Agri Info

Adding Green to your Life

January 22, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.01.2025

January 22, 2025 0

 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

திருக்குறள்: 

பால்: பொருட்பால்

 அதிகாரம்: குடிமை 

குறள் எண்:953

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
 வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.

பொருள்: முகமலர்ச்சி, கொடைத்தன்மை, இனியசொல், பிறரை இகழாமை, இந்நான்கும் நல்குடியின் இயல்புகள்.

பழமொழி :

சிறியோர் எல்லாம் சிறியர் அல்ல. 

All that are little are not inferiors.

இரண்டொழுக்க பண்புகள் :   

*உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.    

*விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு  விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.

பொன்மொழி :

எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படும் -நபிகள் நாயகம்

பொது அறிவு : 

1. Vermiculture என்பது

விடை: மண்புழு வளர்த்தல்.          

2.தேநீரில் அடங்கியுள்ள கரிம அமிலம் எது?

விடை :  டானிக் அமிலம்

English words & meanings :

 Poet.    -     கவிஞர்
 
Singer.   -        பாடகர்

வேளாண்மையும் வாழ்வும் : 

 வரலாறு நெடுகிலும், தண்ணீரைச் சேகரித்து, சேமித்து / இருப்புவைத்துக் கொள்ளும் தன்னுடைய திறனை மனிதன் வளர்த்துக்கொண்டுள்ளான்

ஜனவரி 23

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்நாள்



நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897– இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். காங்கிரஸ் சனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார்.  இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார்.அதன்படி இந்தியா

நீதிக்கதை

 வல்லவர் யார்?



தரையில் எறும்பு மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது.


"நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்?" என்று எறும்பிடம் கேட்டது.


எறும்பு "பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே" என்று ஊர்ந்து கொண்டே சொன்னது.


"அப்படியென்ன முக்கியமான கடமை?" என்று பூரான் கேட்டது.


எறும்பும் ஊர்வதை நிறுத்தாமல்"மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை. உன்னிடம் பேசிக் கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது" என்று கூறிச் சென்று விட்டது.


பூரான், எறும்பு தன்னை ஏமாற்றி விட்டதாகக் கருதியது. எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக் கொண்டது.


அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று அதை வழி மறித்தது. "எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப் போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக் கொள்கிறேன்" என்று கேட்டது.


அதற்கு எறும்பு "வீண் பேச்சு வேண்டாமே. நான் என் கடமைச் செய்ய விடேன்" என்று பணிவாகக் கேட்டது.


பூரான் "தப்பித்து ஓடப் பார்க்காதே!" என்று கேலி செய்தது.


அதற்கு எறும்பு மிக அமைதியுடன்"பூரானே. உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது.அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய்ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சைஎல்லாம் வேண்டாம்" என்று திரும்பவும் கூறியது.


பூரானோ "அப்படி என்ன சாகசத்தை நீ செய்து விடப்  போகிறாய். சாதூரியமாகப் பேச மட்டும் கற்று  வைத்திருக்கிறாய்" என்று கூறியது.


எறும்பு பூரானை பதில் பேசாமல் ஒரு தண்ணீர் தொட்டியின் அருகில் அழைத்துச் சென்றது. பூரானை வேடிக்கை பார்க்கச் சொல்லி விட்டு கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் தொற்றிக்கொண்டு தண்ணீரில் விழுந்து அந்த துரும்பைப் பற்றிக் கொண்டு தண்ணீரில் மிதந்தது.


பூரானைப் பார்த்து "உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா?" என்று கேட்டது.


பூரானுக்கு அப்போதுதான் எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டுஎன்று புரிந்தது. எறும்பிடம் மன்னிப்புக் கேட்டது.


அன்றிலிருந்து பூரான் எறும்பின் கருத்துகளை மதித்து நடந்து அதற்குச் சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது.

இன்றைய செய்திகள்

23.01.2025

* வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாம். இதற்காக சென்னை பிர்லா கோளரங்கத்தில் ஜனவரி 22- முதல் 25-ம் தேதி வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* ஆன்லைன் வாயிலாக பதிவுக்கு வரும் பத்திரங்களை உரிய காரணம் இல்லாமல் திருப்பியனுப்பக் கூடாது என்று சார்பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தியுள்ளார்.

* டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிப்பு.

* ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது பொருளாதார தடை - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்: போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: சென்னை - மோகன் பகான் ஆட்டம் 'டிரா'.

Today's Headlines

* A rare event where 6 planets line up in the sky at the same time can be seen with the naked eye. Special arrangements have been made at the Birla Planetarium in Chennai from January 22 to 25 for this.

* Dinesh Ponraj Oliver, Head of the Registration Department, has advised the sub-registrars not to return the documents received for registration online without proper reason.

* Air services affected due to heavy fog in Delhi.

* If Russian President Putin does not come for talks, economic sanctions on Russia - US President Trump takes action.

* Australian Open Tennis Series: Polish player Ika Swiatek advances to the semi-finals.

* ISL. Football Series: Chennai - Mohun Bagan match 'draw'.

Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

சிமேட் நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

January 22, 2025 0

 

1347871

எம்பிஏ படிப்​புக்கான சிமேட் நுழைவுத் தேர்வு எழுதவுள்ள பட்ட​தா​ரி​களுக்கான ஹால்​டிக்​கெட்டை என்டிஏ வெளி​யிட்​டுள்​ளது. நம்நாட்​டில் உள்ள மத்திய உயர்​கல்வி நிறு​வனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்​நுட்பக் கல்வி குழு​மத்​தின்​கீழ் (ஏஐசிடிஇ) இயங்​கும் கல்லூரி​களில் மேலாண்மை படிப்பு​களில் சேர சிமேட் எனும் பொது நிர்வாக நுழைவுத் தேர்​வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்​டும். நடப்​பாண்டு சிமேட் தேர்வு ஜன. 25-ம் தேதி நடைபெறுகிறது.


இதற்கான ஹால்​டிக்​கெட்டை https://exams.nta.ac.in/CMAT எனும் வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்​து​ கொள்​ளலாம். கூடுதல் விவரங்களை www.nta.ac.in எனும் இணையதளத்​தில் அறிய​லாம். ஏதேனும் சந்தேகம் இருப்​பின் 011- 4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in மின்னஞ்​சல் வாயிலாக தொடர்​பு​ கொள்ளலாம்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

களஞ்சியம் Appல் Medical leave apply செய்யும் பொழுது ஏற்படும் சந்தேகத்துக்கான விளக்கம்

January 22, 2025 0

 

IMG_20250122_144516

களஞ்சியம் Appல் Medical leave apply செய்யும் பொழுது Unearned leave on mc மற்றும் Extraordinary leave on mc என்று இரண்டு 0Ptionகள் காட்டுகிறது. மருத்துச்சான்றுடன் கூடிய மருத்துவ விடுப்புக்காக விண்ணப்பிக்கும் பொழுது மேற்காணும் இரண்டு Option களில் எதைத் தேர்வு செய்வது?


Extraordinary Leave on MC - சம்பளம் இல்லை ஆனால் Service Add ஆகும்


Extraordinary Leave without MC - சம்பளம் இல்லை Service ம் இல்லை


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

UPSC குடிமை பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு

January 22, 2025 0

 

IMG_20250122_144905

ஐஏஎஸ் , ஐபிஎஸ் உள்ளிட்ட 979 குடிமைப் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு

 IAS , IFS , IPS உள்ளிட்ட 23 பதவிகளுக்கு IPS உள்ளிட்ட 23 பதவில் ஜனவரி 22 முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் 979 குடிமைப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு மே 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது - யுபிஎஸ்சி

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

100 YEARS SCHOOL NAME LIST ALL DISTRICT 'S..

January 22, 2025 0

 IMG_20250122_200305


100 YEARS SCHOOL NAME LIST ALL DISTRICT 'S....

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

School List - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

January 21, 2025

EMIS இணையதளத்தில் தரவுகளை பதிவேற்றம் செய்தல் - பணிகள் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித் துறை இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் இணைச்செயல்முறைகள்

January 21, 2025 0

 



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர். தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரின் இணை செயல்முறைகள், சென்னை-06 ந.க.எண்.002917/எம்2/இ3/2025 நாள்: 20.01.2025 

பொருள் :

பள்ளிக் கல்வி - கல்வி மேலாண்மை சார்ந்து தகவல் EMIS   இணையத்தில் உரிய தரவுகளை பதிவேற்றம் மேற்கொள்ளுதல் (Data Entry) சார்ந்து மறு ஆய்வு - குறைப்பு நடவடிக்கைகள் - விவரங்கள் தெரிவித்தல் - தொடர்பாக, 

பார்வை: 

1. கல்வி மேலாண்மைத் தகவல் மைய பணிகள் குறித்து 06.12.2024 அன்று பள்ளிக் கல்வித் துறை செயலாளரின் தலைமையில் நடைபெற்ற மீளாய்வுக் கூட்ட - அறிவுரைகள்.

