Agri Info

Adding Green to your Life

July 1, 2024

மூன்று நாட்களுக்கு உணவை தவிர்த்தால் என்ன ஆகும் தெரியுமா..? உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன..?

July 01, 2024 0

 மனித உடல் ஒரு இயந்திரம் போன்றது. தினமும் அதன் வேலைகளை அது சரியாக செய்து கொண்டிருக்கும். இருப்பினும் நீண்ட நாள் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? உண்ணாவிரதம் இருப்பது இந்திய பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் மற்றும் பழங்காலத்திலிருந்தே இது கடைப்பிடிக்கப்படுகிறது. இதுகுறித்து விளக்கும் டாக்டர் பல்லேட்டி சிவா கார்த்திக் ரெட்டி, மூன்று நாட்களுக்கு நாம் எதுவும் சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை விவரித்துள்ளார்.

அதில் “நீங்கள் 3 நாள் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும்போது, ​​உங்கள் உடல் பல உடலியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது. ஆரம்பத்தில், உங்கள் உடல் எனர்ஜிக்காக சேமிக்கப்பட்ட குளுக்கோஸைப் பயன்படுத்துகிறது. முதல் 24 மணி நேரத்திற்குள், இந்த கிளைகோஜன் குறைந்து, உங்கள் உடல் குளுக்கோனோஜெனீசிஸை உற்பத்தி செய்ய தொடங்குகிறது. உடலில் உள்ள அமினோ அமிலங்கள் போன்ற கார்போஹைட்ரேட் அல்லாத மூலங்களிலிருந்து இந்த குளுக்கோஸை உருவாக்குகிறது.

இரண்டாவது நாளில், உங்கள் உடல் கெட்டோசிஸைத் (ketosis) தொடங்குகிறது, அதாவது சேமித்த கொழுப்புகளை கீட்டோன்களாக மாற்றி உடல் அதனை எனர்ஜியாக பயன்படுத்துகிறது, குறிப்பாக மூளைக்கு இந்த எனர்ஜி தேவைப்படும். இந்த வளர்சிதை மாற்றம் தசை திசுக்களைப் பாதுகாக்க உதவுகிறது.

News18

உடலின் வளர்சிதை மாற்றம் எவ்வாறு ஒத்துப்போகிறது?

உங்கள் வளர்சிதை மாற்றம் இன்சுலின் அளவைக் குறைப்பதன் மூலமும், நார்பைன்ப்ரைன் அளவை அதிகரிப்பதன் மூலமும் ஒத்துப்போகிறது. இது உடலில் உள்ள கொழுப்பு எரிப்பதை அதிகரிக்கும். மேலும் இது சிறுநீரகங்களில் இருந்து அதிகப்படியான உப்பு மற்றும் தண்ணீரை வெளியேற்ற உதவுகிறது. இந்த சமயத்தில் நீரிழப்பு அதிகரிக்கும் என்பதால் உடல் எடை குறைய தொடங்கும்.

மூன்று நாட்களில் நோர்பைன்ப்ரைன் அளவு அதிகரிப்பதன் காரணமாக உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம் தற்காலிகமாக அதிகரிக்கலாம், ஆனால் உணவு உட்கொள்ளும் பற்றாக்குறையை உடல் சரிசெய்வதால், எனர்ஜியை பாதுகாக்க வளர்சிதை மாற்றம் பின்னர் மெதுவாகிவிடும்.

72 மணிநேர உண்ணாவிரதம் அதாவது 3 நாட்களுள் எந்த உணவையும் சாப்பிடாமல் இருப்பதால் பல நன்மைகள் மற்றும் ஆபத்துகளும் வரும் என டாக்டர் ரெட்டி விளக்கியுள்ளார்.

நன்மைகள் :

  • உண்ணாவிரதம் இருப்பதால் நமது உடலில் உள்ள சேதமடைந்த செல்களை அகற்றி ஆரோக்கியமான புதிய செல்கள் வளர ஊக்குவிக்கிறது.

  • உண்ணாவிரதம் இருப்பதால் இன்சுலின் அளவு மேம்படும் இதனால் டைப் 2 நீரிழிவு நோய் உண்டாகும் அபாயம் குறைகிறது.

