தமிழ்நாடு மாநில இடைநிலை மற்றும் இடைநிலைக் கல்வி வாரியம் அசல் சான்றிதழ்களை இழக்கும் மாணவர்களுக்கு நகல் சான்றிதழ்களை திரும்ப பெறுவதற்க்கான வழிமுறைகள் முழு விவரம்
நகல் சான்றிதழைத் தேடும் விண்ணப்பதாரர்கள். கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, தேவையான விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு நகல் சான்றிதழ்களைப் பெறுங்கள்.
விண்ணப்பதாரர்கள் dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேவையான விவரங்களுடன் செயல்முறை மற்றும் விண்ணப்பப் படிவத்தைப் பயன்படுத்தலாம்.
dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, தாசில்தாரிடம் இருந்து உறுதிமொழியைப் பெற்று, சம்பந்தப்பட்ட துறையை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்கவும்.
தமிழ்நாட்டில் நகல் மதிப்பெண் பட்டயப் படிப்பை நான் எப்படிப் பெறுவது? அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அறிவிப்புப் படிவத்தைப் பெற்று, சம்பந்தப்பட்ட துறையிடம் சமர்ப்பிக்கவும்
நகல் சான்றிதழுக்கான நடைமுறை என்ன:-
முதல் படி:-
முதலில் உங்கள் அருகில் உள்ள இ சேவை மையம் சென்று ஆன்லைனில் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டது என ஆன்லைனில் புகார் அளித்து lost certificate பெற வேண்டும்
அல்லது மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்கலாம் Online மூலமாக சான்றிதழ்கள் தொலைந்தது என்று குறிப்பிட்டு புகார் பதிவு செய்து ரசீது பெற வேண்டும்
இரண்டாம் படி:-
அடுத்ததாக ஆன்லைனில் பெறப்பட்ட புகார் பதிவு செய்து ரசீதுடன் நீங்கள் உங்கள் பகுதி தாலுக்கா அலுவலகம் சென்று சான்றிதழ் தொலைந்து குறித்து புகார் அளிக்கவேண்டும்.
மேலும் பள்ளி தலைமை ஆசிரியரை நேரில் அனுகி கீழ் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவேண்டும்
அதன்பின்பு கிராம நிர்வாக அலுவலர் விசாரித்து அதன் அறிக்கையை R.I- சரிபார்த்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்
அதன்பின்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் தன் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்று சான்றிதழ் போன்றவற்றிற்காக வரைவோலை (DD)எடுக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் நகல் சான்றிதழுக்கு ரூ.505/-
Click Here to Download - நகல் சான்றிதழுக்கான நடைமுறை - Pdf
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news