Agri Info

Adding Green to your Life

September 12, 2024

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

September 12, 2024 0

 student

திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளியின் தலைமையாசிரியர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையும், இதன் பின்னணியும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன செய்தார் அவர்? பார்க்கலாம் விரிவாக...


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியரால் அரங்கேற்றப்பட்டிருக்கும் மோசடிகளும், முறைகேடுகளும் தமிழக கல்வித்துறையை ஆட்டம் காணச் செய்திருக்கிறது...


திருவள்ளூர் மாவட்டம், பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்தான் இந்த சம்பவம்..


தலைமை ஆசிரியரான லதா, மாணவர்களின் வருகை பதிவேட்டை திருத்தம் செய்து... 230 மாணவர்கள் படிக்க கூடிய பள்ளியில், 550 மாணவர்கள் படிப்பதாக கணக்கு காட்டியிருக்கிறார்...


இதற்கு ஏற்றார் போல கூடுதல் ஆசிரியர்களை பெற்று, ஆசிரியர் அல்லாத பணியிடங்களை அவர் நிரப்பியதும் அம்பலமாகி உள்ளது..


இதோடு இல்லாமல், 220 மாணவர்கள் பெயரில் பள்ளிக்  கல்வித் துறையின் பல்வேறு விலையில்லாத திட்டங்களையும், சத்துணவு பொருட்களையும் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது...


இதனால், அரசுக்கு மிகப்பெரும் நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்..


இந்த பலே மோசடியும், முறைகேடும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்திருப்பதை கண்டு அதிர்ந்து போன தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் , இதனை முறையாக ஆய்வு செய்து கண்டுபிடிக்காத வட்டார  கல்வி அலுவலர் மேரி ஜோசப்பை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார்..


தொடர்ந்து, தலைமையாசிரியர் லதா மீதும் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது...


இந்நிலையில், இதன் எதிரொலியாய்.. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்க கல்வித் துறை முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மிலாடி நபி விடுமுறை சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

September 12, 2024 0

 IMG_20240912_125512

In the Government order reference cited , the Government of Tamil Nadu declares that 17th September , 2024 shall be a Public Holiday on account of Milad - un - Nabi instead of 16th September , 2024. A copy of the Government Order is enclosed herewith for information and necessary action .

DSE - Milad-un-Nabi_Public Holiday Proceedings

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழக அரசுப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்: 3-ம் கட்டமாக 127 புத்தகங்களை வடிவமைக்க திட்டம்

September 12, 2024 0

 

1309363

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக 3-வது கட்டமாக 127 புத்தகங்களை வடிவமைத்து வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வாசிப்பு இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நுழை, நட, ஓடு, பற என்ற வாசிப்பு நிலைகளில் ரூ.10 கோடியில் 53 புத்தகங்கள், 90 லட்சத்து 45,018 பிரதிகள் அச்சிடப்பட்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் (2024-25) 70 புத்தகங்கள், ஒரு வாசிப்பு இயக்கக் கையேடு ஆகியவை ஒரு கோடியே 31 லட்சத்து 68,048 பிரதிகள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் அவை வடிவமைக்கப்பட்டு விநியோகம் செயப்பட்டுள்ளன.


இதைத் தொடர்ந்து வாசிப்பு இயக்கத்துக்கு புதிதாக 127 புத்தகங்கள் வடிவமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ''செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் மூழ்கியுள்ள மாணவர்களை நெறிப்படுத்த நூல் வாசிப்பு உதவும். அதனால் வாசிப்பு இயக்கத்தை தீவிரப்படுத்தி மாணவர்களிடம் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 124 புத்தகங்கள் 2 கட்டங்களாக அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.


அடுத்தகட்டமாக 127 புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு பள்ளிகளுக்கு அளிக்கப்பட உள்ளன. இதற்கான புத்தக தயாரிப்பு பணிமனைகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. அந்த பணிகள் முடிந்தபின்னர் சுமார் 2.2 கோடி பிரதிகள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு தரப்படும். நடப்பு கல்வியாண்டிலேயே இந்த செயல்பாடுகளை முடிக்க இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம்'' என்றனர்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

September 11, 2024

10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக இருக்கும் - திருத்தப்பட்ட நாட்காட்டியில் அறிவிப்பு

September 11, 2024 0

 மாணவர்களுக்கான பள்ளி வேலை நாள் 210 ஆகவும், ஆசிரியர்களுக்கு வேலை நாள் 220 ஆகவும் புதிய நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 15.04.2025 உடன் முழு ஆண்டுத் தேர்வு முடிவடைந்து மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் 16.04.2025 முதல் 30.04.2025  (10 வேலை நாட்கள்) வரை பள்ளிக்கு வந்து தேர்வு முடிவுகளை இறுதி செய்யவும், 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான முன் திட்டமிடல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு!


தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த மே மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதையடுத்து நடப்பு கல்வியாண்டில் 2024-25ம் கல்வியாண்டில் புதிதாக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பள்ளி நாட்காட்டி ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.



அதில் பொதுவாக ஒவ்வொரு கல்வியாண்டும் 210 சராசரி வேலைநாட்களை கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் 220 நாட்களை வேலைநாட்களாக கொண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டது. இதையடுத்து வேலை நாட்களை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.


இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலை நாட்களை குறைத்து, 210 வேலைநாட்கள் இருக்கும் வகையில் திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. 


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

6th to 10th - Quarterly Exam Syllabus - All Subjects

September 11, 2024 0

 Syllabus-2024


காலாண்டு தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.


 ஆறு முதல் பத்தாம் வகுப்புக்கான காலாண்டு தேர்வுக்கான பாடத்திட்டம் கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது இதனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மஞ்சள் கலர் லிங்கை கிளிக் செய்யவும்


Click Here to Download - 6th to 10th - Quarterly Exam Syllabus - All Subjects - Pdf



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

காலாண்டுத்தேர்வு விடுமுறை அறிவிப்பு

September 11, 2024 0

 தமிழ்நாட்டில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, 6 - 10 வகுப்புகளுக்கான காலண்டு தேர்வு செப்.20ம் தேதி தொடங்குகிறது.



தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது


இந்நிலையில் காலாண்டு தேர்வு குறித்த அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 6 - 10 வகுப்புகளுக்கான காலண்டு தேர்வு செப்.20ம் தேதி தொடங்குகிறது. செப்.20ம் தேதி தொடங்கும் தேர்வு 27ம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது.

தேர்வு நேரத்தை பொறுத்தவரை, 6ம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், 7ம் வகுப்புகளுக்கு மதியம் 1.15 மணி முதல் 3.15 வரைம், 8ம் வகுப்புகளுக்கு 9.30 முதல் 12 மணி வரையும், 9ம் வகுப்புகளுக்கு 1.15 முதல் 4.30 மணி வரையும், 10ம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.45 வரையும் தேர்வு நடைபெறும்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

"பணிக்கொடை" (Gratuity) பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?

September 11, 2024 0

 





"கொடை"என்றால் அன்பளிப்பு என்று பொருள்.குறிப்பிட்ட காலம் பணிசெய்து ஓய்வு
பெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே "பணிக்கொடை" எனப்படுகிறது.

இதை அளிப்பதற்காக அவர் பணி செய்யும் காலங்களில் இதற்கென்று எந்த ஒரு தொகையும் அவரிடம் பிடித்தம் செய்யப்படுவதில்லை.


இது முழுவதுமே நிர்வாகத்தால் வழங்கப்படும் "கொடை"தான்.

    பழங்காலத்தில் பணிக்கொடை என்பதெல்லாம் கிடையாது.சில தனியார் முதலாளிகள் தங்களிடம் ஓய்வு பெறும் ஊழியருக்கு இந்த மாதிரி ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கி அனுப்பும் வழக்கம் இருந்தது.

நாளாவட்டத்தில் இது எல்லா இடத்திலும் பரவி சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு பணிக்கொடை கொடுத்தே ஆகவேண்டுமென்று சட்டமும் ஆகிவிட்டது.

 கிராஜூவிட்டி கணக்கிடும் முறையைப் பார்ப்போம்.

ஒரு ஆண்டு சர்வீஸூக்கு 15 நாட்கள் சம்பளம் கிராஜூவிட்டி என்று கணக்கிட்டு ஒருவர் எத்தனை ஆண்டுகள் பணி செய்துள்ளாரோ அதற்குறிய தொகையை கிராஜிவிட்டியாக வழங்கவேண்டும்.



   உதாரணமாக ஒருவர் 25ஆண்டுகள் பணி செய்திருந்தால் அவருக்கு 25×15=375நாட்கள் சம்பளமும்
30ஆண்டுகள்பணி செய்திருந்தால்30×15=450நாட்கள் சம்பளமும் கிராஜூவிட்டியாக வழங்கப்படவேண்டும்.

   கிராஜூவிட்டியில் சீலிங் உண்டு.அதிகப்பட்சம் 2000000(இருபது லட்சம்)மட்டுமே வழங்கப்படும்.

  பனிஷ்மென்ட் இருந்தால் சர்வீஸ் ஆண்டுகள் குறைத்துக் கணக்கிடப்படும்.

உதாரணமாக 30ஆண்டுகள் பணி செய்தவருக்கு இரண்டாண்டு இன்க்ரிமென்ட் கட் ஆகி இருந்தால் 28ஆண்டுகள் மட்டுமே சர்வீஸ் என கணக்கிடப்படும்.

