Agri Info

Adding Green to your Life

September 27, 2024

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை. வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

September 27, 2024 0

 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) திட்ட உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.10.2024 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

Senior Project Associate

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Master’s Degree in Natural or Agricultural Sciences/ M.V.Sc. படித்திருக்க வேண்டும். மேலும் 4 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 42,000 + HRA

Laboratory Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.Sc./ Graduate Degree in Biotechnology / Microbiology/ Life sciences /Agricultural Sciences  படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 20,000 + HRA

வயதுத் தகுதி: 50 வயதிற்குள் இருக்க வேண்டும். .பி.சி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tanuvas.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்

முகவரி: Poultry Disease Diagnosis and Surveillance Laboratory, Veterinary College and Research Institute Campus, Namakkal – 637 002

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 07.10.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tanuvas.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

 



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || தேர்வு எழுத தேவையில்லை!

September 27, 2024 0

 SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || தேர்வு எழுத தேவையில்லை!

Junior Architect பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Sports Authority of India (SAI) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

SAI காலிப்பணியிடங்கள்:

Junior Architect பணிக்கு காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Architect கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree / Master’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

SAI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Architect ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

SAI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Oil India நிறுவனத்தில் Domain Expert காலிப்பணியிடங்கள் – நாள் ஒன்றுக்கு ரூ.10,000/- சம்பளம் || முழு விவரங்களுடன்!

September 27, 2024 0

 Oil India நிறுவனத்தில் Domain Expert காலிப்பணியிடங்கள் – நாள் ஒன்றுக்கு ரூ.10,000/- சம்பளம் || முழு விவரங்களுடன்!

Oil India Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Domain Expert பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Oil India காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Domain Expert பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Domain Expert தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 25 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டு ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

Oil India வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Domain Expert ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.8,000/- முதல் ரூ.10,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oil India தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து domainexpert_bd2024@oilindia.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள். 18.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Capgemini நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

September 27, 2024 0

 Capgemini நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

தனியார் நிறுவனமான கேப்ஜெமினி டெக்னாலஜி சர்வீசஸ் இந்தியா லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் CFD Engineer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Capgemini காலிப்பணியிடங்கள்:

CFD Engineer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CFD Engineer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இன்ஜினியரிங் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 4 ஆண்டுகள் முன்னனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Capgemini வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


CFD Engineer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Capgemini தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

SA Marks - தொகுத்தறி மதிப்பீட்டு மதிப்பெண்களை TNSED Appல் பதிவேற்றம் செய்தல் - கல்வி துறை முக்கிய அறிவிப்பு

September 27, 2024 0

 

தற்போது நடைபெற்று வரும் முதல் பருவ தேர்வின் தொகுத்தறி மதிப்பீட்டு மதிப்பெண்களை TNSED Appல் பதிவேற்றம் செய்ய தற்போது பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது 



முறையான அறிவிப்பு கல்வி துறை மூலம் வெளியிட்ட பின்பு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யவும்  எனவே ஆசிரியர்கள் யாரும் தற்போது தொகுத்தறி மதிப்பீட்டினை டிஎன்எஸ்சி டி ஆப்பிள் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது இதற்கான அறிவிப்பினை தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது





🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

8th,10th Science Quarterly exam 2024 Questions & Answer key

September 27, 2024 0

 
Quarterly exam 2024

10th Science Quarterly exam 2024 Questions & Full Answer key - Download here

Thanks and Regards 
M.Abbas Manthiri 
B.T.Assistant
 Ilahi oriental Arabic high school Cumbum Theni district

10th Science Quarterly exam 2024 Questions & Answer key - Download here

N. R. Rizwan Ahmed, Mazharul Uloom Hr. Sec. School, Ambur.

8th,10th Science Quarterly exam 2024 Questions & Answer key.pdf

Download here


This is 8th ,10th Science Quarterly Exam 2024 theni,thiruvallur,nagai, Kallakurichi( same Qns) districts Original Questions with one Marks Answer Key for  TM and 


 Thanks and Regards 
M.Abbas Manthiri 
B.T.Assistant
 Ilahi oriental Arabic high school Cumbum Theni district


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் மாநில அலுவலர்கள் ஆய்வு செய்யக்கூடிய தலைப்புகள்

