Agri Info

Adding Green to your Life

June 17, 2024

அரசு பள்ளிகளில் 6890 ஹைடெக் லேப் நிர்வாகிகள் நியமனம் பணிகளை வரையறை செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

June 17, 2024 0

 அரசுப் பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநர்களுக்கான பணிகளை பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநரகம் வரையறை செய்துள்ளது.


 தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலா 20 கணினிகளும், உயர்நிலைப் பள்ளிகளில் 10 கணினிகளும் கொண்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்) அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்களை கடந்த 5 ஆண்டுகளாக எல் அண்டு டி நிறுவனம் பராமரித்து வந்தது.அதன் பராமரிப்பு காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து ஆய்வகங்களை பராமரிப்பதற்காக கணினி தொழில்நுட்பம் அறிந்தவர்களை தேர்வு செய்யும் பணிகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் மேற்கொண்டது. அதன்படி தனியார் முகமை மூலமாக அதற்கான தேர்வு நடைமுறைகள் நடத்தப்பட்டன.


 இந்த பணிக்கான கலந்தாய்வுக்கு 7,932 பேர் அழைக்கப்பட்டனர். அதில் 7,404 பேர் கலந்து கொண்டனர்.அவர்களில் 6,890 பேர் ஆய்வக மேற்பார்வை பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சேலத்தில் 374, குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 49 என்றபடி ஆய்வக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேர்வான உயர்தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநர்களுக்கான பணிகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநரகம் வரையறை செய்து வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:இணைய வசதி வழங்கியுள்ள நிறுவனங்கள் மற்றும் மின்சாரத் துறையை உடனே அணுகி தொழில்நுட்ப குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். முக்கியமான தகவல்களை பாதுகாக்க தரவு தனியுரிமை மற்றும் ரகசியத்தன்மை கொள்கைகளை கடைபிடிப்பது அவசியம். ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகளை பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்னைகளை உடனே ஆசிரியர் பயிற்றுநர்கள் (ஐசிடி), மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டு சரி செய்ய வேண்டும்.ஆசிரியர்கள் கற்பித்தலின்போது தொழில்நுட்பத்தை திறம்பட ஒருங்கிணைக்க ஏதுவாக அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.

 எமிஸ் மற்றும் யுடிஐஎஸ்இ சார்ந்த தரவுகளின் பதிவுகளை தங்களது பள்ளிக்கும், பள்ளியுடன் இணைக்கப்பட்டுள்ள குறுவள மைய பள்ளிகளுக்கும் மேற்கொள்ள வேண்டும். தேர்வு செய்யப்பட்ட உயர்தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநர்களுக்கு மாத கவுரவ ஊதியமாக (அடிப்படை ஊதியம், பிஎப் உள்பட) ரூ.11,452 வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு: பள்ளிக் கல்வித் துறை வடிவமைப்பு

June 17, 2024 0

 

1265650

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக புதிய வழிகாட்டி கையேட்டை பள்ளிக் கல்வித் துறை வடிவமைத்துள்ளது.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வாசிப்பு இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நுழை, நட, ஓடு, பற என்ற வாசிப்பு நிலைகளில் 53 புத்தகங்கள் உருவாக்கப்பட்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் (2024-25) 70 புத்தகங்கள், வாசிப்பு இயக்கக் கையேடு ஆகியவை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: "சிறு புத்தகங்களின் மூலமாக மாணவர்களுக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை உண்டாக்கி தொடர் வாசிப்பை செயல்படுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். ஒரு கதை ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் இந்த புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


இதையடுத்து நூலக பாடவேளையில் வாசிப்பு இயக்கப் புத்தகங்களை மாணவர்களிடம் அளித்து அவர்கள் முறையாக வாசிக்கிறார்களா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். மாணவர் வாசிப்புத் திறன் மேம்பாட்டில் உயரதிகாரி முதல் ஆசிரியர் நிலை வரை ஒரு கூட்டு நடவடிக்கை அவசியமாகிறது. வாசிப்பு இயக்கத்தின் நோக்கம், தேவை, கதை வாசிப்புக்கான நேரம், தலைமை ஆசிரியர் பணிகள் போன்ற வழிகாட்டுதல்கள் இந்த கையேட்டில் இடம் பெற்றுள்ளன. இதை தலைமையாசிரியர்கள் முழுமையாக படிக்க வேண்டும்.


