Agri Info

Adding Green to your Life

October 3, 2024

NABARD-ல் புதிய வேலைவாய்ப்பு 2024 – 100+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

October 03, 2024 0

 

NABARD-ல் புதிய வேலைவாய்ப்பு 2024 – 100+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

NABARD ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Office Attendant பணிக்கென காலியாக உள்ள 108 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Office Attendant பணிக்கென காலியாக உள்ள 108 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Diploma தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? IIT Madras-ல் ரூ.50,000/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு!

October 03, 2024 0

 Diploma தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? IIT Madras-ல் ரூ.50,000/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு!

Project Associate, Junior Engineer, Technician மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை IIT Madras ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 15 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

IIT Madras காலிப்பணியிடங்கள்:

Project Associate, Junior Engineer, Technician மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 15 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / Diploma / ITI / M.Sc / ME / M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIT Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.10.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

October 2, 2024

UDISE+ வேறு பள்ளியிலிருந்து நமது பள்ளிக்கு வந்த ஆசிரியரை IMPORT STAFF Option-ஐ பயன்படுத்தி Admit செய்தல்

October 02, 2024 0

 



UDISE PLUS - IMPORT STAFF

➡️பணி மாறுதல்/ பதவி உயர்வு மூலம் வேறு பள்ளியிலிருந்து நமது பள்ளிக்கு வந்த ஆசிரியரை IMPORT STAFF Option-ஐ பயன்படுத்தி UDISE PLUS PORTAL-லில் Admit செய்தல்...


*♻️IMPORT STAFF செய்யும்போது கவனிக்க வேண்டியவை*


▪️ஆசிரியரின் National Code தெரிந்திருக்க வேண்டும்.


➡️அனைத்து ஆசிரியரகளுக்கும் National Code generate செய்யப்பட்டுள்ளது..


▪️National code கண்டறிய Aadhar எண்ணை தற்போது பயன்படுத்த வேண்டாம்..


▪️ஆதார் எண்ணை பயன்படுத்தினால் No record found என வரும்..



▪️ஆசிரியர்களின் ஆதார் எண் verification process இன்னும் complete ஆகவில்லை..


▪️View Dropbox staff option-ஐ பயன்படுத்தி ஆசிரியர்களின் National Code-ஐ அறிந்து கொள்ளலாம்..


▪️View Dropbox staff சென்று ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியின் dise no  அல்லது மாவட்டம், ஒன்றியம், பணிபுரிந்த பள்ளியின் விவரங்களை பதிவு செய்து National code- ஐ கண்டறியலாம்...


➡️புதிதாக import செய்த ஆசிரியர்களுக்கு general profile, appointment details, training details update செய்ய வேண்டும்..



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

School Working & Holidays List 2024 - 2025 - Single Page (New)

October 02, 2024 0

 

2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி - School Academic & Training Calendar  - Single Page



தமிழக பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள  புதிய நாட்காட்டியின் படி  மாதவாரியான வேலை நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறைகள் மற்றும் பிற விடுமுறைகள்  ஆகியவை தொகுத்து  ஒரே பக்கத்தில் ஆசிரியர்களுக்கு பயனுள்ள வகையில்  இங்கே பகிரப்பட்டுள்ளது  இதனை பிடிஎப் ஆக  டவுன்லோட் செய்ய  கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

வகுப்பாசிரியரின் பொறுப்புகளும் கடமைகளும்

October 02, 2024 0

அலுவலகத்தில் பணியாளர் மகிழ்ச்சியை அதிகரிக்க 5 வழிகள்..!

October 02, 2024 0

 அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மகிழ்ச்சி ஆண்டுக்கு 5% குறைந்து, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பு சில சுவாரஸ்யமான விஷயங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக கட்டுமான துறை மகிழ்ச்சியான தொழிலாக உள்ளது என்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் கல்வித்துறை கண்ட அதிகபட்ச மதிப்பெண்கள் இதுவென்றும் தெரியவந்துள்ளது.