 2. சென்னை-06, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் அவர்களின் ந.க.எண்.477C1/ems/sS/2024. நாள். 08.01.2025.


கல்வி மேலாண்மைத் தகவல் மையத்தில் (EMIS) தற்போதைய தரவு உள்ளீடு செயல்முறைகளை மதிப்பிடுவதற்கும். தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீர்வுகளை பதிவு மேற்கொள்ளும் பணியினைக் குறைக்கும் நோக்கில் தீர்வுகளை முன்மொழிவதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டது என பார்வை –(2) இல் காண் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது, தற்போதுள்ள தரவு உள்ளீட்டு நடைமுறைகள் மற்றும் பயனர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றினை முழுமையான சீராய்வுக்குப் பிறகு, EMIS-இல் தரவுகளை உள்ளீடு செய்யும் பணியினை எளிதாக்கும் மற்றும் நெறிப்படுத்தும் ஆலோசனைகள் வழங்கியுள்ளது. பள்ளி அளவில் தரவுகளை உள்ளீடு செய்யும் பணியினை கணிசமாகக் குறைத்தும் அதே வேளையில், அத்தியாவசியமான விவரங்கள் மட்டுமே பேணப்படும் வகையிலும், தரவு உள்ளீடு செய்யும் பணிகள் குறைக்கப்பட்டுள்ளன. . 

ஆசிரியர் நிபுணத்துவ மேம்பாடு (TPD) பயிற்சியின் போது ஆசிரியர்களின் தரவு உள்ளீட்டை குறைப்பதற்காக. பயிற்சி வருகை, கருத்து மற்றும் வினாடி வினா தொகுதிகள் நீக்கம் செய்யப்படுகின்றன.

 ATAL ஆய்வகம் தொகுதி பதிவு EMIS லிருந்து அகற்றப்படும். 
நீக்குவதற்குப் பரிந்துரைக்கப்பட்ட பதிவுகள் சார்ந்த தொகுதிகள்: நிதிப் பதிவு. நிறுவனப் பதிவு. பள்ளி நன்கொடைப் பதிவு, தகவல் தொடர்புப் பதிவு. மனுக்கள் மற்றும் செயல்முறைப் பதிவு, உதவித்தொகை மற்றும் மாணவர் ஊக்கப் பதிவு, ஆசிரியர் கால அட்டவணை, மாதாந்திர அறிக்கைகள் மற்றும் பள்ளிகளுக்கான மின் கட்டண விவரங்கள். இருப்பு நூலக புத்தக விநியோக விவரம்: நூலக புத்தகப் பதிவுகளில் யார் எந்தெந்த புத்தகங்கள் பயன்படுத்தி உள்ளனர் மற்றும் தற்போதைய புத்தக ஆகியவற்றை மட்டுமே பதிவேற்றம் செய்தல் போதுமானதாகும்.

வாசிப்பு இயக்கம்: 

எண்ணும் எழுத்தும் திட்ட மாணவர் தரநிலை விவரங்களிலிருந்தே தரவுகளைப் பெற்று வாசிப்பு இயக்கப் பதிவுகளுக்கு மாற்றப்படும். வாசிப்பு இயக்கத்திற்கான தனியான பதிவு மேற்கொள்ள வேண்டியதில்லை. 

கலைத் திருவிழா 

வெற்றியாளர் பட்டியல்களை மட்டுமே பதிவு செய்ய நெறிப்படுத்தப்பட்டுள்ளது. பங்கேற்றோர் விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை. 

