Agri Info

Adding Green to your Life

January 28, 2025

"கற்றல் ஆய்வு திட்டம்" - Selected Schools Google Meet Link & Test Time Table - January 2025

January 28, 2025 0

 

மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் திறன்களை அறிந்து உதவும் திட்டம் ஜூலை மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


மாணவர் கற்றல் ஆய்வு நடத்தப்படும் தேதி, நேரம், meeting link, பள்ளி தலைமை ஆசிரியரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் மற்றும் SOP document, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள sheet -ல் கொடுக்கப்பட்டுள்ளது


இந்த தகவலை பட்டியலில் உள்ள பள்ளிகளுக்கு உடனடியாக தெரிவித்து மாணவர் கற்றல் ஆய்வு நடத்திட உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.


இந்த மாதத்திற்கான மாணவர் கற்றல் ஆய்வு  Google Meet மூலம் நடத்தப்படவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 3 & 5 ஆம் வகுப்பு கற்றல் ஆய்வு செய்யப்படும் பள்ளிகள் & மாணவர்கள் பெயர் - மாவட்ட வாரியாக 


Click Here to Download - January 2025 மாதத்திற்கான Google Meet - School List & Students List (3rd & 5th)


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

M.Phil ஊக்க ஊதிய உயர்வு - மேல்முறையீடு மனு - நிராகரிப்பு செய்து CM CELLக்கு பள்ளிக் கல்வித் துறை பதில்!

January 28, 2025 0

 



M.Phil., ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கும் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதை தவிர்க்கக் கோரிய மனு - நிராகரிப்பு செய்து முதலமைச்சர் தனிப்பரிவிற்கு பள்ளிக் கல்வித் துறை பதில்!


Click Here to Download - M.Phil Incentive Judgement - CM CELL Reply - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Smart Classroom - ஆசிரியர்கள் உஷாராக இருக்குமாறு சங்கங்கள் அறிவுறுத்தல்

January 28, 2025 0

 


ஸ்மார்ட் கிளாஸ் ரூமில் பொருத்தப்படும் கேமரா முழு நேரமும் செயல்படும் என்பதால் ஆசிரியர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்

இது குறித்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ள அவசர அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது


ஸ்மார்ட் கிளாஸ் ரூமில் பொருத்தப்படும் Camera 24 மணி நேரமும்கண்காணிப்பில் இருக்கும். முழு நேரமும் இணைய தள இணைப் பில் இருக்கும். உயர் அதிகாரிகள் எங்கிருந்து வேண்டுமானாலும்கண் காணிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. ஸ்மார்ட் கிளாஸ் ரூமில் சிசிடிவி வெப்கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் அனைத்து நிகழ்வுகளும் பதிவாகும். 


வெப்கேமரா மூலம் உயர் அதிகாரிகள் இருக்கும் இடத்தில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்களை ஆய்வு செய்யும் வகையில் அமைக்கப்  பட்டுள்ளது. மின்சாரம் தடைபட்டாலும் யுபிஎஸ் மூலம் இணையதளம் மற்றும் கேமரா வேலைசெய்யும். 


இதற்கு தகுந்தாற்போல் தங்கள் செயல்பாடுகளை வகுத் துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி - விருது வென்ற ஆசிரியர்

January 28, 2025 0

 science%20teacher%201

தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி 20.01.2025 முதல் 25.01.2025 வரை புதுச்சேரியில் நடைபெற்றது.  கண்காட்சியில் தமிழ்நாடு சார்பாக தர்மபுரி மாவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி அவ்வைநகர் பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு மா கார்த்திகேயன் M.Sc.,M.Ed., M.Phil.,,(விலங்கியல்) அவர்கள் ஆசிரியர் பிரிவில் அவருடைய படைப்பினை சமர்ப்பித்து தென்னிந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து தமிழகத்திற்கும், ஆசிரியர் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். 


science%20teacher%202


மாணவர்களுடைய அறிவியல் மனப்பான்மை வளர்ப்பதிலும், தொழில்நுட்பங்களை முறையாக பயன்படுத்தப்படுவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள ஆசிரியருக்கு  வாழ்த்துகள் அவரின் அறிவியல் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள். புதுச்சேரி கல்வி அமைச்சர் அவர்களால் வெற்றி கோப்பை பெரும் மகிழ்ச்சியான தருணம்.





🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் - இலக்கை எட்டியது கல்வித் துறை

January 28, 2025 0

 MINISTER



தமிழக அரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த இலக்கு திங்கள்கிழமை எட்டப்பட்டது.


புத்தகங்கள், கரும்பலகைகள் வாயிலாக நடைபெற்ற கற்றல்- கற்பித்தல் நிகழ்வின் ஓா் உச்சமாக உரைகள், படங்கள், ஆடியோ மற்றும் விடியோ போன்ற பல்வேறு வடிவங்களில் தகவலைப் பெற்று மாணவா்கள் பாடப்பொருள்களை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் அரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகளை அமைக்கும் பணி தமிழக அரசின் சாா்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.


இதையடுத்து முதல்கட்டமாக அரியலூா், கடலூா், நாகப்பட்டினம், சேலம், திருவாரூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 493 அரசு தொடக்கப் பள்ளிகளில் 634 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டன. புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களில் இந்த பணியை முழுமையாக நிறைவு செய்யும் வகையில் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.


இந்தநிலையில், சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 22,931-ஆவது திறன்மிகு வகுப்பறையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை நிறுவினாா். இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பீடு ரூ.455.32 கோடி. இதன் மூலம் 11.76 லட்சம் மாணவா்கள் பயன்பெறுவா்.


இதேபோன்று அரசுப் பள்ளிகளில் 8,209 உயா் தொழில் நுட்ப ஆய்வகங்கள் ரூ. 519.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான பணிகளும் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இவ்விரு திட்டங்கள் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 43 லட்சத்து 89,382 மாணவா்கள் பயன்பெறுவா்.


இதற்கான நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநா் மா.ஆா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


முதல்வா் பெருமிதம்


‘அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.


இதுகுறித்து, அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:


தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் பணியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன். அந்தப் பணி சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசுப் பள்ளியில் நிறைவு பெற்றதை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்னிடம் தெரிவித்தாா்.


நவீனமயமான தொடக்கப் பள்ளிகள், நாட்டின் முதன்மையான உயா்கல்வி நிறுவனங்களில் நமது மாணவா்கள் இடம்பெற உதவும் மாதிரிப் பள்ளிகள் எனப் பள்ளிக்கல்வித் துறை படைத்து வரும் சாதனைகளால் மகிழ்கிறேன். அரசுப் பள்ளிகள் நமது பெருமையின் அடையாளம் என்பதை உரக்கச் சொல்வோம் என்று தெரிவித்துள்ளாா் முதல்வா்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Income Tax 2025 - 2026 - Empty Form - Pdf

January 28, 2025 0

 Untitled1_001


வரும் கல்வி ஆண்டிற்கான வருமான வரி படிவம் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது

வருமான வரி பூர்த்தி செய்து படிவமாக கொடுக்கும் ஆசிரியர்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொடுக்கலாம். மேலும் ஆசிரியர்கள் இதனை உத்தேச  வருமானம் வரி கணக்கு செய்ய இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் 



இதனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 


Click Here to Download - Income Tax  2025 - 2026 - Empty Form - Pdf


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பள்ளிக் கல்வித்துறையில் 47,013 பணியிடங்கள் புதிய நியமனமா? ஒழிக்கப்படப்போகும் 5418 பணியிடங்களில் ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை?

January 28, 2025 0

 



பள்ளிக் கல்வித்துறையில் 47,013 பணியிடங்கள் புதிய நியமனமா?  ஒழிக்கப்படப்போகும் 5418 பணியிடங்களில் ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை?


பள்ளிக் கல்வித்துறையில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆசியர்கள், அலுவலகப் பணியாளர்கள் தொடங்கி இரவுக் காவலர் வரையிலான பல்வேறு பணியிடங்கள் அந்தந்த காலகட்டத் தேவையை முன்வைத்து 1997 முதல் தற்காலிகமாக உருவாக்கப்பட்டன.


இவ்வாறு 2022 வரை மொத்தமாக 52,578 பணியிடங்கள் தேவை கருதி தற்காலிகமாக உருவாக்கப்பட்டாலும், அதன் தேவை தொடரும் வரை அதில் பணியாற்றுவோருக்கு அரசின் முழுமையான காலமுறை ஊதியம் வழங்கப்படும். சில நேரங்களில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு பின்னர் காலமுறை ஊதியமாக மாற்றப்பட்டதும் உண்டு.


