July 21, 2024

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Assistant வேலை – சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே!

 

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Assistant வேலை – சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது JRF/Research Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி JRF/Research Assistant பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

Research Assistant கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc / MCA / ME/M.Tech, MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Research Assistant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JRF – ரூ.31,000/-

Research Assistant – ரூ.20,000/-

பாண்டிச்சேரி பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் shanmugam_cs@pondiuni.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 30.07.2024ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

குரூப்-1 தோராய கட் ஆப் மதிப்பெண் எவ்வளவு ? நிபுணர்கள் கூறுவது என்ன..?

 தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது.துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் போன்ற 92 காலி பணியிடங்களுக்காக தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்வு நடைபெற்றது.

நடப்பாண்டில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் பாதிக்கு பாதி தேர்வர்கள் குரூப் 1 தேர்வை எதிர் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த சில ஆண்டுகளாகவே தேர்வுக்கு வராதவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குரூப் 1 தேர்வின் தோராயிர கட் ஆப் மார்க் எவ்வளவு இருக்கும்? என்பது குறித்து தென்காசி மாவட்டம் சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமி ஒருங்கிணைப்பாளர்ரமேஷ் இடம் கேட்டு தெரிந்து கொள்வோம்.

தென்காசி மாவட்டம் சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தெரிவித்தது,“குரூப் 1 தேர்வு சுமார் 1.9 லட்சம் தேர்வர்கள் மட்டுமே எதிர்கொண்டுள்ளனர். குரூப்-1 தேர்வு பிலிம்ஸ் மெயின்ஸ் மற்றும் இன்டர்வியூ என மூன்று வகையில் தேர்வுகள் நடைபெறும். பிலிம்ஸ் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். இது 300 மதிப்பெண்ணுக்கு நடைபெறும். தேர்வு ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வழங்கப்படும். இதில் நெகட்டிவ் மார்க் கிடையாது. இது அப்ஜெக்டிவ் டைப் தேர்வு.
டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒவ்வொரு ஆண்டுகளும் வினாத்தாளின் தரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு குரூப் 1 தேர்வு ஒப்பிடும்பொழுது இந்த ஆண்டு வினாத்தாள் மிகவும் தரமானதாக இருந்தது. தமிழ்நாட்டில் பெரிதும் மதிக்கக் கூடிய மற்றும் முக்கியமான தேர்வாக இருப்பது குரூப்-1 தேர்வு. இந்த தேர்வு பட்டப்படிப்பு முடித்தவர்கள் எழுதலாம்.

குரூப் 1 கட் ஆப்: குரூப்-1 தேர்வில் 200 கேள்விகளில் 135 அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகள் சரியாக விடையளித்தால் மெயின்ஸ் தேர்விற்கு நிச்சயம் தயார் செய்யலாம்.


குரூப் 1 தேர்வு வினாத்தாள்: இந்த ஆண்டு குரூப் ஒன் தேர்வு வினாத்தாள் மிகவும் தரமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. மிகவும் நுணுக்கமாக புரிந்து கொண்டு பதிலளிக்கக்கூடிய கேள்விகளாக இருந்தது. அறிவியல், பொருளாதாரம், நாட்டு நடப்புகளை தொடர்ந்து படிக்கும் பொழுது இது போன்ற கேள்விகளுக்கு எளிதில் பதிலளிக்க முடியும்.135 மற்றும் அதற்கு மேல் இந்த ஆண்டிற்கான குரூப்-1 தேர்விற்கான கட் ஆப் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார் சாந்தியை அகாடமி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 4, 2 ஆகிய தேர்வுகளுக்கு எளிதில் தயார் செய்யலாம். ஆனால் தற்போது போட்டி அதிகரித்துள்ளதால் கேள்வித்தாளின் தரமும் அதிகரித்துள்ளது.

**வெற்றி விகிதம்:**1:20 விகிதத்தில் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 2000 தேர்வர்கள் மெயின்ஸ் தேர்வை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Ennum Ezhuthum - 1 To 5th - Term 1 - ( Unit - 5 ) Lesson Plan

 

Ennum Ezhuthum Lesson Plan | 2024 - 2025


July - 2024

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Unit - 5 ) July 1st Week Lesson Plan - T/M & E/M - Download here

Ennum Ezhuthum - 4th & 5th Std -  Term 1 - ( Unit - 5 ) July 1st Week Lesson Plan - T/M & E/M - Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

5,146 தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம்: பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியீடு

  1282917

அரசுப் பள்ளிகளில் உள்ள 5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 2011-12-ம் நிதியாண்டில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் 1,581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 5,146 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது.


