Agri Info

Adding Green to your Life

September 6, 2024

NIT-ல் புதிய வேலைவாய்ப்பு…!! “மாத ஊதியம் ரூ.20000 “..!! “முழு விவரம் உள்ளே “..!!

September 06, 2024 0

 

NIT-ல் புதிய வேலைவாய்ப்பு…!! “மாத ஊதியம் ரூ.20000 “..!! “முழு விவரம் உள்ளே “..!!

National Institute of Technology TRICHY (NIT) ஆனது Project Assistant, Data Entry Operator பணிக்கான காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NIT காலிப்பணியிடங்கள்:

NIT நிறுவனத்திலுள்ள 02 Project Assistant, Data Entry Operator காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:
  • Project Assistant பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE/B.TECH/ME/M.TECH-ல் CSE/EEE/IT/ECE தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Data Entry Operator பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE/B.TECH-ல் CSE/IT தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ISI-ல் 24 காலிப் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு…!! ” ONLINE விண்ணப்பம் “..!! “முழு விவரங்களுடன் “..!!

வயது வரம்பு:
  • Project Assistant பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
  • Data Entry Operator பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Project Assistant பணிக்கு ரூ.20,000 மற்றும் Data Entry Operator பணிக்கு ரூ.15,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் short listing/எழுத்து தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் NIT இணையதளமான https://www.nitt.edu/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து விண்ணப்பித்த படிவத்தை அச்சிட்டு அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.09.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

CAREER PAGE: 

APPLICATION FORM: 

DOWNLOAD PDF:



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ஆசிரியர் தகுதி தேர்வு விரைவில் அறிவிப்பு: நவம்பர் மாதம் நடத்த வாய்ப்பு

September 06, 2024 0

 



ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இதையொட்டி விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கோரியுள்ளது.


மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.


தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுக்கு 2 தடவை டெட் தேர்வுநடத்தப்பட வேண்டும். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் அதுபோன்று டெட் தேர்வை நடத்துவதுகிடையாது. 2022-ம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய டெட் தேர்வு கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டது. 

2024-ம் ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் அறிவிப்பு செய்திருந்தது. ஆனால், 5 மாதங்கள் ஆகியும் தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.


இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்வது, தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.


எனவே, ஆசிரியர் தேர்வுவாரியம் டெட் தேர்வுக்கான அறிவிப்பை வெகுவிரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இணையவழி தேர்வாக நடத்தப்பட்டு வந்த டெட் தேர்வுஇந்த முறை ஓஎம்ஆர் ஷீட் வடிவிலான தேர்வாகவே இருக்கும். 


இதற்காகவே ஓஎம்ஆர் ஷீட் விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகளுக்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாக டிஆர்பி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மாதம் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் நவம்பர் மாதம் தேர்வு நடத்த அதிக வாய்ப்புள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

G.O 55 - சத்துணவு - புதிய 6 மாவட்டங்களுக்கு புதியதாக பணியிடங்கள் தோற்றுவிப்பு - அரசாணை வெளியீடு (30.08.2024)

September 06, 2024 0

 



புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு.

Ordinance G.O. (Ms) No: 55, Dated: 30-08-2024 Issued for the creation of new posts for the implementation of the Nutrition Scheme for the newly created 6 districts of Chengalpattu, Ranippettai, Mayiladuthurai, Tirupattur, Tenkasi and Kallakurichi


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . சத்துணவுத் திட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு , தென்காசி , கள்ளக்குறிச்சி , மயிலாடுதுறை , திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சத்துணவுத் திட்ட செயலாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்தல் வெளியிடப்படுகிறது . - ஆணை


Click Here to Download - .O.(Ms)No.55, dated 30.08.2024 Post creation 6 districts - Pdf


பள்ளி நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துதல் புதிய வழிமுறைகள் - முதலமைச்சர் உத்தரவு

September 06, 2024 0

 மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் உத்தரவு




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

1- 8th Std First Term Exam Sep 2024 - Schedule & Question Paper Download Instructions - DEE Proceedings

September 06, 2024 0

 


1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு - கால அட்டவணை (20.09.2024 முதல் 27.09.2024 வரை) மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் வழிகாட்டுதல்கள்!


