Agri Info

Adding Green to your Life

June 19, 2024

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Technical Officer காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

June 19, 2024 0

 பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது Janitor, Technical Officer மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

BDU காலிப்பணியிடங்கள்:

Janitor, Technical Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Technical Officer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / BE / B.Tech / MBA / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


BDU வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Technical Officer ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு BDU-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BDU தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள், போதிய ஆவணங்களுடன் 21.06.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

June 18, 2024

திடீரென கிட்னி செயலிழப்பதற்கு என்ன காரணம்..? ஆரம்பகால அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

June 18, 2024 0

 அக்யூட் கிட்னி இன்ஜூரி (Acute kidney injury - AKI) என்பது ஒருவரின் சிறுநீரகங்கள் திடீரென்று சரியாக வேலை செய்யாமல் போகும் நிலை மற்றும் இது பெரும்பாலும் குறுகிய காலத்திற்குள் ஏற்படுகிறது. சிறுநீரக செயல்பாட்டில் ஏற்படும் சிறிய பாதிப்பு முதல் சிறுநீரகம் முழுமையாக செயலிழப்பது வரை என இதன் பாதிப்புகள் இருக்கலாம்.

அதே போல இந்த சிறுநீரக பாதிப்பு என்பது ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் குறிப்பாக தீவிர சிகிச்சை தேவைப்படும் மோசமான கண்டிஷனில் இருக்கும் நோயாளிகளுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான நிலையாக இருக்கிறது. இந்த பாதிப்பு சிறிய அளவில் இருக்கும் போதே கண்டறிவது மற்றும் சரியாக நிர்வகிப்பது மீள்வதை எளிதாக்க கூடும் என்பதால் AKI ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்களை நாம் புரிந்து கொள்வது முக்கியம்.

பிரபல மருத்துவர் சுஜித் சாட்டர்ஜி கூறுகையில் உடலில் காணப்படும் அறிகுறிகள், மருத்துவ நிலைமைகள் மற்றும் சிறுநீரகப் பாதிப்பிற்கு பங்களிக்கும் சமீபத்திய நிகழ்வுகள் போன்ற மெடிக்கல் ஹிஸ்ட்ரி மதிப்பாய்வு மூலம் பாதிப்பை கண்டறியலாம். உடல் பரிசோதனையானது Fluid retention, குறைந்த அளவே சிறுநீர் வெளியேறுவது அல்லது சிறுநீரகச் செயலிழப்பிற்கான மற்ற அறிகுறிகளை மதிப்பிட உதவுகிறது என்றார்.

சிறுநீரக செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதற்காக Creatinine மற்றும் Blood urea nitrogen அளவை அளவிட ரத்த பரிசோதனைகள் செய்யப்படும். தவிர சிறுநீரக ஆரோக்கியத்தை மதிப்பிட சிறுநீர் பரிசோதனைகள் செய்யப்படலாம் என்றார். சில சந்தர்ப்பங்களில் சிறுநீர் பாதையில் Structural abnormalities அல்லது அடைப்புகள் உள்ளதா என்பதை கண்டறிய அல்ட்ராசவுண்ட் அல்லது CT ஸ்கேன் போன்ற இமேஜிங் சோதனைகள் செய்யப்படலாம்.

AKI பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • சிறுநீரகங்களுக்கு ரத்த ஓட்டம் குறைதல் - டிஹைட்ரேஷன், குறைந்த ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு காரணமாக இது நிகழலாம்.

  • சிறுநீரகங்களில் நேரடி பாதிப்பு - தொற்றுகள், சில மருந்துகள், டாக்ஸின்ஸ் அல்லது மெடிக்கல் இமேஜிங் செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் Contrast Dyes உள்ளிட்டவை சிறுநீரகங்களுக்கு நேரடியாக தீங்கு விளைவிக்கும்.

  • சிறுநீரகம் தொடர்பான நோய்கள் - Glomerulonephritis அல்லது Interstitial nephritis போன்ற நிலைமைகள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதிக்கலாம்.

