பூண்டு நீண்ட காலமாக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் திறன் உட்பட அதன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காக கொண்டாடப்படுகிறது. இத்தகைய காரமான பூண்டில் இருக்கும் அல்லிசின் கொழுப்பைக் குறைக்க முக்கிய பங்காற்றுவதாக நம்பப்படுகிறது.
உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பது தீவிர இதய பிரச்சனைக்கு காரணமாகிறது. லிப்போபுரோட்டீன் பிளேக் உருவாவதற்கு காரணமாகி தமனிகளில் அடைப்பை உருவாக்குகிறது, இதன் விளைவாக மாரடைப்பு ஏற்படலாம். உணவில் சில மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இயற்கையாகவே குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் அளவைக் குறைக்கவும், நிர்வகிக்கவும் முடியும்.
அந்த வகையில் அன்றாட பயன்பாட்டில் உள்ள முக்கிய மசாலாப் பொருட்களில் ஒன்று பூண்டு. பூண்டு நீண்ட காலமாக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் திறன் உட்பட அதன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காக கொண்டாடப்படுகிறது. இத்தகைய காரமான பூண்டில் அல்லிசின் போன்ற சேர்மங்கள் உள்ளன, அவை கொழுப்பைக் குறைக்க முக்கிய பங்காற்றுவதாக நம்பப்படுகிறது.
News18
ஒருவர் தினமும் எவ்வளவு பூண்டு உட்கொள்ளலாம்?
கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க தினமும் பூண்டை உண்பது குறித்த அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை என்றாலும், ஒரு நாளைக்கு 1 முதல் 2 பல் பச்சை பூண்டை உட்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அளவு பொதுவாக பெரும்பாலான நபர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது மற்றும் அதிகப்படியான பக்க விளைவுகள் இல்லாமல் பூண்டின் ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும்.
பூண்டில் கொலஸ்ட்ரால் குறைப்புக்கு பங்களிக்கும் ஓர் முக்கிய கூறு அல்லிசின். பூண்டை நசுக்கும்போது அல்லது நறுக்கும்போது வெளியிடப்படுகிறது. அல்லிசின் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
கொழுப்பைக் குறைத்தல்: வழக்கமாக பூண்டை உட்கொள்வது உடலில் உள்ள மொத்த கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும், குறிப்பாக LDL (எல்.டி.எல் / குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதம்), பெரும்பாலும் கெட்ட கொலஸ்ட்ரால் என குறிப்பிடப்படுகிறது.
அதிக அடர்த்தி கொழுப்பை அதிகரிப்பது: இரத்த ஓட்டத்தில் இருந்து குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பை அகற்ற உதவும் அதே நேரத்தில், நல்ல கொழுப்பு எனப்படும் HDL (உயர் அடர்த்தி கொழுப்புப்புரதத்தை) அதிகரிக்க பூண்டு உதவக்கூடும்.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல்: பூண்டு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது, இவை இரண்டும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
பூண்டின் கொழுப்பைக் குறைக்கும் பலன்களைப் பெற, அதை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதே சிறந்தது. பச்சை பூண்டின் 1-2 பல்லை நறுக்கி அல்லது நசுக்கி, சாப்பிடுவதற்கு முன் சில நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அல்லிசின் உற்பத்தி அதிகரிக்கிறது. நீங்கள் அதை சாலட்டுகள், டிரஸ்ஸிங்ஸில் சேர்க்கலாம் அல்லது தண்ணீருடன் உட்கொள்ளலாம்.சமைக்கும் போது உங்கள் உணவுகளில் பூண்டை சேர்ப்பது நன்மையை தரும். பூண்டை வதக்குவது அல்லது வறுப்பது அதன் சுவையை அதிகரிக்கிறது, ஆனால் இவ்வாறாக சமைப்பது அதன் ஆரோக்கிய நன்மைகளில் சிலவற்றைக் குறைக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எனவே சூடான எண்ணெயில் இதை லேசாக வறுத்து, சூப்கள் அல்லது சாஸ்களில் சேர்ப்பது கூடுதல் நன்மையை தரும் என்று நம்பப்படுகிறது.
பொதுவாக பூண்டு பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானது தான் என்றாலும், இதனை அதிகப்படியாக உட்கொள்வது செரிமான பிரச்சினைகள், வாய் துர்நாற்றம் அல்லது உடல் துர்நாற்றம் போன்ற பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். கூடுதலாக, பூண்டு சில மருந்துகளுடன், குறிப்பாக இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளுடன் தொடர்பு கொள்ளலாம், எனவே நீங்கள் மருந்துகளை எடுத்துக் கொண்டால், சம்பந்தப்பட்ட சுகாதார நிபுணரை அணுகுவது அவசியம். உங்கள் தினசரி உணவில் 1 முதல் 2 பற்கள் பூண்டு சேர்த்துக்கொள்வது அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
பச்சையாகவோ, சமைத்தோ அல்லது வேறு எந்த வடிவில் உட்கொண்டாலும், பூண்டு இதய ஆரோக்கியத்திற்கான உணவில் ஒரு சுவையான கூடுதலாக இருக்கும். எப்போதும் போல், ஒரு சீரான உணவைப் எடுத்துக்கொள்ளுதல் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிப்பதற்கான நேர்த்தியான ஆலோசனைக்கு சுகாதார நிபுணரை தொடர்பு கொள்ளது சிறந்தது.