Agri Info

Adding Green to your Life

September 25, 2024

Breaking News : காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு - DSE Proceedings

September 25, 2024 0

 06/10/2024 வரை காலாண்டு தேர்வு விடுமுறை :

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் துவக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து 07.10.2024 ( திங்கட் கிழமை ) அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது .

IMG-20240925-WA0009



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

September 24, 2024

பிரசவத்திற்கு பின் மூளை இப்படியெல்லாம் மாறுமா..? ஆய்வில் தெரிய வந்த உண்மை..!

September 24, 2024 0

 கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடல் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இது முக்கியமாக ஹார்மோன், இதயம், சுவாசம், செரிமானம், சிறுநீர் மற்றும் பல மாற்றங்களை உள்ளடக்கியது. ஆனால் கர்ப்ப காலத்தில் அல்லது அதற்குப் பிறகு ஒரு பெண்ணின் மூளையில் சரியாக என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது பற்றி புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கர்ப்பத்தில் மூளையில் ஏற்படும் விளைவுகள்:

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்தில், ஒரு பெண்ணின் உடலைப் போலவே மூளையும் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்று புதிய ஆராய்ச்சி காட்டுகிறது. ஆய்வில், கருத்தரிப்பதற்கு முன்பிருந்து கர்ப்பமாகி 9 மாதங்கள் வரை மற்றும் கரு பிறந்து இரண்டு ஆண்டுகள் வரை அந்தந்த பெண்களின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டது. அவற்றில் சில தற்காலிகமானவை, மற்றவை நீண்ட காலம் நீடிக்கும். கர்ப்பம் முழுவதும் மனித மூளை இவ்வளவு விரிவாக வரைபடமாக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். கர்ப்பகால ஹார்மோன்களான, எஸ்ட்ராடியோல் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகியவற்றின் அளவு அதிகரிப்பதால் இந்த மாற்றங்கள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மூளையின் 40% கிரே மேட்டர். எனவே 60% வைட் மேட்டர். இவை இரண்டும் மூளை மற்றும் ஸ்பைனல் கார்டின் முக்கிய பாகங்கள் ஆகும்.

News18

கிரே மேட்டரால் ஏற்படும் மாற்றங்கள் மனிதனை எவ்வாறு பாதிக்கின்றன?
இந்த மாற்றங்கள் குழந்தைகள் பருவமடையும் போது ஏற்படும் மாற்றங்களைப் போலவே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கர்ப்பம் இதேபோன்ற மாற்றங்களை தூண்டுகிறது. இது தாய்மையின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மூளையை மாற்றியமைக்கிறது. கர்ப்ப காலத்தில் மூளையில் உள்ள கிரே மேட்டர் சுமார் 4 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் பிரசவத்திற்குப் பிறகு, இந்த குறைவு அதிகரிக்கப்படும். தாய்மார்கள் தங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகளுடன் வலுவான உணர்ச்சிப் பிணைப்பை உருவாக்குவதற்கும், அவர்களின் குழந்தையின் தேவைகளுக்கு இணங்குவதற்கும் இந்த மாற்றம் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

வைட் மேட்டரால் ஏற்படும் மாற்றங்கள்:

மூளையில் உள்ள வைட் மேட்டர் என்பது நரம்பு மண்டலத்திலிருந்து செய்திகளை அனுப்புவது, எடுத்துச் செல்வது மற்றும் செயலாக்குவது. வைட் மேட்டரின் செயல்பாடானது, மூளையின் பல்வேறு பகுதிகளுக்கு இடையேயான தகவல்தொடர்பு, மூளையில் உள்ள கிரே மேட்டர் மற்றும் உங்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கு இடையேயான தொடர்பை ஏற்படுத்துவதாகும். டாக்டர். க்ராஸ்டிலின் கர்ப்பத்தின் முதல் 6 மாதங்களில், அவரது மூளையின் வெவ்வேறு பகுதிகளில் வைட் மேட்டர் அதிகமாக இருந்தது. குழந்தை பிறந்த உடனேயே மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பியது.

“மம்மி பிரைன்” என்றால் என்ன?