இதுதவிர 1 முதல் 12-ம் வகுப்பு வரை வாசிப்பு இயக்கப் புத்தகத் தொகுப்புகள் வழங்கப்படும். 4 முதல் 9 வரை உள்ள வகுப்புகளுக்கான கால அட்டவணையில் நூலக பாடவேளைகள் இருப்பது உறுதி செய்யப்படும். இலக்கிய மன்ற செயல்பாடுகள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்திலும் வாசிப்பு இயக்க புத்தகங்கள் பயன்படுத்தப்படும். இதுகுறித்து ஆய்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Hi-tech lab - புதிய கணினி பயிற்றுநர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி - SPD Proceedings

June 17, 2024 0

 Hi-tech lab களில் புதிதாக பணியில் சேர்ந்த கணினி பயிற்றுநர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி SPD அவர்களின் செயல்முறைகள்

With reference cited first above, Administrators cum Instructors have been placed in schools by KELTRON. For smooth functioning of Hi-Tech labs, KELTRON is going to provide training for 3 days for their Administrators cum Instructors from 19.06.2024 to 21.06.2024 who have been placed by them.

In this regard, it is informed to select the venues for the above mentioned training in and around the headquarter or as per your convenience and to inform the same to the selected Administrators cum Instructors once the training venue is confirmed through the Headmasters concerned. The training expenditure will be met out by KELTRON only.

State Project Director



June 16, 2024

ஃப்ரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையில் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும்..?

June 16, 2024 0

 தற்போது கோடை காலம் என்பதால், வீட்டில் உள்ள அனைத்து மின்னணு சாதனங்களும் அதிகம் சூடாகின்றன. ஏசி, ஃப்ரிட்ஜ், டிவி என எதை தொட்டாலும், வெப்ப அலைகள் எந்த அளவுக்கு இந்த சாதனங்களை பாதிக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

அதிலும் குறிப்பாக ஃபிரிட்ஜை எடுத்துக்கொண்டால், கடுமையான வெப்பம் காரணமாக அதன் எல்லா பக்கங்களும் சூடாக இருக்கிறது. ஏசி அதிகம் வெப்பமடைவதைத் தடுக்க, சீரான இடைவெளியில் அதை ஆஃப் செய்ய வேண்டும் எனக் கூறுவார்கள். ஆனால் ஃப்ரிட்ஜை பொறுத்தவரை அதை நாம் 24 மணிநேரமும் இயக்குகிறோம். இதன் காரணமாக கோடை காலத்தில் ஃப்ரிட்ஜின் கம்ப்ரஸர் மிக வேகமாக சூடாகிறது.

இதனால் ஃப்ரிட்ஜின் குளிர்ச்சி பாதிக்கும். கோடை காலத்தில் ஃப்ரிட்ஜின் கம்ப்ரஸர் நிற்காமல் வேலை செய்ய நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உங்கள் ஃப்ரிட்ஜ் பழையதாக இருந்தால், நிச்சயமாக அதிக மின்சாரத்தை செலவழிக்கும். மேலும் பழைய மாடல்கள் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன. எந்தவொரு ஃப்ரிட்ஜுக்கும் பின்னால் போதுமான இடைவெளி இருப்பது முக்கியம்.

News18

நீங்கள் ஃப்ரிட்ஜை சுவருக்கு அருகில் வைத்திருந்தால், அதன் கம்ப்ரஸருக்கு போதுமான காற்று கிடைக்காமல் போகும். இதனால் விரைவாக சூடாகி, சில சமயங்களில் ஃப்ரிட்ஜின் மோட்டாரில் தீ பற்றக்கூட அதிக வாய்ப்பு உள்ளது.உங்கள் ஃப்ரிட்ஜ் மாடல் மிகவும் பழையது என்றால் அதில் அமோனியா வாயு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இந்த வாயுக்கள் எரியும் தன்மையுடையவை. ஆகையால் இந்த மாதிரி ஃப்ரிட்ஜ்களில் வாயு கசிவு ஆபத்து மிக அதிகமாக இருக்கும்.

ஃப்ரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே எவ்வளவு தூரம் இருக்க வேண்டும்?

வீட்டில் இடத்தை மிச்சப்படுத்துவதற்காக, பலரும் சுவருக்கு அருகில் ஃப்ரிட்ஜை வைத்திருப்பார்கள். இந்த தவறை நாம் ஒருபோதும் செய்யவே கூடாது. ஃப்ரிட்ஜிற்கும் சுவருக்கும் இடையில் குறைந்தது 4-6 இன்ச் இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

எல்லா கம்ப்ரஸர்களுமே சில சத்தங்களை எழுப்புவது இயல்பானதே. ஆனால் உங்கள் கம்ப்ரசர் அதிக சத்தம் எழுப்பினாலோ அல்லது சத்தம் இல்லாமல் இருந்தாலோ நாம் கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை ஃப்ரிட்ஜில் பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது.

