Agri Info

Education News, Employment News in tamil

December 13, 2024

பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்கள் வயதை வேகமாக்குகிறதா..? ஆய்வில் அதிர்ச்சி தகவல்

December 13, 2024 0

 சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வின் மூலம், தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவு வேகமான வயது முதிர்வுக்கு காரணமாவதுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளையும் வலியுறுத்துகிறது.

சிப்ஸ், பிஸ்கட், சாசேஜஸ், பர்கர்கள், குளிர்பானங்கள் மற்றும் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் போன்ற தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிட விரும்புபரா நீங்கள்? அப்படியெனில், இனி ஜாக்கிரதையாக இருங்கள். இவை உயிரியல் ரீதியாக உங்களது வயதை வேகமாக்கும் என்று ஒரு ஆய்வு எச்சரித்துள்ளது.

ஒரு நபரின் உயிரியல் வயது என்பது, ஒரு நபரின் ஆரோக்கியத்தை அளவிடுவதற்கான புதிய வழியாகும். பல்வேறு மூலக்கூறு பயோமார்க்ஸர்களின் அடிப்படையில் ஒரு நபர் எவ்வளவு வயதானவராகத் தோன்றுகிறார் என்பதை இது குறிக்கிறது.


ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்ட ஒருவருக்கு, அவர்களின் காலவரிசை வயதைக் காட்டிலும் உயிரியல் வயது குறைவானதாக இருக்கலாம், அதே சமயம் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது போன்ற மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள், உயிரியல் முதுமையை துரிதப்படுத்தும் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஏஜ் அண்ட் ஏஜிங் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், அமெரிக்காவில் இருந்து 20 முதல் 79 வயதுடைய 16,055 பங்கேற்பாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் நுகர்வு ஒவ்வொரு 10 சதவீத அதிகரிப்புக்கும், உயிரியல் மற்றும் காலவரிசை வயதுக்கு இடையிலான இடைவெளி தோராயமாக 2.4 மாதங்களுக்கும் விரிவடைகிறது என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

News18

தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அதிக நுகர்வு கொண்ட பங்கேற்பாளர்கள் (அவர்களின் உணவில் உள்ள ஆற்றல் உட்கொள்ளலில் 68-100 சதவீதம்) உயிரியல் ரீதியாக குறைந்த அளவு பதப்படுத்தப்பட்ட உணவை எடுத்துக்கொண்டவர்களை விட 0.86 வயது மூத்தவர்கள் (அவர்களின் உணவில் 39 சதவீதம் அல்லது குறைவான ஆற்றல் உட்கொள்ளல்) என்பது தெரியவந்துள்ளது.

ஊட்டச்சத்து உயிர் வேதியியலாளரும், பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து, உணவுமுறை மற்றும் உணவுத் துறையின் மூத்த விரிவுரையாளரும், மருத்துவருமான பார்பரா கார்டோசோவின் கண்டுபிடிப்புகள் முடிந்தவரை பதப்படுத்தப்படாத மற்றும் குறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றார்.

“எங்கள் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் மிகப்பெரியது, எங்கள் கணிப்புகள் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு நுகர்வு மூலம் மொத்த ஆற்றல் உட்கொள்ளலில் ஒவ்வொரு 10 சதவிகிதம் அதிகரிப்பிற்கும், கிட்டத்தட்ட 2 சதவிகிதம் இறப்பு ஆபத்து மற்றும் இரண்டு ஆண்டுகள் 0.5 சதவிகிதம் நாள்பட்ட நோய் அபாயம் உள்ளது என்பதைக் காட்டுகிறது.” என்று அவர் மேலும் கூறினார்.தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பது பொதுவாக வீட்டு சமையலில் பயன்படுத்தப்படாத ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள், உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப், சுவை மேம்படுத்திகள் மற்றும் இரண்டு கலவைகளை கலக்கும் எமல்சிஃபையர்கள் போன்ற பொருட்களைக் கொண்ட தொழில்முறை உருவாக்கங்கள் ஆகும்.

இந்த உணவுகளில் அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்புகள் மற்றும் பிற ஆரோக்கியமற்ற கூறுகள் உள்ளன, மேலும் தேவைக்கு ஏற்பவும், பதப்படுத்தி நீண்ட நாள் பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பெருங்குடல் புற்றுநோயை தடுக்க இந்த 2 போதுமா..? ஆராய்ச்சியாளர்களின் தகவல்.!

December 13, 2024 0

 இளம் வயதினரிடையே பெருங்குடல் புற்றுநோயானது ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால் எளிய உணவு மாற்றங்கள் மூலம் இதை மாற்ற முடியும் என்று புதிய ஆய்வு கூறுகிறது. ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் இந்த ஆராய்ச்சி, சிறந்த உணவுப் பழக்கம் பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட செரிமானப் புற்றுநோய்களின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் எனக் கூறுகிறது.

பெருங்குடல் புற்றுநோய்களில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் 54 வயது மற்றும் அதை விட இள வயதினருக்கு ஏற்படுகிறது. இது 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விகிதத்தை விட இருமடங்காகும். இந்த அதிகரிப்பு தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் இதில் உணவுமுறை ஒரு முக்கிய பங்கு வகிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் சக்தி

நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான நிறைவுறா கொழுப்புகள் நிறைந்த உணவுகள் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை 15 சதவிகிதம் குறைக்கும் என்று ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்புகள், தினசரி உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.

News18

“அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை ஊக்குவிக்கின்றன. இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது” என்று ஃபிளிண்டர்ஸ் ஹெல்த் அண்ட் மெடிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் உள்ள ஊட்டச்சத்து தொற்றுநோயியல் நிபுணர் யோஹன்னஸ் மெலகு கூறுகிறார். அதேப்போல் ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் சேர்ப்பதோடு சர்க்கரை மற்றும் மதுபான உட்கொள்ளலைக் குறைப்பதும் முக்கியமானது.

ஆரோக்கியமற்ற உணவுகள் ஆபத்தை அதிகரிக்கும்

இதற்கு நேர்மாறாக, சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை பானங்கள் மற்றும் ஆல்கஹால் ஆகியவை பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை 14 சதவிகிதம் அதிகரிக்கின்றன.

அதிக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் முழு தானியங்களை உட்கொள்பவர்கள் பெருங்குடல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை 17 சதவீதம் குறைவாக அனுபவித்தனர். இது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் பாதுகாப்பு விளைவை எடுத்துக்காட்டுகிறது.

பெருங்குடல், மலக்குடல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களை உள்ளடக்கிய இரைப்பை குடல் புற்றுநோய்கள், உலகளவில் 4 புற்றுநோய்களில் ஒன்றாகவும் மற்றும் 3 இல் 1 புற்றுநோய் இறப்புகளுக்கும் காரணமாக இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆபத்தான விஷயம் என்னவென்றால், 50 வயதிற்குட்பட்டவர்களில் செரிமான புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

செரிமான புற்றுநோய் விகிதங்கள், குறிப்பாக இளைய மக்களிடையே உயர்ந்து வருவதால் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை இந்தக் கண்டுபிடிப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மேலும் செயலூக்கமான ஊட்டச்சத்தின் மூலம் செரிமான ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், செயல்படவும் சரியான நேரம் வந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நார்ச்சத்து நிறைந்த மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சர்க்கரை பானங்களைக் கட்டுப்படுத்துவது நீண்ட கால ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

நீங்க மொத்தமா சர்க்கரையை தவிர்த்துட்டீங்களா..? அப்படி மட்டும் பண்ணாதீங்க..!

December 13, 2024 0

 

சர்க்கரை நிறைந்த குளிர்பானங்களை குடிப்பதால் நம் ஆரோக்கியத்தில் ஏற்படும் தீங்குகளை நாம் நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் பொதுவாக சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை என்றே சொல்ல வேண்டும்.

சர்க்கரையை முற்றிலுமாகத் தவிர்ப்பதை விட, அவ்வப்போது கேக் போன்ற இனிப்புகள் சாப்பிடுவது உங்கள் இதயத்திற்கு நல்லது என புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. ஆனால் எக்காரணம் கொண்டும் சர்க்கரை பானங்கள் பக்கம் போய்விடாதீர்கள்.

ஸ்வீடனில் உள்ள லண்ட் பல்கலைக்கழகத்தின் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, பல்வேறு வகையான சர்க்கரை நுகர்வு இதய ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதிக சர்க்கரை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும் என்றாலும், ​​​​எப்போதாவது சாப்பிடுவது உண்மையில் சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு நல்லதே என இந்த ஆய்வு கூறுகிறது. அதேசமயம் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர் பானங்களை குடிப்பது பக்கவாதம், இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

மறுபுறம், சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பவர்களுடன் ஒப்பிடும்போது, ​​​​இனிப்பு தின்பண்டங்கள் அல்லது தேன் கலந்த உணவுகள் போன்ற எப்போதாவது சர்க்கரை தின்பண்டங்களை அனுபவிக்கும் நபர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து குறைவாக இருக்கிறது.

News18

நீங்கள் எவ்வளவு சர்க்கரை உட்கொள்கிறீர்கள் என்பது மட்டுமல்ல, அது எங்கிருந்து வருகிறது, அது உங்கள் வாழ்க்கை முறைக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதுதான் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது.

அதேசமயம் சர்க்கரை குளிர்பானங்கள் பெரும்பாலும் பசியைப் பூர்த்தி செய்யத் தவறிவிடுகின்றன. இதன் காரணமாக அதிகப்படியான நுகர்வுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு நேர்மாறாக, காஃபி குடிக்கும் போது இனிப்பு தின்பண்டங்கள் சாப்பிடும் கலாச்சாரம் பல நாடுகளில் உள்ளது. இதை அளவாக சாப்பிடுவதால் பெரிதாக எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஏன் மிகவும் சிறிய சர்க்கரை சிறந்ததாக இருக்காது..?

இதற்கிடையில் மிகக் குறைந்த சர்க்கரை உட்கொள்ளல் சிறந்ததல்ல என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எப்போதாவது இனிப்பு பதார்த்தங்களை உட்கொள்பவர்களை விட சர்க்கரை தின்பண்டங்களை முற்றிலுமாகத் தவிர்ப்பவர்கள் இதய நோய்களுக்கான அதிக ஆபத்துகளைக் கொண்டவர்களாக தெரிய வந்துள்ளது.
“எங்கள் ஆய்வில் இதற்கான காரணத்தையும் விளைவையும் நிரூபிக்க முடியவில்லை என்றாலும், நல்ல இதய ஆரோக்கியத்திற்கு சர்க்கரையை முற்றிலுமாக அகற்றுவது அவசியமில்லை என்று கண்டுபிடிப்புகள் தெரிவிப்பதாக” ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆராய்ச்சி கூறுவது என்ன?

இந்தக் கண்டுபிடிப்புகள் ஒரு நுணுக்கமான தகவலை வழங்கினாலும், உணவுப் பழக்கங்கள் கலாச்சார மற்றும் அந்தந்த பகுதிகளுக்கானவை என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்தனர்.

“இந்த முடிவுகள் ஸ்வீடிஷ் மக்கள் மற்றும் அவர்களின் மரபுகளை அடிப்படையாகக் கொண்டவை. இது மற்ற நாட்டில் வாழும் மக்களுக்கு நேரடியாகப் பொருந்தாது,” என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஆகவே திருவிழா காலங்களில், விசேஷ நாட்களில் இனிப்பு தின்பண்டங்கள் அல்லது கேக் சாப்பிடுவது பெரிதாக எந்தப் பிரச்சனையும் ஏற்படுத்தாது. ஆனால் சோடாக்களை ஒருபோதும் குடிக்காதீர்கள்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

AVNL ஆணையத்தில் Young Professional காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.40,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

December 13, 2024 0

 AVNL ஆணையத்தில் Young Professional காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.40,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Armoured Vehicle Nigam Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Young Professional பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Young Professional பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MA / MBA / PG Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.12.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Download Notification PDF

  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்./



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

IIT Madras-ல் Senior Executive வேலைவாய்ப்பு 2024 – ரூ.60,000/- சம்பளம் || முழு விவரங்களுடன்!

December 13, 2024 0

 IIT Madras-ல் Senior Executive வேலைவாய்ப்பு 2024 – ரூ.60,000/- சம்பளம் || முழு விவரங்களுடன்!

IIT Madras ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Senior Executive பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Senior Executive பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / M.Sc / MCA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.12.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Download Notification PDF

  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.37,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு || உடனே விண்ணப்பியுங்கள்!

December 13, 2024 0

 IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.37,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு || உடனே விண்ணப்பியுங்கள்!