September 27, 2024 0

 தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் மாநில அலுவலர்கள் ஆய்வு   செய்யக்கூடிய தலைப்புகள்

IMG-20240927-WA0000_wm


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

12th Bio - Zoology - Quarterly Exam 2024 - Question & Answer key

September 27, 2024 0

02.10.2024 - கிராமசபைக் கூட்டங்களில் ஆசிரியர்கள் கலந்துகொள்ள வேண்டும் - Proceedings

September 27, 2024 0

 

IMG_20240927_184518

பள்ளி சாரா  கல்வி இயக்ககம் , இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி , " புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 " - ஆம் கல்வியாண்டிற்குள் " முழு எழுத்தறிவு பெற்ற நகர / கிராம பஞ்சாயத்து " என்கிற இலக்கை அடையும் வகையில் வருகின்ற 02.10.2024 ( அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் ) அன்று அனைத்து நகர மற்றும் கிராம பஞ்சாயத்துகளிலும் நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டங்களில் இணைப்பில் உள்ள தீர்மானத்தை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உரிய அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 இணைப்பு : Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

குழந்தைகளை மதிப்பீடு செய்வதைக் கற்றுத்தரும் அமைச்சர்:

September 27, 2024 0

 

IMG-20240924-WA0008

                   நமது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தொடர்ச்சியாக செல்லும் இடங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் குழந்தைகளின் கற்றல் அடைவைச் சோதித்து வருகிறார். உண்மையில் குழந்தைகளிடம் அன்புமிக்க அன்பில் மகேஷ் என்று சொல்லும் வகையில் உரையாடுகிறார். பள்ளிக்குள் செல்லும்போதும்  குழந்தைகளிடம் உரையாடும்போதும் பெரும் கூட்டத்தோடு செல்வதையும் பார்க்க முடிவதில்லை. இதனால் குழந்தைகள் அச்சப்படாமல் இயல்பாகப் பதில் சொல்கிறார்கள். 


குழந்தைகள் அச்சப்படாத முறையில் குழந்தைகளை மதிப்பீடு செய்கிறார் என்று சொல்லலாம். இதுதான் மதிப்பீடு செய்யும் முறையின் அடிப்படை இலக்கணம். 


எந்தப் பள்ளியிலும் எந்த ஆசிரியரையும் அமைச்சர் அவர்கள் வசைபாடுவதைப் பார்க்க முடிவதில்லை. அதற்காக பள்ளிகளில் எந்தக் குறையும் இல்லை என்பது பொருள் அல்ல. குறைகளும் இருக்கலாம். குறைகளை மட்டும் வெளிச்சமிட்டுக் காட்டுவது சரியான ஆய்வு முறை அல்ல. குறைகளையும் உரையாடல் மூலம் அரசாளுகை நிர்வாக முறைகள் மூலம் சரி செய்ய முயற்சிப்பதே பள்ளிகளுக்குள் ஆய்வுக்குச் செல்வோரின் சரியான அணுகு முறையாக இருக்க முடியும்.


தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பள்ளியை ஆய்வு செய்த போது அவர் நடந்து கொண்ட முறை ஆசிரியர்களிடம் கோபத்தை உருவாக்கியுள்ளது. ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகள், மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் இரண்டிலும் நிறைகளும் இருக்கும் குறைகளும் இருக்கும். ஒரு ஆய்வாளர் நிறைகளையும் தேட வேண்டும். நிறைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். 


குறைகள் இல்லாமல் இருக்காது. ஆனால் குறைகளைச் சூட்டி கட்டுவதற்கு சரியான வழிமுறையைப் பின்பற்ற வேண்டும்.


ஒரு மாணவரின் கற்றல் செயல்பாட்டில் குறைகள் இருந்ததற்காகக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியரை வேலையை விட்டுச் செல்லும்படி மாவட்ட ஆட்சியர் கூறியது முறையல்ல. இது குறையை சரி செய்வதற்கான தீர்வல்ல.


மாணவர்கள், ஊடகத்தினர் முன்னிலையில் இப்படிப் பேசியது மாவட்ட ஆட்சியருக்கான பணி விதிகளுக்கு உட்பட்ட நடத்தை முறையும் அல்ல, அதிகார முறையும் அல்ல. 


