தொடக்க கல்வித் துறையில் பணியாளர் நிர்ணயம்: சரண் செய்த பணியிடங்களை பதிவு செய்யக்கூடாது என உத்தரவு

 

.com/

அரசுப் பள்ளிகளில் பணியாளர் நிர்ணயத்தின்போது சரண் செய்யப்பட்ட பணியிடங்களை மீண்டும் பதிவு செய்யக்கூடாது என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: 


நடப்பு கல்வியாண்டில் (2024-25) கடந்த ஆகஸ்ட்1-ம் தேதி நிலவரப்படி பள்ளிகளில்உள்ள மாணவர் எண்ணிக்கைக்கேற்ப இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழ்வழி மற்றும்ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களை தனித்தனியாக கணக்கிட்டு வகுப்புவாரியாக பணி நிர்ணயம் செய்யவேண்டும். இயக்குநரின் பொதுத்தொகுப்புக்கு சரண் செய்யப்பட்ட பணியிடங்களை மீண்டும் கணக்கில் கொண்டுவரக்கூடாது. மேலும், உபரி ஆசிரியர்கள், உபரி மற்றும் கூடுதல் தேவையுள்ள பணியிடங்கள் என சரியாக கணக்கிட்டு விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 

மாணவர் எண்ணிக்கையில் ஏதும் சந்தேகம் இருப்பின் வட்டாரக் கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இதுதவிர எமிஸ் தளத்தில் பதிவேற்றப்படும் தகவல்கள் தவறானதாக இருப்பின், சம்பந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆசிரியர்களை பணி நிர்ணயம் செய்து விவரங்களை இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும்


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

IIITDM காஞ்சிபுரத்தில் Consultant காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.40,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 IIITDM காஞ்சிபுரத்தில் Consultant காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.40,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

IIITDM காஞ்சிபுரம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Consultant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

IIITDM காலிப்பணியிடங்கள்:

IIITDM வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Consultant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Consultant கல்வி தகுதி:

மத்திய அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIITDM வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Consultant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIITDM தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Guest Lecturer காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!

 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Guest Lecturer காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது Guest Lecturer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BDU காலிப்பணியிடங்கள்:

Guest Lecturer பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Guest Lecturer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BDU வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Guest Lecturer ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BDU தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(20.08.2024) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

IIT Madras- ல் Senior Executive காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 IIT Madras- ல் Senior Executive காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

IIT Madras ஆனது Junior / Senior Executive பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IIT Madras காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior / Senior Executive பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIT Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- முதல் ரூ.25,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisted செய்யப்பட்டு written / skill test / interview மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDFe



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பொறியியல் கல்லூரி வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு - அண்ணா பல்கலைக்கழகம்

 anna-university-1

பொறியியல் கல்லூரி வகுப்புகள் செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், பி.இ., பி.டெக், பி.பிளான், எம்.எஸ்.சி (5 ஆண்டுகள்) பாடப்பிரிவுக்கான வகுப்புகளுக்கு, முன்னதாக ஆகஸ்ட் 21-ம் தேதி மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


மேலும், முதல் செமஸ்டர் தேர்வு டிசம்பர் 23-ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் கல்லூரி வகுப்புகள் செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 


அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நடந்துள்ள நிலையில், பொறியியல் கல்லூரி வகுப்புகள் செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்வு ஏன்? - தமிழக பாடநூல் கழக அதிகாரிகள் விளக்கம்

 பள்ளி பாடப் புத்தகங்களின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், விற்பனை விலையானது உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக பாடநூல் கழக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்படுகின்றன. அவை தமிழக பாடநூல் கழகம் சார்பில் அச்சிடப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் மற்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு சுமார் 7 கோடி பாடப் புத்தகங்கள் தற்போது அச்சிடப்படுகின்றன. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களுக்கு பாடநூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளி பாடப் புத்தகங்களின் விலை ரூ.40 முதல் ரூ.90 வரை உயர்த்தப்பட்டுள்ளது. காகிதங்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக பாடநூல் கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாடநூல் கழக அதிகாரிகள் சிலர் கூறியது: “பாடப் புத்தகங்களின் விற்பனை விலையை பொறுத்தவரை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்போதைய உற்பத்தி செலவை அடிப்படையாகக் கொண்டு விலையானது மறுநிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடைசியாக தமிழகத்தில் 2018-2019-ம் கல்வியாண்டில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்ட போது விலை திருத்தியமைக்கப்பட்டது.