சுத்தப்படுத்துதல்:

நம்மில் பலரும் ஃப்ரிட்ஜின் உட்புறத்தை சுத்தம் செய்தாலும் அதன் வெளிப்புறத்தை கண்டுகொள்வதே இல்லை. உங்கள் ஃஃப்ரிட்ஜிலிருந்து நல்ல குளிர்ச்சி வர வேண்டும் என நீங்கள் விரும்பினால், அதன் பின்பகுதியில் உள்ள காயில்கள் மற்றும் துவாரங்களில் தூசி படியாமல் அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.

பொருட்களை அதிகமாக நிரப்புவது ஆபத்தானது:

ஃப்ரிட்ஜை ஒருபோதும் ஸ்டோர் ரூமாக பயன்படுத்த கூடாது. சிலர் வீட்டிலுள்ள அத்தனை பொருட்களைகளையும் ஃப்ரிட்ஜின் உள்ளே அடைத்து வைத்திருப்பார்கள். இதனால் காற்று சுழற்சியும், குளிர்ச்சியும் சரியாக இருக்காது.

உங்கள் ஃப்ரிட்ஜ் மிகவும் பழையதாக இருந்தால், அதற்கு அதிக கவனம் தேவைப்படும். ஆகையால் 10 ஆண்டுகளுக்கும் மேலான சாதனங்களை ஆண்டுக்கு ஒரு முறையாவது சரிபார்க்க வேண்டும். ஃப்ரிட்ஜில் குளிர்ச்சி சரியாக இல்லை என்று நீங்கள் ஒருவேளை உணர்ந்தால், கால தாமதமின்றி ஒரு தொழில்நுட்ப வல்லுநரை அழைத்து ஃப்ரிட்ஜை பரிசோதிக்கவும்.

🔻 🔻 🔻 

மாரடைப்பு ஏற்படும் போது வலி எப்படி இருக்கும் தெரியுமா..? ஆரம்ப நிலை அறிகுறிகள்..!

June 16, 2024 0

 மாரடைப்பு என்பது பொதுவா க சுருக்சுருக்கென்று கூர்மையாக இருக்கும் வலி மட்டுமல்ல, மாறாக இது உடலில் பரவலான அசௌகரிய உணர்வையும் ஏற்படுத்துகிறது. மாரடைப்பு வலி பொதுவாக நெஞ்சில் ஆரம்பித்து, தாடை, கை, கழுத்து என்று பரவும், சில சமயங்களில் முதுகுக்கும் பரவும், வலியும் தொடர்ந்து இருக்கும்.

இந்த அசௌகரியமான வலி உடல் முழுவதும் பரந்திருப்பதால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் வலிக்கிறது என அதை சுட்டிக்காட்ட முடியாது. திடிரென நெஞ்சு வலி ஏற்பட்டால் அவர்கள் பதறிப் போகிறார்கள். சிலர் சாதாரண அல்சர் வலி அல்லது வாயு தொந்தரவு என்று அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். திடீரென நெஞ்சு வலி வந்தால் அது உண்மையில் நெஞ்சு வலி தானா.!! அல்லது என்ன வலி என்று எப்படி கண்டறிவது?. அசிடிட்டி காரணமாக வரும் வலிக்கும் இதய வலிக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ளுங்கள்.

ஆன்டாசிட்களை எடுத்துக் கொள்ளுங்கள் : 

நெஞ்சு வலி கடுமையாக இருக்கும்போது உடனடியாக தண்ணீர் குடிக்கவும் அல்லது ஆன்டாக்சிட் எடுத்துக் கொள்ளவும். இந்த இரண்டையும் எடுத்துக் கொள்ளும் போது வலி குறைய ஆரம்பித்தால் வலி இதயத்துடன் தொடர்புடையது அல்ல, வயிற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அர்த்தம். ஏனெனில் வயிறு இதயத்தை விட வேகமாக செயல்படுகிறது. தண்ணீர் அல்லது ஆன்டாக்சிட்களை குடிப்பதால் அமில அனிச்சையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். இருப்பினும், ஆன்டாக்சிட்களை எடுத்துக் கொண்ட பிறகும் நிவாரணம் இல்லை என்றால், அது உடனடியாக மருத்துவ கவனிப்பு தேவைப்படும் இதய பிரச்சனையைக் குறிக்கிறது.