  • உண்ணாவிரதம் இருக்கும் போது உண்டாகும் கெட்டோசிஸின் போது மூளையில் இருந்து பெறப்பட்ட நியூரோட்ரோபிக் காரணி (BDNF) உற்பத்தி அதிகரிப்பதன் காரணமாக நமது மனத்தில் தெளிவு அதிகரிக்கும்.

  • உண்ணாவிரதம் இருப்பதால் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்த உடல் எடை குறையும்.
    அபாயங்கள் :

    • உண்ணாவிரதம் இருக்கும் போது நமது உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. இதனால் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம்.

    • உண்ணாவிரதம் இருப்பதால் சோடியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும். இதனால் நமது உடலில் பாதிப்புகள் உண்டாகும்.

    • தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல் இருக்கும் போது இரத்தச் சர்க்கரைக் குறைந்து தலைச்சுற்றல், தலைவலி மற்றும் மயக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

    • வளர்சிதை மாற்ற மாற்றங்கள், பசி காரணமாக வயிற்று வலி, சோர்வு மற்றும் எரிச்சல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

1 கி.மீ வாக்கிங் சென்றால் உடலில் இருந்து எவ்வளவு கலோரி குறையும் தெரியுமா?

July 01, 2024 0

 வாக்கிங் செல்வது என்பது அனைவருக்கும் பிடித்தமான உடற்பயிற்சியாக இருக்கிறது. வாக்கிங் சென்று உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதன் மூலம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். ஆனால் உடலில் இருக்கும் கலோரிகளை எரிக்க நடைப்பயிற்சி மட்டுமே போதாது என்று சிலர் கூறுகின்றனர்.

நீங்கள் உங்கள் உடலில் இருக்கும் கலோரிகளை எரித்து எடையை குறைக்க வாக்கிங்கை பின்பற்றுபவரா? அப்படி என்றால் ஒரு கிலோமீட்டர் நடந்தால் எத்தனை கலோரிகள் எரிக்கப்படும் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

1 கிமீ தூரம் நடக்கும் போது எத்தனை கலோரிகள் எரிக்கப்படும்?

நாம் ஏற்கனவே குறிப்பிட்டப்படி உடற்பயிற்சியின் எளிய மற்றும் மிகவும் பயனுள்ள வடிவங்களில் ஒன்றாக வாக்கிங் இருக்கிறது. இதயத்தை அரோக்கியமாக் வைப்பது முதல் சுவாச மண்டலத்தை கட்டுக்குள் வைத்திருப்பது வரை வாக்கிங் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. 1 கிலோ மீட்டர் வாக்கிங் சென்றால் ஒருவரின் உடலில் இருந்து எத்தனை கலோரிகள் எரிக்கப்படும் என்ற கேள்விக்கு உண்மையான பதில் என்னவென்றால் நபருக்கு நபர் மாறுபடும் என்பதே. ஆம், இந்த விஷயம் ஒருவரின் எடை மற்றும் நடையின் வேகத்தைப் பொறுத்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வாக்கிங் செல்லும் போது கலோரிகளை எரிப்பதை பாதிக்கும் காரணிகள் சிலவற்றை இனி பார்க்கலாம்.

எடை:

வாக்கிங்கின் போது கலோரி எரிக்க ஒரு நபரின் எடை கணிசமான பங்கு வகிக்கிறது. பொதுவாக உடல் பருமனான நபர்கள் நடைபயிற்சியின் போது அதிக கலோரிகளை எரிக்க முடியும். ஏனெனில் அவர்கள் நடக்க அதிக ஆற்றலை செலவழிக்க வேண்டும். உதாரணமாக, 90 கிலோ எடையுள்ள ஒருவருடன் ஒப்பிடும்போது, ​​70 கிலோ எடையுள்ள ஒருவர் 1 கிலோமீட்டர் நடக்கும் போது குறைவான கலோரிகளையே எரிக்கிறார்.

