Agri Info

Education News, Employment News in tamil

June 3, 2024

G.O 692 - அரசு விடுமுறை நாட்கள் 2024 - Government Holidays List 2024 - தமிழக அரசு வெளியீடு

June 03, 2024 0

 ஆண்டுதோறும் தமிழகத்தில் பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன; அந்த வகையில் 2024ம் ஆண்டு 24 நாட்கள் பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி

01. ஆங்கில புத்தாண்டு( ஜன.,01)- திங்கள்

02. தைப்பொங்கல் (ஜன.,15) -திங்கள்

03. மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்(ஜன.16) - செவ்வாய்

04. உழவர் திருநாள்(ஜன.,17) - புதன்

05. தைப்பூசம்(ஜன.,25) - வியாழன்

06. குடியரசு தினம் (ஜன.,26)- வெள்ளி

07. புனிதவெள்ளி(மார்ச் 29)- வெள்ளி

08. வங்கி கணக்கு முடிவு(ஏப்.,01)- திங்கள்

09. தெலுங்கு வருட பிறப்பு( ஏப்.,09)- செவ்வாய்

10. ரம்ஜான் பண்டிகை(ஏப்., 11)- வியாழன்

11. தமிழ் வருட பிறப்பு (ஏப்.,14) - ஞாயிறு

12. மகாவீர் ஜெயந்தி(ஏப்.,21)- ஞாயிறு

13. தொழிலாளர் தினம்( மே1) -புதன்

14. பக்ரீத் பண்டிகை(ஜூன் 17) -திங்கள்

15. மொஹரம் பண்டிகை( ஜூலை 17) -புதன்

16. சுதந்திர தினம்( ஆக.,15)- வியாழன்

17. கோகிலாஷ்டமி( ஆக.,26) - திங்கள்

18. விநாயகர் சதுர்த்தி( செப்.,07) -சனி

19. மீலாடி நபி( செப்.,16) - திங்கள்

20. காந்தி ஜெயந்தி( அக்.,02) - புதன்

21. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை( அக்.,11)- வெள்ளி

22. விஜயதசமி( அக்.,12) - சனி

23. தீபாவளி ( அக்.,31) - வியாழன்

24. கிறிஸ்துமஸ் பண்டிகை(டிச.,25) - புதன்

24 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 4 விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமைந்துள்ளது.

இந்த உத்தரவு மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

G.O-692- 2024 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை  அரசாணையை டவுன்லோட் செய்ய கீழே உள்ள link - ஐ கிளிக் செய்யவும்

Click Here to Download - G.O 692 - Tamilnadu Public Holidays List  2024 - Full G.O - Pdf









Restricted Leave Days ( RL / RH List 2024) - வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் 2024

June 03, 2024 0

June 2, 2024

அடிக்கடி வயிறு என்னமோ பண்ணுதா..? குடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருக்கலாம்.. இதை செஞ்சு பாருங்க.!

June 02, 2024 0

 

மலச்சிக்கல் காரணமாக தொடர்ந்து குடல் வலி இருந்தால், அது உங்கள் தினசரி வாழ்க்கையையும் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் கடுமையாக பாதிக்கும். மலம் கழிக்கும் போது நீங்கள் வலியை அணுபவித்தால் அதற்கு இறுகிப்போன மலமே காரணமாகும். இது எதனால் ஏற்படுகிறது, இதற்கான மருத்துவ சிகிச்சை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

மலச்சிக்கலின் அறிகுறிகளை புரிந்துகொள்தல் :

வாரத்திற்கு மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழித்தாலோ அல்லது மலம் கழிக்கும் போது மிகவும் சிரமப்பட்டாலோ, அது மலச்சிக்கலின் அறிகுறியாகும். தசைபிடிப்பு, வயிற்று வலி, குறைவாக சாப்பிட்டும் வயிறு நிறைவடைந்தது போல் உணர்வது போன்றவையும் மலச்சிக்கலின் அறிகுறிகளே. அடிவயிற்றில் தொடர்ந்து வலி ஏற்பட்டால், அது எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறியின் (IBS) அறிகுறியாகும். சில சமயங்களில் இந்த வலி மலம் கழிக்கும்போது ஏற்படும் நீரிழப்பு காரணமாகவும் வரலாம்.

News18

நாள்பட்ட மலச்சிக்கலால் வரக்கூடிய பிரச்சனைகள் : 


தொடர்ந்து மலச்சிக்கல் இருந்து வந்தால் பல உடல்நலப் பிரச்சனைகள் வருவதற்கு காரணமாக அமையும். ஆகையால் இதற்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். நாள்பட்ட மலச்சிக்கல் பெருங்குடலின் சுவற்றில் சுளுக்கை ஏற்படுத்தி வடுக்களை உண்டாக்கி பெருங்குடல் அழற்சிக்கு காரணமாக இருக்கிறது. அதற்கடுத்ததாக பெருங்குடல் முழுதும் அடைத்துக்கொண்டால், வாய்வு அல்லது மலத்தை வெளியேற்ற முடியாது. இது நாளடைவில் தீவிர மலச்சிக்கலை உண்டாக்கும்.

குடல் வலிக்கான சிகிச்சை : 

நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். இது மலம் கழிப்பதை இலகுவாக்கும்.

சீரான உடற்பயிற்சி செய்வதன் மூலம் குடல் இயக்கம் மேம்பட்டு மலம் கழிப்பது எளிதாகும்.