இருப்பினும், இந்த முடிவுகள் சில கவலைகளை எழுப்புகின்றன. 2020-ம் ஆண்டிலிருந்து பணியாளர் திருப்தியில் நிலையான சரிவு காணபடுகிறது. தொற்றுநோய்கள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தை விட தற்போது ஊழியர்களின் மகிழ்ச்சி குறைவாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

லாபத்தை அதிகரிக்க விரும்பும் முதலாளிகள், அதற்கு முதலில் ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், உற்பத்தித்திறனும் லாபமும் நேர்மறையாக தொடர்புடையவை. மகிழ்ச்சியான தொழிலாளர்கள் 13% அதிக உற்பத்தி செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, பணியாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், உற்பத்தியை அதிகரிக்கவும், அவர்களின் ஈடுபாட்டை மேம்படுத்தவும் விரும்பும் முதலாளிகள் ஊழியர்களின் மகிழ்ச்சியில் முதலீடு செய்ய வேண்டும்.

பணிநீக்கங்கள், சோர்வு, அலுவலகத்திற்குத் திரும்புவதற்கான உத்தரவுகள் மற்றும் போதிய ஊதிய உயர்வு இல்லாமை உள்ளிட்ட பல காரணிகள் ஊழியர்களின் மகிழ்ச்சியில் சரிவை ஏற்படுத்துகின்றன. நிறுவனங்கள் ஊழியர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்க என்ன செய்யலாம்? வாருங்கள் பார்ப்போம்.

News18

நெகிழ்வான பணி அட்டவணையை அனுமதிக்கவும்

தொலைதூரத்தில் பணிபுரிவது, பகுதிநேரம் அல்லது வேறொரு ஏற்பாட்டின் மூலம் பணிபுரிவது என எதுவாக இருந்தாலும், நெகிழ்வான பணி விருப்பங்களை வழங்கும் நிறுவனங்களில் ஊழியர்கள் அதிக திருப்தி அடைகின்றனர். ஒன்று, நெகிழ்வான விருப்பங்களை அனுபவிக்கும் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளைப் பற்றி நன்றாக உணர்வதோடு குறைந்த அளவிலான சோர்வையே அனுபவிக்கிறார்கள்.
நெகிழ்வுத்தன்மை ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை அனுமதிக்கிறது. இது ஊழியர்களுக்கு சுதந்திர உணர்வுடன், மன உறுதியை வலுப்படுத்துகின்றன. சிறந்த திறமைகளை ஈர்ப்பதற்கும் தக்கவைப்பதற்கும் நிறுவனங்கள் உறுதியுடன் இருந்தால், அவர்கள் நெகிழ்வான பணி நேரத்தை பின்பற்ற வேண்டும்.

உங்கள் குழுவை அங்கீகரித்து வெகுமதி அளிக்கவும்


தங்களது வேலையில் சரியான அளவு அங்கீகாரத்தை ஊழியர்கள் பெற்றால், அவர்கள் அதிக ஈடுபாட்டுடன் வேலை செய்வது நான்கு மடங்கு அதிகமாகும். பணியாளர்களுக்கு பணியிடங்களில் மதிப்புமிக்க உணர்வு மிகவும் முக்கியமாகும். உங்கள் குழு அவர்களின் பங்களிப்புகளை பாராட்டப்படும் போது, ​​அவர்கள் தங்கள் அணியினர் மற்றும் நிறுவனத்துடன் அதிக நெருக்கத்தை உணர்கிறார்கள். இது, உத்வேகம் மற்றும் ஊக்கத்திற்கு வழிவகுக்கிறது. வேலையில் பாராட்டு கலாச்சாரத்தை உருவாக்க, சிறிய வெற்றிகள் மற்றும் பெரிய வெற்றிகள் இரண்டையும் கொண்டாடுங்கள். உள்ளடக்கிய பணிச்சூழலை வளர்க்கும் அதே வேளையில், பணியாளர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கிறீர்கள்.

News18

நிறுவனத்தின் உள்ளேயே பதவி உயர்வு

பணியாளர் மகிழ்ச்சியை அடைவதில் முக்கியமான அம்சமாக அவர்களின் கேரியர் வளர்ச்சி உள்ளது. இதன் காரணமாக, உள் இயக்கம் மற்றும் திறமை மேம்பாடு தொடர்ந்து தேவைப்படுகின்றன. 73% தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தில் உள்ள தொழில் வாய்ப்புகளைப் பற்றி அறிய விரும்புகிறார்கள் என ஆய்வொன்று கூறுகிறது. நிறுவனத்தின் உள்ளேயே வாய்ப்புகளில் தெரிவுநிலை இல்லாத அல்லது கிடைக்கப் பெறாத பணியாளர்கள் தங்கள் வேலையை விட்டு விலகுவதற்கான வாய்ப்புகள் 61% அதிகம் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