வேகம்:

ஒருவர் தன்னுடைய நடைபயிற்சியின் போது எவ்வளவு வேகமாக நடக்கிறார் என்பதும் அவர் எவ்வளவு கலோரிகளை எரிக்க முடியும் என்பதற்கு பங்களிக்கிறது. அதாவது, ஒரு மணி நேரத்திற்கு 3-4 கிமீ நடப்பதைக் காட்டிலும், ஒரே மணி நேரத்தில் 5 கிமீ முதல் 6 கிமீ நடந்தால் அதிக கலோரிகள் எரிக்கப்படும். வாக்கிங்கின் போது வேகமாக நடப்பது இதய துடிப்பு மற்றும் ஆற்றல் செலவை அதிகரிக்கிறது. இது உடலில் இருக்கும் அதிக கலோரியை எரிக்க வழிவகுக்கிறது.

நடக்கும் இடம்:

நடைப்பயிற்சிக்காக நாம் நடந்து செல்லும் இடத்தின் நிலப்பரப்பும் கூட கலோரி செலவழிக்கும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. downhill terrain-ல் நடப்பதை விட, hilly terrain நிலப்பரப்பில் நடப்பது அதிக விளைவுகளை ஏற்படுத்தி அதிக கலோரி செலவாகிறது.

வயது:

வயதுக்கு ஏற்ப வளர்சிதை மாற்றம் குறைகிறது, எனவே வாக்கிங் செல்லும் வயதானவர்களை விட இளம் வயதில் இருப்பவர்கள் கலோரிகளை அதிகமாக எரிக்க முடியும். தவிர பொதுவாக பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு அதிக muscle mass உள்ளன, இதன் காரணமாக வாக்கிங் செல்லும் போது ஆண்களின் உடலில் இருந்து சற்று அதிக கலோரி எரிக்கப்படும்.

கலோரி எரிப்பு தொடர்பாக மதிப்பிடப்பட்ட தகவல்கள்:

  • சுமார் 55 கிலோ எடையுள்ள நபர் ஒரு மணி நேரத்திற்கு 5 கிமீ மிதமான வேகத்தில் நடப்பதால், ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 50-60 கலோரிகளை எரிக்க முடியும்.

  • அதே நேரம் 70 கிலோ எடையுள்ள நபர் ஒரு கிலோ மீட்டர் வாக்கிங் சென்றால் சுமார் 60-75 கலோரிகளை எரிக்க முடியும்.

  • அதுவே 90 கிலோ எடையுள்ள ஒருவர் மிதமான வேகத்தில் 1 கிலோ மீட்டர் நடப்பதன் மூலம் 80-100 கலோரிகளை எரிக்க முடியும்.

அதிக கலோரிகளை எரிப்பது எப்படி?

வாக்கிங் செல்லும் போது அதிக கலோரிகளை எரிக்க ஒரு சிறந்த விறுவிறுப்பாக நடந்து செல்வது. சற்று அதிகமான வேகத்தில் சுறுசுறுப்பாக நடந்து செல்வதால் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, இது அதிக கலோரி செலவாக உதவும். வேகமான நடைப்பயிற்சி அல்லது வாக்கிங் செல்லும் போது இடையில் சில நிமிடங்கள் ஓடுவது அதிக கலோரிகளை எரிக்க உதவும். கரடுமுரடான மற்றும் சீரற்ற நிலப்பரப்பு கொண்ட மலை பாதை போன்றவற்றில் நடக்கலாம். தவிர உங்களது தினசரி வாக்கிங் தொலைவில் கூடுதல் கிலோ மீட்டர்களை சேர்க்கவும். இது உங்கள் ஒட்டுமொத்த கலோரி செலவை அதிகரிக்க சிறந்த வழியாக இருக்கும்.

நடைப்பயிற்சி அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

தினசரி வழக்கமான அடிப்படையில் நடைபயிற்சி செல்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, தசைகளை பலப்படுத்துகிறது, மனநிலையை சிறப்பாக வைக்கிறது மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதிப்படுத்துகிறது. எல்லா வயதினரும் அடிப்படையாக செய்ய கூடிய எளிதான உடற்பயிற்சி இது. மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க சிறந்த தேர்வாகவும் அமைகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்களுக்கு 100 வயசு வரை வாழ ஆசையா..? அப்போ இந்த 5 ரொம்ப முக்கியம்..!