இந்த தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு காலம் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற்றது. இதற்கிடையே தேவை அடிப்படையில் இந்த 5,146 தற்காலிக பணி இடங்களையும் நிரந்தரமாக்க தொடக்கக் கல்வி இயக்குநர் அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.


அதையேற்று நிதித்துறை ஒப்புதலுடன் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக அடிப்படையில் உள்ள 1,581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3,549 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி அமைக்க ஆணையிடப்படுகிறது. இதில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்படாமல் உள்ள 16 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை புத்தாக்கம் செய்து நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யவும் உத்தரவிடப்படுகிறது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

நேர்முக உதவியாளராக பதவி உயர்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்..

 

அமைச்சு பணியாளர்கள் - கண்காணிப்பாளர் பதவியில் இருந்து நேர்முக உதவியாளராக பதவி உயர்வு - ஏற்கனவே உள்ள முன்னுரிமை பட்டியலில் வரிசை எண் 41 முதல் 50 முடிய உள்ளவர்களுக்கு Google Meet மூலம் 22-07-2024 அன்று கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்..
IMG-20240722-WA0000

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Teachers Transfer 2024 - இன்று ( 22.07.2024 ) யாருக்கு?

 DSE - பள்ளிக் கல்வித்துறை


22.07.2024 திங்கள்கிழமை

அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் 
( வருவாய் மாவட்டத்திற்குள் )

DEE - தொடக்கக் கல்வித்துறை


22.07.2024 திங்கள்கிழமை

BTs - With State 
IMG-20240721-WA0012_wm



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

July 20, 2024

Flipkart நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு 2024 – ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

 

Flipkart நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு 2024 – ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

Flipkart நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Assistant Manager பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Flipkart பணியிடங்கள்:

Assistant Manager பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Manager கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Flipkart வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Assistant Manager முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2 முதல் 4 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Flipkart ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Flipkart-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Manager தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது skill test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC - குரூப் 4 தேர்வில் சிறப்பு மதிப்பெண்களால் டைப்ரைட்டிங் மாணவர் சேர்க்கை 10% அதிகரிப்பு:

 66-3

அரசுப் பணியில் சேருவதற்கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வில் தட்டச்சு பயிற்சிக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படுவதால், தட்டச்சு படிக்கும் மாணவர்கள் சேர்க்கை 10 சதவீதம் உயர்ந்துள்ளதாக பயிற்சி நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

 தமிழக அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளை நடத்தி தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு சான்றிதழ்களை வழங்குகிறது.இதில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகளை முடித்தவர்கள், டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுதும் போது, அவர்கள் இந்த தொழில்நுட்ப சான்றிதழ் பெற்றிருப்பதன் காரணமாக எளிதில் ‘கட்ஆப்’ மதிப்பெண்களை பெற்று அரசு வேலைவாய்ப்பை பெறுகின்றனர். இதனால் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தகுதியைப் பெறுவதற்காக மாணவர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

 கொரோனா காலத்தில் தொடர்ச்சியாக 2 ஆண்டுகள், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயில்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.இதனால் வணிக பயிற்சி நிறுவனங்கள், நிறுவனங்களை நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். கொரோனா காலம் முடிந்த பின்னர், தட்டச்சு பயில்பவர்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்தது. தற்போது அரசு வேலைவாய்ப்பில் இந்த தகுதியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்ந்துள்ளதால், தட்டச்சு பயில்பவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.கடந்த ஓராண்டில் தட்டச்சு பயில்பவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக பயிற்சி நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

