2024

இந்த பழத்தை தினமும் 2 ஊற வைத்து சாப்பிட்டு பாருங்க.. இரவு படுத்தவுடனே நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.!

May 16, 2024 0

 உலர்ந்த அத்தி பழங்கள் சாப்பிடுவதற்கு ருசியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு ஊட்டச்சத்துக்களை தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது. இதன் காரணமாக இது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் அமைகிறது. இரவு முழுவதும் உலர்ந்த அத்தி பழங்களை ஊறவைத்து காலை எழுந்ததும் சாப்பிடுவதால் நமக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கிறது. அவை என்ன என்பது குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

நார்ச்சத்து நிறைந்தது ஊறவைத்த அத்திப்பழங்கள் உணவு நார்ச்சத்தின் அற்புதமான மூலமாக அமைவதால் இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை தடுக்கப்பட்டு ஆரோக்கியமான செரிமான அமைப்பு ஊக்குவிக்கப்படுகிறது.

இதய ஆரோக்கியம் மேம்படுகிறது : அத்தி பழங்களில் பொட்டாசியம் என்ற மினரல் இருப்பதால் இது ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. உங்களது அன்றாட டயட்டில் ஊறவைத்த அத்தி பழங்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளும் பொழுது ஹைப்பர் டென்ஷன் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைந்து, இதய செயல்பாடு அதிகரிக்கிறது.

நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது : உலர்ந்த அத்தி பழங்களில் இருக்கும் இயற்கை இனிப்பு சுவையையும் தாண்டி, இது குறைந்த கிளைசிமிக் எண் கொண்டிருப்பதால் நீரழிவு நோயாளிகளுக்கு இது ஒரு அற்புதமான உணவாக அமைகிறது. ஊறவைத்த அத்தி பழங்களில் உள்ள நீரில் கரையும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்கி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது : குறைந்த கலோரிகள் அதே நேரத்தில் அதிக நார்ச்சத்து நிறைந்த இந்த உலர்ந்த அத்திப்பழங்களை சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வை அளித்து உடல் எடையை குறைப்பதற்கு உறுதுணையாக இருக்கிறது.



எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது : கால்சியத்தின் சிறந்த மூலமான இந்த ஊறவைத்த அத்திப்பழங்கள் வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்கிறது. அத்தி பழங்களை தினமும் சாப்பிட்டு வர எலும்பு இழப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். குறிப்பாக பெண்களுக்கு மெனோபாஸுக்கு பிறகு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனைக்கு உலர்ந்த அத்திப்பழம் அற்புதமான தீர்வாக இருக்கிறது.


நோய் எதிர்ப்பு செயல்பாட்டை ஊக்குவிக்கிறது : வைட்டமின் சி மற்றும் ஃபிளவனாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த உலர்ந்த அத்திப்பழம் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தி, தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து நமது உடலை பாதுகாக்கிறது. வழக்கமான முறையில் நீங்கள் ஊறவைத்த அத்தி பழங்களை சாப்பிட்டு வர உங்களுடைய நோய் எதிர்ப்பு செயல்பாடு அதிகரிக்கும்.

சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது : ஊற வைத்த அத்தி பழங்களில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் E மற்றும் சிங்க் போன்றவை ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியமான கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது, வீக்கத்தை குறைக்கிறது மற்றும் ஆக்ஸிடேட்டிவ் சேதத்திற்கு எதிராக பாதுகாப்பு வழங்குகிறது. இளமையான தோற்றத்தை பெறுவதற்கு இது ஒரு சிறந்த உணவு.



புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது : கூமரின்கள் மற்றும் ஃபிளவனாய்டுகள் போன்ற ஃபைட்டோ கெமிக்கல்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே தினமும் நீங்கள் ஊறவைத்து அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்றவை ஏற்படும் அபாயம் பெருமளவு குறைகிறது.

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது : ட்ரிப்டோஃபேன் என்ற அமினோ அமிலத்தின் இயற்கையான மூலமாக அத்தி பழங்கள் தூக்கத்திற்கு அவசியமான செரடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியை தூண்டுகிறது. எனவே இரவு தூங்குவதற்கு முன்பு ஊற வைத்த அத்தி பழங்களை சாப்பிட்டு வர நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.



🔻 🔻 🔻