December 5, 2024
Ennum Ezhuthum Term II Class 4 and 5 EM / TMDecember 2nd Week Notes of Lesson
Ennum Ezhuthum Term II Class 4 and 5 EM December 2nd Week Notes of Lesson
Ennum Ezhuthum Term II Class 4 and 5 TM December 2nd Week Notes of Lesson
Download: Ennum Ezhuthum Term II Class 4 and 5 TM December 2nd Week Notes of Lesson
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
3 மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
கடலூர் , விழுப்புரம் , தி.மலை ஆகிய 3 மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
TRUST Examination - டிசம்பர் 2024 - தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - DGE Proceedings
தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) டிசம்பர் 2024 - தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக.
trust exam dec 2024 hall ticket & nr download dge Proceedings - Click here
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு வரும் பிப்ரவரி முதல் புதிய பாடத்திட்டம் அமல் - தொழில்நுட்பக்கல்வி இயக்ககம்
தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு வரும் பிப்ரவரி முதல் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
மாநில தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் சார்பில் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய தொழில்நுட்பத்தேர்வுகள் ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்) நடத்தப்பட்டு வருகின்றன. இளநிலை, இடைநிலை, முதுநிலை, அதிவேகம் என பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் இத்தேர்வுகளை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் எழுதுகின்றனர். இத்தேர்வுகள் மட்டுமின்றி அரசு கணினி ஆட்டோமேஷன் சான்றிதழ் தேர்வையும் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் நடத்துகிறது.
தொழில்நுட்பத்தேர்வுகளுக்கான பாடத்திட்டம் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போதைய வேலைவாய்ப்புச் சூழலுக்கு ஏற்ப பாடத்திட்டத்தை மாற்றியமைக்க தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் முடிவுசெய்து அதற்காக வல்லுநர்கள் அடங்கிய குழுவையும் அமைத்தது. அதைத்தொடர்ந்து, அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கான பாடத்திட்டமும், தேர்வுமுறையும் அண்மையில்தான் மாற்றியமைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய தேர்வுகளுக்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டம் தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணைதளத்தில் (https://dte.tn.gov.in/revised-gte-syllabus) வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய பாடத்திட்டம் வரும் பிப்ரவரி முதல் அமல்படுத்தப்படும் என தொழில்நுட்பக்கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான டி.ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
CMC வேலூர் கல்லூரியில் Lecturer வேலைவாய்ப்பு 2024 – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
CMC வேலூர் கல்லூரியில் Lecturer வேலைவாய்ப்பு 2024 – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Professor, Lecturer, Junior Clinical Psychologist, Junior Special Teacher பணிக்கான 4 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:
Assistant Professor, Lecturer, Junior Clinical Psychologist, Junior Special Teacher பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் DM / M.Phil / M.Sc / MA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை Senior Executive காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
2024ல் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Senior Executive.
அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 2. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.12.2024 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.60,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். BE/B.Tech, M.Sc, MCA தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர்: Senior Executive
காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 2
தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் BE/B.Tech, M.Sc, MCA தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.
ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 60,000/- வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.
தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (15.12.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
15.12.2024
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்
இப்பணிக்கு விண்ணப்பிக்க: இங்கே விண்ணப்பிக்கவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
திண்டுக்கல் மாவட்டத்தில் டிசம்பர் 7 மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 7-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்தி குறிப்பு:
திண்டுக்கல் எம்.வி.எம். அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெறும் இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட முன்னணித் தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, வேலைநாடுநா்களைத் தோ்வு செய்ய உள்ளன. 18 வயதுக்கு மேற்பட்ட 8-ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டதாரி இளைஞா்கள், இளம் பெண்கள் பங்கேற்று தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பை பெறலாம்.