 இதற்கிடையே சுருக்கெழுத்து உயர் வேக தேர்வு ஆகஸ்ட் 10 மற்றும் 11ம்தேதி நடக்கிறது. சுருக்கெழுத்து இளநிலை, முதுநிலை தேர்வுகள் ஆகஸ்ட் 24, 25ம் தேதிகளில் நடக்கின்றன. வணிகவியல், அக்கவுன்டன்சி இளநிலை, முதுநிலை தேர்வுகள் ஆக.23ம் தேதி நடக்கிறது. இந்த தட்டச்சு இளநிலை, முதுநிலை, முதுநிலை உயர்வேகம் ஆகிய தேர்வுகள் ஆக.31 மற்றும் செப்.1ம் தேதி நடைபெற உள்ளன. தேர்வு முடிவுகளை அக்டோபர் 29ம்தேதி வெளியிட அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

NEW UPDATE EMIS Instructions for Uploading Post Savings Account Details

 

அனைத்து தொடக்க நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள்   தங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஏற்ப அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் அதன் கணக்கு விவரங்களை EMIS UPDATE  செய்வதற்கான வழிமுறைகள்.👇👇👇


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

July 19, 2024

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.55,000 சம்பளத்தில் Teaching Assistant வேலைவாய்ப்பு

 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.55,000 சம்பளத்தில் Teaching Assistant வேலைவாய்ப்பு

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 1. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் நாள் நாள் 22.07.2024. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.55,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். ME/M.Tech, PhD தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

சென்னையில் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி

 

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

இந்த பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி பிளஸ் 2 தேர்ச்சி ஆகும் மற்றும் 1.8.2024 அன்று 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. கூட்டுறவு பட்டயப் பயிற்சி ஓராண்டு 2 பருவ முறைகளாக (முதல் பருவம்/ 6மாதம்/ 5 பாடங்கள்; இரண்டாம் பருவம் / 6 மாதம் /5 பாடங்கள்) நடத்தப்படும். இதற்கான பயிற்சிக் கட்டணம் மொத்தம் ரூ.18,750. தமிழில் மட்டுமே பயிற்சியளிக்கப்படும். பயிற்சிக்கான தேர்வினையும் தமிழில் மட்டுமே எழுத வேண்டும். இந்த பயிற்சி வகுப்புகள் பிராட்வே, தேனாம்பேட்டை மற்றும் செங்குன்றம் ஆகிய 3 பயிற்சி நிலையங்களில் நடைபெறும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேர்க்கை நடந்து வருகிறது.

இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக வருகிற ஜூலை 19ம் தேதி மாலை 5 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பயிற்சிக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் பயிற்சி நிலையத்தை நேரில் அணுகி தங்களது அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு பிறகு பயிற்சி கட்டணம் ரூ.18,750 ஐ அன்றே பயிற்சி நிலையத்தில் UPI Paymentல் ஒரே தவணையாக செலுத்த வேண்டும். பயிற்சி முடிவில் கூட்டுறவு பட்டயப் பயிற்சி, நகை மதிப்பீட்டாளர் பயிற்சி மற்றும் கணினி தொடர்பான சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் கூட்டுறவு பட்டயப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட்டுறவு நிறுவனங்களில் பணியில் சேர்வதற்கும், தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரியவும் வாய்ப்புள்ளது. மேலும், விவரங்களுக்கு சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.215. பிரகாசம் சாலை, பிராட்வே சென்னை-600001 என்ற முகவரியிலோ அல்லது 04425360041 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்குவது எப்படி? தமிழக அரசு பயிற்சி

 இண்டர்நெட் யூகத்தில் எல்லாம் விரல் நுனியில் முடிந்து விடுகிறது. ஸ்மார்ட்போன்கள் பல சாகசங்களை சாத்தியமாக்குகின்றன.

யூடியூப் மூலம் பலரும் தங்களது தனித்திறமைகளையும், பல்வேறு தகவல்களை அதில் பகிர்ந்து வருமானம் பார்க்கின்றனர். அப்படி உங்களுக்கும் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது. இதற்காக தமிழ்நாடு அரசு அதற்கு பயிற்சி வழங்குகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் ” யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் தொடர்பான பயிற்சியானது வரும் 22.07.2024 முதல் 24.07.2024 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் இந்நிறுவனத்தின் கட்டிடட வளாகத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நீங்கள் எவ்வாறு யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான நேரடி பயிற்சி வகுப்பின் மூலமாக கற்றுக் கொடுக்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் (ஆண் / பெண்/ திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் / பெண்/ திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

முகவரி:
தமிழ் நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
சிட்கோ தொழிற்பேட்டை,
இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை,
ஈக்காட்டுத்தாங்கல்,
சென்னை -600 032.