July 01, 2024 0

 நம்முடைய சரிவிகித டயட்டின் ஒரு பகுதியாக சில குறிப்பிட்ட வைட்டமின்களை எடுத்துக்கொள்வதன் மூலம் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் வாழ முடியும். இந்த வைட்டமின்களை மருந்து மாத்திரைகள் மூலம் எடுத்துக்கொள்ள வழி இருந்தாலும், இதை பல்வேறு வகையான உணவுகளின் மூலம் பெறுவது நம் ஒட்டுமொத்த உடல் நலனையும் மேம்படுத்தும். நம் ஆயுளை நீட்டிக்கக் கூடிய 5 வைட்டமின்கள் இதுதான்.

வைட்டமின் டி 

சூரிய ஒளி வைட்டமின் என அழைக்கப்படும் வைட்டமின் டி, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்படுவதற்கும், எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், மனநிலையை கட்டுப்படுத்தவும் மிகவும் அவசியமாகும். உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இல்லையென்றால், ஆட்டோ இம்முயூன் கோளாறுகள், புற்றுநோய் மற்றும் இதய நோய் வரும் ஆபத்து அதிகமாகும். உடலில் சூரிய வெளிச்சம் படுவது, கொழுப்பு நிறைந்த மீன்கள் மற்றும் வலுவூட்டப்பட்ட தானியங்கள் மூலம் வைட்டமின் டி-யை பெற முடியும்.

News18

வைட்டமின் சி 

ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் நிறைந்த வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி ஃப்ரீ ரேடிக்கல்ஸிடமிருந்து செல்கள் பாதிக்கப்படாமல் தற்காத்துக் கொள்கிறது. மேலும் நம் உடலில் கொலஜன் உற்பத்தியவதற்கும் காயங்களை குணப்படுத்தவும் இரும்புச்சத்தை உறிஞ்சவும் இது உதவியாக இருக்கிறது. வைட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு வகையான புற்றுநோய்கள், இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. ப்ரோகோலி, குடை மிளகாய், கிவி பழம், சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள் ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.

வைட்டமின் இ

ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் நிறைந்த வைட்டமின் இ, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து நமது செல்களை காக்கிறது. இந்த இரண்டும்தான் நாள்பட்ட நோய்களுக்கும் முதுமைக்கும் காரணமாக இருக்கிறது. வைட்டமின் இ நமது சருமத்தை ஆரோக்கியமாக்குவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. வயது சார்ந்த அறிவாற்றல் குறைபாடு மற்றும் அல்சைமர் நோய் வரும் ஆபத்தை வைட்டமின் இ குறைக்கிறது. நட்ஸ், விதைகள், கீரைகள், காய்கறி எண்ணெய் மற்றும் வலுவூட்டப்பட்ட தானியங்கள் மூலம் நமக்கு தேவையான வைட்டமின் இ கிடைக்கிறது.

வைட்டமின் பி12

நமக்கு வயதாகும் போது சிவப்பு ரத்த அனுக்கள் உருவாவதற்கும் டின்ஏ சிந்தெஸிஸ் ஆவதற்கும், நரம்புகளின் செயல்பாடுகளுக்கும் வைட்டமின் பி12 அவசியம் தேவைப்படுகிறது. வைட்டமின் பி12-யை போதுமான அளவு எடுத்துக்கொள்வதன் மூலம் ரத்தசோகை, இதய நோய்கள், அறிவாற்றல் குறைபாடு போன்ற ஆபத்துகள் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும். இறைச்சி, கடல் உணவுகள் முட்டைகள், பால் பொருட்கள், வலுவூட்டப்பட்ட தானியங்களில் வைட்டமின் பி12 அதிகளவு உள்ளது. வீகன் மற்றும் சைவ உணவுப் பிரியர்கள் இந்த வகை வைட்டமின் குறைபாட்டால் பெரிதும் அவதிப்படுவார்கள். ஆகவே அவர்கள் மருந்து வடிவத்தில் இதை எடுத்துக்கொள்வது நல்லது.

