July 10, 2024

Over 3yrs Instruction & EMIS இணையதளத்தில் பதிவேற்றம் - DSE Proceedings

 IMG_20240710_123509

பள்ளிக்கல்வி தமிழ்நாடு பொதுப்பணி / அமைச்சுப்பணி அனைத்து வகைப் பணியாளர்களுக்கான மாறுதல் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் / பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல் வழங்குதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை  கல்வி தகவல் மேலாண்மை முகமையில் ( EMIS ) இணையத்தில் பதிவேற்றம் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பு DSE Proceedings 👇👇👇

Over 3yrs Instruction & EMIS இணையதளத்தில் பதிவேற்றம் - DSE Proceedings

Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

CPS Missing Credit ஐ சரிசெய்ய தேவையான கடிதம் மற்றும் படிவங்கள்

 

.com/

CPS Missing Credit


CPS திட்ட ஆசிரியர்கள் இந்த ஆண்டு 2023-24 கணக்கீட்டு தாளில் உள்ள Missing Credit ஐ சரிசெய்ய தேவையான கடிதம் மற்றும் படிவங்கள் 


👇👇👇👇

CPS ENTRY FORM - Download here


CPS mc letter - Download here


Account Statement Model - Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

July 9, 2024

CPS ACCOUNT SLIP - New Update

 
2023-2024 ஆம் ஆண்டுக்கான CPS ACCOUNT SLIP- ல் கடந்த வாரத்தில் பதிவிறக்கம்  செய்தபோது பல ஆசிரியர்களுக்கு missing credit அதிகமாக இருந்தது.  தற்போது அவை சரி செய்யப்பட்டுள்ளது. ஆசிரிய பெருமக்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். இவை தகவலுக்காக பதிவிடப்படுகிறது.

👇👇👇👇👇👇👇👇

http://www.cps.tn.gov.in/public/index.php

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் (NHIS - 2021) 84 மருத்துவமனைகள் புதிதாக சேர்ப்பு,

 IMG_20240709_181335


New Health Insurance Scheme , 2021 for the Employees of Government Departments and other Organizations and New Health Insurance Scheme , 2022 for Pensioners / Family Pensioners Empanelment of Accredited Hospitals - Approval of 84 additional hospitals , inclusion of Additional specialties in 02 hospitals and for deletion 14 hospitals based on the recommendations of the Accreditation Committee - Notified Orders Issued . -

புதிய மருத்துவக்  காப்பீட்டு திட்டத்தில் (NHIS - 2021) 84  மருத்துவமனைகள் புதிதாக சேர்ப்பு, இரண்டு மருத்துவமனைகளில் சிறப்புப் பிரிவுக்கு அனுமதி மற்றும் 7 மருத்துவமனைகள் நீக்கம் -   அரசாணை வெளியீடு.

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

G.O.Ms.No.214 - Download here



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தனித்தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு: ஜூலை 18 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

 bb8201cf4bb2c85e06e50c5c304cf45a1720528561230332_original

தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஆகஸ்ட் 19 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஜூலை 18-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 19 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் ஜூலை 18 முதல் 24-ஆம் தேதி வரை தேர்வுத்துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு இணையம் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?


தேர்வுக் கட்டணம் - ரூ.125,


இணையவழி பதிவுக் கட்டணம் - ரூ.70


மொத்தம் - ரூ.195 பணமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.


மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தட்கல் முறையில் ஜூலை 26, 27ஆம் தேதிகளில் பதிவு செய்துகொள்ளலாம். இதற்கு தேர்வுக் கட்டணத்துடன், தட்கல் கட்டணத் தொகையாக ரூ.500 கூடுதலாக செலுத்த வேண்டும்.


விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டியவை


முதன்முதலாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்


விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் பள்ளி பதிவுத் தாள் நகல் அல்லது சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் அல்லது பிறப்புச் சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.


ஏற்கெனவே 8-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வி அடைந்த பாடங்களை எழுதுவதற்கு விண்ணப்பிப்பவர்கள்

இவர்கள் முந்தைய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.


