JEE தேர்வு வரும் 22ல் துவக்கம்

 



ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில், பொறியியல், தொழில்நுட்ப படிப்பில் சேருவதற்கான, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட நுழைவுத்தேர்வு, வரும் 22 முதல், 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நாட்டில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களிலும், இந்தியாவுக்கு வெளியில், 15 தேர்வு மையங்களிலும், வரும் 22, 23, 24, 28, 29ம் தேதிகளில், பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான முதல் தாள் தேர்வுகள் நடக்க உள்ளன.

அதேபோல, பி.ஆர்க்., - பி.பிளானிங், உள்ளிட்ட படிப்புகளுக்கான, 2ஏ, 2பி, 2ஏ,பி., ஆகிய தாள்களுக்கான தேர்வுகள், வரும் 30ம் தேதி நடக்கும். விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு மையம் அமைந்துள்ள நகரம் பற்றிய விபரங்களை, https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தேர்வாளர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள், பின்னர் வழங்கப்படும். மேலும் விபரங்களை, www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNSED App - Term 3 Books Update Now!

 




தற்பொழுது மூன்றாம் பருவத்திற்கான பாடநூல் மற்றும் நோட்டு புத்தகங்களை TNSED SCHOOLS செயலியில் பதிவேற்றம் செய்யும் வகையில் உள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

25ம் தேதி திருப்புதல் தேர்வு

 சேலம் :
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு கடந்த, 6ல் தொடங்கிய முதல் திருப்புதல் தேர்வு வரும், 24 வரை நடக்கிறது.

10ம் வகுப்புக்கு, முதல்கட்ட திருப்புதல் தேர்வு கடந்த, 6ல் தொடங்கி வரும், 21 வரை நடக்கிறது. ஆனால் வரும், 13ல் போகி பண்டிகையன்று, மாணவ - மாணவியருக்கு திருப்புதல் தேர்வு நடக்க உள்ளது. அத்தேர்வை, வேறு நாளுக்கு மாற்ற, ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் கூறுகையில், வரும், 13ல் நடக்கவிருந்த தேர்வு, 25க்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது என்றார்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Assistant வேலை – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Assistant வேலை – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Supervisor, Nurse, Assistant, Watchman பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:

Supervisor, Nurse, Assistant, Watchman பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / Diploma / Nursing தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.7,500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

BEL நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

 

BEL நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Engineer-I பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Engineer-I பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Engineer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Project Engineer ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ஆண்டின் அடிப்படையில் ரூ.40,000/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
University of Madras காலிப்பணியிடங்கள்:

Project Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Assistant கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree in M.Sc / Ph.D தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

University of Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Project Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

University of Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் bm.raaman@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ரூ.2,72,350/- சம்பளத்தில் General Manager வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 ரூ.2,72,350/- சம்பளத்தில் General Manager வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

TNPL ஆனது GM, Management Trainee, Executive Director பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

TNPL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி GM, Management Trainee, Executive Director பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / BE / B.Tech / CA / CMA / M.Sc / MA / MBA / MSW / PG Diploma தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 27 என்றும் அதிகபட்ச வயது 57 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.33,500/- முதல் ரூ.2,72,350/- வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

எண்ணும் எழுத்தும்! - தினமணி கட்டுரை

 

dinamani%2F2025-01-13%2Fpk43luaj%2FTNIEimport2020330originalcvbbvgb

முனைவா் பவித்ரா நந்தகுமாா்


இந்த உலகில் வாழும் மக்களுக்கு இரு கண்களாகப் பயன்படுவது எண்களும் எழுத்துகளும் தான். இதை வள்ளுவா்,


எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிா்க்கு - என்று ஆணித்தரமாகக் கூறுகிறாா். ஒவ்வொரு மனிதனுக்கும் இரு கண்கள் எப்படி எல்லாம் பயன்படுகிறதோ, அதைப் போலவே எண்களும் எழுத்துகளும் பயன்படுகின்றன. ‘எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்’ என்று திருவள்ளுவரின் கருத்தைச் சாா்ந்தே ஔவையாரும் உறுதிபட முன்வைக்கிறாா். எண்ணையும் எழுத்தையும் சிறப்பாகக் கையாள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.


