Agri Info

Adding Green to your Life

September 10, 2024

IIT MADRAS-ல் புதிய வேலைவாய்ப்பு -மாதம் ரூ.21,000 சம்பளம்”..!! “கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன் “..!!

September 10, 2024 0

 

IIT MADRAS-ல் புதிய வேலைவாய்ப்பு -மாதம் ரூ.21,000 சம்பளம்”..!! “கல்வி  தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன் “..!!

INDIAN INSTITUTE OF TECHNOLOGY  MADRAS(IIT MADRAS) ஆனது PROJECT TECHNICIAN பணிக்கான காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IIT MADRAS காலிப்பணியிடங்கள்:

IIT MADRAS கல்வி நிறுவனத்திலுள்ள Project Technicianக்கான 4 காலிப் பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 25 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,000-ரூ.21,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து short listing/எழுத்து தேர்வு/திறன் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் IIT MADRAS இணையதளமான https://icandsr.iitm.ac.in/recruitment/. மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.09.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

OFFICIAL SITE

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

AIIMS-ல் Senior Resident காலிப்பணியிடங்கள் – வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

September 10, 2024 0

 AIIMS-ல் Senior Resident காலிப்பணியிடங்கள் – வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

AIIMS-All India Institute of Medical Sciences ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Resident பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.67,700/- ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

AIIMS காலிப்பணியிடங்கள்:

Senior Resident பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MD, MS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

AIIMS வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.67,700/- மாத ஊதியம் வழங்கப்படும்.

AIIMS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 01.10.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது என தெரிவிக்கபட்டுள்ளது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலை – மாதம் ரூ.50,000/- ஊதியம் || முழு விவரங்களுடன்!

September 10, 2024 0

 

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலை – மாதம் ரூ.50,000/- ஊதியம் || முழு விவரங்களுடன்!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Guest Faculty பணிக்கான 2 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Pondicherry University காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Guest Faculty பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Guest Faculty கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BL / Law / PG Diploma தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Pondicherry University வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Guest Faculty ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ஒரு வகுப்புக்கு ரூ.1500/- என மாதம் ரூ.50,000/- ஊதியமாக வழங்கப்படும்.

Pondicherry University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.09.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழக அரசில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.60,000/-

September 10, 2024 0

 தமிழக அரசில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.60,000/-

தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் LADCS ஆனது Deputy Chief Legal Aid Defense Counsel, Assistant Legal Aid Defense Counsel, Office Assistant/Clerk,Office Peon பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 8 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி வயது வரம்பு குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

LADCS காலிப்பணியிடங்கள

Deputy Chief Legal Aid Defense Counsel, Assistant Legal Aid Defense Counsel, Office Assistant / Clerk, Office Peon பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Clerk கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / டிகிரி / BL / Law தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

LADCS வயது வரம்பு:

21 வயது பூர்த்தியானவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Clerk ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.14,000/- முதல் ரூ.60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

LADCS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

GRI பல்கலைக்கழகத்தில் ரூ.20,250/- சம்பளத்தில் வேலை – தேர்வு இல்லை || முழு விவரங்களுடன்!

September 10, 2024 0

 

GRI பல்கலைக்கழகத்தில் ரூ.20,250/- சம்பளத்தில் வேலை – தேர்வு இல்லை || முழு விவரங்களுடன்!

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Computer Lab Technician பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

GRI காலிப்பணியிடங்கள்:

Computer Lab Technician பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GRI வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.20,250/- மாத ஊதியம் வழங்கப்படும்.

GRI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.09.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அண்ணா பல்கலைக்கழகத்தில் Chief Executive Officer வேலை – ரூ.2 லட்சம் ஊதியம் || உடனே விரையுங்கள்!

September 10, 2024 0

 அண்ணா பல்கலைக்கழகத்தில் Chief Executive Officer வேலை – ரூ.2 லட்சம் ஊதியம் || உடனே விரையுங்கள்!