நெருக்கமான் உணர்வை வளர்க்கவும்

தங்கள் வேலையை அர்த்தமுள்ளதாக உணரும் ஊழியர்கள் மகிழ்ச்சியாகவும் விசுவாசமாகவும் இருப்பார்கள். நிறுவன கலாச்சாரத்துடன் இணைந்ததாக உணராதவர்களை விட வேலையின் நோக்கத்தைக் கண்டறியும் நபர்கள் நெகிழ்ச்சியும் உற்பத்தித்திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். நிறுவனத்தின் ஒட்டுமொத்த வெற்றிக்கு அவர்களின் முயற்சிகள் எவ்வாறு பங்களிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுவதன் மூலம் ஊழியர்களுக்கு உற்சாகமூட்டுங்கள்.

தலைமை மகிழ்ச்சி அதிகாரியை நியமனம் செய்யுங்கள்

உங்கள் நிறுவனத்திற்கு CHO தேவையா என்பது உங்கள் நிறுவனத்தின் அளவு, கலாச்சாரம் மற்றும் பணியாளர் ஈடுபாட்டைப் பொறுத்தது. இந்தப் பதவியின் பெயர் எதுவாக இருந்தாலும், இந்த நபர் பொதுவாக உங்கள் பணியாளர்கள் மகிழ்ச்சியாகவும் ஈடுபாட்டுடனும் இருப்பதை உறுதிசெய்ய அர்ப்பணிக்கப்பட்ட நிர்வாகி ஆவார். சில குறிப்பிட்ட பொறுப்புகளில் சோர்வைக் குறைத்தல், அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துதல் மற்றும் பணியாளர் அனுபவத்தை மேம்படுத்துதல் ஆகியவை இவர்களின் பணிகளில் அடங்கும். இவை அனைத்தும் சரியாக செயல்படுத்தப்பட்டால், செழிப்பான பணியிடத்தை உருவாக்க உதவுகின்றன.
சிறந்த பணி கலாச்சாரங்களில் பணியாளர்கள் கடினமாகவும் ஆர்வத்தோடும் உழைக்கின்றனர். இந்த உத்திகளைப் பயன்படுத்துவதன் மூலம், சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதோடு அவர்களைத் தங்க வைக்கும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவீர்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அடிக்கடி முட்டை சாப்பிடுவது பெண்களுக்கு ஏற்படும் அறிவாற்றல் குறைபாட்டை மெதுவாக்கும் – ஆய்வில் தகவல்

October 02, 2024 0

 வயதாகும்போது ​​ சிந்திக்கும் திறன், கற்றுக்கொள்வது மற்றும் நினைவில் கொள்வது போன்ற அறிவாற்றல் ஆரோக்கியம் ஒருவேளை குறைய ஆரம்பிக்கலாம். இது அறிவாற்றல் குறைபாடு அல்லது இயலாமை பிரச்சனையை வயதானவர்களுக்கு கொண்டு வருகிறது. அறிவாற்றல் குறைபாட்டின் மீது முட்டைகளின் நன்மைகளை வெளிப்படுத்தும் ஆய்வொன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.

55 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள், தங்கள் டயட்டில் முட்டைகளை தவறாமல் சேர்த்துக் கொள்ளும் போது, அவர்களது சொற்பொருள் நினைவாற்றல் மேம்படுவது தெரிந்தது. இது உண்மைத் தகவல்களைச் சேமிக்கும் நீண்ட கால நினைவாற்றலையும், மன திறன்களை உள்ளடக்கிய சிறந்த நிர்வாகச் செயல்பாட்டையும் குறிக்கிறது. நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் திறன்கள் வயதுக்கு ஏற்ப குறையும் என்றாலும், முட்டைகளை தொடர்ந்து உட்கொள்வது இந்தச் செயல்முறையை மெதுவாக்கும்.