  • சிறுநீர் பாதையில் ஏற்படும் அடைப்பு - கிட்னி ஸ்டோன்கள் அல்லது Enlarged prostate போன்ற அடைப்புகள் சிறுநீர் பாதையில் தடையை ஏற்படுத்தலாம். இது AKI பாதிப்புக்கு வழிவகுக்கும்.

AKI பாதிப்பின் பொதுவான அறிகுறிகள்:

AKI பாதிப்பின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடலாம் என்றாலும் சில பொதுவான அறிகுறிகள் இருப்பதாக கூறுகிறா மருத்துவர் சுஜித் சாட்டர்ஜி. வெளியேறும் சிறுநீரின் அளவு குறைவது, திரவம் தேங்குவதால் கால்கள், கணுக்கால் அல்லது முகத்தில் வீக்கம் ஏற்படுவது, சோர்வு மற்றும் பலவீனம், குமட்டல், வாந்தி, அல்லது பசியின்மை, மூச்சுத் திணறல் மற்றும் குழப்பம் அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம் உள்ளிட்டவை AKI-ன் பொதுவான அறிகுறிகள் என்றார்.

டீ-ஹைட்ரேஷன், தொற்று அல்லது மருந்து தொடர்பான பிரச்சினைகள் காரணமாக AKI பாதிப்பு ஏற்பட்டால் உரிய சிகிச்சைகள் அளிக்கப்படும். திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் பேலன்ஸை பராமரிப்பது மிகவும் முக்கியம். சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த நரம்பு வழி திரவங்கள் (intravenous fluids) அல்லது Diuretics கொடுக்கப்படலாம். அதே போல காரணத்தைப் பொறுத்து அறிகுறிகளை குறைக்க, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அல்லது வீக்கத்தை குறைக்க சில மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம் என்கிறார் மருத்துவர் சாட்டர்ஜி.

தீவிர நிலைகளில் சிகிச்சை…
AKI பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்தால் சிறுநீரக செயல்பாடு சீராகும் வரை ரத்தத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டி நீக்க டயாலிசிஸ் செய்யப்படலாம். பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை மதிப்பிட, நிலைமைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க வழக்கமான ஃபாலோ-அப் மற்றும் அப்பாயின்மென்ட்டை சரியாக பின்பற்ற வேண்டும்.


🔻 🔻 🔻 

வெறும் வயிற்றில் பால் குடித்தால் நல்லதா, கெட்டதா...?

June 18, 2024 0

 பாலில் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பல ஊட்டச்சத்துகள் உள்ளது. பாலில் உள்ள கால்சியம் நம் எலும்புகளையும் பற்களையும் வலுவூட்டி எலும்புப்புரை நோய் வராமல் தடுக்க உதவுகிறது. பாலில் உள்ள புரதம் தசைகளின் வளர்ச்சிக்கும் சுறுசுறுப்பான வாழ்க்கைமுறைக்கும் உதவி செய்கிறது.

வைட்டமின் பி12 போன்றவை நரம்பு செயல்பாட்டையும் ஆற்றல் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. மேலும் பாலில் உள்ள ரிபோஃப்ளேவின் ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கிறது. இதுதவிர பாலில் இருக்கும் பாஸ்பரஸ் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

பாலை அப்படியே குடிக்கலாம்; அல்லது ஸ்மூதிஸ், டெஸர்ட், செரல்ஸ் ஆகியவற்றில் கலந்தும் சாப்பிடலாம். சரிவிகித டயட்டில் முக்கியமான உணவாக இருக்கும் பால், நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உடல்நலத்திற்கும் தேவையான ஊட்டச்சத்தை தருகிறது.

இவ்வுளவு சத்துகள் நிறைந்த பாலை வெறும் வயிற்றில் குடிக்கலாமா? அப்படி குடிப்பதால் அதிலுள்ள சாதக, பாதகம் என்ன?

சாதகம்:

பாலில் நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவும் கால்சியம், புரதம், வைட்டமின் (பி12), தாதுக்கள் (பாஸ்பரஸ்) உள்ளது.