கழிவறைக்கு செல்வதை ஒருபோதும் தாமதப்படுத்தாதீர்கள்.

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

தினமும் இத்தனை மணிக்கு கழிவறைக்கு செல்ல வேண்டும் என்ற அட்டவணையை தயார் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் குடல் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.h

குடல் இயக்கத்தை வேகப்படுத்தவும் நாள்பட்ட மலச்சிக்கலை குணப்படுத்தவும் மருந்தகத்தில் உள்ள சில மலமிளக்கி மாத்திரைகள் பயனுள்ளதாக இருக்கும்.
எப்போது மருத்துவமணை செல்ல வேண்டும்?
வீட்டு வைத்திய முறைகள் செய்து பார்த்த பிறகும் அல்லது வாழ்க்கைமுறையை மாற்றிய பிறகும் மலச்சிக்கல் அறிகுறிகள் போகவில்லை என்றால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும். காய்ச்சல், வாந்தி அல்லது குமட்டல், வாயுக்களை வெளியேற்ற முடியாமை, கடுமையான அல்லது தொடர்ச்சியான கீழ்முதுகு வலி மற்றும் வயிற்று வலி இருந்தாலோ, காரணமின்றி உடல் எடை குறைதல் அல்லது மலத்தில் ரத்தம் வெளியேறுவது போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் பல உடல்நலப் பிரச்சனைகளை தவிர்த்து நிம்மதியாக நோயின்றி வாழலாம்.


🔻 🔻 🔻 

பெண்கள் இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்.. ICMR தயார் செய்த டயட் சாட்..!

June 02, 2024 0

 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) சமீபத்தில் இந்தியர்களுக்கான சரிவிகித உணவு பற்றிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அனைத்து சத்துகளையும் சரியான விகிதத்தில் உள்ளடக்கியதாக உங்கள் உணவு இருக்க வேண்டும் என்றும், தவறான உணவு பழக்க வழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் முக்கிய வழிகாட்டுதல்களுடன் 17 வகையான அறிவுறுத்தல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், ஒரே நாளில் பல வேலைககளைச் செய்யும் பணிபுரியும் பெண்கள் மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் உணவு குறித்தும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிக்கை, பணிபுரியும் பெண்களுக்கான பிரத்யேக உணவு விளக்கத்தையும், பெண்கள் ஆரோக்கியமான உணவு விருப்பங்களை எவ்வாறு தேர்வு செய்யலாம் என்பதற்கான முக்கிய சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. பெண்களுக்கான உணவு அட்டவணை விவரங்கள் மற்றும் முக்கிய சிறப்பம்சங்களைப் கீழே பாருங்கள்…

காலை உணவு (470 கிலோகலோரி)

ஊறவைத்து, வேக வைத்த முழு தானியங்கள் - 60 கிராம்

வேகவைத்த சிவப்பு / கருப்பு பீன்ஸ், லோபியா, / கொண்டைக்கடலை - 30 கிராம்,

பச்சை இலை காய்கறிகள் - 50 கிராம்

நட்ஸ் - 20 கிராம்

மதிய உணவு (740 கிலோகலோரி)

தானியங்கள் - 80 கிராம்

பருப்பு வகைகள் - 20 கிராம்

காய்கறிகள் - 150 கிராம்

பச்சை இலை காய்கறிகள் - 50 கிராம்

நட்ஸ் / எண்ணெய் வித்துக்கள் - சமையல் எண்ணெயுடன் கறிகளில் 10கிராம் (15கிராம்)

தயிர் - 150 மிலி/பன்னீர்

பழங்கள் - 50 கிராம்

மாலை சிற்றுண்டி (35 கிலோகலோரி)

பால் 50 மி.லி.

இரவு உணவு (415 கிலோகலோரி)

தானியங்கள் - 60 கிராம்

பருப்பு வகைகள் - 15 கிராம்

காய்கறிகள் - 50 கிராம்

எண்ணெய் - 5 கிராம்

தயிர் - 100 மில்லி

பழங்கள் - 50 கிராம்

ஆரோக்கியமான விருப்பங்களை எவ்வாறு தேர்வு செய்வது?

அதிக அளவு சேர்க்கப்பட்ட சர்க்கரை மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்களைக் கொண்ட ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து சுத்திகரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவு விருப்பங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

போதுமான காய்கறிகளுடன் சீரான உணவைத் திட்டமிடுங்கள் : 

முழு தானியங்கள், முழு கோதுமை ரொட்டி, சிறுதானியங்கள், அரிசி, மூங்கில் அரிசி மற்றும் பீன்ஸ் மற்றும் பயறு போன்ற பருப்பு வகைகளை (3: 1 அல்லது 5: 1) விகிதத்தில் சேர்க்கவும். இதில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை நீடித்த ஆற்றலை வழங்குகின்றன, மேலும் கூடுதல் கலோரிகளின் தேவையை குறைக்கின்றன.

சிறப்பான சிற்றுண்டி : 

சிற்றுண்டி செய்யும் போது, நட்ஸ், வெற்று தயிர் அல்லது சில மசாலா சேர்க்கப்பட்ட வெட்டப்பட்ட காய்கறிகள் போன்ற ஊட்டச்சத்து அடர்த்தியான விருப்பங்களை செய்யுங்கள்.

காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள் : 

சாலட்களுக்கு கூடுதலாக, பலவிதமான வண்ணமயமான காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவற்றில் கலோரிகள் குறைவாக உள்ளன, ஆனால் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம். காய்கறிகளில் அதிக சமையல் எண்ணெய் சேர்க்காமல் வறுத்தல், வேகவைத்தல் மூலம் அவற்றின் சுவையை அதிகரிக்கலாம்.

மெலிந்த இறைச்சியைத் தேர்வுசெய்க : 

இறைச்சி என்று வரும்போது, தோல் இல்லாத கோழி, இறைச்சி மற்றும் மீன்களைத் தேர்வுசெய்ய வேண்டும். ஏன்னெனில் இறைச்சியின் கொழுப்புகளை ஒப்பிடும்போது, மீன்களில் கலோரிகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக இருக்கும்.

ஆரோக்கியமான சமையல் முறைகளைப் பயன்படுத்துங்கள் : 

வறுக்கப்படுவதற்கு பதிலாக கிரில்லிங், பேக்கிங், ஸ்டீமிங் அல்லது குறைந்த எண்ணெயுடன் வதக்குதல் போன்ற சமையல் முறைகளைத் தேர்வுசெய்ய வேண்டும். இது உங்கள் உணவின் ஆற்றல் அடர்த்தியைக் குறைக்கிறது.

சர்க்கரை பானங்களை கட்டுப்படுத்துங்கள் : 

சோடா, பழச்சாறுகள் மற்றும் எனர்ஜி பானங்கள் போன்ற சர்க்கரை பானங்களை குறைக்கவும். அதற்கு பதிலாக தண்ணீர், மூலிகை தேநீர் அல்லது இனிக்காத பானங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

உணவு லேபிள்களைப் படிக்கவும் ;
 
கலோரிகள், நிறைவுற்ற கொழுப்புகள், சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் மற்றும் சோடியம் பற்றிய தகவல்களுக்கு உணவு லேபிள்களை சரிபார்க்கவும். இந்த கூறுகளின் குறைந்த அளவு கொண்ட தயாரிப்புகளைத் தேர்வு செய்ய வேண்டும்.


🔻 🔻 🔻 

வாய் திறந்தபடி தூங்குகிறீர்களா? நீங்கள் இதை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்?

June 02, 2024 0

 பலரும் தங்கள் வாயை திறந்தபடி தூங்குகிறார்கள். இது ஆரோக்கியமானதல்ல என்றும் இரவு நேரத்தில் முறையற்ற சுவாசம் காரணமாகவே இவ்வாறு ஏற்படுவதாகவும் இதன் காரணமாக பல உடல்நலப் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வாயால் சுவாசிப்பதற்கும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் வருவதற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் இதை ஒழுங்காக குணப்படுத்தாவிட்டால் உயர் ரத்த அழுத்தம், டயாபடீஸ், இதய நோய் போன்ற தீவிர நோய்கள் வரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அறிகுறிகள் :  தூங்கும் போது உள்பட அனைத்து நேரமும் வாயால் சுவாசிப்பதால் பல உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெரியவர்களாக இருந்தால் இது தொண்டை வறட்சியையும், வாய் துர்நாற்றத்தையும், காலை நேர தலைவலியையும் மூளைச் சோர்வையும் உண்டாக்கும். இந்த அறிகுறிகளை எல்லாம் பார்க்கும் போது நாம் குறைவான நேரம் தூங்கி சோர்வாக இருப்பதை உணர்த்துகிறது. இதுவே குழந்தைகள் என்றால், மோசமான வளர்ச்சி, வளைந்த பற்கள், முகச்சிதைவு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். இப்படி வாயால் சுவாசிப்பது பல சமயங்களில் ஏற்கனவே இருக்கக்கூடிய மற்ற உடல்நலக் கோளாறுகளையும் அதிகப்படுத்திவிடும்.

காரணங்கள் :  பெரும்பாலான சமயங்களில் வாயால் சுவாசிப்பதற்கு காரணமாக இருப்பது மோசமான நாசித் துவார காற்று வழிப்பாதை. இந்தப் பாதை சில சமயங்களில் அடைத்துக்கொண்டோ அல்லது குறுகியதாகவோ இருக்கலாம். இதனால் ஆக்சிஜன் உள்ளிழுக்கப்படுவது குறைந்து சுவாசிப்பது சிரம்மாகிப் போகும். ஆகவே மூக்கடைப்பு தான் ஒருவர் மூக்கால் சுவாசிப்பதற்கு காரணமாக இருக்கிறது.

சிகிச்சை : 

எதனால் இவ்வாறு வாயால் சுவாசிக்கிறீர்கள் என்பதை பொறுத்து இதன் சிகிச்சை மாறுபடும். பொதுவாக சளி மற்றும் அலர்ஜி காரணமாக வரக்கூடிய மூக்கடைப்பை குணப்படுத்த மருந்துகள் தரப்படும்.

  • CPAP இயந்திரம் : இந்த இயந்திரம் காற்று வழி அழுத்தத்தை பராமரித்து நாக்கு மற்றும் தொண்டையில் பிரச்சனை வராமல் தடுக்கிறது.

  • வாயை மூடுதல் : இந்த முறையில் எதையாவது வைத்து உதடுகளை இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். இதன்மூலம் வாயால் சுவாசிப்பது தடுக்கப்படும்.

