Agri Info

Adding Green to your Life

June 11, 2024

School Morning Prayer Activities - 12.06.2024

June 11, 2024 0

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.06.2024


திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம்:கல்வி


குறள் எண்:393


கண்ணுடையர் என்பவர் கற்றோர்; முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.


பொருள்: கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே; கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.


பழமொழி :

Don't measure the worth of a person by their size.


 கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது


இரண்டொழுக்க பண்புகள் :


*புதிய வகுப்பில் புதிய நண்பர்களோடு நன்கு பழகுவேன்.


*கல்வி ஒன்றே என்னை  உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன்.

பொன்மொழி :


கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.


சுவாமி விவேகானந்தர்


பொது அறிவு : 


1. பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கிரகம் எது?


விடை: வீனஸ் (வெள்ளி)


2. தொட்டவுடன் இறக்கும் பறவை எது?


விடை: டைட்டோனி பறவை


English words & meanings :


 Persistent-விடாபிடியான


Contentment-மனநிறைவு

வேளாண்மையும் வாழ்வும்: 


நிலையான இடத்தில் மனிதன் வாழ ஆரம்பித்த பின் மனித நாகரிகத்தின் எழுச்சியில் வேளாண்மை ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது.


ஜூன் - 12 இன்று


குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.


நீதிக்கதை


 ஆனந்தாவும் புத்தரும் ஒரு வழியில் நடந்து சென்றார்கள். அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த


கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்..


 புத்தர் தன் மேல்துண்டால்அதை 


துடைத்து விட்டு.. "இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார்.


 அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை


பார்த்து சொன்னார் "ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள்


பலவீனமானவை .இவர் என்ன செய்ய முடியும்..?" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.


துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்றஉணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்..


 அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்."இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள்


பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!" என்றார். 


அவன் எழுந்து கேட்டான் "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?"என்று. 


அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.. " எண்ணியது போல் நடக்கநான் என்ன உன் அடிமையா.. ?" என்றார்...


 நீதி


நாம் நினைப்பவைகளே நடக்க வேண்டும் என்பது பேராசை தான் .


இன்றைய செய்திகள் - 12.06.2024


* ஜூன் 20-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: 4 நாள் முன்பே கூட்டத் தொடர் தொடக்கம்.


* கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக்கடன் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு.


* நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலான இளங்கலை மருத்துவ கல்விக்கான கலந்தாய்வை தொடங்க எவ்வித தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


* அசோக் எல்லுசாமி இல்லையென்றால் டெஸ்லா நிறுவனம் இல்லை: தமிழக பொறியாளருக்கு எலன் மஸ்க் புகழாரம்.


* ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல்.


Today's Headlines


* Tamil Nadu Legislative Assembly meets on June 20: Sessions begin 4 days earlier.


* Education loan through co-operatives increased from Rs 1 lakh to Rs 5 lakh: Tamil Nadu government declared.


 * The Supreme Court has said that there is no bar to start counseling for undergraduate medical education based on NEET results.


 * If it is not  Ashok Ellusamy, there would be no Tesla: Elon Musk praises the Tamil Nadu engineer.


 * Indian tennis player Sumit Nagal qualified for Olympics.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – மாத ஊதியம்: ரூ.13,500/- || உடனே விண்ணப்பியுங்கள்!

June 11, 2024 0

 திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Data Entry Operator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.13,500/- மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


DHS காலிப்பணியிடங்கள்:

Data Entry Operator பணிக்கென காலியாக உள்ள 2 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Data Entry Operator கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DHS வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Data Entry Operator ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.13,500/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DHS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.06.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

IIITDM காஞ்சிபுரத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – BE தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.37,000/-

June 11, 2024 0

 IIITDM காஞ்சிபுரம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

IIITDM காலிப்பணியிடங்கள்:

IIITDM வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / ME / M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIITDM வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு (1st 2Years )ரூ.37,000/- (3rd Year) ரூ.42,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIITDM தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் Google form link யில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

சோர்வு.. அமைதியின்மை.. அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க.. மூளை கட்டியாக இருக்கலாம்.!