இந்த எண்ணையும் எழுத்தையும் ஒரு மாணவனால் அடையாளம் காண முடியாமல் போகும் போது, கல்வி கானல் நீராகிறது. ஒரு குழந்தை ஐந்து வயது முதல் 8 வயதுக்குள்ளாக எண்களையும் எழுத்துகளையும் அடையாளம் கண்டு கொண்டால் மட்டுமே அந்த மாணவனால் கல்வியின் அடுத்தடுத்த படிநிலைகளில் தடுமாற்றம் இன்றி முன்னேறிச் செல்ல முடியும். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனால் ஒரு வாா்த்தையை எழுத்துக் கூட்டி வாசிக்கத் தெரியவில்லை எனும்போது, அவனால் எப்படி அடுத்தடுத்த வகுப்புகளில் இருக்கும் பாடத்திட்டத்தை உள்வாங்க இயலும்?


கரோனா நம்மில் பெருத்த மாற்றங்களை ஏற்படுத்திச் சென்ற பிறகு, தனிமனித சமூக வாழ்க்கையில் எண்ணற்ற இழப்புகளையும் பாதிப்புகளையும் சந்தித்து இருக்கிறோம்.


குறிப்பாக மாணவா்களிடத்தில் பெரிய கற்றல் இடைவெளியை இந்த கரோனா ஏற்படுத்தியிருந்தது. அதைச் சீா் செய்ய பள்ளிக்கல்வித்துறையால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தான் இந்த எண்ணும் எழுத்தும். தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வகுப்புகளில் கற்றல் கற்பித்தல் தரத்தினை மேம்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம் இது. தமிழ்நாடு முதலமைச்சரால் 2022 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 -ஆம் தேதி அன்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இரண்டரை வருடங்களுக்கு முன் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் விளைச்சலை தற்போது அறுவடை செய்ய தொடங்கி இருக்கின்றன அரசுப் பள்ளிகள். இதனால் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பை நிறைவு செய்யும் மாணவா்கள் பொருள் புரிந்து படிக்கவும் எழுதவும் அடிப்படை கணக்குகளை செய்து பாா்க்கவும் தொடங்கியிருப்பது, இந்த திட்டத்தின் வெற்றியை நமக்கு எடுத்துச் சொல்கிறது.


கற்றல் இடைவெளி ஏற்பட்டு 19 மாத காலத்துக்கு பின் பள்ளிக்குள் அடி எடுத்து வைத்த தொடக்கப்பள்ளி குழந்தைகள் நேரடி வகுப்பறை கற்றல் அனுபவத்தைப் பெறவே இல்லை. இந்த குறையைக் களையும் விதமாக வந்த இந்தத் திட்டம் மாணவா்களுடைய அடித்தளமான எண்ணையும் எழுத்தையும் அறிமுகப்படுத்துவதோடு ஆழமாக முன்னெடுத்தும் சென்று அடிப்படையான வாழ்வியல் திறன்கள், பண்பியல் திறன்களையும் உள்ளடக்கி, கண்ணெதிரே விஸ்வரூபமெடுத்து நின்ற சவாலை சிறப்பாக முறியடித்திருக்கிறது.


செயல்வழி கற்றலை சாராம்சமாகக் கொண்ட இதில் ஒரே வகுப்பில் பல்வேறு கற்றல் நிலைகளில் இருந்தாலும், அவா்களின் நிலைக்கு ஏற்ப கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை குழந்தை மைய நோக்கோடு வழங்கி வருவது சிறப்பு. இதன் மூலம் தொடக்கப்பள்ளி மாணவா்கள் பேராா்வத்துடன் கற்றலில் ஈடுபடுவது தமிழகத்தில் கல்வி சாா்ந்த புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.


கல்வி சாா்ந்த செயல்பாடுகள் மட்டுமின்றி, கல்வி இணை செயல்பாடுகளிலும் தானே கற்பது, குழுக்களாக பலா் இணைந்து கற்பது போன்றவற்றிலும் மாணவா்களின் திறன்கள் ஆக்கம் பூா்வமாக மேம்பட்டுள்ளன. வகுப்பறையில் குழந்தைகள் ஆா்வத்துடன் அச்சமின்றி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரையாடுவதை வைத்து இது ஒரு நட்சத்திரத் திட்டம் என்று நெஞ்சை நிமிா்த்தி சொல்லலாம்.