அனைத்துத் தனித்தேர்வர்களும் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின் கோடுடன் கூடிய சுய முகவரியிட்ட உறையை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.


தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வு குறித்த விரிவான கால அட்டவணை உள்ளிட்ட தகவல்களை மேற்கண்ட இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்."


இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

9fb5821a82e2fe3d029ae3d52fc9e6f01720528195061332_original

கூடுதல் விவரங்களுக்கு: www.dge.tn.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

DEE - SG Teachers Vacancy List 2024 - All District

 தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இ.நி.ஆ காலிப்பணியிடங்கள் விவரம்.

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

DEE - SG Vacancy List 2024 - All District - Download here



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

உயர் கல்வி வழிகாட்டி வகுப்புகள் தொடர்பான பதிவு செய்யப்பட்ட காணொளிகளை உயர் தொழில்நுட்ப ஆய்வக சர்வரில் வைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 IMG_20240709_203031

உயர் கல்வி வழிகாட்டி வகுப்புகள் தொடர்பான பதிவு செய்யப்பட்ட காணொளிகளை உயர் தொழில்நுட்ப ஆய்வக சர்வரில் வைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - Naan Mudhalvan Class - Download here



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

 

1277248

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.


நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேர 1 லட்சத்து 98 ஆயிரத்து853 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.


சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தரவரிசை பட்டியலை வெளியிடுகிறார். இதனை பிரத்யேக இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.


தரவரிசை பட்டியல் வெளியீட்டின்போது, உத்தேச கலந்தாய்வு தேதி, கலந்தாய்வில் பங்கேற்கும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை. கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் இடங்களின் உத்தேச எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மனமொத்த மாறுதல் கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்: பள்ளிக்கல்வித் துறை

 1277296

பரஸ்பரம் பேசி மனமொத்த மாறுதல் பெற விரும்பும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நாளைக்குள் (ஜூலை 11) விண்ணப்பிக்க வேண்டுமெனபள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவிதமான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் இணையதளம் வழியாக கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.


இந்த பொது மாறுதல் கலந்தாய்வு நிறைவுபெற்ற பின்னர் ஆசிரியர்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியுள்ளது.


இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் சிலர் கூறியதாதவது: ஆசிரியர்கள் தங்களுக்குள் பரஸ்பரமாக பேசிபணியிடங்களை மாற்றிக் கொள்ளும் முறை மனமொத்த மாறுதல் என்று அழைக்கப்படும். அதன்படி நடப்பாண்டு மனமொத்த மாறுதலில் செல்ல விரும்பும் ஆசிரியர்களுக்கான விண்ணப்பப் பதிவுஎமிஸ் தளத்தில் நேற்று தொடங்கியது. விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் நாளை மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இதற்கு 2 ஆண்டுகளில் ஓய்வுபெறவுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்க இயலாது. அதேபோல், ஏற்கெனவே மனமொத்த மாறுதல்பெற்று 2 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு துறைக்கு மனமொத்த மாறுதல் பெற முடியாது. இந்த வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்களை ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.


தொடர்ந்து தகுதியான நபர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஒன்றிய மற்றும்  கல்வி மாவட்ட அளவில் ஆகஸ்ட் 1-ம் தேதியும், வருவாய் மாவட்டம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் வகையில் ஆகஸ்ட் 2-ம் தேதியும் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.


இதேபோல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு ஜூலை 11-ம் தேதிக்கு பதிலாக 12-ம் தேதி நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

July 8, 2024

இறைச்சி அதிகமா சாப்பிடுவோருக்கு பெருங்குடல் புற்றுநோய் வரும் ஆபத்து.. ஆய்வு மூலமாக தகவல்!

 பெருங்குடல் புற்றுநோய் என்பது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் ஒரு மிக மோசமான நோயாக இருந்து வருகிறது. உணவு சார்ந்த பழக்க வழக்கங்கள் பெருங்குடல் புற்றுநோய் உண்டாவதில் குறிப்பிடத்தக்க பங்கு கொண்டுள்ளது. சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுபவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவப்பு இறைச்சி என்பது மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி அல்லது ஆட்டு இறைச்சி போன்றவற்றை குறைக்கிறது. இது ஃப்ரஷாகவோ அல்லது பதப்படுத்தப்பட்ட நிலையிலோ சாப்பிடுவதால் பெருங்குடல் புற்றுநோய் அபாயம் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.