பாலில் அதிகளவு தண்ணீர் இருப்பதால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது. அதுவும் காலையில் எழுந்ததும் இதை குடிக்கும் போது கூடுதல் பயனைத் தருகிறது.

பாலில் நல்ல தரமான புரதம் உள்ளது. நம்முடைய தசை வளர்ச்சிக்கு இது அவசியமாகும்.

வெறும் வயிற்றில் பால் பருகுவதால் வாய்வுத்தொல்லை, ஏப்பம் போன்ற பிரச்சனைகள் சரியாகும் என சிலர் கூறுகிறார்கள். பாலில் உள்ள கொழுப்பு வயிற்றின் மென்படலங்களில் படர்ந்து எரிச்சலை குறைக்கிறது.

பால் பருகுவதால் வயிறு நிறைந்த திருப்தி கிடைக்கிறது. இதன் மூலம் நம்முடைய பசி அடங்குவதோடு காலையிலேயே அதிகம் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.

பாதகம்

  • சில நபர்களுக்கு, குறிப்பாக லாக்டோஸ் அல்லது பால் பொருட்கள் மீது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு வெறும் வயிற்றில் பால் குடிப்பதனால் வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை, வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகள் வர அதிக வாய்ப்புள்ளது.

  • பாலில் கொஞ்சமாக அசிடிக் தன்மை உள்ளது. ஆகையால் இதை வெறும் வயிற்றில் பருகும் போது சிலருக்கு ஆசிட் உற்பத்தி உடலில் அதிகரித்து ஏப்பம் அல்லது இரைப்பை அழற்சி போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன.

  • காலையிலேயே வெறும் வயிற்றில் பால் மட்டும் பருகினால், இதிலுள்ள கால்சியம் சத்து காரணமாக சில மருந்துகள் செயல்படாது அல்லது இரும்புச்சத்து முழுதாக உடலில் சேராது.

  • பாலில் அதிகளவு கலோரி உள்ளது. காலையில் வெறும் வயிற்றில் தினமும் பால் பருகி வந்தால் நாளடைவில் உடல் எடை அதிகரிக்கும்.

  • அரிதான சமயங்களில் பாலில் உள்ள புரதம் சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். இவர்கள் வெறும் வயிற்றில் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
    வெறும் வயிற்றில் பால் குடிப்பது உடல்நலத்திற்கு பயனளிக்குமா இல்லையா என்பதை ஒருவரின் உடல்நிலை, உணவுப்பழக்கம், சகிப்புத்தன்மை ஆகியவற்றை பொறுத்தே தீர்மானிக்கப்படும்.

    🔻 🔻 🔻 

மக்கானா அல்லது வேர்க்கடலை... இரண்டில் எது உடல் எடையை குறைக்க உதவும்..?

June 18, 2024 0

 நம் எல்லாருக்குமே நொறுக்கு தீனி சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. ஆனால் நாம் சாப்பிடும் நொறுக்கு தீனிகள் பெரும்பாலும் கலோரிகள் மற்றும் கார்போஹைடரேட் அதிகமுள்ளதாகவும் நன்கு எண்ணெயில் வறுக்கப்பட்டதாகவுமே இருக்கும். இதன் காரணமாக தேவையில்லாமல் நம் உடல் எடை அதிகரிக்கிறது. இதனால்தான் ஆரோக்கியமான, குறைவான கலோரிகள் கொண்ட ஸ்னாக்ஸை சாப்பிடுமாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

பலரும் விரும்பி உண்ணும் ஸ்னாக்ஸான தாமரை விதை (மக்கானா) அல்லது வேர்க்கடலை ஆகிய இரண்டும் சத்து நிறைந்ததோடு உடலுக்கு ஆற்றலையும் வயிறு நிறைந்த திருப்தியையும் தருகிறது. ஆனால் உடல் எடை குறைப்பிற்கு இந்த இரண்டில் எது அதிக பயனுள்ளதாக இருக்கும் என்ற கேள்வி இப்போது நம்முன் இருக்கிறது. வாருங்கள், அதைப்பற்றி விளக்கமாக பார்ப்போம்.