தொலைபேசி எண்கள்: 04422252081 22252082 / 8668100181 9841336033
முன்பதிவு அவசியம் பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

SGT - State Vacancy List ( 19.07.2024 )

 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்காக  உள்ள அனைத்து மாவட்ட காலி பணியிடங்கள். 19.07.2024_

மாவட்டத்திற்குள் கலந்தாய்வு முடித்த பின்பு உள்ள  காலி பணியிடங்கள்.

SGT - State Vacancy List ( 19.07.2024 )👇👇👇

Download here



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

IT returns Individual efiling date extended 31-08-24

 

IT returns  Individual efiling date extended 31-08-24

IMG-20240719-WA0010

Problems in functioning of Income Tax Portal and update issues in AIS / TIS & Demand for Extension of Due date for filing of Income Tax Returns for AY 2024 25 from 31s July 2024 to 31 August 2024 .

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

44,228 காலியிடங்கள்: கிராம அஞ்சல் பணியாளர்களின் வேலை என்ன..? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

 கிராமின் தக் சேவக்(GDS) எனப்படும் அஞ்சல் துறையின் துறை சாராத பணியாளர்கள் அமைப்பு 150 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. கிராம அஞ்சல் பணியாளர்கள், கிளை அஞ்சல் அதிகாரிகள் ஆகியோரால் இது செயல்பட்டு வருகிறது. கிளை அஞ்சல் அதிகாரிகள் அல்லாத கிராம அஞ்சல் பணியாளர்கள், தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும், துணை அஞ்சல் அலுவலகங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். இந்தப் பணியாளர்கள் தங்களது 65 வயது வரை பணியில் இருப்பார்கள். மேலும் கிராம அஞ்சல் பணியாளர்கள் பற்றி பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்துள்ளார் ஓய்வு பெற்ற கிராம அஞ்சல் ஊழியர் கலியமூர்த்தி.


கிராமின் தக் சேவக் தவிர, உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்), கிளை போஸ்ட் மாஸ்டர் (பிபிஎம்) மற்றும் தக் சேவக் ஆகியோரை பணியமர்த்துவதற்கும் இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் பொறுப்பாகும். தக் சேவக் சம்பளம் சராசரி இந்திய சம்பளத்தை விட சற்று குறைவாக உள்ளது. கிராமின் தக் சேவக் சம்பளம் நேரம் தொடர்பான தொடர்ச்சியான கொடுப்பனவு (TRCA) என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலான வேலைகளைப் போல் இல்லாமல், ஒரு GDS அவர்களின் மாதச் சம்பளத்தைப் பெற 4-5 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பொதுவாக, இந்தியா போஸ்ட் ஜிடிஎஸ் சம்பளம் நான்கு மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மாதம் ₹10,000 மற்றும் ஐந்து மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ₹12,000. ABPM சம்பளம் GDS சம்பளம் தான். ஆனால், பிபிஎம் தபால் அலுவலக சம்பளம் நான்கு மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு மாதம் ₹12,000 மற்றும் ஐந்து மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ₹14,500. இந்த வேலை மத்திய அரசாங்க வேலையாக இருந்தாலும் தேர்வு எழுதியவர்கள் மெரிட்டில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர முடியும் என்கிறார் கலியமூர்த்தி.

கிளை போஸ்ட் மாஸ்டர்: (BPM)

கிராம பஞ்சாயத்தின் முழுமையான அஞ்சல் வலையமைப்பின் பொறுப்பில் பிபிஎம் உள்ளது. அவர்கள் தபால் அலுவலகம் மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் கிளைகளையும் நிர்வகிக்க வேண்டும். கணினிகள், மொபைல் போன்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி அவர்கள் வேலை நேரத்தில் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும். BPM அனைத்து பதிவுகளையும் ஆவணங்களையும் நிர்வகிக்க வேண்டும்.