அறிவாற்றல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் முட்டை

இந்த ஆய்வில், வாரத்திற்கு அதிக முட்டைகளை உட்கொள்ளும் பெண்கள் நான்கு ஆண்டுகளில் சொற்பொருள் நினைவகம் மற்றும் நிர்வாக செயல்பாட்டில் குறைவான சரிவைக் காட்டியுள்ளனர். பெண்கள் தங்கள் முட்டை நுகர்வை அதிகரித்த போது, ​​அறிவாற்றல் ஆரோக்கியத்தின் சரிவு 0.1 புள்ளிகளாக குறைந்துள்ளது. அறிவாற்றல் ஆரோக்கியம், சொற்பொருள் நினைவகம் மற்றும் நிர்வாக செயல்பாடு ஆகியவற்றின் வீழ்ச்சியை நிறுத்தக்கூடிய உணவு எதுவும் இல்லை என்றாலும், இந்தச் செயல்முறையை மெதுவாக்குவதில் முட்டைகள் குறிப்பிடத்தக்க நன்மைகளை தருகின்றன.

News18

மேலும், ஒரு வாரத்திற்கு ஐந்து முறைக்கு மேல் முட்டைகளை உட்கொள்ளும் பெண்கள், முட்டை சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடுகையில், நான்கு ஆண்டுகளில் அவர்களின் அறிவாற்றல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க அரை புள்ளி குறைவான சரிவைக் காட்டியுள்ளனர்.

முட்டையில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருந்தாலும், இது தீங்கு விளைவிப்பதில்லை என்றும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. புரதம் மற்றும் வைட்டமின் நிரம்பிய உணவுப் பொருட்கள், அறிவாற்றல் குறைபாட்டின் செயல்முறையை மெதுவாக்கும். மேலும், முட்டைகளை அளவோடு சாப்பிட்டால், அவை மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
முட்டைகள் அறிவாற்றல் ஆரோக்கியத்தின் வீழ்ச்சியை மெதுவாக்கும் என்பதால், அவை நேரடியாக மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்று அர்த்தமல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துரைத்துள்ளனர். அறிவாற்றல் குறைபாட்டின் விகிதத்தை குறைக்க முட்டைகள் எவ்வாறு உதவுகின்றன என்பதை மட்டுமே இந்த ஆய்வு நோக்கமாக கொண்டுள்ளது.

முட்டையை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் சில நன்மைகள்:

ஒரு முட்டையில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. உடலுக்கு வலு சேர்க்கும் புரதத்தை மனித உடலால் அதைத் உற்பத்தி செய்ய முடியாது என்பதால் இது மிகவும் அவசியம். செலினியம், பாஸ்பரஸ், கோலின், வைட்டமின் பி12 மற்றும் பல ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை வழங்க முட்டை உதவுகிறது. மேலும் இது செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இரத்தத்தில் நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கவும் ட்ரைகிளிசரைடுகளை குறைக்கவும் உதவுகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

Kidney failure: சிறுநீரகங்கள் செயலிழக்க என்ன காரணம்..? ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி?

October 02, 2024 0

 அக்யூட் கிட்னி இன்ஜூரி (Acute kidney injury - AKI) என்பது ஒருவரின் சிறுநீரகங்கள் திடீரென்று சரியாக வேலை செய்யாமல் போகும் நிலை மற்றும் பெரும்பாலும் குறுகிய காலத்திற்குள் ஏற்படுகிறது. சிறுநீரக செயல்பாட்டில் ஏற்படும் சிறிய பாதிப்பு முதல் சிறுநீரகம் முழுமையாக செயலிழப்பது வரை என இதன் பாதிப்புகள் இருக்கலாம்.

அதேபோல இந்த சிறுநீரக பாதிப்பு என்பது ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் குறிப்பாக தீவிர சிகிச்சை தேவைப்படும் மோசமான கண்டிஷனில் இருக்கும் நோயாளிகளுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான நிலையாக இருக்கிறது. இந்த பாதிப்பு சிறிய அளவில் இருக்கும்போதே கண்டறிவது மற்றும் சரியாக நிர்வகிப்பது மீள்வதை எளிதாக்கக்கூடும் என்பதால் AKI ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்களை நாம் புரிந்து கொள்வது முக்கியம்.

பிரபல மருத்துவர் சுஜித் சாட்டர்ஜி கூறுகையில், உடலில் காணப்படும் அறிகுறிகள், மருத்துவ நிலைமைகள் மற்றும் சிறுநீரக பாதிப்பிற்கு பங்களிக்கும் சமீபத்திய நிகழ்வுகள் போன்ற மெடிக்கல் ஹிஸ்ட்ரி மதிப்பாய்வு மூலம் பாதிப்பை கண்டறியலாம். உடல் பரிசோதனையானது Fluid retention, குறைந்த அளவே சிறுநீர் வெளியேறுவது அல்லது சிறுநீரகச் செயலிழப்பிற்கான மற்ற அறிகுறிகளை மதிப்பிட உதவுகிறது என்றார்.