ஒவ்வொரு ஆண்டும் இப்பணியிடங்கள் இனியும் தேவைதானா என்பதைப் பொறுத்து அப்பணியிடத்திற்கு கால நீட்டிப்பு வழங்கப்படும். தேவையில்லை எனில் அப்பணியிடத்தை அரசு இரத்து செய்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னரே அப்பணியிடத்திற்கான ஊதியம் ஒதுக்கப்படும். ஒப்புதல் காலதாமதமாகும் போது ஊதியம் உரிய காலத்தில் பெற இயலாத சூழலும் ஏற்படுவதுண்டு.


இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் தொடர் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்த 52,578 பணியிடங்களில் 47,013 நிரந்தரமாகத் தேவைப்படும் பணியிடங்கள்தான் என்று இது சார்ந்து ஆராய 2022ல் அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளித்தது. அதன்படி, இனி இந்த 47,013 பணியிடங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஒப்புதல் நீட்டிப்பு செய்யவேண்டிய தேவையைத் தவிர்த்து அவற்றை நிரந்தரமாகத் தேவைப்படும் பணியிடங்களாக அரசாணை (ப.க.து. G.O.9 நாள் 27.01.2025) பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இது ஒருபுறமிருக்க இதே குழுவின் ஆய்வு முடிவின்படி 3035 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உட்பட 5418 பணியிடங்களுக்கு மூடுவிழா அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களில் பணிபுரிந்து வருவோர் ஓய்வு பெற்றபின் மீண்டும் அவை நிரப்பப்படாது, அப்பணியிடமே ஒழிக்கப்பட்டுவிடும்.


எனவே, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 3035 தொழிற்கல்வி ஆசிரியர்களின் பணியிடங்கள் இனி நிரப்பப்படப் போவதேயில்லை என்பதால், இனி அந்தப் பாடப் பிரிவுகளே பள்ளிகளிலிருந்து தூக்கப்படப் போகிறது என்பதோடே அப்பணியிடத்திற்கான தனிப்பட்ட சிறப்புத் தகுதியோடே பல ஆண்டுகளாகக் காத்திருப்போரின் வேலைவாய்ப்பும் பறிபோயுள்ளது.


மொத்தத்தில் இந்நடவடிக்கை என்பது 47,013 பணியிடங்களை நிரந்தரமாக்கும் அதிரடி அறிவிப்பாக மட்டுமே ஊடகங்களில் ஊதிப் பெரிதாக்கப்பட்டாலும், 5418 பணியிடங்கள் ஒழிக்கப்பட்டதன் வழி 5418 வேலைவாய்ப்புகள் ஒழிக்கப்பட்டதோடே, குறிப்பாக 3035 தொழிற்கல்வி ஆசிரியர் (Vocational Group) பணியிடங்கள் ஒழித்துக்கட்டப்பட்டதோடே தொழிற்கல்வி சார்ந்த பள்ளி மாணவர்களின் விருப்பத்திற்கும் தேவைக்கும் முடிவுகட்டப்பட்டுள்ள செய்தி முழுமையாகத் தவிர்க்கப்பட்டுள்ளது என்பதே விவாதத்திற்குரிய விடயமாகும்.


✍🏼செல்வ.ரஞ்சித் குமார்


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மூன்றாம் பருவத்துக்கு FA(b) தேர்வு கிடையாது - TN EE MISSION அறிவிப்பு.

January 28, 2025 0

 மூன்றாம் பருவத்தில் EMIS தளத்தில் FA(b) தேர்வு வைக்கப்படாது அதற்கு பதிலாக பயிற்சி புத்தகத்தில் உள்ள I Can Do பகுதியினை முடித்து ஆசிரியர் திருத்தி வைத்திருந்தால் போதும் என TN EE MISSION அறிவிப்பு.


TN%20EE%20MISSION



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு எடுக்கலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு யாருக்

January 28, 2025 0

 

பணிநியமனத்திற்கு முன் அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பு எடுக்காத பெண் அரசு ஊழியர் /பெண் ஆசிரியர்கள் மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு எடுக்கலாம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


Click Here to Download - Maternity Leave For 3rd Baby - High court Judgement - Pdf



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

January 27, 2025

Accenture நிறுவனத்தில் Software Development Engineer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

January 27, 2025 0

 

Accenture நிறுவனத்தில் Software Development Engineer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Accenture நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Software Development Engineer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Accenture காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Software Development Engineer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Software Development Engineer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Accenture வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Software Development Engineer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Accenture-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Accenture தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group