June 11, 2024 0

 சோர்வு மற்றும் அமைதியின்மையால் அவதிப்பட்டு வந்த பெண் ஒருவருக்கு, முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டபோது, அதிர்ச்சிகரமாக பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

உடல் நலம் தொடர்பான சிறிய கவனக்குறைவு, பல நேரங்களில் மிகப்பெரிய பிரச்சனையை கொடுத்துவிடும். ஒரு பெண்ணுக்கும் அப்படித்தான் நடந்துள்ளது. முதலில் தொடர்ந்து சோர்வும், அமைதியின்மையாலும் அவர் அவதிப்பட்டு வந்தார். இதனால், வேலைக்கு லீவு போட்டுவிட்டு, வெகுதூர பயணங்களை மேற்கொண்டார். ஆனாலும், அவருக்கு உற்சாகமும், மன அமைதியும் கிடைக்கவில்லை.

பிறகு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றார். அப்போது மருத்துவரோ, மன அமைதிக்கான சில ஆலோசனைகளை கூறியதோடு, சோர்வை நீக்க சில மருந்துகளையும் பரிந்துரைத்தார். மருத்துவரின் ஆலோசனையை சரியாக பின்பற்றினாலும், அந்த பெண்ணுக்கு பிரச்சனை போகவில்லை. இப்போது, தலைவலியும் சேர்ந்துவிட்டது.

பிரிட்டனை சேர்ந்த அவரது பெயர் மிச்செல் ரிச்சர்ட்ஸ். 55 வயதான இவர், ஆஸ்திரேலியாவுக்கு சென்று விடுமுறையை கழித்துவிட்டு, மீண்டும் வீடு திரும்பியபோது, விடுமுறைக்கு முன்பு எப்படி இருந்ததோ, அதேபோல் சோர்வு மற்றும் மன அமைதியின்மையை எதிர்கொண்டார். தலைவலி ஏற்பட்டதும் மருத்துவரை மீண்டும் அணுகி அதற்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன்பிறகு பதற்றம் அதிகரித்தது. அதற்கும் சிகிச்சை எடுத்தார். ஆனாலும், அவருக்கு எந்த பிரச்சனையும் சரியாகவில்லை.

நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமானதால், வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்தாலும், அவருக்கு எதுவுமே சரியாக இல்லை. அந்த நேரத்தில் அவருக்கு லேசான வலிப்பு ஏற்பட்டதோடு, பக்கவாதத்திற்கான சில அறிகுறிகளும் ஏற்படத் தொடங்கின. எனவே, மருத்துவரின் ஆலோசனையின்படி, முழு உடல் பரிசோதனை மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தபோதுதான், அவரது மூளையில் ஒரு சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
5 செ.மீ., அளவில் இருந்த அந்த கட்டியை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர். இது குறித்து கூறியுள்ள மிச்செல், மூளையில் கட்டி இருந்ததை, நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, இதை நான் அதிர்ச்சியாக உணருகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார். எனவே, சிறிய பிரச்சனைகள் இருந்தாலும், அதற்கான மருத்துவச் சிகிச்சையை மேற்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


🔻 🔻 🔻 

மாணவர்களுக்காக விரைவில் ஏராளமான புதிய அறிவிப்புகள்” - அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

June 11, 2024 0

சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான புதிய அறிவிப்புகள் வர இருக்கின்றன” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.




பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்கு தொடக்க விழா மற்றும் பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் திட்ட தொடக்க விழா சென்னை ஆலந்தூர் ஏ.ஜெ.எஸ்.நிதி மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை காலை நடந்தது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு மாணவர்களுக்கான அஞ்சல் சேமிப்பு கணக்கு திட்டத்தையும், ஆதார் பதிவு மையத்தையும் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியது:“கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறந்துள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முதல் நாளிலேயே அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24-ம் தேதி தொடங்க உள்ளது. அதில், மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன..



மாணவர்கள் இந்த வயதில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர் கஷ்டப்பட்டு தங்களைப் படிக்க வைக்கின்றனர் என்பதை உணர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டும். அவர்கள் நல்ல குழந்தைகளாக வளர வேண்டும். மதிப்பெண் என்பது அடுத்ததுதான். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு இந்திய மாநிலத்திலும் பள்ளிக் கல்வித் துறைக்கு இவ்வளவு அதிக ஒதுக்கீடு கிடையாது.