வேர்க்கடலை : 

வேர்க்கடலை மிகவும் மலிவான விலையில் கிடைக்க கூடியது. இதில் அதிகளவு ஆரோக்கிய கொழுப்புகள், புரதங்கள் உள்ளது. இவை செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகும் என்பதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. வேர்க்கடலையை அளவாக எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்காமல் பசியை கட்டுப்படுத்தலாம் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இது உங்களின் மெடபாலிக் விகிதங்களை அதிகரித்து மலச்சிக்கல் வராமல் தடுத்து, நாள்பட்ட இதய நோய் வரும் ஆபத்திலிருந்து தடுக்க உதவுகிறது.

வேர்க்கடையில் உள்ள ஊட்டச்சத்துகள் :

100 கிராம் வேர்க்கடலையில் 587 கலோரிகள், 28.5 கிராம் புரதம் மற்றும் 49.2 கிராம் கொழுப்புகள் உள்ளது.

தாமரை விதை (மக்கானா) : 


தாமரை விதைகளை எடுத்துகொண்டால், அதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், புரதம், மாக்னீசியம் ஆகியவை அதிகமுள்ளது. உடல் எடை குறைப்பிற்கும் தசைகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் இவை அனைத்தும் முக்கியமாகும்.

மேலும் மக்கானாவில் அழற்சி எதிர்ப்பு மற்றும் இளமை தோற்றத்தை தரும் பண்புகள் உள்ளது. உணவு சாப்பிடுவதற்கு முன் தாமரை விதையை சாப்பிடுவதால் பசி அடங்குகிறது. அதுமட்டுமின்றி இதயப் பிரச்சனை, தூக்கமின்மை, கருவுறுதல் பிரச்சனை, டயாபடீஸ் போன்ற பிரச்சனைகளை கையாளவும் தாமரை விதைகள் உதவுகிறது.

மக்கானாவில் உள்ள ஊட்டச்சத்துகள் : 

100 கிராம் மக்கானாவில் 347 கலோரிகளும், 9.7 கிராம் புரதமும் 0.1 கிராம் கொழுப்பும் உள்ளது.

இந்த இரண்டில் எது ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்?

இரண்டிலுமே ஏறக்குறைய ஒரே அளவு ஊட்டச்சத்துகளையே கொண்டிருக்கின்றன. மேலும் தேவையற்ற நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை தடுத்து வயிறு நிறைந்த திருப்தியை இரண்டுமே தருகிறது.
வேர்க்கடலை அல்லது மக்கானாவை பயன்படுத்தி சாட், சாலட், ஷேக், ஸ்மூதிஸ் ஆகியவற்றை செய்யலாம். இரண்டிலும் உள்ள ஊட்டச்சத்து மதிப்பீடை பார்த்தோமென்றால், கலோரியில் தான் மிகப்பெரிய வித்தியாசம் காணப்படுகிறது. மக்கானாவில் குறைவான கலோரிகளும் வேர்க்கடலையில் அதிக கலோரிகளும் உள்ளது. ஒருவேளை நீங்கள் அதிக கலோரிகள் உட்கொள்வதை குறைக்க வேண்டுமென நினைத்திருந்தால், வேர்க்கடலையை விட மக்கானா தான் உங்களுக்கு சரியான ஸ்னாக்ஸ் தேர்வாக இருக்கும்.



🔻 🔻 🔻 

இரவு 1 மணிக்குள் உறங்கச் சென்றால் உடலுக்கு இதெல்லாம் நடக்கும்... ஆச்சரியமூட்டும் ஆய்வு முடிவுகள்!