Click Here to Download - DEE - First Term Examination Schedule & Instructions - Pdf



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

September 4, 2024

தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு , அக்டோபர் - 2024

September 04, 2024 0

 மாணவ . மாணவியர்கள் அறிவியல் . கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் " தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு " நடத்தப்பட்டு வருகிறது. 

2024-2025 - ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு 19.10.2024 ( சனிக்கிழமை ) அன்று நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ .1500 / - வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் . இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும் , மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.


 தமிழ்நாடு அரசின் 10 - ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும் . அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும் .

2024-2025 - ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் ( மெட்ரிக் / CBSE / ICSE / உட்பட ) மாணவர்கள் . 19.10.2024 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.  


மாணவர்கள்  www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 05.09.2024 முதல் 19.09.2024 வரை பதிவிறக்கம் செய்து . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை தொகை ரூ .50 / - சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் / முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் . 19.09.2024



பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் . 19.09.2024




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

வாசிப்பு இயக்கம் நடைமுறை படுத்துதல் - ஆசிரியர் வழிகாட்டி கையேடு

September 04, 2024 0

இதுவரை குழந்தைகளுக்குக் கதை சொல்லியிருக்கிறோம். இப்போது அவர்களே கதைகளை வாசிக்க இருக்கிறார்கள். கேட்போராக (Listeners) இருக்கும் குழந்தைகளை வாசிப்போராக (Readers) மாற்றும் முயற்சி இது.அரசுப் பள்ளிகளில் படிக்கும் எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் சின்னச் சின்ன கதைப் புத்தகம் தரும் புதிய முயற்சி, முன்னேறிய நாடுகளில் 70 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது குழந்தைகளின் சுய வாசிப்பு (Independent Reading). இந்தியாவில் முதன்முதலாகத் தமிழ்நாட்டில் 250 புத்தகங்களுடன் குழந்தைகளின் சுயவாசிப்பு இயக்கம் தோன்றுகிறது.


2024-2025 ஆண்டில் அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கத்தை செயல்படுத்திட 4 முதல் 9 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு TNTP தரும் பயிற்சியில் பங்கேற்க வைத்தல் 


 வாசிப்பு இயக்கப் புத்தகங்கள்  அரசுப்பள்ளிகளுக்கு சென்று சேர்ந்ததை உறுதி செய்தல் வேண்டும்.


கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 53 புத்தகங்கள் தற்போது வழங்கியுள்ள 71 புத்தகங்கள் EMIS தளத்தில் பதிவேற்றுதல் 

வாசிப்பு இயக்கப் புத்தகங்களை பயன்படுத்துதல் நூலக பாடவேளையில் உரிய வழிக்காட்டுதல்களை வழங்குதல்


 மாணவர்கள் எந்த வாசிப்பு நிலையில் உள்ளனர் ( நட , ஓடு , பற ) என்ற விவரத்தை EMIS தளத்தில் உள்ளீடு செய்தல் உள்ளிட்ட வழிகாட்டும் நெறிமுறைகளை மாநில திட்ட இயக்ககம் , ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.


Click Here to Download - வாசிப்பு இயக்கம் நடைமுறை படுத்துதல் - ஆசிரியர் வழிகாட்டி கையேடு - Pdf 

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

வாசிப்பு இயக்கம் புத்தகங்கள் - Vasippu Iyakam Books

September 04, 2024 0

Fruits Flash Cards

September 04, 2024 0

Teachers Day 2024 : இந்தியாவில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் கொண்டாட காரணம் என்ன..?

September 04, 2024 0

 ஒரு நாட்டின் வருங்கால தூண்களை உருவாக்க ஆசிரியர்கள் வெளிப்படுத்தும் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அவர்கள் இந்த சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்புகளை போற்றும் வகையில் பல நாடுகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

நம் நாட்டை பொறுத்த வரை சிறந்த அறிஞராகவும் ஆசிரியராகவும் இருந்த இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தங்கள் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு இந்த நாளன்று மாணவர்கள் நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவிக்கும் சந்தர்ப்பமாக ஆசிரியர் தினம் இருக்கிறது. தங்கள் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சிகளை பல நிகழ்வுகள் நடத்தி மற்றும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மாணவர்கள் மதிக்கிறார்கள்.

