IIT Madras- ல் Project Associate காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.35,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 IIT Madras- ல் Project Associate காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.35,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (IIT Madras) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Associate பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

IIT Madras காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Associate பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Associate  கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M. Sc / M. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Associate ஊதியம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT Madras தேர்வு முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன் !

 அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate காலிப்பணியிடங்கள் –  கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன் !

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Associate-II பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Project Associate-II பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate-II கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / M.E / M.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அண்ணா பல்கலைக்கழக வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்

Project Associate-II ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 32,500/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


IBPS ஆணையத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு – 4400+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

 IBPS ஆணையத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு – 4400+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

Institute of Banking Personnel Selection (IBPS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Probationary Officers / Management Trainees பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென 4455 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

IBPS காலிப்பணியிடங்கள்:

Probationary Officers / Management Trainees பணிக்கென காலியாக உள்ள 4455 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PO கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IBPS வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 30 வரை இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

PO ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

IBPS விண்ணப்ப கட்டணம்:

SC / ST/ PWBD- ரூ.175/-

மற்றவர்கள் – ரூ.850/-

PO தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Preliminary Exam, Mains Exam மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


DEO to CEO Promotion - G.O Released - 31.07.24


IMG_20240731_190358

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் -மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திலிருந்து முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்தல் ஆணை வெளியிடப்படுகிறது.

GO.No187- DEO to CEO Promotion👇👇👇

Download here



🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

SMC - பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - நிதி விடுவித்தல் - SPD Proceedings

 IMG_20240731_190900

பள்ளிக்  கல்வித் துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி -2024 2026 - ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் வழிகாட்டு நெறிமுறைகள் - நிதிவிடுவித்தல் - சார்பு SPD Proceedings 

fund Proceedings - SMC Reconstitution including budget & Annexures👇👇👇

Download here


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

10th Eng First Mid Term Test - 2024 - Question Paper

SMC - Important Dates & Schedule - All Schools

 

SMC - Important Dates & Schedule


பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கால அட்டவணை


02.08.2024 - அனைத்துப் பெற்றோர்கள் கூட்டம்


10.08.2024 - முதல் 50% தொடக்கப் பள்ளிகள்


17.08.2024 - மீதமுள்ள 50% தொடக்கப் பள்ளிகள்


24.08.2024 - உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள்


31.08.2024 - நடுநிலைப் பள்ளிகள்



SMC%20Schedule%20copy

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஏன் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை..? காரணங்களும்.. அதற்கான தீர்வுகளும்..!

 உங்களின் சொந்த சாதனைகள், உங்களின் பலம் என்ன என்பது குறித்து நினைத்துப் பாருங்கள். அடுத்தவர்களோடு ஒப்பிடுவதை விட உங்களின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை சோசியல் மீடியாவை தவிர்ப்பது நல்லது.

நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையா?

மகிழ்ச்சியற்ற உணர்வை நாம் அனைவருமே சில நேரங்களில் அனுபவிக்க வேண்டியிருக்கும். பெரும்பாலும் நம் வாழ்வில் பல்வேறு காரணிகளால் நமக்கு மகிழ்ச்சியில்லா சூழல் ஏற்படுகிறது. இந்தக் காரணங்களை சரியாக புரிந்துகொள்வதன் மூலம், நேர்மறையான மாற்றங்களைச் செய்து, மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கையை வாழ நம்மால் முடியும். இந்தக் கட்டுரையில் மகிழ்ச்சியின்மைக்கான பொதுவான காரணங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதில் வரக்கூடிய சவால்களை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றி தெளிவாக பார்ப்போம்.

News18

அடுத்தவர்களை மகிழ்விப்பது : 

அடுத்தவர்களை மகிழ்விப்பவராக இருப்பது மகிழ்ச்சியின்மைக்கு வழிவகுக்கும், ஏனெனில் இது உங்கள் சொந்த நலனை விட மற்றவர்களின் கவனம் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்கும். மற்றவர்களிடமிருந்து தொடர்ச்சியாக கவனத்தைக் கோர விரும்புவது உங்கள் சொந்த தேவைகளையும் விருப்பங்களையும் புறக்கணிப்பதற்கு ஈடாகும். இதனால் அதிருப்தி, மனக்கசப்பு மற்றும் மோதல் போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். அடுத்தவர்களிடம் ‘இல்லை’ ‘வேண்டாம்’ என்று கூறப் பழகுங்கள். உங்களைச் சுற்றி எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள். எப்போதும் உங்கள் சொந்த மகிழ்ச்சி மற்றும் இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