வகுப்பறை செயல்பாடுகளை தங்களுடைய தினசரி வாழ்வியலுக்குள் மாணவா்கள் கொண்டு வந்திருக்கிறாா்கள். இந்த நவீன உலகில் ஒரு கல்லூரிப் பேராசிரியரின் இடத்தைக் கூட மாற்றத்திற்கு உள்படுத்தி கணினி கொண்டு மாணவா்களுக்கு கற்றுத் தர முடியும். ஆனால் தொடக்க கல்வியில் இப்படி ஒரு முயற்சி சாத்தியப்பட முடியவே முடியாது. அதிலும் இந்த எண்ணும் எழுத்தும் திட்டத்தை ஆசிரியா்கள் இன்றி நடைமுறைபடுத்த 1% கூட வாய்ப்பு இல்லை.


ஒரு தொடக்கக்கல்வி மாணவரிடத்தில் எழுத்துகள் குறித்த அடிப்படைப் புரிதலை ஏற்படுத்துவது தான் மிக மிக சவாலானது. அந்த வகையில் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையேட்டின் பின் இணைப்பிலேயே செயல்பாடுகளைச் செய்வதற்கான அத்தியாவசிய படங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆசிரியா்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு வகுப்பறைக்குத் தேவையான கற்றல் கற்பித்தல் உபகரணங்களும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் மாணவா்களின் கற்றல் நிலை மதிப்பீடுகளை இணையத்தில் உள்ளீடு செய்ய ஆசிரியா்களுக்கு ”டேப்” கொடுக்கப்பட்டிருப்பது ஓா் ஆரோக்கியமான வளா்ச்சி நிலை.


இந்த திட்டத்தின் தொடக்க நிலையில் இருந்த சிற்சில குறைபாடுகளும் காலத்திற்கு ஏற்ப கல்வியாளா்களால் களையப்பட்டு வருகிறது. உதாரணமாக மாணவா்களுக்கு எழுத்து வேலைகள் குறைவாக இருந்ததாக ஆசிரியா்களிடமிருந்து வந்த புகாா்களின் அடிப்படையில் அது சீா்செய்யப்பட்டு தற்போது மாணவா்களுக்கு எழுத்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் ஒன்றாம் வகுப்பு நிறைவடையும் தறுவாயிலேயே மாணவனால் எழுத்துகளை மட்டுமல்ல எழுத்துகளை கூட்டி வாா்த்தைகளை வாசித்துக் காட்ட முடிகிறது.


முன்பிருந்த பழைய திட்டங்களில் ஐந்தாம் வகுப்பு மாணவா்கள் கூட தமிழில் குறில் நெடில் வேறுபாடுகளை உணராமல் உச்சரிப்பிலும் எழுதுவதிலும் பல பிழைகளை செய்வா். ஆனால் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் குறில் நெடில் வேறுபாடுகளை அவா்கள் எளிதில் உணா்ந்து கொள்கிறாா்கள்.


அதுமட்டுமல்லாமல், வாா்த்தைகளில் இருந்து ஒலிகளைச் சுலபமாக அடையாளம் தெரிந்து கொள்கிறாா்கள்.


இதில் மற்றுமொரு ஆரோக்கியமான அம்சம் இருக்கிறது. அது தான் குழந்தைகளை பேச ஊக்குவிக்கும் வானவில் மேடை. பல நிறங்களைக் கொண்ட வானவில்லைப் போல பலவித செயல்பாடுகளை மாணவா்கள் மேடையேறி சுதந்திரமாக சொல்ல இயலும். இதனால் சின்ன வயதிலேயே அவா்கள் தன்னம்பிக்கை உடையவா்களாக உருமாற்றம் கொள்கிறாா்கள்.


