July 2, 2024
TRB - SGT Exam Hall Ticket Published ( Direct Link...)
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் .01 / 2024 , நாள் 09.02.2024 ன்படி 2023-2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் தேர்வு எதிர்வரும் 21.07.2024 அன்று நடத்தப்பட உள்ளது . இத்தேர்வினை எழுத 26,510 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ( Hall Ticket ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( https://www.trb.tn.gov.in/ ) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . எனவே , தேர்வர்கள் 02.07.2024 முதல் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் ( Password ) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது.
எனவே , தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார் காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் .
TRB SGT RECRUITMENT EXAM HALL TICKET DOWNLOAD LINK
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
ரூ.37,000/- சம்பளத்தில் கப்பல் தளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
ரூ.37,000/- சம்பளத்தில் கப்பல் தளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Project Officer பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Cochin Shipyard காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Officer பணிக்கென காலியாக உள்ள 64 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Project Officer கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cochin Shipyard வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Officer ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.37,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cochin Shipyard தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Objective Type Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.07.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download Notification PDF
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
DRDO ஆணையத்தில் Junior Research Fellow வேலை – சம்பளம்: ரூ.37,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
DRDO ஆணையத்தில் Junior Research Fellow வேலை – சம்பளம்: ரூ.37,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
DRDO NPOL ஆனது Junior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
DRDO காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
JRF கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / ME / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
DRDO வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
JRF ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
DRDO தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 30 நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Download Notification PDF
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ரூ.2,05,700/- சம்பளத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ரூ.2,05,700/- சம்பளத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Interpreter பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை ஊதியம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:
Interpreter பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Interpreter தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் உயர் நீதிமன்ற வயது வரம்பு:
SC /SC(A) /ST / MBC & DC / BC / BCM – அதிகபட்ச வயதானது 37 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Others / Unreserved categories – அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
In-Service candidates – அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Interpreter ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level-22 அடிப்படையில் ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை ஊதியம் வழங்கப்படும்.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற விண்ணப்ப கட்டணம்:
Examination fee – ரூ.1000/- (SC / SC(A) / ST தவிர மற்றவர்களுக்கு)
Interpreter தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Preliminary Examination, Main Examination, Viva-voce மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Download Notification PDF
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
July 1, 2024
Hr. Sec HM Panel to Submit - DSE Proceedings
பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி , 01.01.2024 நிலவரப்படி , அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கானத் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்து 02.06.2024 க்குள் சமர்ப்பிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் விரிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி கோரப்பட்ட விவரங்களை கீழ்கண்டுள்ளவாறு , மாவட்டம் வாரியாக பட்டியலிடப்பட்டுள்ள நாளில் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலக பிரிவு எழுத்தர் வழியாக நேரில் மடிக்கணினியுடன் வருகைபுரிந்து One Hard Copy Signed by CEO and CD Soft Copy . உடன் W1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
26054-2024 Hr. Sec HM Panel to Submit - Proceedings👇👇👇
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
School Calendar - July 2024
2024 ஜூலை மாதம் "ஆசிரியர் டைரி"
01.07.2024 திங்கள் கிழமை
DEE கலந்தாய்வு தொடக்கம்..
06.07.2024 - சனிக்கிழமை
*BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
08.07.24 திங்கள் கிழமை
*ஹிஜிரி வருடபிறப்பு- RL
இஸ்லாமியர் புத்தாண்டு
13.07.2024 - சனிக்கிழமை பள்ளி வேலை நாள்
*DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*
*இயக்க நிறுவனர்
மாஸ்டர்.வா.இராமுண்ணி பிறந்தநாள்
15.07.2024 - திங்கள் கிழமை
*காமராஜர் பிறந்த நாள் (கல்வி வளர்ச்சி நாள்)_
17.07.2024 - புதன் கிழமை
*மொகரம் பண்டிகை
அரசு விடுமுறை
20.07.2024- சனிக்கிழமை
* CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
31.07.2024 புதன் கிழமை
*DEE கலந்தாய்வு முடிவு..
School Calendar - July 2024 Pdf 👇👇👇
Download here
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
2024 - 2025 எண்ணும் எழுத்தும் களங்கள் ( Color Pdf )
2024 - 2025 எண்ணும் எழுத்தும் களங்கள்
Ennum Ezhuthum Kalangal Pdf 👇
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
INSPIRE AWARD APPLY 2024-25
INSPIRE AWARD APPLY 2024-25 ACADEMIC YEAR 01-07-24 TO 15-09-24.
The online nominations for 2024-25 , will resume from 01st July , 2024. The schools will be able to submit their online nominations till 15th September , 2024 .
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
ITK - இல்லம் தேடிக் கல்வி 2.0 இன்று முதல் தொடக்கம்!!!
அனைத்து தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு...
இல்லம் தேடிக் கல்வி திட்டம், முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து_ , இரண்டாம் கட்ட பணிகள், இன்று முதல் துவங்கப்படுகிறது.
இரண்டாம் கட்டத்தில்bஉயர்தொடக்க நிலை ( Upper Primary)வகுப்புகள் செயல்படாது.