தொடர் மற்றும் வளரறி மதிப்பீடுகள் (FA & SA); 

FA(A) & FA(B); கேள்வி வாரியான தரவு உள்ளீடு செய்வதை விடுத்து, மாணவர் வாரியான மதிப்பெண்கள் மட்டுமே உள்ளீடு செய்யப்படல் வேண்டும். SA: கேள்விகள் வாரியாக மதிப்பெண்கள் கைப்பேசி அல்லது இணைய தளங்களின் மூலம் பதிவிட்டால் போதுமானது. 

விலையில்லா பொருட்கள் மற்றும் பாடப்புத்தகங்கள்: 

பாடப்புத்தகங்களுக்கான Barcode அடிப்படையிலான கண்காணிப்பு. மாநில அளவில் இருந்து தலைமையாசிரியர்கள் வரை செயல்படுத்தப்படும். பெறப்பட்ட, ஒட்டு மொத்தமாக விநியோகிக்கப்பட்ட, இருப்பு மற்றும் தேவைகள் ஆகிய விவரங்களை மட்டுமே பதிவிட்டால் போதுமானதாகும். மாணவர்கள் வாரியாக பதிவு செய்தல் தவிர்க்கப்பட்டுள்ளது. குழுக்கள் மற்றும் மன்றங்கள் : அனைத்து குழுக்கள் மற்றும் மன்றங்கள் சார்ந்த விவரங்களை தனித்தனியே பதிவிட வேண்டியதற்கு மாறாக இவை அனைத்தையும் House System என்ற அலகின்கீழ் கொண்டு வரப்படும். இதன் வாயிலாக தனித்தனியாக மன்றங்கள் சார்ந்த பதிவுகளை மேற்கொள்ள வேண்டியதில்லை. 

IFHRMS மற்றும் பணியாளர் தரவு ஒருங்கிணைப்பு: 

பணியாளர்கள் பதிவேடு. ஓய்வூதியங்கள் மற்றும் IFHRMS உடன் ஒருங்கிணைக்கப்பட்ட தரவு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

இடைநிற்றல் (Dropout) கண்காணிப்பு: 

15 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களப் பற்றிய விவரம் மட்டுமே பதிவேற்றம் செய்தல் வேண்டும். 

கால அட்டவணை மேலாண்மை: 

கால அட்டவணை சார்ந்த உள்ளீடுகள் தலைமை ஆசிரியர்கள் மூலம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பதிவு செய்தால் போதுமானதாகும். 

எண்ணிய உள்கட்டமைப்பு (Digital Infrastructure) : 

ICT மற்றும் இணைய வசதி சார்ந்த விவரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாக்கப்படுகிறது. இதன் வாயிலாக பல்வகைப் பதிவுகள் மேற்கொள்வது குறைக்கப்படுகிறது. 

பள்ளி சார்ந்த விவரங்கள் : 

பள்ளி சார்ந்த அனைத்து விவரங்களும் ஒருங்கமைக்கப்பட்டு ஒரே தொகுதியாக்கப்படுகிறது. எனவே, தனித்தனி விவரங்கள் பதிவிட வேண்டியதில்லை,

இந்த நடவடிக்கைகள் தலைமையாசிரியர்கள் மேற்கொள்ளும் நிர்வாக தரவு உள்ளீடு சார்ந்த பணிச்சுமையை கணிசமாகக் மற்றும் ஆசிரியர்கள் குறைத்து, கற்பித்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்த வழிகோலும். அதே நேரத்தில், இந்த மாற்றங்கள் EMIS தரவு மேலாண்மை அமைப்பின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் உடன் நடைமுறைக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, இச்சுற்றறிக்கையினை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள்). வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது, பெற்று அலுவலக மேலும், இச்சுற்றறிக்கை பெறப்பட்டதற்கான ஒப்புதலை அனைத்து பள்ளி தலைமையாசிரியரிடம் கோப்பில் பராமரிக்குமாறும் அவ்விவரத்தினை சார்ந்த இயக்ககத்திற்கு தெரிவிக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை மாவட்ட அளவிலான ஆய்வு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

6th to 9th Standard English Poems PPT | Indian Seasons | 'Sea fever | Lessons in Life | The Comet - Download Now!

January 21, 2025 0

SLAS -மாதிரித் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்

January 21, 2025 0

 

IMG_20250120_102230

SLAS -மாதிரித் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்


SLAS -மாதிரித் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம்


 அனைத்து அரசு /அரசு உதவி பெறும் தொடக்க ,நடுநிலை ,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு SLAS தேர்வு நடைபெற உள்ளது.