  • பல் சீரமைப்பு : க்ளிப்புகள் மற்றும் கம்பிகள் பயன்படுத்தி தாடை மற்றும் பல் வரிசையை சரிபடுத்துவதன் மூலம் காற்றோட்டத்தை அதிகப்படுத்த முடியும்.

  • முகப்பயிற்சி தெரபி : தொண்டை தசைகளுக்கு நேரடியாக சிகிச்சை கொடுப்பதன் மூலம் காற்று வழிப்பாதையை திறந்தபடி வைக்க முடியும்.

    🔻 🔻 🔻 



உங்கள் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேற என்ன காரணம்..? ஒரு பெரிய நோயின் அறிகுறியாக இருக்கலாம்

June 02, 2024 0

 கோடையில் சிறுநீரின் நிறம் மஞ்சள் நிறமாக மாறுவதை நீங்கள் அடிக்கடி கவனித்திருப்பீர்கள். மஞ்சள் நிற சிறுநீர் பல உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம். பொதுவாக மக்கள் சிறுநீரின் நிறத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் மற்றும் அதை சாதாரணமாக கருதுகிறார்கள்.

இருப்பினும், மஞ்சள் சிறுநீர் மஞ்சள் காமாலை உட்பட பல பிரச்சனைகளுடன் தொடர்புடையது. வெப்பம் சிறுநீரின் நிறத்தையும் மஞ்சள் நிறமாக மாற்றும். கோடை காலத்தில் சிறுநீர் நிறம் மாறுவது ஏன் தெரியுமா? நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க இதை அறிந்து கொள்வது அவசியம்.

புது தில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் அமரேந்திர பதக் நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.. “கோடையில் வியர்வை அதிகமாக வெளியேறும், இதனால் அவர்களின் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. நீரிழப்பு காரணமாக, சிறுநீர் குவிந்து அதன் நிறம் அடர் மஞ்சள் நிறமாக மாறும்.


கோடையில் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்காமல் இருப்பவர்களுக்கு நீரிழப்பு காரணமாக மஞ்சள் நிறமாக மாறக்கூடும். இதிலிருந்து விடுபட, மக்கள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மக்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது சிறுநீரின் நிறம் படிப்படியாக சாதாரணமாகிவிடும் ”என்றார். மேலும் அவர் “அதிக தண்ணீர் குடிப்பதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதைப் போக்க, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்” என்று கூறினார்.

News18

இது ஏதேனும் நோயின் அறிகுறியா..?

சிறுநீரக மருத்துவர்களின் கூற்றுப்படி.. ஒருவர் நிறைய தண்ணீர் குடிப்பவராக இருந்தால், நல்ல நீரேற்றம் இருந்தும் மஞ்சள் சிறுநீர் தொடர்ந்து வெளியேறினால் அவர் கவனமாக இருக்க வேண்டும். மஞ்சள் காமாலை, தொற்று அல்லது சிறுநீரக பிரச்சனைகளின் அறிகுறியாக நீண்ட நேரம் மஞ்சள் சிறுநீர் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும். இது தவிர, சில சமயங்களில் மருந்தின் காரணமாக சிறுநீரின் நிறம் மஞ்சள் நிறமாக மாறும், ஆனால் சிறிது நேரம் கழித்து அது சாதாரணமாகிவிடும். மக்கள் தங்கள் சிறுநீரின் நிறத்தில் கவனம் செலுத்த வேண்டும். இது அசாதாரணமாகத் தோன்றினால், சுகாதார நிபுணரை அணுகவும்.
சிறுநீர் எப்போது சிவப்பு நிறமாக மாறும்?
டாக்டர் அமரேந்திர பதக் பேசுகையில் “சிலருக்கு சில நேரங்களில் சிவப்பு நிற சிறுநீர் வெளியேறும். தங்கள் சிறுநீரில் இரத்தத்தைக் காணலாம். உங்கள் சிறுநீர் சிவப்பு நிறமாக இருந்தால், அது சிறுநீரக கற்கள், சிறுநீர்க்குழாய் கற்கள், சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். உங்களுக்கும் இப்படி இருந்தால் விரைவில் சிறுநீரக மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும்.

🔻 🔻 🔻 


🔻 🔻 🔻 

குழந்தைகளை வாட்டர் தீம் பார்க் அழைத்துச் செல்லும்போது இந்த 5 விஷயங்களில் கவனம்..!

June 02, 2024 0

 கோடை விடுமுறைகள் தொடங்கியுள்ளதால், வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள நம்மில் பலர், பல்வேறு இடங்களுக்குச் செல்ல திட்டமிடுவார்கள். அதிலும் குறிப்பாக, இந்த சீசனில் குடும்பங்களுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து வாட்டர்பார்க்குகளுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்த வாட்டர்பார்க்குகளானது, வாட்டர்ஸ்லைடுகள், சவாரிகள், நீச்சல் குளங்கள் மற்றும் பலவற்றால் நிரப்பப்பட்டுள்ளன. இந்த சீசனில் வாட்டர்பார்க்குகள் தண்ணீரால் நிரம்பியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், கவனமில்லாமல் இருந்தால் பல்வேறு விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன.

News18

வாட்டர்பார்க்கிற்குச் செல்லும்போது உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க மனதில் கொள்ள வேண்டிய சில பாதுகாப்பு குறிப்புகளைப் பற்றி பார்ப்போம்.