News18

ஆசிரியர் தினம் வரலாறு:

நம் நாட்டின் கல்வித் துறையில் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் ஆண்டுதோறும் அவரது பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1962-ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் நாட்டின் இரண்டாவது குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது இந்த ஆசிரியர் தின கொண்டாட்டம் நாட்டில் தொடங்கப்பட்டது.

ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகன் என்ற அந்தஸ்த்தை பெற்று குடியரசு தலைவராக இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட, அவரது முன்னாள் மாணவர்கள் மற்றும் நண்பர்களில் சிலர் அவரை அணுகினர். ஆனால் அவரோ செப்டம்பர் 5-ஐ தனது பிறந்தநாளாக கொண்டாடுவதற்குப் பதிலாக அந்த நாளை நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கடைப்பிடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று பணிவுடன் பரிந்துரைத்தார்.

சமுதாயத்தில் ஆசிரியர்கள் வகிக்கும் முக்கிய பங்கையும், எதிர்கால இளைஞர்களை வளர்ப்பதில் அவர்கள் ஏற்றுள்ள மகத்தான பொறுப்பையும் அங்கீகரிப்பதற்காக தந்து பிறந்த நாள் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று அவர் நினைத்தார். இவரது பரிந்துரையை உற்சாகமாக ஏற்று கொண்டது நம் தேசம், அப்போதிருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ஆம் தேதி நாட்டின் கல்வியாளர்கள் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்காக ஆசிரியர் தினத்தில் கௌரவிக்கப்படுகிறார்கள்.

ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம்:

மாணவர்களின் மேம்பாட்டிற்காக ஆசிரியர்கள் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இருப்பதால் ஆசிரியர் தினம் குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவத்தை வகிக்கிறது. மாணவர்கள் பொறுப்புள்ள குடிமக்களாக மாற, அவர்களுக்கு அறிவு மற்றும் திறன்களை கற்பிப்பதன் மூலம் தேசத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றுகின்றனர் ஆசிரியர்கள். சமூக முன்னேற்றம் மற்றும் தனிமனித மேம்பாடு ஆகிய இரண்டிற்கும் ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்கும் நிலையில், ஆசிரியர் தினம் அவர்களின் மகத்தான பொறுப்பை அங்கீகரிக்க மற்றும் அவர்களை கவுரவிக்க வாய்ப்பு மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் ஒரு நாளாக இருக்கிறது.


ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொள்ள சில வாழ்த்து செய்திகள்…

  • உங்கள் முடிவில்லா பொறுமை மற்றும் ஊக்கத்திற்கும் நன்றி. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  • எனக்குப் பிடித்த ஆசிரியராகிய நீங்கள் வழிகாட்டும் விளக்காக இருப்பதற்கு நன்றி

  • என் வாழ்க்கையில் நீங்கள் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது. அற்புதமான கல்வியாளராக இருப்பதற்கு நன்றி. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  • உங்கள் ஞானம் என் வாழ்க்கை பாதையை ஒளிரச் செய்கிறது. நீங்கள் சொல்லி கொடுக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

  • சிறந்த ஆசிரியரே உங்கள் ஊக்கம் தான் எங்களுக்கு உலகம். ஆசிரியர் தினத்தை சிறப்பாக கொண்டாடுங்கள்.

ஆசிரியர் தின கொண்டாட்ட யோசனைகள்:

  • கல்வி நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆற்றி வரும் சிறப்புமிக்க பணிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கலாம்.

  • தங்கள் ஆசிரியர்களை போலவே ஆடை அணிந்து மாணவர்கள், சில சிறப்பு நினைவுகள் அல்லது செயல்களை செய்வதன் மூலம் ஆசிரியர்களுக்கு சிறப்பு உணர்வை ஏற்படுத்தலாம்.

  • மாணவர்கள் அனைவரும் சேர்ந்தோ தனித்தனியாகவோ ஆசிரியர்களுக்கு பரிசுகள், வாழ்த்து அட்டைகள் அல்லது பூக்களை வழங்கலாம்.

  • ஆசிரியர்களை கெளரவப்படுத்தும் வகையில் ஆன்லைன் கேதரிங் மற்றும் விரிச்சுவல் ஈவன்ட்ஸ்களை நடத்தலாம்.