17235571593057

தரம் உயர்ந்த எலிகண்ட் பிரின்டிங் பேப்பர் 80 ஜிஎஸ்எம் தாள் மற்றும் 230 ஜிஎஸ்எம் ஆரா போல்டு புளுபோர்டு மேலட்டை கொண்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டதால் விலையானது உயர்த்தப்பட்டது. இந்தச் சூழலில் புத்தகங்களின் உற்பத்தி செலவீனம் தற்போது கணிசமாக உயர்ந்துவிட்டது. அதாவது, 2018-2019-ம் ஆண்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டதைவிட தற்போது புத்தகங்களுக்கான உற்பத்தி பொருட்களான தாள் 55 சதவீதமும், மேலட்டை 27 சதவீதமும் மற்றும் அச்சுக்கூலி 21 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு புத்தகத்துக்கான உற்பத்தி செலவீனம் நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலையைவிட சராசரியாக 45 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது.


இதையடுத்து, நடப்பாண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலையை பக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.40 முதல் அதிகபட்சமாக ரூ.90 வரை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 1 முதல் 4-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30-40 வரையும், 5 முதல் 7-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30-50 வரையும் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 8-ம் வகுப்பு புத்தகம் ரூ.40–70 வரையும், 9-12 வகுப்புக்கு ரூ.50–90 வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் பெரியளவில் பாதிப்பு இருக்காது. மேலும், அரசு, அரசு உதவி பள்ளிகளின் மாணவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக புத்தகங்கள் வழங்கப்படும்” என்று அவர்கள் கூறினர். எனினும், பாடநூல் விலையேற்றத்துக்கு தனியார் பள்ளிகள் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தேசிய கொடியை ஏற்றுவதில் கவனமுடன் இருக்க வேண்டும் - பள்ளிகளுக்கு , கல்வித்துறை உத்தரவு

 1500x900_3947439-flag

சுதந்திர தினம் நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்படும். அந்தவகையில் தேசிய கொடியை ஏற்றும் நிகழ்ச்சியில் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் குறித்த சுற்றறிக்கையை, பள்ளிகளுக்கு கல்வித் துறை வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-


அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்கரித்து தேசிய கொடி ஏற்றி விழாவை கொண்டாடலாம்.

ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து விழாவில் பங்கு பெற செய்ய வேண்டும். பிளாஸ்டிக் வகையிலான தேசிய கொடியை பயன்படுத்தக் கூடாது. மேலும், தேசிய கொடியை தலைகீழாகவோ, கிழிந்ததையோ ஏற்றக்கூடாது. தேசிய கொடியை ஏற்றுவதில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பாடப் புத்தகங்களின் விலை உயர்வு!

 



பாடப் புத்தகங்களின் விலை உயர்வு.


தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படும் அரசு பாடநூல் கழக புத்தகங்களின் விலை ₹30 முதல் ₹90 வரை உயர்த்தப்பட்டுள்ளன.

1 முதல் 4-ம் வகுப்பு புத்தகங்கள் ₹30 - 40 வரையும், 5 முதல் 7-ம் வகுப்பு புத்தகங்கள் ₹30 - 50 வரையும் உயர்த்தப்பட்டுள்ளன. 

8-ம் வகுப்பு புத்தகம் ₹40 - ₹70 வரையும், 9 - 12 வகுப்பு புத்தகங்கள் ₹50 - 80 வரையும் உயர்வு. ஒருசில புத்தகங்கள் ₹90 வரை உயர்த்தப்பட்டுள்ளன. 

காகிதங்களின் விலை உயர்வு, அச்சடிப்பதற்கான கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 5 ஆண்டுகளுக்கு பின்பு உயர்த்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNCMTSE Exam Answer Keys 2024 Download

 தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 2024 வினாத்தாள் மற்றும் விடைகள்


தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 2024 வினாத்தாள் மற்றும் விடைகள்



தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 2024




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ADW - High School HM பதவி உயர்வுக்கு முன்மொழிவுகள் அனுப்பக் கோரி உத்தரவு - Director Letter

 ADW - High School HM பதவி உயர்வுக்கு முன்மொழிவுகள் அனுப்பக் கோரி உத்தரவு - Director Letter

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு முன்மொழிவுகள் அனுப்பக் கோரி ஆதி திராவிடர் நலத் துறை இயக்குநர் உத்தரவு


Click Here to Download - ADW - HS HM Promotion Proposal - Director Proceedings - Pdf


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

20,678 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு "எக்கோ இந்தியா" பயிற்சி - NSNOP Letter

 20,678 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு "எக்கோ இந்தியா" பயிற்சி - NSNOP Letter

Untitled1_001



20,678 அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு "எக்கோ இந்தியா" இலிருந்து " பயிற்சியின் மூலம் தரமான கல்வியை மேம்படுத்துதல் - புகையிலையை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்துதல்"- நம்ம பள்ளி - நம்ம ஊரு பள்ளி - உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள்


Click Here to Download - 20,678 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு "எக்கோ இந்தியா" பயிற்சி - NSNOP Letter - Pdf



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

நீங்கள் கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்துகிறீர்களா..? முடி வளர்ச்சியை பாதிக்கும் அதன் ஆபத்துகளை தெரிஞ்சுக்கோங்க..!

 தங்களது தோற்றத்தை வித்தியாசமாக, ஸ்டைலாக அதே சமயம் இளமையாக காட்ட விரும்புவோருக்கு ஹேர் கலரிங் என்பது பிரபலமான தேர்வாக இருந்து வருகிறது. ஸ்மூத்தான மற்றும் ஷைனிங்கான கூந்தலை வழங்கும் அதே நேரம் கெமிக்கல் ஹேர் டை-க்கள் முடி வளர்ச்சியில் பல்வேறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பலரும் யோசிக்க தவறி விடுகிறார்கள்.

ஹேர் டை-க்களுக்கு பின்னால் உள்ள கெமிக்கல்ஸ்…

கெமிக்கல் அடிப்படையிலான ஹேர் டை-க்கள் என்பவை முடியின் நிறத்தை மாற்றும் சிந்தடிக் காம்பவுண்ட்ஸ்களின் கலவையாகும். அதிலிருக்கும் அம்மோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பல்வேறு டை-க்கள் மற்றும் பிக்மென்ட்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கூந்தலின் தண்டுக்குள் ஊடுருவி, கலர் மாலிக்யூல்ஸ்களை டெபாசிட் செய்யும் போது தலைமுடியை சேதப்படுத்துகின்றன. ஹேர் கலரிங் செய்து கொள்வது எதிர்பார்க்கும் லுக்கை கொடுக்கும் என்றாலும் காலப்போக்கில் அதிலிருக்கும் ரசாயனங்களின் ஆக்கிரமிப்பு தன்மை கூந்தல் ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கலாம்.

News18

முடியின் ஸ்ட்ரக்ச்சரை சேதப்படுத்தலாம்…

கெமிக்கல் ஹேர் டையில் இருக்கும் கெமிக்கல்கள் முடியின் அமைப்பை சேதப்படுத்தும். இது போன்ற தயாரிப்புகளில் காணப்படும் அமோனியா, பொதுவாக முடியின் cuticle-ஐ திறந்து, டை-க்களில் இருக்கும் டை மாலிக்யூல்ஸ்களை ஊடுருவ அனுமதிக்கிறது. இது முடியின் இயற்கை எண்ணெய்கள் மற்றும் புரதங்களை அகற்றும். இந்த ப்ராசஸ்-ஆனது முடி தண்டு வறண்டு, கரடுமுரடாக மற்றும் உடையக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். மேலும் இது முடி உதிர்வை அதிகப்படுத்தி, முடியை ஒட்டுமொத்தமாக பலவீனப்படுத்த கூடும்.


ஈரப்பதம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை இழக்கும்…

பொதுவாக கெமிக்கல் டை-க்கள் முடியின் Ph லெவல் மற்றும் மாய்ஸட்ரைஸ் பேலன்ஸை சீர்குலைக்க கூடியவை. இதனால் தலைமுடி வறண்டு போவதோடு அதன் எலாஸ்டிக் தன்மையும் வெகுவாக குறையும். கெமிக்கல் ஹேர் டை-யில் சேர்க்கப்படும் அம்மோனியா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைட் உள்ளிட்டவற்றின் ஆக்கிரமிப்பு தன்மை முடியில் இருக்கும் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி, முடியின் உலர வைத்து அதன் இயற்கையான அமைப்பை கடினமாக்கி விடும். இதனால் காலப்போக்கில் முடி அதிகம் சேதமடைய மற்றும் உடைய அதிக வாய்ப்புள்ளது.

உச்சந்தலை எரிச்சல்:

கெமிக்கல் அடிப்படையிலான ஹேர் டை-க்களில் தலைமுடிக்கு கீழே இருக்கும் சருமத்தை அதாவது ஸ்கால்ப்பை மிகவும் சென்சிட்டிவ் ஆக்கும் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்கள் உள்ளன. இவற்றில் இருக்கும் para-phenylenediamine மற்றும் பிற நறுமண அமின்கள் போன்ற கலவைகள் சில நபர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்த கூடும். இந்த அலர்ஜி அறிகுறிகளில் அரிப்பு, சிவத்தல், வீக்கம் மற்றும் உச்சந்தலை மற்றும் சுற்றியுள்ள தோலில் கொப்புளங்கள் உள்ளிட்டவை இருக்கலாம்.

மேற்கண்ட காரணிகளை கருத்தில் கொண்டு உங்கள் தலைமுடியை சேதத்திலிருந்து பாதுகாக்க ஆர்கானிக் ஹேர் டை தயாரிப்புகளை பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அந்த வகையில் Kremlin hair gel கெமிக்கல் இல்லாத சிறந்த ஹேர் டையில் ஒன்றாகும். இது தாவரவியல் சாறுகள் மற்றும் வைட்டமின்கள் போன்ற இயற்கை கூறுகளை கொண்டு கூந்தலுக்கு சிறந்த நிறத்தை வழங்குவதோடு முடியை பலப்படுத்துகிறது.

மேலும் கிரெம்ளின் ஹேர் ஜெல் முடியின் தரத்தை உயர்த்த, கூந்தலை மிருதுவாக மற்றும் பளபளப்பாக வைக்க தயாரிக்கப்பட்டுள்ளது. கெமிக்கல்ஸ் அடங்கிய ஹேர் டை தயாரிப்புகள் உடனடி நிற மாற்றத்தை வழங்கும் என்றாலும், அவை ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்திற்கு ஆபத்தை தான் ஏற்படுத்தும். எனவே கிரெம்ளின் ஹேர் ஜெல்லை பயன்படுத்துவது துடிப்பான மற்றும் அழகான கூந்தல் நிறத்தை பெற பாதுகாப்பான மாற்றாக இருக்கும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இந்தியாவில் அதிகரித்து வரும் சீன பூண்டு விற்பனை - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