விருப்பமுள்ளவா்கள் கல்விச் சான்று, குடும்ப அட்டை, ஆதாா்அட்டை, ஓட்டுநா் உரிமை அடையாள அட்டை, சுயவிவரக் குறிப்பு, மாா்பளவு புகைப்படத்துடன் பங்கேற்று பயன்பெறலாம். இந்த முகாமில் மத்திய, மாநில அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிகளுக்கும் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் On Duty-ல் துறைத்தேர்வுகள் எழுதலாமா? - TNPSC RTI பதில்
தகவல் அறியும் உரிமைச்சட்டம் , 2005 - ன் கீழ் தகவல்கள் கோரியுள்ள கடிதத்திற்கு தனியாளர் , திரு.S.யோவேல் , கரூர் மாவட்டம் அவர்களுக்கு இதன் மூலம் தெரிவிப்பதாவது, அடிப்படை விதிகளில் விதி 9(6)(b)(iii) - ன் படி நகல் இணைக்கப்பட்டுள்ளது . அரசுப்பணியாளர்கள் கலந்து கொள்ளும் எந்த ஒரு தேர்விற்கும் செல்வதை பணிக்காலமாக (On Duty) கருதி துய்த்துக்கொள்ளலாம். மேலும் , அதே விதிகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட தேர்விற்கு அதிகபட்சமாக இருமுறைக்கு மேல் பணிக்காலமாக கருதி அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறார்.
Teachers, Govt Servants Can Write Departmental Exams On Duty - TNPSC RTI Reply👇👇👇
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
வருமான வரி பிடித்தம் - சரி செய்ய அறிவுறுத்தல்
வருமான வரி பிடித்தம்
டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்களில் கூட்டி அல்லது குறைத்து சரி செய்ய அறிவுறுத்தல் 👇
அனைத்து தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் கவனத்திற்கு 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான வருமானவரி நவம்பர் -2024 வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
IFHRMS SOFTWARE மூலமாக வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது . தங்கள் ஒன்றியத்தில் பணிபுரியும் இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்டத் தொகை நாம் செலுத்த வேண்டிய தொகையை விட அதிகம் வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அதிகப்படியான தொகை பிடித்தம் செய்யப்பட்டதால் அதை திரும்பப் பெற 6 முதல் 8 மாத காலம் காத்திருக்க வேண்டும்.
இச்சூழ்நிலையை தவிர்க்க , சரியான வரித்தொகையை கணக்கீடு செய்து வரும் மூன்று மாதம் சம்பளத்தில் சரிசெய்து கொள்ள தங்கள் ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர் / ஆசிரியைக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
School Children's December 2024 Movie - BENO ZEPHINE Direct Link
School Children's December 2024 Movie - BENO ZEPHINE Direct Link
👇👇👇👇
Download here
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
மார்ச் / ஏப்ரல் -2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள்
நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்கள் ( முதல் முறையாக நேரடி தனித் தேர்வராக பத்தாம் வகுப்பு தேர்வினை எழுத விரும்புவோர் மற்றும் ஓரிரு பாடங்களில் தேர்ச்சி பெறாதோர் ) 06.12.2024 ( வெள்ளிக் கிழமை ) பிற்பகல் முதல் 17.12.2024 ( செவ்வாய் கிழமை ) வரையிலான நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ( 08.12.2024 மற்றும் 15.12.2024 ( ஞாயிற்றுக்கிழமை ) நீங்கலாக ) கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு ( Government Examinations Service Centres ) நேரில் சென்று விண்ணப்பங்களை Online- ல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள் 👇👇👇
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
SMC members registration in EMIS portal - Last date - reg.
பள்ளிக் கல்வித் துறை - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2024-2028 - ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் விவரம் EMIS- இல் 12.12.2024 தேதிக்குள் பதிவேற்றம் செய்தல் - வழிகாட்டு நெறிமுறைகள்
SPD Proceedings - SMC members registration in EMIS portal - Last date - reg👇👇👇
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
12.12.2024 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழாவை ஒட்டி, நாகை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 21ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
கனமழை பாதிப்பு விடுமுறை அறிவிப்பு - 06.12.2024
கனமழை பாதிப்பு காரணமாக நாளை (.06.12.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
💦 விழுப்புரம் ( பள்ளி , கல்லூரி )
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news