June 18, 2024 0

அதிகாலை 1 மணிக்குள் தூங்கச் சென்றால், மனிதர்களின் உடலில் என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நல்ல தூக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் அடிப்படை. ஒரு வயது வந்தவர் 7 முதல் 9 மணி நேரம் வரை இடைவிடாது தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதில் சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுந்து விடுவது என்பது உலகம் முழுவதும் பரிந்துரைக்கப்படும் நடைமுறையாக இருக்கிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் தூக்கத்திற்கான அவசியத்தை மேலும் வலியுறுத்தியுள்ளன.

மனநல ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில், அதிகாலை 1 மணிக்குள் படுக்கைக்குச் செல்வதால் பதற்றம் மற்றும் மனச்சோர்வு போன்ற மன மற்றும் நடத்தை சீர்குலைவுகளின் அபாயத்தைக் குறைக்கும் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய 74,000 பேரின் தூக்க முறைகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பாளரின் விருப்பமான தூக்க நேரத்தை, க்ரோனோடைப் எனப்படும் அவர்களின் உண்மையான தூக்க பழக்கங்களுடன் ஒப்பிட்டனர்.
தூக்கம் ஒருவரின் மன ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்தபோது, சரியான நேரத்தில் தூக்கத்தை கடைபிடிப்பவர்களுக்கு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது. அத்துடன் தூக்க நேரம் மற்றும் ஆழ்ந்த தூக்கம் குறித்து ஆய்வு செய்தபோது, தூக்கத்தை ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் மேற்கொள்வது மிகவும் நல்லது என்றும், தாமதமாக தூக்கம் வருவது, மன ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றும் தெரியவந்துள்ளது.
அதிகாலை 1 மணிக்குப் பிறகு படுக்கைக்குச் செல்வதை குறிக்கும் வகையில் இரவு ஆந்தைகள் எனக் கூறப்படுவோருக்கும், சீக்கிரம் தூங்குபவர்களுக்கும் இடையே இருக்கும் மனநலக் கோளாறுகள் பெரிய வித்தியாசத்தை கொடுத்திருப்பதாகவும், காலையில் சூரிய உதயத்துடன் எழுந்திருப்பவர்களுக்கு சிறந்த மன நல விளைவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.


🔻 🔻 🔻 

PMEGP திட்டம்: தொழில் தொடங்க ₹50 லட்சம் வரை கடனுதவி... இப்படி விண்ணப்பித்தால் லோன் கன்ஃபர்ம்

June 18, 2024 0

 PMEGP SCHEME ல விண்ணப்பம் செய்யக்கூடிய பெரும்பாலான நபர்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. மத்திய அரசின் கடனுதவி திட்டங்களிலேயே PMEGP திட்டத்துல விண்ணப்பம் செய்யக்கூடிய விண்ணப்பங்கள் தான் அதிகமா நிராகரிக்கப்படுகிறது.

சரியான ஆவணங்கள், தொழில் செய்வதற்கான திட்டம், விலை புள்ளி எல்லாமே சரியா இருந்தாலும் ஏன் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. எப்படி சரியான முறையில் விண்ணப்பம் செய்வது என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

PMEGP :

தொழில் தொடங்கணும்னு ஆர்வத்தோடு இருக்கக்கூடிய தொழில் முனைவோர்கள் தங்களுக்கு தேவையான முதலீட்ட PMEGP திட்டம் மூலம் பெற முடியும் . இந்த திட்டம் தற்போது தான் அறிவிக்கப்பட்டது இல்லை . ஏற்கனவே இருந்த  பிரதமரின் ரோஜ்கர் யோஜனா (PMRY)
மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (REGP)ஆகிய இரண்டு திட்டங்களும் 2008 ஆண்டு சேர்க்கப்பட்டு PMEGP என்று திட்டமாக உருவாகியது.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்று சொல்லக்கூடிய PMEGP திட்டத்தினுடைய நோக்கமே வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் முனைவர் ஆக்கி அதனுடன் வேலைவாய்ப்பு உருவாக்குவது ஆகும்.