வைட்டமின் கே2

இதய ஆரோக்கியம், எலும்புகள், ரத்தம் உறைதல் ஆகியவற்றுக்கு வைட்டமின் கே2 அவசியமாகும். நமது தமனி மற்றும் திசுக்களில் சேகரமாகும் கால்சியத்தை பற்களுக்கும் எலும்புகளுக்கும் அளித்து, எலும்புப்புரை மற்றும் இதய நோய் வரும் ஆபத்தைக் குறைக்கிறது வைட்டமின் கே2. சீஸ், முட்டையின் மஞ்சள் கரு, நொதித்த உணவுகள், புற்களில் வளர்க்கப்பட்ட விலங்கின் பொருட்களில் இந்த வைட்டமின் கே2 அதிகமாக இருக்கிறது.

நாம் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுமென்றால், அதற்கு நம்முடைய வாழ்க்கைமுறை தெரிவுகளான மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, சீரான உடற்பயிற்சி, நல்ல தூக்கம், புகையிலை மற்றும் குடிப்பழக்கம் இல்லாமை, ஆரோக்கியமான எடையை பராமரித்தல் போன்றவையும் முக்கிய பங்காற்றுகிறது.




Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தமிழக அரசில் Apprentice வேலைவாய்ப்பு 2024 – 70+ காலிப்பணியிடங்கள் || Diploma தேர்ச்சி போதும்!

July 01, 2024 0

 தமிழக அரசில் Apprentice வேலைவாய்ப்பு 2024 – 70+ காலிப்பணியிடங்கள் || Diploma தேர்ச்சி போதும்!

தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்பு துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Apprentice பணிக்கென காலியாக உள்ள 79 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.9,000/- ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Apprentice பணிக்கென காலியாக உள்ள 79 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

Graduate Apprentice – ரூ. 9,000/-

Technician (Diploma) Apprentice – ரூ. 8,000/-

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

அண்ணா பல்கலைக்கழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – நாள் ஒன்றுக்கு ரூ.588/- சம்பளம்!

July 01, 2024 0

 அண்ணா பல்கலைக்கழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – நாள் ஒன்றுக்கு ரூ.588/- சம்பளம்!

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது Peon / Driver பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

Anna University காலிப்பணியிடங்கள்:

Peon / Driver பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Peon கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anna University வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Peon ஊதிய விவரம்:

செய்யப்படும் தகுதியானவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.588/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anna University தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

NLC நிறுவனத்தில் Deputy Executive Engineer காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,80,000/- || முழு விவரங்களுடன்!

July 01, 2024 0

 

NLC நிறுவனத்தில் Deputy Executive Engineer காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,80,000/- || முழு விவரங்களுடன்!

என்எல்சி இந்தியா லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Deputy Executive Engineer பணிக்கான 4 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

NLC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Deputy Executive Engineer பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Deputy Executive Engineer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NLC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Deputy Executive Engineer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 02.07.2024ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

IBPS ஆணையத்தில் 6000+ காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

July 01, 2024 0

 IBPS ஆணையத்தில் 6000+ காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

Institute of Banking Personnel Selection (IBPS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Clerk பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 6128 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

IBPS காலிப்பணியிடங்கள்:

Clerk பணிக்கென காலியாக உள்ள 6128 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Clerk கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IBPS வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Clerk ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு IBPS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

IBPS விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWBD- ரூ.175/-

மற்றவர்கள் – ரூ.850/-

Clerk தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Preliminary Exam மற்றும் Mains Exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Apply Online


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசில் Senior Research Fellow காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.35,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

July 01, 2024 0

 

மத்திய அரசில் Senior Research Fellow காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.35,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

ICAR-Indian Institute of Millets Research (ICAR) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Research Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Senior Research Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M. Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.31,000/- முதல் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 04.07.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.37,000/- சம்பளத்தில் கப்பல் தளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

July 01, 2024 0

 ரூ.37,000/- சம்பளத்தில் கப்பல் தளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Project Officer பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Cochin Shipyard காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Officer பணிக்கென காலியாக உள்ள 64 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Officer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cochin Shipyard வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.37,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cochin Shipyard தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Objective Type Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.07.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

June 30, 2024

4 & 5th Std | Formative Assessment FA ( b ) - Term 1 Time Table ( 2024-2025 )