இதனிடையே நாளை (செப்டம்பர் 5) அன்று அனுசரிக்கப்பட உள்ள ஆசிரியர் தினத்திற்காக பல பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களை கௌரவிக்க சிறப்பு நிகழ்வுகள், நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் விழாக்களை ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்வுகளில் மாணவர்களின் நிகழ்ச்சிகள், உரைகள் மற்றும் பாராட்டு விருதுகள் வழங்குவது உள்ளிட்டவை அடங்கும்.

ஆசிரியர் தினம் உலகளவில் எப்போது, ​​எப்படி கொண்டாடப்படுகிறது?

  1. இந்தியா: ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் ஆசிரியர்களுக்க நன்றி தெரிவிக்கும் விதமாக பால் திட்டமிட்ட விழாக்களை நடத்துகின்றன.

  2. அமெரிக்கா: இங்கு ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை தேசிய ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் அங்கீகாரம், சிறிய பரிசுகள் மற்றும் நன்றி செய்திகள் போன்ற பல செயல்பாடுகளுடன் அந்த முழு வாரமும் ஆசிரியர்களை பாராட்டும் வாரமாக கொண்டாடப்படுகிறது.

  3. சீனா; செப்டம்பர் 10 அன்று,சீனாவில் ஆசிரியர்களின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் விழாக்கள் மற்றும் விருதுகளுடன் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

  4. மெக்சிகோ; இந்த நாட்டில் மே 15 அன்று விழாக்கள் மற்றும் கலாச்சார விழாக்களுடன் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அங்கே குறிப்பிட்ட சில பகுதிகளில், இந்த நாள் ஒரு பொது விடுமுறை. எனவே ஆசிரியர்கள் விடுமுறை எடுத்து ஓய்வெடுக்கிறார்கள்.

  5. ஆஸ்திரேலியா: இந்நாட்டில் சில மாநிலங்களில், அக்டோபர் மாதத்தின் கடைசி வெள்ளி ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. காலை தேநீர் போன்ற நடவடிக்கைகள் மூலம் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள் இருக்கும்.

  6. தாய்லாந்து: தாய்லாந்தில் ஆண்டுதோறும் ஜனவரி 16 அன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்களை கௌரவிக்கும் மற்றும் ஆசிரியர் ஒற்றுமையை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் விழாக்களை ஆசிரியர் தின கொண்டாட்டங்கள் உள்ளடக்கியது.

  7. ரஷ்யா: இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் 5 அன்று ஆசிரியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் குறிப்பிடத்தக்க பங்கை அங்கீகரிக்க, பாராட்ட இந்த நாளை ரஷ்யர்கள் அனுசரிக்கிறார்கள்.

  8. தென் கொரியா: கிங் செஜாங் தி கிரேட் (1397-1450) பிறந்தநாளுடன் இணைந்து, தேசிய ஆசிரியர் தினம் மே 15 அன்று தென் கொரியாவில் அனுசரிக்கப்படுகிறது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தமிழக அரசில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

September 04, 2024 0

 தமிழக அரசில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

மதுரை மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Radiographer, Hospital Worker பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 10 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.10,000/- மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DHS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Radiographer, Hospital Worker பணிக்கென காலியாக உள்ள 10 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hospital Worker கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DHS வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 மற்றும் 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Hospital Worker ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DHS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.09.2024ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

IDBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம்: ரூ.1,57,000/- || முழு விவரங்களுடன்!

September 04, 2024 0

 IDBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம்: ரூ.1,57,000/- || முழு விவரங்களுடன்!

IDBI வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant General Manager (Grade C) & Manager (Grade B) பணிக்கென காலியாக உள்ள 56 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. MBBS / MD தேர்ச்சிபெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

IDBI காலிப்பணியிடங்கள்:

Assistant General Manager (Grade C) & Manager (Grade B) பணிக்கென காலியாக உள்ள 56 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Assistant General Manager கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduation / Post-Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IDBI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 மற்றும் 28 என்றும் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant General Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,57,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

IDBI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Group Discussion / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 15.09.2024 ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

JIPMER ஆணையத்தில் Junior Nurse வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.20,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

September 04, 2024 0

 JIPMER ஆணையத்தில் Junior Nurse வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.20,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

Junior Nurse, Lab Technician பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

JIPMER காலிப்பணியிடங்கள்:

Junior Nurse, Lab Technician பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Nurse கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / Nursing என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

JIPMER வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Nurse ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து jipmermicrotb@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.09.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group