மம்மி பிரைன் என்பது பல தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு அனுபவிக்கும் மாற்றங்கள் மற்றும் நினைவாற்றல் குறைபாடுகளை குறிக்கிறது. கர்ப்பம் மற்றும் பிரசவத்தின்போது ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் ஒழுங்கற்ற தூக்க முறைகளைக் கொண்டுள்ளதால் அவர்களைப் பராமரிக்கும் தேவைகள் ஆகியவற்றுடன் உடல் மற்றும் உணர்ச்சி மாற்றங்களின் கலவையால் அம்மா மூளை பெரும்பாலும் பாதிக்கப்படுகிறது. ஆய்வின் போது நான் வித்தியாசமாக உணரவில்லை என்று ஆய்வில் பங்கேற்ற க்ராஸ்டில் என்ற பெண் குறிப்பிட்டுள்ளார்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

காயமடைந்த பின் ’டிடி தடுப்பூசி’ போடுவது ஏன் அவசியம்..? இதன் செயல் என்ன..? விளக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்..

September 24, 2024 0

 

உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டவுடன் TT Injection போட மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழக்கம். ஆனால் பலருக்கும் இதை ஏன் போடுகிறோம், எதற்கு இதை அவசியம் போட வேண்டும் என்பது தெரியாது. இதற்காகவே அறுவை சிகிச்சை மருத்துவர் கீர்த்தனா பிரியதர்ஷினி TT Injection குறித்த தகவல்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

டிடி தடுப்பூசி என்றால் என்ன..?

டிடி தடுப்பூசி என்பது ‘Tetanus toxoid vaccine’ என்று அழைக்கப்படுகிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேலையை செய்கிறது. அதாவது டெட்டனஸ் நோய் தொற்றை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா மண் உட்பட சுற்றுச்சூழலில் இருக்கும். அவை வெட்டுக்காயங்கள், திறந்த காயங்கள் மூலம் உடலுக்கு எளிதில் நுழையலாம்.

பற்களில் ஏற்படும் நோய் தொற்றுகள், அறுவை சிகிச்சை செயல்முறைகள், எலும்பு முறிவு காயங்கள், நரம்பு வழியாக போதைப் பொருள் பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலமும் டெட்டனஸ் நோய் தொற்று பரவலாம். எனவே இந்த டெட்டனஸ் நோய் தொற்றை தடுக்கவே டிடி தடுப்பூசி போடப்படுகிறது.


யாருக்கெல்லாம் தேவைப்படாது..?

1 முதல் 10 வயது குழந்தைகளுக்கு அட்டவனைப்படி தடுப்பூசி போடப்படும் என்பதால் அவர்களுக்கு டிடி தடுப்பூசி தேவைப்படாது.

ஏற்கெனவே டிடி தடுப்பூசி போட்டவர்களுக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி போதுமானவரை இருக்கும் என்பதால் அடுத்த 5 வருடங்களுக்கு டிடி தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை. அந்த 5 வருடத்திற்குள் காயம் ஏற்பட்டாலும் தடுப்பூசி போட வேண்டாம்.

பக்கவிளவுகள் வருமா..?

டிடி தடுப்பூசியை அடிக்கடி போடக்கூடாது. அவ்வாறு போடுவதால் serum sickness syndrome என்கிற பாதிப்பை உண்டாக்கலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான சென்னை ஐஐடியின் ஆன்லைன் பயிற்சி: 11,000 மாணவர்கள் பதிவு

September 24, 2024 0

 1315652

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்நெறி அனுபவத்தை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 8 வார பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இதுவரை 500 பள்ளிகளைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பதிவு செய்துள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில்நெறி குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் ‘ஐஐடிஎம் பள்ளி இணைப்புத் திட்ட’த்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ‘தரவு அறிவியல்- செயற்கைத் தொழில்நுட்பம்’, ‘எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்’ ஆகிய இரு சான்றிதழ் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன.


பள்ளி மாணவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட உள்ளடக்கங்களுடன், சென்னை ஐஐடி பேராசிரியர்களைக் கொண்டு இதற்கான பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கற்பிக்கப்படும் இப்படிப்புகளின் மூலம் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்நெறி அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.


இந்தத் துறைகளைப் பற்றிய நுண்ணறிவை வழங்கும் வகையில் மாணவர்களுக்கான அறிமுகப் படிப்புகள் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், அவர்களின் உயர்கல்வி, தொழில்நெறி ஆகியவை குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து முடிவெடுக்கவும் உதவிகரமாக இருக்கும்.