BPM கிளையின் தலைவராக இருப்பதால், துணைக் கிளை அலுவலகங்களில் உள்ள அனைத்துப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒப்படைக்கும் பொறுப்பில் உள்ளார். தபால் அலுவலகத்தின் திறமையான செயல்பாடுகளை அவர் உறுதி செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்கும், கிளை செயல்படும் பகுதியில் வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும் அவர்கள் பொறுப்பு. பணம் தொடர்பான ஆவணங்கள், ஸ்பீட் போஸ்ட், புக் போஸ்ட் போன்றவற்றுக்குஅவர்கள் பொறுப்பு. மற்ற மேற்பார்வை அதிகாரிகள், சந்தைப்படுத்தல், மேளா அமைப்பு, வணிக கொள்முதல் போன்ற சில பணிகளை BPM க்கு வழங்கலாம். தபால்காரர்களிடையே அஞ்சல்/பார்சல் விநியோக வலையமைப்பை நிர்வகிப்பதற்கு அவர்கள் பொறுப்பாக உள்ளனர்.

உதவி கிளை போஸ்ட் மாஸ்டர்:

தபால் அலுவலகத்தின் திறமையான செயல்பாடுகளில் BPM க்கு ABPM உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முத்திரைகள் & எழுதுபொருட்கள் விற்பனை மற்றும் தபால்கள் பணம் செலுத்துதல், வைப்புத்தொகை போன்றவற்றைக் கொண்டிருந்தால், அவற்றை வீட்டு வாசலில் டெலிவரி செய்வதை அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் வணிக கொள்முதல், சந்தைப்படுத்தல் மற்றும் உயர் அதிகாரிகளால் ஒதுக்கப்படும் பிற பணிகளில் BPM க்கு உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.BPM இன் கடமைகளைச் செய்யச் சொன்னால் அதைச் செய்வதற்கு ABPM பொறுப்பாகும்.

டக் சேவக்:

கிராமின் தக் சேவக் கிளையின் அனைத்து நடவடிக்கைகளிலும் உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது தபால்களை வழங்குதல், எழுதுபொருட்கள் & முத்திரைகள் விற்பனை அல்லது கிளை அஞ்சல் மாஸ்டர் அல்லது உதவி கிளை அஞ்சல் மாஸ்டர் அறிவுறுத்திய பிற செயல்பாடுகள்.வங்கியின் திறமையான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக கிளை போஸ்ட் மாஸ்டர் அல்லது உதவி கிளை போஸ்ட் மாஸ்டருக்கு அவர்கள் உதவி வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வணிக கொள்முதல், சந்தைப்படுத்தல் அல்லது உயர் அதிகாரிகளால் ஒதுக்கப்படும் பிற பணிகளை நடத்துவதற்கு அவர்கள் பொறுப்பு.

GDS: அஞ்சல் வழங்குபவர்/தபால்காரர்கள். பொதுமக்களுக்கு அஞ்சல் விநியோகிப்பது முக்கிய பொறுப்பு.கிளை போஸ்ட் மாஸ்டரிடமிருந்து (பிபிஎம்) தொகுப்புகளின் சேகரிப்பு மற்றும் பொதுமக்களுக்கு தொகுப்பு விநியோகம் ஆகியவற்றை அவர்கள் கையாளுவார்கள். தபால்காரர்கள் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதுடன், சமூகத்தை திட்டங்களில் பங்கேற்க ஊக்குவிப்பதும் எதிர்பார்க்கப்படுகிறது.

GDS மெயில் பேக்கர்/கேரியர் பணி விவரம்:

அஞ்சல் சேகரிப்பாளர்களுக்கும் டெலிவரி செய்பவர்களுக்கும் பேக்கர்கள் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து அஞ்சல் பைகளையும் பேக் செய்வது, அஞ்சல் பைகளைத் திறப்பது மற்றும் டெலிவரி செய்பவர்கள் மற்றும் சேகரிப்பாளர்களுக்கு அஞ்சல் பைகளை விநியோகிப்பது போன்ற பொறுப்புகளும் உண்டு. அது மட்டுமில்லாமல் கிராம அஞ்சல் பணியாளர்களுக்கு டார்கெட் அச்சீவ்மென்ட் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது, அவர்களுக்கு பென்ஷன் எதுவும் வழங்கப்படுவதில்லை போன்ற பல சிரமங்கள் இந்த பணிகளில் உள்ளது எனவும் ஓய்வு பெற்ற கிராம அஞ்சல் ஊழியர் கலியமூர்த்தி தெரிவித்தார்.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news