பான் கார்டு (PAN card) என்றால் என்ன மற்றும் அதன் முக்கியத்துவம் யாது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஒருவேளை பான் கார்டு பற்றிய எந்த ஒரு விவரமும் உங்களுக்கு தெரியாது என்றால் அதனை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். பான் கார்டு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களையும் இப்போது காணலாம்.
தனித்துவமான அடையாளம் காட்டி
பான் கார்டு என்பது வருமான வரி துறையினரால் வழங்கப்படும் தனித்துவமான 10 இலக்க எழுத்துக்கள் மற்றும் எண்கள் அடங்கிய அடையாள எண்ணாகும். இது பொருளாதார பரிமாற்றங்களை கண்காணிக்கவும் மற்றும் வரி காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. உங்களுடைய பான் கார்டு மூலமாக நீங்கள் செய்யும் அனைத்து பொருளாதார ட்ரான்ஸ்ஷாக்ஷன்களையும் தெரிந்து கொள்ளலாம்.
வருமான வரி தாக்கல் செய்வதற்கு கட்டாயம் தேவைப்படுகிறது வருமான வரி தாக்கல் செய்வதற்கு தனி நபர்கள் கட்டாயமாக பான் கார்டு வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அதிக மதிப்பு கொண்ட ட்ரான்ஸாக்ஷன்களை செய்யவும் பிற பொருளாதார செயல்பாடுகளை நிகழ்த்தவும் பான் கார்டு அவசியமாக கருதப்படுகிறது.
பான் கார்டு பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
பான் கார்டு வாங்க நினைக்கும் ஒருவர் ஆன்லைன் மூலமாகவோ அல்லது NSDL அல்லது UTIITSL போன்ற நியமிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலமாக ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பதாரர் அடையாள சான்றிதழ், முகவரி சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
அடையாள சான்றிதழ்
பான் கார்டு என்பது பெரும்பாலும் பல்வேறு சேவைகளுக்கான செல்லுபடி ஆகக்கூடிய அடையாள சான்றிதழாக செயல்படுகிறது. வங்கி கணக்குகள் திறப்பது முதல் லோன்களுக்கு விண்ணப்பிப்பது வரை பல்வேறு விஷயங்களுக்கு நீங்கள் பான் கார்டை உபயோகிக்கலாம்.
பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைத்தல் ஒருவேளை உங்களிடம் பான் கார்டு இருந்தால் விதிகளின்படி கட்டாயமாக நீங்கள் அதனை உங்கள் ஆதார் அட்டையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் அபராதங்கள் விதிக்கப்படும்.
பான் கார்டு அமைப்பு
பான் கார்டில் பான் நம்பர், கார்டு ஹோல்டர் பெயர், பிறந்த தேதி மற்றும் புகைப்படம் போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும். அது மட்டுமல்லாமல் சரிபார்ப்பு காரணங்களுக்காக அதில் QR கோட் கொடுக்கப்பட்டிருக்கும்.
மாற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகள்
பான் கார்டில் உள்ள பெயர், முகவரி அல்லது புகைப்படம் போன்ற விவரங்களை ஒருவர் அப்டேட் செய்ய நினைத்தால் அதற்கு சம்பந்தப்பட்ட படிவங்கள் மற்றும் டாக்குமெண்ட்களை சமர்ப்பித்து மாற்றிக் கொள்ளலாம்.பான் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ என்ன செய்வது?
ஒருவேளை உங்களுடைய பான் கார்டை நீங்கள் தவறுதலாக தொலைத்து விட்டாலோ அல்லது சேதமாகினாலோ அதனை நீங்கள் மீண்டும் அச்சிடுவதற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது உங்களுடைய தற்போதைய பான் கார்டு எண்ணை பயன்படுத்தி நீங்கள் இதற்கு முன்பு பான் கார்டு வாங்கிய அதே ஏஜென்சிகள் மூலமாகவே டூப்ளிகேட் கார்டை பெறலாம்.
பான் கார்டின் முக்கியத்துவம்
பல்வேறு பொருளாதார ஒழுங்கு முறையுடன் இணங்குவதற்கு பான் கார்டு அவசியமாக கருதப்படுகிறது. ஒருமுறை உங்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு விட்டால், அதில் நீங்கள் எந்த ஒரு மாற்றமும் செய்யாத போது மற்றும் அது கேன்சல் ஆகாமலும் அதனை நீங்கள் சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்காமல் இருக்கும் பட்சத்தில் அது உங்கள் வாழ்நாள் முழுவதும் செல்லுபடி ஆகும்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news