Agri Info

Adding Green to your Life

November 4, 2024

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 200 பணியிடங்கள்; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

November 04, 2024 0

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 200 நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (UIIC) நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 200 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.11.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


Administrative Officer

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 200

காலியிடங்களின் விபரம்

GENERALISTS – 100

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்

SPECIALISTS – 100

Risk Management - 10 

கல்வித் தகுதி: B.E./B.Tech And Post Graduation in Risk Management / PGDM in Risk Management படித்திருக்க வேண்டும்

Finance and Investment - 20 

கல்வித் தகுதி: Chartered Accountant (ICAI) / Cost Accountant (ICWA) or B.Com படித்திருக்க வேண்டும்

Automobile Engineers - 20 

கல்வித் தகுதி: B.E./B.Tech. in Automobile Engineering முடித்திருக்க வேண்டும்

Chemical Engineers / Mechatronics Engineers - 10 

கல்வித் தகுதி: B.Tech. / B.E (Mechatronics/ Chemical Engg) முடித்திருக்க வேண்டும்

Data Analytics - 20 

கல்வித் தகுதி: B.E/B.Tech in Computer science/ Computer applications/ IT /Graduate in Statistics/ Data Science/ Actuarial science முடித்திருக்க வேண்டும்

Legal - 20

கல்வித் தகுதி: Bachelor Degree in law முடித்திருக்க வேண்டும்

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.09.2024 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம்: 88,000

தேர்வு செய்யப்படும் முறைஇந்தப் பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கணினி வழித் தேர்வு: கணினி வழித் தேர்வு கொள் குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வாக 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம், திறனறிதல், கணிதம், கணினி மற்றும் பொது அறிவு அல்லது காப்பீடு தொடர்பான கேள்விகள் (Insurance and Financial Marketing Awareness) அல்லது சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2.30 மணி நேரம்

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://uiic.co.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.11.2024

விண்ணப்பக் கட்டணம்பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.1000. SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.250.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://uiic.co.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

 

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

கலையரசன், கலையரசி விருது; தயாராகும் மாணவ, மாணவியர்!

November 04, 2024 0

 விரைவில், மாவட்ட கலைத்திருவிழாவும், அதைத் தொடர்ந்து மாநில கலைத்திருவிழா போட்டிகளும் நடக்கவுள்ளதால், திறமை காட்ட மாணவ, மாணவியர் இப்போதிருந்தே தயாராக வேண்டியுள்ளது.பள்ளி கல்வித்துறை சார்பில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் தனித்திறனை வெளிக்கொணர, கலைத்திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. 

இதில், தனிநபர், குழு நடனம் துவங்கி, பாடல் ஒப்புவித்தல், கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடப்போட்டி, பேச்சு மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல், மெல்லிசை, களிமண் பொம்மை செய்தல், நாட்டுப்புற கலை சார்ந்த நடனம் உள்ளிட்ட, 27 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி அளவிலான கலைத்திருவிழா, அக்., மூன்றாவது வாரம் நடத்தி முடிக்கப்பட்டது. 
 
ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பிடம் பெற்ற மாணவியர் தற்போது, வட்டார அளவில் நடந்து வரும் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்று வருகின்றனர். நடப்பு வாரம் இப்போட்டிகள் முடிந்த பின், நவ., 11 முதல், 20ம் தேதி வரை, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி நடத்தப்பட உள்ளது.

கலையரசன், கலையரசி யார்? 

இப்போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகிறது. மாநில போட்டியில் பங்கேற்று, வெற்றி பெறுவோருக்கு கலையரசன், கலையரசி விருது மற்றும் சான்றிதழ் தமிழக அரசின் மூலம் வழங்கப்படுகிறது. விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து சாதித்து வரும் திருப்பூர், கலைத்திருவிழா போட்டிகளில் கலக்க வேண்டும். 

Ennum Ezhuthum | English | Phonetic Reading Flash Card | CVC Word

November 04, 2024 0

English Literary Association Club 2019-2020 (PDF)

November 04, 2024 0

Simple English Two and Five Letter Words for Beginners

November 04, 2024 0

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ் வாசிப்புப் பயிற்சித் தாள்கள்

November 04, 2024 0

 மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ் வாசிப்புப் பயிற்சித் தாள்கள்












பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் வழிகாட்டுதல்கள் வெளியீடு

November 04, 2024 0

 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது:- 
தமிழகத்தில் 2024-25-ம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் வருகிற 7-ந்தேதி நடத்த வேண்டும். வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை ‘எமிஸ்' தளத்தில் வருகிற 8-ந்தேதி உள்ளீடு செய்ய வேண்டும். 

வட்டார அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற வெற்றியாளர்களை கொண்டு வருகிற 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்த வேண்டும். இதில், முதல் 3 வெற்றியாளர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் வருகிற 21-ந்தேதி உள்ளீடு செய்ய வேண்டும். 

மாவட்ட அளவிலான போட்டியில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெறும் வெற்றியாளர்கள் மட்டுமே மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளை அரசு பள்ளிகளுக்கு தனியாகவும், அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு தனியாகவும் திட்டமிட்டு நடத்திட வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும்போது, ஒரு ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியர் இருக்க வேண்டும். 

வட்டார அளவிலான போட்டிக்கு ஒரு வட்டத்திற்கு ரூ.25 ஆயிரமும், மாவட்ட அளவிலான போட்டிக்கு ரூ.1 லட்சமும் நிதி விடுவிக்கப்படும். உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை முதன்மை கல்வி அலுவலர்கள் நடத்தவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

6 - 12th Second Mid-Term Test Time Table & Proceedings

November 04, 2024 0

 

IMG_20241104_194345

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இரண்டாம் இடைப்பருவத்தேர்வு கால அட்டவணை வினாத்தாள் விநியோகம் செய்தல் மற்றும் மாற்றுப்பணி ஆணை வழங்குதல் தொடர்பாக CEO செயல்முறைகள்


6 - 12th Second Mid-Term Test Time Table &CEO Proceedings - Download Here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

November 3, 2024

Ennum Ezhuthum Term II Class 1-3 Unit 3 November 1st Week Notes of Lesson

November 03, 2024 0

Ennum Ezhuthum Term II Class 4 and 5 Unit 3 November 1st Week Notes of Lesson

November 03, 2024 0

1 - 5th - EE - Term 2 - Workbooks - Direct Download Link

November 03, 2024 0

Teachers All Leave Rules - அனைத்து விடுப்பு விதிகள் - விளக்கங்களுடன்

November 03, 2024 0

 விடுப்பு விதிகள் - விளக்கங்களுடன்


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அனைத்து வகையான விடுப்பு விதிகள் மற்றும் அதன் விளக்கங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.


 இதனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மஞ்சள் கலர் லிங்கை கிளிக் செய்யவும்


Click Here to Download - All Leave Rules - அனைத்து விடுப்பு விதிகள் - விளக்கங்களுடன் - Pdf



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

4,5th - Ennum Ezhuthum - Term 2 Training - All Modules

November 03, 2024 0



4,5th - Ennum Ezhuthum - Term 2 Training - All Modules

எண்ணும் எழுத்தும் 2-ஆம் பருவ பயிற்சிக்கான பாடப் பகுதிகள் - PPT

Tamil Module - Download Here

English Module - Download Here

Maths Module - Download Here

Science Module - Download Here

Social Module - Download Here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group