  • உங்கள் நகரத்திலும், அதைச் சுற்றிலும் பல வாட்டர்பார்க்குகள் இருக்கும். சிலது மிகவும் பெரியதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் இருக்கும், எனினும் இணையத்தில் முழுமையாக ஆராய்ந்து சரியான வாட்டர்பார்க்குகளை தேர்வு செய்ய வேண்டும்.
  • நீங்கள் குழந்தைகளுடன் வாட்டர்பார்க்கிற்குச் சென்றால், உங்களுடன் உடைகள், டவல்கள், சன்ஸ்கிரீன் லோஷன், பவுடர், தண்ணீர் பாட்டில், முதலுதவி பெட்டி மற்றும் ஸ்னாக்ஸ்களை கூடுதலாக எடுத்துச் செல்ல வேண்டும்.
  • வாட்டர்பார்க்கில் சிறிய காயங்கள் ஏற்படுவது பொதுவானவை, எனவே மருந்துகள் மற்றும் பேண்ட்-எய்ட்களை எடுத்துச் செல்வது முக்கியமானதாகும்.
  • உங்கள் குழந்தைகள் எங்கு சென்றாலும், அவர்களை பின்தொடர வேண்டும். இது அவர்களைக் கண்காணிக்கவும், அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
  • சிறு குழந்தைகளை உள்ளே நுழைய விடாமல் தடுக்கும் ஸ்லைடுகளில் இருந்து அவர்களை விலக்கி வைப்பது முக்கியமாகும். மற்றும் எந்த சவாரியிலும் அவர்களை தனியாக செல்ல விடாதீர்கள், அவர்களுடன் துணைக்கு நீங்களும் செல்வது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
  • வாட்டர்பார்க்கிற்கு செல்வதற்கு முன் திறந்திருக்கும் நேரத்தையும் உறுதி செய்ய கால் செய்ய வேண்டும். இதன் மூலம் டிக்கெட் விலை பற்றிய விவரங்களையும் நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஒரு சில வாட்டர் பார்க்கில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என இருவருக்கும் தனித்தனி நீச்சல் குளங்களைக் கொண்டிருக்கும்.
  • முடிந்தளவுக்கு விரைவாக வாட்டர்பார்க்கிற்கு செல்வதை முயற்சிக்கவும். நீங்கள் எவ்வளவு தாமதமாக செல்கிறீர்களோ, அவ்வளவு கூட்டம் அதிகமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலைகளில், உங்கள் பிள்ளைகள் சுதந்திரமாக வாட்டர்பார்க்கை பார்த்து ரசிக்க முடியாது, மேலும், உங்களுக்கு பிடித்த சவாரிகளுக்கு செல்ல அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
  • எனவே, வாட்டர்பார்க் திறக்கும் நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன் வந்து விட்டால், அதிக கூட்டத்தை சந்திக்காமல் வசதியாக உள்ளே செல்லவும் முடியும், சவாரிகளுக்கு செல்ல அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. மேலும், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதற்காக, தண்ணீரின் தரம், தூய்மை மற்றும் சுகாதார நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை தெரிந்திருப்பதும் அவசியமாகும்.


🔻 🔻 🔻 

நீங்கள் தினமும் ஒரு மணி நேர தூக்கத்தை இழந்தாலும் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா..?

June 02, 2024 0

 தூக்கம் என்பது நமது வாழ்வில் அன்றாட அவசியத் தேவைகளில் ஒன்றாகும். ஆனால் நீங்கள் ஒரு மணிநேர தூக்கத்தை இழந்தால், அதிலிருந்து மீள 4 நாட்கள் ஆகலாம், என்று நரம்பியல் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். மணிப்பால் மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் துறையின் தலைவரும், மூத்த ஆலோசகருமான மருத்துவர் சிவ குமார் ஆர், ஒரு மணிநேரம் போன்ற, சிறிய அளவிலான தூக்கம் குறையும் போது உடலில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

ஸ்லீப் ரிசர்ச் சொசைட்டியின் ஆய்வின்படி, ஒரு மணிநேர தூக்கத்தை இழந்தால் அதிலிருந்து மீள 4 நாட்கள் ஆகும் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார். முடிவெடுத்தல் மற்றும் கவனம் உள்ளிட்டவற்றிற்கு தூக்கம் முக்கியமானது என்று ஆராய்ச்சி எடுத்துரைக்கிறது. மேலும், தூக்கம் இழந்தால் மூளையின் திறனும் பலவீனமடைகிறது. உடல் உறுப்புக்கள் சீராக இயங்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும் நல்ல ஆழ்ந்த தூக்கம் தேவை. தூங்காமல் இருப்பது உடலின் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதாவது, தலைவலி, எரிச்சல், மோசமான முடிவெடுப்பது மற்றும் கவனமின்மை போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

பல நாட்கள் தொடர்ச்சியாக சிறிய அளவிலான தூக்கத்தை இழப்பதன் ஒட்டுமொத்த எதிர்மறை விளைவு என்பது, ஒரே இரவில் பல மணிநேரங்கள் தூங்காமல் இருப்பதால் அறிவாற்றல் திறன்களில் ஏற்படும் கணிசமான தாக்கங்களை போல இருக்கலாம். எனவே சீரான தூக்கத்தை பின்பற்றி நமது உடலை பராமரிக்க வேண்டும்.