குருகிராமில் உள்ள மாரெங்கோ ஆசியா ஹாஸ்பிடல்ஸ் கார்டியாலஜியின் மருத்துவ இயக்குனர் டாக்டர் சஞ்சீவ் சவுத்ரி கருத்துப்படி, மாரடைப்பை கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான காரணம் என்னவென்றால், வலிக்கும், உடல் உழைப்புக்கும் உள்ள தொடர்பு ஆகும். ஏதாவது செய்யும் போது இதயம் இருக்கும் பகுதிக்கு அருகில் அசௌகரியம் ஏற்பட்டாலோ அல்லது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டாலோ அது மாரடைப்புடன் தொடர்புடையதாகும். அந்த வலி வரும்போது கைகளை அசைக்க முடியாது. அதனால் நெஞ்சில் கடுமையான வலி வரும்போது கையை அசைக்கக்கூட முடியவில்லை என்றால், மாரடைப்பு என்று சந்தேகித்து உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று கூறியுள்ளார்.

வேறுபாடுகளை உணர்ந்து சிகிச்சை பெறுவது : 

மாரடைப்பு வலி மற்றும் அமிலத்தன்மையை வேறுபடுத்துவதில் உள்ள சிரமம் பெரும்பாலும் தாமதமான சிகிச்சைக்கு வழிவகுக்கிறது. மாரடைப்பு அறிகுறிகளை அசிடிட்டி என்று தவறாக எண்ணி, ஆன்டாக்சிட்களைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதால், பிரச்சனை தானே தீர்ந்துவிடும் என்று நினைத்து பலர் இம்முறையை கையாள்கின்றனர். முறையான மருத்துவ சிகிச்சை பெறுவதில் ஏற்படும் இந்த தாமதமானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, வலியின் தன்மை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், எச்சரிக்கையுடன் மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியமாகும். இந்த வேறுபாடுகளை உணர்ந்து, உடனடியாக சிகிச்சை பெறுவது உயிர் காக்க வழிவகுக்கிறது.அசிடிட்டியால் ஏற்படும் வலி மற்றும் மாரடைப்பு & நெஞ்சு வலியை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மாரடைப்புக்கு முன் தோன்றும் சில அறிகுறிகளும் உள்ளன. வலி இடது பக்கத்தில் தொடங்குகிறது. தோள்பட்டை மற்றும் கைகளில் கடுமையான வலி. கழுத்தில் கடுமையான வலியும் ஏற்பட கூடும். இந்த வலிகள் மார்பு வலியுடன் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியது அவசியம். வேறு எந்த அறிகுறியும் இல்லாமல் வலி வரும் போது… தண்ணீர் அல்லது ஆன்டாசிட் சாப்பிட்ட பிறகு குறைந்தால் வலி அசிடிட்டியால் என்று முடிவு செய்து கொள்ளலாம்.

🔻 🔻 🔻 

மாங்காய்கள் Vs பழுத்த மாம்பழங்கள்.. இரண்டில் எது சிறந்தது..?

June 16, 2024 0

 பெரும்பாலும் ‘பழங்களின் ராஜா’ என்று புகழப்படும் மாம்பழங்கள் கோடைகால பழங்களில் மிகச் சிறந்தவையாகும், அவற்றின் இனிப்பு, ஜூசி பிளேவர், நறுமணம், தனித்துவமான சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களுக்காக பலராலும் நேசிக்கப்படுகிறது.

மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, தோல் ஆரோக்கியம் மற்றும் பார்வையை மேம்படுத்துகின்றன. மாம்பழத்தில், அத்தியாவசிய நார்ச்சத்துகள் நிறைந்திருக்கின்றன, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மனநிறைவை அளிக்கிறது. அவற்றின் ஈரப்பதமூட்டும் பண்புகள் கோடை வெப்பத்தை எதிர்க்க உதவுகின்றன, மேலும் அவை புத்துணர்ச்சியூட்டுவதாக இருக்கின்றன. மேலும் அவற்றை சாலடுகள் மற்றும் டெசெர்ட்களுடன் சேர்ந்து சுவையை அனுபவிக்கலாம்.