இந்தத் திட்டத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சிறு, குறு நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி நிறுவனங்கள் துவங்க ரூபாய்
25 இலட்சமும், சேவை நிறுவனங்கள் துவங்க ரூ.10.00 இலட்சமும் வங்கிக் கடன் பெற முடியும் . திட்ட மதிப்பீட்டில் 25%மானியம் நகர்புறங்களுக்கும், 35%மானியம் ஊரகபகுதிகளில் தொழில் துவங்கவோருக்கும் அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் உற்பத்திபிரிவின் கீழ் ரூ.10.00 இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவை பிரிவின் கீழ் ரூ.5.00 இலட்சம் மேற்பட்ட திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்புவோர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்திற்கு வயது வரம்பு கிடையாது.


என்ன என்ன தொழிலுக்கு கடன் கிடைக்கும்:

தகுதியான நபர்கள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, உணவு எண்ணெய் தயாரித்தல், ப்ளோரிங் டைல்ஸ் மற்றும் ஹோலோப்ளாக், இலவம் பஞ்சுமெத்தை, தலையணை தயாரித்தல், கால்நடை தீவனம் தயாரிப்பு, ஆட்டோ மொபைல் சர்வீஸ் ஸ்டேசன், காயர் மற்றும் காயர் பித் ப்ளாக்ஸ், பேக்கரி மற்றும் உணவகம், அழகு நிலையம், பெட் பாட்டில்கள் தயாரிப்பு மசாலா பொருட்கள் தயாரிப்பு போன்ற உற்பத்தி மற்றும் சேவை. நிறுவனங்கள் தொடங்க முன்வரலாம்.

எந்த தொழிலுக்கு கிடைக்காது :

மத்திய அல்லது மாநில அரசின் மானியத்துடன் கூடிய ஏதேனும் ஒரு திட்டத்தில் கடன் பெற்றவர்கள் PMEGP திட்டத்தில் விண்ணபிக்க இயலாது. வியாபாரம் சார்ந்த தொழில்கள் (பல சரக்கு கடை,மளிகை கடை, பொருட்களை வாங்கி - விற்கும் தொழில்) தொடங்க PMEGP திட்டத்தில் விண்ணபிக்க இயலாது. படித்து கொண்டிருப்பவர்கள் மற்றும் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு PMEGP மூலம் முதலீட்டை பெற இயலாது.இறைச்சி சம்பந்தப்பட்ட தொழில்கள், போதை பொருட்கள் சார்ந்த தொழில்கள், தோட்டச் செடிகள், மலர்ச் செடிகள், மீன், கோழி, ஆடு, மாடு வளர்ப்பு, மது பரிமாறும் உணவு விடுதிகள், 20 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பாலித்தீன் பைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்க PMEGP திட்டத்தில் பயன் பெற இயலாது.

விண்ணப்பம் :

இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்வதற்கு விண்ணப்பதாரரின் ஆதார் கார்டு, பான் கார்டு, குடும்ப அட்டை, திட்ட மதிப்பீடு , விலைப்புள்ளி , முக்கியமா சிபில் ரிப்போர்ட் இது எல்லாமே சரியா இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அவருடைய மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாவட்ட தொழில் மையத்திலையோ , காதி மற்றும் கதர் கிராம அலுவலகத்திலேயே விண்ணப்பம் செய்யலாம். www.kviconline.gov.in என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பம் செய்யலாம் .

விண்ணப்பம் நிரகரிப்பு :

pmegp திட்டத்தில் கடனுதவி பெறுவதற்கு இந்தியா முழுவதும் இருந்து பல லட்சம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. 2022 இலிருந்து 24 ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் இருந்து PMEGP திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களோட எண்ணிக்கை மட்டும் 3, 83, 720 விண்ணப்பம் . இதில் தமிழ்நாட்டில் மட்டும் 32,005 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது . குறிப்பா மதுரை டிவிஷனலில் மட்டுமே 7730 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. PMEGP விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுது .

சரியான ஆவணங்கள் இல்லாமல் இருப்பது , விண்ணப்பதாரர் ஆர்வத்துடன் இல்லாமல் இருப்பது , தவறான முகவரி, தவறான தகவல், முக்கியமா சிவில் ரிப்போர்ட் சரியா இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.

