பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது தேர்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
TNPSC Addendum - Download here
கிராம நிர்வாக அலுவலர் உள்பட காலியாகவுள்ள 6 ஆயிரத்து 244 குரூப் 4 பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 9-ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 16 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகவுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு துறைகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 6,244 காலிப்பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 247 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு நடைபெற்று இரண்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அதன் முடிவுகளை அடுத்த மாதம் வெளியிட அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், குரூப்-4 மூலம் நிரப்பப்படும் காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 480 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் 6,244 பணியிடங்களில் இருந்து 6,704 இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தேர்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.