சிவப்பு இறைச்சி சாப்பிடுதல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அபாயம் ஆகிய இரண்டிற்குமான தொடர்பு என்பது குறிப்பாக இந்த இறைச்சியை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் கெமிக்கல்களை முதன்மையாக குறிக்கிறது. பொதுவாக பதப்படுத்திக்களாக பயன்படுத்தப்படும் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகள் நமது உடலில் கார்சினோஜனிக் காம்பவுண்டுகளாக மாற்றப்படுகின்றன. இந்த காம்பவுண்டுகள் பெருங்குடலை அடையும் பொழுது செல் புரணியை சேதப்படுத்தி, இறுதியில் புற்று நோய்க்கு வழி வகுக்கிறது.

News18

கூடுதலாக சிவப்பு இறைச்சியில் காணப்படும் ஹீம் இரும்பு என்பது மோசமான துணை பொருட்களை உருவாக்கி குடல் செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்த செல்களில் தொடர்ச்சியாக சேதம் ஏற்படும் பொழுது அதன் விளைவாக ஜீன்களில் மியூட்டேஷன் தூண்டப்பட்டு, இறுதியில் பெருங்குடல் புற்றுநோய் உருவாகிறது. இந்த மாதிரியான சேதத்தை ஏற்படுத்தும் காம்பவுண்டுகள் ஹெட்டிரோசைக்கிளிக் அமைன்கள் மற்றும் பாலிசைக்கிலிக் அமைன்கள் எனப்படுகிறது. இவை சிவப்பு இறைச்சியை பதப்படுத்தும் மற்றும் சமைக்கும் செயல்முறையின்போது உருவாகிறது. இது மாதிரியான அபாயங்களை ஏற்படுத்துவதால் குறிப்பாக பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் இருந்து நாம் விலகி இருக்க வேண்டியது கட்டாயம்.

ஒரு நாளைக்கு ஒருவர் 70 கிராமுக்கும் குறைவான சிவப்பு இறைச்சியை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று ஒரு சில நாடுகளில் உள்ள ஆரோக்கியம் சார்ந்த வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்கு நீங்கள் பின்வரும் யுத்திகளை பின்பற்றலாம்:-

  • சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளின் அளவுகளை உங்களுடைய உணவில் குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

  • சிவப்பு இறைச்சிக்கு பதிலாக பருப்பு வகைகள், வெள்ளை நிற இறைச்சி அதாவது சிக்கன் அல்லது மீன் போன்றவற்றை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  • காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்கள் அடங்கிய சரிவிகித உணவை பின்பற்றுங்கள். இவற்றில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கு அவசியமானது.

  • வெஜிடேரியன் உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கிறது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பால் குடிச்சா எலும்பு வலிமை ஆகாதா..? மருத்துவர் விளக்கம்

 எலும்புகளின் ஆரோக்கியம் என்று சொல்லும் பொழுது நம் ஞாபகத்திற்கு முதலில் வரக்கூடிய உணவு என்றால் அது பால் தான். பல வருடங்களாக பால் குடிப்பது வலிமையான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளுக்கு பங்களிக்கும் என்று கருதப்படுகிறது.

ஆனால் டாக்டர் சுசி ஷுல்மன் என்ற வர்ம கலை மருத்துவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து கொண்டு இந்த கருத்து முற்றிலுமாக உண்மை அல்ல என்ற கண்ணோட்டத்தில் பேசுகிறார். எனவே பால் சாப்பிடுவதால் உங்களுக்கு வலிமையான எலும்புகள் கிடைக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறானதாக இருக்கலாம் என்பது அவரது கருத்து. அவர் இப்படி சொல்ல காரணம் என்ன என்பதை இப்பொழுது பார்ப்போம்.