    கடைசியாக வாங்கிய பேசிக்கையும் DAவையும் கூட்டி அதை 26ஆல் வகுத்து வருவதுதான் ஒருநாள் சம்பளமாகும்.


    இப்பொழுது கடைசிமாத பேசிக் 40000ரூபாய் வாங்கிய 35ஆண்டுகள் சர்வீஸ் முடித்த பனிஷ்மென்ண்ட் ஏதும் இல்லாத ஒருவரின் கிராஜூவிட்டியைக் கணக்கிடுவோம்.(இப்போதைய DA 7%.)

  பேசிக்....................................40000
 DA7%(40000×7÷100)..............2800
மொத்தம்(40000+2800)........42800
26ஆல் வகுக்க=42800/26=1646ரூபாய்.

   இந்த1646தான் ஒருநாள் சம்பளம்.

15நாள் சம்பளம்=1646×15=24690ரூபாய்

35ஆண்டுசர்வீசுக்கு=24690×35=864150ரூபாய் கிராஜூவிட்டியாகக் கிடைக்கும்.

சுருக்கமாகச்சொன்னால்

(Basic+DA)÷26×15×சர்வீஸ் செய்தஆண்டுகள்.இதுவே கிராஜூவிட்டி ஆகும்


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Vaasippu lyakkam Book List delivery tracking tnsed schools update செய்யும் வழிமுறைகள்

September 11, 2024 0

 
Vaasippu lyakkam Book List  delivery tracking tnsed schools update செய்யும் வழிமுறைகள்


💁‍♂️புத்தகங்களின் எண்ணிக்கையை தவறுதலாக பதிவிட்டிருந்தால் அதை EDIT செய்யும் வழிமுறை

https://youtu.be/qWOQ33NHodI


https://youtu.be/6Kfn9hCoi8Q?si=6uZDNkMb_l4QxfGB  


 TNSED SCHOOL APP NEW UPDATE  VASIPPU IYAKKAM


 வாசிப்பு இயக்கம் மூலம் | மாணவர்களின் நிலை | படித்த புத்தகம்/பிடித்த புத்தகம்  தேர்வு செய்யும் வழிமுறை


 வாசிப்பு இயக்கம் சார்பில் நமது பள்ளிக்கு வழங்கப்பட்ட (நுழை, நட, ஓடு, பற) என்ற பிரிவின் கீழ்...


NEW UPDATE 2024👇👇👇

https://youtu.be/qWOQ33NHodI


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் - ஆணை வெளியீடு.

September 11, 2024 0

 தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் - ஆணை வெளியிடப்படுகிறது பள்ளிக் கல்வித்துறை

GO RT NO.514, SE1(1) DEPT, DT. 10.9.24 

IMG_20240910_204936


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பள்ளி வளாகங்களில் அங்காடிகள் / சிற்றுண்டி கடைகள் இருந்தால் அகற்ற உத்தரவு.

September 11, 2024 0

 
கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய / நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளி வளாகங்களில் அங்காடிகள் / சிற்றுண்டி கடைகள் ( Snacks Shops ) , எழுதுபொருள் அங்காடிகள் ( Stationery Shops ) , போன்ற எந்த அங்காடிகளும் பள்ளி வளாகத்திற்குள் செயல்படக்கூடாது எனவும் செயல்பட்டால் உடன் அதனை அகற்றிட கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 மேலும் அடுத்த வேலை நாள் முதல் 11.09.2024 பள்ளிகளில் இது போன்ற ( பள்ளியால் நடத்தப்படும் அங்காடி உட்பட ) அங்காடிகள் செயல்படுவதாக தெரியவந்தால் தலைமையாசிரியர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஊராட்சி ஒன்றிய / நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

IMG-20240910-WA0008


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

September 10, 2024

IIT MADRAS-ல் புதிய வேலைவாய்ப்பு -மாதம் ரூ.21,000 சம்பளம்”..!! “கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன் “..!!

September 10, 2024 0

 

IIT MADRAS-ல் புதிய வேலைவாய்ப்பு -மாதம் ரூ.21,000 சம்பளம்”..!! “கல்வி  தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன் “..!!

INDIAN INSTITUTE OF TECHNOLOGY  MADRAS(IIT MADRAS) ஆனது PROJECT TECHNICIAN பணிக்கான காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IIT MADRAS காலிப்பணியிடங்கள்:

IIT MADRAS கல்வி நிறுவனத்திலுள்ள Project Technicianக்கான 4 காலிப் பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 25 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,000-ரூ.21,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து short listing/எழுத்து தேர்வு/திறன் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் IIT MADRAS இணையதளமான https://icandsr.iitm.ac.in/recruitment/. மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.09.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

OFFICIAL SITE

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group