ஆசிரியர்களைப் பணி அமர்த்துவதற்கான, பணிகளைக் கண்காணிப்பதற்கான நிர்வாக அமைப்புதான் பணி விதிகளின்படி குறைகளுக்கான தீர்வுகளைத் தீர்மானிக்க வேண்டும். 


ஒரு குழந்தையின் கற்றல் ஆர்வத்தை, கற்றல் திறனை, கற்றல் செயல்பாட்டை பல காரணிகள் தீர்மானிக்கின்றன. பள்ளிக்கு வெளியில் உள்ள சூழல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தையின் கல்வியில் குடும்பத்தின் பங்கும் முதன்மையானது.  


மரபுநிலையும் சூழ்நிலையும் ஒரு குழந்தையின் நடத்தை மற்றும் கற்றலைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிப்பதை  கல்வி உளவியல் வலியுறுத்துகிறது. பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததும் இருக்கின்ற ஆசிரியர்களும் முழுமையாக கற்றல் கற்பித்தலில் கவனம் செலுத்த முடியாமையும்  இன்றைய கல்வி நிர்வாகத்தின் பெரும் குறை என்று சொல்லலாம். பல காரணிகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.


அரசுப் பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும் உயர் அலுவலர்கள் தற்போது நடந்துள்ள நிகழ்விலிருந்து புதிய அனுபவப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.  குறைகளுக்கான காரணங்களை ஆசிரியரிடமும் மாணவர்களிடமும் உரையாடல் மூலம் அறிந்து சரி செய்வதற்கான வழியைச் சொல்ல வேண்டும். 


குறைகளுக்கான காரணம் நடவடிக்கைக்கு உரிய தவறாக இருந்தால் ஆசிரியரின் மீது உரிய நடவடிக்கையை முறைப்படி எடுக்கலாம். தவறு இருந்தாலும் நடவடிக்கையே எடுக்கக் கூடாது என்று யாரும் வாதிட முடியாது. அது அறமும் அல்ல. ஒரு ஆசிரியரின் தவறினால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. 


அதே சமயத்தில், 


அதிகாரம் என்பது தன்னைவிட அதிகாரம் குறைவான பதவியில் இருப்பவர்களை வசைபாடும் உரிமையல்ல, இழிவு செய்யும் உரிமையல்ல என்பதை எல்லா ஆய்வு அலுவலர்களும் புரிந்துகொண்டு செயல்படுவது மட்டுமே நன்மையை விளைவிக்கும்.


மாவட்ட ஆட்சியர் போன்ற அதிகாரம் மிக்க பதவிகளில் இருப்பவர்கள் ஏதோ தங்களுடைய தனித்திறன்களால் பதவியை அடைந்து விட்டதாகக் கருதக்கூடாது. அதிகாரம் குறைவான பதவியில் இருப்பவர்கள் அதிகாரமிக்க பதவிக்கு தகுதியும் திறமையும் இல்லாதவர்கள் என்று கருதக்கூடாது. ஒரு சிலருக்கு கிடைத்த வாய்ப்புகள் சூழல்கள் மற்றவர்களுக்கு வாய்க்கப் பெறவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


"கல்வித்துறையில் அதிகாரி என்ற சொல்லே இருக்கக் கூடாது" என்று மூத்த கல்விச் சிந்தனையாளர் ச.சீ. ராஜகோபாலன் அவர்கள், ஆசிரியர் உமாமகேஸ்வரி அவர்களின் தற்காலிகப் பணி நீக்க நடவடிக்கையின் போது குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. 


ஒரு மாணவரின் கற்றல் செயல்பாட்டில் குறை இருந்தால் ஆசிரியரை  "வேலையை விட்டுவிட்டுப் போ" என்று ஒரு மாவட்ட ஆட்சியரால் சொல்ல முடிகிறது. ஆனால்  கற்றல் செயல்பாட்டில் ஒரு மாணவரிடம் குறை இருந்தால் "பள்ளியை விட்டுப் போய்விடு" என்று ஆசிரியர்கள் சொல்வதில்லை. 


அது கல்வியின் அறமும் இல்லை. உண்மையில் கல்வி கற்க முடியாத சூழலில் வாழ்பவர்கள் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் ஆய்வு அலுவலர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, மாவட்ட ஆட்சியர்கள் நம்முடைய கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடம் பள்ளி ஆய்வைப் பற்றிப் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

September 26, 2024