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது Chief Executive Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Chief Executive Officer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chief Executive Officer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / M.Sc / MBA / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Chief Executive Officer ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2 லட்சம் ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

School Education Calendar New Vs Old ( Single Page..)

September 10, 2024 0

'போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்' - தமிழக அரசு அறிவிப்பு

September 10, 2024 0

 
போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

9951611-state-03

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள 6 மாத கால இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் பயிற்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-


"டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி. ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்கள் இயங்கி வருகிறது.


அந்த வகையில், கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.


மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெற்று, புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை 6 மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது.


பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 1-1-2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.


பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய இணையதளம் www.cecc.in வாயிலாக 10-9-2024 முதல் 24-9-2024 வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 25954905 மற்றும் 044 - 28510537 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.


எஸ்.எஸ்.எல்.சி.யில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தெரிவு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்."


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

September 9, 2024

நீங்கள் வாங்கும் பனீர் சுத்தமானதா இல்லை கலப்படமானதா.? எளிதாக கண்டறிய உதவும் டிப்ஸ்!

September 09, 2024 0

 பனீர் என்பது பாலில் இருந்து தயார் செய்யப்படும் ஒரு உணவு பொருளாகும். பனீர் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. ஆனால் தற்போது போலி பனீர் விற்பனைக்கு வந்துள்ளதால் இது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

போலி பனீர் இந்தியாவில் விற்கப்படுவதை சமீபத்திய ஆய்வுகள் அடையாளம் கண்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக, போலி வகைகளில் இருந்து உண்மையான பனீரை வேறுபடுத்த எளிய மற்றும் பயனுள்ள முறைகள் உள்ளன. இதுகுறித்து மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் ஷைல்ஜா ஷர்மைன் கூறிய வழிகாட்டுதல்கள் குறித்து இங்கு காண்போம்.,

News18

வீட்டில் போலியான ‘பனீர்’ சோதனை செய்வது எப்படி?

  1. அயோடின் சோதனை : முதலில் நீங்கள் வாங்கி வைத்துள்ள பனீரை வேக வைத்து எடுத்து கொள்ளவும். இதனுடன் சிறிதளவு அயோடினை சேர்க்க வேண்டும். இப்போது பனீர் நீலமாக மாறினால், அது செயற்கையாக இருக்கலாம். உண்மையான பனீர் அதன் அசல் நிறத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். எனவே நிறம் மாறாமல் வெள்ளையாகவே இருந்தால் அது இயற்கையான முறையில் சுத்தமாக தயார் செய்யப்பட்டதாகும்.

  2. தால் டெஸ்ட் : தால் டெஸ்ட் என்பது பருப்பை கொண்டு செய்யப்படும் சோதனை ஆகும். இதற்கு வேகவைத்த பனீரை எடுத்து தண்ணீர் ஊற்றி குளிர்விக்க வேண்டும். இதனுடன் துவரம் பருப்பை சேர்த்து கொள்ளுங்கள். சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணீர் வெளிர் சிவப்பு நிறமாக மாறினால், அது போலியானது. எந்த நிற மாற்றமும் இல்லையென்றால் பனீர் தூய்மையானது என்று அர்த்தம்.

  3. மென்மையை கண்டறியுங்கள் : உண்மையான பனீரை தொட்டு பார்த்தல் மென்மையாக இருக்கும். செயற்கை முறையில் தயாரித்த பனீர் என்றால் அது ரப்பர் போன்று காணப்படும். இதன் மூலம் நாம் போலியானதை உடனடியாக கண்டறியலாம். மேலும் இயற்கையான முறையில் தயார் செய்யப்பட்ட பனீர் உதிர்த்தால் உதிரிஉதிரியாக இருக்கும்.

  4. வாசனை சோதனை : உண்மையான பனீரில் லேசான பால் வாசனை இருக்கும், அதே சமயம் போலி பனீரில் ரசாயன வாசனை இருக்கலாம்.