June 30, 2024 0

 



FA ( b ) | 4 & &ஆம் வகுப்பு - வளரறி மதிப்பீட்டிற்கான  கால அட்டவணை - 2024-2025 

 பருவம் 1 FORMATIVE ASSESSMENT ( b ) - FA ( b ) - Classes 4 & 5

1 - 3rd Std | Formative Assessment FA ( b ) - Term 1 Time Table ( 2024-2025 )

June 30, 2024 0

 FA ( b ) | 1 - 3ஆம் வகுப்பு - வளரறி மதிப்பீட்டிற்கான  கால அட்டவணை - 2024-2025 

 பருவம் 1 FORMATIVE ASSESSMENT ( b ) - FA ( b ) - Classes 1-3

IMG-20240630-WA0009_wm



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

கலை, அறிவியல் கல்லூரிகளில் இனி ஒரே நேரத்தில் பருவத் தேர்வுகள்: முதல்முறையாக வருடாந்திர அட்டவணை வெளியீடு

June 30, 2024 0

 1272300

தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான கல்வியாண்டு கால அட்டவணையை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே காலத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.


இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம், அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு, அரசு உதவி, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் வெவ்வேறு விதமான வேலைநாட்கள், பருவத்தேர்வு, விடுமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதனால் கல்லூரிகளின் முறையான கல்விச் சூழல் பாதிக்கப்படுகிறது.


பருவத்தேர்வு முடிவுகளும் தாமதமாக வெளியிடப்படுகின்றன. இதன் காரணமாக முதுநிலை படிப்புக்கான சேர்க்கையில் விரைந்து சேர முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். இதுதவிர உயர்கல்விக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் உரிய காலத்துக்குள் மாணவர்கள் செல்ல முடியாத நெருக்கடியும் உருவாகிறது. இதை பெரிய கால இடைவெளிகள் இல்லாத பொதுவான வரைவு கால அட்டவணை தேவைப்படுகிறது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் பின்பற்றும் வகையில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான வரைவு கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன.


ஒற்றை (1, 3, 5) பருவங்களில் பயிலும் மாணவர்களுக்கான அகமதிப்பீடு தேர்வுகள் செப்டம்பர் மாதத்திலும், செய்முறைத் தேர்வுகள் அக்டோபர் 9 முதல் 17-ம் தேதி வரையும், மாதிரித் தேர்வுகள் அக்டோபர் 18 முதல் 28-ம் தேதி வரையும் நடைபெறும். பருவத் தேர்வுகள் அக்டோபர் 31-ல் தொடங்கி நவம்பர் 25-ம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் 16-ம் தேதிக்குள் வெளியாகும்.

இதேபோல், இரட்டை பருவங்களுக்கான (2, 4, 6) வகுப்புகள் டிசம்பர் 4 முதல் 2025 ஏப்ரல் 10-ம் தேதி வரை நடைபெறும். மேலும், செய்முறைத் தேர்வுகள் மார்ச் 24 முதல் 28-ம் தேதி வரை நடத்தப்படும். இதுதவிர பருவத் தேர்வுகள் ஏப்ரல் 15 முதல் மே 10-ம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 31-ம் தேதிக்குள் வெளியாகும். எனவே, பல்கலைக்கழக தேர்வுத் துறைகளும், கல்லூரி நிர்வாகங்களும் மாணவர் நலன்கருதி, இந்த வருடாந்திர கால அட்டவணையை பின்பற்றி செயல்பட வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மாநில கல்விக்கொள்கை ஆய்வு அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு - முக்கிய அம்சங்கள் :

June 30, 2024 0

 

IMG_20240701_114614

மாநில கல்விக்கொள்கை ஆய்வு அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

முக்கிய அம்சங்கள் :👇👇👇



* 3 , 5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக , மாநில கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்தார் . இக்குழு பொதுமக்களிடம் கருத்து பெற்று விரிவான அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது . அதில் , 3 , 5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது என்றும் , தமிழ் , ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையையே கடைபிடிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.



* நீட் தேர்வு வேண்டாம் - மாநில கல்விக்கொள்கை ஆய்வறிக்கை 


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news