மாம்பழங்கள் அவற்றின் சுவைக்கு அப்பால், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும், ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.மாங்காய்கள் மற்றும் பழுத்த மாம்பழங்கள் இரண்டும் தனித்துவமான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. எது ஆரோக்கியமானது என்பதில் உங்களுக்கும் குழப்பம் இருந்தால், இந்த கட்டுரை உங்களுக்கானது.


ஊட்டச்சத்து ஒப்பீடு


ரா மேங்கோஸ்(Raw mangoes) என்றும் அழைக்கப்படும் மாங்காய்கள் முழுமையாக பழுப்பதற்கு முன்பே அறுவடை செய்யப்படுகிறது. அவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரும்பு சத்தை அதிகரிக்க உதவுகிறது. பச்சை மாங்காய்களில் நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது. கூடுதலாக, அவை பழுத்த மாம்பழத்துடன் ஒப்பிடும்போது சர்க்கரை நோயாளிகளுக்கு இது பொருத்தமான தேர்வாக அமைகின்றன.

மறுபுறம், பழுத்த மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ ஆனது, கண் ஆரோக்கியம், நோயெதிர்ப்பு சக்தி மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது, அதே நேரத்தில் வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. பழுத்த மாம்பழங்களில் இயற்கையான சர்க்கரைகள் நிறைந்துள்ளன, இது விரைவான ஆற்றலை வழங்குகிறது. அவை கரோட்டினாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் உட்பட பல்வேறு வகையான பைட்டோ கெமிக்கல்களைக் கொண்டிருக்கின்றன, மேலும் சில நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றன.

மாங்காய்களின் நன்மைகள்


மாங்காய்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. பழுத்த மாம்பழங்களுடன் ஒப்பிடும்போது அதிக அமிலத்தன்மை கொண்டு உள்ளதால் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. பழுக்காத மாங்காய்களில் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவது செரிமான ஆரோக்கியத்திற்கு முக்கியமானது ஆகும். இதில் வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கிறது. அவை பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளால், உடலில் ஃப்ளுயிட் பேலன்ஸை பராமரிக்க உதவுகிறது. பச்சை மாங்காய்களை உட்கொள்வது நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவும், குறிப்பாக வெப்பமான கோடை மாதங்களில். பச்சை மாங்காயில் உள்ள பெக்டின் மற்றும் வைட்டமின் சி கல்லீரலை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது. மேலும், பச்சை மாங்காய்களை வழக்கமாக உட்கொள்வதால், ஒட்டுமொத்த கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

பழுத்த மாம்பழங்களின் நன்மைகள்


பழுத்த மாம்பழங்களில் பீட்டா கரோட்டின் போன்ற சில ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்து உள்ளன, இவைதான் அதன் தோலின் நிறத்தை ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறமாக இருக்க காரணமாக அமைகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. இது நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். இந்த கரோட்டினாய்டுகள் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாகும், அவை வயது தொடர்பான மாகுலர் சிதைவு மற்றும் சில வகையான புற்று நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. பழுத்த மாம்பழங்கள் அதிக வைட்டமின் ஏ உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன. இது ஆரோக்கியமான பார்வை, நோய் எதிர்ப்பு செயல்பாடு மற்றும் தோல் ஆரோக்கியத்தை பராமரிக்க அவசியம் ஆகும். வைட்டமின் ஏ தோல் செல்களை சரிசெய்யவும், வயதான அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது, அதே நேரத்தில் வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கிறது.


ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

மாம்பழங்கள் பொதுவாக ஆரோக்கியமானதாகக் கருதப்பட்டாலும், ஒவ்வொரு உணவிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள் உள்ளன. நீங்கள் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், நீரேற்றத்தை பராமரிக்க விரும்பினால் மாங்காய்கள் சிறந்த தேர்வாக இருக்கலாம்.மேலும் பழுத்த மாம்பழத்துடன் ஒப்பிடும்போது சர்க்கரை நோயாளிகளுக்கு இது பொருத்தமான தேர்வாக அமைகின்றன. பச்சை மாங்காய்கள் மற்றும் பழுத்த மாம்பழங்கள் இரண்டும் தனித்துவமான ஆரோக்கிய நலன்களை வழங்குகின்றன, மேலும் இரண்டையும் உங்கள் உணவில் சேர்த்து கொள்வது நன்மைகளை அளிக்கும். நீங்கள் பச்சை மாங்காயின் புளிப்புத்தன்மையை அனுபவித்தாலும் அல்லது பழுத்த மாம்பழங்களின் இனிப்பை அனுபவித்தாலும், ஆரோக்கியமான உணவுக்கு மாம்பழம் ஒரு சுவையான மற்றும் சத்தான பழம் என்பதில் மாற்று கருத்து இல்லை.