சிறுநீரக செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதற்காக Creatinine மற்றும் Blood urea nitrogen அளவை அளவிட ரத்த பரிசோதனைகள் செய்யப்படும். தவிர சிறுநீரக ஆரோக்கியத்தை மதிப்பிட சிறுநீர் பரிசோதனைகள் செய்யப்படலாம் என்றார். சில சந்தர்ப்பங்களில் சிறுநீர் பாதையில் Structural abnormalities அல்லது அடைப்புகள் உள்ளதா என்பதை கண்டறிய அல்ட்ராசவுண்ட் அல்லது CT ஸ்கேன் போன்ற இமேஜிங் சோதனைகள் செய்யப்படலாம்.

Kidney Disease Symptoms, Causes, Failure & Diagnosis - Kidney Specialist Singapore | Nephrologist | Renal Disease Treatment - Francisco Kidney & Medical Centre

AKI பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:

சிறுநீரகங்களுக்கு ரத்த ஓட்டம் குறைதல் - டிஹைட்ரேஷன், குறைந்த ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு காரணமாக இது நிகழலாம்.

சிறுநீரகங்களில் நேரடி பாதிப்பு - தொற்றுகள், சில மருந்துகள், டாக்ஸின்ஸ் அல்லது மெடிக்கல் இமேஜிங் செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் Contrast Dyes உள்ளிட்டவை சிறுநீரகங்களுக்கு நேரடியாக தீங்கு விளைவிக்கும்.

சிறுநீரகம் தொடர்பான நோய்கள் - Glomerulonephritis அல்லது Interstitial nephritis போன்ற நிலைமைகள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதிக்கலாம்.

சிறுநீர் பாதையில் ஏற்படும் அடைப்பு - கிட்னி ஸ்டோன்கள் அல்லது Enlarged prostate போன்ற அடைப்புகள் சிறுநீர் பாதையில் தடையை ஏற்படுத்தலாம். இது AKI பாதிப்புக்கு வழிவகுக்கும்.

AKI பாதிப்பின் பொதுவான அறிகுறிகள்:

AKI பாதிப்பின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடலாம் என்றாலும் சில பொதுவான அறிகுறிகள் இருப்பதாக கூறுகிறார் மருத்துவர் சுஜித் சாட்டர்ஜி. வெளியேறும் சிறுநீரின் அளவு குறைவது, திரவம் தேங்குவதால் கால்கள், கணுக்கால் அல்லது முகத்தில் வீக்கம் ஏற்படுவது, சோர்வு மற்றும் பலவீனம், குமட்டல், வாந்தி, அல்லது பசியின்மை, மூச்சுத் திணறல் மற்றும் குழப்பம் அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம் உள்ளிட்டவை AKI-ன் பொதுவான அறிகுறிகள் என்றார்.
டீ-ஹைட்ரேஷன், தொற்று அல்லது மருந்து தொடர்பான பிரச்சினைகள் காரணமாக AKI பாதிப்பு ஏற்பட்டால் உரிய சிகிச்சைகள் அளிக்கப்படும். திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் பேலன்ஸை பராமரிப்பது மிகவும் முக்கியம். சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த நரம்பு வழி திரவங்கள் (intravenous fluids) அல்லது Diuretics கொடுக்கப்படலாம். அதேபோல காரணத்தைப் பொறுத்து அறிகுறிகளை குறைக்க, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அல்லது வீக்கத்தை குறைக்க சில மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம் என்கிறார் மருத்துவர் சாட்டர்ஜி.
தீவிர நிலைகளில் சிகிச்சை…
AKI பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்தால் சிறுநீரக செயல்பாடு சீராகும் வரை ரத்தத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டி நீக்க டயாலிசிஸ் செய்யப்படலாம். பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை மதிப்பிட, நிலைமைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க வழக்கமான ஃபாலோ-அப் மற்றும் அப்பாயின்மென்ட்டை சரியாக பின்பற்ற வேண்டும்.




Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தயிருடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து சாப்பிடவே கூடாது.. மீறினால் சிக்கல்தான்..!

