1 - 5th Std - Term 3 - Monthly Wise Syllabus - Download here
6 - 8th Std - Term 3 - Monthly Wise Syllabus - Download here
Adding Green to your Life
வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate பணிக்கான ஒரே ஒரு காலிப்பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
VIT காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Research Associate பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Research Associate கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
VIT வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Research Associate ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.49,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
VIT தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
The Regional Institute of English . South India { RIES1 ) Bangalore மூலமாக தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு 16.012025 முதல் 14,022025 வரை 30 Days CELT Programme பயிற்சியானது உண்டு உறைவிட பயிற்சியாக வழங்கப்படவுள்ளது.
மேலும் , இப்பயிற்சியில் விருப்பமுள்ள ஆசிரியர்களை தெரிவு செய்து பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ; மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு , தங்கள் மாவட்டத்தில் ஏற்கனவே இப்பயிற்சியில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்களைத் தவிர்த்து பிற தொடக்கப் பள்ளி ஆங்கில பாட ஆசிரியர்களுள் , ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் வீதம் , RIESI , Bangalore- லிருந்து பெறப்பட்ட கடிதத்தில் ( இணைக்கப்பட்டுள்ளது ) தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளைப் பின்பற்றி . தேர்ந்தெடுத்து இத்துடன் இணைக்கப்பட்டுள்or Excel படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்தும் , பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தில் மாவட்டக்கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி ) கையொப்பமிட்டு Scan செய்து 07.012025 - க்குள் daksections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
Bangalore Training - Details pdf - Download here
பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்குரிய கால அட்டவணையை என்டிஏ வெளியிட்டுள்ளது.
நம்நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த அக்டோபர் 28-ல் தொடங்கி நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தேர்வெழுத லட்சக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் எந்தெந்த நாளில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும் என்ற விரிவான கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பிஇ, பிடெக் படிப்புக்கான முதல் தாள் தேர்வு ஜனவரி 22, 23, 24 மற்றும் 28, 29-ம் தேதிகளில் காலை, மாலை என இருவேளைகளாக நடத்தப்படும். அதேபோல், பிஆர்க், பி.பிளானிங் படிப்புக்கான 2-ம் தாள் தேர்வு ஜனவரி 30-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.
இதன் விவரங்களை மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறும். இதன் முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியிடப்படும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட இதர தகவல்கள் பின்னர் வெளியிடப்படும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு இந்த மாதம் கற்றல் அடைவுத் திறன் தோ்வு நடத்தப்படவுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக அவ்வப்போது ‘ஸ்லாஸ்’ எனும் மாநில கற்றல் அடைவுத் திறன் தோ்வு நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி நிகழாண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவா்களுக்கு ஸ்லாஸ் தோ்வு ஜனவரி 3 அல்லது 4-ஆம் வாரத்தில் நடத்தப்பட உள்ளது.
இந்த தோ்வு கொள்குறி வினாத்தாள் அடிப்படையில் நடைபெறும்.
வினாத்தாளில் 3-ஆம் வகுப்பு 35 கேள்விகள், 5-ஆம் வகுப்புக்கு 45 வினாக்கள், 8-ஆம் வகுப்புக்கு 50 கேள்விகள் இடம்பெறும். இதற்கான அறைக் கண்காணிப்பாளா்களாக கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் 71,019 மாணவா்கள் நியமிக்கப்பட உள்ளனா். இவா்களுக்கு தோ்வுக்கு உரிய முறையான பயிற்சி வழங்கப்பட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படுவா்.
இதுதவிர தோ்வு கண்காணிப்பு பணிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் கட்டாயம் ஈடுபட வேண்டும். எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் தராமல் வழிகாட்டுதல்களின்படி தோ்வை சிறப்பாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடத்தி முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Term 3 - Monthly Wise Syllabus
1 - 5th Std - Term 3 - Monthly Wise Syllabus - Download here
6 - 8th Std - Term 3 - Monthly Wise Syllabus - Download here
CTET DEC 2024 - TENTATIVE KEY RELEASED
Display of scanned images of OMR Answer Sheets & display / Challenge of Answer Keys All the candidates who appeared in CTET held on 14th and 15th December , 2024 are informed that the scanned images of OMR Answer Sheet of the candidates & Answer Keys are uploaded on the website https://ctet.nic.in/ from 01/01/2025 to 05/01/2025 ( upto 11:59 PM ) . There is a provision for the candidates to challenge the answer keys through the link available on the website https://ctet.nic.in/ from 01/01/2025 to 05/01/2025 ( upto 11:59 PM ) . A fee of Rs . 1000 / - per question is required to be submitted through credit / debit card . The fee once paid is non - refundable . If the challenge is accepted by the Board i.e. if any mistake is noticed by the subject experts in the answer key , a policy decision will be notified and the fee shall be refunded . The refund ( if any ) will be transferred online to the concerned credit / debit card account , so the candidates are advised to pay from their own credit / debit card . The decision of Board on the challenges shall be final and no further communication will be entertained .