  5. சுவை சோதனை : உண்மையான பனீர் ஒரு சுத்தமான பால் போன்ற சுவையை வழங்குகிறது, செயற்கை முறையில் தாயார் செய்யப்பட்ட பனீர் பால் சுவை இன்றி காணப்படும். மேலும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் எளிதாக கண்டறிய முடியும்.

  6. ஈரப்பதம் சோதனை : உண்மையான பனீர் அழுத்தும் போது லேசான ஈரப்பதத்துடன் இருக்கும். இது பெரும்பாலும் போலி தயாரிப்புகளில் இருக்காது.

  7. சமையல் சோதனை : உண்மையான பனீர் சமைக்கும் போது பழுப்பு நிறமாகி அதன் வடிவத்தை பராமரிக்கிறது, அதே நேரத்தில் போலி பனீர் ரப்பர் போல மாறிவிடும்.

    போலி பனீர் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் :

    செயற்கை பனீர் மிகவும் ஆபத்தானது. இதனை அடிக்கடி சாப்பிடுவதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற உடனடி அறிகுறிகளை ஏற்படுத்தும். போலி பனீரில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதால் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கலாம்.




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

சிறுநீரகங்கள் செயலிழப்பதற்கு என்ன காரணம்..? ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும் அறிகுறிகள்..!

September 09, 2024 0

 அக்யூட் கிட்னி இன்ஜூரி (Acute kidney injury - AKI) என்பது ஒருவரின் சிறுநீரகங்கள் திடீரென்று சரியாக வேலை செய்யாமல் போகும் நிலை மற்றும் இது பெரும்பாலும் குறுகிய காலத்திற்குள் ஏற்படுகிறது. சிறுநீரக செயல்பாட்டில் ஏற்படும் சிறிய பாதிப்பு முதல் சிறுநீரகம் முழுமையாக செயலிழப்பது வரை என இதன் பாதிப்புகள் இருக்கலாம்.

அதே போல இந்த சிறுநீரக பாதிப்பு என்பது ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் குறிப்பாக தீவிர சிகிச்சை தேவைப்படும் மோசமான கண்டிஷனில் இருக்கும் நோயாளிகளுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான நிலையாக இருக்கிறது. இந்த பாதிப்பு சிறிய அளவில் இருக்கும் போதே கண்டறிவது மற்றும் சரியாக நிர்வகிப்பது மீள்வதை எளிதாக்க கூடும் என்பதால் AKI ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்களை நாம் புரிந்து கொள்வது முக்கியம்.

பிரபல மருத்துவர் சுஜித் சாட்டர்ஜி கூறுகையில் உடலில் காணப்படும் அறிகுறிகள், மருத்துவ நிலைமைகள் மற்றும் சிறுநீரகப் பாதிப்பிற்கு பங்களிக்கும் சமீபத்திய நிகழ்வுகள் போன்ற மெடிக்கல் ஹிஸ்ட்ரி மதிப்பாய்வு மூலம் பாதிப்பை கண்டறியலாம். உடல் பரிசோதனையானது Fluid retention, குறைந்த அளவே சிறுநீர் வெளியேறுவது அல்லது சிறுநீரகச் செயலிழப்பிற்கான மற்ற அறிகுறிகளை மதிப்பிட உதவுகிறது என்றார்.

சிறுநீரக செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதற்காக Creatinine மற்றும் Blood urea nitrogen அளவை அளவிட ரத்த பரிசோதனைகள் செய்யப்படும். தவிர சிறுநீரக ஆரோக்கியத்தை மதிப்பிட சிறுநீர் பரிசோதனைகள் செய்யப்படலாம் என்றார். சில சந்தர்ப்பங்களில் சிறுநீர் பாதையில் Structural abnormalities அல்லது அடைப்புகள் உள்ளதா என்பதை கண்டறிய அல்ட்ராசவுண்ட் அல்லது CT ஸ்கேன் போன்ற இமேஜிங் சோதனைகள் செய்யப்படலாம்.