அடுத்த தொகுதி 21 அக்டோபர் 2024 அன்று தொடங்குவதையொட்டி, அதற்கான விண்ணப்பப் பதிவுகள் செப்டம்பர் 16-ந் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. சென்னை ஐஐடி உடன் இணைந்து செயல்பட விரும்பும் பள்ளிகள் பின்வரும் இணைப்பில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்… https://school-connect.study.iitm.ac.in/


இப்படிப்பிற்கான காலஅளவு 8 வாரங்களாகும். இந்த முன்முயற்சிக்குப் பள்ளிகள் தரப்பில் இருந்து கணிசமான அளவு வரவேற்புக் கிடைத்துள்ளது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் சென்னை ஐஐடி உடன் இணைந்து செயல்பட முன்வந்திருக்கின்றன. முதல் தொகுப்பில் நாடு முழுவதும் இருந்து ஏறத்தாழ 11,000 மாணவ-மாணவிகள் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களை இணைத்துக் கொண்டுள்ள பள்ளிகளைச் சேர்ந்த 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இந்த சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Tablet மற்றும் Smart board களில் பயன்படுத்த எளிதான மற்றும் மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் தானே கற்றல் செயலி ( Apps)

September 24, 2024 0

 
அனைவருக்கும் வணக்கம்.

பின்வரும் இணைப்பில் உள்ள 4 செயலிகளும் tablet மற்றும் Smart board களில் பயன்படுத்த எளிதான மற்றும் மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் தானே கற்றல் செயல்பாடுகளை உள்ளடக்கியவை ஆகும்.


எனவே, தங்கள் பள்ளிகளில் பயன்படுத்தும் tab மற்றும் Smartboard களில் இச் செயலிகளை நிறுவி பயன்படுத்திடக் கேட்டுக் கொள்கிறேன்.


அனைவரும் பயன்படுத்திப் பயன்பெறும் வகையில் இணைப்புகள் கீழே கொடுத்துள்ளேன். நன்றி


 https://play.google.com/store/apps/details?id=com.gotowisdom.pschool


 https://play.google.com/store/apps/details?id=app.pschool.tamil


 https://play.google.com/store/apps/details?id=nithra.tamil.word.game.solliadi


https://play.google.com/store/apps/details?id=com.rvappstudios.math.games.kids.addition.subtraction.multiplication.division


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

1400 தற்காலிகப் BT பணியிடங்களுக்கு 30.11.2024 வரை மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!

September 24, 2024 0

 IMG_20240924_193550

1400 தற்காலிகப் பணியிடங்களுக்கு [1200 BT + 200 PET - G.O.Ms.No.64 Dated: 15.03.2010 - RMSA, KH Head] 30.11.2024 வரை மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!

1400 Posts Pay Order - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குத் திங்கள்தோறும் உதவித் தொகை திட்டம் - Press News

September 24, 2024 0
IMG_20240924_225308

செய்தி வெளியீடு எண் : 1513

 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குத் திங்கள்தோறும் உதவித் தொகை திட்டம்

Press News - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

September 23, 2024

E-SR Entry - Doubt Clarification

September 23, 2024 0

 


 நண்பர்களே வணக்கம் 🙏

காலாண்டுத் தேர்வு காலம்...

வழக்கமான பள்ளி பாடவேளை / வகுப்புகளில் இருந்து  மாற்றம்...

நேரம் கிடைக்கும் போது தங்களின் பணிப் பதிவேட்டில் பதிவுகளை சரி பார்த்துக் கொள்ளலாம்...

 E-Sr முழுமையாக நடைமுறைக்கு வரும் வரை physical SR ஒரு முக்கிய ஆவணம் 👍

பல தலைமை ஆசிரியர்கள் / ஆசிரிய நண்பர்கள் SR entry சார்ந்து பல சந்தேகங்கள்...

விடுபட்ட பதிவுகள்...

வாரிசு நியமனம் இல்லாமை...

முறையாக பதிவுகள் இல்லாமல்....

இன்னும் பல..... வினாக்களுக்கு....

பணிப் பதிவேடுகள்
 FR 74  (iv) படி..


1) பணியாளர்கள் அவர்தம் பணிப் பதிவேடுகள் பார்க்கும் உரிமை உண்டு
(Xerox copy எடுத்து வைத்துக் கொள்ளலாம்)

2) எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து த.ஆ இடம் பணிப் பதிவேடுகள் சரி பார்க்க பெற்றுக் கொள்ளலாம்.

3) த.ஆ ... பணிப் பதிவேடுகளின் இயக்க பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும்.