# நிதி உதவி பெறும் பள்ளிகள் ( Aided schools ) உள்ள குடியிருப்புகளில், மையங்கள் செயல்படாது.
# தொடக்கநிலை வகுப்புகள் மட்டுமே நடைபெறும்.
# ஒரு தன்னார்வலருக்கு 20 மாணவர்கள் என்ற விகிதத்தில் மையங்கள் நடத்தப்படும்.
முதல் கட்டத்தில் பணிபுரிந்த தன்னார்வலர்களில், அவரவர் ITK Appல் , பதிவு செய்த, மைய செயல்பாட்டு அறிக்கையின் அடிப்படையிலும், _கடந்த மாதங்களில் ITK Appல்_ , மாணவர்கள் வருகையை பதிவு செய்ததன் அடிப்படையிலும்,
சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்களுக்கு மட்டும், _இரண்டாம் கட்டத்தில் பணிபுரிய_ , மாநில தலைமை மூலம் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தொடக்கநிலை வகுப்புகள் மட்டுமே செயல்பட உள்ள நிலையில், இன்று ( 02.07.2024 ) மாலை , உங்கள் பள்ளிக்குட்பட்ட, குடியிருப்புகளில், இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்கப்பட வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தன்னார்வலர்களின் பட்டியல், உங்களுக்கு விரைவில் அனுப்பப்படும்.
அந்த தன்னார்வலர்களுக்கு மட்டும், தகவல் தெரிவித்து, இன்று மையங்களை துவங்கிடுமாறு தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு சில குடியிருப்புகள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
அந்த குடியிருப்புகளுக்கு, விரைவில் மையங்கள் அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பள்ளிக்குட்பட்ட குடியிருப்புகளில் உள்ள, அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் , மையங்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
# சிறப்பாக செயல்பட்ட உயர்தொடக்க நிலை தன்னார்வலர்களும், இரண்டாம் கட்டத்தில் ( 2.0 ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பெயர்களும் பட்டியலில் உள்ளதால், இன்று முதல் அவர்கள், தொடக்க நிலை மையங்களை நடத்துவார்கள்.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
பொதுத்துறை வங்கிகளில் 665 காலி பணியிடங்கள்... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழுவிவரம் இதோ
பொதுத்துறை வங்கிகளில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 665 கிளர்க் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள எஸ்பிஐ தவிர்த்த 11 பொதுத்துறை வங்கிகளுக்கான காலி பணியிடங்கள் IBPS நடத்தும் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், நடப்பாண்டு 11 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது 2025 - 2026ஆம் ஆண்டுக்கான பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெறவுள்ளது.
இந்த தேர்வு ஆகஸ்ட் மாதம் மற்றும் அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளதால், விருப்பமுள்ளவர்கள் www.ipbs.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதனை தொடர்ந்து நீங்கள் தகுதியானவர்கள் என்றால் உங்களுக்கு அடுத்த நோட்டிபிக்கேஷன் வரப்படும். அதனை தொடர்ந்து உங்களுக்கு 2 கட்டங்களாக, அதாவது ப்ரீ தேர்வு, மெயின் தேர்வு என 2 தேர்வுகள் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு அடுத்த மாதமும், இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு அக்டோபர் மாதமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும் இத்தேர்வை ஆங்கிலப்பாடம் தவிர மற்றவைகளை தமிழிலும் எழுத முடியும்.
இதில் பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யுசிஓ வங்கி, பேங்க் ஆப் இந்தியா, செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா. பேங்க் ஆப் மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்து பேங் உள்ளிட்ட வங்கிகள் பங்கேற்றுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இதில் ஒரு வங்கியில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதி:
இந்திய, நேபால், பூட்டான் குடிமகனமாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு திபெத்தியன் அகதியாக இருக்கும் பட்சத்தில் அதற்கான சான்றுகள் வைத்திருந்தால் நீங்களும் விண்ணப்பிக்கலாம். மேலும், 20 வயது முதல் 28 வயதுள்ள நபர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 1996ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்களும், 2004 ஜூலை 1ஆம் தேதிக்கு முன் பிறந்தவர்கள் வரை மட்டுமே அப்ளை செய்ய முடியும்.
விண்ணப்ப கட்டணம்:
எஸ்சி, எஸ்டி உள்ளிட்டவர்களுக்கு ரூ.175, மற்றவர்களுக்கு ரூ.850 தேர்வு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
எப்படி அப்ளை பண்ணுவது?
விண்ணப்பதாரர்கள் official இணையதளமான CRP CLERKS என்ற இணையதளத்திற்குள் சென்றால் அதில் Apply online என்ற ஆப்ஷன் குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்குள் சென்றால் CLICK HERE FOR NEW REGISTRATION என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். பிறகு உங்களது பெயர் உள்ளிட்டவற்றை சமர்ப்பித்தால் உங்களது மெயில் ஐடிக்கு ரெஜிட்ரேஷன் நம்பரும், பாஸ்வோர்டும் கொடுக்கப்படும். இந்த பாஸ்வேர்டை நீங்கள் வேண்டுமென்றால் எடிட் செய்து கொள்ளலாம்.
பிறகு இந்த நம்பரையும், பாஸ்வேர்டையும் கொண்டு எளிதில் தேர்வுக்கு விண்ணபிக்க முடியும். தேர்வுக்கு அப்ளை செய்வதுக்கு முன்பு உங்களிடம் உங்களது பாஸ்போர்ட் அளவு போட்டோ, கையெழுத்து, இடது கை பதிவு ரேகை உள்ளிட்டவைகளை எடுத்து வைத்து கொள்ளவும். மேலும் தகவலுக்கு www.ibps.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வு மும்பையில் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.