வேலை-வாழ்க்கையில் சமநிலையை பேணுதல் : 

வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே ஆரோக்கியமான சமநிலையை பராமரிப்பது மிகவும் முக்கியமானது. உங்கள் தொழில் மற்றும் கேரியரில் நீங்கள் சிறந்து விளங்கலாம். ஆனால் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் செலவிடும் நேரத்தை புறக்கணித்தால், நீங்கள் குறிப்பிடத்தக்க மன மற்றும் உணர்வு ரீதியான துயரங்களை அனுபவிக்க நேரிடும். அதிகப்படியாக வேலை செய்வது மனச்சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

உங்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அதே நேரத்தில், வீட்டிற்கு வந்தும் அலுவலக வேலைகள் செய்வதை தவிர்க்கவும். உங்களுக்கு மகிழ்ச்சியையும் தளர்வையும் தரும் செயல்களில் ஈடுபடுங்கள்.

மற்றவர்களுடன் ஒப்பிடுவதைத் தவிர்த்தல் : 

ஒவ்வொரு தனிநபரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகள், தனிப்பட்ட நலன்கள் இருக்கும். தொடர்ந்து உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது, உங்கள் சுயமரியாதையை பலவீனப்படுத்தி, மகிழ்ச்சியற்ற உணர்வுகளை அதிகரிக்கும். சமூக ஊடகங்கள் மற்றும் சமூக அழுத்தங்கள் பெரும்பாலும் இந்த போக்கை அதிகரிக்த்து, நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை வளர்ப்பதோடு ஒருவரின் சுய மதிப்புற்கு தீங்கு விளைவிக்கும்.
உங்களின் சொந்த சாதனைகள், உங்களின் பலம் என்ன என்பது குறித்து நினைத்துப் பாருங்கள். அடுத்தவர்களோடு ஒப்பிடுவதை விட உங்களின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை சோசியல் மீடியாவை தவிர்ப்பது நல்லது.

உங்களின் சொந்த சாதனைகள், உங்களின் பலம் என்ன என்பது குறித்து நினைத்துப் பாருங்கள். அடுத்தவர்களோடு ஒப்பிடுவதை விட உங்களின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை சோசியல் மீடியாவை தவிர்ப்பது நல்லது.

உங்களிடம் இல்லாததை நினைத்து கவலைப்படாதீர்கள் : 

எப்போதும் நேர்மறையான அணுகுமுறையை பராமரிப்பது அவசியமாகும். உங்களிடம் இல்லாததை நினைத்து வருத்தப்படுவதை விட உங்களிடம் உள்ளதைப் பாராட்டுவதில் கவனம் செலுத்துங்கள். நன்றியுணர்வு மற்றும் பணிவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்களின் பலம், உறவுகள் மற்றும் அனுபவங்களைப் பாராட்டுவதில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கையின் சிறிய சந்தோஷங்களை மகிழ்ச்சியாக தழுவிக்கொள்ளுங்கள்.

டாக்ஸிக் உறவுமுறையை சரி செய்தல் : 

நச்சுத்தன்மை எண்ணம் கொண்ட நபர்களால் நீங்கள் சூழப்பட்டிருந்தால், அது உங்களின் ஆற்றலை, சுயமரியாதையைக் குறைத்து உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியைத் தடுக்கலாம். ஒருவரை ஏமாற்றுவது, விமர்சிப்பது அல்லது தொடர்ந்து எதிர்மறையான நடத்தை ஆகியவை அனைத்தும் டாக்ஸிக் உறவில் இருக்கும். இவை அனைத்தும் உங்களின் மன அழுத்தம் மற்றும் மகிழ்ச்சியற்ற தன்மைக்கு பங்களிக்கின்றன.

உங்கள் மகிழ்ச்சியையும் சுய மதிப்பையும் தொடர்ந்து நாசப்படுத்தும் நபர்களிடமிருந்து எப்போதும் விலகியே இருங்கள். பரஸ்பர மரியாதை மற்றும் ஆதரவின் அடிப்படையில் உறவுகளுடன் பழகுங்கள். உங்கள் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு சாதகமாக பங்களிப்புச் செய்யும் நட்புகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

நீங்கள் தினமும் உடலுக்கு தேவையான நார்ச்சத்தை உட்கொள்கிறீர்களா..? அவசியத்தை தெரிஞ்சுக்கோங்க..!

 ஒரு மனிதருக்கு குடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இலகுவான குடல் இயக்கத்திற்கும் நார்ச்சத்து இன்றியமையாத ஒன்றாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியர்களின் தினசரி உணவில் சேர்க்கப்படும் உணவு பொருட்கள் பெரும்பாலும் போதுமான நார்ச்சத்தை கொண்டிருப்பதில்லை. இது பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.