அரசு பள்ளிகளில் வழங்கப்படும் புதிய திட்டங்கள் படிப்படியாக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்கள் படிப்புடன் விளையாட்டு, என்சிசி, என்எஸ்எஸ், இலக்கிய மன்றம், சுற்றுச்சூழல் மன்றம் உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் காட்ட வேண்டும். ஒட்டுமொத்த திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயண வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம். அந்த வகையில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 25 மாணவர்கள் லண்டன் செல்ல உள்ளனர்” என்று அவர் கூறினார்.




சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, “கல்வித் துறையில் இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. முதல்வர் ஸ்டாலின் பள்ளிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது,” என்றார். பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் பேசுகையில், “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கி வருகிறது. இந்த உதவிகளை மாணவ, மாணவிகள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.



முன்னதாக, பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி வரவேற்றார். நிறைவாக தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் நன்றி கூறினார். விழாவில், தனியார் பள்ளிகள் இயக்குநர் எம்.பழனிசாமி, அஞ்சலக முதுநிலை மேலாளர் கார்த்திகேயன், ஆதார் ஆணையத்தின் திட்ட மேலாளர் தினேஷ் பாபு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.







🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பள்ளிக் கல்வியின் முறைகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு!

June 11, 2024 0

 


பள்ளிக் கல்வியின் முறைகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு!

School Education Department Guidelines for - conducting District Education Review to improve the educational systems and standards Instructions issued

CS Letter to all District Collectors - Download here




🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஜூன் -12 | குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி

June 11, 2024 0

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் -12

குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஜூன் -12 ஆம் தேதி 11 மணி அளவில் அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க வேண்டும்...

Screenshot_2024-06-10-20-42-44-29_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f

pledge - Pdf Download here



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news


June 10, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.06.2024

June 10, 2024 0


நீதிக்கதை


 மன்னனும் கடல் அலையும்!


இங்கிலாந்தில் வாழ்ந்த மன்னன் கானுட். இவர் பல நாடுகளை வென்று ஒரு பெரிய ராஜாங்கத்தையே தனக்கு கீழ் நிறுவினார். அதனால் இவருக்கு பெரிய அரியாசனம் கொடுத்து இவரை பெருமையாக பேச ஆரம்பித்தார்கள்.


இவர் அரியாசனம் செல்லும் இடங்கள் எல்லாம் மன்னரை எதிர்க்க ஆள் இல்லாமல் போக ஆரம்பித்தது. அரசரை எதிர்க்க ஆளில்லை என்று பெயர் ஊரெல்லாம் பரவ ஆரம்பித்தது. இந்த பெயரால் அரசரின் உடன் இருந்தவர்கள் அவரின் புகழை பாட பாட  மன்னனுக்கு தலைக்கனம் ஏற ஆரம்பித்தது.


தன்னை எதிர்க்க யாராலும் முடியாது என்ற எண்ணம் அதிகமான  மன்னன் ஒருநாள் திரண்டு வரும் கடல் அலை கூட என் அரியாசனத்தை பார்த்தால் நின்று விடும் என சொல்ல சிலர் அவரை உங்களால் முடியும் என்று உசுப்பேத்த அவரும் அரியாசனத்தை தூக்கி கொண்டு கடலுக்கு சென்றார்.





கடல் அலை முன்னால் தனது அரியணையை எடுத்து வைத்தார். கடலுக்கும் அவர் அரியணைக்கும் இடைவெளி இருக்க, அவர் கடல் அலையை பார்த்து நில் என சத்தமாக கத்தினார். கடல் அலை மெதுவாக அடிக்கவும், அரசரும் அவர் அருகில் இருந்தவர்கள் முகத்தில் சந்தோசம் பொங்கியது.

உடனே குஷியான மன்னன் இன்னும் சத்தமாக கடல் அலையே நில் என்று சொல்ல கடலும் அதே போல அமைதியாக வீச இப்போது நின்று விடும் என நம்பினார் மன்னர். கடல் அலை சொன்னது போல நிக்குமா, என யோசித்து கொண்டே  மன்னனை பார்த்தார்கள். அவர் அகோரக்ஷமாக இன்னும் கடலை பார்த்து கத்த கடல் அலை அடிக்கவில்லை.


அவ்வளவுதான் எல்லோரும் சந்தோஷத்தில் குதிக்க, மன்னரின் புகழை பாட ஆரம்பித்தார்கள். மன்னனுக்கும் தன்னால் தான் கடல் அலை வீசவில்லை என்று தோன்ற ஆரம்பித்தது. சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கடல் அலை சுழட்டி பெரிய அலையாக அடிக்க மன்னரின் அரியனையோடு தூக்கி வீசியது. யாரும் இதை எதிர்பார்க்கவில்லை


அரசரின் தலையில் இருந்த தங்க க்ரீடம் அலையில் அடித்து கீழே விழ, அவரால் அதை மற்றவர்கள் முன்னாள் நிமிர்ந்து பார்க்க முடியாமல் போனது. இப்போது தான்  மன்னனுக்கு புரிந்தது. நம்மால் எதையுமே நிறுத்த முடியாது, முக்கியமாக இயற்கையை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாது என்பதை உணர்ந்தார். அதன் பிறகு அவரால் அரியணையில் ஏறி அமர மனம் வரவில்லை.


மக்களுக்கும் மற்ற ராஜ்ஜியத்திற்கும் அவர் செய்த செயல்கள் அவரை அரியணையில் மீண்டும் அமர விடாமல் தடுத்தது. இவர் செய்த செயல் நாடெங்கும் பரவியது. மன்னனின் தலைக்கனம் நீங்கியது. மீண்டும் அரியணை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் மனம் மாறினான். இருந்தாலும் இவன் கடல் அலையை நிறுத்த போவதாக கூறியது *சரித்திரத்தில்* இடம் பிடித்தது.


இன்றைய செய்திகள் - 11.06.2024


* தமிழக அரசு திட்டங்கள்: மாவட்ட ஆட்சியர்கள் உடன் தலைமைச் செயலர் 3 நாள் ஆலோசனை.


* ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் சேராத 193 மருத்துவர்களின் நியமன ஆணையை தமிழ்நாடு அரசின் பொதுசுகாதாரத்துறை ரத்து செய்தது.


* காசாவில் 80%-ஐ நெருங்கும் வேலையின்மை: மக்கள் நிதி நெருக்கடியில் தவிப்பு.


* நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - ஏ’ ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள்  விளையாடின. இதில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


* தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Today's Headlines


* Tamil Nadu Government Schemes: Chief Secretary was consulting with District Collectors for 3 days.


*  The Public Health Department of the Tamil Nadu Government cancelled the appointment order of 193 doctors who did not join the primary health centers.


 * Unemployment nears 80% in Gaza: People are distressed with financial crisis


*  India and Pakistan teams played in the 'Group-A' match of the ongoing T20 World Cup series.  India won by 6 runs.


 * Tamil Nadu is likely to receive light to moderate rains till  16th, according to the Chennai Meteorological Department.


 Prepared by

Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 















🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 



சென்னை மெட்ரோ ரயிலில் Manager வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,25,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

June 10, 2024 0

 சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Manager, Assistant & General Manager பணிக்கான 17 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.


CMRL காலிப்பணியிடங்கள்:

Manager, Assistant & General Manager பணிக்கென காலியாக உள்ள 17 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Manager கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B. Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

CMRL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30, 38 மற்றும் 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Manager ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,25,000/- ஊதியம் வழங்கப்படும்.

CMRL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் / மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.07.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஆவின் நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.2,00,000/- || முழு விவரங்களுடன்!

June 10, 2024 0

 

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆனது Project Manager, Marketing Consultant, Consultant மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆவின் காலிப்பணியிடங்கள்:

Project Manager, Marketing Consultant, Consultant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Consultant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E /B.Tech / M.E / M.Tech / MBA / CA /CFA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Consultant ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,00,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் வேலைக்கு தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, முன் அனுபவம், எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை எடுத்து,  பூர்த்தி செய்து  கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news