தமிழக அரசு நடத்தவுள்ள பருவநிலை மாற்ற மாநாடு தொடர்பான சின்னம் வடிவமைப்பு போட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது. இதில் முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பருவநிலை மாற்றம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை சார்பில் பருவநிலை மாற்றம் மாநாடு 3.0 வரும் பிப்ரவரியில் நடைபெற உள்ளது.
பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு பணியில் இளைஞர்களை ஈடுபடுத்தும் வகையில் இந்த மாநாடு தொடர்பான சின்னம் வடிவமைப்பு போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்கலாம். பருவநிலை மாற்ற பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளில் பங்கேற்கும் வகையில் இளைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த இந்த போட்டி ஒரு தளமாக அமையும்.
மாணவர்கள் வடிவமைக்கும் சின்னம், சுற்றுச்சூழல் நீடித்த வளர்ச்சி, புதுமை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்க வேண்டும். சிறந்த சின்னத்தை வடிவமைப்போருக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். மேலும் 10 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களும் இளைஞர்களும் தங்கள் படைப்புகளை கியூஆர் கோடு வாயிலாகவோ mascotccm@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ ஜனவரி 10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதற்கான கியூஆர் கோடு https://tnclimatechangemission.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை, 1, ஜீனியஸ் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை 600015 (தொலைபேசி எண் 044- 24336421) என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசாணை ( நிலை ) எண் : 72 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் ( ஆதிந 3 ) துறை நாள் 16.092024 இன்படி முழுநேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ .1,00,000 / - வீதம் 2000 மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் என அரசு ஆணையிட்டுள்ளது.
எனவே கீழ்க்கண்ட விதிமுறைகளுக்குட்பட்டு 2024-2025 - ஆம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ( Ph.D ) பயிலும் புதுப்பித்தல் ( Renewal ) மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Ph.D Application Instructions - Download here
கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு மாணவர்கள் ஜன.24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதற்காக ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கு 8-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தேர்வுத் துறை இணையதளத்தில் (dge.tn.gov.in) விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
பூர்த்தி செய்த படிவங்களை தேர்வுக் கட்டணம் ரூ.50-ஐ சேர்த்து தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஜன.24-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்காக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை எமிஸ் தளத்தில் உறுதிசெய்ய வேண்டுமென தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் 2012-13-ம் கல்வியாண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வரும் கல்வியாண்டின்(2025-26) முதல் பருவத்தில் இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்கான உத்தேச தேவைப் பட்டியல் எமிஸ் தளத்தின் மூலம் பெறப்பட்டு, மாணவர்கள் எண்ணிக்கை விவரம் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளது.
எனவே, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் விவரங்களும் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு இந்த மாதம் கற்றல் அடைவுத் திறன் தோ்வு நடத்தப்படவுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக அவ்வப்போது ‘ஸ்லாஸ்’ எனும் மாநில கற்றல் அடைவுத் திறன் தோ்வு நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி நிகழாண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவா்களுக்கு ஸ்லாஸ் தோ்வு ஜனவரி 3 அல்லது 4-ஆம் வாரத்தில் நடத்தப்பட உள்ளது.
இந்த தோ்வு கொள்குறி வினாத்தாள் அடிப்படையில் நடைபெறும்.
வினாத்தாளில் 3-ஆம் வகுப்பு 35 கேள்விகள், 5-ஆம் வகுப்புக்கு 45 வினாக்கள், 8-ஆம் வகுப்புக்கு 50 கேள்விகள் இடம்பெறும். இதற்கான அறைக் கண்காணிப்பாளா்களாக கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் 71,019 மாணவா்கள் நியமிக்கப்பட உள்ளனா். இவா்களுக்கு தோ்வுக்கு உரிய முறையான பயிற்சி வழங்கப்பட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படுவா்.
இதுதவிர தோ்வு கண்காணிப்பு பணிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் கட்டாயம் ஈடுபட வேண்டும். எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் தராமல் வழிகாட்டுதல்களின்படி தோ்வை சிறப்பாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடத்தி முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் '0' என மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆண்டு ஆய்வு அறிக்கையில் தகவல்...
...
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
2023-2024 - ஆம் ஆண்டிற்கான ' சி ' மற்றும் ' டி ' பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் ' சி ' மற்றும் ' டி ' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் , குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவு 👇👇👇
🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Copyright (c) AGRIEXAM.IN All Right Reseved