நார்ச்சத்தின் அவசியம் என்ன?

நமது உடலில் செரிமான மண்டலத்தில் நார்ச்சத்தின் பங்கு முக்கியமானதாக உள்ளது. குடல்கள் சீராக இயங்குவதற்கும், மலசிக்கல் ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் நார்ச்சத்து அவசியமானதாகும். மேலும் இரத்ததில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தை குறைத்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துவதிலும் நார்ச்சத்து முக்கிய பங்காற்றுகிறது. நாம் உணவு உட்கொள்ளும் போது வயிறு நிறைந்தது போன்ற உணர்வை கொடுத்து, அதிகப்படியான கலோரிகள் உட்கொள்வதை தடுப்பதும் இந்த நார்ச்சத்தின் வேலை தான்! மேலும் இதய கோளாறுகள் ஏற்படுவதை தடுப்பது மட்டுமின்றி, நீரிழிவு நோய் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கும் நார்ச்சத்து பெருமளவு பங்காற்றுகிறது.

News18

நம் உடலுக்கு எவ்வளவு நார்ச்சத்து தேவை?

ஒருவருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நார்ச்சத்து தேவை என்பது பாலினம், உடல் ஆரோக்கியம், வயது போன்ற பல்வேறு காரணிகளை கொண்டு மாறுபடும். அமெரிக்க ஹார்ட் அசோசியன் அறிக்கையின்படி சராசரியாக பெண்களுக்கு ஒரு நாளைக்கு 25-28 கிராம் அளவிலான நார்ச்சத்தும், ஆண்களுக்கு 38 கிராம் அளவிலான நார்ச்சத்தும் தேவைப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக ஆண் பெண் இருவருமே மேலே குறிப்பிட்டுள்ள அளவில் பாதியளவு நார்ச்சத்தை மட்டுமே உட்கொள்கின்றனர்.

நார்ச்சத்து மிகுந்த உணவு பொருட்கள்:

  • முழு தானியங்கள்: முழு தானிய வகைகளான பிரவுன் ரைஸ், கோதுமை ரொட்டி, ஓட்ஸ் ஆகியவற்றில் அதிகளவிலான ஊட்டச்சத்துக்களும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளன.

  • பழங்கள் மற்றும் காய்கறிகள் : தோலோடு கூடிய பழ வகைகள், காய்கறிகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் அதிகளவு, ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன.

  • பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்: பீன்ஸ், கொண்டை கடலை, மற்றும் பட்டாணி ஆகியவற்றில் அதிக அளவிலான நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை சூப், சாலட் அல்லது சைட் டிஷ் ஆகவும் உட்கொள்ளலாம். இதனால் அளப்பரிய நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். இதை தவிர கொட்டை மற்றும் விதை வகைகளை சேர்ந்த பாதாம் பருப்பு, சியா விதை, பூசணி விதை ஆகியவை அதிகளவு நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளன. மேலும் இவற்றில் உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளன.


    அதிகளவு நார்ச்சத்தை எடுத்து கொண்டால் என்னாகும்?

    நார்ச்சத்து உடலுக்கு தேவையானதாக இருந்தாலும் அதுவும் அளவோடு தான் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக நார்ச்சத்து நம் உடலில் சேரும் போது இரைப்பையில் அசவுகரியத்தை உண்டாக்கும். மேலும் வயிறு வீக்கம், வயிற்று போக்கு மற்றும் வாயு தொல்லை போன்ற பல உபாதைகள் ஏற்பட வழிவகை செய்யும்.

    அதுமட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான கால்சியம், மக்னீசியம், இரும்பு சத்து, ஜிங்க் ஆகியவை செரிமானத்தின் போது உறிஞ்சபடுவதையும் தடுக்கிறது. மேலும் ஒருவரின் உடலில் நார்ச்சத்து அதிகமாக இருந்தால், அது உடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சிவிடும். இதன் காரணமாக நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு மலச்சிக்கல் போன்ற பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும் அபாயத்தை உருவாக்குகிறது.

    எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கையில் நார்ச்சத்தானது உடலுக்கு தேவையான அளவில் இருக்கும் போது உடல் எடையை கட்டுக்குள் வைத்தல், ஆரோக்கியமான செரிமான மண்டலம் போன்ற பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. தினசரி உணவில் சீரான அளவில் நார்ச்சத்து இருக்குமாறு பார்த்துக் கொண்டால் அதனால் நமக்கு பல்வேறு வித நன்மைகள் உண்டாகும் என்பதில் ஐயமில்லை.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip