Agri Info

Adding Green to your Life

August 19, 2024

சைலன்ட் ஹார்ட் அட்டாக்... இந்த அறிகுறிகளை கண்டிப்பா கவனியுங்க..!

August 19, 2024 0

 இன்றைய நவீன காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என்றெல்லாம் சொல்ல முடியாது. எந்த வயதினருக்கும், பாலினத்தவருக்கும் மாரடைப்பு வரும். மாரடைப்பின் சில அறிகுறிகளை நம்மால் கண்டுபிடிக்க முடிந்தாலும், இளம் தலைமுறையினரை அமைதியான முறையில் தாக்கும் மாரடைப்பு (சைலன்ட் ஹார்ட் அட்டாக்) குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர்.

இது எந்த நேரத்திலும் ஒருவரை தாக்கலாம். மாரடைப்பு வரும் பெரும்பாலானோருக்கு நெஞ்சு வலி, சுவாசப் பிரச்சனை, தலைசுற்றல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் அமைதியான முறையில்தான் தாக்குகிறது. வழக்கமான மாரடைப்பு போல் இதற்கு நெஞ்சு வலி ஏற்படாது என்பதால் உடலில் ஏற்படும் சின்னச்சின்ன அறிகுறிகளுக்கும் நாம் கவனம் கொடுக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். சைலன்ட் ஹார்ட் அட்டாக்கின் 5 அறிகுறிகள் பற்றி பிரபல கார்டியாலஜிஸ்ட் டாக்டர் ரவீந்தர் சிங் ராவ் கூறியுள்ளதை பற்றி இங்கே பார்ப்போம்.

காரணமில்லாத சோர்வு: காரணமே இல்லாமல் தொடர்ச்சியாக களைப்பாக, சோர்வாக இருப்பது போல் உணர்ந்தால், அது அமைதியான மாரடைப்பின் அறிகுறிகளாக கூட இருக்கலாம். பலவீனமான இதயம், தனது ஆற்றலை உடலிலிருந்து நேரடியாக எடுத்துக் கொள்வதால் இவ்வாறு களைப்பு உண்டாகிறது.

மூச்சுவிடுவதில் சிரமம்: எந்தவித உடல் இயக்கம் இல்லாத நேரத்திலும் கூட மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால், அது அமைதியான மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். இதயத்தின் செயல்பாடு குறையும்போது உடலுக்கு தேவையான ஆக்சிஜன் குறைவாக கிடைக்கிறது. இதனால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது.

உடலின் மேற்பகுதியில் அசௌகர்யம்: கைகள், கழுத்து, தாடை அல்லது முதுகு போன்ற உடலின் மேற்பகுதியில் வலியோ அசௌகரியமோ இருந்தாலும் கூட, அது சைலன்ட் அட்டாக்கிற்கான அறிகுறியாக இருக்கலாம். இந்த வலி மிதமாக இருப்பதால் இதை பெரிதாக நாம் கண்டுகொள்வதில்லை.

குமட்டல் மற்றும் தலைச்சுற்றல்: தொடர்ச்சியான குமட்டல், தலைவலி அல்லது தலைச்சுற்றல் வந்தால் இதயத்தின் செயல்பாட்டில் பிரச்சனை இருப்பதாக அர்த்தம். இதயத்தால் ரத்தத்தை ஒழுங்காக பம்ப் செய்ய முடியாதபோது ரத்த அழுத்தம் குறைந்து தலைச்சுற்றல் உண்டாகிறது.

அதிகபடியான வியர்வை: நாம் வெப்பமான சுழலில் வாழ்ந்து வந்தாலும், எதுவும் செய்யாமல் ஓய்வாக இருக்கும்போது கூட வழக்கத்தை விட அதிகமாக வியர்வை வந்தால், இதயத்தில் பிரச்சனை இருக்கிறது என்பதன் வெளிப்பாடாகும். இதயத்தில் அழுத்தம் ஏற்பட்டால் உடலில் வியர்வை அதிகமாகும். இவற்றோடு மற்ற அறிகுறிகளும் சேரும்போது நாம் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும்.

அமைதியான மாரடைப்பிற்கு இது மட்டுமே அறிகுறிகள் இல்லையென்றாலும் இவற்றில் எந்த அறிகுறிகளாவது உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மேலும் இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் டயட் மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்.





Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்கள் குழந்தையின் எலும்புகள் வலுவாக இருக்க தவறாமல் கொடுக்க வேண்டிய உணவுகள்.!

August 19, 2024 0

 குழந்தைகளின் வளர்ச்சியில் எலும்புகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. எலும்புகள் வலுவாக இருந்தால் மட்டுமே உங்கள் குழந்தைகள் நன்கு ஆக்ட்டிவாக இருக்க முடியும். அதுமட்டுமின்றி குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் அவர்களின் எலும்பு ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், அவர்களின் எலும்புகள் வலுவாகவும் இருக்க, அவர்களின் தினசரி உணவில் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கும் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தும் உணவுகளை சேர்ப்பது அவசியம்.

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்க அவர்களது டயட்டில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சேர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவை உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

News18

உங்கள் குழந்தையின் எலும்புகள் வலுவாக இருக்க நீங்கள் அவர்களுக்கு தவறாமல் கொடுக்க வேண்டிய சில முக்கிய உணவுகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

  • எலும்பு வளர்ச்சியில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பால் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்கள் உங்கள் குழந்தைகளுக்கு தேவையான அளவு கால்சியத்தை வழங்குகின்றன. பால் பொருட்களில் கால்சியம் மட்டுமல்லாமல் வைட்டமின் டி-யும் உள்ளது. இது உடலுக்கு தேவையான கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது.

  • கீரை வகைகள், கடுகு கீரை மற்றும் ப்ரோக்கோலி போன்ற பச்சையிலை காய்கறிகளில் கால்சியம் மற்றும் வைட்டமின் கே அதிகம் காணப்படுகிறது. மேலும் இவை உங்கள் குழந்தைகளின் எலும்புகளை வலுவாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இவற்றில் இருக்கும் வைட்டமின் கே சத்தானது குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

  • பாதாம்கள் எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. பாதாம்களில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் ப்ரோட்டீன் நிறைந்துள்ளன. இவை அனைத்துமே எலும்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஊட்டச்சத்துக்கள் ஆகும்.

  • ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. சிட்ரஸ் வகை பழங்களை குழந்தைகளுக்கு வழக்கமான அடிப்படையில் கொடுப்பதால், அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதோடு, அவர்களின் எலும்புகள் வலுவாக இருக்கும். சிட்ரஸ் பழங்கள் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. எலும்பு திசு (bone tissue) உருவாவதற்கு கொலாஜன் மிக அவசியம்.

    • சோயாபீன்ஸ் மற்றும் சோயா சீஸ் போன்ற பொருட்களை குழந்தைகளின் டயட்டில் சேர்ப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் புரதத்தை வழங்குகிறது. இவை குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உலர் பழங்களை பால் அல்லது தண்ணீர் எதில் ஊறவைக்க வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்!

August 19, 2024 0

 
உலர் பழங்களை உட்கொள்வதன் மூலம் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் எளிதாகப் பெற முடியும். பொதுவாக பழங்களை அந்தெந்த சீசன்களில் நாம் ப்ரெஷாக சாப்பிட முடியும். இதனை அனைத்து நாட்களிலும் சாப்பிடும் வகையில் உலர வைக்கப்படுகிறது. உதாரணமாக திராட்சை, அத்திப்பழம், கிவி உள்ளிட்ட பழங்களை நாம் பார்த்திருப்போம். இந்த உலர் பழங்களிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைத்துள்ளது. தினமும் ஒரு கைப்பிடி உலர் பழங்களை சாப்பிடுவதன் மூலம், வைட்டமின் ஈ, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், ஜிங்க் மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும்.


முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்றவற்றை சாப்பிடுவதற்கு முன் சில மணி நேரம் ஊறவைப்பது நல்லது. ஆயுர்வேதத்தின் படி இந்த முறை ஆரோக்கியமானது என்று கருதப்படுகிறது மற்றும் நவீன ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி ஊறவைத்து சாப்பிடுவது சரியானதாக கருதப்படுகிறது. உண்மையில் உலர் பழங்களை ஊறவைப்பது அவற்றில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்களை நாம் எளிதாக பெற முடியும்.

News18

உலர் பழங்களை எவ்வளவு நேரம் ஊறவைக்க வேண்டும் மற்றும் உலர்ந்த பழங்களை ஊறவைக்க தண்ணீர் அல்லது பால் இவற்றில் இதனை பயன்படுத்தப்பட வேண்டும்? என்ற கேள்வி பொதுவாக அனைவருக்கும் இருக்கும்.

இதற்கான பதில், உலர்ந்த பழங்களை தண்ணீர் மற்றும் பால் இரண்டிலும் ஊறவைக்கலாம் என்பது தான். உலர் பழங்களை பால் மற்றும் தண்ணீர் இரண்டிலும் ஊறவைப்பதால் வெவ்வேறு நன்மைகள் உள்ளன. அதுகுறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

உலர்ந்த பழங்களை தண்ணீரில் ஊறவைத்தால் கிடைக்கும் நன்மைகள்….

உலர் பழங்களை தண்ணீரில் ஊறவைத்த பிறகு அதில் உள்ள பைடிக் அமிலத்தின் அளவு குறையத் தொடங்குகிறது. இந்த அமிலம் இரைப்பையை அடைந்து செரிமான அமைப்பை சேதப்படுத்தி அஜீரண பிரச்சனையை அதிகரிக்கும் எனவே, தண்ணீரில் ஊறவைத்த உலர்ந்த பழங்களை உட்கொள்வதால் இந்த பிரச்சனை வராமல் தவிர்க்க முடியும்.

உலர் பழங்களை தண்ணீரில் ஊற வைக்கும் போது முதல் நாள் இரவு தூங்க செல்வதற்கு முன் ஊறவைத்து விட்டு, மறுநாள் காலை அதனை எடுத்து சாப்பிடலாம். ஆனால், உலர் பழங்களை பாலில் ஊறவைத்தால் அவற்றை நீண்ட நேரம் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதாவது உலர்ந்த பழங்களை பாலில் சுமார் 1-2 மணி நேரம் ஊறவைத்து பிறகு உடனடியாக உட்கொள்ளலாம். பாலில் ஊறவைத்த உலர் பழங்களை சாப்பிடுவதால் புரதம், கால்சியம் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கை, கால்களில் எறும்பு ஊர்வது போன்ற உணர்வு அடிக்கடி வருதா..? இந்த குறைபாடாக இருக்கலாம்!

August 19, 2024 0

 பொட்டாசியம் உடலுக்கு மிக முக்கியமான தாது மற்றும் எலக்ட்ரோலைட் ஆகும். இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, செல்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கி, தசை மற்றும் நரம்பு ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. பொட்டாசியம் அளவு குறைந்தால் மரணம் கூட ஏற்படலாம்

ரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு 3.5 mmol-ல் இருந்து குறையும் போது, ​​உடலில் பொட்டாசியம் குறைபாடு இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவத்தில், இது ஹைபோகாலேமியா என்று அழைக்கப்படுகிறது. குறைந்த பொட்டாசியம் என்பது உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 4700 மில்லிகிராம் பொட்டாசியம் உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொட்டாசியம் உடலுக்கு மிக முக்கியமான தாது மற்றும் எலக்ட்ரோலைட் ஆகும். இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, செல்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கி, தசை மற்றும் நரம்பு ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. பொட்டாசியம் அளவு குறைந்தால் மரணம் கூட ஏற்படலாம்

News18

பொட்டாசியம் நம்முடைய உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறது. பொட்டாசியம் நேரடியாக கொலஸ்ட்ராலைக் குறைக்கவில்லை என்றாலும், கொழுப்பைக் குறைக்கும் உணவுகளில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதன் விளைவாக, பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்கு ஒழுங்கற்ற இதயத் துடிப்பு இருந்தால், சிகிச்சையுடன் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்திற்கு போதுமான பொட்டாசியம் உட்கொள்ளல் அவசியம் ஆகும்.

பொட்டாசியம் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?

உடலில் பொட்டாசியம் குறைவாக இருந்தால், எப்போதும் சோர்வாக உணர்வார். தசைச் சுருக்கத்திற்கு இதுவே காரணமாக இருக்கிறது. எனவே, பொட்டாசியம் குறையும் போது, ​​தசைகள் பலவீனமடைகின்றன. பொட்டாசியம் குறைவதால் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது. செரிமான பிரச்சனைகளும் ஏற்படும். இதயத்துடிப்பு சில சமயம் அதிகரிக்கும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். கைகளும் கால்களும் அடிக்கடி நடுங்க ஆரம்பிக்கும். மலச்சிக்கல் ஏற்படலாம்.

எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்…

  • வாழைப்பழம் - தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் பொட்டாசியம் குறைபாட்டைப் போக்கலாம். நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் 400 முதல் 450 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது

  • இளநீர் - இது நீரழிவைத் தடுக்கிறது. இதில் செல்களுக்கு தண்ணீரைக் கடத்தும் எலக்ட்ரோலைட்டுகளைக் கொண்டுள்ளது. இளநீரில் உள்ள இயற்கை சர்க்கரைகள் உடற்பயிற்சியின் போது ஆற்றலை வழங்குகின்றன. 1 கப் அல்லது 240 மில்லி இளநீரில் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் 13 சதவீதம் உள்ளது.

  • பீன்ஸ் - வாழைப்பழத்தை விட பீன்ஸில் அதிக பொட்டாசியம் உள்ளது. 1 கப் அல்லது 179 கிராம் பீன்ஸில் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் 21 சதவீதம் உள்ளது. கருப்பு பீன்ஸில் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் 13 சதவீதம் உள்ளது

  • ஆரஞ்சு பழம்- இது பொட்டாசியத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. ஒரு ஆரஞ்சு பழத்தில் 230 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.

  • தர்பூசணி - 2 துண்டுகள் அல்லது 572 கிராம் தர்பூசணியில் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் 14 சதவீதம் உள்ளது.

  • கீரை - 3 கப் அல்லது 90 கிராம் கீரையில் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் 11 சதவீதம் உள்ளது. கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, ஃபோலேட் மற்றும் மாக்னீசியம் நிறைந்துள்ளது.

  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 1 கப் அல்லது 328 கிராம் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் 16 சதவீதம் உள்ளது.

  • அவகோடா - ஒரு நடுத்தர அளவிலான அவகோடா பழத்தில் சுமார் 700 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.

  • உருளைக்கிழங்கு - ஒரு நடுத்தர அளவிலான வேகவைத்த உருளைக்கிழங்கில் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் 12 சதவீதம் உள்ளது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி வட்டார அளவில் நடத்திடுதல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்.

August 19, 2024 0

 IMG_20240819_184253

ஒவ்வொரு வட்டார அளவிலும் , உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் உள்ள கணினிகளின் எண்ணிக்கைக்கேற்பவும் , பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கேற்பவும் , பயிற்சி நாள்களை உறுதி செய்தும் , பயிற்சியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் ஒருங்கிணைந்து , ஆசிரியர்களது பணி பாதிக்காத வண்ணம் தெரிவு செய்து , 17.08.2024 முதல் 09.11.2024 முடிய , வேலை நாள்களாக கருதப்படும் சனிக்கிழமைகளில் நடைபெறும் குறுவளமைய பயிற்சியில் ஏதேனும் ஒரு தேதி வாரியாக பணிவிடுவிப்பு செய்து அனுப்பி நாளில் ( கணினியின் எண்ணிக்கைக்கேற்ப ) வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

 காணொலியில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக நேரடி அனுபவ வாயிலான கற்றல் அணுகுமுறையின் மூலம் இக்குறுவள மையப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

17.8.24 முதல்  பட்டதாரி ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி வட்டார அளவில் நடத்திடுதல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்..


👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

Proceedings - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 29.08.2024 முதல் விநியோகம் - தேர்வுத்துறை

August 19, 2024 0

 IMG_20240819_184844_wm

நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 29.08.2024 ( வியாழக்கிழமை ) அன்று காலை 10.00 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும் . தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் .

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அரசுப் பள்ளிகளுக்கு விரைவில் இரவு காவலாளிகள்

August 19, 2024 0

 தமிழக அரசுப் பள்ளிகளுக்கு , விரைவில் இரவு காவலாளிகள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 


செஞ்சியில் பேட்டியளித்த அவர் ,

தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து 3500-க்கு மேல் 6 வகுப்பறை கட்டிடங்களும் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.1000 கோடி மதிப்பில் 3500 வகுப்பறை கட்டிடங்கள் தேவைப்படும் இடங்களில் கட்டித் தரப்படும். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஹைடெக் லேப் மற்றும் இரவு நேர பள்ளி மாணவர்களை பாதுகாக்க இரவு நேர காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

IMG_20240819_214316



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

School Morning Prayer Activities - 20.08.2024

August 19, 2024 0

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.08.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம் :காலம் அறிதல்


குறள்எண்:486


ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேரும் தகைத்து.


பொருள்: ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல், போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.


பழமொழி :

ஆசானுக்கும் அடைவு தப்பும்


யானைக்கும் கூட அடி சறுக்கும்


Good swimmers are sometimes drowned


இரண்டொழுக்க பண்புகள் :  


*எனக்கு வழங்கப்பட்ட வேலைகளை உரிய நேரத்தில் முடிப்பேன் .     


 *எனது கடமைகளை சரிவர செய்து, உரிமைகளைப் பெறுவேன்.


பொன்மொழி :


நாம் எவ்வளவு அதிகமாகக் கற்றுக் கொள்கிறோமோ, நாம் அவ்வளவு அதிகமாக நம் அறியாமையை அறிந்துகொள்கிறோம். –பெர்சி பைஷ் ஷெல்லி


பொது அறிவு : 


உலகின் எட்டாவது அதிசயம் எனப் போற்றப்படுபவர் யார்? 


விடை : ஹெலன் கெல்லர். 


இந்தியாவின் மிக நீளமான சாலை எவ்வாறு குறிப்பிடப் படுகிறது ? 


விடை : NH 44


English words & meanings :


 goal-இலக்கு,


 target-நோக்கம்


வேளாண்மையும் வாழ்வும் : 


ஆண்டவரின் அருள் கிட்டி இயற்கை நமக்கு உறுதுணை புரிந்து மழை பொழிய மண் செழித்து நாம் உயர்ந்து நாடும் உயர நாம் பிரார்த்திப்போம்.


ஆகஸ்ட் 20 இன்று


இராசீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகத்து 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]

21 மே 1991 அன்று திருப்பெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.


உலகக் கொசு நாள்


உலகக் கொசு நாள் (World Mosquito Day), ஆண்டுதோறும் ஆகத்து 20 ஆம் நாள் பிரித்தானிய மருத்துவர் ரொனால்டு ராஸ் என்பவரின் நினைவாக உலக அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சர் ரொனால்டு ராஸ் 1897 ஆகத்து 20 ஆம் நாள் பெண் கொசுகள் மூலமாக மலேரியா நோய் மனிதருக்குப் பரவுகிறது என முதன் முதலில் கண்டுபிடித்தார்.[1] இவர் தனது கண்டுபிடிப்பின் பின்னர் இந்நாள் உலக கொசு நாள் என்ற பெயரில் ஆகத்து 20 அன்று ஆண்டு தோறும் கொண்டாடப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.


மத நல்லிணக்க தினம்


சத்பவனா திவாஸ் எனப்படும் மத நல்லிணக்க தினம் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 20 -ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.


நீதிக்கதை


 மரியாதை ராமன் தீர்ப்பு


மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர், பணத்தாசைப் பிடித்தவர். 


ஒருமுறை சோமன்  தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்து விட்டார்.அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.


அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு பணப்பை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் கொடுக்கப்படும் என்று சொல்லிவிட்டார். ஊரு மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்து தேடி பார்த்து யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.


ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதிக்க  நினைத்து வந்தார். 

அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.


  அங்கு இருந்த கடையில் விசாரித்த பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்தப் பணப்பையை வாங்கிக் கொண்டார், அதேநேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்துவிட்டது,  இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும்.  தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.


கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து ‘நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்’ என்று கத்தினான்.


பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை.சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். பூபாலன்  பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்.


சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள்.  பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையை சொன்னார்.


ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.



ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துகொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் ‘சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது.


ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பையை  எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம்.


சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்.’மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது.


பூபாலன் கிடைத்த பணத்தை  சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.


நீதி: எப்போதும் நேர்மை மற்றும் நியாயமாக  நடந்து கொள்ள வேண்டும்.


இன்றைய செய்திகள் - 20.08.2024


*:தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் இரவுக் காவலர்கள் விரைவில் நிரப்பப்படுவர் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


* புதிய தலைமைச் செயலராக நா.முருகானந்தம் நியமனம்: தமிழக அரசு உத்தரவு.


* கொல்கத்தா சம்பவம்: ஜிப்மரில் தொடரும் காலவரையற்ற போராட்டம் - வெளியூர் நோயாளிகள் பாதிப்பு.


* மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 16 ஆயிரம் கனஅடியாக குறைப்பு.


* தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம்: கல்லூரிகளில் போட்டிகளை நடத்த யுஜிசி உத்தரவு.


* ரஷியாவின் 2-வது முக்கிய பாலம் தகர்ப்பு; உக்ரைன் அதிரடி.


* சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில்  அல்- ஹிலால் அணி வெற்றி.


* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; ஜன்னிக் சின்னெர், ஜெசிகா பெகுலா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Minister Anbil Mahesh Poiyamozhi said that night guards will soon be filled in government schools across Tamil Nadu.


 * Appointment of NA Muruganandam as new Chief Secretary: Tamil Nadu Govt.


 * Kolkata incident: Indefinite protest continues in Jipmar - Outpatients affected.


  * Water release from Mettur dam is reduced to 16 thousand cubic feet.


* National Sports Day Celebration: UGC orders to hold competitions in colleges.


 * Russia's 2nd major bridge blown up;  lightning strike by Ukraine.


 *Al-Hilal wins Saudi Super Cup football final.


 * Cincinnati Open Tennis;  Jannik Sinner and Jessica Pegula advance to the finals.

 

Prepared by

Covai women ICT_போதிமரம்



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Phonics Reading Materials for Student

August 19, 2024 0

8 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்தால் போதும்...Tvs நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ..!!

August 19, 2024 0

 தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

கலந்து கொள்ள உள்ள நிறுவனங்கள்: இம்முகாமில் Genearth Services, Tvs Training Services உட்பட பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

தகுதி: இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ITI டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள், இந்த முகாமல் கலந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை: இம்முகாமில் கலந்து www.tnprivatejobs.tn.gov.in கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் Candidate Login - 6 செய்ய வேண்டும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in Employer Login பதிவு செய்ய வேண்டும்.இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

மேலும் விபரங்களுக்கு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ, அல்லது 04633-213179 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

எழுத படிக்கத் தெரிந்தால் போதும்... இந்து சமய அறநிலையத் துறையில் வேலை செய்ய ஒரு சூப்பர் சான்ஸ்...

August 19, 2024 0

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருள்மிகு ஜம்முகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை ஆகிய விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.


திருச்சி நகரில் அமைந்துள்ள திருவானைக்காவல் ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுளளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்கு காலிப்பணியிடங்கள் 1 ஆகும். இதற்கு கல்வித் தகுதி: 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 01.07.2024ம் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். இந்த பணிக்கு சம்பளம் 10,700 முதல் 33,700 வரை ஆகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவஞ்சல் மூலம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 07.09.2024 மாலை 05.45 மணி வரை ஆகும்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group



திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதர நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலகத்திலும் அல்லது www.tnhrce.gov.in மற்றும் thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in என்ற இணையதளங்களிலும் அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்களை மேற்படி இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.