 பூண்டு இந்திய சந்தையில் முக்கிய உணவு பொருளாக உள்ளது. உணவு மட்டுமின்றி மருத்துவ குணங்களும் சிறந்து விளங்குகிறது. இதனால் நமது நாட்டில் அனைவரது வீட்டிலும் பூண்டு நிச்சயமாக இருக்கும். இந்த நிலையில் சீனா தயார் செய்து ஏற்றுமதி செய்யும் பூண்டுகள் இந்தியாவில் அதிகரித்து வருவதாக வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த பூண்டு மற்ற பூண்டுகளை விட கவர்ச்சிகரமானதாக தோன்றுகிறது. ஆனால் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியதாகும். இந்த பூண்டு முக்கியமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் பலர் இதை சீன பூண்டு என்று அழைக்கிறார்கள். உலகில் பூண்டு உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. விற்பனை நோக்கில் தற்போது செயற்கையாக பூண்டை தயார் செய்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் பார்த்து வருகின்றனர். இதனால் தற்போது இந்தியாவில் சீன பூண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னும் சீன பூண்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News18

இதுகுறித்து விளக்கும் காய்கறி விற்பனையாளர்கள், இந்த பூண்டு மிகவும் பெரியதாகவும், பார்க்க பளிச் என்று இருப்பதால் பலரும் இதனை வாங்க விரும்புகின்றனர் என்கிறார். இருப்பினும், இந்த சீன பூண்டு பல தீங்கு விளைவிக்கும் அம்சங்களை கொண்டுள்ளது. அதனால் இந்தப் பூண்டைப் பயன்படுத்துபவர்கள் பல பாதிப்புகளை சந்திக்கின்றனர். இந்த பூண்டை தொடர்ந்து பயன்படுத்துவதால் பல உடல் பிரச்சனைகள் ஏற்படும்.

இதுகுறித்து விளக்கும் மருத்துவர் சவுரப் சர்க்கார், சீன பூண்டு மற்ற பூண்டுகளை விட மிகவும் பெரியதாக இருக்கும். பூண்டு பற்கள் விரல்கள் போல் அடர்த்தியாக இருக்கும். இந்த பூண்டு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இருப்பினும், இந்த பூண்டு மற்ற பூண்டுகளைப் போல கடுமையான வாசனையைக் கொண்டிருக்காது, லேசான துர்நாற்றத்துடன் இருக்கலாம். மேலும் இந்த பூண்டை வெள்ளையாக்க ப்ளீச் செய்யப்படுகிறது. இதனால் இந்த பூண்டை பயன்படுத்தினால் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கிறார்.

உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இந்த பூண்டு உற்பத்தியின் போது பல உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் வெள்ளையாக்க குளோரின் போன்ற இராசயங்களும், ஈயம் போன்ற உலோகங்களும் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த பூண்டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்த சீன பூண்டில் மருத்துவ குணங்கள் எதுவும் இல்லை, மாறாக விஷதன்மை கொண்டதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். எனவே பூண்டு வாங்க சந்தைக்குச் செல்வதற்கு முன், நீங்கள் சீனப் பூண்டை வாங்குகிறீர்களா அல்லது உள்ளூர் பூண்டை வாங்குகிறீர்களா என்பதை சரிபார்க்கவும் என கூறியுள்ளார்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஆஃபீஸ் சேரில் உட்கார்ந்து முதுகு கூன் வலைந்து போச்சா..? உங்களுக்குதான் இந்த டிப்ஸ்..!

 நாள் முழுவதும் நாற்காலியில் உட்கார்ந்து வேலைபார்க்கும் வாழ்க்கை முறையானது கூன் முதுகு பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. நாற்காலியில் அமரும்போது நன்கு நேராகச் சாய்ந்து உட்காரப் பழக வேண்டும். தலையைக் கீழே தொங்கப்போட்டு, முதுகைக் குறுக்கி உட்காருவது முதுகை பலவீனப்படுத்தும். நாற்காலிகளில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து சிறிது தூரம் நடப்பது நல்ல ஓய்வாக இருக்கும். வேலைகளுக்கு நடுவே சில நிமிடங்கள் ஓய்வாக நடப்பது, தண்ணீர் பருகுவது உடலையும் மனத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ஒரு நாளைக்கு 15 மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களின் வாழ்நாள் குறைகிறது என்று ஓரு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. உங்கள் கூன் முதுகு பாதிப்பை குறைக்க சில பயிற்சிகள் பின்வருமாறு.