PMEGP திட்டத்தில் விண்ணப்பம் செய்வதற்கு முன், உங்களுடைய தொழில் பற்றிய முழு விவரங்கள் இருக்க கூடிய திட்ட விவரம் தயார் செய்ய வேண்டும். உங்களுடைய தொழிலுக்கு என்னென்ன மிஷனரி வாங்க போறீங்களோ அந்த மிஷினரி ஓட விலை புள்ளி கொட்டேஷன் இருக்க வேண்டும். உங்களுடைய ஆதார் கார்டு, பான் கார்டு, குடும்ப அட்டை எல்லாத்துலயும் ஒரே மாதிரியான முகவரி, பெயர், பிறந்தநாள் இருக்க வேண்டும். இதில் ஏதேனும் பிழை இருந்தால் உங்களுடைய அப்ளிகேஷன் நிராகரிக்கப்படும் .

குறிப்பாக தொழில் செய்ய உள்ள கடை அல்லது இடம் அதற்கான வாடகை அல்லது ஒத்தி பத்திரம் இருக்க வேண்டும். உங்களுடைய வங்கி வரவு செலவு சரியா இருக்க வேண்டும். உங்களுடைய சிபில் ரிப்போர்ட் குறைந்தபட்சம் 650 க்கு மேல இருக்க வேண்டும்.  இந்த ஆவணங்கள் அனைத்துமே தயார் செய்துவிட்டு விண்ணப்பம் செய்தால் உங்களுடைய விண்ணப்பம் விரைவாக ஏற்றுக் கொள்ளப்படும்.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

2024 - 2025 ஆம் கல்வி ஆண்டில் சனிக்கிழமை வேலை நாட்கள்!

June 18, 2024 0

+2 மறுகூட்டல் - மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு.

June 18, 2024 0

 

*+2 பொதுத்தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு.


*மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in இல் பதிவிறக்கம் செய்யலாம்.


*பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

DEO - பதவி உயா்வுக்காக தலைமை ஆசிரியா்கள் விவரங்கள் சேகரிப்பு

June 18, 2024 0

 மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்பிடும் வகையில் தலைமை ஆசிரியா்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


பள்ளிக் கல்வியில் மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்பிடும் வகையில் தலைமை ஆசிரியா்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


நிகழ் கல்வியாண்டுக்கான (2024-2025) மாவட்டக் கல்வி அலுவலா் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல் தயாா் செய்ய ஏதுவாக தகுதியான அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை


ஆசிரியா்களின் முன்னுரிமைப் பட்டியலின்படி பெயா்ப் பட்டியல் இந்த சுற்றறிக்கையுடன் இணைத்து அனுப்ப்படுகிறது.


அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தங்கள் மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியா்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் பூா்த்தி செய்து ஜூன் 21-ஆம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு நேரில் தனி நபா் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்து பின் வரும் சில அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்.


பெயா்ப் பட்டியலில் தகுதியுள்ள தலைமை ஆசிரியா் பெயா் ஏதும் விடுபட்டிருப்பின் அவா் பணிவரன்முறை செய்யப்பட்ட ஆணையின் நகலினை இணைத்து முதன்மைக் கல்வி அலுவலரின் விரிவான குறிப்புரையடன் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் கடந்த ஆண்டுகளில் மாவட்டக் கல்வி அலுவலரின் பதவி உயா்வு, பணியிட மாறுதலுக்கு விருப்பமின்மை தெரிவித்திருந்தால் மீண்டும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடமிருந்து புதியதாக விருப்ப உரிமை பெற்று அளிக்கக் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.


சாா்ந்த தலைமை ஆசிரியரின் பணிப் பதிவேட்டினை ஆய்வு செய்து பரிந்துரை செய்யப்பட வேண்டும். பின் வரும் காலங்களில் புகாா் ஏதும் பெறப்பட்டால் பரிந்துரை செய்த மாவட்டக் கல்வி அலுவலா் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரே இதற்கு பொறுப்பேற்க நேரிடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

INCOME TAX 2025 / வருமான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு ?