🔻 🔻 🔻 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || முழு விவரங்களுடன்!

June 16, 2024 0

 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || முழு விவரங்களுடன்!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது Project Fellow பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BDU காலிப்பணியிடங்கள்:

Project Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Fellow கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc, M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BDU வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Project Fellow ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.14,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BDU தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, கொடுக்கப்பட்ட முகவரிக்கு மற்றும் senthilvelan.m@bdu.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

இந்திய கடலோர காவல்படையில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 320 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்! By

June 16, 2024 0

 Navik, Yantrik பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய கடலோர காவல்படை ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 320 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்./


Indian Coast Guard காலிப்பணியிடங்கள்:

Navik, Yantrik பணிக்கென மொத்தம் 320 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Navik கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Coast Guard வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 22 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Navik ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.29,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.

Indian Coast Guard விண்ணப்ப கட்டணம்:

SC/ST விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.300/- தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Navik தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer Based Examination மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 03.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.31000/- மாத ஊதியத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை!

June 16, 2024 0

 
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


காலிப்பணியிடங்கள்:


தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Research Fellow பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.


கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25000/- முதல் ரூ.31000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை;

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் jishy@iisertvm.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னையில் ரூ.75,000/- மாத ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

June 16, 2024 0

 

சென்னையில் ரூ.75,000/- மாத ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

Medical Officer, Associate Professor, Assistant Professor மற்றும் பல்வேறு பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை National Institute of Siddha ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NIS காலிப்பணியிடங்கள்:


தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Medical Officer, Associate Professor, Assistant Professor மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Assistant Professor கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc / MD / MS / MVSc / PG Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NIS வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 60 மற்றும் 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Assistant Professor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.24,000/- முதல் ரூ.75,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIS விண்ணப்ப கட்டணம்:

  • UR/OBC- ரூ.500
  • SC/STPWD – No Fees

Assistant Professor தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 19.06.2024 மற்றும் 22.06.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow வேலை – சம்பளம்: ரூ.35,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

June 16, 2024 0

 

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow வேலை – சம்பளம்: ரூ.35,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Research Fellow பணிக்கென காலியாக உள்ள பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

University of Madras காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

Senior Research Fellow கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட துறையில் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

University of Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

University of Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விபரத்தை 24.06.2024ம் தேதிக்குள் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

IIITDM காஞ்சிபுரத்தில் Junior Hindi Translator காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை || சம்பளம்: ரூ.35,000/-

June 16, 2024 0

 
IIITDM காஞ்சிபுரம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Hindi Translator பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

IIITDM காலிப்பணியிடங்கள்:

IIITDM வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Junior Hindi Translator பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Junior Hindi Translator தகுதி:

மத்திய அரசில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


IIITDM வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Hindi Translator ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIITDM தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து recruit@iiitdm.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

அனைத்து பள்ளிகளிலும் 'மாணவர் மனசு' புகார் பெட்டி: மகளிர் ஆணைய தலைவர் உத்தரவு

June 16, 2024 0

 

1265139

அனைத்துப் பள்ளிகளிலும் 'மாணவர் மனக்' புகார் பெட்டியை வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி உத்தரவிட்டுள்ளார்.


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி பேசியதாவது: தலைமை வகித்துப் பேசியதாவது:


அனைத்துப் பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு’ புகார் பெட்டியை வைக்க வேண்டும் புகார் பெட்டிக்கு வரும் கடிதங்களை பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் முன்னிலையில்தான் திறக்க வேண்டும். மாணவர்களின் இடைநிற்றலைக் கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்க்கத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.


பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியம் குறித்து, பெற்றோருக்கு ஆசிரியர்கள் புரியவைக்க வேண்டும். மதிப்பெண்கள் குறைவாக எடுக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் தக்க ஆலோசனையும், பயிற்சியும் வழங்க வேண்டும். மலைவாழ் மாணவ, மாணவிகள் கல்வி கற்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, இளவயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகன் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


ஸ்கேன் மையங்களை மருத்துவத் துறையினரும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு இல்லங்களை சமூக நல அலுவலர்களும் ஆய்வு செய்து, உரிய முறையில் கண்காணிக்க வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கி, பெண்களை தொழில்முனைவோராக மாற்ற வேண்டும். , நாடு வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் பேசினார்.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news