கூடுதலாக, உறங்குவதற்கு முன் காஃபின் மற்றும் அதிக உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் தூக்கத்தின் இழப்பை தவிர்க்கலாம். மேலும், வழக்கமான பிஸிக்கல் ஆக்ட்டிவிட்டி செய்வது, சிறந்த தூக்கத்தை மேம்படுத்தும். சிறிய அளவிலான தூக்கம் பாதிக்கப்பட்டால் கூட, ஒருசிலருக்கு பல விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக, குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கு அதிக தூக்கம் தேவைப்படுகிறது, மேலும் ஒரு சிறிய தூக்கமின்மை கூட அவர்களின் கற்றல் திறனை பாதிக்கலாம். மற்றும் தூக்கமின்மை காரணமாக வயதானவர்களும் எளிதில் பாதிக்கப்படலாம். மூச்சுத்திணறல் அல்லது மனநலக் கோளாறுகள் போன்ற நாள்பட்ட உடல்நலக் குறைபாடுகள், தூக்கமின்மையின் அறிகுறிகளாக இருக்கலாம் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.

பல்வேறு நபர்கள் தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து டாக்டர் சுதீரிடம் ஆலோசனை கேட்டனர். ஒரு நபர், மெலடோனின் மாத்திரைகள் தூக்கமின்மைக்கு பாதுகாப்பானதா? என்று கேட்டதற்கு, “பென்சோடியாசெபைன்கள் மற்றும் சோல்பிடெமை விட மெலடோனின் பாதுகாப்பானது, இருப்பினும், ஒரு மருத்துவரை அணுகிய பின்னரே அவற்றை எடுத்துக்கொள்வது நல்லது என்று கூறியுள்ளார்.

மற்றொருவர், “ஒருவர் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்? வயது வாரியாக தயவு செய்து சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, மருத்துவர் விரிவான விளக்கத்தை வழங்கினார்.

ஒருவர் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?

  • புதிதாகப் பிறந்த குழந்தைகள் (3 மாதங்கள் வரை): 14 முதல் 17 மணி நேரம் தூங்க வேண்டும்.

  • குழந்தைகள் (4 முதல் 12 மாதங்கள் வரை): 12 முதல் 16 மணிநேரம் தூங்க வேண்டும்.

  • சிறு குழந்தைகள் (1 முதல் 5 வயது வரை): 10 முதல் 14 மணி நேரம் தூங்க வேண்டும்.

  • பள்ளி வயது குழந்தைகள் (6 முதல் 12 வயது வரை): 9 முதல் 12 மணி நேரம் தூங்க வேண்டும்.

  • டீனேஜர்கள் (13 முதல் 18 வயது வரை): 8 முதல் 10 மணி நேரம் தூங்க வேண்டும்.

    • பெரியவர்கள் (18 வயது மற்றும் அதற்கு மேல்): 7 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும்.


🔻 🔻 🔻 

ADHD பாதிப்பு என்றால் என்ன..? இதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

June 02, 2024 0

 அட்டென்ஷன் டிஃபிளிக்ட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஸார்டர் (ADHD - Attention Deficit Hyperactivity Disorder) என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு சிக்கலான நரம்பியல் கோளாறாகும். இது சுருக்கமாக கவனக்குறைவு சீர்குலைவு என்று குறிப்பிடப்படுகிறது. இது பொதுவாக குழந்தைகளிடம் மட்டுமே அதிகமாக காணப்படும்.

ஆனால் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மலையாள ஸ்டார் ஹீரோவாக இருக்கும் பகத் ஃபாசில் தனக்கு ADHD கோளாறு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது தற்போது திரையுலகை மட்டுமன்றி அவருடைய ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADHD-ஆல் பாதிக்கப்படும் நபர் வெளியுலக வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட உறவுகளின் செயல்திறனை கணிசமாக பாதிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள நபர் தங்களின் உணர்ச்சிகளை நிர்வகிப்பதில் சிரமப்படுவார்கள். இவர்கள் மிகவும் கவன குறைவாகவும், அதே சமயம் அதிவேகமாகவும் இருப்பார்கள். இவர்களால் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார முடியாது.


ADHD-ன் பொதுவான அறிகுறிகள் என்ன..?


ஒருவர் பேசும் போது அதை கவனிக்கும் திறன் எப்படி உள்ளது, பிறருடன் பழகும் திறன் உள்ளிட்டவற்றை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். உங்கள் செயல்பாட்டில் அமைதி தெரியவில்லை, நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒரு விஷயத்தை செய்கிறீர்கள், தேவையற்ற நடத்தைகளை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தால், அதிக கவனக்குறைவுடன் இருக்கிறீர்கள் எனில் அது ADHD-ஆக இருக்க கூடும்.

கவனிப்பதில் சிக்கல் :  ADHD அறிகுறிகள் இருப்பின்  கவனக்குறைவு அறிகுறிதான் முதலில் தோன்றும். எந்த ஒரு விஷயத்திலும் அதிகபட்சமாக 15 நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது. பல படிகளை உள்ளடக்கிய டாஸ்க் ஒன்றை கொடுக்கும் போது, ADHD கொண்ட  குழந்தைகள் அல்லது பெரியவர்கள் அந்த டாஸ்க்கை தொடங்க அல்லது முடிக்க மிகவும் சிரமப்படுவார்கள். இது பெரியவர்களுக்கும் பொருந்தும். ஏதாவது ஒரு செயலை செய்வது அல்லது அதன் வழிமுறைகளைப் பின்பற்றுவதில் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடுவதால் இது நிகழ்கிறது.

வழக்கத்திற்கு மாறான மறதி: ADHD பாதிப்பு கொண்ட நபர் அதிக மறதி கொண்டவர்களாக இருப்பார்கள். எதிலும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதை பெரிதாக நினைக்க மாட்டார்கள். அடிக்கடி குழப்பத்துடன் காணப்படுவார்கள். மறதி மற்றும் குழப்பம் இரண்டின் காரணமாக கவனச்சிதறலுடன் கூடிய நடத்தையை கொண்டிருப்பார்கள். இதனால் இவர்கள் தங்களின் இலக்கை மறந்து எளிதில் திசை திரும்பிவிடுவார்கள். தங்கள் பொருட்களை சரியான இடத்தில் வைக்க மாட்டார்கள்.
ஓரிடத்தில் உட்காருவது அரிது: ஏற்கனவே நாம் கூறியபடி ADHD பாதிக்கப்பட்டவர்கள் ஓரிடத்தில் சில நிமிடங்கள் கை, கால்களை வைத்து கொண்டு அமைதியாக உட்காருவது என்பது அரிது. குழந்தைகளாக இருப்பின் ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போதே அதில் கவனம் செலுத்தாமல் கிளாஸை ரவுண்ட் அடிப்பார்கள். ஓரிடத்தில் உட்கார்ந்திருந்தாலும் கை மற்றும் கால்களை அசைத்தபடி நெளிந்து கொண்டே இருப்பார்கள். அமைதியாக இருந்தாலும் அதிகபட்சம் 20 நிமிடங்கள் தான். அதற்கு மேல் அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.

அதே போல மற்றவர்களை பேச விடாமல் இடைமறித்து இவர்கள் பேசி கொண்டே இருப்பார்கள். மேற்காணும் அறிகுறிகள் 6 மாதத்திற்கும் மேல் நீடித்தால் நிச்சயமாக தகுந்த நிபுணர்களின் உதவியை நாடுவது அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள்

🔻 🔻 🔻 

TNPSC Daily Current Affairs June 2024

June 02, 2024 0

பரோட்டா அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும்..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க

June 02, 2024 0

 மைதா மாவினால் தயாரிக்கப்படும் ‘பரோட்டா’ உணவு, நமது பாரம்பரிய உணவுகளைப் பின்னுக்குத்தள்ளி, தமிழக மக்களின் முக்கிய உணவாக மாறியுள்ளது மைதா உணவு என்றாலே பலரது நினைவுக்கும் உடனே வருவது ‘பரோட்டா’ மட்டும் தான்.

எல்லா பகுதிகளிலும் மக்களை கவர்ந்த ஒரு உணவாக பரோட்டா திகழ்கிறது. மக்களையும் பரோட்டாவையும் பிரிக்க முடியாது என்ற நிலை உள்ளது. ருசியால் நம்மை கட்டி இழுத்து வசியம் செய்யும் பரோட்டாவில், எவ்வளவு பக்க விளைவுகள் இருக்கிறது என்று தெரிந்தால் அதை தொடவே மாட்டீர்கள்.

இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பீட்சா, பர்கர், பாஸ்தா, நூடுல்ஸ், ஆகிய உணவுகளில் இருப்பது மைதாவே. கேக்குகள் மற்றும் பாதுஷா, குலாப் ஜாமுன், ஜிலேபி, சோன் பப்டி போன்ற பல பிரபலமான இனிப்புகளை மைதா இல்லாமல் செய்ய முடியாது.“நான் மைதா உணவே எடுத்துக்கொள்வதில்லை, எப்போதாவது மாதம் ஒருமுறை மட்டுமே பரோட்டா. அதுவும் கோதுமை பரோட்டா தான்” என்பார்.


இதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இங்கே காண்போம். அதிகளவில் பரோட்டா சாப்பிடுவது நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. நவக்கரை ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரி ஏற்பாடு செய்த இந்தப் பேரணியில், மைதா மாவு பயன்படுத்தி தயாரிக்கப்படும் பரோட்டா மற்றும் அதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், மைதா என்பது பரோட்டாவில் மட்டுமில்லாமல் நமது பெரும்பாலான அன்றாட உணவுகளில் கலந்துள்ளது. உதாரணமாக, பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் பிரெட்கள் மைதாவால் செய்யப்பட்டவையே. இதனால், மைதா உணவுகளை தவிர்ப்பது சாத்தியமில்லை. மாலை வேளையில் தேநீருடன் எடுத்துக்கொள்ளும் பிஸ்கட், சமோசா, பகோடா, ரஸ்க், பப்ஸ் உள்ளிட்ட அனைத்திலும் மைதா உள்ளது. தினசரி நாம் மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை ஏதேனும் ஒரு வகையில் எடுத்துக்கொள்கிறோம்.

மைதாவால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள்:

·          

*   **இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் :** இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும். மேலும் இதில் மைதாவில் கலக்கப்படும் அல்லோக்ஸான், சர்க்கரை நோயாளிகளின் கணையத்தை நேரடியாக பாதிக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகள் பரோட்டா சாப்பிடக்கூடாது. மேலும் மைதாவில் தயாரிக்கப்படும் எதையும் சாப்பிடக்கூடாது.

