Agri Info

Adding Green to your Life

December 7, 2024

மதுரையில் டிசம்பர் 14 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

December 07, 2024 0

 

மதுரையில் டிசம்பர் 14 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10.000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு. முதுநிலை பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் அனைவரும் பங்குபெறலாம்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு அரசால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமை (அரசு விடுமுறை நாள் தவிர்த்து) அன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களும், ஆண்டிற்கு இரண்டு பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.

மதுரையில் நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக 14.12.2024 சனிக்கிழமை அன்று மதுரை சமூக  அறிவியல் கல்லூரி, தல்லாகுளம், மதுரை 02-இல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்திற்கு தேவையான காலிப்பணியிட விவரத்துடன் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும்.

இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10.000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர். உள்ளூர் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு MF Events என்ற நிறுவனமும் கலந்து கொள்கிறது. இம்முகாமில் அனைத்துக் கல்வித்தகுதியுடைய 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு. முதுநிலை பட்டப்படிப்பு, ஐடிஐ டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கல்வித் தகுதிக்கேற்ற தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம்.

எப்படி தயார் செய்வது?

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரப் படிவம் (Bio-Data) ஆகியவற்றுடன் 14.12.2024 அன்று மதுரை சமூக அறிவியல் கல்லூரி அழகர் கோவில் ரோடு, தல்லாகுளம்,மதுரை 02 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு நேரில் வரவும். மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார் நிறுவனங்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண். 0452 -2566022 வாயிலாக தொடர்பு கொள்ளவும். இம்முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் டாக்டர் கா.சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

சென்னைப் பல்கலைக்கழகம் Guest Lecturer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

December 07, 2024 0

 

2024ல் சென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Guest Lecturer.

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 2. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். சென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 11.12.2024 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.30,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். PhD தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Guest Lecturer

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 2

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் PhD தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 30,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (11.12.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி:
Department of Materials  Science,
University of Madras,
Guindy Campus,
Chennai-600025.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

11.12.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

சென்னை கனரக வாகன தொழிற்சாலை Young Professional காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

December 07, 2024 0

 சென்னை கனரக வாகன தொழிற்சாலை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.12.2024 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.40,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின்  கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். MA, MBA, PG Diploma தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Young Professional (HR-Generalist)

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 4

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் MA, MBA, PG Diploma தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 40,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 27 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (15.12.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
UR/OBC-Rs.300
SC/ST/EWS/PWBD/Ex-Serviceman/Women-No Fees.

முகவரி:
The Chief General Manager,
AVNL Institute of Learning,
AVNL (HVF) Estate,
Avadi,
Chennai-600054.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

15.12.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்

விண்ணப்ப படிவம்: இங்கே டவுன்லோட் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

December 07, 2024 0

 1342304

உயர்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது சிஇஇடி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை பெற்ற முதுநிலை மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.


இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த செப்டம்பர் 2-ல் தொடங்கி நவம்பர் 30-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனிடையே, பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் https://-pgscholarship.aicte-india.org/ என்ற வலைதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை https:// www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

6- 8th Half-yearly Exam - Question Paper & Answer Key Download Schedule

December 07, 2024 0

 
2ஆம் பருவத் தேர்வு - வகுப்பு 6 - 8 - வினாத்தாள்கள் & விடைக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்யும் கால அட்டவணை

6- 8th Half-yearly Exam - Question Paper & Answer Key Download Schedule 

IMG-20241206-WA0003_wm

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தனித்தேர்வர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

December 07, 2024 0

 1342303

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், தனித்தேர்வர்கள் இன்று (டிசம்பர் 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு விவரம்; தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடை பெற உள்ளது. இந்த தேர்வெழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்களிடம் இருந்து தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதையடுத்து, தனித்தேர்வர்கள் இன்று (டிசம்பர் 6) முதல் டிசம்பர் 17-ம் தேதிக்குள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.


இதுதவிர தேர்வுக் கட்டணம், விரிவான தேர்வுகால அட்டவணை, கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

6 - 8th Second Term - Tamil Question Paper Download Now - Direct Link

December 07, 2024 0

 

IMG_20241206_100123


6,7,8 வகுப்புக்கு இரண்டாம் பருவ தேர்வுக்கான தமிழ் வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

6 - 8th Second Term Tamil Question Paper Download Now - Direct Link 👇👇👇

https://exam.tnschools.gov.in


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

பள்ளிகளில் கல்வி சார் / கல்வி இணை நிகழ்வுகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

December 07, 2024 0

 IMG_20241206_104102


தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் இனி வரும் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.                     
(ஆண்டு விழா,விளையாட்டுப் போட்டிகள், சுற்றுலா அழைத்துச் செல்லுதல் மற்றும் இதர செயல்பாடுகள் என அனைத்திற்கும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.)

பள்ளிகளில் கல்வி சார் / கல்வி இணை நிகழ்வுகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!👇👇

SOP For School Function - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

அனுமதி பெற்றுதான் இனி ஆசிரியர்கள் எந்தவொரு விடுப்பும் எடுக்க வேண்டும் - ஆணையர் சுற்றறிக்கை :

December 07, 2024 0

 
அனைத்துப்  பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ( பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தவிர ) விடுப்புக் கோருதலுக்கான " CCMC ALL SCHOOLS TEACHERS வாட்ஸ் ஆப் " ( Whatsapp ) குழுவில் சிறுவிடுப்புகள் ( தற்செயல் விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்பு ) ஆகியவற்றை முன்னதாக தெரிவித்து , ஆணையர் அவர்களால் விடுப்பு அனுமதிக்கப்பட்ட பின்னரே விடுப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் , இதர விடுப்புகள் ( மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு ) ஆணையர் அவர்களிடம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களே நேரடியாக அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 மேற்குறிப்பிட்ட வாட்ஸ் ஆப் ( Whatsapp ) குழுவில் தமது பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ( பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தவிர ) இணைக்கப்பட்டுள்ளதை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும். 


இந்த சுற்றறிக்கையினை பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் சுற்றுக்கு விட்டு கோப்பில் பராமரிக்க தெரிவிக்கப்படுகிறது.

👇👇👇👇

மாநகராட்சி கல்வி அலுவலகம் - கோயம்புத்தூர் 

IMG-20241206-WA0006_wm

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

Students ' Handbook of Career Guidance after 12th 2025

December 07, 2024 0