October 02, 2024 0

 இயற்கையாக கிடைக்க கூடிய பல உணவுகள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்தாலும், அவற்றை சாப்பிடுவதில் சில முறைகள் உள்ளன. இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் இதுகுறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தினமும் தயிர் சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி பலப்படும். நெய் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. ஆனால் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து சாப்பிடலாமா? இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இதோ இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

தயிரின் நன்மைகள்

தயிரில் நமது உடலுக்கு நன்மை செய்யும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. தயிர் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்த வேலை செய்யும் நொதிகளை உடலுக்கு வழங்குகிறது. தினமும் 1 கப் தயிர் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. தயிர் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். தயிரில் கால்சியம் சத்து உள்ளது. இது நமது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு நன்மை பயக்கும். தயிர் உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க உதவுகிறது.

News18

நெய்யின் நன்மைகள்

தினமும் நெய் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். நெய் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். தினமும் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டு வந்தால் நோய்களை எதிர்த்துப் போராடலாம். ஆனால் தயிரையும் நெய்யையும் சேர்த்து சாப்பிடலாமா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

தயிரையும் நெய்யையும் ஏன் ஒன்றாகச் சாப்பிடக்கூடாது?

தயிர் மற்றும் நெய் சேர்த்து சாப்பிடுவது ஆயுர்வேதத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டும் பால் பொருட்களாக இருந்தாலும், அவற்றின் தன்மை வேறுபட்டது. தயிர் குளிர்ச்சியாக இருக்கும். அதே சமயம் நெய் உடலை சூடாக்கும். இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு நெய் பரோட்டாவை தயிருடன் சேர்த்து சாப்பிடும்போதெல்லாம் வயிற்று உப்புசம் அல்லது வாய்வு தொல்லை ஏற்படுவதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். வயிற்றில் இந்த இரண்டு பொருட்களும் ஒன்றாக ஜீரணிப்பதில் சிக்கல் இருப்பதால் இது நிகழ்கிறது.

தயிர் மற்றும் நெய் சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:

மோசமான செரிமானம்
அதிக கொலஸ்ட்ரால் அளவு
இதய நோய்
தோல் ஒவ்வாமை

தயிருடன் வேறு என்ன சாப்பிடக்கூடாது?

  1. புளிப்பு பழங்களை தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அவை: எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு.

  2. தக்காளியை தயிருடன் சாப்பிடுவதும் தீங்கு விளைவிக்கும்.

  3. தயிர் மற்றும் முலாம்பழம் சேர்த்து சாப்பிடுவது ஆயுர்வேதத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது.

  4. பனீர் மற்றும் பாகற்காய் கூட தயிருடன் சாப்பிடக்கூடாது.




Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

திருமணமாகாத அரசு ஊழியர் மரணமடைந்தால் அவரது சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம் - RTI கடிதம்

October 02, 2024 0



 

திருமணமாகாத அரசு ஊழியர் மரணமடைந்தால் அவரது சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம் - RTI கடிதம்




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Moral Education To Tamilnadu School Students

October 02, 2024 0

 



பள்ளிக்கல்வி - நன்னெறிக் கல்வி - உலகப்பொதுமறை திருக்குறள் - மாணவர்களின் பண்பாடு மற்றும் ஒழுக்கத்தினை வலுவூட்டல் - நன்னெறி கல்விப் பாடத்திட்டம் - கற்றல் கற்பித்தல் - மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி செயல்படுத்திட அறிவுரை வழங்குதல் - சார்பாக - Proceedings Download Here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

1 - 12th Std | Block & CRC Level கலைத்திருவிழா போட்டிகள்‌ - வழிகாட்டு நெறிமுறைகள்‌ - SPD Proceedings (30.09.2024)

October 02, 2024 0

 

வகுப்பு 1 முதல்‌ 12-ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கான குறுவளமைய & வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்‌ - குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்‌- SPD செயல்முறைகள், நாள்‌: 30.09.2024.


Click Here to Download - Kalaithiruvizha_- Block & CRC Level Competitions - SPD Proceedings (30.09.2024) - Pdf






🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

G.O 214 - 2 CEO's Promoted to Joint Director - Orders Issued

October 02, 2024 0

 



தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - பள்ளிக் கல்வி இணை இயக்குநர் பணியிடங்கள் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திலிருந்து இணை இயக்குநராக பதவி உயர்வு அளித்து பணி நியமனம் ஆணை வெளியிடப்படுகிறது


Click Here to Download - G.O 214 - 2 CEO's Promoted to Joint Director - Orders Issued - Pdf



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group