 SLAS மதிப்பீட்டுடன்  தொடர்புடைய மாதிரி வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அனைத்து  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மாதிரி வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள். 


மாதிரி வினாத்தாள் 1 -13.01.2025

மாதிரி வினாத்தாள் 2 - 20.01.2025

மாதிரி வினாத்தாள் 3 -27.01.2025

விடைக்குறிப்புகள் 1,2,3-   30.01.2025


வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்.


https://exam.tnschools.gov.in

⬇️

Username and password 

⬇️

HM/class teacher login id

⬇️

Descriptive 

⬇️

Download Question paper


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNPSC - தேர்வாணையம் OMR விடைத்தாளில் புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது

January 21, 2025 0

 தேர்வாணையம் OMR விடைத்தாளில் ஒரு சில புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது . புதிய OMR விடைத்தாளின் மாதிரி படமானது தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in - " OMR Answer Sheet - Sample " என்ற தலைப்பின் கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . வினாத்தொகுப்பு எண் வட்டங்கள் கருப்புநிற பேனாவினால் ( ballpoint pen ) நிரப்புவது தொடர்பாகவும் , மேலும் , பக்கம் -1 ல் பகுதி -1 ன்கீழ் உள்ள கண்காணிப்பாளரின் கையொப்பம் பக்கம் -2 ல் பகுதி- 1 ன் கீழ் மாற்றப்பட்டுள்ளதும் மாதிரி விடைத்தாளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது , எனவே , தேர்வர்கள் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் இனிவரும் தேர்வினை எழுத வருவதற்கு முன்பு புதிய OMR விடைத்தாளின் மாதிரியை பார்த்து அறிந்து தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

January 20, 2025

தமிழக அரசில் Special Educator வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

January 20, 2025 0

 

தமிழக அரசில் Special Educator வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Occupational Therapist, Social Worker, Special Educator பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Occupational Therapist, Social Worker, Special Educator பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s / Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.23,800/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.01.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Download Notification PDF

  • 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Teaching Research Fellow வேலைவாய்ப்பு 2025 – சம்பளம்: ரூ.20,000/- || முழு விவரங்களுடன்!

January 20, 2025 0

 

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Teaching Research Fellow வேலைவாய்ப்பு 2025 – சம்பளம்: ரூ.20,000/- || முழு விவரங்களுடன்!

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Teaching Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Teaching Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 22.01.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Download Notification PDF

  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNPL நிறுவனத்தில் General Manager வேலை – சம்பளம்:ரூ.2,14,790/- || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

January 20, 2025 0

 TNPL நிறுவனத்தில் General Manager வேலை – சம்பளம்:ரூ.2,14,790/- || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

TNPL ஆனது General Manager, AGM, Senior Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • General Manager, AGM, Senior Manager பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / B.Sc / BE / B.Tech / M.Sc / MBA தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,14,790/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.01.2025ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Download Notification PDF

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 25.43.49 என்றும் அதிகபட்ச வயது 30,50,55 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

100 ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா கொண்டாடுதல் - தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள்!

January 20, 2025 0

 IMG_20250120_184149

100 ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா கொண்டாடுதல் - தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள்!

DSE - 100 Years Schools Celebration - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

SLAS - 2nd Model Question Updated in EMIS Website Now

January 20, 2025 0

 

IMG-20250120-WA0044


SLAS மாதிரி வினாத்தாள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. பள்ளி எமிஸ் எண் மூலம் தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SLAS -மாதிரித் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம்


 அனைத்து அரசு /அரசு உதவி பெறும் தொடக்க ,நடுநிலை ,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு SLAS தேர்வு நடைபெற உள்ளது.


 SLAS மதிப்பீட்டுடன்  தொடர்புடைய மாதிரி வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அனைத்து  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாதிரி வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் 


மாதிரி வினாத்தாள் 1 -13.01.2025

மாதிரி வினாத்தாள் 2 - 20.01.2025

மாதிரி வினாத்தாள் 3 -27.01.2025

விடைக்குறிப்புகள் 1,2,3-   30.01.2025


வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்.


https://exam.tnschools.gov.in

⬇️

Username and password 

⬇️

HM/class teacher login id

⬇️

Descriptive 

⬇️

Download Question paper



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group