4) முதல் பக்கம்..
GPF/CPS/TPF No... எழுதுதல்... புகைப்படம்...
இதர விபரங்கள்...
பெயர்...
பிறந்த தேதி....
சொந்த ஊர்/ பிறந்த ஊர்
இரண்டாம் பக்கம்
முதலில் பணியேற்ற விவரம்...
பணியாளர் கையொப்பம்...
தலைமை ஆசிரியர்/ அலுவலகத் தலைவர் கையொப்பம் ....

5) கல்வி தகுதிகள்...
Degree certificate... பதிவு மற்றும்
 உண்மைத் தன்மை பெறப்பட்ட விவரங்கள்...

6) பணியில் சேர்ந்த பிறகு... உயர் கல்வி பயில முன் அனுமதி விவரம்

7) பணி நியமனம் ...
பணி நியமன ஊதியம்...
 பணிவரன் முறை...
 தகுதி காண் பருவம்...
பதிவுகள்...

8) ஆண்டு ஊதிய உயர்வுகள்...

9) விடுப்புகள் ... ML, EL.. UEL PA, LLP with MC, LLP with out MC... Etc
( LLP alone, deduct EL)

10) மாறுதல் இன் போது பணி விடுப்பு...
பணி ஏற்பு....
அனுபவிக்காத பணி ஏற்பிடைக்காலம் நாட்கள் EL வரவு ( ஆறு மாதத்திற்குள்)

11) பதவி உயர்வு..
பதவி உயர்வு தற்காலிக துறப்பு...

12) பதவி உயர்வில் பணிவரன் முறை ...
சில நிகழ்வுகளில் (பணித் தொகுதி மாறினால்) பதவி உயர்வில் தகுதி காண் பருவம்...

13) துறைத் தேர்வு தேர்ச்சி

14) தேர்வு நிலை/ சிறப்பு நிலை ஆணை..
 தேர்வு நிலை/ சிறப்பு நிலை ஊதிய நிர்ணயம்
( இரண்டு பதிவு...
 a) தற்போது DEO (sec) order மட்டும் வழங்குவார்...
b) சார்ந்த தலைமை ஆசிரியர் தான் ஊதிய நிர்ணயம் செய்து ஆணை வழங்குவார்

( சிலர் தலைமை ஆசிரியர் ஊதிய நிர்ணயம் செய்த விவரத்தை பதிவு செய்ய மறந்து விடுகிறார்கள்)

15) போராட்ட காலம் பதிவு... ஊதிய பிடித்தம் விவரங்கள்..
 போராட்ட காலம் முறைப்படுத்தல்...
மீள ஊதியம் பெற்ற விவரம்..
போராட்ட காலம் பணிக்காலமாக முறைப்படுத்தல்...

போராட்டத்தில் கலந்து கொள்ள வில்லை எனில்
அன்னார் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் 2002-03,
2017-2019 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொள்ள வில்லை என சான்று...

16) பணிக் காலம் சரி பார்த்தல்...

17) குடும்ப விவரங்கள் பதிவு...

18) பயிற்சிகள்
பாராட்டுச் சான்றுகள்

19) ஊதியக் குழு நிர்ணயம் 2009 ..

தர ஊதியம் மாற்றம் 2011

சிறப்பு நிலை தேர்வு நிலை மாற்றம் 2013 ...

 ஊதியக் குழு 2016 (10/2017) ஊதிய நிர்ணயம்

20) தண்டனைகள்
17 அ 17 ஆ 17 உ ...
ஊதிய உயர்வு நிறுத்தம்
திரண்ட பலன் உடன்
திரண்ட பலன் இன்றி...

இவை ☝️ வழக்கமான பதிவுகள் ( small recall)

இந்த பதிவின் முக்கிய நோக்கம் ☺️

21) SPF 84 பிடித்தம் ஆரம்பம்... 148 தவணை நிறைவு...

 SPF 2000 பிடித்தம்
50/70 விவரம்
(முன்பெல்லாம் SPF 2000 பிடித்தம் கணக்கீடு இருக்கும் உ.ம் 70 (1/359) ...
அதாவது பணியில் இருந்து ஓய்வு பெற இருக்கும் மாதத்திற்கு முன் மாதத்தில் SPF 2k பிடித்தம் நிறைவு செய்யப்படும்
May 2038 இல் ஓய்வு எனில் April 2038 last due) தற்போது யாரும் கணக்கீடு செய்வதாக தெரியவில்லை...🤪...