பால் உங்களுடைய எலும்புகளை வலிமையாக்குமா? என்ற தலைப்புடன் அவருடைய வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் அந்த வீடியோவில் எலும்புகளின் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்கு பால் ஒரு சிறந்த யோசனையாக இருக்காது என்பதை தெளிவாக விளக்கியுள்ளார்.

“பால் என்பது இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டது. ஆகவே நாம் நமது உடலில் pH அளவை மீண்டும் சமநிலைப்படுத்த வேண்டும். இதற்கு நமது உடலானது காரத்தன்மை கொண்ட கால்சியம் சத்தை நமது எலும்புகளில் இருந்து எடுத்து இந்த சமநிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறது. உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும் ஒப்பிடும் பொழுது அமெரிக்காவில் பால் அதிகப்படியாக சாப்பிடப்படுகிறது.

எனினும் அங்கு தான் ஆஸ்டியோபோரோசிஸ் சம்பந்தமான பிரச்சனைகளும் அதிகமாக உள்ளது என்பதே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அதுமட்டுமல்லாமல் பாஸ்சரைசேஷன் என்ற தொற்று நீக்க செயல்முறையின்பொழுது பால் அதிகப்படியான வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்படுவதால் அதிலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் அகற்றப்படுகிறது. இதனால் பால் குடிப்பதற்கான பிரயோஜனம் இல்லாமல் போகிறது.” என்று அந்த வீடியோவில் கூறுகிறார்.

ஆகவே டாக்டர். ஷுல்மன் வழக்கமான பாலுக்கு பதிலாக அதிக கால்சியம் நிறைந்த பிற உணவுகளை பரிந்துரை செய்கிறார். அதில் அரிசி பால் அல்லது பாதாம் பால் போன்றவை அடங்கும்.


பாலுக்கு பதிலாக நீங்கள் எடுத்து கொள்ள வேண்டிய சில கால்சியம் நிறைந்த உணவுகள்:-

- சோயா பால், ஓட்ஸ் பால், பாதாம் பால், அரிசி பால் மற்றும் தேங்காய் பால் போன்ற தாவரம் அடிப்படையிலான பானங்களில் அதிக அளவு கால்சியம் காணப்படுகிறது. எனினும் அரிசி பால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல.

- சோயா, தேங்காய், தயிர் மற்றும் சீஸ் போன்ற தாவரம் சார்ந்த ப்ராடக்டுகள்.

- ஓட்ஸ், தானியங்கள் மற்றும் கஞ்சி.

- வெள்ளை அல்லது பழுப்பு நிற மாவில் செய்யப்பட்ட மஃபின் ரோல்கள் மற்றும் பாகெல்கள்.

- பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் டோஃபு.

- வஞ்சரம், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன் வகைகள்.

- முட்டைகோஸ், கேல், கீரை மற்றும் ப்ராக்கோலி போன்ற பச்சை இலை காய்கறிகள்.

- சூரியகாந்தி விதைகள், சியா விதைகள், எள் விதைகள், ஹேசல் நட்ஸ் மற்றும் தகிணி போன்ற நட்ஸ் மற்றும் விதைகள்.

- ஆரஞ்சு மற்றும் பப்பாளி பழங்களில் அதிக அளவு கால்சியம் சத்து காணப்படுகிறது.

 பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, உலர்ந்த அத்தி, உலர்ந்த திராட்சை பழங்கள் ஆகியவையும் கால்சியத்தின் சிறந்த மூலங்கள்.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

CSIR ஆணையத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

 CSIR ஆணையத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

CSIR- SERC ஆனது Senior Administrative Assistant, Project Assistant, Project Associate I, Project Associate II பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 52 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

CSIR-SERC காலிப்பணியிடங்கள்:

Senior Administrative Assistant, Project Assistant, Project Associate I, Project Associate II பணிக்கென காலியாக உள்ள 52 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Project Associate கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / M.Sc / MCA / Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CSIR-SERC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Project Associate ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/- முதல் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

CSIR-SERC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 22.07.2024, 23.07.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news