AKI பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:

சிறுநீரகங்களுக்கு ரத்த ஓட்டம் குறைதல் - டிஹைட்ரேஷன், குறைந்த ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு காரணமாக இது நிகழலாம்.

சிறுநீரகங்களில் நேரடி பாதிப்பு - தொற்றுகள், சில மருந்துகள், டாக்ஸின்ஸ் அல்லது மெடிக்கல் இமேஜிங் செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் Contrast Dyes உள்ளிட்டவை சிறுநீரகங்களுக்கு நேரடியாக தீங்கு விளைவிக்கும்.

சிறுநீரகம் தொடர்பான நோய்கள் - Glomerulonephritis அல்லது Interstitial nephritis போன்ற நிலைமைகள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதிக்கலாம்.

சிறுநீர் பாதையில் ஏற்படும் அடைப்பு - கிட்னி ஸ்டோன்கள் அல்லது Enlarged prostate போன்ற அடைப்புகள் சிறுநீர் பாதையில் தடையை ஏற்படுத்தலாம். இது AKI பாதிப்புக்கு வழிவகுக்கும்.

AKI பாதிப்பின் பொதுவான அறிகுறிகள்:

AKI பாதிப்பின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடலாம் என்றாலும் சில பொதுவான அறிகுறிகள் இருப்பதாக கூறுகிறா மருத்துவர் சுஜித் சாட்டர்ஜி. வெளியேறும் சிறுநீரின் அளவு குறைவது, திரவம் தேங்குவதால் கால்கள், கணுக்கால் அல்லது முகத்தில் வீக்கம் ஏற்படுவது, சோர்வு மற்றும் பலவீனம், குமட்டல், வாந்தி, அல்லது பசியின்மை, மூச்சுத் திணறல் மற்றும் குழப்பம் அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம் உள்ளிட்டவை AKI-ன் பொதுவான அறிகுறிகள் என்றார்.

டீ-ஹைட்ரேஷன், தொற்று அல்லது மருந்து தொடர்பான பிரச்சினைகள் காரணமாக AKI பாதிப்பு ஏற்பட்டால் உரிய சிகிச்சைகள் அளிக்கப்படும். திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் பேலன்ஸை பராமரிப்பது மிகவும் முக்கியம். சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த நரம்பு வழி திரவங்கள் (intravenous fluids) அல்லது Diuretics கொடுக்கப்படலாம். அதே போல காரணத்தைப் பொறுத்து அறிகுறிகளை குறைக்க, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அல்லது வீக்கத்தை குறைக்க சில மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம் என்கிறார் மருத்துவர் சாட்டர்ஜி.

தீவிர நிலைகளில் சிகிச்சை…

AKI பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்தால் சிறுநீரக செயல்பாடு சீராகும் வரை ரத்தத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டி நீக்க டயாலிசிஸ் செய்யப்படலாம். பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை மதிப்பிட, நிலைமைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க வழக்கமான ஃபாலோ-அப் மற்றும் அப்பாயின்மென்ட்டை சரியாக பின்பற்ற வேண்டும்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Intermittent Fasting | இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை மேற்கொள்ள 8 வழிகள் : எது சிறந்தது?

September 09, 2024 0

 இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் மேற்கொள்வதன் மூலம் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும், ஆற்றலை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுகிறது. இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது ஒரு உணவுத் திட்டம் ஆகும். இந்த செயல்முறையானது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது உடலில் உள்ள கொழுப்பை குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் மேற்கொள்ள 8 வழிகளை பற்றி பார்ப்போம்..