IIITDM காஞ்சிபுரம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / ME / M.Tech / M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.12.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

    Download Notification PDF

  • 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

December 13, 2024 0

 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

பாரதியார் பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில்  வெளியிட்டது. இதில் Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.23,760/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc in Botany தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.37,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு || உடனே விண்ணப்பியுங்கள்!

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,600/- முதல் ரூ.23,760/- வரை ஊதியமாக  வழங்கப்படும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ponmurugan@buc.edu.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 15.12.2024ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

December 13, 2024 0

 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது Junior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 1 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 25,000/- முதல் ரூ. 37,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 15.12.2024ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் - ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கையேடு

December 13, 2024 0

உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான வகுப்பாசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

December 13, 2024 0
IMG_20241213_215832

உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான வகுப்பாசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

`முன்பு ஒரு பள்ளிக்கு ஓராசிரியரை நியமித்ததன் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்ட பணிச்சுமை கருதி நடவடிக்கை`....

DSE - Naan Mudhalvan Proceedings - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNPSC தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம்

December 13, 2024 0

 
தேர்வர்களின் நலன் கருதியும் அரசுத் துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும் , ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- II ( தொகுதி மற்றும் IIA பணிகள் ) -க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும் , ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- IV ( தொகுதி IV பணிகள் ) -க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டு மற்றும் https://tnpsc.gov.in/English/syllabus.html https://tnpsc.gov.in/tamil/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது .

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் சிறப்பு கவனம் தேவையுடைய குழந்தைகளுக்கான "உள்ளடக்கிய கல்வி" தலைப்பில் இணைய வழியிலான பயிற்சி தொடக்கம் - Video Explanation

December 13, 2024 0

 1 வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் சிறப்பு கவனம் தேவையுடைய குழந்தைகளுக்கான "உள்ளடக்கிய கல்வி" தலைப்பில் இணைய வழியிலான பயிற்சிக்கு முதலில் emis.tnschools.gov.in என்ற தளத்திற்கு சென்று அதிலிருந்தே lms தளத்திற்கு செல்ல வசதி option கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த வீடியோவை பார்க்கவும்..


🔰 உள்ளடக்கிய கல்வி இணைய வழிப்பயிற்சி கட்டகங்கள் இணைக்கப்பட்டுவிட்டன.


🪷 1 முதல் 12ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உள்ளடக்கிய கல்வி சார்ந்த இணைய வழிப்பயிற்சியை Login செய்து மேற்கொள்ளும் வழிமுறை...


அனைத்து கட்டகங்களையும் நிறைவு செய்த பின் பயிற்சி சார்ந்த சான்றிதழ் Download செய்து கொள்ளலாம்.

Video Explanation 👇👇👇

https://youtu.be/bi6L4EGViuo?si=hzl4guR4CvyPjC8Z



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

CMC வேலூர் கல்லூரியில் Lecturer வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

December 13, 2024 0

 

CMC வேலூர் கல்லூரியில் Lecturer வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

 

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது  வெளியிட்டுள்ளது. இதில் Assistant Professor, Lecturer, Junior Clinical Psychologist, Junior Special Teacher பணிக்கான 4 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Professor, Lecturer, Junior Clinical Psychologist, Junior Special Teacher பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் DM / M.Phil / M.Sc /  MA  தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 14.12.2024ம் தேதிக்குள்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழக அரசில் Lab Technician வேலைவாய்ப்பு – ITI தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

December 13, 2024 0

 

தமிழக அரசில் Lab Technician வேலைவாய்ப்பு – ITI தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Lab Technician, Programme Assistant பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Lab Technician, Programme Assistant பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடம் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.13,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNSED Schools App Library Module New update - Video Explanation

December 13, 2024 0

 IMG_20241213_184731

TNSED Schools App Library Module New update - Video Explanation 


🪷 புதிதாக சேர்ந்த மற்றும் இதுவரை Book செய்ய முடியாத மாணவர்களுக்கு Book Add செய்து கொள்ள முடியும்


🔅2 வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே Shuffle Button கிளிக் செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது


🔅Manual shelf closs செய்து புதிதாக Crsate செய்ய முடியும் அதற்கான வழிமுறைகள்👇👇👇


https://youtu.be/U9Okg3qk0Tc?si=EYlIp4Ba2Py3kO-L


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group