அனைத்து தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு...
இல்லம் தேடிக் கல்வி திட்டம், முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து_ , இரண்டாம் கட்ட பணிகள், இன்று முதல் துவங்கப்படுகிறது.
இரண்டாம் கட்டத்தில்bஉயர்தொடக்க நிலை ( Upper Primary)வகுப்புகள் செயல்படாது.
# நிதி உதவி பெறும் பள்ளிகள் ( Aided schools ) உள்ள குடியிருப்புகளில், மையங்கள் செயல்படாது.
# தொடக்கநிலை வகுப்புகள் மட்டுமே நடைபெறும்.
# ஒரு தன்னார்வலருக்கு 20 மாணவர்கள் என்ற விகிதத்தில் மையங்கள் நடத்தப்படும்.
முதல் கட்டத்தில் பணிபுரிந்த தன்னார்வலர்களில், அவரவர் ITK Appல் , பதிவு செய்த, மைய செயல்பாட்டு அறிக்கையின் அடிப்படையிலும், _கடந்த மாதங்களில் ITK Appல்_ , மாணவர்கள் வருகையை பதிவு செய்ததன் அடிப்படையிலும்,
சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்களுக்கு மட்டும், _இரண்டாம் கட்டத்தில் பணிபுரிய_ , மாநில தலைமை மூலம் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தொடக்கநிலை வகுப்புகள் மட்டுமே செயல்பட உள்ள நிலையில், இன்று ( 02.07.2024 ) மாலை , உங்கள் பள்ளிக்குட்பட்ட, குடியிருப்புகளில், இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்கப்பட வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தன்னார்வலர்களின் பட்டியல், உங்களுக்கு விரைவில் அனுப்பப்படும்.
அந்த தன்னார்வலர்களுக்கு மட்டும், தகவல் தெரிவித்து, இன்று மையங்களை துவங்கிடுமாறு தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு சில குடியிருப்புகள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
அந்த குடியிருப்புகளுக்கு, விரைவில் மையங்கள் அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பள்ளிக்குட்பட்ட குடியிருப்புகளில் உள்ள, அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் , மையங்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
# சிறப்பாக செயல்பட்ட உயர்தொடக்க நிலை தன்னார்வலர்களும், இரண்டாம் கட்டத்தில் ( 2.0 ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பெயர்களும் பட்டியலில் உள்ளதால், இன்று முதல் அவர்கள், தொடக்க நிலை மையங்களை நடத்துவார்கள்.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group