June 18, 2024 0

 1718285857_1688961620_income-tax-canva


மாதச் சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. NDA தலைமையிலான கூட்டணி ஆட்சியில் , மோடி 3 ஆவது முறையாக பிரதமராகியுள்ளார்.
 இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் , ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கும் மற்றும் 15 லட்சத்திற்கும் மேல் ஈட்டுவோருக்கு வரிச் சலுகை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது .

முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

June 18, 2024 0

 
முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் சேர்த்து வழங்க ரூ.4.27 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. சத்துணவு திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை அறிவிப்பில், ”இதற்கு முன்பாக முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. சத்துணவு வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் இனிமேல் மதிய உணவுடன் சேர்த்து, சர்க்கரை பொங்கலும் தனியாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 1 ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்கிட அனுமதித்து ஆணையிடப்பட்டுள்ளது. இதற்கு ஆகும் கூடுதல் செலவினம் ரூ.4,27,19,530/-ஐ ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதற்காக நாள்தோறும் சத்துணவு சாப்பிடுபவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அளவில் அரிசி பயன்படுத்தவும், இனிப்பு பொங்கல் வழங்க தேவைப்படும் வெல்லம் மற்றும் இதர பொருட்களை அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் அன்றைய நாளின் உணவூட்டு செலவினத்திற்குள் வாங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

EE ஆசிரியர் கையேடு, மாணவர் பயிற்சி புத்தகம் பெறப்பட்ட விவரத்தினை TNSED SCHOOLS செயலியில் தலைமை ஆசிரியர்கள் பதிவிட வழிமுறைகள்

June 18, 2024 0

 எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு, மாணவர் பயிற்சி புத்தகம் பெறப்பட்ட விவரத்தினை TNSED SCHOOLS செயலியில் தலைமை ஆசிரியர்கள் பதிவிட வழிமுறைகள்.👇👇👇👇


Click here


  💁‍♂️ NEW UPDATE TNSED APP ENNUM EZHUTHUM 1ST TO 5TH STANDARD TEACHERS 


💁‍♂️HOW TO ENTER THE NUMBER OF STUDENT

WORKBOOK(SWB)


💁‍♂️ TEACHERS HANDBOOKS (THB) GOT FROM BRC IN TNSED APP.


💁‍♂️ IT CAN BE DONE ONLY USING THE HM INDIVIDUAL LOGIN ID



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

+2 துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை இன்று பதிவிறக்கலாம்

June 18, 2024 0

 பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதுபவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.


செய்முறை தேர்வு தேதி குறித்த விவரத்தை முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிய வேண்டும்.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC - குரூப் 4 தேர்வு: அதிகாரபூர்வ விடைக் குறிப்பு வெளியீடு!

June 18, 2024 0

 .com/


டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான விடைக் குறிப்பை (ஆன்சர் கீ) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (ஜூன் 17) வெளியிட்டுள்ளது


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், நடப்பாண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. எனினும் இத்தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.


ஜூன் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதினர்.


சென்னையில் மட்டும் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர்.


இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி, குரூப் 4 தேர்வுக்கான விடைக்குறிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் ஜூன் 25ஆம் தேதி வரை ஆன்லைனில் தெரிவிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


https://tnpsc.gov.in/english/answerkeys.aspx என்ற இணையப் பக்கத்தில் விடைக் குறிப்புகள் குறித்து அறியலாம்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டம் - நிதியுதவிப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் - DEE Proceedings

June 18, 2024 0

 IMG_20240619_093209

முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டம் ஊரகப்பகுதி நிதியுதவிப் பள்ளிகளின் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடைய விரிவுபடுத்துதல் பள்ளிகளை ஆய்வு செய்தல் மற்றும் தயார் நிலை குறித்த புகைப்படங்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


DEE Proceedings - Download here



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news