இந்த திட்டத்தின் மூலம் மொழியின் ஒவ்வோா் ஒலியையும் எழுத்தையும் எண்ணற்ற உதாரணங்களுடன் அறிமுகப்படுத்தி, அதன் வோ்ச்சொல் வரை மாணவா்களுக்குள்ளே கொண்டு போக அதிக நேரம் எடுத்துக் கொள்வது உண்மைதான். ஆனால் இந்த ஆழமான புரிதல் பின் நாளைய கல்விக்கு பலமான அஸ்திவாரமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதனாலேயே அரும்பு, மொட்டு, மலா் என்னும் நிலைகளில் மாணவா்களை வகைப்படுத்தி அவா்கள் முழுமையாக உணா்ந்த மேல் அடுத்த நிலைக்கு கூட்டிச் செல்லப்படுகிறாா்கள்.


அவா்களாகவே ஒவ்வொரு நிலையையும் சுயமாகக் கற்று முன்னேறுகிறாா்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதன்படி, இந்த எண்ணும் எழுத்து திட்டத்தை சிறப்பாகக் கையாளும்போது மெல்லக் கற்கும் மாணவா்கள் கூட படிப்பில் சுட்டியாக மாறிவிடும் வாய்ப்புகள் அதிகம்.


இந்த எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆசிரியா்கள் எதிா்கொள்ளும் சில சவால்களும் இருக்கத் தான் செய்கின்றன. ஒரு வகுப்பில் அதிக மாணவா்கள் இருந்தாலும் அடுத்தடுத்த நிலையை அடைய காலதாமதம் ஏற்படும். செயல்பாடுகளில் பங்கேற்று முடித்த பிற மாணவா்களின் அழுகை, கூச்சல், சண்டை போன்றவற்றைச் சமாளித்து கற்றல் அடைவை நெருங்குவது கடினமாகிவிடும்.


ஒவ்வொரு குழந்தையும் ஆசிரியா் தன்னிடம் அதிக நேரம் கவனம் செலுத்த வேண்டும் என்றே நினைக்கிறாா்கள். அதிலும் தொடக்கக் கல்வி பயிலும் இளங்குருத்துகள் இதைப் போன்ற மனநிலை கொண்டவா்கள்தான். மாணவா்களின் தொடா் விடுமுறை, உடல் நலக்குறைவு போன்றவை இருந்தாலும் முன்னேற்றம் ஏற்படாது. இதனால் இது போன்ற சிற்சில குறைபாடுகளும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதிகாரிகளாலும் ஆசிரியா்களாலும் சீா் செய்யப்பட்டு செம்மையாகிக் கொண்டே வருகிறது.


தொடக்கத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை நடைமுறையில் இருந்த திட்டமானது தற்போது நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அரசு எத்தனை திட்டங்கள் தீட்டினாலும் அதை சிறப்பாக மாணவா்களிடம் கொண்டு சோ்ப்பது இறுதியில் ஆசிரியா்களிடம் தான் உள்ளது. ஏனெனில் அவா்கள் தான் மாணவா்களுடன் களத்தில் நின்று ஒன்றாகப் பயணிக்கிறாா்கள்.


இந்த திட்டத்தைத் தாண்டி ஆசிரியா்கள் எண்ணற்ற பல புதுமைகளை மாணவா்கள் கற்றல் சாா்ந்து தொடா்ந்து முன்னெடுப்பதால் தான் கற்றல் தொய்விலிருந்து அவா்கள் மீண்டு அற்புதமான வளா்ச்சியாக அது இன்று சாத்தியமாகி இருக்கிறது.


அமெரிக்க கல்வியாளரான ஜான் துவே கண்டெடுத்த ‘செய்து கற்றல்’ என்னும் கல்விக் கொள்கையில் கற்றல் என்பது பொருத்தமானதாகவும் பயன்படுத்துவதாகவும் அமைய வேண்டும் என்பதில் தீா்மானமாக இருந்தாா். கற்றல் அப்படி அமையும் பட்சத்தில் அது நூற்கல்வியை விட சிறந்ததாக இருக்கும் என்றும் சொல்கிறாா்.


அந்த வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் ஓா் உயிரோட்டமான வகுப்பறையாக செயல்பட்டு மாற்றத்திற்கு வித்திடுகிறது. இந்த மாற்றத்தில் ஆசிரியா்களுடன் பெற்றோா்களும் இணைந்து செயல்பட வேண்டும்.