 

*   **உடல் பருமன்:** மைதா உணவுகள் அதிக அளவில் கொழுப்பு மற்றும் எண்ணெய் கொண்டவை. பரோட்டா, சோலே பட்டூரா, பிஸ்கட்டுகள், பலகாரங்கள் ஆகியவற்றில் கூடுதல் எண்ணெய், இனிப்பு சேர்க்கப்பட்டிருக்கும்.

 

*   **நீரிழிவு நோய்:** மைதாவில் நார்சத்து இல்லை. இதனால், ரத்த சர்க்கரை அளவை உடனே அதிகரிக்கக்கூடும். நீரிழிவு நோயாளிகள் மைதா உணவுகளை தவிர்க்க வேண்டும்.

 

*   **எடை அதிகரித்தல்:** மைதா உணவுகள் எடையை அதிகரிக்கச் செய்யும்

🔻 🔻 🔻 


பள்ளிகளில் EMIS பணிகளை மேற்கொள்ள 8209 EMIS Administrator Cum Instructor நியமனம் - 05.06.2024 அன்று கணினி வழித் தேர்வு - SPD Proceedings!

June 02, 2024 0

 IMG_20240602_161945

பள்ளிகளில் EMIS பணிகளை மேற்கொள்ள 8209 EMIS Administrator Cum Instructor நியமனம் - 05.06.2024 அன்று கணினி வழித் தேர்வு - SPD Proceedings!

SPD - ACI Appointment Proceedings

Download here



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

June 02, 2024 0




மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை- மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்....
👇👇👇👇👇👇👇

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

வரலாறு படித்தால் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளது தெரியுமா ?

June 02, 2024 0

 வரலாற்றில் இளங்கலை என்பது மூன்று வருட இளங்கலை பாடத் திட்டமாகும். மேலும் வரலாற்றில் முதுகலை என்பது இரண்டு வருட முதுகலை பாடத்திட்டமாகும். இந்த பாடநெறி வரலாற்றின் பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், அரசியல் மற்றும் கருத்தியல் அம்சங்களைக் கையாள்வதால், மாணவர்கள் கருத்துக்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இதில் BA. History அதாவது வரலாறு படித்தால் என்ன பயன் என்பது பற்றியும், அதில் உள்ள சிறப்புகள் பற்றியும் விழுப்புரம் மாவட்ட அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்வரலாறு பேராசிரியர் முனைவர் ரமேஷ், வரலாறு பாடப்பிரிவை எடுத்து படித்தால் என்ன பயன்கள் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “BA. History அதாவது வரலாறு படித்தால் வேலைவாய்ப்பு இருக்கிறது.மாவட்ட வரலாறு தொடங்கி, உலக வரலாறு வரை கூறுகிற எங்கள் பாடத்திட்டத்தில் தொல்லியல், கல்வெட்டுகள், சுற்றுலாவியல், ஆவணகாப்பகம் போன்ற பாடத்திட்டங்கள் உள்ளதால் எங்கள் துறை மாணவிகள் கல்வித்துறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வரலாற்று ஆசிரியர்களாகவும், கல்வியாளர்களாகவும், வரலாற்று ஆய்வாளர்களாகவும் பணியாற்ற உதவுகிறது.


அதுவும் பி.ஏ., வரலாறு, எம்.ஏ., வரலாறு, பி.ஏ., தொல்லியல் போன்ற படிப்புகளை மேற்கொண்டால் பல வேலைவாய்ப்புகள் உள்ளது. அதுவும் பி.ஏ, வரலாறு, எம்.ஏ., வரலாறு முடித்து PG டிப்ளமோவில் பட்டய மேற்ப்படிப்பு படித்தால், மாதத்திற்கு அரசாங்கம் மூலம் 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் மத்திய, மாநில தொல்லியல் துறை மூலம் அருங்காட்சியகம் (Museums), நூலகங்கள் (Libraries), புராதன காப்பகங்கள் (Archives) சுற்றுலா துறை (Tourism), பாரம்பரியத்தை பற்றி திட்டமிடுதல் மற்றும் ஆலோசனை (Heritage Consultancy & Planning), தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சி களப்பணியாளர்கள்போன்றவேலைவாய்ப்புகளும் அளிக்கப்படுகிறது.

தற்பொழுது எம்.ஏ வரலாறு, எம்.ஏ தொல்லியல் போன்ற படிப்புகளைசென்னை பல்கலைக்கழகங்கள், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகங்கள், மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய தொல்லியல் துறையில் கல்வெட்டுக்கு என்று தனிபிரிவுள்ளது. அதில் குறிப்பாக கட்டடக்கலை, கல்வெட்டுப் பிரிவுக்கு தனி வேலை வாய்ப்பு உண்டு.அதுபோல தமிழக அரசாங்க மூலம் தொல்லியல் துறையில் அகழ்வாராய்ச்சிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் உண்டு. அதுபோன்றுஐஏஎஸ் (IAS) உயர்தர பதவிகளுக்கும் வரலாற்று துறை பாடப்பிரிவு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வரலாறு மிகவும் உதவியாக இருக்கிறது. மாணவர்கள் கண்டிப்பாக வரலாறு படித்து முடித்தால் சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலை துறை, தொல்லியல் துறை, கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் போன்ற பல வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.

எனவே கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் ஒரே படிப்பினை பின்தொடராமல் வேறுபட்ட படிப்புகளை படித்து நல்ல வேலை வாய்ப்புகளை பெற வேண்டும் என வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.ed


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news