  • ​16:8 டயட்: 16/8 செயல்முறையானது 8 மணி நேரம் சாப்பிட வேண்டும் மற்றும் 16 மணி நேரம் சாப்பிடக்கூடாது. அதாவது, நீங்கள் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை சாப்பிடலாம். இதனையடுத்து அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு உங்களின் அடுத்த உணவை சாப்பிட வேண்டும். இந்த இடைப்பட்ட 16 மணிநேர காலம் தான் உங்களுடைய உண்ணாவிரத நேரம் ஆகும். இந்த அணுகுமுறை எளிமையானது. மேலும் இது, கொழுப்பை குறைக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

  • 5:2 டயட்: 5:2 உணவில், நீங்கள் வாரத்தில் ஐந்து நாட்களுக்கு சாதாரணமாக சாப்பிடுவீர்கள், மற்ற இரண்டு நாட்களில் கலோரிகளில் நான்கில் ஒரு பாகமாக கட்டுப்படுத்துவது ஆகும். அதாவது சுமார் 500 முதல் 600 கலோரிகளாக வாரத்தில் இரண்டு நாட்களுக்கு எடுத்துகொள்வதை குறிக்கிறது. தினசரி உண்ணாவிரதத்தை விட இந்த முறையை பின்பற்றுவது எளிதாக இருக்கும்.

  • ஈட் - ஸ்டாப் - ஈட் டயட்: இந்த ஈட் ஸ்டாப் ஈட் டயட்டில் வாரத்திற்கு இரண்டு முறை 24 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பதாகும், மீதமுள்ள நாட்களில் நன்றாக சாப்பிடலாம். இந்த முறையானது கொழுப்பை குறைகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

  • ஆல்டர்னேட் ஃபாஸ்டிங்: ஆல்டர்னேட் ஃபாஸ்டிங் என்பது டயட் இருக்கும் நாளில் 500 கலோரிகள் மட்டும் எடுக்க வேண்டும். இந்த முறையானது எடை குறைப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

  • வாரியர் டயட்​: இதில் 20 மணிநேரம் உண்ணாவிரதம் இருப்பது மற்றும் 4 மணி நேரம் சாப்பிடுவதுமாகும். 4 மணி நேரத்தில் நீங்கள் விரும்பும் எதையும் சாப்பிடலாம். இந்த முறையானது கொழுப்பை குறைக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

  • ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு: ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு என்பது சாப்பிடும் நேரத்தை தவிர, மீதமுள்ள 23 மணி நேர உண்ணாவிரதம் இருப்பதும் ஆகும். இந்த முறையானது உணவு முறைகளை எளிதாக்குகிறது மற்றும் எடை குறைப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

  • டைம் ரெஸ்ட்ரிக்டட் ஈட்டிங்: டைம் ரெஸ்ட்ரிக்டட் ஈட்டிங் என்பது, குறிப்பிட்ட நேரத்திற்கு உணவை கட்டுப்படுத்தும் உணவு முறை ஆகும். அதாவது, ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு எடுத்து கொள்வதை கட்டுப்படுத்துகிறது. இந்த முறையானது எடை குறைப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இந்த முறையின் எளிமை பலருக்கு விருப்பமான தேர்வாக அமைகிறது.

    500 கலோரிகளுடன் ஆல்டர்னேட் ஃபாஸ்டிங்: 500 கலோரிகளுடன் ஆல்டர்னேட் ஃபாஸ்டிங் என்பது, முதல் நாள் சாதாரணமாக சாப்பிட்டு, அடுத்த நாள் சுமார் 500 கலோரிகளை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும்.. இந்த முறையானது எடை குறைப்பு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை யார் தவிர்க்க வேண்டும்? கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள், நாள்பட்ட உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் ஆகியோர் இந்த இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறையைத் தொடங்குவதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    **இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கில் சிறந்தது எது?**இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கில் சிறந்த முறை என்பது பெரும்பாலும் தனிப்பட்ட விருப்பம் மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்துள்ளது. இருப்பினும், 16/8 டயட் முறை பரவலாக விரும்பப்படுகிறது. இது 8 மணி நேரம் சாப்பிடுவது மற்றும் 16 மணி நேரம் சாப்பிடக்கூடாது என்பதாகும்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group