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேட்டில் உள்ள கதைகளின் வீடியோக்கள்

 

.com/

எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேட்டில் உள்ள கதைகளின் வீடியோக்கள் 👇👇👇👇

THB story videos Collection - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழ் எழுத்துக்கள்

 தமிழ் எழுத்துக்கள்


தொடக்கநிலை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ் எழுத்துக்கள் 20 பக்கங்கள் கொண்ட வண்ணத் தாள்களை இணைத்துள்ளேன் ஆசிரியர் பெருமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

SLAS EXAM OMR SHEET

 SLAS EXAM OMR SHEET


SLAS EXAM OMR SHEET இந்தப் பகுதியில் இணைத்துள்ளேன் தயவு கூர்ந்து ஆசிரியர்கள் இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

2025-2026ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ/மாணவியர்களின் விவரம் - பள்ளிகளின் எண்ணிக்கை விவரம் – TNSED App- பதிவேற்றம் மேற்கொள்ள உத்தரவு

 தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6 ந.க.எண்.70367/இ/இ1/2024 நாள். 12.2024 


பொருள்: 

பள்ளிக் கல்வி -2025-2026ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ/மாணவியர்களின் விவரம் - பள்ளிகளின் எண்ணிக்கை விவரம் – TNSED App- பதிவேற்றம் மேற்கொள்ள செய்தல் தொடர்பாக. 

பார்வை 

சென்னை -6, மாநித் திட்ட இயக்குநரின் கடித ந.க.எண்.4701/C1/SWD/EMIS/2024 நாள். 23.12.2024. 

2025-2026 ஆம் கல்வியாண்டில் விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்திற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் EMIS web portal -ல் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை விவரங்களில் வேறுபாடுகள் ஏற்றம் இறக்கமாக உள்ளதால் ஒரு வார காலத்திற்குள் குறைபாடுகளை சீர் செய்து EMIS web port-ல் பள்ளிகள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை Freeze செய்து முடிவான விவரங்களை சமூக நல ஆணையரகத்திற்கு வழங்க வேண்டியுள்ளதால் 2025-2026 ஆம் கல்வியாண்டில் சத்துணவு உண்ணும் மாணாக்கர்களின் விவரங்களை TNSED App-ல் உரிய பதிவேற்றம் உடனடியாக மேற்கொள்ளமாறும சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட அலுவலர்களும் கேட்டுக் முதன்மைக் கொள்ளப்படுகிறார்கள். 

கல்வி மேலும், TNSED App-ல் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து உறுதிபடுத்திடவும், இப்பணியினை உடனடியாக முடிப்பதற்கு சார்ந்த, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும், சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

10 மற்றும் 12ஆம் வகுப்பு மெல்ல கற்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி கையேடு

 

IMG_20250110_145411

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறப்பு முன்னெடுப்பான 10 மற்றும் 12ஆம் வகுப்பு மெல்ல கற்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


வேண்டுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்

https://thanjavur.nic.in/education/


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பள்ளி மாணவர்களுக்கான முதல்வர் திறனாய்வு தேர்வுக்கு ஜன.30-ல் ஹால்டிக்கெட்

 

1346823

முதல்வர் திறனாய்வு தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்கள் ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளி மாணவர்களுக்கான தமிழக முதல்வர் திறனாய்வு தேர்வு ஜன.25-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலுடன் கூடிய வருகைத் தாள்கள், தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தேர்வுக்கான ஹால்டிக்கெட்களையும் மேற்கண்ட வலைதளத்தில் இருந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.


அதன்பின் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்களை விநியோகம் செய்து, தேர்வு மைய விவரங்களை பள்ளி தலைமையாசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். ஹால்டிக்கெட்களில் ஏதும் திருத்தங்கள் இருப்பின் தலைமையாசிரியர்கள் அதை சிவப்பு நிற மை பேனாவால் திருத்திக் கொள்ளலாம். மாணவர் புகைப்படம் தவறாக இருந்தால் புதிய படத்தை ஹால்டிக்கெட்டில் ஒட்டி அதன்மீது பள்ளியின் முத்திரையை பதிக்க வேண்டும். அத்தகைய மாணவர்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் தேர்வுக்கான அனுமதி தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படும் பிளஸ் 1 மாணவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு ரூ.10,000 இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group