பள்ளி ஆவணங்கள்/ aquittance அடிப்படையில் எந்த மாதம் முதல் பிடித்தம் என பதிவு செய்யலாம்...
(இன்றைய தேதியில் விடுபட்ட பதிவு என பதிவு செய்யலாம்)
 SPF 84 எனில் 20/- எந்த மாதத்தில் 148 தவணைகள் நிறைவு என்ற விவரம் காட்டாயம் இருக்க வேண்டும்...

22) FBF/FSF தற்போது 110 பிடித்தம் செய்யப்படுகிறது...
பணியில் சேர்ந்தது முதல் பிடித்தம் ...
முதலில் பிடித்தம் பற்றிய விவரம் இல்லாவிட்டாலும் ...

தற்போது 1/9/2021 முதல் ₹110 /- பிடித்தம் செய்யப்படுகிறது என்ற விவரம் இருக்க வேண்டும்...

(இது term insurance போல் தான்..
பணியில் இருக்கும் போது மரணம் எனில் மட்டும் பலன்...)

23) NHIS 2021 ...
தற்போது 295+5 பிடித்தம் விவரம்...
( மருத்துவ சிகிச்சைக்கு NHIS card/ e Card
இரண்டும் இல்லை எனில்
annexure vi + three months pay slip தான் தேவை) அதனால் NHIS deduction SR entry முக்கியத்துவம் பெறுவதில்லை....

24) வாரிசு நியமனம் ...
இதை அனைத்து பணியாளர்களும் கட்டாயம் செய்திடல் வேண்டும்...
ஏற்கனவே பதிவு எனில் updation செய்து கொள்ளலாம்...

 ஐந்து இனங்கள் Nominee.... for

a) GPF/CPS
b) SPF 84/ SPF 2000
c) FBF/FSF
d) DCRG/ Pension (GPF)
e) EL/UEL

SR இல் இதற்கென கூடுதல் தாள்கள் தரப்பட்டு இருக்கும்...

 Nominee change/ மாற்றம் தேவை எனில் முந்தைய பதிவை அடிக்க வேண்டாம்...
தற்போதைய தேதியில் பதிவு செய்யும் போது
 முந்தைய பதிவு தானாக காலாவதியாகிவிடும்...

25) 2017-18 இல் IFHRMS E-SR பணிக்காக நாம் எல்லோரும் update செய்தோம்...
இருப்பினும் தற்போது வரை nominee/வாரிசுதாரர் முறையாக பதிவுகள் இல்லாமல் எதிர்பாராத நிகழ்வு ஏற்படும் போது...

பணியாளர் குடும்பத்திற்கு த.ஆ உரிய பணப் பலன்களை பெற்றுத் தர தயாராக இருந்தாலும்...

முறையான பதிவுகள்/ வாரிசு நியமனம் இல்லாமையால்
 தேவையற்ற சிரமங்கள் /
காலதாமதங்கள் / நிர்வாக சிக்கல்கள் ஏற்படுகிறது 😞

 பள்ளி/மாணவர் நலன் சார்ந்து நாம் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தாலும்...

 நமக்கான பணியையும் நேரம் கிடைக்கும் போது செய்து கொள்வோம் ☺️...

 சிறு சிறு திட்டமிடல்
வளமான / மகிழ்ச்சியான தருணங்கள்...

SR abstract, (school audit - useful)
SR entry single page,
SR entry model govt letter ( eng, tam)
SPF 2K
FBF/FSF latest GO...
44 pages...
 Single PDF attached
Kindly check it...

E-SR Entry - Doubt Clarification - Download Here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

உதவித் தலைமையாசிரியர் பணி நிலை - Assistant HM Appointment - All GOs & Special Pay Proceedings

September 23, 2024 0

 AHM Appointment All GOs & Special Pay Proceedings 

* உதவி தலைமை ஆசிரியர் பணி நிலை





750 மாணவர்களுக்கு மேல் இருக்கும் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியர் சிறப்புப்படிபெறலாம்.பள்ளியில்6-12வகுப்புமொத்தமாணவர் எண்ணிக்கையைத் தான் கணக்கில் கொள்ளுதல்.



* உதவி தலைமை ஆசிரியர் GO COLLECTION - Download Here


* உதவி தலைமை ஆசிரியர் SPL PAY GO செயல்முறைகள் - Download Here


* உதவி தலைமை ஆசிரியர்  நியமனம் குறித்து வேலூர் மாவட்ட முதன்மை  கல்வி அலுவலர் அவர்கள் செயல்முறைகள் [பார்வைக்காக] - Download Here




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group