News18

சைல்ட் போஸ்:

  • உங்கள் மணிக்கட்டுகளை உங்கள் தோள்களின் கீழ் நேரடியாக வைக்கவும் மற்றும் உங்கள் முழங்கால்களை மடக்கி உங்கள் இடுப்புக்குக் கீழே வைக்கவும்.

  • மெதுவாக உங்கள் இடுப்பை உங்கள் குதிகாலில் படுமாறு வைத்தபடி, உங்கள் கைகளை உங்களுக்கு முன்னால் நீட்டவும்.

  • உங்கள் நெற்றியை தரையில் வைத்து, உங்கள் கைகளை நன்றாக நீட்டவும்.

  • இந்த நிலையில் 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை இருக்கவும், ஆழமாக சுவாசிக்கவும்.

கேட் - கௌவ் போஸ்:

  • உங்கள் மணிக்கட்டுகளை உங்கள் தோள்களின் கீழ் நேரடியாக வைக்கவும் மற்றும் உங்கள் முழங்கால்களை மடக்கி உங்கள் இடுப்புக்குக் கீழே வைக்கவும்.

  • உங்கள் கைகளை தரையில் ஊன்றி மண்டியிடவும். உங்கள் முதுகை மெதுவாக வளைத்து, வயிற்றை தரையை நோக்கி இறக்கி, உங்கள் தலை மற்றும் கால் மேல நோக்கி பார்க்கவும்.

வால் புஷ்:

  • சுவருக்கு முன் நேராக நின்று உங்கள் கைகளை சுவரின் மேல் வைக்கவும். உங்கள் முதுகு சாய்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவும்.

  • உங்கள் முழங்கைகள் 90 டிகிரிக்கு வளைந்து, “W” நிலையில் இருக்கும் வரை, உங்கள் கைகளை சுவரில் மேல் வைத்து அழுத்தவும். அப்போது உங்கள் தோள்பட்டை மற்றும் முதுகு அழுத்தம் கொடுப்பதை நீங்கள் உணரலாம்.

  • இதை 10 முதல் 15 முறை வரை செய்யவும்.

    கோப்ரா போஸ்:

    • முதலில் தரையில் முதுகு நேராக இருக்குமாறு குப்புற படுக்க வேண்டும்.

    • பிறகு உங்கள் மார்பு பகுதியை தரையில் இருந்து உயர்த்த உங்கள் கைகளில் அழுத்தம் கொடுக்கவும்.

    • உங்கள் முதுகு சற்று வளைந்தபடி உங்கள் கைக்களை நேராக வைத்து தலையை சற்று தூக்கவும்.

    • இந்த நிலையை 15 முதல் 30 விநாடிகள் வரை வைத்திருங்கள், ஆழமாக சுவாசிக்கவும்.

      டௌன்வர்ட் ஃபேஸிங் டாக்:

  • உங்கள் மணிக்கட்டுகளை நேரடியாக உங்கள் தோள்களுக்குக் கீழேயும், உங்கள் முழங்கால்களை உங்கள் இடுப்புக்குக் கீழேயும் வைக்கவும்.

  • உங்கள் கைகளில் அழுத்தி, உங்கள் இடுப்பை பின்புறமாக உயர்த்தி, உங்கள் கைகளையும் கால்களையும் நேராக்குவதன் மூலம் தலைகீழாக “V” வடிவத்தை உருவாக்கவும்.

  • இந்த நிலையை 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை வைத்திருங்கள், ஆழமாக சுவாசிக்கவும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip